Sms ch 71 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 71

 

சத்யாவும் நந்தனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நந்தன் குளித்துவிட்டு வேட்டி சட்டை அணிந்து இருந்தான். ஈர தலையுடன் வேட்டி சட்டையில் பார்க்க கெத்தாக அம்சமாக இருக்கிறான் என்று சத்யா மனதிற்குள் நினைத்து கொண்டாள். ஜில்லென்று காற்று வீச சத்யாவிற்கு குளிரியது. இரண்டு கைகளையும் கட்டி தன் முழங்கைகளுக்கு மேலே தேய்த்து விட்டுக்கொண்டே நடந்தாள். அவளுக்கு குளிருவதை நந்தனும் கவனித்தான். திடீரென்று வேகமாக இருட்ட தொடங்கியது. இடியும் மின்னலும் வர சத்யா பயந்து நந்தனின் அருகில் நெருங்கி நின்றாள்.

 

இருவரும் ஒரு மரத்தடியில் நிற்க அது பாதுகாப்பு இல்லையோ என்று எண்ணி நந்தன் சத்யாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக ஒரு வழியில் நடந்தான். இரண்டு நிமிடங்களில் ஒரு சின்ன hut ஒன்று வந்தது. வெளியே பார்க்க சாதாரண குடிசை போல இருந்தாலும் concrete roof மேல் கூரை போட்டு இருந்தாலும் உள்ளே நவீன வசதியுடைய அறையாக இருந்தது அந்த hut. வெளியே இருந்த keypad ல் ஒரு password enter செய்து கதவை திறந்து சத்யாவை உள்ளே அழைத்து சென்றான் நந்தன்.

 

இடியும் மின்னலும் மழையும் அதிகமாக சத்யா மிரட்சியுடன் விழித்தாள். அந்த அறையில் ஒரு பெரிய கட்டிலும், இரண்டு chair களும், ஒரு சின்ன டேபிளும், ஒரு அலமாரியும், ஒரு attached பாத்ரூம் என்று இருந்தன. நந்தன் தன் மொபைலை எடுத்து call செய்ய முயற்சி செய்தான். சிக்னல் இல்லை என்று வந்தது. அந்த அறையின் கதவின் அருகே வந்து intercom ல் பண்ணை வீட்டிற்கு call செய்தான்.

 

ஆமாம் ரோஹித், நம்ம தோட்டத்துல இருக்க hut க்கு வந்துட்டோம், நீங்க எல்லாம் safe ஆ வீட்டுக்கு போய்ட்டீங்க தான?”

 

……….

 

Good, அம்மா பக்கத்துல இருக்காங்களா? கொஞ்சம் அவங்ககிட்ட குடு

 

……….

 

இல்லம்மா லேசா இடி இடிக்க ஆரம்பிச்சதுமே இங்க கூட்டிட்டு வந்துட்டேன், தருண் உங்ககூட தானே இருக்கிறான்?”

 

………..

 

ok மா, நீங்க பயப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன்

 

………..

 

 “ok மா bye” என்று சொல்லி மொபைலை வைத்தவன் சத்யா ஈர உடையில் குளிரில் நடுங்கி கொண்டிருப்பதை பார்த்து “இப்படியே எவ்வளவு நேரம் இருக்க போகிறாய்?” என்று சொல்லிவிட்டு தன் சட்டையை கழட்டி கொடுத்து “இந்த சட்டையை போட்டுக்கோ என்றான். தான் அணிந்து இருந்த வெள்ளை வேட்டியின் மேல் ஏற்கனவே ஒரு வெள்ளை பனியன் அணிந்திருந்தான். கொண்டு வந்திருந்த பையில் இருந்து ஒரு வெள்ளை துண்டை எடுத்து போர்த்திக்கொண்டு கட்டிலில் கால் நீட்டி அமர்ந்தான்.

 

சத்யா அவன் கொடுத்த அந்த வெள்ளை நிற சட்டையை தன் சேலைக்கு மேல் அணிய போக அதை பார்த்த நந்தன் “என்ன பண்ற?” என்று கொஞ்சம் கோபமாக கேட்டான்.

