Sms ch 70 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 70

 

அமைந்தகரை வீட்டில் சேட்டைகள் முடிந்து இருவரும் அசந்து தூங்கிவிட்டு மாலை 4 மணிக்கு தான் எழுந்தனர் நந்தனும் சத்யாவும். “என்ன படம் பார்க்க போகலாம்?” என்று நந்தன் கேட்கஇதுக்கு மேல படமா?” என்றாள் சத்யா அலுப்பாக.

 

ஏன் போக கூடாதா?” என்றான் நந்தன் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்து.

 

சத்யா தயங்க நந்தனே பேசினான்வா டா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும், ஏதாவது காமெடி movie மாதிரி பாத்துட்டு வீட்டுக்கு போகலாம் என்றான்.

 

சரி இருங்க குளிச்சுட்டு வரேன் என்று சொல்லநானும் வரவா?” என்றான் நந்தன் கிண்டலாக.

 

ஒன்னும் வேண்டாம், வேணும்னா நான் குளிச்சுட்டு வந்த பிறகு நீங்க போய் குளிங்க என்று சொல்லி சத்யா ஏதோ சேலையை பீரோவில் தேடஇதை கட்டிக்கொள், அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்தியே, நான் கூட உன்னை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தேனே, அன்னைக்கு இந்த சேலை தானே கட்டி இருந்தாய், இது நல்லா இருக்கும், சிம்பிளா, breezya” என்று நந்தன் சொல்ல சத்யாவும் சரி என்று புன்னகையுடன் தலை அசைத்து குளிக்க சென்றாள்.

 

அவள் குளித்து வந்ததும்நான் குளிச்சுட்டு இதையே தான் போட்டுக்கணுமா?” என்று அலுத்துக்கொண்டவன்சரி பரவால்ல என்று தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டு குளிக்க சென்றான்.

 

சத்யா தன் சேலைகள் சிலவற்றையும், தருணின் dress கொஞ்சம், அவளுடைய புத்தகங்கள் சில என்று முக்கியமான சிலவற்றை எடுத்து வைத்துக்கொண்டாள்.

 

நந்தனும் குளித்துவிட்டு வர இருவரும் புறப்பட்டனர். போகும் வழியில் ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி இருவரும் சாப்பிட்டுவிட்டு சென்றனர்.

 

படம் முடிந்து வந்து இருவரும் refresh ஆகி இலகுவான இரவு உடைகளுக்கு மாறி ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இளைப்பாற மூச்சு விட நந்தன் சொன்னான்.

 

நாளைக்கு காலைல பண்ணை வீட்டிற்கு போகலாமா? என்று கேட்டான் நந்தன்.

 

ம்ம்ம் போகலாம், தருணை பார்க்க வேண்டும் போல் உள்ளது

 

ஆமாம் எனக்கும் தான், அவனுடன் நேரம் செலவழித்து நெறைய நாட்கள் ஆகி விட்டன, படம் பிடிச்சுதா?”

 

ம்ம்ம் பரவால்ல

 

Night ஏன் டின்னர் வேண்டான்னு சொல்லிட்ட?”

 

பசிக்கல, evening தான சாப்பிட்டோம், நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்?”

 

அதே காரணம் தான்

 

சத்யா அமைதியாக நந்தனின் நெஞ்சில் படுத்திருக்கஹேய் என்னாச்சு? Evening இருந்து நான் கேக்கறதுக்கு மட்டும் தான் பதில் சொல்ற, நீயாக எதுவும் பேச மாட்டேன் என்கிறாயே, நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?” என்று அவள் விரல்களை நீவியபடி கேட்டான்.

 

அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

 

ஹேய் செல்லக் குட்டி, உன்னை தான் கேட்கிறேன்

 

சத்யாவிடம் no response.

 

ஆஹா கண்டிப்பா என்மேல தான் ஏதோ கோபம், என்னாச்சு டா?” என்று கவலையாக கேட்டவன் சிறு யோசனைக்கு பின்ஒருவேளை அமைந்தகரையில் கொஞ்சம் அதிகமாகவே முரட்டு தனமாக நடந்து விட்டேனோ, அதான் கோபமா?” என்று அவளை உட்கார வைத்து கேட்க அவள் லேசான புன்னகையுடன்அது பரவால்ல என்றாள்.

