Sms ch 57 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 57

சத்யா மெதுவாக சாப்பிட்டாள். நந்தன் சாப்பிட்டு முடித்து பாலை எடுத்து இரண்டு டம்ளர்களில் ஊற்றினான். சத்யாவிடம் ஒன்றை வைத்துவிட்டு அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தான். அவள் சாப்பிட்டு முடித்ததும்ம்ம்ம் குடிஎன்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தான். “உனக்கு எப்போ ரிசல்ட்ஸ் வருது?” என்றான். அந்த கேள்வியை அந்த சமயத்தில் எதிர்பார்க்காத சத்யா சில நொடிகள் விழித்துவிட்டுஇன்னும் 15 days வந்துடும்என்றாள்.

 

 அடுத்தது என்ன பண்ண போற?”

 

என்ன பண்ணணும்?” என்று மனதிற்குள் நினைத்து விழித்தாள்.

 

 “IAS exam க்கு prepare பண்ணனும் இல்லையா?” என்று அவனே கேட்டான். சத்யாஇனிமேல் எங்கே அதெல்லாம்?” என்பது போல் மனதிற்குள் நினைத்து கொண்டு வெளியே பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

 

 சோஃபா விட்டு எழுந்து சென்று அவளின் எதிரே இரண்டடி தள்ளி நின்று அவளை நேராக பார்த்தான். “என்ன அமைதியாக இருக்கிறாய்என்று கேட்க சத்யா தயங்கி தயங்கி பேசினாள்இல்லை இனிமேல் எப்படி IAS எல்லாம்?” என்றாள் தலையை குனிந்தபடியே. “ஏன் உனக்கு என்ன 40 வயதாகிறதா? இல்லை வசதி வாய்ப்பு இல்லையா?” என்றான்.

 

 அப்படி இல்லை, எனக்கு அந்த motivation எல்லாம் போய் விட்டது

 

எதனால்? எப்போதிருந்து?”

 

இவன் என்ன துருவி துருவி கேட்கிறான்?” என்று நினைத்தவள் தெரியல, அப்பா இறக்கறதுக்கு முன்னாடி வரை அந்த ஆசை நெறைய இருந்துச்சு, அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அந்த ஆசை குறைய ஆரம்பிச்சிடுச்சு, காலேஜில் படிக்கும் போது கூட கொஞ்சம் ஆசை இருந்தது, அப்புறம் தருண் பிறந்தான், கௌஷிக் பிரச்சனை என்று மீண்டும் அந்த ஆசையை கிடப்பில் போட்டுவிட்டேன், இப்போ இந்த arrears clear பண்ணும் போது கூட கொஞ்சம் ஆசை இருந்துச்சு, இந்த வேலையை விட்டுட்டு உங்க கண்ணுல படாம ஒரு இடத்துக்கு போய்ட்டு கொஞ்சம் கொஞ்சமா படிக்க ஆரம்பிக்கலாம்னு நினச்சேன், ஆனா முடியல, இனிமேல் அதெல்லாம் வேண்டாம் என்று தோன்றுகிறது, அந்த IAS க்கான வைராக்கியமும், தைரியமும் என்னிடம் இல்லைஎன்று சொல்லி முடித்தாள்.

 

நந்தன் அவளை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்துவிட்டுஎனக்கு நீ IAS படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, கௌஷிக்கின் ஆசையும் கூட அது, அதனால் நீ அதை consider பண்ண வேண்டும்என்று சொல்லிவிட்டு ஒரு சிறு அமைதிக்கு பின் அதென்ன என் கண்ணில் படாமல் என்று ஏதோ சொன்னாயே?” என்று கேட்க சத்யா தயங்கினாள்.

 

என்னை அந்த அளவிற்கு வெறுத்தாயா?” என்றான் கொஞ்சம் சோகமாக.

 

சத்யா பதறி போய்இல்லை அந்த அளவிற்கு விரும்பினேன், அது கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருந்திருக்கிறேன், தீபிகா வந்து உங்களுக்கும் அவளுக்கும் நிச்சயம் என்று சொன்னாள், என்னையும் அறியாமல் நெறைய இரவுகள் அழுதேன், இந்த வலி எல்லாம் உங்கள் கண்களில் படாமல் இருந்தால் சரி ஆகிவிடும் என்று எண்ணினேன்என்றாள்.

