Sms ch 58 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 58

நந்தன் தன் கால்களை நீட்டி ஒரு காலின் மேல் இன்னொரு காலை போட்டு, கைகளை குறுக்கே கட்டி கட்டிலின் head board ல் சாய்ந்த படி கண்களை மூடி இருந்தான். சத்யா கட்டிலின் மறுபக்கம் தரையில் தன் மடக்கிய முட்டியின் மீது முகத்தை புதைத்து உட்கார்ந்து இருந்தாள். இரவு எத்தனை மணிக்கு தூங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இருவருமே காலையில் 8 மணி போல் கண் விழித்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததோடு சரி. சத்யா பாத்ரூம் சென்று குளித்துவிட்டு நல்ல சேலை ஒன்றை கட்டிக்கொண்டு கீழே சென்றாள். நந்தன் மீண்டும் படுத்து தூங்கிவிட்டான்.

 

கமலா அம்மா சத்யாவை வாஞ்சையுடன் அழைத்துவா டா கண்ணம்மா, நந்தன் ஒன்றும் கோபப்படவில்லையேஎன்று கேட்டுக்கொண்டே அவளுக்கு coffee கலந்து கொடுத்தார்கள். “இல்லை அத்தை கோபப்படலஎன்றாள் புன்னகையுடன். கமலா அம்மாவும் புன்னகையுடன்சரி நந்தன் எங்கே?” என்று கேட்கரூம்ல தான் அத்தை இருக்காருஎன்றாள். “சரி இந்த காபியை போய் கொடுஎன்றார்கள். சத்யா காபியுடன் செல்ல எத்தனித்தவள் ஏதோ நினைத்து திரும்பிஅத்தை தருண் எழுந்து விட்டானா? ராத்திரி உங்களை ரொம்ப தொல்லை செய்தானா?” என்று கேட்டாள். “தொல்லையா? அட தருண், சின்னு இருவரும் ரொம்ப சமத்தாக இருந்தார்கள். இந்த வாரம் முழுக்க நாங்கள் கிருஷ்ணனின் லீலைகளை தான் கதையாக சொல்லப்போகிறோம் அவர்களுக்கு, எங்களுக்கு குழந்தை இல்லாத குறையே தெரியாத வண்ணம் கடவுள் காலம் தோறும் எங்களுக்கு ஒவ்வொரு குழந்தையாக அனுப்பி வைக்கிறார் எங்கள் அன்பை பொழியஎன்று சொல்ல சத்யா கமலா அம்மாவை பரிவுடன் பார்த்தாள். “தாத்தா, பேரன் மார்கள் எல்லோரும் தோட்டத்தில் தான்மா இருக்கிறார்கள்என்றார்கள். சரி என்று தலை அசைத்துவிட்டு மாடிக்கு காபியுடன் சத்யா வந்தாள்.

 

மீண்டும் படுத்து தூங்கிவிட்டார் போலஎன்று நினைத்தவள் காபியை bedside வைத்து விட்டு அறையை சுத்தம் செய்தாள். பூக்களை எல்லாம் ஒரு பையில் அள்ளி போட்டாள். நந்தன் எழுந்து பார்க்க “coffee” என்று coffee இருந்த திசையில் தன் கைகளை நீட்டினாள். “thanks” என்று சொல்லிவிட்டு பல் துலக்கி வந்து காபியை எடுத்து கொண்டு பால்கனி சென்றவன் தாத்தாக்கள், பேரன்கள் எல்லோரும் தோட்டத்தில் விளையாடுவதை பார்த்து கொண்டே காபியை அருந்தினான்.

 

குளித்துவிட்டு கீழே சென்று சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் புறப்பட்டான். சத்யா அடுப்படியில் எல்லோருடனும் சின்ன சின்ன வேலைகள் செய்வது, தருணை குளிப்பாட்டி விடுவது என்று வேலைகளை முடித்துவிட்டு கமலா அம்மா, சத்தியமூர்த்தியிடம் தனியாக பேச வேண்டும் என்று அவர்கள் அறையில் சந்தித்து பேசினாள்.