 

சத்யா கொஞ்சம் பயந்து விட்டாள். “நீங்க தான போட்டுக்க சொல்லி குடுத்தீங்க?” என்று சட்டையை நீட்டி கேட்டாள்.

 

அந்த ஈர சேலைக்கு மேல போட்டு இந்த சட்டையையும் ஈரமாக்க போகிறாயா? அந்த ஈர உடைகளை எல்லாம் கழட்டி இப்படி காயப்போட்டு விட்டு சட்டையை மட்டும் போட்டுக்கொள் என்றான் கோபமாக.

 

சத்யா அவன் சொன்ன விதத்தில் பயந்து attached பாத்ரூம் சென்று தன் ஈர உடைகளை எல்லாம் களைந்துவிட்டு அவன் சட்டையை மட்டும் அணிந்து கொண்டாள். நல்லவேளை தொடை வரைக்கும் நீட்டாக இருக்கிறது சட்டை என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். ஏற்கனவே கோபமாக இருக்கும் அவன் முன்பு சட்டை நீளமாக இருப்பதால் கொஞ்சமாவது மானம் போகாமல் இருக்கும் என்று ஆசுவாச பட்டுக்கொண்டாள்.

 

வெளியே கொஞ்சம் தயக்கமாக வந்தவள் பாத்ரூம் வாசலுக்கு அருகே இருந்த உடை காயப்போடும் cloth dryer கம்பி மேல் தன் உடைகளை காயப்போட்டாள். திரும்பி நந்தனை பார்த்தவள் அவன் கண்களை மூடி headboard ல் சாய்ந்து இருப்பதை பார்த்தாள்.

 

மெதுவாக வந்து கட்டிலின் மறுபுறம் கால்களை நீட்டி headboard ல் சாய்ந்து அமர்ந்தவள் போர்வையை எடுத்து தன் தொடைகளை மறைத்து போர்த்திக்கொண்டாள்.

 

நந்தன் கண் விழித்து பார்க்கவும் சத்யா அவனை பார்த்து புன்னகைத்தாள்.

 

நந்தன் பதிலுக்கு புன்னகைக்காமல் கண்களை மூடி மீண்டும் சாய்ந்து கொண்டான்.

 

உங்களுக்கு என்மேல இன்னும் கோபம் குறையலையா?” என்றாள் சத்யா.

 

நந்தன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

 

சத்யா அந்த கட்டிலில் நகர்ந்து நந்தன் இடத்தில் சென்று குறுக்கே கட்டி இருந்த அவன் கைகளை விலக்கி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். நந்தன் எந்த பதில் செய்கையும் இல்லாமல் கண்களை மூடிய படியே இருக்க சத்யாவிற்கு கஷ்டமாக இருந்தது.

 

நான் ஒரு reassurance காக தானே கேட்டேன், அதற்கு ஏன் இவ்வளவு கோபம் என்மேல்?” என்றாள் வாடிய முகத்துடன்

 

நந்தன் கண்களை திறந்து அவளை நேராக பார்த்தான்.

 

சத்யா reassurance கொடுப்பது, விளக்கம் கொடுப்பது, இதெல்லாம் என் குணத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள், but உனக்காக நெறைய முறை என் குணத்தை மாற்றிக்கொண்டு விளக்கமும் reassurance ம் கொடுத்து இருக்கிறேன், ஆனால் இதற்குமேல் முடியாது, ஒருவர் மீது நம்பிக்கை இல்லை என்றால் தான் இப்படி மாறி மாறி கேள்வி கேட்டு reassurance எல்லாம் தர சொல்லி கேட்க தூண்டும், என் நட்பு வட்டாரமாக இருக்கட்டும் அல்லது குடும்பமாக இருக்கட்டும், யாருக்கும் நான் இதுவரை எந்த விளக்கமும் reassurance ம் கொடுத்தது இல்லை, because they trust me, அதே போல சொல்ல வேண்டிய விஷயத்தை சரியான நேரமும் காலமும் வரும் போது அவனே சொல்வான் என்று காத்திருப்பார்களே தவிர நொய் நொய் என்று கேள்வி கேட்டு என் உயிரை வாங்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடி சாய்ந்து கொண்டான்.

