Sms ch 52 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

த்தியாயம் 52

கமலா அம்மா, சகுந்தலா, சத்தியமூர்த்தி, தாத்தா, நந்தன் என்று அனைவரும் பட்டு புடவை, நகைகளை எடுத்து கொண்டு outhouse நோக்கி செல்ல நந்தன் முகத்தில் ஒரு கலக்கம் இருப்பதை பார்த்து கமலா அம்மா யாரும் அறியாமல் மெதுவாக கேட்டார்கள். “என்னப்பா திடீர்னு முகத்துல ஒரு கலக்கம்?” நந்தன் அவர்களை பார்த்துவிட்டு அமைதியாக வரஎதுவா இருந்தாலும் சொல்லுப்பாஎன்று மேலும் கேட்க நந்தன் சொன்னான்இல்லம்மா சத்யா என்மேல இருக்க கோவத்துல உங்க யார்கிட்டயாவது ஏதாவது மரியாதை குறைவாக பேசிவிடுவாளோ என்று பயமாக உள்ளதுஎன்று சொன்னான்.

 

பேசினால் பேசட்டும், அவளுக்கும் கோபம் அதிர்ச்சி எல்லாம் இருக்க தானே செய்யும்

 

இருக்கும் ஆனால் அதற்காக அவள் என்னிடம் கோபப்பட்டால் பரவாயில்லை, உங்கள் யாரிடமாவது கோபப்பட்டால் அதை என்னால் தாங்கி கொள்ள முடியாது

 

இங்க பாரு, கோபப்பட்டால் படட்டும், எங்கள் மருமகள் தானே, உன் மனம் கவர்ந்தவள் தானே, அதற்காகவே நாங்கள் பொறுத்து கொள்வோம், எத்தனை நாட்கள் கோபமாக இருப்பாள்? உன்னை அவளுக்கும் பிடிக்கும் தானே, அப்படி என்றால் எங்களையும் அவளுக்கு ஒருநாள் பிடிக்கும், அது வரை நாங்கள் விட்டு கொடுத்து செல்கிறோம், இதற்காக நீ ஏன் சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணத்தில் இப்படி கலங்குகிறாய், எங்களை பற்றி கவலைப்படாதே, அவளை எப்படி சமாதானம் செய்து சந்தோஷமாக வாழ்வது என்று யோசி

 

நந்தன் அதன் பிறகு கொஞ்சம் தெளிவானான். எப்போது அவன் கலக்கமாக இருந்தாலும் கமலா அம்மாவின் வார்த்தைகள் அவனை தெளிவாக்கி விடும், இந்த வீட்டிற்கு சிறுவனாக தாய் தந்தையை இழந்து வந்த நாளில் இருந்தே அப்படி தான். இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்கிறான் என்றால் அதன் முக்கிய காரணமும் கமலா அம்மாவின் அன்பும், வழிகாட்டுதலும் என்று அவன் நம்பினான். இன்று தனக்கு என்று ஒருத்தி வந்துவிட்டாள். அவள் தன் தாயை மதிக்க வேண்டுமே என்று இயற்கையாகவே அவனுக்குள் ஒரு ஏக்கமும் கவலையும் தொற்றி கொண்டது.

 

Outhouse சென்றதும் சத்யா அவர்களை பார்த்து எழுந்து நின்றாள்.

 

