Sms ch 60 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 60

நந்தன் எப்போதும் செல்லும் சிவன் கோயிலுக்கு சத்யாவையும் தருணையும் அழைத்து சென்றான். “ஷ்யாம் எங்கே இருக்கிறான், எப்போது மீண்டும் எங்கள் வாழ்க்கையில் வந்து சத்யாவிற்கு ஆபத்தை ஏற்படுத்துவான் என்று தினமும் பயந்து பயந்து வாழும் போது சத்யாவுடன் என்னால் இல்லற வாழ்க்கையை தொடங்க முடியாது, அதனால் அவனை பிடித்து தண்டனை வாங்கி தரும் வழியை நீங்கள் தான் எனக்கு காண்பிக்க வேண்டும் இறைவாஎன்று வேண்டிக்கொண்டான் நந்தன்.

 

சுவாமி தரிசனம் முடித்து ஆலயம் சுற்றி வந்து மூவரும் கோயிலின் உள்ளே இருந்த சோலைவனத்தில் அமர என்ன ரொம்ப தீவிரமா ஏதோ வேண்டிகிட்ட மாதிரி இருந்துச்சு?” என்று சத்யா நந்தனை பார்த்து கேட்க நந்தன் தருணை பார்த்துவிட்டு சத்யாவை பார்த்தான். “அப்புறம் சொல்றேன்என்று சொல்ல தருண் முன்னாடி சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறார் போல என்று சத்யா புரிந்துகொண்டாள்.

 

“IAS exam க்கு preparation எப்படி போய்கிட்டு இருக்கு?” என்று கேட்டான் நந்தன்.

 

பரவால்ல நல்லா போய்கிட்டு இருக்கு, அத்தை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை, எப்போது நான் வேலை செய்ய சென்றாலும் நீ போய் படி என்று சொல்லிவிடுகிறார்கள்என்றாள் சத்யா.

 

நம் வீட்டார் வேலை செய்பவர்களை மேற்பார்வை இட வேண்டியது தானே வேலை, அதனால் நீ பெரிதாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, நீ நன்றாக படித்து IAS பாஸ் செய்ய வேண்டும் சத்யா

 

உங்களுக்கு ஏன் என்னை விட இந்த IAS ல் இவ்ளோ ஆர்வம்? எனக்கு கூட இதற்கான  முனைப்பு இல்லாமல் இருந்தது

 

காரணம் இருக்கு, உன்கிட்ட நெறைய பேசணும் சத்யா, உன்கிட்ட சொல்ல வேண்டிய விஷயங்கள், உனக்கு தெரிய வேண்டிய விஷயங்கள் நெறையவே இருக்கின்றன, ஆனால் எந்த விஷயமும் உன் கவனத்தை சிதறடிக்காமல் படிப்பில் இருந்து விலகாமல் நீ பார்த்துக்கொள்ள வேண்டும், அந்த நம்பிக்கையை நீ எனக்கு தரவேண்டும்

 

என்னென்னவோ சொல்கிறீர்களே? நீங்க சொல்றதெல்லாம் பாத்தா சங்கடமான விஷயங்களா இருக்குமோன்னு பயமா இருக்குஎன்று விழித்தபடியே கேட்டாள்.

 

நந்தன்கொஞ்சம் கஷ்டமான விஷயங்கள் தான், ஆனால் உன் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள தான் இப்போது அருகில் நான் இருக்கிறேனே, இனிமேல் வெளிப்படையாக தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் பயப்படும் சத்யா எனக்கு வேண்டாம், உண்மையாகவே தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் சத்யா தான் என் மனைவியாக இருக்க முடியும், அதனால் இனிமேல் தைரியமாக இருக்க பழகிக்கோள், சரியா?”

 

ம்ம்ம் சரி

 

நந்தனும் சத்யாவும் பேசிகொண்டிருக்க தருண் அருகே இருந்த அவன் வயதை ஒத்த சிறுவர்களுடன் விளையாட ஆரம்பித்து இருந்தான். அவனை பார்த்துக்கொண்டே நந்தன் சத்யாவிடம் கேட்டான். “உனக்கு என்மேல நம்பிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டான்.