 

அவர்கள் எல்லோருக்கும் உங்களை பல ஆண்டுகளாக தெரியும், இன்னும் சில ஆண்டுகள் ஆனால் நானும் உங்களை புரிந்து கொள்வேன், அப்போது reassurance கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என்றாள் சத்யா.

 

அந்த சில ஆண்டுகளுக்குள் எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி என்று விரக்தி சிரிப்பு ஒன்றை நந்தன் சிரிக்க சத்யாவிற்கு கண்கள் கலங்கின.

 

கண்களை மூடியே இருந்த நந்தன் அதை கவனிக்கவில்லை.

 

அப்படின்னா என்னை ஏன் கல்யாணம் பண்ணினீங்க? நிறை குறைகள் எல்லாத்தையும் accept பண்ணிக்கிட்டா தான உண்மையான காதல்?”

 

நந்தன் பதில் ஏதும் சொல்லாமல் சாய்ந்து இருந்தான்.

 

சத்யா மீண்டும் “என்கிட்ட நிறைகளே இல்லையா? அதெல்லாம் பாத்து சந்தோஷ படலாம் தானே, இந்த மாதிரி reassurance கேட்பது ஒன்று மட்டும் என் குறையாக இருந்தால் அதை பொறுத்துக்கொள்ளலாம் தானே?” என்று நந்தனின் கை மேல் கை வைத்து தன்மையாகவே கேட்டாள்.

 

அவள் கையை விலக்கி விட்டு நந்தன் “reassurance கேட்பது மட்டும் தான் உன்னிடம் உள்ள குறையா? சந்தேகப்படுவது, யோசிக்காமல் வெடுக்கென்று பேசுவது, அன்பு கொண்டவர்களை நம்பாமல் அவர்கள் மனதை காயப்படுத்துவது, அவர்கள் feelings ஐ மதிக்காமல் இருப்பது, எல்லாவற்றிற்கும் பயந்து சாவது, இன்னைக்கு கூட பயந்து போய்…” என்று நந்தன் சொல்லிக் கொண்டே இருக்க,

 

சத்யா கண்களில் கண்ணீர் பெருக கட்டிலில் இருந்து எழுந்து நின்று பேசினாள். அப்போது தான் நந்தன் தன் கண்களை திறந்து அவள் அழுவதை பார்த்தான்.

 

நானா என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று உங்கள் பின்னால் சுற்றினேன், நீங்கள் தானே என்னை துரத்தி துரத்தி காதலித்தீர்கள்? நீங்கள் தானே என் அனுமதி பெறாமல் தாலி கட்டினீர்கள்? நீங்கள் தானே பேசி புரிந்து கொள்வதற்குள் நம் உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முயன்றீர்கள், ஒத்துக்கிறேன், எனக்காக நீங்க நெறைய கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு ஒத்துக்கிறேன், என்னை காதலிக்கிறீர்கள் என்று ஒத்துக்கிறேன், ஆனால் அதற்காக எடுத்ததும் என்னை முழுமையாக நம்பு என்று சொன்னால் என்னால் முடியாது, எனக்கு ஒருவர் மீது முழுமையாக நம்பிக்கை வர நெறைய நாள் ஆகும் என்று தன் கண்ணீரை தான் அணிந்திருந்த நந்தனின் சட்டையில் துடைத்தவள் ஒரு சிறு அமைதிக்கு பின் மீண்டும் பேசினாள்.

 

ஸ்ரேயா நட்பை விட்டு தரமுடியாது, என் மனசாட்சி என்னை தூங்க விடாது என்று சொன்னீர்கள், நீங்கள் தவறு செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நெருங்கிய முறையில் உங்களை பார்த்த அந்த பெண்ணுக்கு உங்களை வெறும் நண்பனாக பார்க்க கஷ்டமாக இருக்காதா என்று தான் நான் தயங்கினேன், உங்கள் மீது எனக்கு possessiveness, அதனால் தயங்கினேன், இருந்தாலும் எப்போது என் மனசாட்சி என்னை தூங்க விடாது என்று சொன்னீர்களோ அப்போது நான் என்ன சொன்னேன், எனக்கு வருத்தமாக இருந்தாலும் உங்கள் நட்பை நான் தடுக்க மாட்டேன் என்று சொன்னேனா இல்லையா? Didn’t I respect your feelings there?”

