Sms ch 53 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 53

நந்தன் சொன்ன விஷயங்களை கேட்டு பாட்டி திகைப்பில் விழிக்க நந்தன் பாட்டியின் தோள்களில் கை போட்டு அணைத்துபாட்டி என்ன ஒரே அதிர்ச்சியா இருக்கா?” என்று புன்னகையுடன் கேட்கஆமாம் தம்பி, எனக்கு உண்மையா என்ன சொல்றதுன்னே புரியல. ஆனா ஒரு விஷயம் நீங்கள் அமைந்தகரை வரும் போதெல்லாம் ஏதோ ஒன்று, நீங்கள் சத்யாவிற்கு நெருக்கமானவராக தோன்றும், நீங்களும் சத்யாவும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும், இத்தனைக்கும் உங்களை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, ஏன் அப்படி தோன்றியது என்று புரியவில்லை, ஒருவேளை கவிதாம்மா தெய்வமாக இருந்து காட்டிக்கொடுத்த அறிகுறியோ என்னவோ?” என்றார்கள்.

 

இருக்கும் பாட்டி, எனக்கும் தருணையும் சத்யாவையும் முதன் முதலாக பார்த்ததில் இருந்தே ஏதோ இனம் புரியாத இணைப்பு என்னை மீண்டும் மீண்டும் அங்கே இழுத்து வந்தது, சரி பாட்டி, நாம் நெறைய பேசுவோம், இங்கே இருக்க சொல்லி நானும் பலமுறை கேட்கிறேன், ஆனால் நீங்கள் யாருமே பிடிகொடுத்து பேச மாட்டேன் என்கிறீர்களேஎன்று சொல்ல வள்ளியும், முருகனும் நந்தன் பாட்டியிடம் வந்தார்கள்.

 

வாங்க வள்ளி, இப்போதான் பாட்டிகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், நான் உங்களை எத்தனை முறை கேட்டாலும் நீங்கள் இங்கே இருப்பேன் என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே என்று

 

அது வந்து சார்....” என்று வள்ளி தயங்கசொல்லுங்க வள்ளி, என்ன தயக்கம்?” என்று நந்தன் கேட்கஇல்லை சார், சத்யாவிற்கு நாங்கள் பிறந்த வீட்டார் போல, அவளை கட்டி கொடுத்தவர்கள் வீட்டில் தங்கினால் சரியாக இருக்காது, அதனால் தான்....”

 

நீங்கள் இப்படி எல்லாம் தயங்க வேண்டிய அவசியமில்லை வள்ளி, சரி உங்கள் நியாயப்படியே பேசுவோம், அமைந்தகரைக்கு நீங்கள் போவது பாதுகாப்பான விஷயம் கிடையாது, சேலத்திற்கு திரும்பி சென்றால் கூட ஷ்யாம் உங்களை வைத்து சத்யாவை பிடிக்கும் எண்ணத்தில் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும, வேண்டுமானால் இங்கே கொஞ்ச நாட்கள் தங்குங்கள், பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம், கொஞ்ச நாட்கள் தங்குவது ஒன்றும் பிரச்சனை இல்லையே?” என்று நந்தன் கேட்க மீண்டும் அனைவரும் தயங்க கமலா அம்மா அங்கே வந்தார்கள்.

 

என்னப்பா என்ன ஆச்சு? எல்லாரும் உட்கார்ந்து பேசலாமே, ஏன் பாட்டியை நிற்க வைத்தே பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள் கமலா அம்மா.

 

இல்லம்மா சத்யாவிற்கு வெளியே ஆபத்து என்று சொன்னேன் அல்லவா? அதே ஆபத்து இவர்களுக்கும் உள்ளது, அதனால் நம் outhouse ல் தங்க சொல்லி கேட்டேன், ஆனால் சத்யா அவர்கள் வீட்டு பெண்ணாம், பெண்ணை கட்டி கொடுத்த வீட்டில் தங்குவது சரியாக வராதாம்

 

ஏன் மா, நாங்கள் ஒன்றும் தவறாக நினைக்க மாட்டோம், சரி கொஞ்ச நாட்கள் தங்குங்கள், பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்

 

கமலா அம்மா சொல்வதை மறுத்து பேச முடியாமல் பாட்டியும் வள்ளி முருகனும் சரி என்றனர்.

