Sms ch 66 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 66

 

மறுநாள் நாடு முழுவதும் இந்த போதை பொருள் விவகாரம் பற்றி பேசவும் பத்திரிக்கையாளர்கள் ஷ்யாம் வீட்டின் முன்னாலும் அரசியல்வாதிகளின் முன்னாலும் குவிந்தார்கள். ஷ்யாமின் அப்பா ஷ்யாமின் அம்மாவை தொடர்பு கொண்டு ஷ்யாமை எப்படி காப்பாற்றுவது என்று பதறினார். ஷ்யாமின் அம்மா தான் தான் அவனுக்கு எதிரான ஆதாரங்களை கொடுத்ததாக காட்டிக்கொள்ளவில்லை. இறுக்கமான மனதுடன் ஷ்யாமிற்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள். ஷ்யாமின் தந்தை பதற ஷ்யாமின் அம்மா எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

ஷ்யாம் மும்பையில் தன் நண்பன் யுவி வீட்டில் தங்கி இருந்தான். வைரலான எல்லா செய்திகளையும், போதை பொருட்களை கைமாற்றும் வீடியோக்களையும், கௌஷிக்கை தான் கொல்லும் வீடியோவையும் பார்த்து செய்வதறியாமல் சில பொருட்களை எடுத்து போட்டு உடைத்தான்.

 

கொஞ்ச நாட்களாகவே தன் தாய் மீது ஏற்பட்ட சந்தேகம் நந்தனுடன் சந்தித்த சந்திப்பில் உறுதியானது. தன் ஆட்களை வைத்து தாயை உளவு பார்த்த ஷ்யாம் அதே ஆட்களை வைத்து அந்த தாயையும் நந்தனையும் கொல்ல முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினான். சத்யாவிற்கு சென்னையில் இருக்கும் அரசியல்வாதி ஆளை வைத்து மொட்டை கடிதம் எழுதி மிரட்டியும் இந்த நந்தனை முடக்க முடியாமல் போய்விட்டதே என்று கொந்தளித்தான். யுவியும் நடுங்கி கொண்டிருந்தான்.

 

யுவியின் தந்தை ஷ்யாமை தன் வீட்டை விட்டு வெளியேறும் படி சொன்னார்.

 

என்ன சார்? என்ன வெளில அனுப்பிட்டா மட்டும் நீங்க தப்பிச்சிட்டதா அர்த்தமா? நான் உங்களையும் மாட்டிவிடுவேன் என்று தெரியாதா?” என்று ஷ்யாம் நக்கலாக கேட்கஇனிமேல் நீ மாட்டிவிட என்ன இருக்கிறது? அது தான் எல்லாமே சிரிப்பா சிரிக்கிறதே, ஆனால் நாங்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், உன்னையும் மடியில் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டும் என்று எங்களுக்கு ஒன்றும் தலை எழுத்து இல்லை, ஹேய் யுவி, இவனை ஒழுங்காக வெளியே அனுப்பிவிடு, இல்லை என்றால் உன்னை நான் காப்பாற்ற மாட்டேன் என்று சொல்ல யுவி ஷ்யாமிடம் திரும்பிடேய் நீ கிளம்பு டா, நாங்க எங்களை எப்படியாவது save பண்ணிட்டு உனக்கும் help பண்றோம் என்று சொல்லி ஷ்யாமை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக தள்ளினான்.

 

பத்திரிக்கையாளர்கள் பிரதமரை கேள்வி கேட்ககமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு எல்லோரும் தண்டிக்கப் படுவர் என்று முடித்தார்.

