Sms ch 62 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 62


இல்லை சார், என் மனைவி இருக்கிறாளே, அவளால் சந்தோஷம் இல்லை என்றாலும் ரொம்பவே சந்தேகப்படுவாள் சார்…” என்று மணிமாறன் சம்மந்தம் இல்லாமல் ஏதோ சொல்ல முயல நந்தன் கடுப்பாக சொன்னான்உங்கள் மனைவி ஒன்றும் விதி விலக்கல்ல மணிமாறன், உலகத்தில் முக்கால்வாசி மனைவிகள் அப்படி தான் இருக்கிறார்கள் என்று சொல்ல மணிமாறன் ஆச்சர்யமாக நந்தனை பார்க்க நந்தன் சுதாரித்து கொண்டு புன்னகையுடன் சொன்னான். “மனைவிகளின் இலக்கணம் அது, ஆனால் பேசி நம் அன்பை புரிய வைத்தால் கண்டிப்பாக அவர்கள் தரும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே இருக்காது, சரி அதை விடுங்கள், அந்த train ல் கிடைத்த பைக்கும் உங்கள் மனைவியின் சந்தேகத்திற்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டான்.

 

சொல்றேன் சார், Train ல் அந்த பை கிடைத்ததும் நேர்மையாக போலீசிடம் தான் கொடுத்திருக்க வேண்டும், ஏனோ தெரியவில்லை, ரெட் லைட் ஏரியாவில் இருந்து கைதாகி வேறு யாருக்கும் நான் செய்த தவறு தெரிந்து விடக்கூடாதே என்று பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்து கொண்டிருந்த எனக்கு மீண்டும் போலீஸ், அவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள மனம் வரவில்லை, அதனால் அந்த பையை போலீசிடம் ஒப்படைக்காமல் என்னுடன் எடுத்து வந்து விட்டேன், அந்த பை கொஞ்சம் வசதியானவர்கள் வைத்திருந்த பை போல் இருந்தது, அதனுள்ளே இருந்த பொருட்களை எடுத்து என்னுடைய சூட்கேசில் மறைத்து வைத்துவிட்டு அந்த பையை கொஞ்சம் புதுமைப் படுத்தினேன், என் மனைவியிடம் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக சொல்லி இருந்தேன், தவறு செய்து திரும்பி வந்த நான் என் மனைவியை குளிர்விக்க அந்த விலை உயர்ந்த பையை அவளுக்கு பரிசாக அளித்தேன், அவளும் சந்தோஷமாகி என் பயணத்தை பற்றி தோண்டி துருவாமல் விட்டுவிட்டாள்

 

நந்தன் மிக ஆர்வமாகிஅந்த பொருட்களை என்ன செய்தீர்கள் மணிமாறன்?” என்று கேட்கநான் அந்த பொருட்களை என் சூட்கேசில் வைத்து பரண் மீது வைத்ததோடு சரி சார், அதை பிறகு பார்க்கலாம், இன்னொரு நாள் பார்க்கலாம், மனைவி அவள் அம்மா வீட்டிற்கு செல்லும் நேரம் பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு அதை பற்றி மறந்தே போய்விட்டேன் சார், சத்யா மேடம் விஷயத்தில் நான் தவறாக நடந்து கொண்டதற்காக எனக்கு ஒரு மாதம் suspension கொடுத்தீர்கள் அல்லவா? அப்போது தான் வீட்டை சுத்தம் செய்யும் போது அந்த பொருட்களின் ஞாபகம் வந்து திறந்து பார்த்தேன், அதில் கவிதா, ரவிச்சந்திரன், சத்யா என்ற பெயர்களை கொண்ட வீட்டு பத்திரம் ஒன்று இருந்தது, இன்னும் சில பேப்பர்களும் இருந்தன, அந்த பத்திரம் பஞ்சாபில் இருக்கும் வீட்டை பற்றியது, அது இல்லாமல் தண்ணீர் பாட்டில் ஒன்று, சீப்பு சில்லறைகள் என்று சில இருந்தன.”

