Sms ch 75 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 75

 

நந்தன் சத்யா reception ல் எல்லோரும் சாப்பிட்டு மகிழ்வாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே பல வட்ட மேஜைகளும் அதை சுற்றி சில chair களும் போடப்பட்டிருந்தன. அதில் ஒன்றில் வள்ளியின் பாட்டி, நந்தனின் தாத்தா, கண்ணப்பன், ரோஹித், பிரவீன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க நந்தன் அவர்களிடத்தில் சென்றான்.

 

சத்யா, வள்ளி, மது, ப்ரீத்தி நால்வரும் ஒரு குழுவாகவும், கமலா அம்மா, சகுந்தலா, மாலினி ஒரு குழுவாகவும், சத்தியமூர்த்தி, கணேஷ், சரவணன் மூவரும் ரோஹித்ஸ்ரீஜா மகன் ரித்விக், சின்னு, தருண் என்று பேரப்பிள்ளைகளுடனும் விளையாட, பேசிக்கோண்டிருக்க கிரிஷ், ஸ்ரீதிகா ஒருபுறம் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.

 

முருகனும் ராகவனும் ஒரு இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

நந்தன் தன் தாத்தாவிடம் சென்று ஒரு chair போட்டு இழுத்து உட்கார்ந்தவன்என்ன தாத்தா? பாட்டி வந்ததுக்கு அப்புறம் எங்களை எல்லாம் கண்டுக்கவே மாட்டேன் என்கிறீர்கள்?” என்று கிண்டலாய் கேட்கபோடா போடா, உன் புது பொண்டாட்டியை விட்டுட்டு இங்க என்னடா வேலை உனக்கு?” என்றார் அவரும் சிரித்துக்கொண்டே.

 

புது பொண்டாட்டியா? அவளை கல்யாணம் செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது தாத்தா, பழைய மனைவி ஆகிவிட்டாள் என்று விளையாட்டாக சலித்து கொண்டான் நந்தன்.

 

பழைய மனைவியா? இருந்தாலும் அவளை IAS க்கு படிக்க விடாமல் நீ செய்யும் சில்மிஷங்கள் எங்களுக்கு தெரியாதா என்ன? போன வாரம் கூட பண்ணை வீட்டில் மழையில் நனைந்து..”

 

ஐயோ தாத்தா………வயதான காலத்தில் எதற்கு நீங்கள் இந்த வேவு வேலை எல்லாம் பார்க்கிறீர்கள்? ரோஹித் நீ தான் சொன்னதா?” என்று நந்தன் மிரட்டடேய் நான் ஏன்டா சொல்லனும், அதான் தாத்தாவும் பண்ணை வீட்டிற்கு வந்திருந்தாரே, அவருக்கு தெரியாதா என்ன?” என்று சமாளித்தான்.

 

ஒவ்வொரு குழுவும் ஏதேதோ வம்பு கதைகள் பேசுவதும் பிறகு பிரிந்து வேறு குழுவுடன் சேர்ந்து கதை பேசுவதுமாக தோட்டம் முழுவதும் கலகலப்பாக இருந்தது. ஸ்வெதாவிற்கு ஆறு மாதம் என்பதால் அவளை இப்போது வர வேண்டாம் என்று சொல்லி இருந்தனர். அடுத்த மாதம் அவளுக்கு வளையகாப்பு செய்து அழைத்து வர வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

 

எல்லோரும் தோட்டத்தில் கலகலப்பாக பேசிக்கோண்டிருக்க ஸ்ரீஜா மட்டும் எரிச்சலோடு தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தாள். ஸ்ரீஜாவிடம் அவளது சித்தி கேட்டார்கள்.

 

ஏன் ஸ்ரீஜா ரெண்டாவதாக கட்டிட்டு வந்தவளுக்கு இவ்வளவு சீரும் சிறப்பும் தேவையா?”

 

தேவை இல்லை தான், சொன்னால் யார் கேட்கிறார்கள்? அவளுக்கு வந்த வாழ்வை பார்த்தீர்களா சித்தி? இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று என்ன அவசியம்?” என்று சொல்ல அதை ஒருபுறம் சகுந்தலாவும் ரோஹித்தும் கேட்க நேர்ந்தது. மறுபுறம் நந்தனும் சத்யாவும் கேட்க நேர்ந்தது.

