Sms ch 68 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 68
அறைக்கு செல்லலாம் என்று கையை பிடித்து இழுத்த நந்தனை மீண்டும் பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் சத்யா.
இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துவிட்டு சிறு அமைதிக்கு பின் நந்தனே பேசினான்.
“பஞ்சாபில் இருக்கும் போது ஷ்யாம் அம்மா ஒரு விஷயம் சொன்னார்கள், அது என்னை கொஞ்சம் உறுத்தி கொண்டே இருந்தது, உன்னிடம் அதை பற்றி பேச எண்ணி இருந்தேன், ஆனால் நீ தவறாக நினைத்தோ அல்லது கௌஷிக் நினைத்தோ அழ கூடாது” என்றான் நந்தன்.
“என்ன சொன்னார்கள்?” என்றாள் சத்யா கொஞ்சம் கவலையோடு. நந்தன் அந்த குடிலில் இருந்த பெஞ்சில் நகர்ந்து அமர்ந்து சத்யாவை தன் தோள்களில் சாய்த்து கொண்டு பேசினான். “நீயும் கௌஷிக்கும் முதன் முறையாக ஒன்றாக இருந்தீர்கள் அல்லவா?” என்று கேட்க,
சத்யா “ம்ம்ம் அதை பற்றி என்ன?”
நந்தன் “அது…..கௌஷிக்கும் நீயும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை நீ பார்த்து இருக்கிறாயா?”
“இல்லையே, நீங்கள் தானே துரைசாமியிடம் இருந்து வாங்கியதாக சொன்னீர்கள், நீங்கள்….. நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?” என்றாள் தயக்கமாக.
“இல்லடா நான் எப்படி பார்ப்பேன்? அது நீயும் கௌஷிக்கும் வாழ்ந்த புனிதமான வாழ்க்கை அல்லவா? அதை மற்றொருவர் பார்ப்பது தவறு, நான் துரைசாமியிடம் இருந்து வாங்கி வைத்தேனே தவிர பார்த்தது இல்லை” என்று சொல்ல சத்யா அவனை நன்றியோடு பார்த்து அவன் கையை எடுத்து முத்தமிட்டாள். நந்தன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு மீண்டும் பேசினான்.
“ஷ்யாம் அம்மா சொன்னார்கள், முதன் முதலாக சத்யா வீட்டிற்கு வந்து கௌஷிக்குடன் இருந்ததை கூட வீடியோ எடுத்து வைத்திருந்தான், இவன் தான் அவர்களுக்கு ஏதோ போதை மருந்து கொடுத்து அன்று இப்படி நடந்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன், அன்றில் இருந்து சத்யா கௌஷிக் வீடியோக்களை இவன் எடுத்து இருக்கிறான் என்பது போல் பேசினார்கள்”
“what!?” என்று சத்யா நிமிர்ந்து அதிர்ச்சியாய் கேட்டுவிட்டு கொஞ்சம் யோசித்து சொன்னாள். “First time நாங்க ஒன்னா இருந்ததே ஒரு accident தானே, அதை எப்படி ஷ்யாம் video எடுத்து வைத்திருக்க முடியும்?” என்று சத்யா குழம்ப,
நந்தன் “அதான் டா, ஷ்யாம் அம்மாவும் சொன்னார்கள், ஒருவேளை அப்போதே உனக்கும் கௌஷிக்கிற்கும் போதை மருந்தை கொடுத்து ஷ்யாம் இப்படி செய்திருக்கலாம் அல்லவா? ஏற்கனவே கௌஷிக் அறையில் கேமரா செட் செய்து வைத்து இப்படி ஒன்று நடக்கும் என்று அவன் எதிர்பார்த்து இருக்கலாம் அல்லவா?” என்று சொல்ல,
சத்யா மீண்டும் நந்தனின் தோள்களில் சாய்ந்த படியே யோசித்தாள். “எனக்கு இரவு பகலாக தூக்கம் இல்லாமல் படித்ததால் அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே கொஞ்சம் கிறக்கமாக தான் இருந்தது, ஆனால் சுனிதாவுடன் சேர்ந்து சமைக்கும் போதெல்லாம் தெளிவாக தான் இருந்தேன், ஷ்யாம் சில cool drinks எடுத்து கொடுத்தான். நானும் குடித்தேன், அதன் பிறகு கௌஷிக்கை அழைத்து சத்யாவிற்கு வீட்டை சுற்றி காமி என்றான், அதன் பிறகு தான் ரொம்ப மயக்கமாக இருந்தது, ஆனால் கௌஷிக் தெளிவாக தான் இருந்தார், வேண்டாம் என்றார், டாக்டரை அழைத்து வருகிறேன் என்று வெளியே செல்ல எத்தனித்தார். நான் தான்….. “ என்று சத்யா நிறுத்த,