 

நந்தனுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது அவள் சொன்னது. ஆனால் மீண்டும் குரலை கடுமைப் படுத்தி கொண்டு கேட்டான். “நீ எப்போதுமே இப்படி தானா?” என்று.

 

சத்யா அவன் குரலில் இருந்த கடுமையிலும், புதிரான கேள்வியிலும் குழப்பம் அடைந்துநீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லைஎன்றாள்.

 

நீ எப்பவுமே இப்படி தானா என்று கேட்கிறேன், உன்மீது அன்பு வைத்திருப்பவர்களை நம்ப மாட்டாய், மதிக்க மாட்டாய், ஆனால் உனக்கு கெடுதல் நினைப்பவர்கள் சொல்வதை நம்புவாய், அவர்கள் சொல்வதை கேட்டு உன் வாழ்க்கையின் முடிவுகளை தீர்மானிப்பாய், இது எப்படி பட்ட குணம்? உன் பிறப்பிலேயே ஏற்பட்ட குணமா? இல்லை இடையில் நீ வளர்த்து கொண்ட குணமா?” என்று அவன் கோபமாக கேட்க சத்யாவிற்கும் கோபம் வந்தது.

 

என்னிடம் ஏன் இவ்வளவு கோபமும் கடுகடுப்பும்? நான் விரும்பும் பெண்களை எப்படி அடைய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள், உங்கள் வாயால் தானே சொன்னீர்கள், அப்படி சொல்பவரை சந்தர்ப்ப, சூழ்நிலைகளை வைத்து சந்தேகப் படுவதில் என்ன தவறு உள்ளது? இதற்கு எதற்கு நான் என்னவோ எப்போதுமே இப்படி தான் என்பது போல் பிறப்பிலேயே வந்த குணமா என்றெல்லாம் கேட்டு புண்படுத்தி அவமானப் படுத்துகிறீர்கள்?”

 

காரணம் உள்ளது, நான் தானே பெண்களை பற்றி சொன்னேன், ஏன் சொன்னேன் என்று யோசிக்க மாட்டாயா? உன்னை ஏமாற்றும் எண்ணம் உள்ளவனாக இருந்திருந்தால் நான் உன்னிடம் உத்தமன் போல் தானே நடித்திருக்க வேண்டும், ஏன் பெண்களை பற்றி சொல்ல வேண்டும்?

 

உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை, நான் அன்று ராமேஸ்வரம் சென்று திரும்பி வந்த போது சொன்னேன், நான் உன் வீட்டிற்கு வந்து 20 நாட்கள் இருக்கும் இல்லையா என்று, நீ உடனே 20 நாட்கள் இல்லை, 9 நாட்கள் என்று சொன்னாய், அது எவ்வளவு ஈடுபாட்டுடன் நான் வராத நாட்களை நீ கணக்கிட்டு வைத்திருக்கிறாய் என்று தெரிந்து கொள்ள நான் வைத்த டெஸ்ட், என்னை வெறுப்பது போல் வெளியே காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் உன்னையும் அறியாமல் என் வருகைக்காக காத்திருக்கிறாய் என்று அறிந்து கொண்டேன், அப்போது தான் புரிந்தது, என்னை அடிக்கடி அமைந்தகரைக்கு இழுத்தது தருணின் மேல் எனக்கு இருக்கும் அன்பு மட்டுமல்ல, உன்மீது எனக்கு இருக்கும் ஈரப்பும் தான் என்று. அதனால் தான் ஆரம்பத்திலேயே என் பெண்கள் சகவாசம் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் உனக்கு தெரியப்படுத்தினேன்.

 

என் தம்பி திருமணத்தின் போது தான் எனக்கு உன்னிடம் இருப்பது ஈர்ப்பு மட்டும் அல்ல, காதலும் கூட என்று புரிந்து கொண்டேன், அன்று இரவு தீபிகாவை தெரியாமல் இடித்து அவள் விழாமல் இருக்க அவள் கையை பிடித்தேன், ஒரு நிமிடம் கூட இருக்காது ஆனால் அவள் என்னை பார்த்த பார்வையில் என் மனம் உனக்கு ஏதோ துரோகம் செய்வது போல் சஞ்சலம் அடைந்தது, அன்று தான் இனி என் வாழ்வில் சத்யாவை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் இடம் இல்லை என்று புரிந்தது, சஞ்சலம் அடைந்த என் மனதை அமைதி படுத்த கோயிலுக்கு சென்று திரும்பினேன், உன்னை பார்த்த நாளில் இருந்தே எனக்கு உன்மீது காதல் தான் இருந்துள்ளது, ஆனால் அதை நான் புரிந்து கொண்ட காலநிலைகள் தான் வெவ்வேறு.