 

சத்யாஉண்மையை சொல்வதா? பொய் சொல்வதா? இப்போது தான் பேச ஆரம்பித்துள்ளார்.” என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த சோலைவனத்தில் ஒரு மரத்தடியில் சுடிதார் துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிய படி ஒரு பெண் வந்து உட்காருவதை நந்தன் பார்த்தான்.

 

எழுந்து சென்று அந்த பெண்ணிடம் பேச சத்யா அவனை கேள்விக்குறியாக எழுந்து நின்று பார்த்தாள். நந்தன் அந்த பெண்ணுக்கு ஹலோ சொல்வதும் தன்னை சுட்டி காட்டி ஏதோ பேசுவதும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவள் முக்காடு போட்டு இருப்பதும் முக்காடு விலகும் நேரம் தெரிந்த முகத்தை வைத்து பார்க்கும் போதும் அவள் ஸ்ரேயாவாக தான் இருக்க வேண்டும் என்று சத்யா புரிந்து கொண்டாள். நந்தன் சத்யாவை காண்பித்துக்கொண்டே அவளை அருகில் அழைத்து வந்தான்.

 

சத்யா மரியாதை நிமித்தமாக புன்னகை செய்தாள். சத்யாவின் புன்னகையை பார்த்து நந்தனின் முகத்திலும் புன்னகை, அதை சத்யா கவனிக்க தவறவில்லை. அந்த பெண்ணின் நடையில் ஒரு தயக்கம் தெரிந்தது. நந்தன் அருகே வந்ததும்சத்யா நான் சொன்னேன் இல்லையா? ஸ்ரேயா என்று ஒரு தோழி உண்டு என்று, அது இவள் தான்என்று அறிமுகப்படுத்தினான். அவள் முகத்தை லேசாக காண்பித்து புன்னகை செய்ய முயற்சி செய்துஹலோஎன்றாள். சத்யாவும் புன்னகையுடன் ஹலோ என்றாள்.

 

அப்புறம் என்ன கோயில் பக்கம்? நீ சாமி கும்பிட மாட்டாயே?” என்று நந்தன் அந்த பெண்ணை பார்த்து கேட்கநான் தயங்காமல் செல்லும் இடங்களின் எண்ணிக்கை இப்போது குறைந்து விட்டது, இங்கே தயங்காமல் வர முடிகிறது, அமைதியாக உட்கார்ந்து இருக்க முடிகிறது, மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக உள்ளதுஎன்றாள்.

 

“Good” என்று நந்தன் சொல்ல ஸ்ரேயா சத்யாவின் பக்கம் திரும்பிநந்தன் எனக்கு ஒரு நல்ல நண்பர், உங்களை விரும்புவதாக சொல்லும் போது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன், ஏன் என்றால் நந்தன் எந்த பெண்ணையும் விரும்பி நான் பார்த்ததோ கேள்வி பட்டதோ இல்லை, உங்கள் பெயரை சொல்லும் போதே முகத்தில் அப்படி ஒரு பரவசம், அப்போதே புரிந்து கொண்டேன், நந்தன் உண்மையிலேயே அந்த சத்யா என்ற பெண்ணை மிகவும் விரும்புகிறார் என்றுசொல்ல சத்யாவின் முகத்தில் வெட்கமும் மகிழ்ச்சியும் பரவியது.