 

அமைந்தகரை நினைத்தாலே எனக்கு பயம், இருந்தாலும் உங்கள் விருப்பத்திற்காக வந்தேன், நீங்கள் என் சேலையை உருவிய போது எனக்கு திடீரென்று ஷ்யாம் என் சேலையை பிடித்து இழுத்த ஞாபகம் வந்துவிட்டது, இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு பக்கத்தில் இருப்பது என் அன்பு கணவர் தானே என்று உங்கள் ஆசைக்கு மதிப்பு கொடுத்தேன், ஆனால் நான் உங்கள் feelings ஐ மதிக்கவில்லை, இல்லையா?”

 

திருமணத்திற்கு முன்பு நான் உங்களை காதலிப்பதாக உணராமல் இருந்து நெறைய நாள் குழம்பி இருக்கிறேன், ஆனால் எத்தனை நாட்கள் உங்கள் உணர்வுகளை மதித்து உங்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறேன் தெரியுமா? நீங்கள் பசியோடு இருந்தால் கஷ்டமாக இருக்கும், உங்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று நீங்கள் கலக்கமாக சென்ற போது நானும் சேர்ந்து கலங்கினேன், கௌஷிக் கடிதம் படித்துவிட்டு நீங்கள் கலங்கி இருந்ததை பார்த்தபோது காரணமே தெரியவில்லை என்றாலும் உங்களை அப்படி கலங்கிய முகத்துடன் விடை கொடுக்க எனக்கு மனம் வரவில்லை, ஒரு கட்டத்தில் நீங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று தெரிந்தும் ஷ்யாமால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று என் காதலை மறைத்து உங்களை தியாகம் செய்ய தயாராக இருந்தேன்.

 

நீங்க ரொம்ப perfect, நீங்க யாரையும் சந்தேக படமாட்டீங்க, யாரையும் judge பண்ண மாட்டீங்க, ஆனால் நான் இப்படி தான் என்று சொல்ல நந்தனின் கண்களில் கண்ணீர் துளி திரண்டு நின்றது.

 

அவன் கண்ணீரை பார்த்த சத்யா “நீங்க ஏன் feel பண்றீங்க? இப்படி ஒரு வாயாடியை கல்யாணம் செய்து கொண்டோம் என்றா? மீதியையும் பேசி முடித்து விடுகிறேன், அப்புறம் ஒரே அடியாக feel செய்யுங்கள், உங்க காதல் ரொம்ப உயர்ந்தது, நீங்க என்னை காதலிக்கும் அளவுக்கு நான் உங்களை காதலிக்கவில்லை, உங்கள் உணர்வுகளை மதிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கலாம், but I love you more than you realize, சும்மா தெருவுல போறவன் வரவனை எல்லாம் தருணை பார்க்க என் வீட்டிற்குள்ளே விட்டிருப்பேனா? எவனோ ஒருத்தன் முத்தம் இடுவதை எல்லாம் தடுக்காமல் ரசித்து இருப்பேனா? I gave you that much space because I too loved you.

 

நான் இப்படி தான், என் நிறை குறைகள் தெரியாமல் அவசரப்பட்டு என்னை காதலித்தது உங்கள் தவறு, தாலி கட்டி மனைவியாக்கியது உங்கள் தவறு என்று கொட்டி தீர்த்தவள் மீண்டும் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு நந்தனை அமைதியாக பார்த்தாள்.

 

அவன் கட்டிலில் சப்பனமிட்டு கைகளை வைத்து தன் முகத்தை துடைத்துக்கொண்டு சத்யாவை நிமிர்ந்து பார்த்தான்.

 

சத்யாவிற்கு அழுகை அதிகமானது. துடைத்துக்கொண்டு விம்மல்களுக்கு நடுவே சொன்னாள்.