 

சத்யா கோபமாக ஏதோ சொல்லப்போக நந்தன் அவள் கையை பிடித்து வேண்டாம் என்பது போல் தடுத்தான்.

 

ரோஹித் கோபமாக அவள் பக்கம் நடக்க சகுந்தலா அவன் கையை பிடித்து தடுத்தார்கள்.

 

எல்லோரும் reception முடிந்து விடைபெற்றனர்.

 

ராகவன் மதுவை தானே drop செய்வதாக சொல்லி அவன் இரு சக்கர வாகனத்தில் அவளை அமர வைத்தான்.

 

மதுவிற்கு கனவா நினைவா என்று புரியாமல் விழிக்க ராகவன் தன் கையை நீட்டஎன்ன என்பது போல் மது கேள்வியாய் தலையை அசைக்கநிஜம் தானா என்று என்னை கிள்ளிப்பார் என்றான் ராகவன்.

 

மது ஒரு புன்னகையுடன் அவன் கையை தட்டிவிடசரி fasta போவேன், என்னை கெட்டியா பிடிச்சிக்கோ என்றான் ராகவன். மது வெட்கத்தில் முகம் சிவக்க இதை பார்த்து கொண்டிருந்த நந்தன்டேய் அதெல்லாம் அவ உன்னை கெட்டியா பிடிச்சுப்பா, ஆனா நீ கொஞ்சம் கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ணு, உன்மேல தான் எனக்கு நம்பிக்கை இல்ல என்றான் கிண்டலாக. ராகவன் நந்தனை விளையாட்டாக முறைத்துஇந்த விஷயத்துல நீ எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி சேட்டை பண்ணக்கூடாது என்று சொல்லி அட்வைஸ் பண்ணி நான் கேக்க வேண்டிய நிலமைல இருக்கேன்டா என்றான் கிண்டலாக.

 

மது ராகவன் தோளில் கையை வைத்து பிடித்துக்கொள்ள ராகவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். சத்யா மதுவை பார்த்து thumbs up செய்து கண் சிமிட்டினாள். மதுவும் பதிலுக்கு thumbs up செய்ய ராகவன் நந்தனுக்கு கைகளை அசைத்து bye சொல்லி வண்டியை ஓட்டி சென்றான்.

 

நந்தனும் சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

 

முருகன், வள்ளி, பாட்டி, சின்னு எல்லோரும் outhouse சென்றனர்.

 

மற்ற எல்லோரும் விடைபெற்று புறப்பட சத்தியமூர்த்தி குடும்பத்தினர் மட்டும் ஹாலில் குழும கமலா அம்மா நந்தனையும் சத்யாவையும் அறைக்கு சென்று rest எடுக்க சொன்னார்கள்.

 

சகுந்தலா அவர்களை கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார்கள். ஸ்ரீஜாவை அழைத்துஇன்னைக்கு உன் சித்திகிட்ட என்ன பேசிட்டு இருந்த?” என்று கேட்க ஸ்ரீஜா திருட்டு முழி முழித்தாள். நந்தனும் சத்யாவும் அமைதியாக இருந்தனர்.

 

ரோஹித்எல்லார் முன்னாடியும் சொல்ல அசிங்கமா இருக்குல்ல, அப்புறம் ஏன் அப்படி பேசுற?” என்று கோபமாக கேட்டான்.

 

கமலா அம்மாஎன்னாச்சு ரோஹித்?” என்று கேட்க ரோஹித் சொல்லாமல் தலை குனிந்து நின்றான்.

 

சகுந்தலா சொன்னார்கள். “இது சத்யாவின் இரண்டாம் திருமணமாம், இதற்கு எதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று பேசிக்கோண்டிருந்தாள்.

 

சத்தியமூர்த்தியும் கணேஷும் ஏதோ சொல்ல வர சகுந்தலாவே பேசினார்கள்.

 

ஸ்ரீஜா நீ எத்தனையோ முறை கசப்பாக பேசியும், ரோஹித்துடன் சண்டை போட்டுக்கொண்டு ஒழுங்காக வாழாமல் கோபித்து கொண்டு செல்லும் போதும் நாங்கள் உன்னிடம் இதை பற்றி பேசியதில்லை, ஆனால் இப்போது பேச வேண்டிய சூழ்நிலை.