 

ஷ்யாம் ஒரு வாரம் தலைமறைவாகவும் மாறுவேடத்திலும் ஒவ்வொரு நண்பனின் வீட்டிலும் தங்க சென்று பின் துரத்தப்பட்டு பல வழிகள் முயன்று தோற்று போய் ஒரு சிறு விடுதியில் தலை மறைவாய் மாறு வேடத்தில் தங்கி இருந்தான். அப்போது தான் அந்த செய்தியை பார்த்தான். Kingpin Kishan Singh, பெரிய போதை மாஃபியா கும்பலின் தலைவன். லண்டனில் அடைக்கலம் புகுந்தவன். இந்திய நாடு பலமுறை அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க சொல்லி இங்கிலாந்து நாட்டிடம் கேட்டும் இங்கிலாந்து அவனை திருப்பி ஒப்படைக்காமல் வைத்து இருந்தது. ஆனால் வைரலான தகவல்கள் Kishan Singh எவ்வளவு பெரிய குற்றவாளி என்பதை தெளிவாக உலகுக்கு எடுத்து காட்டியது. ஷ்யாம் கிஷனின் நேரடி டீலர். இந்தியாவில் ஷ்யாம் மூலமாக தான் அவன் பெரிய வியாபாரங்களை செய்து கொண்டிருந்தான். தன்னுடைய பாதுகாப்பு கருதி ஷ்யாம் அவனுடைய dealings வீடியோவாகவும், ஆடியோவாகவும் எடுத்து வைத்திருந்த அனைத்தும் வெளிவந்து விட்டன.

 

இங்கிலாந்து அரசாங்கம் எல்லா ஆதாரங்களையும் பார்த்தபின் Kingpin Kishan Singh (KKS) இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்து ஒப்படைத்தனர். இதுவரை இங்கிலாந்து இதுவே இரண்டாம் முறையாக ஒருவரை விசாரணைக்காக நாட்டை விட்டு வெளியேற்றம் செய்தது என்பது குறிப்பிடதக்கது என்று எல்லா பத்திரிகைகளும் எழுதின.

 

ஷ்யாம் நடுங்கினான். ஒன்று KKS ஆட்களிடம் மாட்டி உயிரை விட வேண்டும், இல்லை என்றால் அரசாங்கத்திடம் மாட்டி தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று பயந்தான். இதற்கு மேல் ஓடி ஒளியவும் அவனுக்கு இடம் இல்லை, அவனுடைய தந்தை அவனுடன் போனில் பேசிய போது கூட எப்படியும் ஷ்யாமை காப்பாற்றிவிடுவதாக வாக்களித்தார். ஆனால் ஷ்யாமிற்கு தெரியும், மாட்டினால் யாராலும் காப்பாற்ற முடியாத அளவு ஆதாரங்கள் உள்ளன என்று. ‘எந்த பெற்ற தாயாவது தன் மகனுக்கு எதிராக இவ்வளவு வேலைகளை செய்வாளா? உன்னையும் அந்த நந்தனையும் அன்றே ஹோட்டலில் என் ஆட்களை வைத்து கொன்றிருக்க வேண்டும், ஆனால் அந்த அரை வேக்காடு அடி ஆட்களை வைத்துக்கொண்டு இவ்வளவு தான் கிழிக்க முடியும் என்று தனக்கு தானே புலம்பி கொண்டான்.

 

ஷ்யாமின் அப்பா மட்டும் அவ்வப்போது ஷ்யாமிடம் போனில் பேசி அவனுக்கு வங்கி கணக்கில் கொஞ்சம் பணமும் போட போலீசார் அவற்றை track செய்து ஷ்யாமை கைது செய்தார்கள். KKS உடன் ஷ்யாமின் விசாரணையும் தொடங்கியது.

 

ஒரு வாரமாக எல்லா செய்திகளையும் பார்த்த சத்தியமூர்த்தி குடும்பமும், சத்யாவும், வள்ளியும், பாட்டியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நந்தன் வள்ளியிடம் மட்டும் பேசி சத்யாவை பற்றி விசாரித்து கொண்டான். வள்ளி பிடிவாதமாக போனை சத்யாவிடம் கொடுத்தால் சத்யாவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டுவேலை இருக்கு, அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி விடுவான். “பேசலைன்னா போங்க, நான் ஒன்றும் உங்களையே நினைத்து அழவில்லை என்று நந்தன் போனை வைத்த பிறகு சத்யா தனக்கு தானே புலம்பிக்கொள்வாள்.

