Sms ch 49 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 49 நந்தனுக்கு விழிப்பு வந்தது . கட்டிலில் எழுந்து உட்கார்ந்து லைட்டை on செய்தான் . அவனது இடது கை பக்கம் திரும்பி பார்த்தான் . தீபிகா அவன் அருகில் அவன் போர்வைக்குள் படுத்துக்கொண்டு அவனை பார்த்து புன்னகைத்தாள் . “ நினைத்தேன் , நீயாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் , இப்படி எல்லாம் செய்தால் நான் உன்னை ஏற்றுக்கொள்வேன் என்று நினைத்தாயா தீபிகா ?” என்றான் நந்தன் . தீபிகா ஆடைகள் எதுவும் போட்டிருக்கவில்லையா ? இல்லை உள்ளாடைகள் மட்டும் போட்டிருக்கிறாளா ? என்று தெரியவில்லை . தன் கைகளை போர்வையில் இருந்து வெளியே எடுத்து தலைமேல் வைத்து ஒய்யாரமாக படுத்தாள் . “ நீங்கள் நானாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து இருப்பீர்கள் , ஆனால் நீங்கள் நினைக்காத ஒன்று நடக்க போகிறது நந்தன் , உங்கள் மறுபக்கத்தை நீங்கள் காட்டுவதற்குள் என் மறுபக்கத்தை நீங்கள் பார்க்க போகிறீர்கள் ” என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள் . நந்தன் அவளை தீவிரமாக பார்த்தான் . அப்போது நந்தனின் படுக்கை அறை கதவு திறக்கப...