 

அப்புறம் ஏன் சரியாக பேச மாட்டேன் என்கிறாய்?”

 

சத்யா அவனை அமைதியாக பார்த்துவிட்டுநான் கேட்டா கோபித்து கொள்ள கூடாது என்றாள்.

 

ப்ச் இதென்ன கேள்வி, கோபித்து கொள்வேன் என்பதற்காக நீ பேச நினைக்கும் விஷயத்தை பேசாமல் இருக்காதே, கணவன் மனைவிக்குள் பேச வேண்டிய விஷயங்களை பேசி விட வேண்டும், ஒருவேளை கோபித்து கொண்டாலும் எத்தனை நாள் பேசாமல் இருக்க போகிறார் என்று எண்ணி தைரியமாக மனதில் நினைத்ததை பேசி விட வேண்டும்

 

ஹ்ம்ம் கோச்சிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேங்குறீங்களே

 

நீ என்னன்னு சொன்னா தான தெரியும், but mostly கோச்சிக்க மாட்டேன், சொல்லு

 

இங்கே தான் prepared ஆக இருந்தீர்கள் என்று பார்த்தால் அமைந்தகரையில் கூட prepared ஆக இருந்தீர்களே, அது தான் கொஞ்சம் உறுத்துகிறது

 

என்ன prepared ஆக இருந்தேன்?” என்று கேட்ட நந்தன் ஒரு சிறு யோசனைக்கு பின்ஓஹ் protection mean பண்றியா? ஆமாம் அதில் என்ன தவறு இருக்கிறது? அமைந்தகரையில் நாம் இருவரும் அப்படி ஒன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் உன்னை அழைத்து சென்றதே, so prepared எடுத்துட்டு வந்திருந்தேன், அதில் என்ன தவறு?” என்று கேட்டு அவளை பார்த்தான்.

 

இல்லை தவறு என்று ஒன்றுமில்லை, உங்களுக்கு பாப்பா வேண்டாமா?” என்றாள் தயங்கிய படியே.

 

கண்டிப்பா வேணும், ஆனா நீ IAS பாஸ் பண்ணின பிறகு

 

அப்படின்னா தருண் உங்கள் மகன் இல்லையா?”

 

ஹேய் என்னடா இது? மாற்றி மாற்றி கேள்வி கேட்கிறாயே, இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி, இதுபோல் பலவிதமாக கேள்விகள் கேட்டு ஒரு விஷயத்தை உறுதி படுத்தி கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான், சரி சொல்றேன் கேட்டுக்கோ, தருண் என் மகன் தான், என் முதல் மகன், ஆனால் அதற்காக இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள கூடாதா என்ன? See தருண் உண்மையாகவே எனக்கு பிறந்திருந்தால் கூட இரண்டாவதாக ஒரு குழந்தை வேண்டும் என்று நான் ஆசைப் பட மாட்டேனா? அது போல தான்

 

சத்யா இன்னும் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டுசரி உன் பிரச்சனை தான் என்ன? இப்போது குழந்தை வேண்டாம் என்று நான் நினைப்பதா? இல்லை நீ IAS முடித்த பிறகு இன்னொரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவதா?” என்று கேட்க சத்யா கீழே குனிந்து அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டுஎதுவா இருந்தாலும் பேசு டா என்றான் பொறுமை இழந்தவனாக.

 

இல்லை இன்னொரு குழந்தை வந்த பிறகு தருணிடம் பாரபட்சம் பார்ப்பீர்களா?” என்று தயங்கியபடி கேட்டாள்.

 

ஆமாம் பார்ப்பேன், நெறைய பாரபட்சம் பார்ப்பேன், அப்படி பட்டவன் தான் நான், போதுமா? ஏன் டி நீ இப்படி இருக்க?” என்று கோபமாக கேட்டுவிட்டு அவளை விட்டு தள்ளி கட்டிலின் மறுமுனையில் திரும்பி படுத்து கொண்டான்.

