Sms ch 56 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 56

மறுநாள் காலை கட்டிலில் இருந்து எழுந்த சத்யாநாம நேத்து night அழுதுட்டே பால்கனி சோஃபாவில் தானே தூங்கினோம், எப்படி இங்கே வந்தோம், அதுவும் நாம் கீழே தரையில் படுக்கை விரித்து இருக்கும் போது கட்டிலில் எப்படி தூங்கினோம், ஒருவேளை அவர் தூக்கி வந்து படுக்க வைத்திருப்பாரோ? நான் பேச முயற்சிக்கும் போது முகம் கொடுத்து கூட பேசாதவர் நான் தூங்கிய பின் இங்கே தூக்கி வந்து படுக்க வைத்துள்ளார், இவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை, ஆனால் என் மீது ஒரே அடியாக கோபத்தில் இல்லை, அது வரை சந்தோஷம்என்று திருப்தி பட்டவள் தருணின் தலையை கோதி விட்டுக்கொண்டே தூங்கி கொண்டிருக்கும் நந்தனை பார்த்தாள்.

 

அவனது கேசத்தையும் தன் கைகளால் கலைத்து கோதி விட வேண்டும் என்ற தன் ஆர்வத்தை கஷ்டப்பட்டு கட்டு படுத்தி கொண்டாள். எழுந்து பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வந்தவள் தருண் நந்தனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டும் நந்தன் தருணின் கைகளை பிடித்து விளையாடி கொண்டிருப்பதையும் பார்த்தாள். நந்தன் அவளை திரும்பி பார்க்க சத்யா அவனை பார்த்து புன்னகைத்தாள். ஆனால் நந்தன் புன்னகைக்கவில்லை. சத்யாவிற்கு மீண்டும் முகம் வாடியது. கண்ணாமூச்சி ஆடுவது போல் உள்ளது என்று தனக்குள் எண்ணிக்கொண்டுதருண் வா, உனக்கு பல் துலக்கி குளிப்பாட்டி விடுகிறேன்என்றாள்.

 

இல்லைம்மா அப்பா குளிப்பாட்டி விடுறேன் சொன்னாங்கஎன்று சொல்லி நந்தனிடம் மீண்டும் கொஞ்சி விளையாட ஆரம்பித்தான். “அப்படி என்ன தான் சொக்கு பொடி வைத்திருப்பானோ தெரியவில்லை, எல்லோரும் இவனிடத்தில் விழுந்து விடுகிறார்கள், நான் மட்டும் தான் தைரியமாக எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறேன்என்று தனக்கு தானே மார்க் போட்டுக்கொண்டாள் சத்யா.

 

அன்று காலை டிபன் முடித்ததும் நந்தன் வேலைக்கு புறப்பட்டான். கமலா அம்மாஇன்னைக்கே போயாகனுமா நந்து, திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லையே, ஆபீஸ் வேலைகளை மது, ரோஹித் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள், நீ வீட்டிலேயே இருக்க கூடாதா, இல்லை சத்யாவுடன் எங்கேயாவது சென்று வரக்கூடாதா?” என்று கமலா அம்மா ஆதங்கமாக கேட்கஅம்மா நலிந்து போன பிசினசை முன்னுக்கு கொண்டு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், பல பிரச்சனைகளினால் நான் கம்பெனிக்கு போய் பல நாட்கள் ஆகிவிட்டது, என்னை நம்பி நமக்கு deal போட இருந்தவர்கள் என்ன நினைப்பார்கள், நான் போயே ஆக வேண்டும்என்று சொல்லி சத்யாவை பார்த்துவிட்டு திரும்பி புறப்பட்டான்.

 

கமலா அம்மா சத்தியமூர்த்தியிடம் கண்ணால் ஏதோ செய்கை காட்ட சத்தியமூர்த்திநந்து ஒரு நிமிஷம்என்று அவனுடன் நடந்து வெளியே வந்தவர்  இன்னைக்கு நைட் 9 மணியில் இருந்து நேரம் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொல்லிருக்காருப்பா, நீ 8 மணிக்கெல்லாம் வந்துடு,  வேலை அது இதுன்னு இழுத்து போட்டு லேட்டா வராதே, சரியா?” என்று சொல்லம்ம்ம் சரிப்பாஎன்று அளவான புன்னகையுடன் விடை பெற்றான் நந்தன்.