 

அத்தை, மாமா, எனக்கு சின்ன வயசுல இருந்தே IAS படிச்சு கலெக்டர் ஆகணும்னு ஆசை, ஆனா நடுவுல பல பிரச்சனைகளால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். நேற்று அவர் சொன்னார். நான் மீண்டும் IAS படிப்பதை பற்றி நினைத்து பார்க்க வேண்டும் என்று, நான் கூட இனிமேல் இதெல்லாம் எதற்கு என்று கேட்டேன், ஆனால் அவர் சொன்னார், தீபிகா பிரச்சனை வராமல் இருந்திருந்தால் உன்னை படிக்க வைத்து ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்திருப்பேன், ஆனால் ஷ்யாம், தீபிகா பிரச்சனைகளினால் சீக்கிரமே திருமணம் நடக்கும் படி ஆகிவிட்டது, அதனால் நீ மீண்டும் படிக்க வேண்டும் என்று சொன்னார். அதிலிருந்து எனக்கும் மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. அவருடைய விருப்பத்தை என்னால் எப்படி ஒதுக்க முடியும்? காலையிலும் மாலையிலும் வீட்டு வேலைகளை செய்கிறேன், பகல் முழுதும் வீட்டில் இருந்தே படிக்கிறேன். அதோடு இல்லாமல் அவர் வேறு சொல்லிவிட்டார், பகல் நேரத்தில் மட்டும் தான் என்னை படிக்க அனுமதிப்பாராம்என்று லேசாக வெட்கத்துடன் சொல்லிவிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என்று கேட்டாள்.

 

சத்தியமூர்த்தியும் கமலா அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “ஒரு 5 நிமிடம் வெளியே இருக்கியாடா? நாங்கள் கலந்தாலோசித்து விட்டு சொல்கிறோம்என்று சொல்ல சத்யாவும் புன்னகையுடன் சரி என்று தலை அசைத்து வெளியே வந்து காத்திருந்தாள்.

 

பாத்தீங்களா? நேத்து வரை பேசவே பயந்தவள் இன்று இரத்தின சுருக்கமாக IAS படிப்பது தன் விருப்பம், தன் விருப்பம் மட்டுமல்ல அவர் விருப்பமும் கூட என்று சொல்கிறாள். நாம் மறுக்க கூடாது என்று காலையிலும் மாலையிலும் வீட்டு வேலைகள் செய்து விடுவாளாம்என்று சிரித்து கொண்டே சொன்னவர்கள் அது மட்டுமல்லஎன்று கணவன் அருகே வந்து குரலை தாழ்த்திக்கொண்டு அவர்கள் இல்லற வாழ்க்கை பாதிக்க படும் என்று நாம் மறுத்துவிடக்கூடாது என்று அவன் பகலில் மட்டும் தான் படிக்க அனுமதி கொடுத்துள்ளான் என்று எவ்வளவு நாசூக்காக வெட்கத்துடன் சொல்கிறாள், உங்கள் மகன் இதில் எல்லாம் தெளிவாக தான் இருப்பான்என்று நகைத்துவிட்டுஎனக்கு அவள் படிக்கட்டும் என்று தோன்றுகிறது, இங்கே என்ன பெரிய வேலை? எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருக்கிறார்கள், ஸ்ரீஜா fashion சம்மந்தமாக படிக்கிறாள், ஸ்ரீதிகா கூட மேற்படிப்பு படிக்க வெளிநாட்டிற்கு போக போகிறாள், இவள் IAS க்கு படிக்கட்டும், என் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் எனக்கு, அவன் வேலைக்கு போகும் நேரங்களில் தானே படிக்க போகிறாள்என்றார்கள் கமலா அம்மா.

