Sms ch 63 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 63

 

மறுநாள் விடியற்காலை நந்தன் எழுந்து குளித்துவிட்டு கிளம்பினான். சத்யா தூங்கிகொண்டிருக்க அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்துவிட்டு ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு கீழே வந்தான். கமலா அம்மாவும், சத்தியமூர்த்தியும் மட்டும் விழித்து இருந்தார்கள். “நல்லபடியா போய்ட்டு வாப்பா என்று அவர்கள் சொல்லகம்பெனியின் மற்ற வேலைகள் அனைத்தையும் ரோஹித், மது தான் பார்த்துக்கொள்ள வேண்டும், அவர்களிடம் நான் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை, போகும் வழியில் அவர்களுக்கு call செய்து பேசிக்கொள்கிறேன், நீங்களும் ரோஹித்திடம் தெரியப்படுத்தி விடுங்கள் அப்பா என்று சொல்லி வெளியே நடந்தான் நந்தன்.

 

அங்கே வள்ளி, பாட்டி, முருகன் காத்திருந்தார்கள். “நீங்க ஏன் பாட்டி இவ்வளவு சீக்கிரம் எழுந்தீர்கள், நாங்கள் போய் கொள்வோமே என்று நந்தன் சொல்லிக்கொண்டே காரில் பெட்டியை வைக்க சொல்லி டிரைவரிடம் கொடுக்க முருகனின் பெட்டியையும் வாங்க கையை நீட்டினான். முருகன் தானே வைத்துவிடுவதாக சொல்லி பெட்டியை காரின் டிக்கியில் வைத்துவிட்டு வந்தான். “இருக்கட்டும் தம்பி, நல்லபடியா போய்ட்டு வாங்க என்று பாட்டி சொல்ல சரி என்று நந்தன் தலை அசைத்துவிட்டு கமலா அம்மாவிடம் திரும்பிஅம்மா சத்யாவிற்கு ஜுரம் குறையவில்லை, இன்னைக்கு டாக்டரை வீட்டிற்கு வர வைத்து check up செய்து விடுங்கள், வள்ளி நீங்களும் சத்யாவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்றான்.

 

சத்தியமூர்த்தியிடம் திரும்பிஅப்பா அனாவசியமாக யாரும் வெளியே போக வேண்டாம், பாதுகாப்பிற்காக புதிதாக வர சொன்ன இருவரும் செக்யூரிட்டி அறையில் காத்திருக்கிறார்கள், நீங்கள் வாருங்கள், உங்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொல்லி சத்தியமூர்த்தியை அழைத்து சென்று அறிமுகப்படுத்திவிட்டு திரும்பி காருக்கு வந்தான். “சரிம்மா வரேன், நீங்களும் பெரிதாக எதற்கும் கவலைப்படாமல் உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல கமலா அம்மாஎன்னை பற்றியோ, சத்யா பற்றியோ, யாரை பற்றியும் கவலை படாமல் போய்ட்டு வா, நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அது தான் முக்கியம் என்று கமலா அம்மா சொல்ல நந்தன் பரிவுடன் அவர்களை பார்த்தான். “இது தான் விஷயம் என்று உண்மையான காரணத்தை நான் சொல்லாமலேயே அம்மா எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள், நான் ஷ்யாம் விஷயமாக தான் போகிறேன் என்பதையும் நேற்று இரவே கணித்து விட்டார்கள் என்று மனதில் நினைத்தவன்கவலைப் படாதீர்கள் அம்மா, கண்டிப்பாக கவனமாக இருப்பேன், நானும் முருகனும் ராகவன் வீட்டிற்கு சென்று அவனை அழைத்து கொண்டு அங்கிருந்து ஏர்போர்ட் செல்வோம், டிரைவர் எங்களை ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு திரும்பி வருவார், சரி வருகிறேன் என்று சொல்லி நந்தனும் முருகனும் காரில் அமர டிரைவர் காரை ஸ்டார்ட் செய்தார். முருகன் வள்ளிக்கும், நந்தன் எல்லோருக்கும் கை அசைத்து விடைபெற்றனர்.