 

அவர் நினைத்தது போலவே பாதுகாப்பாக எல்லா வேலைகளையும் செய்து அந்த ஷ்யாமை கைது செய்ய வைத்துவிட்டார், குறைந்த பட்சம் நாம் படிக்கவாவது செய்வோம் என்று  ஜுரம் குறைந்ததும் சத்யா படிக்க தொடங்கி இருந்தாள். நந்தனிடம் கமலா அம்மா, சத்தியமூர்த்தி என்று அனைவரும் அவ்வப்போது போனில் பேசிக்கொண்டு தான் இருந்தார்கள். சத்யா தன்னை ஹவுஸ் அர்ரெஸ்ட் வைத்தவர்கள் தானே என்று அவர்கள் மீது கோபமாக இருந்தாள். அதனால் அவர்கள் நந்தனிடம் போனில் பேசுவதை பார்த்தாலும்எப்போது தான் ஊருக்கு வருவாராம்?” என்று கேட்க வார்த்தைகள் தொண்டை வர வந்தாலும் கேட்கமாலேயே கேலரிக்கு சென்று விடுவாள். போகும் போதும் வரும் போதும் அவள் முறுக்கி கொண்டு செல்வதை பார்த்த கமலா அம்மா, சகுந்தலாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

 

ஒருநாள் மாலை எல்லோரும் சிற்றுண்டி சாப்பிட சத்யாவையும் கமலா அம்மா அழைத்தார்கள். “என்ன விஷயம்?” என்று கேட்க "முதலில் இந்த சிற்றுண்டியை சாப்பிடு" என்று கொழுக்கட்டை, பஜ்ஜி, tea எல்லாம் கொடுக்க பல நாட்கள் கழித்து சத்யா நன்றாக சாப்பிட்டாள்.

 

அவள் சாப்பிட்டாளே தவிர யாரிடமும் பேசவில்லை. “இன்னும் எங்கள் மீது கோபம் குறையவில்லையா சத்யா?” என்று சத்யமூர்த்தி கேட்க சத்யா பதில் ஏதும் சொல்லவில்லை. “இப்படி உக்காரும்மா, உன்கிட்ட முக்கியமான விஷயங்கள் சில பேச வேண்டும் என்று சொல்லபரவால்ல நான் நிக்கிறேன், நீங்கள் சொல்லுங்கள் என்றாள். “இந்தா இந்த கலெக்ஷன்ஸ் எல்லாம் பார்த்து ஒரு நல்ல டிரஸ் உனக்கும் நந்தனுக்கும் செலக்ட் பண்ணு, உங்களுக்கு reception வைக்க போகிறோம், இந்த ஷ்யாம் பிரச்சனை முடியட்டும் என்று தானே காத்திருந்தோம்என்று சொல்ல சத்யாவிற்கு சங்கோஜமாக இருந்தது.

 

வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் என் முதல் திருமணத்தை பற்றி தருணை பற்றி விசாரிக்க மாட்டார்களா? எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை என்றாள்.

 

தெரியாதவர்கள் யாரையும் அழைக்க போவதில்லை சத்யா, நம் குடும்பத்தார், சம்மந்தி குடும்பத்தார், மிகவும் நெருங்கிய நண்பர்கள் தான், நம் வீட்டு தோட்டத்தில் தான் நடத்த போகிறோம், எங்களுக்கு ஒரு ஆசை, நந்தனுக்கு இப்படி எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று, அதனால் மறுக்காதே சத்யா என்று சத்தியமூர்த்தி சொல்ல சத்யா சொன்னாள்அவருக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? இந்த reception எல்லாம் ஒன்றும் இல்லாமல் தானே போயிருக்கும், அன்னைக்கு நான் அவ்வளவு அழுது ஆர்பாட்டம் பண்ணியும் என் தவிப்பை நீங்கள் யாருமே புரிந்து கொள்ளவில்லையே, என்னால் ஏனோ அதை ஏற்க முடியவில்லை, அதனால் நீங்கள் ஏற்பாடு செய்யும் இது போன்ற கொண்டாட்டங்களில் என் மனம் ஈடுபட மாட்டேன் என்கிறது, என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி தன் அறைக்கு சென்று விட்டாள். இதை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஜாவிற்கு புன்னகை மலர்ந்தது.