 

இதற்கிடையில் ராகவன் நந்தனுக்கும் சத்யாவிற்கும் வாழ்த்து சொல்லி புறப்பட்டிருந்தான். நந்தன் அவனை ஜாக்கிரதையாக இருக்க சொல்லி இருந்தான். மது நந்தன் flat க்கு சென்று சத்யாவின் துணிமணிகளை பேக் செய்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளும் வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு புறப்பட்டிருந்தாள்.

 

மது கொண்டு வந்து கொடுத்த சத்யாவின் துணிமணிகள் கொண்ட bag ஐ நந்தனின் அறையில் வைக்கும் படி கமலா அம்மா அமுதாவை பணித்து விட்டு சத்யாவை முகம் எல்லாம் கழுவி மீண்டும் வேறு ஒரு சேலை கட்டி வர செய்து விளக்கேற்ற சொல்லி எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்க சொன்னார்கள். தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாலினி அத்தை, மாமா என்று அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கமலா அம்மாஅமுதா அங்கே எல்லாவற்றையும் தயாராக்கி வைத்து விட்டாயா?” என்று கேட்டார்கள்.

 

தயாரா இருக்கு அம்மாஎன்று சொல்ல நந்தன் என்னவென்று யோசித்தான். பிறகு ஏதோ நினைவு வந்தவன் போலஇதை பற்றி நாம் யோசிக்கவே இல்லையே, சத்யாவிற்கு surprise தர வேண்டும் என்று பெரிய திட்டம் எல்லாம் போட்டோமே, இன்றே எல்லாம் தெரிந்து விடும் போலவேஎன்று நினைத்தான்.

 

சத்யாவும் என்ன சொல்கிறார்கள் என்று குழம்பநந்து, சத்யா வாங்கஎன்று ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள். மற்றவர்களும் பின்னாலேயே வர சத்யாவிற்கு குழப்பம் இன்னும் அதிகம் ஆகியது. அந்த அறை விசாலமாக காற்றோட்டாமாக இருந்தது. ஆங்காங்கே சோஃபாக்களும் டேபிள் chair களும் போடப்பட்டிருந்தன. நெறைய அலமாரிகளும், அதில் பல வகையான புத்தகங்களும் இருந்தன. “லைப்ரரி போலஎன்று மனதிற்குள் சத்யா நினைக்க அங்கே நந்தனை பெற்றோரின் தாய் தந்தை போட்டோக்கள் பெரிதாக்கப்பட்டு மாலையும் போட்டுமாக இருக்க இவர்கள் யார் என்று சத்யா மனதிற்குள் நினைத்தாள். பார்ப்பதற்கு நந்தன் ஜாடையில் இருக்கிறாரே என்று யோசித்து கொண்டிருந்தாள்.

 

கமலா அம்மா சத்யாவை அழைத்துஇந்தாம்மா இந்த விளக்கையும் ஏற்று, இவர்கள் தான் நந்தனை பெற்றவர்கள், இவர்கள் படத்தின் முன் இருவரும் விழுந்து வணங்குங்கள்என்று சொல்ல சத்யாவிற்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அப்படி என்றால் கமலா அம்மா நந்தனை பெற்ற தாய் இல்லையா? என்று குழம்ப நந்தன் என் தம்பி மகன், ஆனால் நாங்கள் பெறாமல் பெற்ற பிள்ளை, 7 வயதில் இருந்து நாங்கள் தான் அவனை வளர்த்தோம்என்றார் சத்தியமூர்த்தி. சத்யா அந்த விளக்கை ஏற்ற நந்தனும் சத்யாவும் கீழே விழுந்து வணங்கினர்.

 

நந்தன் மனதில் திக் திக் என்று ஏதோ இனம் புரியாத பரவசம். அடுத்து கமலா அம்மாஇங்க வாம்மாஎன்று மற்றொரு ஜன்னலின் அருகே இருந்த ஒரு போட்டோவை நோக்கி அழைத்து செல்ல இவர்கள் யார்? போட்டோ சரியாக தெரியவில்லையே என்ற நினைப்புடன் சத்யா நடந்தாள். “அமுதா இந்த லைட் போடும்மா, இங்க இருட்டா இருக்கு பாருஎன்று கமலா அம்மா சொல்ல அமுதா லைட்டை on செய்தாள். கமலா அம்மா சத்யாவை அழைத்துஇவங்க நந்தனின் அத்தை, இந்த விளக்கையும் ஏற்றி விழுந்து வணங்குங்கள் இருவரும்என்று சொல்ல தன் தாயின் படத்தை பார்த்த அதிர்ச்சியில் சத்யா மெய்மறந்து சிலையாக நின்றாள்.