 

ராகவனை அழைத்துக்கொண்டு சென்னை ஏர்போர்ட் சென்றவர்கள் டிரைவரை அனுப்பிவிட்டு பேச ஆரம்பித்தார்கள். “so பஞ்சாப் flight, check in பண்ணிட்டு கேட் எதுன்னு பாத்து கிளம்ப வேண்டியது தான் என்று ராகவன் சொல்லஆமாம் டா, வீட்டுல மும்பை போறதா தான் சொல்லி இருக்கோம், நீங்களும் அப்படி தானே சொல்லி இருக்கிறீர்கள் முருகன்?” என்று நந்தன் கேட்கஆமாம் சார், வள்ளிகிட்ட கூட மும்பைன்னு தான் சொல்லி இருக்கேன்.

 

Check in மற்றும் இதர சம்பிராதயங்கள் எல்லாம் முடிந்து flight ஏறிய மூவரும் வரிசையாக உட்கார்ந்திருக்க நந்தன் சொன்னான். “first யாரடா பாக்க போறோம்?” சுனிதா அம்மாவையா? இல்ல ஷ்யாம் அம்மாவையா?” என்று கேட்டான் நந்தன்.

 

முதல்ல AKIM குரூப்பின் டெல்லி தலைவரை பார்க்க போகிறோம், அவர்களின் support நமக்கு ரொம்ப முக்கியம், அப்புறம் அந்த குரூப்ல இருக்கிற பஞ்சாப் பிரிவு narcotics போலீஸ் officers பார்க்க போகிறோம், நேரடியாக போலீசை அணுகுவதை விட AKIM குரூப்பில் இருப்பவர்கள் மூலமாக தான் காய்களை நகர்த்த வேண்டும் என்றான் ராகவன்.

 

முருகன் பாதி புரியாமல் விழித்து “AKIM னா என்ன ராகவன் சார்?  அது ஒரு போலீஸ் டிபார்ட்மென்ட்டா?” என்றான்.

 

இல்லை முருகன், ஆனால் அதில் போலீஸ்களும் உள்ளனர், AKIM என்பதின் விரிவாக்கம் “Abdul Kalaam’s Ignited Minds”, அப்துல் கலாம் ஐயா எழுதின Ignited Minds அப்படிங்குற புத்தகத்துல இந்தியாவின் வெவ்வேறு துறைகளில் உள்ள உத்வேகமும் நேர்மையும் நிறைந்த அதிகாரிகள் ஒன்றாக இணைந்து ஒரே குறிக்கோளுக்காக செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை பற்றி சொல்லி இருப்பார், அவருடைய எழுத்துக்களில் inspire ஆகி ஆரம்பிக்கப்பட்ட குழு தான் இது, இதில் போலீஸ், IAS அதிகாரிகள், ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் என்று எல்லா துறையை சேர்ந்தவர்களும் இருப்பார்கள், வளமான இந்தியாவை உருவாக்குவதற்கு அவரவர் துறை மூலமாக ஏதாவது ஒரு சிறு கல்லையாவது எடுத்து போடுவது தான் இந்த குழுவின் குறிக்கோள், அதே போல் நம் நாட்டிற்கு சாபக்கேடாக இருக்கும் போதை, குடிப்பழக்கம், ஊழல்களை வேரறுக்கவும் இவர்கள் தங்களால் இயன்ற வேலைகளை செய்வார்கள், அரசியல் விருப்பு வெறுப்பு இன்றி, ஜாதி மத பேதமின்றி செயல்படுவார்கள், இந்தியாவின் அடுத்த தலைமுறை போதை, குடி, porn, ரேப்களில் விழுந்து விடாமல் ஆரோக்கியமான இளைஞர்களை உருவாக்குவது தான் இவர்களின் முழுமுதற் குறிக்கோள், இதில் நான், நந்தன் எல்லாம் கூட உறுப்பினர்கள் தான்

 

ஓஹோ இதெல்லாம் எனக்கு தெரியாது சார், நானோ ஸ்கூல் படிப்போடு சரி, நீங்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் சார்

 