 

அதை புன்னகையுடன் ரசித்த நந்தன் ஸ்ரேயாவின் பக்கம் திரும்பிசரி உன் கணவனை கைது செய்துவிட்டார்களா?” என்று கேட்டான். “ம்ம்ம் கைது செய்து விட்டார்களாம், இன்னும் கொஞ்ச நாட்களில் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் என்று போலீஸ் சொன்னார்கள்” என்று ஸ்ரேயா பதில் சொல்ல “சரி உனக்கு கோர்ட் செல்ல துணை வேண்டுமென்றால் நான் வருகிறேன்” என்று நந்தன் சொல்ல அது வரை புன்னகையுடனும் பரிவுடனும் பார்த்து கொண்டிருந்த சத்யாவிற்கு முகம் வாடியது. அவள் முகம் வாடியதை நந்தன் கவனிக்க தவறவில்லை. ஸ்ரேயாதெரியவில்லை எனக்கே கோர்ட் செல்ல விருப்பமில்லைஎன்றாள். “அதனால் தான் சொல்கிறேன், துணைக்கு நான் வருகிறேன் என்று, நீ சென்றால் தான் அவன் செய்த அநியாயம் கோர்ட்டாருக்கு புரியும், அவனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தர முடியும், நீ பயந்து அசிங்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே இருந்தாய் என்றால் அவன் குறைந்த தண்டனையுடன் தப்பிக்க வழி உள்ளது, அப்படி அவனை விடக்கூடாதுஎன்று நந்தன் கோபமாக சொல்லிவிட்டு மீண்டும் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டுசரி நீ update பண்ணு என்றைக்கு வழக்கு என்றுஎன்று சொல்ல ஸ்ரேயா லேசாக தலை அசைத்துவிட்டுநீங்கள் பேசிக்கோண்டிருங்கள், நான் கொஞ்ச நேரம் தனிமையில் அமர்ந்துவிட்டு செல்கிறேன்என்று விடைபெற்றாள்.

 

நந்தன் அவள் செல்லும் திசையை பார்த்துவிட்டு சத்யாவை பார்க்க சத்யா தன் முகவாட்டத்தை மறைத்து இயல்பாக இருக்க முயன்றாள், நந்தனை பார்த்து புன்னகைக்க முயன்றாள். “சத்யா நீ என்னிடம் இயல்பாகவே இருக்கலாம், கஷ்டப்பட்டு உன் உணர்வுகளை மறைக்க வேண்டாம், நான் ஸ்ரேயாவை கோர்ட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னதும் உன் முகம் வாடியதை நான் கவனித்தேன், என்மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே மீண்டும் அமர்ந்தான். சத்யாவையும் அமர சொன்னான்.

 

சத்யா அமர்ந்ததும்பதில் சொல்லுஎன்பது போல் நந்தன் அவளை கூர்ந்து பார்க்க சத்யா நந்தனை பார்க்க தயங்கினாள். நந்தன் சத்யாவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துசத்யா நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் உனக்கு நடிக்க வராது, உன் முகமே உன்னை காட்டி கொடுத்துவிடும், எதுவாக இருந்தாலும் தயங்காமல் பேசும்மாஎன்றான்.

 

சத்யா அவனின் இதமான அணுகுமுறையால் பேச ஆரம்பித்தாள். “நான் ஏதாவது தவறாக பேசினால், உங்களின் விருப்பத்திற்கு மாறாக ஏதாவது சொன்னால், நடந்தால் கோபப்பட்டு என்னுடன் 10 நாட்கள் ஆனாலும் பேச மாட்டீர்களோ என்று கவலையாக உள்ளது, நீங்கள் பேசாமல் இருந்தால் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, அதனாலயே உங்களுக்கு எதிராக எதுவும் பேச எனக்கு தைரியம் வர மாட்டேன் என்கிறதுஎன்று சொல்லி கீழே குனிந்தாள்.