 

தன் அறைக்கு சென்று அந்த மாலை நேரம் முழுதும் தருணுடன் விளையாடி நேரம் செலவழித்தாள். நந்தன் எப்போது தான் வருவாரோ என்று அவள் மனம் நந்தனை தேடியது. “ரொம்ப தான் கோவமா இருக்காரு, வள்ளி அக்காகிட்ட மட்டும் call பண்ணி என்னை பற்றி கேட்பாராம், என்னை ஒரு நிமிடம் பார்ப்பாராம், ஆனால் பேச மாட்டாராம், உங்களுக்கு அவ்வளவு இருந்தா எனக்கு மட்டும் இருக்காதா என்ன? பஞ்சாபிலேயே இருந்து விட போகிறீர்களா என்ன? இங்கே வந்து தானே ஆக வேண்டும், அப்போ பாத்துக்கிறேன் என்று மனதிற்குள் உறுதி எடுத்து கொண்டாள்.

 

கமலா அம்மா சத்யாவின் அறைக்கு வர சத்யா எழுந்து நின்றாள். கமலா அம்மாவும் அவளிடம் பேசவில்லை, அவளும் அவர்களிடம் பேசவில்லை. “தருண், டிபன் ready, நீ வா சாப்பிடலாம், தாத்தா உனக்காக காத்திருக்கிறார் என்று கமலா அம்மா தருணை அழைக்க சத்யா சொன்னாள்தருண் சாப்பிட்டு விட்டு இன்றைக்கும் அம்மாவோடு வந்து படுத்து கொள் என்று சொல்ல கமலா அம்மா சத்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டுஒரு வாரமாக அவனை எங்களோடு சேர விடமாட்டேன் என்கிறாயே, நந்தனிடம் இதற்கு ஒரு பஞ்சாயத்து வைக்க வேண்டும் போல என்று சொல்லஅவர்கிட்ட பஞ்சாயத்து என்றால் நான் பயந்து விடப்போகிறேனா என்ன? வரட்டும் அவருக்கே இருக்கிறது என்று சொல்ல கமலா அம்மா தன் சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு முகத்தை மீண்டும் கோபமாக வைப்பது போல் வைத்துக்கொண்டுநீ வா தருண் என்று அழைத்து சென்றார்கள்.

 

அவர்கள் சென்ற சில நிமிடங்கள் கழித்துஉள்ள வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே ஸ்ரீஜா உள்ளே வந்தாள். “என்ன இவர்கள் வருகிறார்கள்?” என்று யோசித்துக்கொண்டே சத்யாவாங்க என்றாள். “சாப்பிட வரவில்லையா?” என்று ஸ்ரீஜா கேட்கபசிக்கல, கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடலாம் என்று இருக்கிறேன், நீங்க சாப்பிட்டீர்களா?” என்று சத்யா திருப்பி கேட்கம்ம்ம் நான் சாப்பிட்டேன், படிப்பெல்லாம் எப்படி போய்கிட்ருக்கு?” என்று ஸ்ரீஜா கேட்கபரவால்ல, உங்களுக்கு எப்படி போய்கிட்ருக்கு?” என்றாள் சத்யா.

 

எங்க சத்யா, என் பையனுக்கு இரண்டு வயது தானே ஆகிறது, அவனை வைத்துக்கொண்டு படிப்பது ரொம்ப கஷ்டம்

 

அத்தை, சின்ன அத்தையும், மாமா எல்லாம் பார்த்துக்கொள்வேர்களே

 

பாத்துப்பாங்க, ஆனால் அதற்காக அவர்களே பார்த்துக்கொள்ளட்டும், தூங்க வைக்கட்டும், சாப்பாடு ஊட்டிவிடட்டும் என்று பிள்ளையை கை கழுவி விட முடியுமா? அப்படி விட்டுட்டு படிக்க எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை

 

சத்யாவிற்கு கொஞ்சம் இடித்தது. இருந்தாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல் இயல்பாக புன்னகையுடன் பேசினாள். அரை மணி நேரமாக ஸ்ரீஜா ஏதேதோ கேட்க சத்யாவும் மரியாதை நிமித்தமாக கடமைக்கே என்று பேசிகொண்டிருந்தாள்.