நந்தன் சத்யாவின் தலையை கோதிவிட்ட படியே பேசினான். “ஒருவேளை ஷ்யாம் கௌஷிக்கிற்கு போதை மருந்து கலந்த கூல் ட்ரிங்க்ஸ் தராமல் இருந்து இருக்கலாம், அவர் குடிக்கும் போது கண்டு பிடித்து விடுவார் என்று உனக்கு மட்டும் கொடுத்து இருக்கலாம், இந்த சதி புரியாமல் கௌஷிக் நீ ஆசைப்படுகிறாய் என்று நினைத்து தடுக்க முயற்சித்தும் முடியாமல் ஏதேதோ நடந்து விட்டது, ஷ்யாம் சதி வலையாக இருந்தாலும் நடந்தது என்னவோ இரு உள்ளங்களின் சங்கமமும் தானே, அதனால் கெட்டதிலும் ஒரு நல்லது தான் நடந்து உள்ளது, ஆனால் நான் ஏன் இந்த பேச்சை எடுத்தேன் என்றால் அந்த இணைப்பில் தான் தருண் உண்டானது இல்லையா?” என்று கேட்க,
சத்யா “ஆமாம்” என்றாள் அவனை கேள்வியாய் பார்த்து.
“பஞ்சாபில் இந்த விஷயம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது சத்யா, ஷ்யாம் கைதான பிறகு சென்னையில் என் டாக்டர் நண்பரை விசாரித்தேன், ராகவனையும் விசாரித்தேன், சில போதை பொருளின் effect சில மாதங்கள் கூட உடம்பில் இருக்குமாம், அதனால் தான் தருணின் வளர்ச்சியில் காலில் அந்த குறைபாடு ஏற்பட்டிருக்குமோ என்று கூட சந்தேகம் ஆகி விட்டது, இருக்கலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது என்று தான் ராகவனும் அந்த டாக்டர் நண்பரும் சொன்னார்கள், ஆனால் அதை இனிமேல் குணப்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் சொன்னார்கள், ஆனால் முடிந்த வரை முயற்சி செய்து பார்ப்போம் என்று தோன்றுகிறது” என்றான்.
சத்யா நந்தனின் தோளில் சாய்ந்தபடி அவன் கையை தன் கைகளுக்குள் வைத்து கொண்டு அமைதியாக இருந்தாள். “என்னடா பழசை எல்லாம் பேசி கஷ்டப்படுத்தி விட்டேனா?” என்று நந்தன் கனிவாக கேட்க “இந்த ஷ்யாம் எப்படி எல்லாம் என் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறான் என்று நினைத்தால் வருத்தமாகவும், கோபமாகவும் இருக்கிறது” என்றாள் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு.
“ம்ம்ம் ஆனால் அவனுக்கு சீக்கிரமே தண்டனை கிடைக்க போகிறது, அதை நினைத்து சமாதானம் ஆகி கொள்ள வேண்டியது தான்”
“ம்ம்ம் ஆனால் எனக்கென்னவோ கௌஷிக் தெய்வமாக இருந்து உங்களை எனக்கு காண்பித்து கொடுத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது, நல்லவன் ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்தார், என் கண்ணில் அந்த கடிதம் படும் முன்பாகவே உங்களை எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார்”
நந்தனும் “ம்ம்ம் ஆமாம், அவருக்கே தெரிந்து இருக்கிறது பார், நான் நல்லவன் என்று” சொல்லி தோளில் சாய்ந்து இருந்த சத்யாவின் தலையில் தன் முகத்தால் லேசாக இடிக்க சத்யா அவன் கையை கிள்ளினாள்.
“சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பெருமை பாட ஆரம்பித்து விடுவீர்களே, அதனால் தான் கொஞ்சம் balance வேண்டும் என்று நான் உங்களை புகழ்வதே இல்லை” என்றாள் சத்யா.
“உனக்கு பொறாமை டி, இவன் இவ்வளவு நல்லவனாக இருக்கிறானா? நாம் இதில் பாதி கூட இல்லையே என்று பொறாமை உனக்கு” என்று நந்தன் பதிலுக்கு அவள் கையை கிள்ள “ப்ச் வலிக்குது டா” என்றாள் சத்யா சிணுங்கியபடி.
நந்தன் ஒரு பெருமூச்சுடன் தோட்டத்தை சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு சத்யாவின் முகத்தை திருப்பி வேகமாக முத்தமிட்டான்.
சத்யா அவனை தடுக்க முயன்றாள். “செக்யூரிட்டி…….யாராவது….” என்று சொல்ல முயன்று அவள் முயற்சி தோற்று போய் அமைதியானாள்.
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு கொஞ்சம் அங்கே அமைதி நிலவியது. சிறு அமைதிக்கு பின் சத்யா கேட்டாள்.
“எனக்கு ஒரு doubt”
“எப்படி என் முத்தம் இவ்வளவு சூப்பரா இருக்குன்னு தானே?”
சத்யா அவன் கையில் அடித்து விட்டு சொன்னாள்.
“சீரியசான doubt”
நந்தன் அடிக்கும் அவள் கையை விளையாட்டாக முறுக்கி கொண்டே கேட்டான். “சொல்லு”
அவன் முறுக்குவதை தடுத்து போராடி தன் கையை மீட்டவள்,
“ஸப்பா சரியான முரடன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன், சரி சரி……….மறுபடியும் ஏதாவது பண்ணாதீங்க, டவுட்ட கேட்டுடுறேன், நானும் கௌஷிக்கும் இருந்த வீடியோக்களை பார்க்கவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா?”
“ஆமாம்”
“அப்படி என்றால் என் மும்பை வீடியோவை பார்த்தீர்களா இல்லையா?”
“இல்லடா அதையும் நான் பார்த்ததில்லை”
சத்யா வியப்பாக அவனை நோக்கி “ஏன் பார்க்கவில்லை?”
“அதுவும் உன் தனிப்பட்ட விஷயம் தானே என்று நினைத்தேன், முதலில் நீ ஒருவரோடு மும்பையில் ஒன்றாக இருந்த video என்று துரைசாமி சொல்லி கொடுத்த போது நான் நினைத்தது என்னவென்றால் கௌஷிக்கை இழந்து தனிமையில் வாடும் உனக்கு அந்த துணை தேவைப்பட்டிருக்கலாம் என்று தான், அதனால் நான் அந்த வீடியோவை பார்த்து உன்னை judge செய்ய அதில் ஒன்றும் இல்லை என்று நான் பார்க்கவில்லை, ஆனால் அது கூட ஷ்யாமின் அரசியல் நண்பனை வைத்து செய்த சதியாக இருக்க கூடும் என்று பிறகு கிடைத்த தகவல்கள் வைத்து தோன்றியது, ஆனால் நீயே பிறகு சொன்னாயே, உன்னை கடத்திக்கொண்டு போய் வேறு ஒரு பெண்ணை வைத்து video edit செய்து என்று, அப்புறம் அதில் பார்க்க என்ன இருக்கிறது?”