 

சத்தியமூர்த்தியும் உன் மகன் சொல்லி நீ மறுப்பேச்சு பேசப்போகிறாயா என்ன? நம் வீட்டு பெண் இவ்வளவு உயரிய படிப்பு படிப்பதில் எனக்கு சம்மதம் தான், அது மட்டுமல்ல இந்த ஷ்யாமால் எவ்வளவு ஆபத்து, அடுத்த தலைமுறை நன்றாக குற்றங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் நல்லவர்கள் உயரிய பதவிகளில் கடமை உணர்ச்சியுடன் பணி புரிய வேண்டும்என்று சொல்லி சத்யாவை அழைத்து சம்மதம் சொன்னார்கள்.

 

சத்தியமூர்த்தி சொன்னார். “அம்மாடி உன் அறையில் படிப்பதானாலும் படி, இல்லை என்றால் நம் கேலரியில் கம்ப்யூட்டர் உள்ளது, அதை பயன்படுத்தி அங்கேயே உட்கார்ந்து படிப்பதானாலும் படிக்கலாம், தருணை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், கரும்பு தின்ன கூலியா? நாங்களே அவனுக்கு அடுத்த வகுப்புக்கான பாடங்களையும் படிக்கவும் சொல்லி கொடுக்கிறோம், நீ கவலை இன்றி படிஎன்று சொல்ல சத்யா சிறு குழந்தையை போல் துள்ளி குதித்து தன் அத்தையையும் மாமாவையும் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

 

கேலரியில் இருந்த கம்ப்யூட்டரில் எல்லா திட்டமிடல்களையும் ஒரு வரைபடமாக வரைய ஆரம்பித்தாள். ஏதோ புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தாள். நம்பிக்கை துளிர்த்தது அவளுக்கு. நந்தன் கடுமையாக பேசி இருந்தாலும் அவன் பேச்சு தான் அவளின் தவறுகளை உணர்த்தியாதாக உணர்ந்தாள். இனி அழுது வடிந்து பயந்து சாக கூடாது என்று முடிவு செய்தாள். எவ்வளவு கோபப்பட்டாலும் தன் கணவன் தன் மீது உயிரையே வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். அவனின் காதலே அவளுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் அளித்தது. கோபம் தணிந்து தன்னுடன் ஒருநாள் மீண்டும் பேசத்தான் போகிறார். அதுவரை நேரத்தை வீணாக்காமல் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆன்லைன் கோர்ஸ்ஸ், materials என்று எல்லா தகவல்களையும் சேகரிக்க தொடங்கினாள்.

 

மறுபுறம் நந்தன் ராகவனுக்கு கௌஷிக் கொல்லப்படும் வீடியோவை அனுப்பி வைத்து அதை பற்றி call செய்து பேசினான். “இது வரைக்கும் நாம அனுமானித்தது தான், இருந்தாலும் வீடியோவில் பார்க்கும் போது ரொம்பவே chilling இருக்கு டா, பாவம் டா கௌஷிக் எப்படி துடிதுடித்து இறந்தார், மனசே ஆறல டா நேத்து பாத்ததுல இருந்துஎன்றான் நந்தன்.

 

ஆமாம் டா, கஷ்டமா இருக்கு, துறைமாற்றத்தை தடுத்துவிட்டேன் டா, நீ சொன்னது போல் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு அவனை தேட ஆரம்பிக்க வேண்டும், எனக்கு கிடைத்த தகவல் படி அவன் தமிழ்நாட்டை விட்டு சென்று விட்டான், ஆனால் பஞ்சாப் செல்லவில்லை, வெளிநாட்டிற்கும் செல்லவில்லை

 

நல்லது டா, கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடலாம், ஆனால் இவனுக்கு பயந்து பயந்து வாழ வேண்டும் என்ற எண்ணமே என்னை தூங்க விடுவதில்லை ராகவா, இந்த கொலைக்கான வீடியோவை வைத்து மட்டும் அவனை கைது செய்து தண்டனை வாங்கி தர முடியாதா?”