 

அப்புறம் ஒரு சின்ன pen drive ஒன்றும் இருந்தது சார் என்று மணிமாறன் சொல்ல நந்தன் “That’s it” என்று டேபிளில் தன் fist ஆல் ஒரு தட்டு தட்டிவிட்டு மணிமாறன் அருகே சென்றுஅதை நீங்கள் பத்திரமாக வைத்துள்ளீர்கள் அல்லவா?” என்று கேட்டான். “ஆமாம் சார், பத்திரமா தான் வச்சிருக்கேன் என்று மணிமாறன் சொல்லி முடித்தது தான் தாமதம், நந்தன் அவரை இறுக கட்டி அணைத்தான். “Thank you மணிமாறன், thank you, எனக்கு இப்போதே அந்த pen drive வேண்டும் என்றான்.

 

நந்தனின் அணைப்பில் திக்குமுக்காடிய மணிமாறன்தரேன் சார், வீட்டுல தான் இருக்கு, போய் எடுத்துட்டு வரேன் என்று சொல்லஇல்லை நானும் வருகிறேன், வாருங்கள் என் காரிலேயே போகலாம் என்று மணிமாறனை அழைத்து கொண்டு அவர் காட்டிய திசையில் காரை செலுத்தினான்.

 

போகும் வழியில் நந்தன் கேட்டான். “அந்த pen drive connect செய்து பார்த்தீர்களா?” என்று கேட்கபார்த்தேன் சார், அதுல நெறைய folders இருந்தன, அதில் ஒரு folder ன் பெயர்..” என்று மணிமாறன் தயங்கசொல்லுங்கள் மணிமாறன், தயங்காமல் சொல்லுங்கள் என்று நந்தன் ஊக்குவிக்கஇல்லை சார் உங்களை upset ஆக்க விருப்பம் இல்லை என்றார். “Nothing can upset me now மணிமாறன், தயங்காமல் சொல்லுங்கள் என்றான்.

 

ஒரு folder ன் பெயர் சத்யா கௌஷிக் என்று இருந்தது சார், அதனால் தான் உங்களிடம் சொல்ல தயங்கினேன், முதலில் நம் சத்யா மேடமுக்கும் இந்த பைக்கும் சம்மந்தம் இருக்குமா? இருந்தால் என்ன சம்மந்தம் என்றெல்லாம் யோசித்து நெறைய நாட்கள் குழம்பினேன், ஒரு மாதம் suspension முடிந்து சமயம் பார்த்து மேடம் கிட்ட இதை பற்றி பேசலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் அதற்குள் அவர்கள் ஏதோ graduate scheme ல் லீவில் இருப்பதாக கேள்விப்பட்டேன், பிறகு உங்களுக்கும் அவங்களுக்கும் திருமணம் என்று கேள்விப்பட்டேன், உங்களிடம் இதை பற்றி பேசலாமா வேண்டாமா என்று குழம்பி இருந்தேன், நேற்று வேறு நீங்கள் தவறாக புரிந்து கோபப்பட்டீர்கள், சரி உங்கள் திருமண வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும், ஏன் நாம் இடையில் புகுந்து குழப்புவானேன் என்று நினைத்து அமைதியாகிவிட்டேன்

 

நேற்று நான் புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டு விட்டேன், அதற்காக மன்னித்து விடுங்கள் மணிமாறன் என்று நந்தன் சொல்லஐயோ சார், நீங்க போய் எதுக்கு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க, என்னிடம் கோபப்பட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு சார் என்றார்.

 

நந்தன் புன்னகையுடன் “thanks, கௌஷிக் என்பவர் சத்யாவின் முதல் கணவர், ஒரு சதியால் கொல்லப்பட்டார், அந்த கொலைகாரனின் சதி திட்டத்தால் தான் விதவையான சத்யா ரெட் லைட் ஏரியாவில் மாட்டி எந்த தவறுமே செய்யாமல் பழி ஏற்று நின்றாள், அந்த கயவனை பிடிக்க தான் நான் ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறேன், சத்யாவின் அம்மா வேறு யாரும் இல்லை, என் அப்பாவின் சொந்த தங்கை தான், அவர்கள் பஞ்சாபில் இருந்து மும்பை வரும் வழியில் நெஞ்சு வலியால் துடிக்க ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு இறந்து போனார்கள், அவர்கள் கொண்டு வந்த உடைமைகள் தான் உங்களிடம் சிக்கி உள்ளன, thank god, thank you மணிமாறன், ஏன் என்றால் அந்த கயவனை பிடிக்கும் முக்கியமான ஆதாரங்கள் எல்லாம் அந்த pen drive ல் உள்ளன, நான் அவற்றை தேடிக்கொண்டு இருந்தேன், நல்லவேளையாக உங்களிடம் இருக்கின்றன