“பிறகு நான் சொன்னது, கிடைத்த தகவல்கள் வைத்து பார்த்து நான் நல்லவள் என்று நீங்கள் நம்புவது எல்லாம் ok, ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிவதற்கு முன்பு கூட நீங்கள் என்னை தவறாக நினைக்கவில்லையே நந்தன், அதுகூட தனிமையில் வாடும் ஒரு விதவை பெண்ணுக்கு தேவைப்பட்ட துணையாக இருக்கலாம் என்று எண்ணி என்னை judge செய்யாமல்…….எப்படி உங்களால் என்னை judge செய்யாமல்? அப்போதும் என்னை விரும்பினீர்களா?” என்று கண்களில் ஒரு துளி திரண்டு நிற்க நந்தனை பார்த்து கேட்டாள்.
“ஆமாம் டா, அப்போதும் நான் உன்மீது கொண்ட காதலில் எந்த குறைவும் ஏற்படவில்லை” என்று சொல்ல சத்யா கண்களில் நீருடன் அவனை அணைத்தாள்.
நந்தனும் அவளை இறுக அணைத்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து “இப்போ மட்டும் செக்யூரிட்டி யாரும் பார்க்க மாட்டார்களாக்கும்?” என்று நந்தன் கேட்க “பாத்தா பாத்துக்கட்டும், என் வீட்டுல என் புருஷனை தானே கட்டிப்பிடிக்கிறேன்” என்று சொல்ல நந்தன் “செல்ல பொண்டாட்டி, உன்னை…அப்படியே தூக்கிட்டு போய்…..” என்று சொல்வதற்குள் சத்யா லேசாக தலையை பிடிக்க “என்னாச்சு டா” என்று நந்தன் கேள்வியாக கேட்க,
“இல்லை கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருக்கு”
“ப்ச்ச் night எல்லாம் தூங்கல இல்ல, அதான், சரி வா, போய் தூங்கலாம்” என்று நந்தன் அவளை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றான்.
“வா வா வா ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு தூங்கலாம்” என்று சத்யாவின் கையை பிடித்து இழுக்க சத்யா சிலையாக நின்றாள்.
“என்னாச்சு டி, நான் ஏதாவது தூங்க விடாம தப்பு பண்ணுவேன்னு தோணுதா? அதெல்லாம் பண்ண மாட்டேன், வா நல்லா தூங்கு” என்று மீண்டும் அழைக்க சத்யாவின் கண்களில் இப்போது கண்ணீர் பெருக்கெடுத்தது.
நந்தன் இப்போது உண்மையிலேயே கவலை அடைந்து “தலை ரொம்ப வலிக்குதா? இல்லை என்ன problem னு சொல்லுமா?” என்று கீழே குனிந்து அவள் முகத்தை பார்த்து கேட்க சத்யா அவனை பார்த்துவிட்டு அவன் நெஞ்சில் சாய்ந்து விசும்பினாள்.
“நீங்கள் என்னை எவ்வளவு விரும்பி உள்ளீர்கள், நான் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டேன், அப்போது எல்லாம் நீங்கள் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பீர்கள்” என்று விசும்பலுக்கு நடுவே அவள் சொல்ல,
“நீ என்னை கஷ்டப்படுத்தவே இல்லை சத்யா, உன் கோபம், வெறுப்பது போல் நடிப்பது, எல்லாமே உனக்கு என்மீது இருந்த காதலின் வெளிப்பாடாக தான் தோன்றியது எனக்கு, நீ உன் ஆழ் மனதில் என்னை விரும்புகிறாய் என்று எனக்கு தெரியும், அதனால் உன்னை பார்க்க காத்திருப்பது, உற்சாகமாக புறப்படுவது, உன்னை பார்ப்பது, நீ இன்று என்ன பேசுவாய், எப்படி நடந்து கொள்வாய் என்று நான் யோசிப்பது என்று நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு ஒவ்வொரு நாளுமே எனக்கு ஒரு adventure மாதிரி இனிமையாக, ஆர்வமாக தான் இருந்தது, எனக்கு வருத்தம் என்று இருந்தால் அது இப்போது நீ இப்படி என் கைகளுக்குள் இருப்பது போல் இல்லாமல் தள்ளி நின்ற தருணங்கள் மட்டும் தான், எப்போது இவளை என் பக்கத்தில், என் கைகளுக்குள் வைத்துக்கொள்ள போகிறோம் என்று ஏங்கி நான் வருத்தப்பட்டது மட்டும் தான்”
“இல்லை நீங்கள் உண்மையாக வருத்தப்பட்ட தருணம் ஒன்று உண்டு, உங்கள் பரிபூரண அன்பை புரிந்து கொள்ளாமல் ஏதோ வெறும் உடல் சுகத்திற்காக மட்டும் என்னை தொடுவதாக நினைத்து நான் பேசிய வார்த்தை, அது எவ்வளவு பெரிய தவறு என்று ஒவ்வொரு நாளும் உங்களை பற்றி நான் புரிந்து கொள்ள புரிந்து கொள்ள நான் செய்த தவறும் அதிகமாக உரைக்கிறது, என்னை மன்னித்து விடுங்கள் நந்தன்” என்று கண்ணீருடன் கேட்க “மன்னிச்சுட்டேன் போதுமா? சரி வா தூங்கு” என்று நந்தன் சொல்லி அவளை விலக்க முயல சத்யா விலகாமல் அவனை அணைத்துக்கொண்டாள்.