 

சத்யாஇப்போது நான் என்ன தவறாக கேட்டுவிட்டேன்?” என்று அவன் கைகளின் மேல் கைவைத்து அவனை குலுக்கி கேட்டாள்.

 

நந்தன் ஒரு நொடி திரும்பிஎன்ன தவறு என்று நீயே யோசித்து பார், good night” என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தான்.

 

சத்யா மனதிற்குள் நினைத்து கொண்டாள். “குழந்தையுடன் இருக்கும் பெண்கள் மறுமணம் செய்தால் வரும் நியாயமான சந்தேகம் தானே எனக்கும் வந்தது, அதில் என்ன தவறு இருக்கிறது, அதற்கு எதற்கு இப்படி கோபித்து கொள்ள வேண்டும்? தருணை நல்லா தான் பார்த்துக்கொள்வார், ஆனால் கொஞ்சம் reassurance கொடுத்தால் குறைந்தா போய் விடுவார்?” என்று வருந்தினாள்.

 

மறுநாள் காலை எழுந்து இருவரும் குளித்துவிட்டு டிபன் சாப்பிட்டுவிட்டு பண்ணை வீட்டிற்கு புறப்பட்டனர். சத்யாவின் good morning, coffee எதற்குமே நந்தனிடம் இருந்து எந்த response உம் வரவில்லை. அதன்பிறகு சத்யாவும் அதிகமாக பேசவில்லை.

 

பண்ணை வீட்டிற்கு சென்றதும் எல்லோரும் சத்யாவையும் நந்தனையும் அன்புடன் வரவேற்றனர்.

 

சத்யாவை அழைத்து கொண்டு பண்ணை வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி காட்ட சொல்லி கமலா அம்மா சொல்ல நந்தன் மறுத்துவிட்டான்.

 

இல்லம்மா, நான் கம்பெனிக்கு செல்ல வேண்டும், இவளை இங்கே விட்டுவிட்டு போகலாம் என்று தான் வந்தேன், நீங்களே சுற்றி காண்பியுங்கள், நான் வருகிறேன் என்று சொல்லி புறப்படசாயிங்காலம் வந்துடுவ தானே நந்து?” என்ற கமலா அம்மாவின் கேள்வியை காதில் கூட வாங்காமல் நந்தன் காரில் ஏறி பறந்தே விட்டான்.

 

சத்யாவிற்கு முகம் வாடியது.

 

பிறகு தருணுடன் நேரம் செலவழிப்பதிலும், வள்ளி, முருகன் பாட்டி, சின்னு என்று அவர்களுடன், அவர்களுக்காக நந்தன் சொல்லி இருந்த பண்ணை வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த ஓட்டு வீட்டில் நேரம் செலவழிப்பதிலும் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு. அவ்வப்போது நந்தனின் நினைவு வந்து வாட்டினாலும் சாயங்காலம் வருவார் தானே, அப்போது பேசிக்கொள்ளலாம் என்று தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாள்.

 

கமலா அம்மாவிடம் சென்று reception வைக்கலாம் என்றும் தன் சம்மதத்தை தெரிவித்தாள். எல்லோரும் மகிழ்ச்சியாக அதற்கான திட்டமிடலில் இறங்கினர்.

 

மாலை நந்தன் வந்ததும் தருணுடனும், சின்னுவுடனும் விளையாட ஆரம்பித்து விட்டான். முருகனும் அங்கே அவர்களுடன் விளையாடி கொண்டிருக்கஎன்ன முருகன், வயல் வெளியை எல்லாம் சுற்றி பார்த்தீர்களா? உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?” என்று கேட்க முருகனும்பிடிச்சிருக்கு சார், சீக்கிரமே வேலையை ஆரம்பித்து விடுவேன் என்றான்.

 

சின்னுவை பக்கத்தில் இருக்கும் நல்லா ஸ்கூலில் சேர்த்து விடுங்கள்

 

கண்டிப்பா சார்

 

வள்ளி மீண்டும் வேலைக்கு வருவார்களா?”