 

முடியும் டா, ஆனால் சத்யா அதில் ஈடுபட வேண்டும், இவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் சத்யா இப்போது பஞ்சாப் போலிசிடம் செல்வது சரியான யுத்தியாக இருக்காது, இவன் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்வோம் முதலில்

 

ம்ம்ம் சரி டாஎன்று அழைப்பை துண்டித்தான்.

 

அம்பத்தூர் கிளையில் R&D பணிகளை ஆறப்போடாமல் வேலை நடந்து கொண்டிருந்தது. மணிமாறனை கடந்து போகும் போதும் வரும் போதும் மணிமாறன் தன்னை பார்ப்பதும் ஏதோ சொல்ல தயங்குவதும் பிறகு சொல்லாமல் விலகி செல்வதும் நந்தன் கவனித்து கொண்டிருந்தான்.

 

என்ன மணிமாறன்? ஏதாவது சொல்லவேண்டுமா?” என்று கேட்டான்.

 

அது அது வந்து சார்….. “ என்று வார்த்தைகள் வராமல் தயங்கினார்.

 

இப்படி வாருங்கள்என்று தனியாக அழைத்து சென்றுஎன்னிடம் என்ன தயக்கம்? தயங்காமல் சொல்லுங்கள்என்று கேட்கநீங்கள் நீங்கள் சத்யாவை….. சாரி சத்யா மேடமை கல்யாணம்…….” என்று தயங்கி நிறுத்தினார்.

 

இதற்காகவா இவ்வளவு தயக்கம், உண்மை தான், நான் சத்யாவை திருமணம் செய்து கொண்டேன், உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா?” என்று புன்னகையுடன் கேட்கஇல்லை சார், அதெல்லாம் ஒன்றுமில்லைஎன்று கீழே குனிந்தார்.

 

நந்தன் அவரை கூர்மையாக நோக்கினான். “சரி ஆட்சேபனை இல்லை, வேறு என்ன விஷயம்?” என்று கேட்க அவர் மீண்டும் தயங்கினார். “எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் மணிமாறன்என்று சொல்லஒண்ணுமில்லை சார், வாழ்த்துக்கள், solvent mix ஆகி இருக்கும், நான் சென்ற அந்த வேலையை பார்க்கிறேன்என்று விலகி நடந்தார். நந்தன் அவர் செல்வதை பார்த்துக்கொண்டே ஏதோ யோசனையில் இருந்தான்.

 

மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே நந்தன் வீட்டிற்கு வந்தான். அவன் சீக்கிரம் வருவான் என்று எதிர்பாராத சத்யா கேலரியில் உட்கார்ந்து ஏதேதோ தகவல்களை ஒரு நோட்டில் எழுதி கொண்டிருந்தாள். நந்தன் சீக்கிரம் வந்ததில் மகிழ்ச்சியோடு அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் ஹாலில். நந்தனின் கண்கள் சத்யாவை தேடின. “அறையிலேயே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாளோ என்னவோ, சாதாரணமாக ஏதாவது அதிரும் படி சொன்னாலே கண்ணீர் பெருக்கெடுக்கும், நேற்று இரவு சொன்ன விஷயங்கள் உண்மை, சொல்ல வேண்டிய விஷயங்கள் தான் என்றாலும் ரொம்பவே கடுமையாக சொல்லிவிட்டோம், காலையில் அம்மாவை திருப்தி படுத்த சோகமாக இல்லாதது போல் நடித்து இருந்தாலும் பிறகு அறையில் சென்று அழுது கொண்டிருப்பாள்என்றெல்லாம் மனதிற்குள் சத்யாவின் எண்ணங்கள் ஓட வெளியே தருணை மடியில் வைத்து கொண்டு சிரித்து பேசிக்கோண்டிருந்தான்.

 

 தாத்தா எங்கே?” என்று கேட்டான் ஹாலை சுற்றி பார்த்தபடி.