 

நாங்கள் எல்லோரும் ஒருமுறை கோயம்புத்தூர் வந்த போது ஒரு கோயிலில் ரோஹித் உன்னை பார்த்து பிடித்திருக்கிறது என்று எங்களிடம் சொன்னான், நாங்களும் அப்போது அவனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தோம், உடனே உன் அம்மாவிடம் பேசி பெண் பார்க்கும் படலம் நடந்தது, நீயும் அவனை பிடித்திருக்கிறது என்று சம்மதம் தெரிவித்தாய்.

 

நீங்கள் ஏழ்மையான குடும்பம் தான், அது எங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லை, நாங்களும் அப்போது தொழில் கடனில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தோம், நந்தனின் உழைப்பால் மீண்டு வந்தோம், ஆனால் திருமணத்தை எளிமையாக நடத்தினால் போதும் என்று பெரியவர்கள் நாங்கள் முடிவு செய்தும் நந்தன்குடும்பத்தில் இந்த தலைமுறையில் நடக்கும் முதல் திருமணம், என் தம்பியின் திருமணம், பணத்தை பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் என்று சொல்லி ஆடம்பரமாக உங்கள் திருமணத்தை நடத்தினான். உனக்கும் கூட வைர நகைகள் எல்லாம் வாங்க அவன் தான் எங்களை வற்புறுத்தினான். ஆனால் இன்று அவனுடைய reception க்கு கொஞ்சம் செலவு செய்தது உனக்கு உறுத்துகிறது.

 

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், உன்னை பெண் பார்த்து நிச்சயம் முடித்து வந்த பிறகு எங்களுக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. “ஸ்ரீஜா ஒருவனை காதலித்தாள், ஆனால் அவன் இவளை கழட்டி விட்டுட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான், ஸ்ரீஜா தற்கொலை முயற்சி கூட செய்தாள், கல்யாணமே வேண்டாம் என்று அவள் தந்தை கொண்டு வந்த மாப்பிள்ளையை எல்லாம் நிராகரித்தாள், உங்கள் மகன் ரோஹித்தை தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறாள், நீங்கள் கொஞ்சம் விசாரித்து இந்த திருமணத்தை நடத்தவும் என்று.”

 

நாங்கள் ரோஹித்திடம் ஒன்றுக்கு இரண்டு முறை இதை பற்றி யோசித்து முடிவு எடு என்று சொன்னோம், நீ காதலித்தது, தோல்வி அடைந்தது எல்லாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை, நீங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும், அது தான் எங்களுக்கு முக்கியம், அதனால் அவனை யோசிக்க சொன்னோம்.

 

நீ ரோஹித்தை பிடித்து இருக்கிறது என்று சொன்னாய், அதை நாங்கள் நம்பினோம், அவனும் இந்த கடிதத்தை பொருட்படுத்தவில்லை, சரி நீங்கள் இருவரும் அப்பப்போ போனில் பேசிக்கிறீங்க, புரிஞ்சுகிட்டு இருப்பீங்கன்னு விட்டுட்டோம்.

 

ஆனால் நீ திருமணம் முடிந்து அவனுடன் நெறைய முறை சண்டை போட்டுள்ளாய், ஒரு முறை கூட நீ வேறு ஒருவனை காதலித்தவள் தானே என்று நாங்களோ ரோஹித்தோ உன்னை குத்தி பேசியதில்லை.

 

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு குறை, தவறு, தோல்வி, பயம் எல்லாம் இருக்கும், ஆனால் அவற்றை தாண்டி வந்து அவர்கள் வாழ நினைக்கும் போது நாம் போய் சும்மா அவர்களின் பழைய வாழ்க்கையை குத்தி கிளறி கொண்டு இருக்க கூடாது.

 

சத்யாவிற்கும் அப்படி தான், இது அவளுக்கு இரண்டாவது திருமணம் தான், ஆனால் அவள் இந்த திருமணத்தில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறாள், அவளுக்கு நாம் உறுதுணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குத்தி குத்தி பேசக்கூடாது.