 

நான் வேண்டாம் என்று சொன்னேன், அவள் யோசித்து முடிவெடுப்பதாக சொன்னாள்

 

Ok ஒன்றும் அவசரமில்லை, அவர்கள் யோசித்தே சொல்லட்டும்

 

சத்யாவும் வள்ளியும் நந்தனுக்கும் முருகனுக்கும் tea எடுத்து வந்து கொடுக்க, குழந்தைகளுக்கும் பாலும் snacks ம் எடுத்து வந்து கொடுத்தார்கள். நந்தன் சத்யா கொடுத்த டீயை வாங்கி கொண்டு அவள் புன்னகையை பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

 

பண்ணை வீட்டின் மாடியில் அறைகள் இருந்தாலும் பொதுவாக எல்லோரும் மொட்டை மாடியில் ஒன்றாக கதை அடித்துக்கொண்டே உறங்குவது தான் வழக்கம், மழை குளிர் என்றால் பண்ணை வீட்டின் பெரிய ஹாலில் உறங்குவது வழக்கம்.

 

இரவு எல்லோரும் மொட்டை மாடிக்கு செல்ல தாத்தாவும் கண்ணப்பனும் மட்டும் கீழே ஒரு அறையில் தங்கி கொண்டனர்.

 

சத்யா இதை எதிர்பார்க்கவில்லை. எப்படியும் நந்தனும், தானும் ஒரு அறையில் தனியாக இருக்கும் சூழ்நிலை உருவாகும், அவனிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தாள்.

 

ஆண்கள் எல்லோரும் ஒரு வரிசையிலும், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்னொரு வரிசையிலும் படுத்திருக்க சத்யாவிற்கு ஏனோ தவிப்பாக இருந்தது. கடந்த மூன்று நாட்கள் நந்தனின் கைகளுக்குள்ளும், அணைப்பிலும் தூங்கி பழகியவளுக்கு இன்று அவன் அருகாமையில் இல்லாதிருப்பது, அதுவும் கோபமாக இருப்பது மனதை வாட்டியது.

 

அவனை அவள் பார்க்க முயற்சிக்கும் நேரங்களில் எல்லாம் அவனின் புன்னகை இல்லாத முக தரிசனம் தான் கிடைத்தது. கடுகடு என்று கோபமாக இருந்தான் என்று சொல்ல முடியாது, ஆனால் எப்போதும் இருக்கும் புன்னகையும் கனிவும் அன்பும் இல்லை.

 

தான் reception க்கு சம்மதித்த விஷயத்தை கமலா அம்மா சொல்லும் போது கூட அவன் பெரிதாக சந்தோஷப்படவில்லை, அத்தையின் விருப்பத்தை, அவரின் விருப்பத்தை நிறைவேற்ற இப்படி ஒரு முடிவு எடுத்து உள்ளேன், அதற்கான அங்கீகாரம் கூட அவன் பார்வையில் இல்லை. தூங்க முடியாமல் இப்படியும் அப்படியும் புரண்டு புரண்டு படுத்தாள்.

 

தருண் கூட தன்னிடம் ஒட்டுவதை விட அவரிடம் தான் ஒட்டிக்கொண்டான் அவரை மாலை பார்த்தவுடன். இப்போதும் அவர் நெஞ்சில் தான் போய் படுத்துக்கொண்டான். எல்லோரும் நன்றாக தான் தூங்குகிறார்கள். நான் மட்டும் தான் தவித்து கொண்டிருக்கிறேன் என்று எல்லோரையும் எழுந்து உட்கார்ந்து பார்த்தவள் மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

 

மறுநாளும் நந்தன் சீக்கிரமாகவே கம்பெனிக்கு புறப்பட அவன் காரில் ஏறும் நேரம் அவனிடம் சென்று யாரும் பார்க்காத வண்ணம் கேட்காத வண்ணம் போய் சண்டைக்கு இழுத்தாள்.