 

அவர் எங்கே இங்கே இருக்கிறார்? அவர் வயது இல்லை என்றாலும் கொஞ்சம் வயதான பாட்டி வந்ததும் அவர்களுடன் உட்கார்ந்து தான் பேசிக்கொண்டிருக்கிறார் , கவிதா அத்தை பற்றியும் மாமா பற்றியும் கொஞ்ச நேரம் பேசுவார், பஞ்சாபில் வாழ்க்கை முறைகளை பற்றி பேசுவார், இளம்வயதில் இவர் செய்த சாதனைகளை பற்றி பேசுவார், அவருக்கு பொழுது போக்க, அவர் கதைகளை கேட்க பாட்டி கிடைத்து விட்டார்கள்என்று ரோஹித் கிண்டலாக சொல்ல அனைவரும் சிரித்தனர்.

 

நந்தனும் சிரித்துவிட்டு தருணை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றான். பால்கனி சென்றான். பிறகு refresh செய்து shorts and shirt க்கு மாறியவன்எங்கே போயிருப்பாள்? ஒருவேளை வள்ளி அக்காவுடன் பேசிக்கோண்டிருப்பாள் போலஎன்று எண்ணி கீழே இறங்கி வந்தான். அவனை பார்த்து சத்தியமூர்த்தியும் கமலா அம்மாவும் ரகசியமாக கண்களால் சிரித்து கொண்டனர்.

 

பாத்தீங்களா? என் புள்ளைய எப்படி மாற்றிவிட்டாள் என்று. ஒருநாளாவது 5 மணிக்கெல்லாம் வீடு திரும்பி பார்த்து இருக்கிறீர்களா? பார்த்து கொள்ளுங்கள்என்று கமலா அம்மா ரகசியமாக சொல்ல சத்தியமூர்த்திபாவம் சத்யா எங்கே என்று தேடுகிறான், கேலரியில் இருக்கிறாள் என்று சொல்லி விடலாமா?” என்று கேட்டார். “கொஞ்சம் தேடட்டும் விடுங்கள், நேற்று அவளை காக்க வைத்தான் அல்லவா, இன்று கொஞ்சம் தவிக்கட்டும்என்றார்கள் கமலா அம்மா. சத்தியமூர்த்தி உடனேநீயா உன் மகன் தவிக்கட்டும் என்று சொல்கிறாய்?” என்று கேட்கஇந்த தவிப்பு பிறகு சந்தோஷமாக மாறும், அதனால் அப்படி சொல்கிறேன்என்று சொல்லி சிரித்தார்கள். “பெண்களை புரிந்து கொள்வது கஷ்டம் தான், எதையும் நேராக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்வதில் உங்களுக்கு ஈடு இணையே கிடையாதுஎன்றார்.

 

நந்தன்அம்மா நான் போய் தாத்தாவுடன் பேசிவிட்டு வருகிறேன்என்று சொல்லி outhouse நோக்கி புறப்பட்டான். “தாத்தாவை பார்க்க தான் போகிறான்என்று மீண்டும் கமலா அம்மா சிரித்தார்கள்.

 

Outhouse லும் சத்யாவை காணாமல் நந்தனுக்கு கொஞ்சம் தவிப்பாக இருந்தது. அவளுக்கு எதுவும் ஆபத்து என்று யோசித்தவன் அம்மா எப்போதும் கவனமாக இருப்பார்களே, அதுவும் இவ்வளவு பெரிய ஆபத்து அவளை சூழ்ந்திருக்கிறது என்று நான் சொல்லிய பிறகு அம்மா கண்டிப்பாக அவளை அவ்வப்போது செக் செய்து கொண்டே தான் இருப்பார்கள்என்று யோசித்தான்.