 

நந்தன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுஇங்க பாரு, நான் கோபப்பட்டு 10 நாள் பேசாம இருந்ததுக்கு என்ன காரணம்? நான் உன்னை நெருங்கும் போது நீ வேண்டாம் என்று மறுத்ததா? இல்லை நீ என்னை சொன்ன வார்த்தையா? நீயே யோசித்து பார், நீ என் விருப்பத்திற்கு மாறாக வேண்டாம் என்று சொல்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அதற்காக நான் கோபப்பட்டு பேசாமல் இருக்க மாட்டேன், உன்னிடம் பேசாமல் இருப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று எனக்கு தான் தெரியும், ஆனால் நீ சொன்ன வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது, சரி அதை விடு, இப்போது என்ன பிரச்சனை? அதை சொல்லு, ஸ்ரேயாவுடன் நான் பேசுவது உனக்கு பிடிக்கவில்லை இல்லையா? இன்னும் என்மேல் உனக்கு நம்பிக்கை வரவில்லை, சரி தானே?”

 

சத்யா தருணை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னாள். “நான் அந்த வார்த்தையை சொல்லி இருக்க கூடாது, அதற்காக என்னை மன்னித்து விடுங்கள், வீட்டிற்கு சென்றதும் உங்கள் காலிலேயே விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்என்று குறும்பாக அவனை பார்த்து புன்னகைத்து விட்டு தொடர்ந்தாள். “உங்கமேல எனக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை, உங்களுக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும், என்னை தவிர உங்கள் மனதில் வேறு யாரும் இல்லை என்று புரிகிறது, ஆனால்……” என்று சத்யா தயங்க நந்தன் தன் கைக்குள் வைத்திருந்த அவள் கையை தடவி விட்டபடியே கேட்டான்ம்ம்ம் சொல்லுடா, ஆனால் என்ன?”.

 

ஆனால் அதற்காக ஸ்ரேயாவுடன் நட்பை தொடர்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அன்றே சொன்னீர்கள், நான் ஸ்ரேயாவுக்கு நல்ல நண்பனாக இருப்பேன் என்று, ஏனோ அது சரியாக வராதோ என்று எனக்குள் ஒரு அவநம்பிக்கை, ப்ளீஸ் என்னை தவறாக நினைத்து கோபப்படாதீர்கள், நெருங்கிய உறவில் இருந்த இருவர் எப்படி அந்த நெருக்கம் இல்லாமல் வெறும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியும்? ஏனோ தெரியவில்லை, அதை புரிந்துகொள்ளும் அளவு எனக்கு அறிவில்லைஎன்றாள்.

 

நந்தன் கொஞ்ச நேர அமைதிக்கு பின்இதற்கு நான் என்ன சொல்லி உனக்கு நம்பிக்கையை தர முடியும் என்று எனக்கு தெரியவில்லை, it’s ok if you don’t trust me now, I can understand it will take time for you, என் மனசாட்சிக்கு தெரியும், நான் தவறு செய்யமாட்டேன், ஸ்ரேயாவுக்கு நண்பனாக மட்டும் தான் இருப்பேன், இந்த நட்பு சாத்தியம் என்று எல்லாம் எனக்கு புரிகிறது, ஆனால் உன் கவலையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஸ்ரேயா மற்ற பெண்களை போல் இல்லை சத்யா, அவள் என்னை வெறும் நண்பனாக மட்டும் தான் பார்த்தாள், மற்ற பெண்களை போல் காதல், கல்யாணம் என்று அவள் பேசியதில்லை, நீ என் மனதில் வந்த பின் நான் அவளை தொடர்பு கொள்ளவில்லை, அவளுடன் நட்பை தொடர வேண்டும் என்று எண்ணியதில்லை, ஆனால் அவள் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறது என்று தெரிந்த பிறகு என்னால் அவளை அப்படியே விடமுடியவில்லை, என் கஷ்டங்களின் போது ஏதோ ஒரு வகையில் எனக்கு உதவியவள், அவளுக்கு வாழ்நாள் முழுக்க மாற்றமுடியாத தழும்பு ஒன்று ஏற்பட்ட பிறகு அவளுக்கு ஒரு நல்ல நண்பனாக, moral support ஆக இருக்க விரும்பினேன், இப்போது உனக்காக அந்த நட்பை கைவிட்டால் என் மனசாட்சி என்னை தூங்க விடாது சத்யாஎன்றான்.