 

கமலா அம்மா சத்தியமூர்த்தியிடம்எத்தனை மணிக்கு வர சொன்னீங்க?” என்று கேட்கநீ சொன்ன மாதிரி 8 மணிக்கு எல்லாம் வந்துவிட சொல்லி இருக்கிறேன்என்றார்.

 

நல்லது, பொதுவாக கொஞ்ச நாட்கள் கழித்து ஆபீஸ் சென்றால் வேலையே கதி என்று 11 அல்லது 11.30 மணிக்கு தான் வருவான், இன்று 9 to 10 லாபம், 10 to 11 தனம், 11 to 12 சுகம், அதனால் 9 மணியில் இருந்து 12 மணி வரை நல்ல நேரம் தான், ஆனால் 8 மணி என்று சொன்னால் தான் 9 மணிக்காவது வந்து சேருவான்

 

அது சரி, சத்யாகிட்ட சொல்லிட்டியா?”

 

இன்னும் இல்லைங்க, சாயங்காலம் சொல்லிக்கலாம்

 

நந்தன் மெயின் ஆபீஸ் சென்று சில வேலைகளை செய்து முடித்தபின் அம்பத்தூர் branch சென்றான். “ஜெனி சத்யா இனிமேல் வேலைக்கு வர மாட்டாள் என்று அவள் சூப்பர்வைசரிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? வள்ளியை பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம்என்றான்.

 

“Yes சார், சத்யா மேடம் பற்றி சொல்லிவிட்டேன்

 

“Good” என்று சொல்லிவிட்டு தீபிகா விட்டு சென்ற பணிகளை மேலாய்வு செய்தான். நேரம் போவதே தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்தவன் நேரத்தை செக் செய்த போது மணி 6.30 என்று காட்டியது, ஏனோ அவனுக்கு வீட்டிற்கு போக விருப்பமில்லை, சத்யா சொன்ன வார்த்தை அவனை வெகுவாக பாதித்து இருந்தது. தன் chair ல் சாய்ந்தபடியே டையை லூசாக்கி விட்டு கண்களை மூடி rest எடுத்தான். கமலா அம்மா call செய்தார்கள். நந்தன் எடுக்கவில்லை.

 

மறுபுறம் வள்ளியை அழைத்து சத்யாவை அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார்கள் கமலா அம்மா. சத்யா குளித்துவிட்டு அணிய புது சேலை ஒன்றும் கமலா அம்மா கொண்டு வந்து கொடுத்து இருந்தார்கள். சத்யா குளித்துவிட்டு அந்த புது சேலையை அணிந்து கொண்டாள்.

 

தருணும் சின்னுவும் சத்யாவிடம் வந்துஅம்மா இன்னைக்கு நான், சின்னு, தாத்தா, பாட்டி எல்லாரும் கிருஷ்ணனோட சின்ன வயசு லீலைகளை ஒரு பெரிய புத்தகத்துல படிக்க போறோம், அதுல நெறைய பெரிய பெரிய படம் இருக்கு, ஒவ்வொரு படத்தை பார்த்தும் பாட்டி கதை சொல்வாங்களாம், நானும் சின்னுவும் கதை கேட்டுகிட்டே தாத்தா பாட்டியோட பெரிய கட்டிலுல படுத்து தூங்க போறோம், ஜாலியா இருக்கும்னு தாத்தா சொன்னாங்கஎன்றான். சத்யா ஒரு புன்னகையுடன்சரி தாத்தா பாட்டிகிட்ட ரொம்ப சேட்டை பண்ணக் கூடாது சரியா?” என்றாள்.

