மாடியில் ஒரு வெண்ணிலா
அது அழகிய காலை பொழுது என்பது அவளை தொட்டு எழுப்பிய சுகமான அந்த தென்றலும் அந்த ஜன்னலை தாண்டி வந்து அவள் முகத்தில் லேசாக சூடேற்றிய ஒளி வெளிச்சமும் உணர்த்தியது. பல நாட்களுக்கு பிறகு நன்றாக உறங்கி எழுந்த உணர்வு. லேசாக சோம்பல் முறித்து எழுந்த அவள் அப்போது தான் தான் எந்த ஆடை உடுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். ஒரு சின்ன பதட்டம் அவளை பற்றியது. தான் எங்கே இருக்கிறோம்? எப்படி இங்கே வந்தோம்? எப்படி இப்படி ஒரு வேட்டி துணியை மட்டும் உடுத்தி இருக்கிறோம்? ஒரு நிமிடம் அவள் தலை கிறுகிறுவென்று சுற்றியது. என்ன நடந்தது என்பதை யோசிக்க அவளால் முடியவில்லை, முடியவில்லையா அல்லது பல நாட்களுக்கு பிறகு கிடைத்த அந்த அமைதியை களைத்து கொண்டு யோசிக்க அவள் முயலவில்லையா? கொஞ்சம் பசியும் தெரிய ஆரம்பித்தது. எழுந்து தரையில் கால்களை பதித்தவளுக்கு முந்திய இரவு நடந்த சில விஷயங்கள் நினைவலைகளில் கண் முன்னே வந்து சென்றது. ஆனால் அவற்றை கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து விட்டு மாடியில் குடிசை போல் இருந்த அந்த வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தாள். தான் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்கிறோம் என்பதை உறுதி படுத்திக்கொண்ட போது கொஞ்சம் தைரிய...