 

கட்டிலில் நல்லா……….perform பண்றத தவிர……. வேறு எதற்காகவும் நான் உங்களிடம் இருந்து நல்ல பெயர் வாங்கவில்லை…………” என்று கண்களை மீண்டும் துடைத்தவள் “எல்லாமே குறைகள் தான் என்னிடம், இவ்வளவு குறைகளுடன் கோழையாக பயந்து பயந்து வாழ்வதற்கு பதில் நான் எப்போதோ இறந்து இருக்க வேண்டும் என்று சத்யா அழுகையை நிறுத்தி சிலையாக சொல்லி நிற்க நந்தன் ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து இறங்கி வந்து சிலையாக நின்ற அவளை அணைத்தான். அவள் பதிலுக்கு அவனை அணைக்காமல் சிலையாகவே நின்றாள்.

 

சாரி அம்மு, என்மேலயும் தப்பு இருக்கு, நானும் perfect எல்லாம் இல்லடா, நீ என்னை நம்பவில்லையே என்ற வருத்தத்தில் உன்னிடம் கொஞ்சம் கோபமாக நடந்து கொண்டேன், கோபத்தில் நான் உன்னை பற்றி சொன்ன குறைகளில் சில நியாயமற்றவை தான், அதற்காக இவ்வளவு feel பண்ணி அழாத டா செல்லம், சாரி ஓகேவா? இங்க பாரு, ப்ச்ச் என்னை பாரு சொல்றேன் இல்லை?” என்று சொல்லி சத்யாவை குலுக்க அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

 

அவள் கண்ணீரை துடைத்துவிட்டு நந்தன் பேசினான்.

 

இன்னைக்கு நீ பயந்ததை சொன்னேனே தவிர நீ உண்மையில் கோழை இல்லை சத்யா, எத்தனை நாட்கள் உன்னை நினைத்து நான் பெருமை பட்டிருக்கிறேன் தெரியுமா?

 

உன் அப்பா இறந்த பிறகு நீ உன் அம்மாவை காப்பாற்றினாயே, உனக்கு அப்போது என்ன 17 வயது இருக்குமா மிஞ்சி போனால், இருந்தாலும் அந்த கஷ்டமான சூழ்நிலையை சாதுரியமாக சமாளித்து பணம் புரட்டி அவர்களுக்கு சிகிச்சை அளித்து இரவும் பகலும் கண் விழித்து பார்த்து காப்பாற்றினாய் அல்லவா? அதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? என்ன தான் வள்ளி அக்கா, பாட்டி துணை இருந்திருந்தாலும் சரியான முடிவுகளை எடுத்து பிசினசையும் இழுத்து பிடித்து எல்லாவற்றையும் சமனாக கொண்டு செல்ல அந்த வயதில் உனக்கு இருந்த பக்குவமும் தைரியமும் நினைத்து நான் பெருமை பட்டிருக்கிறேன் சத்யா, என்ன உன்னிடம் இதெல்லாம் சொன்னது இல்லை என்று அவளை அழைத்து சென்று கட்டிலில் உட்கார வைத்து தன் தோள்களில் சாய்த்து கொண்டு மீண்டும் பேசினான்.

 

அடுத்தது கௌஷிக் மீது உனக்கு இருந்த காதல், கௌஷிக் ஷ்யாம் இருவருக்குமே drug dealing என்றெல்லாம் தெரிந்தும் கௌஷிக் திருந்திவிட்டார் என்று நீ அவர் காதலை ஏற்றுக்கொண்டாயே, அதற்கு ஒரு தைரியம் வேண்டும், உன் மீது அவர் வைத்த அன்புக்கும், நீ அவர் மீது வைத்த அன்புக்கும் மரியாதை கொடுத்து அதை ஏற்றுக்கொண்டாய், என்ன ஒரே ஒரு வருத்தம், அவர் சுனிதாவுடன் தொடர்பு என்ற பொய்யை நம்பாமல் இருந்திருக்கலாம் என்பது தான் என் வருத்தம், இருந்தாலும் அவரை தேட நீ எடுத்து கொண்ட முயற்சிகள், அவரை விட்டுக்கொடுக்காமல் தருணை வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்தது, இது எல்லாமே நீ அன்பை மதித்ததற்கான சான்று தான், நான் தான் கோபத்தில் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டேன்.