 

இப்போ நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்று இப்படி ஒரே அடியாக முறைத்து கொள்கிறீர்கள்? எனக்கு அப்பப்போ இப்படி reassurance தேவை படும், அது என் குணம் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை, அதற்காக என்னை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன், சிரிக்க மாட்டேன் என்று ஓவராக தான் செய்கிறீர்கள், கடைசியாக கேட்கிறேன், என்னோடு பேசுவீர்களா? மாட்டீர்களா? நானும் ஓரளவுக்கு தான் இறங்கி போவேன், நீங்க too much ஆக பண்ணினால் அப்புறம் நான் முறுக்கி கொள்வேன், நீங்கள் எவ்வளவு கெஞ்சினாலும் பேச மாட்டேன், அந்த அவமானம் உங்களுக்கு தேவையா? இப்போதே பேசி விடுங்கள் என்று கொட்டி முடித்தவள் அவனை பார்த்து நிற்க காரின் டிரைவர் சீட்டில் உட்கார கதவை திறந்துவிட்டு உட்காராமல் நின்று சத்யா சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டுபேசி முடிச்சிட்டியா? வேற ஏதாவது இருக்கா? இப்போ நான் கிளம்பலாமா?” என்று பணிவாக கேட்க சத்யாவிற்கு மூக்கு விம்மி புடைத்தது.

 

நந்தன் காரில் உட்கார சத்யா முகத்தை கோபமாக திருப்பி கொண்டு நடக்க நந்தன் அவள் நடப்பதை கார் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருந்தவன் அவள் வீட்டிற்குள் சென்றதும் லேசாக புன்னகையுடன் தலையை மறுப்பாய் அசைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.

 

அன்று முழுவதும் சத்யாவிற்கு கோபமும் வைராக்கியமும் அதிகமாகியது. “அவ்வளவு தான் உனக்கு, கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுத்தும் என்னை மதிக்காமல், என்னிடம் சமாதானம் ஆகாமல் காரில் ஏறி கிளம்பிவிட்டாய், இனிமேல் நீயாக வந்து கெஞ்சினாலும் நான் பேசமாட்டேன், பாத்துட்டே இரு என்று நந்தனிடம் பேசுவது போல் தனக்கு தானே பேசிக்கொண்டாள்.

 

இவருக்கு மட்டும் தான் கம்பெனி அது இது என்று வேலையாக்கும், நானும் தான் IAS க்கு படிக்க வேண்டும், போனால் போகிறதே என்று ஒரு இரண்டு நாட்கள் உனக்காக ஒதுக்கினேன், அதுவே அதிகம் தான் என்று புரிந்துவிட்டது, இனி உனக்காக என் நேரத்தை வீணாக்க மாட்டேன், நல்லவேளை கொஞ்சம் படிக்க materials எடுத்து வந்தேன், படிக்க வேண்டும் என்று முடிவு செய்தவள்அத்தை மாடியில் எங்களுக்காக ஒரு அறை கொடுத்து இருக்கிறீர்களே, நான் அங்கே சென்று படிக்க போகிறேன், எனக்கு கீழே ஒன்றும் வேலை இல்லை தானே?” என்று கேட்கஒரு வேலையும் இல்லைமா, நீ போய் படி என்று சொல்ல சத்யா போய் படிக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு நந்தனை பற்றி அவள் அதிகமாக யோசிக்கவில்லை. மதியம் சாப்பிட மட்டும் கீழே வந்தாள். மீண்டும் சென்று படிக்க ஆரம்பித்தாள்.

 

எல்லோரும் மதியம் மோட்டாரில் குளிக்க போவதாகவும், அப்படியே ஒரு சிலர் தோட்டத்தை சுற்றி பார்க்க போவதாகவும் சொல்லி சத்யாவையும் அழைக்க அவள் மறுத்து விட்டாள்.

 

பிற்பகல் மணி 3 இருக்கும். யாரோ அறையின் கதவை மெதுவாக திறக்க யாராக இருக்கும்? எல்லோரும் தான் தோட்டத்தை சுற்றி பார்க்க போவதாக சொன்னார்களே, இந்த பழைய வீட்டில், தெரியாத இடத்தில் தனியாக இருந்து மாட்டிக்கொண்டோமோ? என்று பயந்த சத்யா ஒரு அலமாரியின் பின்னாடி சென்று ஒளிந்து கொண்டு நின்றாள்.