சத்யா அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து கால்களை எக்கி அவன் முகத்தில் நெற்றி, கன்னங்கள் என்று மாறி மாறி முத்தமிட ஆரம்பித்தாள். அவள் இடுப்பை இரண்டு கைகளாலும் ஏந்தி அவளை முத்தமிட அனுமதித்து நந்தன் புன்னகையுடன் ரசிக்க சத்யா ஒரு கட்டத்தில் நிறுத்தினாள்.
“என்ன அவ்வளவு தானா?” என்று நந்தன் ஏமாற்றமாய் கேட்க சத்யா குறும்பாக புன்னகைத்து தன் காந்த கண்களால் அவனை நேருக்கு நேராக பார்த்து அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து கொண்டே பின்னோக்கி நடந்து கட்டிலில் அமர்ந்து அவனையும் தன் மீது சாய்த்துக்கொண்டே சாய்ந்தாள்.
“தலை சுத்துற மாதிரி இருக்குன்னு சொன்னியே, tired ஆ இல்லையா?” என்றான் நந்தன் அவள் முகத்தில் முத்தமிட்டு கொண்டே.
“அது சும்மா சொன்னேன், நீங்கள் அந்த மும்பை விஷயத்தில் கூட என்னை தவறாக நினைக்கவில்லை என்று தெரிந்ததும் உங்களை அணைத்து அப்போதே எல்லா சந்தோஷத்தையும் உங்களுக்கு மீண்டும் அள்ளி அள்ளி தர வேண்டும் என்று ஆசை வந்து தான் அணைத்தேன்.
ஆனால் நீங்கள் என்னை அப்படியே தூக்கிட்டு போய் என்று சொல்ல வந்தீர்களா? உங்களை கொஞ்சம் ஏமாற்றம் அடைய வைக்கலாம் என்று நினைத்து தலை சுற்றுவதாக சொல்லி பார்த்தேன், ஆனால் நீங்கள் தான் மனைவியிடம் கிடைக்கும் சுகத்தை விட மனைவியின் உடல் நலனில் அக்கறை கொண்டவர் ஆயிற்றே, அப்போதும் நீங்கள் ஏமாறாமல் நான் தான் ஏமாந்தேன், ஆனால் இனிமையான ஏமாற்றம்.
இன்னைக்கு fulla எனக்கு no tiredness, இப்படிபட்ட என் அருமையான கணவனுக்கு ஒரே விருந்து தான் என்னிடம் இருந்து என்று அவன் சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தாள்.
ஈறுடலும் ஓருயிருமாக இருவரும் நேரம் காலம் தெரியாமல் பின்னி பிணைந்து உறவாடி களைப்பாற நந்தனின் நெஞ்சில் சத்யா படுத்திருக்க நந்தன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான். சத்யா அவன் கைகளுக்குள் இன்னும் நெருங்கி படுத்துக்கொண்டாள்.
நந்தன்: “ஓய்ய்ய்….”