நந்தன் சத்யாவிடம் அனைவரையும் அறிமுகப்படுத்தினான். “இவங்க என்னோட அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, தாத்தா, ரோஹித்.....” என்று அனைவரையும் அறிமுகப்படுத்தினான். சத்யா எல்லோரையும் பார்த்ததோடு சரி, யாரிடமும் எதுவும் பேசவில்லை. கமலா அம்மா முன்னே வந்துநந்தன் அவசரப்பட்டு தாலி கட்டிட்டானேன்னு உனக்கு கோபமும் குழப்பமும் இருக்கும், நான் கூட அவனை கேட்டேன், ஏன் இவ்வளவு அவசரம்? நிதானமா சிறப்பா பண்ணிருக்கலாமேன்னு ஆனா உனக்கு வெளில ஏதோ ஆபத்தான சூழ்நிலை இருக்காமே, அதோட இல்லாம அவன் உன்னை விரும்புவது தெரியாமல் நாங்கள் வேறு தவறாக புரிந்து கொண்டு தீபிகாவுடன் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டோம், ஆனால் அவன் சொல்லத்தான் செய்தான், நான் சத்யா என்ற பெண்ணை விரும்புகிறேன், அவளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று, நாங்கள் தான் ஏதோ குழப்பத்தில் காதில் போட்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம், தவறு எங்கள் மீது தான், அதனால் நீ எதையும் நினைத்து மனதை போட்டு குழப்பி கொள்ளாமல் நந்தனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும்என்று சொல்ல சத்யா அவர்களை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டாள்.

 

கமலா அம்மா புன்னகையுடன்இந்த சேலையை கட்டிக்கொண்டு இந்த நகைகளை போட்டுக்கோமா, நம்ம வீட்டுக்கு போகலாம், நாங்க வெளில காத்திருக்கோம்என்று சேலை, நகைகளை கொடுக்க சத்யா அதை வாங்கி கொள்ளாமல் கூட்டத்தில் யாரையோ தேடினாள். கமலா அம்மா, நந்தன் அனைவரும் குழப்பமாய் பார்க்கஏன்டா மா, ஏதாவது கோபமா? அத்தை கொடுத்ததை வாங்கி கொள்ளமாட்டாயா?” என்று கேட்க அவள் மீண்டும் யாரையோ தேடினாள்.

 

என்ன சத்யா? யாரை தேடுகிறாய்?” என்று நந்தன் கேட்க சிறு அமைதிக்கு பின் தருண்...” என்று சொன்னாள்.

 

இதோ நம் தோட்டத்தில் தான் சின்னுவுடன் விளையாடி கொண்டிருக்கிறான், கண்ணப்பன் பார்த்து கொள்கிறார், நீ பயப்படாதேஎன்றான் நந்தன்.

 

இல்லை நான் அவன்கிட்ட கொஞ்சம் பேசணும்

 

நான் போய் கூட்டிட்டு வரேன்என்று வள்ளி சொல்லி புறப்பட எல்லோரும் குழப்பமாய் அமைதியாக காத்திருந்தார்கள்.

 

தருண் வந்ததும் சத்யா அவனிடம் முட்டி போட்டு கேட்டாள். “தருண்....” என்று ஏதோ சொல்ல வாயெடுத்து தயங்கி நந்தனையும் கமலா அம்மாவையும் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டாள். “தருண்....” என்று மீண்டும் வார்த்தை வராமல் தயங்கி நின்றாள்.

 

சொல்லும்மாஎன்றான் தருண்.

 