 

தருணும் சின்னுவும் சென்றதும் ரோஹித்தும் கிரிஷ்ம் ஒரு பையில் பூக்களுடன் வந்தனர். “அண்ணி நாங்க ரூமை decorate பண்ண போறோம், வெளில போங்கஎன்றனர் கிண்டலாக. சத்யா ஒரு புன்னகையுடன் சரி என்று தலை அசைத்து வள்ளியுடன் வெளியேற ரோஹித்அண்ணி ஒரு நிமிஷம், கிரிஷ்க்கு நானும் நந்தனும் தான் decorate செய்தோம், அப்போது நந்தனிடம் உனக்கு எப்போது இதெல்லாம் என்று கேட்டேன், அதற்கு எனக்கு இந்த அலங்காரம் எல்லாம் முக்கியம் இல்லை, எனக்கானவள் என் இதயத்தை அலங்கரிக்க வேண்டும், அப்படி ஒருத்தியை சந்தித்து விட்டேன் என்று சொன்னான், இப்போது தான் புரிகிறது, எங்கள் அண்ணனின் இதயத்தை அலங்கரிப்பவர் நீங்கள் தான் என்று, கல்லுக்குள் ஈரம் என்பது போல் எங்கள் அண்ணன் மனதில் கூட காதல் வர காரணமானவர்கள் நீங்கள் தான்என்றான் ரோஹித்.

 

சத்யா மீண்டும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அளித்து கீழே இறங்கி வர கமலா அம்மா அவளை பார்த்து திரிஷ்டி சுற்றினார்கள். “நம்ம தோட்டத்துல ஒரு குட்டி பிள்ளையார் சந்நிதி உள்ளது, அங்கே போய் வணங்கிவிட்டு பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு வா மாஎன்றார்கள் கமலா அம்மா.

 

சத்யாவும் வள்ளியும் கோயிலுக்கு சென்று வணங்கி விட்டு பக்கத்தில் இருந்த outhouse ல் உட்கார்ந்து பேசி கொண்டிருந்த தாத்தாவிடமும், பாட்டியிடமும் ஆசீர்வாதம் வாங்கினாள். “யாருக்கும் மடங்காத என் பேரனை அடக்கியவள் யார் என்று யோசித்தேன், என் பேத்தி தான் என்று இப்போது தான் தெரிகிறது, இனி அவன் உன்னையே தான் சுற்றி வர வேண்டும், சரியா மா?” என்று சிரித்துக் கொண்டே சொல்லி வாழ்த்தினார் தாத்தா. பாட்டி அவளை வீட்டிற்குள் அழைத்து சென்று திருநீர், குங்குமம் பூசிவிட்டுசந்தோஷமா இருக்கனும் சத்யா கண்ணு, எதையும் போட்டு குழப்பிக்காத, தங்கமான தங்கம் அந்த தம்பி, உனக்காக எவ்வளவு பண்ணிக்கிட்டு இருக்கு பாரு, அந்த தம்பி மனசு கோணாம சந்தோஷமா நடந்துக்கணும், சரியா டா, அம்மா மேல இருந்து ஆசீர்வாதம் பண்ணுவாங்கஎன்று வாழ்த்தினார்கள்.

 

வள்ளியும் வாழ்த்து தெரிவித்து விட்டு அவளை அலங்காரம் செய்யப்பட்ட அவள் அறையில் விட்டுவிட்டு வந்தாள்.

 

நந்தனுக்கு மீண்டும் call வர பெரிதாக ஆர்வம் இல்லாமல் எடுத்து பார்த்தான். துரைசாமி என்று காட்டியது. எடுத்து பேசினான்.

 

சொல்லுங்க துரைசாமி, எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க?”

 

கேரளாவுல தான் தம்பி, உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? சத்யா எப்படி இருக்காங்க தம்பி?”

 

நல்லா இருக்கோம் துரைசாமி, சத்யா இப்போது என்னுடைய மனைவிஎன்று சொல்லநிஜமா தான் சொல்றீங்களா?  என்று அதிர்ச்சியாக கேட்டார் துரைசாமி.