 

நீ இல்லாமல் என்னால் இருக்க முடிகிறதா என்று தெரிந்து கொள்ளவும், நீயும் என்னை மிஸ் செய்கிறாயா என்று தெரிந்து கொள்ள நானே நமக்கு வைத்த டெஸ்ட் தான் என் தம்பியின் திருமணத்தின் போது அமைந்தகரைக்கு நான் வராததின் காரணம். தருணை மட்டும் பள்ளியில் சென்று பார்த்தேன். அம்பத்தூர் branch ல் அன்று காலை உன்னை நான் கண்டுகொள்ளாமல் இருந்த போது நீ தவித்த தவிப்பு எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை தந்தது தெரியுமா? இவள் எனக்கானவள் என்று அன்றே முடிவு செய்து உன்னிடம் அதிகமாகவே உரிமை எடுத்து கொண்டேன்.”

 

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடியே வேகமாக நந்தன் பேச பேச எழுந்து நின்று சத்யா கண்களில் நீருடன் கேட்டு கொண்டிருந்தாள். “இந்த அளவிற்கு என்னை அணு அணுவாய் ஆராய்ந்து காதலித்து இருக்கிறாரா?” என்று வியப்பும் மகிழ்ச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது நம் மீது கோபத்தில் பேசி கொண்டிருக்கிறாரே, இன்னும் எப்படி எல்லாம் கோபப்பட போகிறாரோ என்று ஒரு பக்கம் கவலையுடன் கேட்டு கொண்டிருந்தாள்.

 

நந்தன் கையை தன் நெற்றியில் வைத்து டென்ஷனாக மீண்டும் திரும்பி அவளை பார்த்தான். “உன்னை முதன்முதலாக சந்தித்தது ஞாபகம் உள்ளதா? மது வாசனையுடன் ஒருவன் உன்னை காரில் இருந்து நடுத்தெருவில் நள்ளிரவில் தள்ளிவிட்டு சென்றிருந்தான். உன்னை தோளில் தாங்கி நடத்தி உன் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஒரு பெண்மணி சொன்னார்கள். கருமம் புதிதாக ஒருவனை பிடித்து இருக்கிறாள் என்று. துரைசாமி வந்து எவன் வந்தாலும் போனாலும் உன் அம்மாவை நான் விடமாட்டேன் என்று தருணிடம் மிரட்டி விட்டு சென்றான். உன் வீட்டில் தங்கி மறுநாள் காலை எழுந்து சென்ற போது அந்த தெருவில் உள்ளவர்கள் பார்த்த பார்வை எனக்கு ஞாபகம் உள்ளது. மணிமாறன், ஏன் நீயுமே கூட சொன்னாய் மும்பையில் ரெட் லைட் ஏரியாவில் இருந்து கைதானேன் என்று. 5 வயது, 6 வயது மதிக்கதக்க ஒரு மகன், கணவன் என்று யாரும் இல்லை, ஊரார்கள் பேசும் பேச்சு, நீ சொன்ன ரெட் லைட் area விஷயம்….” என்று நிறுத்தியவன் கண்களை மூடி மூச்சு விட்டு தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு சொன்னான்உன்னை சுற்றி இவ்வளவு பேச்சுக்களும் மர்மங்களும் இருந்தும் கூட ஒரு நிமிடம் கூட உன்னை நான் தாழ்வாக நினைக்கவில்லை சத்யா, ஏன் தெரியுமா? Because I loved you, I trusted you, உன்னை சுற்றி இருக்கும் மர்மங்கள் எல்லாம் ஏதோ சந்தர்ப்பம் சூழ்நிலையால் ஏற்பட்டவையாக இருக்கும், உனக்கு எப்படி உதவ முடியும், உன் பிரச்சனைகளை களைந்து உன்னை எப்படி நிம்மதியாக வாழ வைக்க முடியும் என்று தான் நான் யோசித்திருக்கிறேனே தவிர ஒரு நாளும் உன்னை வார்த்தைகளால் அவமானப்படுத்தவோ, உன் கண்ணில் படாமல் விலகி விடவோ என்றுமே நான் நினைத்ததில்லை, நீ என்னை அவமானப்படுத்தினால் கூட I understood the attraction you had for me, அது வெறும் attraction மட்டும் இல்லை, காதலாக இருக்க வேண்டுமே என்று நான் தவித்த நாட்கள் எனக்கு தான் தெரியும்