அப்படி இல்லை முருகன், எல்லோருக்குமே இதில் பங்கு உள்ளது, நீங்கள் இப்போது விவசாயம் செய்ய போகிறீர்கள் இல்லையா? அந்த விவசாயமும் ஆரோக்கியமான இந்தியாவிற்கு முதுகெலும்பு தானே? So நம்ம எல்லோருக்குமே நாளைய ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டிய பொறுப்பும் பங்களிப்பும் இருக்கிறது

 

பெரிய விஷயங்களா சொல்றீங்க சார், எனக்கு ஏதோ கொஞ்சம் புரியுது, அது சரிங்க சார், நாம அவங்கள பாத்துட்டு அடுத்தது என்ன பண்ண போறோம்? ஷ்யாம் பஞ்சாபில் தான் இருக்கிறானா? அவனை எப்போது பிடிக்க போகிறோம்?”

 

அவன் எங்கே இருக்கிறான் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை முருகன், தமிழ்நாட்டில் இல்லை என்ற தகவல் கிடைத்தது, பஞ்சாபில் இல்லை என்ற தகவலும் கிடைத்தது, இருந்தாலும் எதுவுமே உறுதியாக தெரியாது, அதனால் தான் எக்ஸ்ட்ராவாக இரண்டு ஆட்களை சத்யாவின் பாதுகாப்பிற்காக வைத்துவிட்டு வந்திருக்கிறோம், அதே போல் நாம் அவனை பிடித்து கைது செய்தாலும் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் உள்ளதால் தப்பித்து விடுகிறான், அதனால் தான் இந்த முறை அரசியல்வாதிகள் கூட அவனை பாதுகாக்க தயங்க போகிற மாதிரி ஒரு வேலையை AKIM உடன் சேர்ந்து நாம் செய்யப்போகிறோம், one step at a time என்ற முறையில் ஒவ்வொன்றாக நிதானமாக plan செய்து செய்ய வேண்டும் என்றான் ராகவன்.

 

நந்தன் அமைதியாக கண்களை மூடிக்கொண்டு வருவதை பார்த்த ராகவன்என்னடா அதுக்குள்ள தூங்கிட்டியா? கொஞ்ச நாட்கள் பிரிய போகிறோம் என்று சத்யாவுடன் ஒரே ரொமான்ஸா நேத்து நைட் எல்லாம்?” என்றான் கிண்டலாக.

 

நந்தன் கண்களை விழித்து பார்த்துநீ வேற டா, நல்ல ஜுரம் டா சத்யாவுக்கு, அவளை எழுப்பி போய்ட்டு வரேன்னு கூட சொல்லல, ஒன்னு உடம்பு சரி இல்லாதவளை எதற்கு எழுப்ப வேண்டும் என்ற எண்ணம், இன்னொன்று அவள் இப்போது இருக்கும் மனநிலையில் என்னை எங்கேயும் இத்தனை நாட்கள் போக விடமாட்டாள, அதனால் தான் சொல்லாமல் புறப்பட்டு வந்துவிட்டேன், இருந்தாலும் அவள் நினைவாகவே இருக்கிறது என்றான்.

 

இந்த கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தானேடா, சீக்கிரமே பிரச்சனைகள் முடிந்ததும் நீயும் சத்யாவும் இந்த ஷ்யாமிற்கு பயப்படாமல் நிம்மதியாக வாழலாம் என்றான் ராகவன்.

 

ஹ்ம்ம் அதற்கு தானே இவ்வளவு போராட்டமும், சரி என்னை விடு, பாவம் முருகன், அவரும் இப்போது தான் வள்ளியுடன் வாழ்க்கையை தொடங்கினார், அதற்குள் அவர் தந்தையின் மரணம், ஷ்யாமின் இடையூறல், அதனால் போலீஸ் பாதுகாப்பு, இப்படி அவரது வாழ்க்கையிலும் நெறைய இடைஞ்சல்கள் தான், இப்போது நமக்காக அவரை இழுத்து வந்துவிட்டோம், வள்ளி அங்கே என்னை எப்படி திட்டி கொண்டிருக்க போகிறார்களோ?” என்றான் ஒரு புன்னகையுடன்.