 

சத்யா என்னாச்சு மா?” என்று கமலா அம்மா அவள் தோளை பிடித்து குலுக்க வள்ளியும் பாட்டியும் பின்னாலிருந்து போட்டோ அருகே வந்து நன்றாக உற்று பார்க்க இருவரும் கண்களில் கண்ணீருடன் சத்யாவை பார்த்தார்கள்.

 

கமலா அம்மாவும் மற்றவர்களும் குழம்பிஎன்னாச்சு? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி ஆகிட்டீங்க? கவிதாவை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்க வள்ளி, பாட்டி, சத்யாவின் தோள்களில் சாய்ந்து கண்ணீர் வடித்தனர். இப்போது சத்யாவின் கண்களிலும் நீர் பெருகி வழிந்தது.

 

என்னப்பா நந்து? ஏன் இவங்க எல்லாம் அழறாங்க?” என்று கேட்கசத்யா வேற யாரும் இல்லம்மா, நம்ம கவிதா அத்தையோட மகள் தான்என்றான்.

 

என்னப்பா சொல்ற, உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டுவிட்டுஅம்மாடி என் கவிதா பெத்த பொண்ணாடா நீ?” என்று சத்யாவின் தாடையை பிடித்து நிமிர்த்தி பார்க்க சத்யா கண்களில் கண்ணீருடன் ஆமாம் என்று தலை அசைத்தாள். “என்னங்க பாத்தீங்களா? நம்ம கவிதாவோட மகளாங்க சத்யாஎன்று கூற ஏற்கனவே காண்பது கனவா என்பது போல் கண்களில் நீருடன் நின்று கொண்டிருந்த சத்தியமூர்த்தி சத்யாவின் அருகே வந்துஅம்மாடி என் கவிதாவோட மகளா டா நீ?” என்று கேட்க சத்யா மீண்டும் கண்ணீருடன் தலை அசைக்க சத்தியமூர்த்தி அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டார்.

 

சத்யாவும் சத்தியமூர்த்தியும் பேச வார்த்தைகள் இல்லாமல் கண்ணீருடன் அணைத்து கொண்டிருக்க கமலா அம்மா மற்றொரு புறம் சத்யா மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தார்கள். நந்தன் தன் கண்களை துடைத்து கொண்டு பார்த்து கொண்டிருந்தான். தாத்தா தன் wheelchair ல் இருந்து நடக்க முடியாமல் நடந்து சத்யாவின் அருகே வந்தார். அவர் தடுமாறுவதை பார்த்த நந்தனும் ரோஹித்தும் அவர் கையை பிடித்து அழைத்து வர சத்தியமூர்த்தியையும் கமலா அம்மாவையும் விலக்கி விட்டு தாத்தா சத்யாவின் முகத்தை நன்றாக பார்த்தார். “அவ தான், அவளே தான், நம்ம வீட்டுக்கு வந்திருக்காஎன்று கூறி சத்யாவை அணைத்து கொண்டார். எல்லோருமே கண்கள் கலங்க பார்த்துக்கொண்டிருக்க சித்தப்பாவும் சித்தியும் எங்களுக்கும் அவளை காமியுங்கள் என்பது போல் சண்டை போட்டு உள்ளே புகுந்து சத்யாவை அணைத்து விடுவிப்பதற்குள் ப்ரீத்தி அழைத்து வர வெளியே இருந்து வந்த மாலினிநான் நினச்சேன், அப்பவே நினச்சேன், எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினச்சேன், எங்க என் பொண்ணு?” என்று எல்லோரையும் தாண்டி வந்து சத்யாவை அணைத்து கொண்டார்.