 

சத்யா சிலையாக நின்றாள், கண்களில் மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

 

நந்தன் கட்டிலில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். தன் வேகத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.

 

மீண்டும் எழுந்து நின்று பேச ஆரம்பித்தான். “உனக்கு என்ன? என் பெண்கள் சகவாசம் பற்றி எல்லா details உம் வேண்டும், A to Z தெரிய வேண்டும், இல்லையா?” என்று சொல்லி சத்யாவை பார்க்க சத்யாஅப்படி இல்லை…. “ என்று ஏதோ பேச முயல நந்தன் தன் கையை காட்டி அவளை நிறுத்தினான்.

 

நீ எதுவும் சொல்ல வேண்டாம் சத்யா, நான் பேசி முடித்து விடுகிறேன், நம்பிக்கையும் காதலும் நாம் சொல்லும் வார்த்தைகளால் வரக்கூடாது, உன்மீது எனக்கு நம்பிக்கையும் காதலும் இருந்தது, அதனால் ஊராரும் நீயும் உன்னை பற்றி, உன் கடந்த காலத்தை பற்றி சொன்ன வார்த்தைகள் எனக்கு வெறும் வார்த்தைகள் மட்டுமே, அதனால் தான் உன்மீது எனக்கு இருந்த காதலையும் நம்பிக்கையையும் அந்த வார்த்தைகள் இம்மி அளவு கூட பாதிக்கவில்லை, ஆனால் உனக்கு என்மீது இருந்ததெல்லாம் வெறும் attraction தானோ என்று இந்த இரண்டு நாட்களாக என்னை யோசிக்க வைத்து விட்டாய், ஏன் என்றால் அவ்வளவு சர்வ சாதாரணமாக ஒரு வார்த்தையில், ஒரே ஒரு வார்த்தையில் நான் உன்மீது கொண்டிருக்கும் அன்பை நீ கொச்சை படுத்தி விட்டாய்என்று சொல்ல சத்யா இல்லை என்பது போல் தலை அசைத்து தரையில் முட்டி போட்டு உடைந்து அழுதாள்.

 

நந்தனும் கண்ணீருடன் அவளை பார்த்துவிட்டு மீண்டும் பேசினான். “yes எனக்கும் குறைகள், பலவீனங்கள் இருக்கின்றன. இது வரை நான் 6 பெண்களுடன் இருந்துள்ளேன்என்று சொல்ல சத்யா எழுந்து அவன் அருகில் வந்து அவன் கைகளை பிடித்துநீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்என்று சொல்லஇல்லை சத்யா சொல்லிவிடுகிறேன், ஏன் என்றால் நான் நாளை ஒரு பெண்ணுடன் சிரித்து பேசினால் கூட உனக்கு சந்தேகம் வரும், அதனால் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்என்று அவள் கைகளில் இருந்து தன் கைகளை விடுவித்து கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

 

தீபிகா உட்பட 6 பெண்களுடன் sex வைத்துள்ளேன், ஒரு பெண்ணை சந்தித்தால் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை sex உறவுக்காக  அவளை அவ்வப்போது சந்திப்பேன், சில சமயம் 6 மாதம், ஒரு வருடம் கூட எந்த பெண்ணின் தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கிறேன், ஆனால் நவம்பர் 5 வந்தால் என்னால் தனிமையில் இருக்க முடியாது, அன்று தான் என் பெற்றோர்களை இழந்தேன், அவர்கள் கொடூரமான முறையில் இறந்ததை கண் கூடாக பார்த்தவன் நான், தனிமையில் இருந்தால் அந்த வலியை என்னால் தாங்கி கொள்ள முடியாது, அம்மா அப்பாவிடமும் நான் இதை பற்றி பேசியதில்லை, ராகவன் மதுவுடன் சிறு வயதில் பேசியதோடு சரி, அந்த வலியை மறக்க யாரிடமும் பேசாமல் பண்ணை வீட்டிற்கு சென்று விடுவேன், நான் சொந்த காலில் நிற்க ஆரம்பித்த போது தான் அந்த நாள் அன்று ஒரு பெண்ணுடன் என் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தேன், எனக்கு அது உதவியது என் வலியை மறக்க.