 

சத்யா அவன் சொன்னதை கவனமாக கேட்டுவிட்டு அமைதியாக யோசித்தாள். சில நிமிட அமைதிக்கு பின் பேசினாள். “ஸ்ரேயாவின் நட்பை கைவிட சொல்லி இனி நான் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அவர்களுடன் போனில் பேசும் போதோ, இல்லை கோர்ட்டிற்கு அழைத்து செல்ல வர என்று செல்லும் போதோ என்னால் என் பொறாமை உணர்வுகளை கட்டுப்படுத்த முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாது, அந்த நேரங்களில் என் கணவர் இப்படி தான் உயர்ந்த குணம் கொண்டவர், கஷ்டத்தில் இருக்கும் தோழிக்கு உதவ செல்வார், பொறாமை கொள்ளாதே சத்யா என்று சொல்லி என்னை நானே பக்குவப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன், அந்த நேரங்களில் என் முகவாட்டத்தை பார்த்துஇன்னுமா நீ என்னை நம்பவில்லைஎன்று நீங்கள் மனம் சோர்ந்து விடாதீர்கள், ஏன் என்றால் என்ன தான் கணவன் மீது நம்பிக்கை இருந்தாலும் இந்த possessiveness அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாதுஎன்றாள் புன்னகையுடன்.

 

நந்தனும் புன்னகையுடன் அவள் கையை தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினான். “சத்யா இன்னொரு விஷயம், ஷ்யாமை நாம் பிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைக்கும் வரை, நம்முடைய மற்ற விஷயங்களை தள்ளி வைக்க வேண்டும், உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்என்று அவள் கண்களை பார்த்து கேட்க அவளும்ம்ம்ம் புரிகிறதுஎன்றாள் தலையை கீழே குனிந்த படியே. அவள் கையை தட்டி கொடுத்துவிட்டு சரி கிளம்புவோமா?” என்று சொல்லி தருணை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தூங்க செல்ல கமலா அம்மா தருணை தன் அறைக்கு அழைத்து செல்ல கூப்பிட நந்தன் அவர்களை தடுத்தான். “அம்மா தருண் இன்னைக்கு எங்ககூட தூங்கட்டுமேஎன்று சொல்ல கமலா அம்மா சரி என்றார்கள்.

 

அந்த பெரிய கட்டிலில் தருண் நடுவே படுத்திருக்க நந்தனும் சத்யாவும் அவனின் இருபுறமும் அமர்ந்து தருணுக்கு மாறி மாறி கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். “ஹ்ம்ம் இந்த கதை எல்லாம் எனக்கு bore அடிக்குது, எனக்கு தாத்தா பாட்டி சொல்ற கதை தான் பிடிச்சிருக்கு, நான் அங்கேயே போறேன்என்று சொல்லி தருண் எழுந்து தட்டு தடுமாறி ஓட நந்தனும் சத்யாவும் தருண் தருண் என்று அழைத்த அழைப்பு தருண் காதில் விழவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பாவமாக பார்த்து கொண்டார்கள்.

 

நந்தன் intercom ல் கமலா அம்மாவிற்கு அழைத்தான்.

 

ம்ம்ம் வந்துட்டானா? நாங்க சொல்ற கதை எல்லாம் பிடிக்கலையாம், நீங்களும் தாத்தாவும் சொல்ற கதை தான் பிடிச்சிருக்காம்

 

எதிர்முனையில் கமலா அம்மா ஏதோ சொல்ல நந்தன்அது சரிம்மா ஆனால் அதற்காக நீங்களும் அப்பாவும் நேரத்திற்கு தூங்காமல் உடல்நலனை கெடுத்து கொள்ளாதீர்கள், கொஞ்ச நேரம் கதை சொல்லிவிட்டு அவனை தூங்க வைத்து நீங்களும் தூங்குங்கள்என்று சொல்லி ரிசீவரை வைத்தான்.