 

காலடி சத்தம் அதிகமானது. ஒரு நிழலும் அலமாரியை கடந்து வருவது போல் தோன்ற சத்யா பயந்து போய் தண்ணீரை எடுத்து அலமாரிக்கு பின்னாலிருந்த படியே அந்த நிழலுக்கு சொந்தக்காரன் மேல் ஊற்றி விட்டு இப்போது தப்பித்தால் தான் உண்டு என்று அங்கிருந்து வெளியே வந்து ஓட முயல நந்தன் அவள் இடையில் தன் இடது கையை நீட்டி தடுக்க தன் வலது கையால் தன் முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்து கொண்டே அவளை பார்த்தான். அப்போது தான் நந்தனை பார்த்தாள் சத்யா.

 

ச்ச நீங்களா? இப்படியா வந்து பயமுறுத்துவீர்கள்? வீட்டில் வேறு யாருமே இல்லை, நான் யாரோ திருடன் தான் வந்துவிட்டான் என்று பயந்து விட்டேன் என்று அவள் பேசிக்கொண்டே இருக்க நந்தன் அவளை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

 

எதுக்கு இப்போது அப்படி முறைக்கிறீர்கள்? நீங்கள் தனிமையில் இருக்கும் போது இப்படி யாராவது வந்தால் நீங்களும் இப்படி தான் செய்து இருப்பீர்கள்

 

நந்தன் இன்னும் அவளை முறைத்து கொண்டு தான் நின்றான்.

 

சத்யாமுறைக்கறதுன்னா முறைச்சிக்கோங்க, எனக்கொன்னும் பயமில்லை என்று திரும்பி சென்று கட்டிலில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

 

நந்தன் சத்யாவை முறைத்துக்கொண்டே ஒரு டவல் வைத்து முகத்தை துடைத்துவிட்டு சட்டையை கழற்ற சத்யா புத்தகத்தை மூடி வைத்துவிட்டுஇங்க பாருங்க, நான் படிக்கணும், என்கிட்ட வராதீங்க என்று சொல்லிகொண்டிருக்க நந்தன்அப்படியே கனவு கண்டு கொண்டிரு, சட்டை நனைந்து விட்டதே என்று மாற்ற போகிறேன் என்று சொல்லி வேறு சட்டையை அணிந்தான். சத்யாவிற்கு தன்மீதே கோபமாக வந்தது. “இந்த அவமானம் உனக்கு தேவையா சத்யா?” என்று தன்னை தானே மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.

 

நந்தன் சட்டையை மாற்றிக்கொண்டுஎல்லாரும் எங்க போயிருக்காங்க?” என்று கேட்கஏதோ மோட்டாரில் குளிக்க போவதாக சொன்னார்கள் என்று சொல்ல நந்தன் புறப்பட்டான்.

 

அவன் கீழே சென்றதும் சத்யாவிற்கு மீண்டும் பயமாக இருந்தது. “நாமளும் அவனோடயே போயிருக்கணுமோ?” என்று நினைத்தவள் வேக வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தாள்.

 

அவள் ஓடி வரும் சத்தம் கேட்டு திரும்பியவன்என்ன?” என்று கேட்கநானும் வரேன் என்றாள்.

 

தனியாக இருக்க பயப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்ட நந்தன் எதுவும் பேசாமல்வா என்று கையால் சைகை காட்டி முன்னாடி நடக்க சத்யா அவனை தொடர்ந்தாள்.

 

இளவட்டங்கள் எல்லாம் மோட்டாரில் குளிக்க பெரியவர்கள் அங்கும் இங்குமாக வயலையும் தோட்டத்தையும் சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நந்தனும் குளிக்க செல்ல சத்யாவையும் ஸ்ரீதிகா அழைத்தாள். சத்யாவும் சரி என்று தண்ணீரில் இறங்கினாள். நந்தன் அவளை முறைப்பதில் மட்டும் ஏதும் குறையில்லை. சிறிது நேரத்தில் கிரிஷ்ம் ஸ்ரீதிகாவும் புறப்பட அவர்களை தொடர்ந்து ரோஹித்தும் ஸ்ரீஜாவை அழைத்து கொண்டு வெளியேறினான்.