 

இல்ல சார், நீங்கள் அழைக்கவில்லை என்றாலும் வள்ளி உங்களுக்கு துணையாக என்னை அனுப்பி இருப்பாள், நானுமே அழைக்காமலே வந்திருப்பேன், கவிதா அம்மா என்னை மிகவும் மதிப்போடு நடத்தி பிசினஸ்ஸில் என்னை நம்பி நெறைய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள், அவர்களிடம் இருந்து நான் நெறைய விஷயம் கற்றுக்கொண்டேன், அவர்கள் மகளுக்கு நாங்கள் எல்லோருமே கடமை பட்டுள்ளோம் என்றான் முருகன்.

 

ஹ்ம்ம்…….முருகன், பண்ணை வீட்டை சுற்றி சின்ன சின்ன குடில்கள் இருக்கும், வெளியே பார்க்க குடில்கள் போல் இருந்தாலும் உள்ளே எல்லா வசதிகளுடனும் இருக்கும், பண்ணை வீட்டிற்கு சென்ற பிறகு யார் தொல்லையும் இல்லாமல் ஒவ்வொரு குடிலிலும் ஒவ்வொரு நாள் வள்ளியுடன் தேனிலவு கொண்டாடுங்கள்

 

ஏன் சார் நீங்க வேற?” என்று முருகன் வெட்கப்படஆமாம் அதெல்லாம் ஏதோ சுற்றுலா பயணிகளுக்கு வாடகை விடுவதற்காக கட்டியது தானே, அந்த ஐடியா என்ன ஆயிற்று?” என்று ராகவன் நந்தனை கேட்கஅப்படியே கிடப்பில் கிடக்கிறது டா, ஸ்ரீஜா தெரியும் தானே, ரோஹித்தின் மனைவி, எனக்கு வீட்டில் போர் அடிக்கிறது என்றாள், சரி நம் கம்பெனியில் வேலை செய், இல்லை வெளியே வேலை செய்வதென்றாலும் செய் என்றோம், கொஞ்ச நாட்கள் நம் கம்பெனியில் செய்தாள், பிறகு பிடிக்கவில்லை என்று வெளியே வேலைக்கு சென்றாள், அப்புறம் வேறு ஏதாவது தொழில் செய்கிறேன் என்றாள், எனக்கு பலநாட்களாகவே இப்படி ஒரு பண்ணை வீடு, சுற்றி காடு, அதில் நவீன வசதிகளுடன் குடில்கள், அதை சுற்றி வயல் என்று ஒரு இயற்கை சூழலில் ஒரு நல்ல getaway மாதிரி சென்னை அருகில் உருவாக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன், சரி ஸ்ரீஜாவுக்கு அதை அமைத்து கொடுத்து பிசினஸ் போல செய்ய சொன்னோம், முதலில் சரி என்று இறங்கியவள் பிறகு அதையும் கை விட்டுவிட்டாள், இப்போது ஏதோ fashion designing படிக்கிறாளாம், அதனால் இந்த ஐடியா குடில்கள் அமைத்ததோடு கிடப்பில் கிடக்கிறது, இப்போது தான் முருகனை வயல்வெளிகளை குத்தகைக்கு எடுத்து பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறேன், பார்ப்போம் ஷ்யாம் பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்றான் நந்தன்.

 

சார் நீங்க எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க?” என்று முருகன் ராகவனை பார்த்து கேட்க நந்தன் சிரித்தான். “அவன் சரியான சன்யாசி முருகன், பாவம் இவனையும் நம்பி ஒருத்தி இருக்கிறாள் என்று நந்தன் கிண்டல் செய்ய ராகவன் நந்தனை முறைத்தான். “நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு தவிக்கிற தவிப்பை பார்த்துக்கொண்டு தானே முருகன் இருக்கிறேன், இதில் நான் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?” என்று ராகவன் அலுத்து கொண்டான்.

 

சரி சரி ரொம்ப அலுத்துக்காதே, கொஞ்ச நேரம் தூங்கலாம், பஞ்சாபில் போய் இறங்கியதும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் நெறையவே இருக்கின்றன என்று நந்தன் சொல்ல மூவரும் flight ல் தூங்க ஆரம்பித்தனர்.