 

ஆமாம் நிஜமாக தான் சொல்கிறேன், இரண்டு நாட்கள் முன்னாடி தான் திருமணம் ஆனது என் குடும்பத்தார் முன்னிலையில்

 

இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்க பெரிய மனசு வேணும் தம்பி

 

எந்த மாதிரி பொண்ணு துரைசாமி? எல்லோர் மாதிரியும் சராசரி பெண் தான் சத்யாவும், அவளுடன் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதில் பெரிதாக தியாகம் ஒன்றுமில்லை, நீங்கள் அவளை தவறாக புரிந்து கொண்டதால் இப்படி பேசுகிறீர்கள், எல்லாமே ஷ்யாமின் சதி தான்

 

நீங்க சொன்னா நான் நம்புறேன் தம்பி, என்னோட பொண்ணுகிட்டயும் நெறைய நல்ல மாற்றங்கள் தெரியுது, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை தம்பி, ராகவன் சார் என்னை விசாரணைக்கு வர சொன்னார், நான் உயிருக்கு பயந்து கொண்டு வரவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் தம்பி, ஆனால் நீங்கள் செய்த உதவிக்காக நான் காலம் முழுவதும் கடமை பட்டுள்ளேன், அதனால் உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்ப போகிறேன், அது ஷ்யாமிற்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் உங்களுக்கு பயனளிக்கும்என்று சொல்லி whatsapp செக் செய்ய சொன்னார். “நீங்க பாருங்க தம்பி, ஆனா என்னை மட்டும் இழுக்காதீங்க, அவன் ஒரு ஊசி போட்டா நான் பரலோகம் தான்என்று சொல்ல புரியுது, கவலை படாதீர்கள், என்ன வீடியோ என்று நான் பார்க்கிறேன், நன்றிஎன்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு வீடியோவை பார்க்க தொடங்கினான்.

 

சத்யா கௌஷிக்குடன் விவாதம் செய்துவிட்டு தருணை தூக்கி கொண்டு வெளியேறுவதில் தொடங்கி ஷ்யாம் கௌஷிக்கிற்கு கழுத்தில் ஊசி போடுவதும், பிறகு கௌஷிக்கை தள்ளிவிட்டு வெளியேறுவதும், கௌஷிக் நெறைய முறை யாருக்கோ call செய்வதும், ஒரு நோட்டை தேடி கண்டுபிடித்து ஏதோ எழுதி drawer ல் வைத்துவிட்டு துடி துடித்து இறப்பதும் அந்த வீடியோவில் இருந்தன. நந்தனுக்கு வியர்க்க வியர்க்க கண்களும் கலங்கின. அவர் கடைசியாக எழுதியது தான் சத்யாவிற்கு எழுதிய கடிதமாக இருக்க வேண்டும், இறக்கும் தருவாயில் கூட சத்யாவிடம் அவர் சொல்ல நினைத்ததை கஷ்டப்பட்டு உயிரை கையில் பிடித்து கொண்டு சொல்லி உள்ளார்.

 

இது நல்ல evidence என்றாலும் ராகவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், இன்னமும் கூட drug விஷயத்தில் ஷ்யாமிற்கு எதிராக ஆதாரங்களை திரட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் இதை இப்போதைக்கு அப்படியே வைத்திருப்போம் என்று முடிவு செய்தான் நந்தன். “பாவம, கடைசி நேரத்தில் தன் காதல் மனைவியான சத்யாவை எப்படி எல்லாம் தேடி இருப்பார்என்று கௌஷிக்கிற்காக நந்தன் கலங்கினான்.

 

மணி 8 ஆகியது. சத்யா முதலில் நினைத்தாள். “அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், நான் சொன்ன வார்த்தையில் hurt ஆகி முகம் கொடுக்காமல் பேசுகிறார், ஆனால் இன்று அவரிடம் நான் தன்மையாக பேசினால் அவரும் தன்மையாக பேசுவார், என்னைவிட்டு அவரால் விலகி இருக்க இயலாது, இன்று அவர் விளக்கங்கள் தரவில்லை என்றால் கூட பரவாயில்லை, ரோஹித், தாத்தா, பாட்டி எல்லோரும் அவரை பற்றி எப்படி எல்லாம் சொல்கிறார்கள், என்னை அந்த அளவிற்கு பிடித்ததால் தானே அவர்களுக்கு கூட அவர் என்மீது வைத்திருக்கும் அன்பு புரிந்துள்ளது, அதனால் அவர் என்னை நெருங்கி வரும் போது நான் நைநை என்று நச்சரிக்காமல் கொஞ்சம் விட்டு கொடுத்து போனால் ஒன்றும் தவறில்லை, அவரது அணைப்பில் எவ்வளவு பாதுகப்பாய் உணர்வேன், மீண்டும் அவர் அணைக்க அந்த கைகளுக்குள் கவலைகளை மறந்து ஒரு கோழி குஞ்சை போல் அடங்கி விட வேண்டும்என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