“ம்ம்ம்…..” என்றாள் சத்யா ஒரு புன்னகையுடன்.
“ஏதாவது பேசேன்”
“ம்ம்ம் என்ன பேசறது?” கேட்டாள் அவன் கைகளுக்குள் வசதியாக படுத்துக்கொண்டே.
“ஏதாவது பேசேன்”
“தெரியல, எதுவுமே பேச தோணல, நீங்க வேணா ஏதாவது பேசுங்க”
“எனக்கும் எதுவும் பேச தோணல, ஆனா உன் குரலை கேக்கணும்னு தோணுது”
சிறு அமைதிக்கு பின் சத்யா அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த படியே லேசாக நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
“எனக்கு பதில் தெரியும், ஆனாலும் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன், கேக்கட்டுமா?”
“ம்ம்ம் கேளு”
“உங்களுக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிச்சிருக்கு?”
நந்தன் அவளை விளையாட்டாக முறைத்துவிட்டு “எத்தனை தடவ டி கேப்ப?” என்றான்.
“ப்ச்ச் சொல்லுங்க” என்று சிணுங்கினாள் சத்யா.
“ஹ்ம்ம் தெரியல டி, உன்னை பார்த்த நாளில் இருந்தே உன்னை பற்றி தான் என் நினைப்பு முழுக்க இருக்கும், குடும்பத்தோடு இருந்தாலும் சரி, வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, ஒரு மணிமாலையில் மறைந்திருக்கும் நூலை போல ஆனால் அந்த மாலையின் ஆதாரமாக விளங்கும் நூலை போல நீ என் நினைவுகளுக்குள் மறைந்து இருந்து என்னை ஆட்டி படைத்து கொண்டிருந்தாய், அது உன்மீது உள்ள காதல் தான் என்று கொஞ்சம் கொஞ்சமாக தான் எனக்கு புரிந்தது, திரும்ப திரும்ப நான் இதை சொல்ல வேண்டும் என்றே எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் வேறு வேறு விதமாக இதையே கேட்பாய் இல்லையா?” என்று சத்யாவின் தலையில் நந்தன் குட்ட,
“ஆமாம் அப்படி தான் கேட்பேன், கேட்டுகிட்டே இருப்பேன், நீங்க சொல்லிகிட்டே இருக்கனும், 95 வயசானாலும் கேட்பேன், அப்பவும் நீங்கள் உங்களுக்கு ஏன் என்னை பிடித்தது? ஏன் என்னை காதலிக்கிறீர்கள், எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்று மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டும்” என்றாள் அதிகாரமாக.
“உத்தரவு மகாராணி” என்று நந்தன் சொல்லிய விதத்தில் சத்யாவிற்கு அடக்கி வைத்திருந்த சிரிப்பு பொங்கி வந்தது. அவன் தலை முடியை கலைத்துவிட்டு விளையாடினாள்.
“ஆனால் ஒரு விஷயம் இப்போது தான் புரிகிறது சத்யா” என்று நந்தன் சீரியசாக ஏதோ சொல்ல “என்ன விஷயம்?” என்று சத்யாவும் எழுந்து அமர்ந்து சீரியசாக கேட்டாள்.
“இல்லை நான் தான் இந்த விஷயத்தில் சூப்பர், நீ சரியான மக்கு என்று நினைத்திருந்தேன், ஆனால் நீ பயங்கர கேடி தான்” என்று முகத்தை சீரியசாக வைத்து சொல்லிவிட்டு நந்தன் சிரிக்க சத்யாவின் முகம் சீரியசில் இருந்து கோபமாக மாறி முகம் சிவக்க எதை எடுத்து நந்தனை அடிக்கலாம் என்று தேடி படுக்கையில் இருக்கும் தலையணைகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.
“ஹேய் நிறுத்து நிறுத்து, சரி சரி இவ்வளவு கோபம் வேண்டாம், கொஞ்சம் பாராட்டலாம் என்று நினைத்தேன், அது ஒரு குற்றமா? என்னமாக கோபம் வருகிறது” என்று கோபமாக அடித்து கொண்டிருந்த சத்யாவின் கைகளை பிடித்து தடுத்து அணைத்து கொண்டான் நந்தன்.