 

சென்னையில் சத்யா ஜுரத்தில் அனத்தினாள். அவள் அருகே உட்கார்ந்து இருந்த வள்ளி சத்யா அனத்திக்கொண்டே திரும்பி படுக்கவும் அவள் மேல் கை வைத்து எழுப்ப முயன்றாள். “சத்யா இந்த கஞ்சியை கொஞ்சம் குடித்துவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கு என்றாள்.

 

சத்யா வள்ளியின் குரல் கேட்டு ஒரு நிமிடம் அமைந்தகரையில் இருக்கிறோம் என்று நினைத்தாள். “அக்கா என்று கண்களை கசக்கி கொண்டு எழுந்து உட்கார முயன்றாள். அறையை சுற்றி பார்த்துவிட்டு நாம் அவர் அறையில் தான் இருக்கிறோம் என்று உறுதி செய்தவளுக்கு இது எந்த நாள், நேரம் என்ற கேள்விகளுடன் சிந்தை அனைத்தும் குழம்பி இருந்தன. “நீங்க ஏன் அக்கா கஞ்சி எடுத்து வந்தீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே வாங்கி அருந்தினாள். வாய் எல்லாம் கசப்பாக இருந்ததால் கஞ்சி உள்ளே இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. சிறிது நேரம் தொலைவில் எதையோ பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தவள்அவர் வேலைல இருந்து ஏன் அக்கா இன்னும் திரும்பி வரவில்லை, மணி எத்தனை?” என்று கடிகாரத்தை தேடினாள்.

 

மணி இப்போது காலை 9.30 ஆகிறது, உன் நந்தன் நேற்றிரவு வேலையில் இருந்து திரும்பி வந்து இன்று காலையிலேயே வேலை விஷயமாக மும்பைக்கு கிளம்பி விட்டார், முக்கியமான deal ஏதோ பேச வேண்டுமாம், இந்த deal மட்டும் ok ஆனால் உங்கள் பிசினஸ்க்கு பெரிய லாபம் கிடைக்குமாம், எனக்கு எங்கே இதெல்லாம் புரிகிறது? நீ எழுந்ததும் சொல்லிவிட்டு செல்லலாம் என்று சுற்றி சுற்றி வந்தார், நீ எழுந்திரிக்கும் வழியை காணவில்லை, உன்னை நல்லபடியாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அரை மனதாக கிளம்பினார் என்று வள்ளி கோர்வையாக சொல்லி முடிக்கஎப்போ அக்கா திரும்பி வருவார்? ரெண்டு நாளா? இல்லை ஒரு வாரமா?” என்று ஏக்கமாக கேட்டாள்.

 

அவருக்கே தெரியாதாம்மா, ஏதோ பெரிய textiles கம்பெனியோடு ஒப்பந்தமாம், நெறைய பேர் போட்டி போடுகிறார்களாம், நமக்கு கிடைத்து விட வேண்டும் என்று கமலா அம்மாவிடம் சொல்லிகொண்டிருந்தார், எத்தனை நாட்கள் ஆனாலும் இருந்து பேசி முடித்துவிட்டு தான் வருவாராம்

 

சத்யாவிற்கு இதெல்லாமே ஏதோ புதிதாக தோன்றியது. “பாவம் வள்ளி அக்கா அவர்களுக்கு புரிந்த வரைக்கும் சொல்கிறார்கள், இதில் ஏதோ நெறைய விஷயங்கள் உள்ளன, என்னவென்று தான் புரியவில்லை, எதுவாயினும் என்னை எழுப்பி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பி இருக்கலாம், உடம்பு சரி இல்லாதவளை அப்படியே விட்டுட்டு கிளம்பிட்டார்னா என்ன விஷயம் என்று புரியவில்லையே என்று மனதிற்குள் நினைத்து குழம்பியவள்சரிக்கா நீங்க கிளம்புங்க, அண்ணா உங்களை தேட போகிறார் என்று சொல்லஉன் அண்ணனும் தான் நந்தன் சாரோட மும்பை போய் இருக்கிறார், இவருக்கு மும்பை பழக்கமான ஊர் இல்லையா? அதனால் துணைக்கு இருக்கட்டும் என்று அழைத்து சென்றுள்ளார்கள் என்றாள் வள்ளி. சத்யாவிற்கு சந்தேகங்கள் இன்னும் வலுத்தன.