 

கமலா அம்மா ஒரு hotpack, bowl, தட்டுடன் வந்தார்கள். “அம்மாடி இவ்ளோ அழகா அலங்காரம் பண்ணிக்கிட்டு டைனிங் hall எல்லாம் வரவேண்டாம், கண்ணு பட்டுடும், அதான் இங்கயே டிபன் கொண்டு வந்து விட்டேன், நீ இங்கேயே சாப்பிடுஎன்று சொல்லஇல்லை அத்தை, அவங்களும் வந்துடட்டும்என்று வெட்கம் கலந்த புன்னகையுடன் கூறினாள் சத்யா.

 

கமலா அம்மா அவளை பரிவுடன் பார்த்துவிட்டுஇத்தனை நாள் கழிச்சு ஆபீஸ் போயிருக்கான் பாரு, வேலைல இறங்கிட்டா எல்லாரையும் மறந்துடுவான், நீ முதலில் சாப்பிடு, அவன் வந்ததும் நேராக ரூமிற்கு அனுப்புகிறேன், குளித்து விட்டு இந்த வேஷ்டி சட்டையை போட்டுகொண்டு இங்கேயே அவனும் சாப்பிடட்டும், இருவருக்கும் சேர்த்து தான் கொண்டு வந்துள்ளேன், இதுல பால் இருக்கு, பழம் எல்லாம் இங்க வச்சுட்டாங்கல்லஎன்று அறையை மேற்பார்வை இட்டுவிட்டு வெளியேறினார்கள் கமலா அம்மா.

 

இன்னொரு பக்கம் சத்யாவை பார்க்க நந்தனுக்கு இப்போது மிகவும் கலக்கமாக இருந்தது. கமலா அம்மாவிடம் இருந்து அழைப்புகள் அதிகமாகின. ஆனால் நந்தன் ஏதேதோ சிந்தனையில் கண்களை மூடிக்கொண்டு டேபிளின் மேல் படுத்துவிட்டான். எழுந்த போது மணி 9.

 

9 மணி போல கமலா அம்மா மீண்டும் சத்யாவை பார்க்க வந்தார்கள். இப்போது சத்யாவின் முகத்தில் வெட்கம் எல்லாம் மறைந்து கலக்கம் மட்டுமே இருந்தது. கமலா அம்மாவிற்கும் கோபமும் கலக்கமுமாக இருந்தது. 8 மணிக்கு வர சொல்லியும் மணி 9 ஆக போகிறது, இன்னும் இவன் வரவில்லையே என்று தவித்தார்கள்.

 

சத்யா சொன்னாள். “நீங்க போய் தூங்குங்கள் அத்தை

 

இல்லடா இவ்வளவு தூரம் உன்னை தயார் செய்துவிட்டு எப்படி தனியாக விட்டுவிட்டு போவது, வரட்டும் அந்த ராஸ்கல்

 

நீங்க தான அத்தை சொன்னீர்கள், வேலை என்று வந்துவிட்டால் எல்லோரையும் மறந்து விடுவார் என்று, அவர் வரும் போது வரட்டும், நீங்கள் போய் rest எடுத்து கொள்ளுங்கள்

 

அதெல்லாம் இல்லைஎன்று கமலா அம்மா இங்கும் அங்கும் நடந்து தவிப்பதை பார்த்து சத்யாவிற்கு கண்கள் கலங்கின. அதை பார்த்த கமலா அம்மாஅட நீ ஏன்டா கண் கலங்குற?” என்று கேட்க சத்யா கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் எல்லாம் பொல பொலவென்று கொட்டியது. “நான் அவர் மனம் புண்படும் படியாக பேசிவிட்டேன், அதனால் அவருக்கு என்மேல் கோபம், அதனால் தான் கம்பெனியிலேயே இருக்கிறார் என்று நினைக்கிறேன்என்று அழுதாள்.