மீண்டும் எச்சியை விழுங்கி விட்டு சத்யா கேட்டாள். “நந்தன்.... நந்தன் அங்கிள் அம்மா கழுத்துல தாலி கட்டிட்டாரில்ல, நாம எல்லாம் ஒன்னா இருந்தா உனக்கு பிடிக்குமா? நந்தன்... நந்தன் அங்கிளை இனிமேல் உன் உன்...” என்று தயங்கி நிறுத்த தருண் கேட்டான்நந்தன் அங்கிள்னு சொல்லாதம்மா, இனிமேல் அங்கிள் எனக்கு அப்பா, காலைல நீ வரறதுக்கு முன்னாடியே அங்கிள் என்னை அவர் ரூம் சுத்தி காமிக்க கூட்டிட்டு போனாரா? அப்பவே என்கிட்ட கேட்டாரு, அம்மா, நான், நீ எல்லாம் ஒன்னா இருக்கலாமா? என்னை உன் டாடி மாதிரி நினைச்சுப்பியானு? உனக்கே தெரியும் தான? எத்தனை நாள் அங்கிளை நம்ம கூடவே இருக்க சொல்லி இருக்கேன், எல்லாரும் ஒன்னா இருந்தா எனக்கு பிடிக்குமே, அங்கிள் நம்ம அப்பா மாதிரியே heighta ஹீரோ மாதிரி இருக்காருல்ல, அதான் நான் அவர டாடியா மாத்திட்டேன்என்று சொல்ல சத்யாவிற்கு ஏதோ பெரிய பாரம் தன் தோள்களை விட்டு இறங்கியது போல் இருந்தது. கண்களில் கண்ணீருடன் தருணை முத்தமிட்டு அணைத்தவள் நந்தனை நிமிர்ந்து பார்த்தாள். நந்தன் புன்னகையுடன் நின்றிருந்தான். சத்யா ஒரு பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு தருணை விடுவித்து எழுந்து நின்றாள். கையில் தாம்பாள தட்டில் சேலை, நகை என்று நின்றிருந்த கமலா அம்மாவை பார்த்தாள். அவர்கள் காலில் ஆசீர்வாதம் வாங்க கீழே குனிந்தாள். அதை எதிர்பாராத அனைவரின் முகத்திலும் புன்னகை மலர கமலா அம்மா கண்களில் கண்ணீர் தேங்கியது. சமாளித்து கொண்டுடேய் நீயும் வாஎன்று நந்தனை அழைத்துவிட்டுஎன்னங்க நீங்களும் வாங்கஎன்று கணவனை அழைத்துகுழந்தைகளை ஆசீர்வாதம் பண்ணுவோம்என்றார்கள்.

 

அம்மாடி, அந்த திருநீர் தட்டையும் குங்குமத்தையும் எடுத்து வாஎன்று சத்தியமூர்த்தி யாரையோ பணிக்க ரோஹித் மனைவி ஸ்ரீஜா திருநீர் தட்டையும் குங்குமத்தையும் எடுத்து வந்தாள். நந்தனும் சத்யாவும் ஆசீர்வாதம் வாங்க கமலா அம்மாவும் சத்தியமூர்த்தியும் கண்களில் கண்ணீர் தேங்கதீர்க்க சுமங்கலியா இருக்கனும் மா, ரெண்டு பேரும் 100 வயசுக்கு எல்லா செல்வங்களும் பெற்று சந்தோஷமா ஒற்றுமையா வாழனும்என்று ஆசீர்வதித்து திருநீறும் குங்குமமும் நெற்றியில் இட்டனர். வள்ளி, முருகனுக்கு ஆனந்த கண்ணீர் பெருகியது. பாட்டி மட்டும் தனியே ஒரு மூலையில் கலங்கிய முகத்துடன் நிற்பதை நந்தன் கவனித்தான்.

 

அப்படியே தாத்தா, சத்யாவோட பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிடுங்கப்பாஎன்று கமலா அம்மா சொல்ல தாத்தா சொன்னார் அம்மாடி பாவம் ரெண்டு பேரும் பசியில இருப்பாங்க, முதலில் சாப்பிடட்டும், சாயங்காலம் விளக்கேத்திட்டு எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிக்கலாமேஎன்று சொல்ல கமலா அம்மாவும்சரிங்க மாமாஎன்று கூறிஇந்தாம்மா இந்த சேலையை கட்டிக்கிட்டு ready ஆகிடுஎன்று கொடுத்துவிட்டு எல்லோரும் வெளியே சென்றனர். வள்ளி, ப்ரீத்தி, மது மூவரும் சத்யாவிற்கு சேலை கட்டுவதிலும் அலங்காரம் செய்வதிலும் உதவி செய்ய 10 நிமிடங்களில் சத்யாவை தயாராக்கி வெளியே அழைத்து வந்தார்கள்.

 

நந்தன் அவளை பார்த்துஇன்னும் வேறு அழகாக இருக்கிறாளே, ஓடும் மனதை கட்டுப்படுத்த வேண்டும்என்று நினைத்து அவளை பார்த்துவிட்டு வேறு எதையோ பார்ப்பது போல் திரும்பி கொண்டான்.