 

இன்று தான் முதல் முறையாக உன் வாழ்க்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்வி பற்றி நான் பேசி இருக்கிறேன், நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் பேசினேன், இனி நான் இதை பற்றி பேச மாட்டேன்.

 

ஆனால் ஒன்று உன் மனகசப்புகளை விட்டு வெளியே வா, உனக்கு இங்கே என்ன குறை? வசதி இல்லையா? சுதந்திரம் இல்லையா? ரோஹித் உன்னிடம் குற்றம் கண்டு பிடிக்கிறானா? ஏதாவது குறை இருந்தால் சொல், நாங்கள் நிவர்த்தி செய்கிறோம், எல்லோரும் ஒற்றுமையாக வாழலாம், எதற்கு வீணாக நீயும் வருத்தப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி தேவையா இதெல்லாம்?” என்று சகுந்தலா பேசி முடிக்க ஸ்ரீஜா கண்களில் கண்ணீருடன் சகுந்தலா கையை பிடித்தாள்.

 

என்னை மன்னிச்சிடுங்க அத்தை, அந்த கடிதத்தை எழுதியதே நான் தான், என்னை ஒருவன் காதலித்து வேண்டாம் என்று சொல்லி சென்று விட்டான், அந்த நிராகரிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தற்கொலை முயற்சி எல்லாம் செய்தேன், ஆனால் என் உயிர் போகவில்லை, அது ரோஹித் போன்ற நல்லவருடன் வாழ வேண்டும் என்று எனக்கு எழுதி இருக்கும் போல. எத்தனையோ மாப்பிள்ளை வந்தும் எனக்கு இவரை மட்டும் தான் பிடித்து இருந்தது. அவரிடம் நேரடியாக உண்மையை சொல்ல எனக்கு துணிவில்லை, சொல்லாமல் ஏமாற்றவும் எனக்கு மனம் வரவில்லை. அதனால் தான் அப்படி ஒரு கடிதம் எழுதினேன். ரோஹித் ஆனால் நல்லவர், என்னை ஒருநாளும் வெறுத்ததில்லை, ஒதுக்கியதில்லை.

 

என் மனதில் ஒரு inferiority complex, என்ன தான் நீங்கள் எல்லோரும் என்மீது உண்மையான அன்போடு இருந்தாலும் எல்லோரும் என்னை ஒரு கட்டத்தில் ஏமாற்றி விடுவீர்கள் என்று ஒரு பயம், அதனால் நீங்கள் என்னை ஏமாற்றுவதற்கு முன் நானே நீங்கள் என்னை வெறுக்க காரணங்களை தந்து விடுவேன், எனக்கு தெரியும், இதெல்லாம் உங்களுக்கு காமெடியாக இருக்கும், ஆனால் அந்த காதல் தோல்விக்கு பிறகு என் குணம் இப்படி மாறிவிட்டது.

 

என்னுடைய இந்த குறைகளை நான் மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன் அத்தை, என்னை மன்னித்து விடுங்கள் என்று சகுந்தலா கையை பிடித்து மன்னிப்பு கேட்டவள் ரோஹித்திடம் சென்றாள்.

 

நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள் ரோஹித் என்று ரோஹித்திடம் ஸ்ரீஜா மன்னிப்பு கேட்கபரவாயில்ல ஸ்ரீஜா, நமக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களில் நீ எனக்கு பிறந்தநாள் greetings card ல் வாழ்த்து எழுதினாய், அப்போதே நீ தான் அந்த மொட்டை கடிதத்தை எழுதினாய் என்று புரிந்து கொண்டேன், நீயாக இதை பற்றி பேசாமல் நானாக பேசவும் எனக்கு சங்கடமாக இருந்தது, இப்போது மனம் திறந்து பேசிவிட்டாய் அல்லவா? இனி நீயும் நானும் சேர்ந்து உன் மனகசப்புகளை நீக்கி விடலாம் என்று அவளை அணைத்து கொண்டான்.

 

ஸ்ரீஜா திரும்பி நந்தன், சத்யாவிடம் சென்றாள். “சத்யா நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்ல சத்யாவும் அவளை அணைத்து கொண்டாள்.