 

போன வருடம் நவம்பர் 5 அன்று அப்போது என் தொடர்பில் இருந்த ஸ்ரேயா என்ற பெண்ணுடன் நேரம் செலவழிப்பதாக plan இருந்தது, ஆனால் மழை நன்றாக அடித்ததால் அமைந்தகரை பாலத்தில் சிறிது நேரம் காரை நிறுத்தலாம் என்று நிறுத்தி இருந்தேன், ஆனால் லேசாக கண் அயர்ந்த நான் வெகு நேரம் கழித்து தான் எழுந்தேன், அதன்பிறகு ஏனோ ஸ்ரேயாவை பார்க்க அப்போது தோன்றவில்லை, அப்படியே காரில் உட்கார்ந்து இருந்த போது தான் தருணை பார்த்தேன், அதன் பிறகு நடந்தது தான் உனக்கு தெரியுமே.

 

ஆனால் உன்னை சந்தித்த பிறகு, அந்த வாரத்தில் ஒருமுறை ஸ்ரேயாவுடன் இரண்டு நாட்கள் ஒன்றாக இருந்தேன், ஆனால் எப்போதும் இருக்கும் உற்சாகம் இல்லை என்னிடத்தில், அதன் காரணம் எனக்கு அப்போது புரியவில்லை, பிறகு தான் புரிந்தது, உன்மீது இருந்த இனம் புரியாத ஈர்ப்பு மற்ற பெண்களிடம் என்னை செல்லவிடவில்லை என்று. அதன் பிறகு நான் உன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் அந்த இடத்தில் நினைக்கவில்லை.

 

சமீபத்தில் கூட ஸ்ரேயா என் அரவணைப்பு வேண்டும் என்று விரும்பினாள். அவள் முன்னாள் கணவன் அவள் மீது ஆசிட் ஊற்றி அவள் முகம், உடல் ஒரு பக்கம் சிதிலம் அடைந்து விட்டது, அந்த வலியை மறக்க என்னை தேடினாள். நான் வெறும் தோழனாக தான் இருக்க முடியும் என்று என் தோள்களை அவள் அழ கொடுத்தேன். அவள் கூட கேட்டாள். நான் பழைய அழகுடன் இருந்திருந்தால் நீ மறுத்திருக்க மாட்டாய் அல்லவா என்று.  நான் மறுத்ததின் காரணம் அவள் புற அழகல்ல, நீ என் மனதில் இல்லாமல் இருந்திருந்தால் அவளுடன் அன்று ஒன்றாக இருந்திருப்பேன். ஆனால் நான் சத்யா என்ற பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லி அவளுக்கு என்றும் நண்பனாக இருப்பேன் என்று சொல்லி அவளிடம் இருந்து விடை பெற்றேன்.

 

ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள் சத்யா. நீ சந்தேகப்படுவாய் என்று அவள் நட்பை என்னால் விட்டு தர முடியாது. அவளுக்கு என்றும் ஒரு நல்ல நண்பனாக இருப்பேன், இருந்தாலும் ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றால் நாள பின்ன எங்கள் நட்பையும் நீ சந்தேகப் படுவாய், அதனால் தான் முன்கூட்டியே சொல்கிறேன்.

 

அடுத்தது தீபிகா விஷயம். லண்டனில் இருக்கும் போது தீபிகாவுடன் ஒரே ஒரு இரவு செலவழித்தேன், அவளுக்கு boyfriend இருக்கும் விஷயம் அறிந்து அவளை மீண்டும் சந்திக்காமல் விலகி விட்டேன்.

 

இப்படி நான் சந்தித்த பெண்களில் உன்னை தவிர எந்த பெண்ணையும் நான் காதலித்ததில்லை, யாரையும் நான் தவறான வாக்குறுதிகளோ, நம்பிக்கையோ கொடுத்து ஏமாற்றியதில்லை, யாரையும் அவர்கள் விருப்பதிற்கு மாறாக கட்டாயப்படுத்தியதில்லை.