 

என்னவோ சரி இல்லை, ஆனால் இந்த தலைவலியில் எதுவுமே ஒழுங்காக யோசிக்க முடியவில்லை என்று மீண்டும் படுத்துக்கொள்ள முயல கமலா அம்மா டாக்டருடன் உள்ளே வந்தார்கள்.

 

சத்யா எழுந்து உட்கார டாக்டர் கேட்டார். “எத்தனை நாட்களாக இப்படி ஜுரம் இருக்கிறது?” என்று ஒவ்வொன்றாக விசாரிக்க சத்யாவும் பதில்களை சொன்னாள Blood டெஸ்ட் க்கு ரத்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு சில மாத்திரைகளை பரிந்துரை செய்துவிட்டு ரத்த சோதனை முடிந்து வந்த பிறகு மேற்கொண்டு சிகிச்சையை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டு டாக்டர் புறப்பட்டார்.

 

கமலா அம்மா சத்யாவின் தலையை தடவி கொடுக்க சத்யாதருண் எங்க அத்தை?” என்றாள். “வேறு எங்கு இருக்க போகிறான்? அவன் தாத்தாக்களுடனும் வள்ளி பாட்டியுடனும் தோட்டத்தில் தான் விளையாடி கொண்டிருக்கிறான். நீ ஏன்டா கஞ்சியை அப்படியே வைத்திருக்கிறாய்? கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் சாப்பிட்டு விடும்மா, அப்போது தான் மாத்திரை போட தெம்பாக இருக்கும் என்றார்கள்.

 

வாய் ரொம்ப கசப்பா இருக்கு அத்தை, இவர் எப்போ அத்தை திரும்பி வருவார்? உங்களிடம் ஏதாவது சொன்னாரா?” என்றாள்.

 

கமலா அம்மா அவளை பரிவுடன் நோக்கிஇல்லடாம்மா முக்கியமான deal, எப்படியாவது நமக்கு கை எழுத்து ஆகி விட வேண்டும், அப்போது தான் நம் தொழிலுக்கு நல்லது என்று சொன்னான், நான் வர கொஞ்சம் முன்னபின்ன ஆகலாம், சத்யாவிற்கு வேறு உடம்பு சரி இல்லை, பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு தான் கிளம்பினான், உன்னை விட்டுவிட்டு கிளம்ப அவனுக்கு மனமே இல்லை, ஆனால் வேலை என்று வந்தால் அவன் இப்படி தான்மா என்ன தான் நம் மீது பாசம் இருந்தாலும் வேலை தான் முக்கியம் என்று ஓடி விடுவான், எங்களை எல்லாம் உட்கார வைத்து சோறு போடுகிறேன் என்று அவன் மட்டும் உட்காராமல் உழைத்து கொண்டிருக்கிறான், அவன் திரும்பி வந்ததும் நீ தான்டா கொஞ்ச நாளைக்காவது அவனை எங்கேயாவது அழைத்து சென்று சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல சத்யா புன்னகைத்தாள்.

 

கமலா அம்மாவும் ஒரு புன்னகையுடன்சரிம்மா வள்ளியிடம் கொஞ்சம் இஞ்சி துவையல் கொடுத்து அனுப்புகிறேன், அந்த துவையலுடன் கஞ்சியை குடித்து விட்டு மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்கு என்று சொல்லி வள்ளியை அழைத்துக்கொண்டு கிட்சன் சென்றார்கள்.

 

சத்யா whatsapp எடுத்து நந்தனுக்கு வீடியோ call செய்ய முயற்சித்தாள். சிக்னல் கிடைக்கவில்லை, flight ல் போய்க்கொண்டிருப்பார் போல என்று எண்ணிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

 

கமலா அம்மா துவையல் அரைத்து வள்ளியிடம் கொடுக்க அதை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா சொன்னாள். “கை குழந்தையோடு இருக்கும் எனக்கு கூட இப்படி உட்கார வைத்து, தனியாக வேலைக்காரி எல்லாம் வைத்து பார்த்துக்கொள்வதில்லை, நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் தான் செய்கிறோம், சத்யாவிற்கு மட்டும் என்ன சிறப்பு கவனிப்பு? அவளும் இந்த வீட்டின் மருமகள் தானே, அவளுக்கு மட்டும் ஏன் தனி வேலைக்காரி எல்லாம்?” என்றாள்.