 

நந்தன் சத்யாவை பார்த்து விட்டு எழுந்து பால்கனி சென்றான். சத்யா படுத்து தூங்க முயன்றும் முடியவில்லை. அரை மணி நேரம் ஆகியும் நந்தன் வராததை கண்டு போய் பேசலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு படுத்திருந்தாள். பிறகு நந்தனே சத்யா தூங்காமல் இருப்பதை பார்த்துவிட்டு உள்ளே வந்தான். “ரொம்ப கஷ்டமா இருக்கு சத்யா, ஒரு வைராக்கியம் இல்லை என்றால் அடுத்த பிரச்சனை வரும் வரை கவலை இல்லாமல் நீயும் நானும் வாழ்க்கையை தொடங்கி விடுவோமோ என்று தோன்றுகிறது, உன்னை பார்த்தாலே நான் பலவீனம் ஆகி விடுகிறேன், இதற்கு முன் நான் இப்படி பலவீனமாக உணர்ந்ததில்லை. ஷ்யாமை பிடிக்க வேண்டும், அதுவரை நாம் எப்படி கட்டுப்பாடாக இருப்பது?” என்றான் நந்தன்.

 

சத்யாவும் அவன் சொல்வது சரி தான் என்று யோசித்துவிட்டும்ம்ம் எனக்கு கூட அவனை பிடித்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற வேகம் குறைந்துவிட்டது, எங்கேயோ நம் கண்ணில் படாமல் அவன் இருந்தால் போதும், நாம் ஏன் இப்படியே நிம்மதியாக வாழக்கூடாது என்றெல்லாம் தோன்றுகிறது, உங்களுக்கு இருக்கும் வேகம் ஏன் என்னிடம் இல்லை, இத்தனைக்கும் அவனால் அதிகம் பாதிக்கப்பட்டவள் நான் தானே?” என்று யோசனையாய் சத்யா கேட்க நந்தன் அவளை கவலையுடன் பார்த்துவிட்டுஎனக்கு தெரிந்த ஒரு விஷயம் உனக்கும் தெரிந்தால் அவனை பிடித்தே ஆக வேண்டும் என்ற வேகம் உன்னிடமும் வரும்என்றான். “அது என்ன விஷயம்?” என்று கேட்டாள் சத்யா யோசனையாக.

 

கௌஷிக்கை ஷ்யாம் தான் கொன்றிருக்க வேண்டும் என்பது உன் யூகம் இல்லையா? ஆனால் உறுதியாக தெரியாது?”

 

ஆமாம்

 

ஷ்யாம் தான் விஷ ஊசி போட்டு கௌஷிக்கை கொன்றதுஎன்றான் நந்தன்.

 

சத்யா அதிர்ச்சியாக அவனை நோக்கிஉங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கண்கள் கலங்க கேட்டாள்.

 

துரைசாமி ஒரு வீடியோ அனுப்பி இருந்தார். அதில் பார்த்தேன். நீ கௌஷிக்குடன் சண்டை போட்டுவிட்டு தருணை அழைத்து கொண்டு சென்ற பிறகு ஷ்யாம் அவரை கொல்லும் வீடியோவை பார்த்தேன், உயிர் போகும் தருவாயில் அவர் உனக்கு தான் நெறைய முறை call செய்திருக்க வேண்டும், உனக்காக ஒரு கடிதம் கூட எழுதி வைத்திருந்தார், அதை நீ பார்த்திருக்கிறாயா? அன்று நீ மழையில் நனைந்து வீடு திரும்பிய போது ஒரு டைரி கையில் வைத்திருந்தேனே, அதில் ஒரு பக்கத்தில் அவர் எழுதி இருந்ததை படித்தேன், அன்றே உன்னிடம் அதை பற்றி பேசி இருப்பேன், ஆனால் நீ சிறு விஷயங்கள் கூட உன்னை பாதித்து படிக்க விடாமல் செய்து விடுகிறது என்று சொன்னாய், அதனால் இதை பற்றி உன் மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லைஎன்றான் நந்தன்.