 

சத்யா மேடம் பின்னாடி இவ்வளவு சோகமான கதைகளா? நான் அவர்களை தவறாக புரிந்து கொண்டு இருந்தேன், மன்னித்து விடுங்கள் சார், ஆனால் ஒரு விஷயம் சார், அந்த folder களின் பெயர்களை மட்டும் தான் பார்க்க முடிகிறது, அவற்றை திறக்க password வேண்டும், அதனால் தான் மேற்கொண்டு என்னால் அந்த pen drive ல் உள்ள விஷயங்களை அறிந்து கொள்ள முடியவில்லை

 

It’s ok மணிமாறன், எவ்வளவோ டெக்னாலஜி உள்ளனவே, அவற்றை கொண்டு அந்த folder களை திறந்து விடலாம்

 

மணிமாறனின் வீட்டை அடைந்தார்கள். மணிமாறன் நந்தனை அவருடைய அறைக்கு அழைத்து சென்று அந்த பொருட்களை எல்லாம் நந்தனிடம் ஒப்படைத்தார். “எப்படி நன்றி சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை மணிமாறன், கடவுள் ஏதோ ஒரு வழியில் உங்கள் மூலமாக எனக்கு உதவியுள்ளார் என்று கைகுலுக்கி தன் நன்றியை தெரிவித்து விட்டு வெளியே வர மணிமாறனின் மனைவியை மணிமாறன் நந்தனுக்கு அறிமுகப்படுத்தினார். “R&D சம்மந்தமான முக்கியமான files, நன்றி மணிமாறன், சொன்ன நேரத்தில் வேலையை முடித்து கொடுத்து விட்டீர்கள், ஆனால் files வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டீர்களே, நீங்கள் வேண்டுமானால் இன்று விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருங்களேன், இன்று உங்கள் மனைவியுடன் நேரம் செலவழியுங்கள் என்று மணிமாறனையும் அவர் மனைவியையும் பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் சொல்லிவிட்டு விடைபெற்றான் நந்தன்.

 

காரில் ஏறியதும் ராகவனுக்கு call செய்து சந்திக்க வருவதாக சொல்லி காரை ராகவனின் வீட்டிற்கு செலுத்தினான் நந்தன். ராகவனின் influence ல் ஒருவரை வரவைத்து ராகவனின் லேப்டாப்பில் அந்த pen drive இணைத்து அந்த folder களை திறந்தார்கள். அதில் சத்யா கௌஷிக் folder ல் இருந்த வீடியோக்களை தவிர மற்ற எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தார்கள்.

 

ராகவனின் கண்களில் பரவசம். “டேய் இதெல்லாம் எவ்வளவு பெரிய தகவல்கள் தெரியுமா? மொத்த drug mafia கும்பலின் வண்டவாளங்கள் எல்லாம் இருக்கின்றன, எது எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது, எந்த drug எல்லாம் இறக்குமதி செய்யப்படுகிறது, எந்த drug எல்லாம் ஏற்றுமதி செய்யப்படுகிறது, இந்த கும்பலின் தலைவன் யார்? எந்த நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளான்? எல்லாமே இதில் இருக்கிறது, இதை உன் அத்தை ஷ்யாமிடம் இருந்து கையகப்படுத்தி இருக்கிறார்கள், drug உலகில் யாரும் யாரையும் நம்ப முடியாது, அதனால் மாட்டிக்கொண்டால் தலைவனை பிளாக்மெயில் செய்து, அரசியல்வாதிகளை பிளாக்மெயில் செய்து தப்பிக்க என்றே எல்லோரிடமும் இது போல சில ரகசியங்கள் இருக்கும், அப்படி ஷ்யாம் துருப்பு சீட்டாக சேர்த்து வைத்திருக்கும் தகவல்கள் இவை, ஆனால் பாவம் இவை தான் ஷ்யாமின் முடிவுக்கு பிள்ளையார் சுழி, உன் அத்தை உண்மையிலேயே great டா, எப்படி அவன் கோட்டைக்குள்ளேயே சென்று இவற்றை கையகப்படுத்தினார்கள், well she had some help, ஆனாலும் இதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும், I think இவ்வளவு விஷயங்கள் நிறைந்த அவர்களின் கைப்பை தொலைந்த பயத்தில் தான் அவர்களுக்கு sudden heart attack வந்திருக்க வேண்டும்என்றான் ராகவன்.