 

வள்ளி இவை எதுவும் காதில் விழாமல் மாடிக்கு செல்ல அவள் செல்லும் வரை காத்திருந்து விட்டு கமலா அம்மா சொன்னார்கள்உனக்கு உடம்பு சரி இல்லாத போதும் நாங்கள் உன்னை நன்றாக தானே டா பார்த்துக்கொண்டோம்? அதுமட்டுமல்ல வள்ளி ஒன்றும் சத்யாவின் வேலைக்காரி இல்லை, அவளின் தோழி, உடம்பு சரி இல்லாதவளுக்கு துணையாக இருக்கிறாள் என்றார்கள் கமலா அம்மா.

 

பரவால்லயே, அப்படி என்றால் நானும் என்னுடைய இரண்டு தோழிகளை வர வைத்துக்கொள்கிறேன், அவர்களுக்கும் சோறு வடித்து கொட்டி நம் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று ஸ்ரீஜா சொல்ல சகுந்தலா அம்மா உள்ளே வந்தார்கள். “ஸ்ரீஜா ஆரம்பித்து விட்டாயா? என்னடா அமைதியாக இருக்கிறாயே என்று நினைத்தேன், உனக்கு இந்த வீட்டில் எந்த குறையும் இல்லை, பிரச்சனை செய்ய வேண்டும் என்று செய்யாதே, உன் விருப்பத்தை நிறைவேற்ற எவ்வளவு செலவு செய்துள்ளோம் என்று மறந்து விடாதே, இத்தனைக்கும் ரோஹித்துடன் சந்தோஷமாகவாவது இருக்கிறாயா? அதுவும் இல்லை, எப்போது பார்த்தாலும் அவனுடன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் இருக்கிறாய் என்று சகுந்தலா சொல்லஆமாம் சந்தோஷமாக இல்லாமல் தான் ஒரு குழந்தை பெற்றேனா?” என்று கேட்கஇங்க என்ன பிரச்சனை?” என்று கணேஷ் சத்தமாக கேட்டுக்கொண்டே வர ஸ்ரீஜா எதுவும் பேசாமல் கிட்சனில் இருந்து வெளியேறி தன் அறைக்கு சென்றாள்.

 

என்னம்மா பிரச்சனை?” என்று சகுந்தலாவை பார்த்து கேட்கஒண்ணுமில்லைங்க, உங்களிடம் எத்தனை முறை சொல்வது? நான்கு பெண்கள் இருக்கும் வீடான வீட்டில் அப்படி இப்படி பேசிக்கொள்ள கூடாதா? அதெல்லாம் என்னவென்று கேட்டுக்கொண்டு நீங்கள் ஆண்கள் வரக்கூடாது, போங்க போய் உங்க பேரப்பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருங்கள் என்று சகுந்தலா அவரை துரத்தாத குறையாக துரத்திவிட்டு கமலா அம்மாவை பார்த்து புன்னகையுடன் சொன்னார்கள்அக்கா சத்யா வந்த பிறகு இன்னைக்கு தான் ஸ்ரீஜா மறுபடியும் ஆரம்பிச்சிருக்கா, இன்னும் என்ன எல்லாம் பேசப்போறாளோ? ஆனா எவ்வளவோ பாத்துட்டோம், இதை பார்க்கமாட்டோமா?” என்று கிண்டலாக கமலா அம்மாவின் தோள்களை பிடித்து கேட்க கமலா அம்மா சகுந்தலாவின் கைகளை தொட்டுசகுந்தலா எல்லோரும் என்னவோ நான் தான் இந்த குடும்பத்தை இவ்வளவு வருஷம் கட்டி இழுத்து கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் நீ தான் இந்த குடும்பத்தை உடையாமல் கட்டி இழுத்து வந்துள்ளாய் என்று சொல்ல இருவரும் ஒருவரின் தோளில் ஒருவர் தலை சாய்த்து அணைத்து கொண்டார்கள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018