 

அன்று நந்தன் கலக்கமாக இருந்தது சத்யாவின் நினைவு திரையில் வர சத்யா கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். நந்தன் அவள் அருகே சென்று அவள் தோள்களில் கை வைத்து “I know, உனக்கு இதெல்லாம் அதிர்ச்சியாக, வலி மிகுந்ததாக இருக்கும் என்று, ஆனால் நான் பலவீனம் அடைந்தால் நீ பக்க பலமாக இருந்து ஷ்யாமை பிடிக்க வேண்டிய கட்டாயத்தை எனக்கு உணர்த்த வேண்டும் என்று தான் இதை எல்லாம் இப்போதே சொல்கிறேன், இல்லை என்றால் அவனை பிடித்த பிறகு தான் உன்னிடம் சொல்ல எண்ணி இருந்தேன், சத்யா, are you ok?” என்று கேட்கநான் அந்த வீடியோவை பார்க்கலாமா?” என்றாள் சத்யா.

 

நந்தன் ஒரு பெருமூச்சுடன்ம்ம்ம்…” என்று தன் மொபைலை எடுத்து அந்த வீடியோவை காண்பித்தான். சத்யா அந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கண்ணீர் பெருக கௌஷிக் துடிப்பதை பார்த்து வெம்பி அழ ஆரம்பித்தாள். நந்தன் அவள் அருகே உட்கார்ந்து அவளை தன் தோளில் சாய்த்து கொள்ள அவள் அழுகை அதிகமானது. நந்தன் அவளை தடுக்கவில்லை. “அவர் அன்பை புரிந்து கொள்ளாமல் அந்த கொலைகாரனிடம் நானே அவரை தூக்கி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்என்று புலம்பினாள். அவள் சிறிது நேரம் அழுது ஓயும் வரை அவள் தலையை தடவி கொடுத்து ஆறுதலாக இருந்தவனை கண்களை துடைத்து கொண்டு பார்த்தாள். “எதற்காக அவன் இப்படி செய்தான்? அவர் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்?”

 

நந்தன் அவளை விடுவித்து தன் cupboard லாக்கரில் இருந்து அவளது டைரியை எடுத்து நீட்டினான். “நீ ஹாஸ்பிடலில் இருந்து என் flat ற்கு வந்த பிறகு ராகவனிடம் சொல்லி இதை எடுத்து வர சொல்லி இருந்தேன்என்று அந்த கடிதம் இருந்த பக்கத்தை திறந்து காட்டினான். அந்த கடிதத்தை படித்துவிட்டு அதை அவள் விரல்களால் தடவி பார்த்தாள் கண்களில் கண்ணீருடன். மீண்டும் நந்தன் மொபைலை எடுத்து அந்த வீடியோவை பார்த்தாள். கௌஷிக் இறந்து கிடக்கும் காட்சியை pause செய்துவிட்டு அந்த மொபைலை தடவி முத்தமிட்டாள். மீண்டும் வாய்விட்டு அழ ஆரம்பித்தாள். நந்தனும் கண்களில் கண்ணீருடன் அவளை அணைத்து இனி நம் குறிக்கோள் ஷ்யாமை பிடித்து சட்டத்திடம் ஒப்படைத்து தண்டனை வாங்கி தருவதாக தான் இருக்க வேண்டும், அதன் பிறகு தான் நம் வாழ்க்கையை தொடங்க வேண்டும், இதில் நான் பலவீனம் அடைந்தால் நீ துணை நிற்க வேண்டும், நீ பலவீனம் அடைந்தால் நான் துணை நிற்பேன், சரி தானா?” என்றான் நந்தன். “ம்ம்ம் சரிஎன்று கண்களை துடைத்து கொண்டு சம்மதித்தாள் சத்யா. “எனக்காக தான் அந்த கொலைகாரன் இவரை கொன்றானா?” என்று கேட்கஆமாம் அப்படி தான் இருக்கிறது சாட்சியங்கள் அனைத்தும்என்றான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018