 

அதே போல மும்பையில் அந்த ரெட் லைட் ஏரியா விஷயத்தில் நீ பாதிக்க பட்டு தூக்கு போட முயற்சி செய்தாய், ஆனால் தருண் வந்து அழுத போது அந்த எண்ணத்தை எண்ணத்தை மாற்றி நீ இறங்கி வந்ததாக சொன்னியே, நான் அடிக்கடி அதை நினைத்து பார்ப்பேன், இறப்பது ஒரு சில நிமிட வேதனை, வலி தான், ஆனால் பல கஷ்டங்களை தாண்டி தினம் தோறும் காலையில் எழுந்து  ஒவ்வொரு நாளையும் வாழ்வதற்கு தான் தைரியம் வேண்டும், பல கஷ்டங்களுக்கு நடுவே உன் வேதனையை பொருட்படுத்தாமல் ஒரு நல்ல தாயாக தருணுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து வாழ்ந்தாயே, நீ கண்டிப்பாக கோழை கிடையாது சத்யா, நீ தைரியசாலி தான். ஆனால் அந்த தைரியசாலியை சில சமயம் பூட்டி வைத்துக்கொள்கிறாய்.

 

சத்யா உச்சந்தலையில் முத்தமிட்டு நந்தன் சொன்னான். I was not fair. நீயும் என் உணர்வுகளை மதித்து நெறைய விஷயத்தில் எனக்காக யோசித்து இருக்கிறாய் என்பதை நான் தான் உணர தவறிவிட்டேன், என்னை மன்னிச்சுடு டா என்று அவன் குரல் தழுதழுக்க சொல்ல,

 

சத்யா உடனே “இல்லை நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள், என்மேலயும் தப்பு இருக்கு, நானும் நச்சு கேஸ் தான், உங்களை நம்பாமல் உங்களை போட்டு நச்சரித்தால் உங்களுக்கு கோபம் வரத்தானே செய்யும், அது என்னவோ தெரியவில்லை, சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு inferiority complex, என்னிடம் யாராவது அன்பாக இருந்தால் அதை முழுமையாக என்னால் நம்பமுடியாது, அவர்கள் கண்டிப்பாக என்னை disappoint செய்வார்கள் என்று நான் அந்த சந்தர்ப்பத்திற்காக காத்து கொண்டிருப்பேன், ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்ததும் “பாத்தியா சத்யா நீ சந்தேகப்பட்டது சரி தான், அவர்களுக்கு உன்மீது உண்மையான அன்பு இல்லை என்று என் சந்தேகத்தை உறுதி படுத்திக்கொள்வேன், அது ஒருவேளை அம்மாவிற்கு என்னை பிடிக்காது, மற்றவருக்கு எப்படி பிடிக்கும் என்று சிறு வயதில் இருந்தே எனக்குள்ளே நான் சொல்லி சொல்லி ஒரு complex உருவாக்கி வைத்துக்கொண்டேன் போல, அம்மா, அப்பா, கௌஷிக், நீங்கள் எல்லோருமே என்மீது அன்பாக தான் இருந்துள்ளீர்கள், இருக்கிறீர்கள், அது எனக்கு புரிகிறது, but அந்த full trust தான் வர மாட்டேங்குது, நான் என் complex ஐ கொஞ்ச நாட்களாக தான் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன், சீக்கிரமே சரி செய்து கொள்கிறேன், I promise” என்றாள் நந்தனின் கையை பிடித்தபடி.

 

நந்தனும் அவள் கையை இறுக பிடித்து அவள் கையில் முத்தமிட்டான். “நேற்று என் கண்ணம்மா பாவம் அமைந்தகரையில் பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு. சாரி டா, நான் புரிந்து கொள்ளாமல்.” என்று நந்தன் வருத்தப்பட “இல்லை முதலில் தான் எனக்கு பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது, ஆனால் உங்கள் முகத்தை பார்த்துக்கொண்டே என் பயத்தை மறந்துவிட்டேன் என்றாள் புன்னகையுடன்.

 

நந்தன் “கல்யாணத்துக்கு முன்னாடி நீ எனக்காக பல சமயங்களில் feel பண்ணினது, நான் சாப்பிடாமல் இருந்தால் சாப்பாடு கொடுத்து சாப்பிட வைப்பது, வெறுப்பது போல் காட்டினாலும் என்னை வீட்டிற்குள் அனுமதித்தது, ஷ்யாமிற்காக பயந்து என்னை தியாகம் செய்ய நினைத்தது இது எல்லாமே எனக்கு தெரியும் டா, அதனால் தான் உன் கழுத்தில் தாலி கட்டினேன்.