 

அத்தான் நீங்களும் மன்னிச்சிடுங்க அத்தான், நான் இன்று பேசியதற்கும், உங்கள் பணத்தை பிசினஸ் செய்கிறேன் என்று நெறையவே வீணடித்ததற்கும்

 

பரவால்ல மா, இன்னும் கூட நம் பண்ணை வீட்டின் சுற்றுலா பிசினஸ் அப்படியே தான் உள்ளது, நீ நடத்த விரும்பினால் நடத்தலாம் என்று சொல்லசெய்றேன் அத்தான், ஆனால் இந்த முறை நீங்கள் செலவு செய்த பணம் வரைக்கும் போதும், நானே முதலில் பிசினஸ் பிடித்து பிறகு அதிலிருந்து வரும் பணத்தை கொண்டு எஞ்சியுள்ள வேலைகளை முடிக்கிறேன் என்று உற்சாகமாக சொல்ல நந்தனும் அவள் தலையில் கை வைத்து சரி என்றான் புன்னகையுடன்.

 

எல்லோரும் அன்று இரவு நிம்மதியாக தூங்கினார்கள். நந்தனும் சத்யாவும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஒன்றாக தனிமையில் செலவழிப்பது என்று முடிவு செய்தார்கள். காரணம் சத்யா IAS படிக்க வேண்டும் என்பதும், நந்தன் தொழிலை முன்னேற்ற வேண்டும் என்பதும், தருணுடன் பல காரணங்களினால் நேரம் செலவழிக்க முடியவில்லை, அவனுடன் இரவு நேரங்களை ஒன்றாக செல்வழிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். தருணுக்கு prosthetic லெக் fix செய்யப்பட்டு தருண் நொண்டாமல் நல்ல முறையில் நடக்க ஆரம்பித்தான்.

 

ஷ்யாம் சட்டத்தின் மூலம் தண்டனை பெறுவதற்குள் ஜெயிலில் drug மாஃபியா தலைவன் kks ஆட்கள் கைவண்ணம் கொடிய drug inject செய்யப்பட்டு துடிதுடித்து இறந்தான். கௌஷிக்கின் முகம் அவன் இறக்கும் தருவாயில் அவன் முன் வந்து சென்றது.

 

நந்தனின் குழந்தையை தன் வயிற்றில் சுமக்க வேண்டும் என்ற ஆசை சத்யாவிற்கு நாளுக்கு நாள் அதிகரிக்க இரண்டு வருடங்களில் IAS படித்து நல்ல ரேங்கில் பாஸ் செய்தாள். நந்தனின் தொழிலும் பன்மடங்காக உயர்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீஜாவின் சுற்றுலா பிசினஸ் நல்ல முறையில் pick up ஆகி வருமானம் பெருக அதை குடும்பத்தில் பெரியவர்களிடம் கொடுத்து தனக்கு சிறு பகுதியை வாங்கி தன் சுய செலவுகள் போக மீதியை சேமித்து கொள்வாள் ஸ்ரீஜா.

 

சத்யா IAS பாஸ் செய்த மறு வருடம் நந்தனுக்கும் சத்யாவிற்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. கவிஸ்ரீ என்று பெயரிட்டார்கள். தருண் தன் தங்கையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.

 

வள்ளிக்கும் முருகனுக்கும் கவிஸ்ரீ பிறந்த சமயத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது சத்தியமூர்த்தி குடும்பத்தினர் பண்ணை வீட்டிற்கு செல்வதும் வள்ளி குடும்பத்தினர் இங்கு வருவதுமாக எல்லோரும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

 

ப்ரீத்திக்கும் நன்றாக படித்த, சொந்த உழைப்பில் முன்னேறிய பெரிய தொழில் அதிபருடன் திருமணம் நடை பெற்றது. அவளும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்தாள்.

 

ஸ்வேதாவின் ஆண் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. ஸ்ரீஜா இப்போது இரண்டாம் குழந்தை உண்டாகி இருந்தாள். கிரிஷும், ஸ்ரீதிகாவும் வெளிநாட்டில் படித்து அங்கேயே வேலை செய்ய தொடங்கி இருந்தார்கள்.