 

தீபிகா என் பிறந்தநாள் அன்று எல்லோர் முன்னிலையிலும் நாங்கள் ஒன்றாக இருந்தது போல் காண்பிக்க ஆடைகளின்றி என் படுக்கையில் வந்து படுத்து இருந்தாள். அவள் திட்டம் அறிந்து முன்பே cctv வைத்து அவள் நோக்கத்தை அம்மா, சித்தி, தீபிகா அம்மா, வள்ளி அனைவரிடமும் காண்பித்தேன். உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தேன், ஏன் என்றால் நீயாக என்னை நம்பிக்கையோடு அணுக வேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு நப்பாசை, அது மட்டுமல்லாமல் ஓராண்டிற்கு நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், நீ IAS க்கு படிக்க வேண்டும், ஷ்யாமிற்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்று பல குறிக்கோள்கள். ஏதேதோ எண்ணி இருந்தேன் சத்யா நம் எதிர்காலம் பற்றி. ஒரு வார்த்தையில் எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி விட்டாய்.

 

உன் அம்மாவின் அன்பை நீ சிறு வயதில் புரிந்து கொள்ளவில்லை, சரி அது கூட பரவாயில்லை, சின்ன பெண் என்று விட்டுவிடலாம், ஆனால் மாமா உன்னிடம் சொல்லிவிட்டு புறப்பட வேண்டும் என்று கெஞ்சியும் அவரை அப்படியே அனுப்பி விட்டாய், அடுத்தது கௌஷிக்….” என்றவன் நம்பிக்கை இல்லாத சிரிப்பு ஒன்றை சிரித்தான். சத்யா எதுவும் புரியாமல் கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தாள். “Yes கௌஷிக், he is also a fool just like me. உன்னை விரும்பியது ஒரு குற்றமா சத்யா? அவரின் அன்பையும் சந்தேகப்பட்டாய்என்று சொல்ல

 

அவரே தன் வாயால் சொன்னார் சுனிதாவுடன் தவறு செய்ததாகஎன்று சத்யா சொல்ல நந்தன் வாய்விட்டு சிரித்தான்.

 

“see this is why I didn’t want to clear your doubts with my words, ஏன் என்றால் ஒவ்வொரு முறையும் உனக்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது, sales girl இடம் ஏன் பேசினேன், ஜெனியுடன் ஏன் பேசினேன், மதுவுடன் ஏன் பேசினேன், ஸ்ரேயாவுடன் ஏன் பேசினேன் என்றுசொல்லியவன் சத்யாவை பார்த்தான். அவள் எந்த உணர்ச்சிகளும் இன்றி அமைதியாக நின்றாள்.

 

கௌஷிக் விஷயத்தில் இரண்டும் இரண்டும் நான்கு என்று சேர்த்து பார்க்க உனக்கு தெரியாதா சத்யா? Actually நீ IAS படிக்காமல் இருப்பது தான் நல்லது, அவர் சொன்னாராம் சுனிதாவுடன் உறவு கொண்டேன் என்று, அதை இவள் நம்பினாளாம்என்று கூறி மீண்டும் நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சோர்ந்து கட்டிலில் அமர்ந்தான்.

 

உண்மையான அன்பையும் காதலையும் புரிந்து கொள்ள முடியாத ஒருத்தியையா நான் ஓடி ஓடி காதலித்தேன்?” என்று தன் கண்களை நந்தன் துடைத்து நீயும் என்னை காதலிக்கிறாய் என்று நம்பி அவசரப்பட்டு உன் கழுத்தில் தாலி கட்டி உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தி கொண்டேனோ என்று இன்று வருந்துகிறேன் சத்யாஎன்று சொல்ல சத்யா உணர்ச்சிகளற்ற குரலில் சொன்னாள்.