 

இன்னைக்கு நீங்க பேசினது நியாயமான விஷயம், இது என்ன முதல் கல்யாணமா? டிரஸ் செய்து, அலங்காரம் செய்து கொண்டு போய் எல்லோர் முன்னிலையிலும் நிற்பதற்கு என்று சொல்ல சத்யா பொறுமை இழந்தாள்.

 

இந்த ஸ்ரீஜா ஏன் இப்போது இப்படி blade போட்டு கொண்டிருக்கிறாளோ? Reception நடந்தாலோ நடக்கா விட்டாலோ இவளுக்கு என்ன?” என்று யோசித்து கொண்டிருக்கும் போதே ஸ்ரீஜா மீண்டும் பேசினாள்.

 

அப்படி ஒரு மொட்டை கடிதம் வந்தும் யாருமே நந்தன் அத்தானின் உயிரை பற்றி கவலைப் படவே இல்லை பாருங்கள், கமலா அத்தை கூட கூலாக தானே நின்றார்கள், நீங்கள் இன்னும் கூட அவர்களுக்கு உரைக்கும் படி கேள்வி கேட்டிருக்க வேண்டும், ஆயிரம் இருந்தாலும் நந்தன் அத்தானை கமலா அத்தை சுமந்து பெறவில்லையே, அதனால் தான் நந்தன் அத்தான் உயிரை பற்றி பதறாமல் இருந்து இருக்கிறார்கள், நீங்கள்..” என்று ஸ்ரீஜா சொல்லி முடிப்பதற்குள் சத்யா பேசினாள்.

 

ஸ்ரீஜா நீங்கள் பேசுவது மிகவும் தவறு, அவர்கள் வெளிப்படையாக பதறாமல் இருந்து இருக்கலாம், ஆனால் உள்ளுக்குள் பயந்து கொண்டு தான் இருந்து இருப்பார்கள், அவர்களும் உடைந்து அழுதால் நான் மேலும் பயந்து விடுவேன் என்று சொல்லி தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்கள், எனக்கு அவர்கள் மீது கொஞ்சம் கோபம் தான், நந்தனின் மீது அவர்களுக்கு அன்பு இல்லை, அக்கறை இல்லை என்று இல்லை, ஏன் என்றால் எனக்கு தெரியும் நந்தன் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு அக்கறை போல் யாருக்கும் இருக்காது, எனக்கு இருந்த கோபம் எல்லாம் ஷ்யாம் பற்றி புரிந்து கொள்ளாமல் நந்தன் மீது குருட்டு தனமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்களே என்று தான், ஆனால் நந்தன் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பொய் ஆகவில்லை, நான் தான் அவர்கள் அளவுக்கு நந்தன் பற்றி இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு மூச்செடுத்து விட்டு நான் சும்மா விளையாட்டுக்கு என்னை மதிக்காமல் ஹவுஸ் அர்ரெஸ்ட் வைத்து விட்டார்களே என்று அத்தை மாமாவுடன் கோபமாக இருப்பது போல் காட்டிக்கொண்டேனே தவிர உண்மையில் அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் வருத்தமும் கிடையாது என்று சொல்லி ஸ்ரீஜாவை பார்த்து புன்னகைத்தாள்.

 

சரி எனக்கு தூக்கம் வருகிறது, நான் வருகிறேன் என்று சொல்லம்ம்ம் சரி என்று சத்யாவும் புன்னகையுடன் அவளுக்கு விடை அளித்துவிட்டு பால்கனி சென்றாள்.