“சரியான ஆள் டா நீ” என்று அவன் நெஞ்சில் குத்தினாள் சத்யா.
“சரி வா சீரியசாக பேசலாம், அம்மா அப்பா reception வைக்க வேண்டும் என்று சொன்னார்கள், உனக்கு அதில் விருப்பம் இல்லையா என்ன?” என்று கேட்டான் நந்தன்.
“ஆமாம் எதற்கு இதெல்லாம்? வருகிறவர்கள் என்னை பற்றியோ அல்லது தருணை பற்றியோ ஏதாவது தோண்டி துருவி விசாரித்தால் கஷ்டமாக இருக்கும், அதனால் தான்”
“நீ ஏன் இப்படி நினைக்கிறாய்? அழைக்க போவது என்னவோ நம் நெருங்கிய சொந்தங்களை தானே, ஒரு நாள் reception வைத்து இவள் என் மனைவி என்று அடையாள படுத்தி விட்டேன் என்றால் நாள பின்ன நம் முதுகுக்கு பின்னாலோ இல்லை முகத்திற்கு நேராகவோ எதுவும் பேசாமல் இருப்பார்கள், இல்லை என்றால் வரும்போது போகும் போது எல்லாம் ஏதாவது சொல்வார்கள் அல்லவா?”
“ம்ம்ம் நீங்கள் சொல்வதும் சரி தான், ஆனால் எனக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும, அது சரி எனக்கு விருப்பம் இல்லை என்று நீங்கள் பஞ்சாபில் இருந்து வந்ததும் அத்தை மாமா உங்களிடம் complaint செய்து விட்டார்களாக்கும்” என்றாள் முகம் சுருங்க.
“இல்லடா அம்மா அப்பா இப்படி செய்யலாம் என்று ஒரு எண்ணம் இருப்பதாக பஞ்சாபில் இருக்கும் போது போனில் சொன்னார்கள், உனக்காக ஏதாவது north indian ஸ்டைலில் டிரஸ் வாங்கி வரக்கூட சொன்னார்கள், நானும் வாங்கி வந்தேன், ஆனால் உனக்கு விருப்பம் இல்லை என்ற விஷயம் நீ ஸ்ரீஜாவோடு நேற்று இரவு பேசிக் கொண்டிருந்ததை வைத்து புரிந்து கொண்டேன்”
“ஸ்ரீஜாவோடு பேசியதை கேட்டீர்களா?”
“ம்ம்ம் ஆமாம் உள்ளே வரலாம் என்று கால் எடுத்து வைக்க முற்பட்டேன், அப்போது தான் அவள் reception விஷயம் பேசிவிட்டு அம்மா அப்பா என்னை பற்றி கவலை படவில்லை என்று சொல்லிகொண்டிருந்தாள், எங்கே நீயும் அவளை போல் அம்மா அப்பாவை தவறாக நினைத்து கொள்வாயோ என்று நினைத்தேன், ஆனால் நீ அவர்களை விட்டு கொடுக்காமல் பேசினாய், அதை கேட்டதும் எனக்கு அப்படி ஒரு relief”
“ம்ம்ம் உங்களுக்கு அத்தை மாமாவை எவ்வளவு பிடிக்கும் என்றும் எனக்கு தெரியும், அவர்களுக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் என்றும் எனக்கு தெரியும்”
“இந்த reception விஷயத்தில் கூட அம்மாவிற்கு நடத்த வேண்டும் என்று ரொம்ப ஆசை, ஆனால் நீ விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டதால் தான் நான் வந்த பிறகு நேற்று இரவு அதை பற்றி பேசவில்லை என்று நினைக்கிறேன்”
“ம்ம்ம் சார்ரிங்க, but என்னால உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை”
“அதுக்கு எதுக்கு சாரி உன்னுடைய விருப்பமும் முக்கியம் தானே”
“ம்ம்ம்....” என்று சத்யா நந்தனின் நெஞ்சில் சாய்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.
Comments
Post a Comment