 

சத்யா, நந்தனை வரவேற்க மாலினி தலைமையில் சில ஆரத்தி தட்டுகள் தயாராகி இருந்தன. மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.

 

பாலும் பழமும் கொடுக்க மாலினி எல்லாவற்றையும் தயார் செய்ய நந்தன் கமலா அம்மாவிடம் சென்றுஅம்மா இந்த பால் பழம் எல்லாம் தேவையா?” என்று கேட்கஏன்ப்பா அப்படி கேக்குற? இதெல்லாம் நம்ம சடங்கு சம்பிரதாயம், கண்டிப்பாக செய்ய வேண்டும்என்று சொல்லஅதுக்கு இல்லை அம்மா, சத்யாவிற்கு பழைய ஞாபகம் வந்து ஏதாவது feel பண்ணுவாளோன்னு....” என்று தயங்கினான்.

 

நீ அப்படி நினைக்கிற, நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? முதல் வாழ்க்கை தான் அவளுக்கு சரியாக அமையவில்லை, இது நிலைத்து சந்தோஷமாக அவள் வாழ வேண்டும், எல்லா சடங்கும் செய்து அவளை வாழ்த்த வேண்டும், அது மட்டுமில்லை, உனக்கு இது தான் முதல் திருமணம், உனக்கு எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கும் அல்லவா? எவ்வளவு கனவுகள் வைத்திருந்தோம், எவ்வளவு சிறப்பாக உன் திருமணத்தை நடத்த வேண்டும் என்று, சரி அதனால் என்ன? உனக்கு திருமணம் ஆனதே,  அதுவும் உன் மனதிற்கு பிடித்தவளோடு திருமணம் ஆனதே எங்களுக்கு சந்தோஷம் தான், இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களை வேண்டாம் என்று சொல்லாதே நந்துஎன்று கேட்க நந்தனும் அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்காமல் வந்து சத்யாவின் அருகில் அமர்ந்தான்.

 

பாலும் பழமும் நந்தனுக்கும் சத்யாவிற்கும் கொடுக்க நந்தன் அவ்வப்போது சத்யாவை பார்த்தான். கோபமாக இருக்கிறாளா? சந்தோஷமாக இருக்கிறாளா? என்று கணிக்க முடியாத படி உணர்ச்சிகளை அவள் கட்டுக்குள் வைத்திருப்பதை பார்த்து நந்தன் ஆச்சர்யப்பட்டான். பொதுவாக அவளின் முக பாவங்களை வைத்தே சத்யாவின் மனநிலையை அவன் படித்து விடுவான். ஆனால் இப்போது அவள் அமைதியான நதி போல் தெளிவாக இருப்பதை பார்த்து சந்தோஷப்படுவதா? அல்லது புயலுக்கு முன் அமைதி என்று பெரிய புயலை எதிர்பார்த்து எச்சரிக்கையாக இருப்பதா என்று புரியாமல் ஒரு நிமிடம் குழம்பினான்.

 

மறுநிமிடமே நந்தன் நினைத்தான். “எல்லாமே வெளிப்படையாக தெரிந்தால் படிப்பதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது? இப்போது தான் புரிகிறது arranged marriages ஏன் நம் நாட்டில் வெற்றிகரமாக உள்ளது என்று. புரியாத புதிராக இருக்கும் ஒரு ஆணையும் பெண்ணையும் படிக்க படிக்க ஆச்சர்யங்கள் நிறைந்த புத்தகம் போல் படிக்க விட்டுவிடுகிறார்கள், ஒருவரிடம் இருந்து ஒருவர் படிப்பதும் கற்பிப்பதும்...ம்ம்ம் அதனால் தானே இன்னும் நெறைய விஷயங்களை சத்யாவிடம் சொல்லாமல் இருக்கிறேன், அவளாகவே தெரிந்து கொள்ளட்டும் ஒவ்வொன்றாக, அவளும் இப்போது நான் எதிர்பார்த்த கோபம் பயம் இல்லாமல் தெளிவாக இருப்பது நல்லாத்தான் இருக்கு, இப்படி புதிராக இருக்கும் அவளை படிப்பதில் தானே சுவாரசியம்? பேசாமல் விரதத்தை எல்லாம் கைவிடுத்து இன்றே அவளை முழுவதுமாக படித்து விடவேண்டும் என்ற ஆர்வம் நந்தனுக்கு அதிகமாவே தோன்றியது.