 

ஏன் ஒவ்வொருத்தரா போறீங்க?” என்ற சத்யாவின் கேள்வியை அங்கே யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. அவள் நந்தனை திரும்பி பார்க்க நந்தன் அவளையே முறைத்துக்கொண்டே இருந்தான். சத்யா நினைத்து கொண்டாள். “நான் காலைல பேசுறதுக்கு முன்னாடி வரை கூட இவ்வளவு முறைக்கல, நான் வாய தொறந்தாலே சனி தான் போல, அதுக்கப்புறம் என்னிடம் கனிவாக பேசுவார் என்று பார்த்தால் முறையோ முறை என்று முறைக்கிறார் என்று மனதிற்குள் நினைத்தபடியேஎல்லாரும் எப்போ திரும்பி வருவாங்க?” என்பது போல் தோட்டத்தை சுற்றி சுற்றி பார்த்தாள்.

 

15 நிமிடங்கள் கழித்து தான் சத்யாவிற்கு அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை என்று புரிந்தது. நாமளும் கிளம்பிடலாம் என்று நினைத்தவள் நந்தனை திமிராக ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த தொட்டியில் இருந்து வெளியேறி நடக்க ஆரம்பித்தாள். ஆள் அரவம் சத்தம் எதுவும் இல்லாமல் காற்றில் அசையும் மரங்களின் ஒலியும் சருகுகளின் சத்தமும் மட்டும் கேட்க சத்யா தனியாக நடக்க பயந்தாள். எப்படி வீட்டிற்கு செல்வது என்று வந்த வழியையும் மறந்துவிட்டு திகைத்தாள். திரும்பி பார்க்க தொலைவில் நந்தன் அந்த மோட்டார் தொட்டியில் இரண்டு கைகளையும் இரு புறமும் நீட்டி கண்களை மூடி ரிலாக்ஸாக இருப்பது தெரிந்தது.

 

வேறு வழி இல்லை, அவரோடு தான் செல்ல வேண்டும் என்று நினைத்தவள் மீண்டும் திரும்பி வர நந்தன் கண்களை விழித்து அவளை பார்த்தான்.

 

என்ன சொல்வதென்று புரியாமல் சத்யா எதுவும் சொல்லாமல் தொட்டிக்கு வெளியே நனைந்த சேலையுடன் காத்திருந்தாள். அடுத்து 15 நிமிடங்கள் ஆகி இருக்கும், நந்தன் வெளியே வருவதாகவும் தெரியவில்லை, தன்னிடம் பேசுவான் என்றும் தோன்றவில்லை. கௌரவம் பார்க்காமல் நாமே பேசிட வேண்டியது தான் என்றுஇன்னும் எவ்வளவு நேரம் தான் குளிப்பீர்கள், வாங்க போகலாம் என்றாள்.

 

நந்தன் அவளை முறைத்துவிட்டு பதில் ஏதும் சொல்லாமல் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். “இப்போ வரப்போறீங்களா இல்லையா?” என்று குளிரில் நடுங்கி கொண்டே அழாத குறையாக கேட்டாள்.

 

வேணும்னா நீ போக வேண்டியது தானே, ஏன் என்னை வர சொல்கிறாய்?” என்றான் நந்தன் கோபமாக.

 

எனக்கு வழி மறந்து விட்டது என்றாள் தலையை குனிந்தபடி.

 

நந்தன் எழுந்து வந்தான். வெளியே ஒரு பையில் தான் கொண்டு வந்த மாற்று உடையை மாற்றிக்கொண்டுஉன்னோட dress எங்கே?” என்று கேட்கநான் எடுத்துட்டு வரல, குளிக்கறதா first ஐடியா இல்ல என்றாள் மறுபுறம் திரும்பி நின்று.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018