 

முருகன் சொன்னான்சார் நாங்க பண்ணை வீட்டின் நிலங்களில் விவசாயம் பார்க்கிறோம், நெறைய இல்லை என்றாலும் நான் சேமித்த இந்த சிறு தொகையாக வைத்து கொள்ளுங்கள்என்று ஒரு தொகையை நந்தனிடம் கொடுத்தான். நந்தன் அதை ஒரு புன்னகையுடன் வாங்கி கொண்டுஆனால் நீங்கள் கொஞ்ச நாட்கள் இங்கே இருக்க வேண்டும்என்று சொல்ல முருகனும் ஒப்பு கொண்டான். “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை, ரொம்ப நன்றி சார், அடுத்தது என்ன செய்யப்போகிறோம் என்று விழித்து கொண்டிருந்த எங்களுக்கு ஒரு வழியை காண்பித்து இருக்கிறீர்கள்என்றான் முருகன். “நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்என்று அவர் கைகளை குலுக்கிவிட்டு மீண்டும் தோட்டத்தை நோட்டம் விட்டான் நந்தன்.

 

என்ன சார், சத்யாவை தேடுறீங்களா?” என்று முருகன் புன்னகையுடன் கேட்கஇல்லை செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றி தோட்டமே பார்க்க அழகாக உள்ளதே என்று பார்க்கிறேன்என்றான்.

 

நானும் வள்ளியும் சும்மா தான சார் இருக்கிறோம், அதான் தோட்டக்ாரகளுடன் சேர்ந்து தோட்டத்தை இன்று சுத்தப்படுத்தி தண்ணீர் ஊற்றினோம்என்றான் முருகன்.

 

ஓஹ் really? ரொம்ப நல்லா இருக்குஎன்று சொல்லிவிட்டு தாத்தா பாட்டி என்று எல்லோரும் கதை அடிப்பதை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தான் நந்தன்.

 

அவன் வந்ததை அறியாத சத்யா கேலரியில் இருந்து வெளியே வந்துஅத்தை நான் என்ன வேலை செய்யட்டும்என்று கேட்க நீ ஒரு வேலையும் செய்ய வேண்டாம், படிப்பதென்றால் படி, இல்லை என்றால் உன் அறைக்கு செல்என்று சொல்லசரிஎன்று சொல்லிவிட்டு அவள் கேலரிக்கு திரும்பி உள்ளே சென்றாள். அப்போது தான் நந்தன் அவள் செல்வதை பார்த்துவிட்டுஇங்கு தான் ஒளிந்து கொண்டு இருக்கிறாளா? அங்கே என்ன செய்கிறாள்? ஏதாவது புத்தகம் படிப்பாள்என்று நினைத்து கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

 

இரவு டிபன் சாப்பிட வந்த போதும் அவளை காணவில்லை. “அப்படி என்ன கதை புத்தகத்தை படிக்கிறாளோஎன்று எண்ணிக்கொண்டு நீங்க ஏன்மா எப்போ பாத்தாலும் வேலை செய்றீங்க, அவளை செய்ய சொல்ல வேண்டியது தானே? அவள் அப்படி என்ன முக்கியமாக படிக்கிறாளாம்?” என்று கொஞ்சம் எரிச்சல் கலந்த குரலில் கேலரி அறையின் திசையை பார்த்துக்கொண்டே கேட்டான். “நான் எங்கப்பா செய்றேன், அமுதா தானே செய்கிறாள், நான் சும்மா மேற்பார்வை இடுகிறேன்என்று சொல்ல நந்தன் அவளை தேடுவதை பார்த்து உள்ளுக்குள் கமலா அம்மா சிரித்துக்கொண்டேநீ சாப்டுட்டு போப்பா, அவ ஏதாவது முக்கியமா படிச்சுட்டு இருப்பா, வீணாக தொல்லை செய்ய வேண்டாம்என்று சொல்ல நந்தனுக்கு முகம் வாடியது. “சரிம்மா தருண் எங்கே? அவனை அழைத்து செல்கிறேன்என்றான்.

 

அவனும் சின்னுவும் சாப்டுட்டு அவங்க தாத்தாவோட bedroom போய் செட்டில் ஆகிட்டாங்க, நீ கிளம்புஎன்று சொல்ல நந்தன் ப்ச்ச் சரி நான் தூங்க போறேன்என்று அலுப்பாக சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான்.