 

கமலா அம்மா ஒரு சிறு யோசனைக்கு பின்சின்ன பொண்ணு தெரியாம பேசி இருப்ப, உன்னை விட ஆறு வயது மூத்தவன் தானே இவன், விட்டு கொடுத்து சென்றால் என்ன? வரட்டும், எவ்வளவு நேரம் ஆனாலும் சரி இன்று அவனுக்கு இருக்கிறதுஎன்று சொல்லிவிட்டுஆனால் வேறு எந்த பெண்ணிடமும் அவன் இப்படி அன்பு வைத்து நான் பார்த்ததில்லையே கண்ணம்மா, அவனிடம் நீ கொஞ்சம் தன்மையாக பேசி இருக்க கூடாதா? அவனுக்கு அவ்வளவு எளிதில் கோபம் வராதே, வந்தால் இப்படி நாள் கணக்கில் பேசாமல் இருப்பான், சொல்லாமல் கொள்ளாமல் ……” என்று ஏதோ சொல்ல வந்த கமலா அம்மா சத்யா முகம் சந்தேகத்துடன் பார்ப்பதை கவனித்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் பண்ணை வீட்டிற்கு சென்று விடுவான் என்று சொல்ல வந்தேன்,  இனிமேல் கொஞ்சம் தன்மையாக பேசுடாம்மா, அன்பிற்காக மிகவும் ஏங்குவான், யாராவது கொஞ்சம் அன்பாக இருந்தாலும் அவர்களுக்காக எல்லாமே செய்வான், உனக்கு அவன் தாலி கட்டிய போது உன்னை அவனுக்கு எந்த அளவிற்கு பிடிக்கும் என்று நான் அறிந்து கொண்டேன், உனக்காக அவன் எவ்வளவு சிரமங்கள் மேற்கொண்டு சமாளிக்கிறான், உனக்கு அவன் அன்பு புரிந்திருக்க வேண்டுமே, எப்படி புண்படும் படியாக பேசினாய்?” என்று கமலா அம்மா புலம்ப ஆரம்பித்தார்கள்.

 

சத்யாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க சரி சரி அழாத டா, எத்தனை நாட்கள் கோபமாக இருப்பான், ரொம்ப நாள் கோபமாக இருக்க நான் விட்டு விடுவேனா?” என்று தன் மொபைலை எடுத்து மெசேஜ் அனுப்பினார்கள். “நந்து, அம்மா கடைசியாக சொல்கிறேன், இன்னும் அரை மணி நேரத்திற்குள் நீ வீட்டில் இருக்க வேண்டும்”.

 

நந்தன் தன் தாயின் மெசேஜ் பார்த்துவிட்டு அலுப்பாக அங்கிருந்து புறப்பட்டான். 9.30 மணிக்கு தன் அறையின் கதவை திறக்க சத்யாவும், கமலா அம்மாவும் எழுந்து நின்றார்கள். கமலா அம்மா தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டுவேலை நெறைய இருந்துச்சா நந்து, சரி சரி போய் குளிச்சுட்டு வந்து இந்த வேட்டி சட்டையை அணிந்து கொள், உனக்காக சத்யாவும் சாப்பிடாமல் காத்திருக்கிறாள்என்று சொல்ல நந்தன் சத்யாவை பார்த்தான். அவள் அழுத்திருப்பது நன்றாக தெரிந்தது. அவள் லேசாக புன்னகைக்க நந்தன் மரியாதைக்காக அவளை பார்த்து புன்னகைத்து விட்டுநீங்க சாப்டீங்களா அம்மா?” என்று கேட்டான். “நான் இதோ போய் சாப்பிட்டுவிடுவேன், உனக்கும் சத்யாவிற்கும் சாப்பாடு, பால், பழம் எல்லாம் இங்கேயே இருக்கிறது, கீழே எல்லாம் வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம், இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்என்று நந்தன் தலையில் கை வைக்க நந்தன் சத்யாவை வா என்பது போல் கண் அசைத்தான். சத்யாவும் வேகமாக அவன் அருகில் வர நந்தன் கமலா அம்மாவின் கால்களை தொட குனிந்தான், சத்யாவும் அவனை பார்த்து கமலா அம்மா கால்களில் விழுந்து வணங்கினாள்.