 

ஸ்ரீஜா திரும்பி நடக்க அறையின் வாசலில் நந்தன் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தாள். சத்யா எங்கே என்று ஸ்ரீஜா திரும்பி பார்க்க சத்யா நந்தனை கவனிக்காமல் பால்கனியில் சென்று நிற்பதை பார்த்தாள். நந்தன் ஸ்ரீஜாவுக்கு வழி விடுவது போல் வாசலின் வெளியே ஒதுங்கி நிற்கநாம் பேசியதை கேட்டிருப்பாரோ?” என்று பயந்து கொண்டே ஸ்ரீஜா வியர்க்க விறுவிறுக்கவாங்க அத்தான், நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம், நீங்க நல்லபடியா திரும்பி வந்துட்டீங்க என்றாள். நந்தன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் அவளை நேருக்கு நேராக பார்க்க ஸ்ரீஜாவிற்கு ஏதோ பயம் வயிற்றை பிசைந்தது. “நீங்க சத்யா கூடபோய் பேசுங்க, நான் வருகிறேன் என்று சொல்லி வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

 

நந்தன் மெதுவாக அறைக்குள் சென்று பால்கனியில் சத்யா நிற்பதை பார்த்துக்கொண்டே கதவை மெதுவாக சாத்தினான்.

 

பெட்டியையும் இன்னும் சில பைகளையும் ஓரமாக வைத்துவிட்டு பூனை போல சத்யாவின் பின்னே சென்று நின்று லேசாக குனிந்து அவள் கழுத்தில் முத்தமிட அவள் திட்டுக்கிட்டு திரும்ப நந்தன் தன் இரு கைகளாலும் அவள் இடுப்பை வளைத்து அவளை தனக்கருகே கொண்டு வந்தான்.

 

நீங்க எப்போ வந்தீங்க?” என்று கேட்க நந்தனின் கண்கள் இமைக்காமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்து தலையை குனிந்தாள்.

 

அவன் அவள் முகத்தை ஏந்த முயல அவள் பிடிவாதமாக அவனுக்கு அதிக முயற்சி செய்யும் வகையில் தடுக்க முயன்றாள். நந்தன் என்னையே தடுக்க முயல்கிறாயா என்பது போல் அவளை பார்த்துவிட்டு வேகமாக அவள் முகத்தை ஏந்தி அவள் இதழ்களில் முத்தமிட்டான். அவளின் தடுக்கும் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் இழந்தன. சிறிது நேரம் கழித்து அவன் அவளின் இதழ்களுக்கு விடுதலை அளித்து அவள் முகத்தை பார்க்க அவள் அவனை லேசாக நிமிர்ந்து பார்த்துவிட்டு வெட்கத்தில் கண்கள் மூடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

 

அவனும் அவளை சிறிது நேரம் அணைத்து அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு அவளை தூக்கிக்கொண்டு அறைக்குள் நடக்க சத்யாவிற்கு இதயம் படபடவென்றது.

 

கட்டிலில் மெதுவாக அவளை படுக்க வைத்து நந்தன் அவளை நோக்கி குனிய சத்யா அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள். “நான் உங்க மேல கோவமா இருக்கேன், அன்னைக்கே சொன்னேன் இல்லை, நீங்க என்னை கட்டிப்பிடிக்க கூடாது, முத்தமிட கூடாது.” என்று அவள் பேச பேச நந்தன் தன் சட்டையின் பட்டன் ஒவ்வொன்றாக கழட்ட சத்யா பேச்சு தடுமாறி கட்டிலில் பின் நோக்கி நகர்ந்தாள்.

 

மணி 8.30 தான் ஆகுது, சாப்பிட வேண்டாமா?” என்று கேட்கம்ஹ்ம்ம் நீ மட்டும் போதும் எனக்கு என்று நந்தன் சத்யாவை அணைத்தான்.

 

சத்யா அவனை தடுக்கவும் முடியாமல், வெட்கம் தடுக்க அவனை அணைக்கவும் முடியாமல் தடுமாறினாள். “தருண் ஒரு வாரமாக இங்கே தான் தூங்கினான், இன்றும் இங்கே தான் தூங்க வருவான் என்று நந்தனின் தலையை கோதி விட்டபடியே சத்யா சொல்லதருண் சாப்பிட்டுவிட்டு அப்பாவோடு தூங்க சென்று விட்டான் என்று அவளின் கழுத்தில் முத்தமிட்டபடியே நந்தன் சொன்னான்.