 

கமலா அம்மா சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு நந்தன் சென்றதும் கேலரி அறைக்கு சென்றுசரிம்மா நீ படித்தது போதும், சாப்பிட்டு விட்டு உன் அறைக்கு செல்என்றார்கள். “தருண் சாப்பிட்டானா அத்தை?” என்றாள்.

 

அவனும் சின்னுவும் சாப்டாச்சு, நீ மட்டும் தான் இன்னும் சாப்பிட வேண்டும்என்று சொல்ல சத்யா கேள்வியாய் அவர்களை பார்த்துஇன்னும் அவங்க வரலையே அத்தை, அவரும் வந்ததும் சாப்பிடுகிறேன்என்றாள். “அவன் இன்னைக்கு சாயங்காலம் 5 மணிக்கே வந்துட்டான் டாஎன்றார்கள் கமலா அம்மா.

 

என்ன அத்தை சொல்றீங்க? அச்சச்சோ எனக்கு தெரியாதே, என்னை பற்றி கேட்டாரா? தேடினாரா?” என்றாள் பதட்டமாக. “இரு இரு அப்படி என்ன பதட்டம்?” என்று கமலா அம்மா கேட்க சத்யா தன்னை கட்டுப்படுத்திக்கொண்டுஅதுகில்லை அத்தை, அவர் வந்தது கூட தெரியாம நான் பாட்டுக்கு இங்கயே இருந்துட்டேனே, அதான் என்னை பற்றி கேட்டாரோ என்றுஎன்று தயங்கினாள்.

 

முதல்ல கேக்கல, ஆனா அவன் உன்னை தேடின விதத்தை பார்க்க வேண்டுமே, பிறகு நீ இங்கு தான் இருக்கிறாய் என்று தெரிந்து கொண்டு இந்த திசையயே தான் பார்த்து கொண்டிருந்தான்

 

நீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லை அத்தை, பாவம் எவ்வளவு நேரம் தேடினாரோ?”

 

அட இங்க பாருடா, நேத்து உன்னை காக்க வைத்து தவிக்க விட்டானில்லையா? அதான்அவன் கொஞ்ச நேரம் தவிக்கட்டும் என்று அவனிடமும் சொல்லவில்லை, உன்னிடமும் சொல்லவில்லை

 

ஆனால் அவர் பாவம்…” என்று சத்யா இழுக்கஷ்ஷ்ஷ்…..ஆண்களிடம் இப்படி தான் கொஞ்சம் விட்டு கொடுக்க வேண்டும், அப்புறம் இறுக்கி பிடிக்க வேண்டும், பிடியை விட்டோமோ? அப்புறம் மதிப்பு இருக்காது, சரி நீ சீக்கிரமா சாப்டுட்டு அறைக்கு போஎன்று சொல்ல சத்யாதருண்….” என்று இழுத்தாள். “தருணுடன் காலையில் நேரம் செலவழித்து கொள், இப்போது நாங்கள் அவனை பார்த்து கொள்கிறோம்என்றார்கள் கமலா அம்மா.

 

சத்யாவிற்கு உணவு இறங்கவில்லை. நந்தன் தூங்குவதற்குள் ஒரு முறை பார்த்து விடவேண்டும் என்று அவசர அவசரமாக இரண்டு தோசைகளை பியித்து வாயில் போட்டு அடைத்து வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்றாள். அவ்வளவு நேரம் வேகமாக ஓடி வந்தவள் அறையை நெருங்கியதும் நிதானப்படுத்தி கொண்டு தன் சேலையை ஒருமுறை சரி செய்து கொண்டு இயல்பாக கதவை திறந்து உள்ளே போனாள். நந்தன் கட்டிலில் லேப்டாப் வைத்து ஏதோ வேலை செய்து கொண்டிருக்கஅப்பாடா சார் தூங்கலஎன்ற திருப்தியுடன் அவனை பெரிதாக கண்டு கொள்ளாதவள் போல் அறையில் பொருட்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்தாள். நந்தனும் அவள் பார்க்காத நேரம் அவளை பார்ப்பதும் மற்ற நேரங்களில் லேப்டாப்பை பார்ப்பதுமாக இருந்தான்.