 

கமலா அம்மாவிற்கு கண்கள் கலங்க ரெண்டு பேரும் நல்லா ஒத்துமையா சந்தோஷமா இருக்கனும்என்று இருவரையும் ஆசீர்வதித்து அவர்கள் நிமிர்ந்து நின்றதும்கவிதா மாப்பிள்ளையோட சந்தோஷமா வாழ்ந்தத நாங்க பாக்க குடுத்து வைக்கல, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வதை நாங்கள் பார்க்க வேண்டும், நந்து, சத்யா சின்ன பெண், துடுக்காக ஏதாவது சொன்னால் கூட வயதில் மூத்தவன், பக்குவமானவன் என்ற முறையில் நீ தான் அனுசரித்து செல்ல வேண்டும், சரியா?” என்று கேட்க நந்தன் சரி என்று தலை அசைத்தான். “சரிப்பா போய் குளிச்சுட்டு வா, அம்மா கீழே போறேன், வரேன் மாஎன்று சொல்லிவிட்டு கமலா அம்மா வெளியேறினார்கள்.

 

நந்தன் சத்யாவை பார்த்துவிட்டு குளிக்க சென்றான். அத்தை முன்னாடி இயல்பாக இருப்பவன் குளித்து முடித்து வந்த பிறகு தன்னுடன் பேசுவானோ மாட்டானோ என்று சத்யாவிற்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. ஒரு பக்கம் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பது போல் தனக்குள்ளே வாதாடினாள். இன்னொரு பக்கம் அவ்வளவு அன்பாக இருப்பவரிடம் ஏன் நம்பிக்கை வைத்து நம் அன்பை வெளிப்படுத்த கூடாது என்று தன்னை தானே கேட்டுக்கொண்டாள். குளித்துவிட்டு ஈர தலையுடன் வேட்டி சட்டை அணிந்து சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே நந்தன் வெளியே வர சத்யா அவனை ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

 

நீ நேரத்துக்கு சாப்பிட வேண்டியது தானே, நான் வேலையில் சில சமயம் பிசியாகி விடுவேன், என்னை எதிர்பார்த்து காத்திருக்காதேஎன்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த வட்டமான டீப்பாயில் இருந்த hotpack திறந்து கொண்டே சோஃபாவில் அமர்ந்தான்.

 

சத்யா அவன் அருகில் வந்து ஒரு தட்டில் இட்லி, சாம்பார் எல்லாம் வைத்து அவனிடம் நீட்டினாள். அவள் பரிமாறுவாள் என்று எதிர்பார்க்காத நந்தனுக்கு அவள் அன்புடன் பரிமாறுவது அவன் மனதை இலக்கியது. அவளை நன்றாக பார்த்தவன்அம்மா எடுத்து குடுத்த saree யாஎன்றான் தட்டை வாங்கி கொண்டே.

 

ம்ம்ம் ஆமாம்என்றாள்.

 

நல்லா இருக்கு, நீயும் உக்காரு, சாப்பிடலாம்என்று பக்கத்தில் இருந்த சோஃபாவை காண்பிக்க சத்யா அவன் அமர்ந்திருந்த சோஃபாவில் அவன் அருகிலேயே வந்து அமர்ந்தாள்.

 

நந்தனுக்கு இதயம் படபடவென்றது. கொஞ்சம் மூச்சை எடுத்து கட்டுப்படுத்தி கொண்டு அவளுக்கும் ஒரு தட்டில் இட்லி, சாம்பார் வைத்து கொடுத்தான். இருவரும் சாப்பிட்டார்கள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018