 

அறை மணி நேரம் அங்கே பேச்சு குறைவாகவும் கண்ணீருடன் கூடிய அரவணைப்பும் முத்த பரிமாற்றங்களும் அதிகமாக இருந்தன. ஒரு வழியாக எல்லோரும் கண்ணீரை துடைத்து நந்தனிடம் கேட்டார்கள். “உனக்கு முன்னாடியே தெரியுமா நந்து? ஏன் எங்களிடம் சொல்லவில்லை?” “படவா பையன், சொன்னா உன் அத்தை பொண்ண நாங்க தூக்கிட்டு போய்ட போறோமா என்ன?” “திருட்டு பையன் மா இவன்என்று ஆளுக்கு ஒவ்வொருவராய் நந்தனை விசாரிப்பதும், குற்றம் சாட்டுவதும், காலை வாருவதுமாக இருக்கஇருங்க இருங்க, என்னை பேசவிட்டால் தானே நான் பேச முடியும்என்று நந்தன் எல்லோரையும் அமைதியாக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

 

கவிதாவின் போட்டோ முன் இருந்த விளக்கை ஏற்றி நந்தனும் சத்யாவும் விழுந்து வணங்கிய பின் நந்தன் எல்லோரையும் மீண்டும் ஹாலுக்கு அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டு அமுதாவிடம் எல்லோருக்கும் coffee, tea, ஸ்னாக்ஸ் எடுத்து வரும் படி சொல்ல அமுதாவும் இன்னும் இரண்டு வேலைகாரர்களும் அடுப்படி நோக்கி சென்றனர்.

 

எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருங்கள், coffee குடித்துக்கொண்டே பேசலாம், பேசுவதற்கு இன்னும் நெறைய விஷயங்கள் இருக்கிறது, பொறுமையாக பேசுவோம்என்று சொல்லிய நந்தன் எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு இந்த வீட்டின் செல்லமகள் கவிதா அத்தையின் மகள் வந்ததும் எல்லோரும் அவளை கொண்டாடுவதில் என்னை குற்றவாளி ஆக்கி விட்டீர்களேஎன்று நந்தன் விளையாட்டாய் கோபித்து கொள்ளசரி சரி சொல்லு நந்து, உனக்கு எப்போது தெரியும்என்று கேட்கபோன வாரம் தாம்மா தெரியும், சத்யா தன் தாயின் உடலை அவர்கள் உடன் பிறந்த அண்ணன் அஹமதபாத்தில் இருந்து வாங்கி சென்றதாகவும் தன் தாயின் முகத்தை கடைசி வரை பார்க்க முடியாமல் போனதை பற்றியும் சொன்னாள். அப்போது தான் அவள் தாயின் பெயர் என்ன என்று கேட்க கவிதா என்று சொன்னாள். அப்போதே புரிந்து கொண்டேன் அவள் என் அத்தை மகள் என்று, இருந்தாலும் அவளிடம் நான் அதை சொல்லவில்லைஎன்று கூறி சத்யாவை பார்த்தான். சத்யாவும் நந்தனை பார்த்தவள் அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தாள். “உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது என்று அவன் சொன்னதும், இந்த ஒருமுறை தடுக்காதே என்று அவன் முத்தமிட்டதும் நினைவு வரஅத்தை மகள் என்று தெரிந்ததும் சாருக்கு ரொமான்ஸ் அதிகம் ஆகிடுச்சு போலஎன்று நினைத்து முகம் சிவந்தாள்.

 

சத்தியமூர்த்தி தருணை மடியில் வைத்துக்கொண்டு சொன்னார். “நான் தருணை முதன் முதலாக பார்த்த போதே எனக்கு ஏதோ தோன்றியது, அவனை என் மடியில் உட்கார வைத்ததும் அவன் என்னை தாத்தா என்று அழைத்ததும் ஏதோ நெகிழ்ச்சியை உண்டாக்கியது, ஆனால் நான் அப்போது இந்த தொடர்பை உணரவில்லை”.