 

நந்தனும் அதையே தான் நினைத்தான். “ஆமாம் டா, அத்தையை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது, ஆனால் நல்ல பிசினஸ் mind என்று தெரியும், சத்யாவிற்கு ஷ்யாம் மூலம் ஏற்பட்ட துன்பங்களுக்கு அவனுக்கு முடிவு கட்டவே அத்தை இவ்வளவு விஷயங்கள் கொண்ட இந்த pen drive சேகரித்து இருக்க வேண்டும், well ஷ்யாமின் அம்மாவும் help பண்ணிருக்காங்க, anyhow அடுத்து நாம் என்ன அடி எடுத்து வைக்க போகிறோம்?” என்றான் நந்தன்.

 

ராகவன் யோசித்தான். பிறகு நந்தனிடம் ஒரு திட்டத்தை விவரித்தான். இருவரும் மணிகணக்கில் அவன் திட்டத்தில் உள்ள நெளிவு சுளிவுகள், மேடு பள்ளங்களை அலசி ஆராய்ந்தார்கள். திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். நந்தன் ராகவனின் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் வீட்டிற்கு வர மணி இரவு 10.30 ஆகிவிட்டது.

 

கமலா அம்மா நந்தனுக்கு தோசை சுட்டு கொடுத்துக்கொண்டே கவலையுடன் கேட்டார்கள். “என்னப்பா சத்யாவுடன் ஏதாவது மனஸ்தாபமா? இரண்டு மூன்று நாட்களாக லேட்டாக வருகிறாயே, அவளும் என்னவோ சுணங்கி சுணங்கி படுத்து கொள்கிறாள், கேட்டால் லேசான தலைவலி என்கிறாள், இன்று படித்து கொண்டிருந்தவள் அப்படியே புத்தகத்தின் மேல் தலை வைத்து படுத்து இருந்தாள், என்னவென்று தொட்டு பார்த்தால் உடம்பெல்லாம் சூடாக இருந்தது, சாப்பிட வைத்து மாத்திரையை கொடுத்து படுக்க சொல்லி அனுப்பினேன், முன்பு போல் இல்லையே கண்ணா, உனக்கு என்று ஒருத்தி வந்துவிட்டாள். அவள் எப்படி இருக்கிறாள்? என்ன நிலவரம் என்று பார்த்துக்கொள்ள வேண்டாமா?”

 

நந்தன் பதில் ஏதும் சொல்லாமல் யோசித்தான். “அம்மா நம் தொழிலின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய dealing விஷயமாக மும்பை செல்ல உள்ளேன், துணைக்கு முருகனையும் அழைத்து செல்லலாம் என்று இருக்கிறேன், அவரிடம் call செய்து கேட்டேன், அவரும் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார், மும்பை பற்றி அவருக்கு தெரியும் இல்லையா? நாளை காலையிலேயே நாங்கள் புறப்படுகிறோம், சத்யாவை நீங்கள் தான் கொஞ்சம் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், நான் எப்போது திரும்பி வருவேன் என்று கணக்கிட்டு சொல்ல முடியாது, ஷ்யாமின் பிரச்சனை வேறு உள்ளதால் பாதுகாப்பிற்காக நம் இரு watchman கள் தவிர மேலும் இருவரை தோட்டகாரர்களை போல் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்துள்ளேன், நாளை காலை வந்து விடுவார்கள், இவற்றை எல்லாம் சத்யாவிடம் விளக்கி சொல்ல நேரமில்லை, அவளுக்கு உடம்பு வேறு சரி இல்லை என்று சொல்கிறீர்கள், நீங்கள் தான் அவளை நான் திரும்பி வரும் வரை பார்த்துக்கொள்ள வேண்டும் அம்மா, ப்ளீஸ் என்றான்.