 

குறைகளும் பலவீனங்களும் உங்களுக்கு மட்டும் இல்லை நந்தன், எனக்கும் இருக்கின்றன, நான் உங்களை சந்தேகப்பட்டது தவறு தான், sex addict என்று சொன்னது தவறு தான், நீங்கள் சொன்னது போல் உண்மையான அன்பையும் காதலையும் புரிந்து கொள்ள முடியாத பாவி தான் நான், அதனால் தான் அம்மாவை நோகடித்தேன், அப்பாவையும் கடைசி நாளில் நோகடித்து அனுப்பினேன், கௌஷிக்கையும் சந்தேகித்தேன், இப்படி நீங்கள் இடித்து சொன்னது நல்லது தான், இல்லை என்றால் என் தவறை நான் உணரவே மாட்டேன்.

 

ஆனால் நான் கௌஷிக்கை காதலித்ததும் உண்மை, உங்களை இப்போது காதலிப்பதும் உண்மை, நான் உங்களை காதலித்ததால் தான் ஷ்யாமால் உங்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று எண்ணி விலகி இருக்க முயன்றேன், அதையும் மீறி நீங்கள் தாலி கட்டியபோது அதை கழட்டி எரியாமல் சுகமான சுமையாக சுமந்து நிற்கிறேன் உங்கள் முன்னால். நான் மனதார காதலிக்கும் ஒருவர் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணுவது தவறா? ஆசைப்படுவது தவறா? ஒருவர் மீது ஒரு சிலருக்கு பார்த்ததுமே நம்பிக்கை வந்துவிடும், ஒரு சில பேருக்கு பழக பழக தான் நம்பிக்கை வரும், என்னை போன்ற அறிவிலிகளுக்கு வார்த்தைக்கு வார்த்தை சொன்னால் தான் நம்பிக்கை வரும் போல, அது தவறு தான்.

 

கௌஷிக்குடன் நான் பழகி இருந்தும், ஒன்றாக வாழ்ந்திருந்தும் நான் அவரை நம்பவில்லை, அவர் எதற்காக சுனிதா பற்றி இப்படி சொல்ல வேண்டும் என்று யோசிக்கவில்லை, அவர் சொன்னதுமே அதை உண்மை என்று நம்பி நான் அவரை சந்தேகித்து விலகி விட்டேன்.

 

உங்கள் விஷயத்தில் உங்கள் கைகளுக்குள் நீங்கள் என்னை அணைக்கும் போதெல்லாம் அப்படியே அந்த நிமிடமே உங்களிடம் நான் என்னை சரணடைந்து விட வேண்டும் என்று என் இதயம் துடிக்கும், ஆனால் அது தவறு, கொஞ்ச நாட்கள் ஒருவரை ஒருவர் பழகி புரிந்து கொள்ள வேண்டும் என்று என் மூளை சொல்லும், உங்களின் அணைப்பிற்கும், வேகத்திற்கும், என் இதயத்தின் துடிப்பிற்கும், என் மூளையின் அறிவுரைக்கும் நடுவில் நான் மாட்டி தவிக்கும் தவிப்பு உங்களுக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை நந்தன், புரிந்திருந்தால் உங்களை sex addict என்று சொல்லி நான் செய்த தவறை இன்று என் காதலை சந்தேகித்து நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள், பரவாயில்லை, என் காதலை விட உங்கள் காதல் உயர்வு தான், நான் குழம்பி இருந்த போது கூட இவள் எனக்கானவள் என்று தெளிவோடும், என்மீது இருந்த காதலுக்கு எனக்கே தெரியாவிட்டாலும் துரோகம் செய்யாமலும் தான் இருந்துள்ளீர்கள்.

 

நான் உங்களை நம்புகிறேன் என்று இப்போது சொன்னாலும் அது உங்களுக்கு போலியாக தோன்ற வாய்ப்புள்ளது, அதனால் உங்களுக்கு எப்போது என்மீது உள்ள கோபம் குறைகிறதோ, எப்போது என் தவறுக்காக உங்களுக்கு என்னை மன்னிக்க தோன்றுகிறதோ, எப்போது நான் உங்கள் மீது வைத்திருக்கும் காதலும் உண்மை தான் என்று புரிகிறதோ அன்று உங்கள் அணைப்பிற்காக காத்திருப்பேன், அது வரை நான் emotionally mature ஆக நீங்கள் எனக்கு கொடுத்த கால அவகாசமாக இந்த இடைவெளி நேரத்தை நான் எடுத்து கொள்கிறேன்என்று சொல்லி முடித்தாள் சத்யா.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018