 

நீங்கள் தருணை பார்த்துவிட்டு தான் மாடிக்கு வந்தீர்களா?” என்று கேட்கஆமாம் என்னைக்குமே நமக்கு தருண் தான் first அல்லவா? வந்தவுடன் அவனை பார்க்காமல் உன்னை பார்க்க வந்து விடுவேனா?” என்று நந்தன் சத்யாவை பார்த்து புன்னகையுடன் கேட்கஎப்பவுமே அவன்மேல இப்படி பாசமா இருப்பீங்களா?” என்றாள் சிறிது கவலை தோய்ந்த குரலில். சத்யாவின் தலையில் லேசாக கொட்டினான் நந்தன்.

 

உனக்கு ஏன்டி என்மேல நம்பிக்கையே வர மாட்டேங்குது?” என்று முதலில் அலுப்பாக கேட்டவன் பிறகுதருண் தான் டா எனக்கு முதலில், அவன் மீது எனக்கு அன்பு அதிகமாகுமே தவிர குறையாது, நீ என்னை நம்பலாம் என்று சொல்ல சத்யா புன்னகையுடன் அவன் நெற்றியில் முத்தமிட்டாள். "இது நீயாக எனக்கு தரும் முதல் முத்தம் அல்லவா?" என்று கேட்க சத்யா முகம் சிவக்க புன்னகைத்தாள்.

 

நந்தன் அவளை ரசித்துவிட்டுஇங்க என்று தன் ஒரு கன்னத்தை காண்பிக்க சத்யா குறும்பாக அவனை முறைத்துவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். “ம்ம்ம் good girl, இப்போ இங்க என்று தன் மறுகன்னத்தை சுட்டி காட்ட சத்யா பாவமாக அவனை பார்ப்பது போல் பார்த்து அந்த கன்னத்திலும் முத்தமிட்டாள்.

 

ம்ம்ம் பரவால்லயே, இன்னைக்கு சமத்தா என் பேச்ச கேக்குறியே, அடுத்தது இங்க என்று தன் இதழ்களை காண்பிக்க சத்யா வெட்கத்துடன்அது தான் பால்கனியில் கொடுத்து விட்டீர்களே, அது போதும்" என்று அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முயல அவன் கைகள் அவளை எங்கெல்லாமோ தொட்டது.

 

"பஞ்சாபில் நடந்த கதைகளை சொல்லுங்களேன்" என்று தன் உடலில் எங்கெங்கோ ஓடிய அவன் கைகளை பிடித்து தடுக்க முயன்று கொண்டே கேட்டாள் சத்யா. "அந்த கதைகளை பிறகு பேசிக்கொள்ளலாம், என் அருமை பொண்டாட்டியே, என்னை அவ்வளவு எளிதில் திசை திருப்ப முடியுமா?" என்று கேட்டு அவன் தன் தேடலை அதிக படுத்த "உங்களுக்கு வேண்டுமானால் பசிக்காமல் இருக்கலாம், எனக்கு பசிக்கிறது என்று சத்யா கட்டிலில் உருண்டு ஓடி மறுபக்கம் இறங்க முயலஅப்படி எல்லாம் உன்னை இன்று தப்பிக்க விடுவேன் என்று கனவிலும் நினைக்காதே சத்யா, அந்த பசி எல்லாம் இன்று முக்கியம் இல்லை என்று அவளின் சேலையை பிடித்து இழுத்து மீண்டும் அவளை கட்டிலில் விழ வைத்து அணைத்தான் நந்தன்.

 

சத்யாஇனி தப்பிக்க வழி இல்லை, பேசாமல் சரணடைந்து விட வேண்டியது தான் என்பது போல் முகம் சிவக்க அவனின் அணைப்பையும், அவன் தேடலையும் ஏற்று அவனின் அன்புக்கு தன்னையே சமர்ப்பித்தாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018