 

கமலா அம்மா நந்தனை யோசனையாக பார்த்துவிட்டுசரிப்பா அவளை பற்றி கவலைப்படாதே, நீ செல்லும் காரியத்தில் வெற்றி பெற்று திரும்புவாய், சத்யாவை, தருணை, நம் குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல நந்தன் அவர்கள் தோள்களை பிடித்து “thank you அம்மா, அம்மான்னா அம்மா தான், நீங்களும் உங்கள் உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள், சத்யாவின் துணைக்கு வள்ளியை கூட அழைத்து கொள்ளுங்கள், பாட்டியையும் பார்த்துக்கொள்ளுங்கள், மொத்தத்தில் நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் இந்த விஷயத்தில் இறங்குகிறேன் அம்மா என்று சொல்ல கமலா அம்மா அவனை பரிவுடன் நோக்கி அவன் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்துஎல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ நல்லபடியா போய்ட்டு வாப்பா, நீ போய்ட்டு வந்த பிறகு உனக்கும் சத்யாவிற்கும் reception செய்ய வேண்டும், ஹனிமூன் ஏற்பாடு செய்ய வேண்டும், நெறைய வேலைகள் இருக்கின்றன, அதனால் உன் வேலைகளை எல்லாம் செவ்வனே முடித்துவிட்டு நல்லபடியாக திரும்பி வருவாய் என்று சொல்ல நந்தன் கமலா அம்மாவை அணைத்து அவர்கள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தூங்க சென்றான்.

 

தன் அறைக்கு சென்றவன் சத்யாவின் நெற்றியில் கை வைத்து பார்த்தான். லேசாக சூடு தெரிந்தது. ஒரு பெருமூச்சுடன் அவள் தலையை தடவி கொடுத்துவிட்டு விலகியவன் ஒரு bag எடுத்து அவனுக்கு தேவையான உடைகளை எடுத்து pack செய்தான்.

 

தோட்டத்தில் இருந்த outhouse ல் வள்ளியும் முருகனுக்காக pack செய்தாள். “இந்த முறை அந்த நாயை விடாமல் பிடித்து கொன்றுவிட்டு தான் நீங்கள் வீடு திரும்ப வேண்டும், புரிகிறதா? நந்தன் சாரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டே அவன் உடைகளை எடுத்து வைத்தாள். “சரி தான் வள்ளி, ஆனால் சத்யாவிற்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வேண்டாம் என்று சார் சொன்னார், சத்யா தடுப்பாள், பயப்படுவாள் என்று அவர் தொழில் விஷயமாக செல்வதாக தான் சொல்லப்போகிறார், அதனால் நீ எதுவும் உளறி வைக்காதே என்றார். “அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள், பாட்டி உங்களுக்கு, சாருக்கு, ராகவன் சாருக்கு கொஞ்சம் சப்பாத்தி, தொக்கு எல்லாம் செய்து வைத்துள்ளார்கள், மும்பை போகும் வழியில் பசித்தால் சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தவளை முருகன் இழுத்து அணைத்தான்.

 

நந்தன் எல்லாவற்றையும் pack செய்துவிட்டு சத்யாவின் அருகில் வந்து படுத்தான். “கௌஷிக்கிற்காக, உனக்காக, எனக்காக இந்த பயணம், எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும், அத்தை, உன்னை பெற்ற தாய் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன்னாடி உனக்காக எவ்வளவு வேலை செய்திருக்கிறார்கள் பார்த்தாயா? அவர்கள் சேகரித்த தகவல்கள் இந்த நாட்டிற்கே சாபக்கேடாக இருக்கும் போதை மருந்து கடத்தல் தலைவனையே கைது செய்ய உதவ போகிறது, அப்புறம் ஷ்யாம் எல்லாம் எம்மாத்திரம், எல்லாம் நல்லபடியாக முடியட்டும், பிறகு உனக்கு இருக்கிறது, உன்னை இவ்வளவு தூரத்தில் கூட இருக்க விடமாட்டேன், என் கைகளுக்குள் தான் 24 மணி நேரமும் வைத்திருக்க போகிறேன் என்று மனதிற்குள்ளேயே சத்யாவுடன் பேசிவிட்டு அவளை அணைத்துக்கொண்டே தூங்கினான்.


Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018