 

கொஞ்சம் அவளை சீண்டி பார்த்தால் என்ன?” என்று யோசித்தவன் சத்யா செல்லக்குட்டி, என்ன கல்யாணம் ஆனதும் முகத்தில் அழகு கூடிவிட்டதுஎன்று அவளின் ஒரு கையை யாரும் அறியாமல் பிடித்து கேட்க அதுவரைஆனது ஆகட்டும், எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக  நேருக்கு நேர் சந்திக்கலாம்என்று அவள் திரட்டி வைத்திருந்த தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் வெண்ணைகட்டி உருகுவது போல் உருக அவளுக்கு முகம் சிவந்து உள்ளுக்குள் படபடவென்றது. “ம்ம்ம் இப்போது தான் என் சத்யாவின் பயந்த பரிதாபமான பழைய ஜாடை தெரிகிறதுஎன்று அவன் கண் சிமிட்டினான்.

 

சத்யாவிற்குஇவனிடம் கெத்தாக எப்படி இருப்பது என்று இன்னும் நல்ல திட்டமிடுதலும் பயிற்சியும் உனக்கு தேவை சத்யாஎன்று அவள் மனசாட்சி சொல்ல “I agree, இவனை அவ்வளவு சீக்கிரத்தில் நினைத்ததை அடைய நாம் விடக்கூடாது, தீபிகாவுடன் நிச்சயம் என்று என்னை எவ்வளவு வேதனை படுத்தினான், இன்னும் மற்ற பெண்களை பற்றி வேறு தெரியவில்லை, எல்லாம் தெரிந்து தெளிவாகும் வரை இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்என்று அவள் சொல்லகிழிச்ச.....கையை பிடிச்சாலே கவுந்தடிச்சு விழுந்துடுற, இதுல அவனை எங்க நீ வைக்க வேண்டிய இடத்தில் வைக்க போகிறாய்என்று அவள் மனசாட்சி அவளை பார்த்து சிரிக்க சத்யாவின் முகம் அவமானத்தில் சிவந்து சுருங்கியது. “கொஞ்ச நேரம் தெளிவாக இருந்தவளை இப்படி கையை பிடித்து கலங்கடித்து விட்டாயேஎன்று நந்தனின் மனசாட்சி அவனை குற்றம் சாட்டியது.

 

கமலா அம்மா எல்லோரையும் சாப்பிட அழைக்க தோட்டத்தில் விருந்தோம்பல் நடை பெற்றது. எல்லோரும் நந்தனை சத்யாவிற்கு ஊட்டிவிட சொல்ல நந்தனும் ஒரு வாயோடு நிறுத்தாமல் சாப்பிட தயங்கி உட்கார்ந்து இருந்தவளுக்கு நெறையவே ஊட்டி விட்டான். தருணையும் அழைத்து மடியில் உட்கார வைத்து அவனுக்கும் சத்யாவிற்கும் மாறி மாறி ஊட்டிவிட்டான். “எனக்கு சாப்பிட தெரியும், நானே சாப்பிட்டுக்கிறேன்என்று சத்யா கோபமாக ஆனால் மெதுவாக அவனை கடிந்தாள். “நேத்தேல்லாம் நீ சாப்பிடவே இல்லை அல்லவா, அதனால் தான், ஏதோ இன்று உன் அதிஷ்டம், எல்லா time உம் இப்படி ஊட்டிவிடுவேன் என்று எதிர்பார்காதே, வேலை அது இதுன்னு பிஸியா இருப்பேன், கிடைக்குற chance நீ இப்படி சாப்பிட்டால் தான் உண்டுஎன்று சொல்லி அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அவன் ஊட்டிவிட்டான். கமலா அம்மாவும் சத்தியமூர்த்தியும் தொலைவில் இருந்து ஆனந்த கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தார்கள்.