 

சத்தியமூர்த்தி, கமலா அம்மா, சகுந்தலா, கணேஷ் எல்லோருக்கும் பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொள்வதில் நேரம் ஓடியது. ராமலிங்கம் தாத்தாவிற்கு அவ்வப்போது உடல் அசவுகரியம் ஏற்பட்டாலும் அதை சரி செய்து கொண்டு எப்போதும் போல் கண்ணப்பன் உதவியுடன் wheelchair ல் வலம் வந்து எல்லோரையும் வம்பிழுத்து கொண்டு இருந்தார்.

 

ராகவனுக்கும் மதுவுக்கும் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்தார்கள், மதுவும் 7 மாதம் உண்டாகி இருந்தாள்.

 

கிரிஷும், ஸ்ரீதிகாவும் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்தார்கள். குடும்பமாக சேர்ந்து அனைவரும் மறுபடியும் ஜெகன்னாத பெருமாளுக்கு நன்றி செலுத்த திருபுல்லாணி சென்றார்கள். நந்தன் சத்யாவை அழைத்து கொண்டு விடியற்காலையிலேயே ஜீயர் மடத்தின் மொட்டை மாடிக்கு சென்றான். “அன்று என்னை சேலையால் தொட்டு சென்ற தேவதை இன்று என் மனைவியாக என் அருகில் என்று அவளின் இடையில் தன் கைகளை கொண்டு பின்னாலிருந்து அணைத்து சூரிய உதயத்தை ரசித்தான்.

 

ஜெகன்னாத பெருமாளை வணங்கி நன்றி தெரிவித்து எப்போதும் துணையாக இருக்க வேண்டிக்கொண்டு எல்லோரும் சேதுக்கரை சென்றனர்.

 

நந்தன் சத்யாவுடன் சேர்ந்து நின்று அந்த கடலை பார்த்துக்கொண்டே சத்யாவிடம் சொன்னான். “ஏனோ தெரியவில்லை சத்யா, நான் கடந்த முறை இங்கு வந்த போது நீ அப்போது தான் எனக்கு பரீட்சையம் ஆகி இருந்த சமயம், அப்போது உன் முகம் என் நினைவில் அடிக்கடி வந்து சென்றது, உன்னை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது, ஆனால் உன் முகமும் உன் நினைவும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. உன்னை திருமணம் செய்த நாளில் இருந்து உன்னை இங்கே அழைத்து வந்து ஒன்றாக இந்த இடத்தை ரசிக்க ஆசைப் பட்டு கொண்டிருந்தேன், இனி வருடம் தோறும் நாம் அனைவரும் இங்கு வர வேண்டும் என்றான். சத்யாவும் ஆமாம் என்று புன்னகைத்தாள். எல்லோரும் வீர ஆஞ்சநேயரை வணங்கி விட்டு கடல் அலைகளில் கால் நனைய நடந்தார்கள்.

 

அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்க வேண்டும் சத்யா என்று நந்தன் தீவிர யோசனையுடன் சொல்லஅது என்ன ப்ராஜெக்ட்?” என்றாள் சத்யா சீரியசாக. “அடுத்தது என்ன, அடுத்த பாப்பா தான் என்று நந்தன் சீரியசாக சொல்லி கண் சிமிட்ட சத்யா அவனை லேசாக அடித்தாள்.

 

இப்படியே குழந்தை பெற்று கொண்டிருந்தால் கலெக்டர் அம்மா எப்படி வேலை செய்வதாம்?” என்று கேட்கஅதெல்லாம் செய்யலாம், அம்மா அப்பாவிற்கு இன்னும் இரண்டு பேரன் பேத்திகள் வேண்டுமாம் என்று சொல்லஹலோ இன்னும் கிரிஷ் ஸ்ரீதிகா எல்லாம் இருக்காங்க, அவங்க அத்தை மாமா ஆசையை நிறைவேற்றுவார்கள் என்றாள் சத்யா. “அதெல்லாம் முடியாது, சென்னை போனதும் நம் ப்ராஜெக்ட்டை பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகிறோம் என்று யாரும் பார்க்காத வண்ணம் அவள் இடுப்பை கிள்ளினான் நந்தன். சத்யா கஷ்டப்பட்டு அவன் கிள்ளியதை காட்டிகொள்ளாமல் முகத்தில் புன்னகையுடன் அந்த சுகமான வலியை தாங்கி கொண்டாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018