 

ஆமாம் நீங்கள் கூட அதை பற்றி என்னிடம் சொன்னீர்கள், எனக்கும் கூட பார்த்ததுமே சத்யாவை பிடித்து விட்டது, சரி நம் மகனின் உள்ளம் கவர்ந்தவள், அதனால் இயல்பாக நமக்கு அவளை பிடித்து விட்டது என்று நினைத்தேன், இந்த காரணமும் இப்போது தான் புரிகிறதுஎன்று கமலா அம்மா சொல்லஅட அண்ணி, நான் இன்னைக்கு காலைல சத்யாவை பார்த்ததில் இருந்தே இவளை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று குழம்பிக்கொண்டே இருந்தேன், ப்ரீத்தியின் செயின் கூட போட சொன்னேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள், நான் யாருக்காவது அப்படி உடனே வாரி வழங்கி நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என் தங்கை மகள் என்ற உணர்வு தான் என்னை அப்படி கொடுக்க சொல்லியது போலஎன்று மாலினி சொல்ல அனைவரும் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர்.

 

சரி நாம நம்ம கவிதா பற்றியும் அவள் கணவன் பற்றியும் சத்யா பற்றியும் தெரிந்து கொள்ள நெறைய இருக்கு, பாட்டி, வள்ளி, சத்யான்னு எல்லாரையும் டெய்லி உக்கார வச்சு கேக்கலாம், இன்னைக்கு நடக்க வேண்டிய மற்ற விஷயங்களை பற்றி கவனிப்போம்என்று சத்தியமூர்த்தி சொல்ல நந்தனும் சத்யாவும் பார்வை பரிமாற்றம் செய்ய கமலா அம்மாஇங்க ஒரு நிமிஷம் வாங்க, தம்பி, சகுந்தலா நீங்களும் வாங்கஎன்று நால்வரும் தனியாக சென்று பேச ரோஹித், கிரிஷ், சுவேதா, பிரவின், ப்ரீத்தி என்று இளைஞர் பட்டாளம் நந்தனையும் சத்யாவையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

 

சத்தியமூர்த்திஎன்னம்மா தருணை இன்று நம்மோடு படுக்க வைத்து கொள்ளலாமா?” என்று கேட்கஇல்லங்க, இன்னைக்கு நிச்சயத்திற்காக நான் சும்மா காலண்டர் பார்த்து நல்ல முஹூர்த்தம் என்று குறித்தேன், ஆனால் அவர்கள் சாந்தி முஹூர்த்ததிற்கு நாளைக்கு ஜோசியரை வர வைத்து நேரம் குறித்த பின் தான் மற்றதெல்லாம்என்று சொல்லசரி அப்படின்னா சத்யாவிற்கு தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்வோமா?” என்றார் சத்தியமூர்த்தி.

 

இல்லை வேண்டாம், சத்யாவும் தருணும் நந்தனின் அறையிலேயே தங்கட்டும், தருண் ஏதோ ஊருக்கு சென்று இன்று தான் வந்திருப்பான் போல வள்ளியுடன், அவன் அம்மாவை பிரிந்த ஏக்கம் இருக்கும் அல்லவா? அவனும் சத்யாவும் நந்தனின் அறையிலேயே இருக்கட்டும்

 

அதெப்படிம்மா? சாந்தி முஹூர்த்ததிற்கு நாள் குறிக்க வேண்டும் என்கிறாய், ஒரே அறையில் தங்கட்டும் என்கிறாய்என்று அவர் கேட்டு முடிப்பதற்குள்தருண் இருக்கும் போது ஒன்றும் நடக்காது, நீங்கள் நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்று ஒரு வார்த்தை நந்தனிடம் சொல்லி வையுங்கள், அவன் புரிந்து கொள்வான், என்ன சகுந்தலா? நான் சொல்வது சரி தானே என்று கேட்க சரி தான் அக்கா என்று சகுந்தலாவும் ஒப்பு கொண்டார்.

 

கணேஷ் நீயே நந்தனை அழைத்து சொல்லிடு டாஎன்று சத்தியமூர்த்தி கழண்டு கொண்டார். கணேஷ் நந்தனை அழைக்கஎன்ன சித்தப்பா?” என்றான் நந்தன். “அது வந்து, அது...” என்று லேசாக தயங்கிவிட்டுசத்யாவும் தருணும் உன்னுடன் இருக்கட்டும், ஆனால் மற்றதெல்லாம் நல்ல நேரம் பார்த்து நடக்க வேண்டும், புரிகிறதா?” என்றார் கணேஷ். நந்தனும்புரியுது சித்தப்பாஎன்று ஒரு புன்னகையுடன் சம்மதித்தான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018