 

See நான் சொன்னனா இல்லையா, first என் ஐடியா நம்ம ரெண்டு பேரும் நல்லா புரிஞ்சுகிட்டு கல்யாணம் பண்ணிக்கணும் என்பது தான், ஆனால் நம் சந்தர்ப்ப, சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்று சொல்ல,

 

சத்யா “ம்ம்ம் ஆமாம் புரியுது, அதனால் என்ன? இனிமேல் இப்படி சண்டை போட்டு சமாதானம் ஆகி கூட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம், நீங்கள் என்னிடம் இப்படி அன்பாக பேசி புரிய வைத்தால் நான் புரிந்து கொள்வேன், என் குறைகளை சரி செய்து கொள்வேன், கோபமாக இருக்கும் போது அன்பாக பேசவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் பேசாமல் இருந்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது, பேசலைன்னா கூட பரவாயில்லை, ஆனால் நீங்கள் கோபமாகவோ நக்கலாகவோ பேசினால், என் கையை விலக்கி விட்டால் அது ஏனோ என்னை ரொம்ப காயப்படுத்துகிறது என்றாள் கண்கள் கலங்க.

 

நந்தன் மீண்டும் அவளுக்கு முத்தமிட்டு “கையை விலக்கி விட்டது என் கண்ணம்மாவிற்கு அவ்வளவு கஷ்டமாகி விட்டதா? இனிமேல் அப்படி பண்ணமாட்டேன், promise, அப்புறம் நமக்கு 10 பிள்ளைகள் பிறந்தாலும் சரி, தருண் தான் என் முதல் மகன், நான் என்றுமே அவனை பாரபட்சமாக நடத்த மாட்டேன், you should trust me டா என்று சொல்ல சத்யா அவனுக்கு முகம் முழுக்க மாறி மாறி முத்தமிட்டாள்.

 

இருவரும் சிறிது நேரம் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து அந்த கட்டிலின் முனையில் அமர்ந்திருக்க நந்தனின் கண்களில் இருந்து இரண்டு சொட்டுக்கள் சத்யாவின் தொடையில் விழுந்தன. சத்யா அவன் முகத்தை நிமிர்த்தி “உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்லை, சாரிங்க என்று சொல்ல “இல்லடா எனக்கு திடீர்னு அம்மா ஞாபகம் வந்துடுச்சு என்றான் தன் கண்ணீரை கட்டு படுத்திக்கொண்டு.

 

நந்தனின் அம்மா அப்பா பற்றி கேட்டாலோ பேசினாலோ வருத்தப்படுவாரோ என்று நினைத்தே இத்தனை நாட்கள் சத்யா எதுவுமே பேசவோ கேட்கவோ இல்லை, இப்போது நந்தன் முதல் முறையாக இவ்வளவு எமோஷனலாக அம்மா நினைவு என்று சொல்லவும் பதிலுக்கு என்ன சொல்வது, எப்படி பேசினால் அவர் ரொம்ப உடையாமல் இருப்பார் என்றெல்லாம் சத்யா யோசனையோடு இருக்க நந்தன் “உன் மடியில் படுத்துக்கணும் போல இருக்குடா என்று சொல்ல சத்யா கட்டிலில் நகர்ந்து headboard ல் சாய்ந்து கொண்டு தன் இரு கைகளையும் நீட்டி வா என்பது போல் புன்னகையுடன் நந்தனை அழைத்தாள். நந்தனும் ஒரு குழந்தையை போல் அவள் மடியில் படுத்துக்கொண்டு கண்ணீரை துடைத்துக்கொண்டான். சத்யாவிற்கும் கண்கள் கலங்கியது. ஆனால் அதை கட்டுப்படுத்திகொண்டாள். இத்தனை நாட்கள் என் கஷ்டங்களை சுமந்தவர், இனி இவரை நான் உள்ளங்கைகளில் வைத்து தாங்குவேன், அதற்கு முதலில் நான் தைரியமாக இருக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டு அவன் கேசத்தை கோதிவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018