Posts

Showing posts from February, 2021

Sms ch1 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 1 பாலத்தின் ஒரு பக்கத்தில் அந்த கார் நின்று கொண்டிருந்தது. மாலையில் ஆரம்பித்த மழை ஒரு வழியாக நின்றிருந்தாலும் காரின் வைப்பர்கள் டக் டக் என்று தூரலில் விழும் நீரை கடமையே கண்ணாக தள்ளி கொண்டிருந்தன. நந்தன் ஸ்டீயரிங் வீலில் இருந்து தலையை தூக்கி நிமிர்ந்து பார்த்தான். நாள் முழுதும் இருந்த இறுக்கம் அந்த தூக்கத்திற்கு பிறகு குறைந்ததாகவே உணர்ந்தான். தன் மணிக்கட்டை திருப்பி வாட்சில் நேரத்தை பார்த்தான். இரவு 10.30. க்ளோவ் பாக்ஸில் இருந்த தனது கைபேசியை எடுத்து ஒரு நிமிட யோசனைக்கு பின் switch on செய்தான். ஸ்ரேயாவிடம் இருந்து பல மெசேஜ்கள், அழைப்புகள். PA, அம்மா, அப்பா, ரோஹித் என்று வரிசையாக இன்னும் பல அழைப்புகள். எந்த உணர்ச்சி பிரதிபலிப்பும் இன்றி மீண்டும் மொபைலை க்ளோவ்பாக்ஸில் வைத்துவிட்டு மியூசிக் பிளேயரை on செய்து ஏதோ பாடலை இசையவிட்டான். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தினத்தை அவன் ஒரு பெண்ணுடன் செலவழிப்பது தான் வழக்கம். விவரம் தெரியாத வயதில் பண்ணை வீட்டிற்கு சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்தான். இன்றும் ஸ்ரேயாவை சந்தித்து அவளுடன் இரவை செலவிடுவதாக தான் அவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் நாள...