 

பாத்ரூம் சென்று குளித்துவிட்டு நந்தன் வாங்கி கொடுத்து இருந்த nighty ஒன்றை போட்டுகொண்டு வெளியே வந்தாள். “nighty எல்லாம் போடமாட்டேன் என்றாளே, நேற்றைய பிரச்சனைக்கு பிறகு அழுது கொண்டிருப்பாள் என்று பார்த்தால் நன்றாக தான் வலம் வருகிறாள், இதில் இரவு நேரத்தில் குளியல், புது nighty, என்னமோ சரி இல்லை, இப்படி எல்லாம் செய்தால் என்னை மயக்கி விடலாம் என்று நினைக்கிறாள் போல, அவள் தவறை அவள் முழுவதுமாக உணராமல் அவளை நான் தொட்டுவிடுவேனா என்ன?” என்று முகத்தை கொஞ்சம் கடுமையாக வைத்துக்கொண்டான்.

 

சத்யா அவனை பெரிதாக பொருட்படுத்தாமல் கமலா அம்மா ப்ரீத்தியிடம் சொல்லி வாங்கி கொடுத்திருந்த சில மேக் அப் பொருட்களை எடுத்து வைத்து லேசாக அலங்காரம் செய்து கொண்டாள். கொஞ்சம் perfume உம் அடித்துக்கொள்ள நந்தன் நக்கலாக புன்னகைத்தான். “இந்த இரவு நேரத்தில் இதென்ன நாடகக்காரி மாதிரிஎன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு லேசாக எரிச்சல் அடைந்தான். அவள் எழுந்து அவனை நேருக்கு நேராக பார்க்கவும் நந்தனும் ஏதோ போட்டி போல அவளை பார்த்தான். சத்யா கட்டிலை நோக்கி நடக்க நந்தன் தன் பார்வையை விலக்கி லேப்டாப்பில் ஏதோ தட்ட ஆரம்பித்தான். சத்யா ஒரு பெட்ஷீட்டை எடுத்து உதறதரையில் படுப்பதற்கு தான் இவ்வளவு build up போலஎன்று மனதிற்குள் நக்கலாக நினைக்க சத்யா கட்டிலில் படுத்து அந்த போர்வையை தன் கால்களுக்கு போர்த்திக்கொண்டு நந்தன் பக்கம் திரும்பி நந்தனை பார்த்துக்கொண்டே படுத்து இருந்தாள்.

 

நம்மள தான் பார்க்கிறாள் போலஎன்று நந்தன் உள்ளுக்குள் நினைத்துஅவள் பக்கம் திரும்பாதே, அவள் பக்கம் திரும்பாதேஎன்று தன் மனதிற்கு பல நூறு முறை சொல்லி கடிவாளம் போட்டுக்கொண்டிருந்தான். எடுத்த வேலையில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. “ச்ச பேசாமல் நாமும் தூங்கிவிடலாம்என்று லேப்டாப்பை மூடிவிட்டு லைட்களை அணைத்து சத்யாவின் பக்கம் திரும்பாமல் இழுத்து போர்த்திக்கொண்டு கஷ்டப்பட்டு தூங்கினான்.

 

சத்யா அவன் போராட்டத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டுஇப்போ தெரியுதா? நீங்கள் தொடும் போதெல்லாம் நான் எப்படி தவித்திருப்பேன் என்று, என் செல்ல திருடா, எத்தனை நாளைக்கு இப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்கிறேன்என்று மனதிற்குள் நினைத்து புன்னகையுடன் தூங்கினாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018