 

சத்யாவை பதிலுக்கு ஊட்டிவிட சொல்லி எல்லோரும் வற்புறத்த அவள் தயங்கி தயங்கி ஒரு வாய் ஊட்டிவிட்டாள். யாரும் கவனியாத சமயம்அந்த விரலை கடிச்சிடுறேன் இருஎன்று அவன் சொல்ல தருண்ஐயோ அம்மாவுக்கு வலிக்கும் அங்கிள், கடிக்காதீங்கஎன்று சத்தமாக சொல்ல நந்தன் பயந்து போய்தருண் இந்த லட்டு நீ சாப்பிடல இல்லை, சாப்பிடுஎன்று ஒரு லட்டை எடுத்து தருணின் வாயில் வைத்தான். சத்யா நந்தனை முறைத்துவிட்டு யாருக்கும் கேட்டிருக்க கூடாதே என்று நினைத்துக்கொண்டே மெதுவாக சாப்பிட்டாள்.

 

எல்லோரும் சாப்பிட்டு முடித்து தனியாக இருந்த பாட்டியிடம் நந்தன் சென்றான். “பாட்டி என்மேல கோவமா இருக்கீங்க போலஎன்றான்.

 

அதெல்லாம் ஒண்ணுமில்லப்பாஎன்றார்கள்.

 

இல்லை பாட்டி எனக்கு தெரியும், தீபிகா விஷயத்தை நினைத்து என்மீது கோபம், சத்யாவின் எதிர்காலத்தை நினைத்து பயம, சரி தானே?” என்று கேட்டான்.

 

பாட்டி கண்கள் கலங்கஅந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்ருக்கு தம்பி, இதுக்கு மேலயும் கஷ்டப்பட கூடாது, அவளோட கடந்த காலம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா தெரியல, நாளை பின்ன ஏதாவது தெரிய வந்து அவளை நீங்கள் தவறாக புரிந்து கஷ்டப்படுத்த கூடாது, நீங்களும் அவளை தவிர வேற பெண்ணை...”.

 

 நந்தன் பாட்டியின் கைகளை பிடித்துபாட்டி தீபிகா இன்று சொன்ன விஷயங்கள் எல்லாம் பொய், கடந்த காலத்தில் நான் அப்படி இப்படி என்று இருந்து இருக்கலாம், ஆனால் இனி சத்யாவை தவிர வேறு எந்த பெண்ணையும் நான் நினைத்து கூட பார்க்க மாட்டேன், அதே போல சத்யாவின் கடந்த கால வாழ்க்கை முழுவதும் எனக்கு தெரியாவிட்டாலும் முக்கியமான விஷயங்கள் எல்லாம் தெரியும், எந்த சூழ்நிலையிலும் அவற்றை வைத்து சத்யாவின் மனதை நான் நோகடிக்க மாட்டேன், நீங்கள் என்னை நம்பலாம், அது மட்டுமல்ல உங்களிடம் முக்கியமான சில விஷயங்களை நான் பேச வேண்டி உள்ளது, தயவு செய்து நீங்கள் இங்கேயே தங்க வேண்டும், கவிதா அத்தையை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும், அவர்கள் என் அப்பாவின் உடன் பிறந்த தங்கை, இந்த விஷயம் இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரிய வேண்டாம், ஏன் என்று பிறகு சொல்கிறேன், மொத்தத்தில் சத்யா என் சொந்த அத்தை மகள் தான், இனியாவது நீங்கள் என்னை நம்பி சத்யாவை என்னிடம் ஒப்படைத்து ஆசீர்வதிக்க வேண்டும்என்று சொல்லி முடிக்க தான் கேட்பது எல்லாம் கனவா என்பது போல் பாட்டி திகைத்து நின்றார்கள்.

 

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018