Sms ch 69 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 69

 

மறுநாள் காலை நந்தன் சீக்கிரமே எழுந்து குளித்து விட்டு தியானம் செய்து கொண்டிருந்தான். கொஞ்சம் தாமதமாக எழுந்த சத்யா நந்தன் குளித்துவிட்டு தியானம் செய்வதை பார்த்துவிட்டு தானும் குளிக்க சென்றாள். குளித்துவிட்டு கீழே சென்று அமுதா அக்காவிடம் என்ன டிபன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மாடிக்கு காபியோடு வந்தாள். நந்தன் தியானத்தில் இருந்து விழித்தவன் சத்யா குளித்து விட்டு காபியோடு வந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

 

எந்திரிச்சு குளிச்சு coffee எல்லாம் எடுத்துட்டு வந்துட்டியே, thanks டா என்று சத்யாவை பாராட்ட படியே காபியை வாங்கி கொள்ள இருவரும் பால்கனி சோஃபாவில் அமர்ந்து சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டே காபியை அருந்தினர்.

 

என்ன இன்னைக்கு சீக்கிரம் எந்திரிச்சுட்டீங்க? ஆபீஸ் போக போறீங்களா?” என்றாள் சத்யா.

 

இல்லடா உன்கூட தான் ரெண்டு நாள் முழுக்க முழுக்க spend பண்ண போறேன்னு சொன்னனே என்று சொன்னவன் சிறு அமைதிக்கு பின்ஆனா இன்னைக்கு கொஞ்சம் நாம வெளில போய்ட்டு வரலான்னு தோணுது, உனக்கு ok தானே?” என்று கேட்டான்.

 

ம்ம்ம் ok தான், ஆனா எங்க?”

 

First என்னோட favourite சிவன் கோயிலுக்கு, அடுத்தது அமைந்தகரை வீட்டிற்கு…”

 

அமைந்தகரை வீட்டிற்கு எதற்கு? அங்க கடைசியாக நடந்த விஷயங்களை நினைத்தாலே பயமாக உள்ளது என்றாள் சிறிது பதட்டத்துடன்.

 

அதனால் தான், கடைசியாக நடந்ததை தவிர்த்து விட்டு பாரு, அங்க தான் நான் உன்னை சந்தித்தது, ஒரே அறையில் தங்கியது, நீ சமைத்து நான் சாப்பிட்டது என்று நெறைய நல்ல விஷயங்கள் உள்ளன

 

இருக்கட்டும், அதுக்காக ஏன் அங்கே போக வேண்டும்?”

 

எனக்கு ஒரு ஆசை டா திரும்ப உன்னோடு அங்க போகணும் என்று, கணவன் மனைவுயாக, உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம், அடுத்தது வெளில எங்கயாவது சாப்பிட்டுவிட்டு, ஒரு படம் பார்த்துவிட்டு வரலாம் என்று தோன்றுகிறது

 

ம்ம்ம் எல்லாம் ok தான், ஆனால் அமைந்தகரை வீடு மட்டும் தான் கொஞ்சம் இடிக்கிறது, ஆனால் உங்கள் விருப்பமும் எனக்கு முக்கியம் தான், அதனால் போகலாம் என்றாள் ஒரு புன்னகையுடன்.

 

இருவரும் தயாராகி டிபன் சாப்பிட்டுவிட்டு அமுதா அக்காவிடம் லஞ்ச் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்கள்.

 

நந்தன் சத்யாவிற்கு காரின் கதவை திறக்க சத்யா “thank you” என்று சத்தமில்லாமல் ஒரு புன்னகையோடு வாய் அசைத்து சொல்லி அமர்ந்தாள்.

 

நந்தன் கண்ணாடியில் பார்த்து தன் கேசத்தை சரி செய்துவிட்டு coolers எடுத்து போட சத்யா அவனை ஓரக்கண்ணால் சைட் அடித்தாள்.

 

மனதிற்குள்இதற்கு முன்பு எத்தனை முறை பயந்து பயந்து இவருடன் இப்படி காரில் பயணம் செய்து இருப்போம், அப்போது எல்லாம் ஆசையாக இருந்தாலும் பயந்து பயந்து தான் அவரை பார்ப்பேன், இன்று இவர் என் கணவர், நல்லாவே சைட் அடிக்கலாம், ஆனா குறும்புக்காரன் அதை சொல்லிக்காட்டியே படுக்கையில் என்னை tease செய்வான், அதனால் அவனுக்கு தெரியாமல் அப்பப்போ சைட் அடிக்க வேண்டியது தான் என்று  நினைத்து அவ்வப்போது அவன் அறியாமல் ஓரக்கண்ணால் அவனை சைட் அடித்தாள்.

 

இருவரும் கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தார்கள்.

 

சத்யா அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்க நந்தன் கீழே குனிந்து புன்னகைத்துவிட்டுகார்ல வரும் போது தான் ஓரக்கண்ணால் சைட் அடித்தாய் என்று பார்த்தால் கோயில்ல கூட சைட் அடிக்கிறத நிறுத்த மாட்டியா டி செல்லக்குட்டி?” என்று கேட்டான் கிண்டலாக.

 

சத்யாஇவரிடம் இதற்கு மேல் எப்படி ஜாக்கிரதையாக இருப்பது?” என்று மனதிற்குள் நினைத்து கொண்டுஹலோ திருநீர் கண்களில் விழுந்து விடுவது போல் இட்டு இருந்தீர்களே என்றே பார்த்தேன் என்று சமாளித்தாள்.

 

அப்படின்னா சரி பண்ணிவிடு என்று சொல்லி லேசாக குனிய அவளும் கொஞ்சம் எக்கி அவன் கண்களுக்கு மேல் கையை வைத்து திருநீரை ஊதியும் தன் கைகளால் திருத்தியும் சரி செய்தாள். மீண்டும் அமர்ந்துவிட்டு அவனை பார்த்தவள் சிறிது யோசனைக்கு பிறகு கேட்டாள்.

 

என்னங்க, எனக்கு ஒரு doubt”

 

ஆரம்பிச்சிட்டியா உன் doubts ? பேசாம உன் பேர் சத்யாவை சந்தேக பிரியா என்று மாற்றி விடலாமா?” என்று கிண்டலாக கேட்க சத்யா விளையாட்டாய் முறைத்தாள்.

 

சரி சரி முறைக்காதே, கேளு என்றான் நந்தன்.

 

நீங்க எப்படிங்க ஒரு பக்கம் அந்த மாதிரி, அந்த மாதிரி..” என்று தலையை சாய்த்து சொல்லி லேசாக குனிந்து சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு மீண்டும் அவனை நேராக பார்த்துஇல்லை ஒரு பக்கம் அந்த மாதிரி தப்பு தண்டா பண்ணும் ஆசாமியா இருக்கீங்க, இன்னொரு பக்கம் சாமி சாமின்னு சுத்துறீங்க என்றாள்.

 

சாமி கும்பிட்டா அந்த மாதிரி, அந்த மாதிரி…” என்று அவனும் அவளை மாதிரியே தலையை சாய்த்துஅந்த மாதிரி எல்லாம் இருக்க கூடாதா?” என்று திருப்பி கேட்டான்.

 

இருக்கலாம், ஆனால் genuine doubt ப்பா, கிண்டல் பண்றீங்க பாத்தீங்களா? இல்லை உங்களின் ஒரு பக்கம் மிகவும் முற்போக்கு சிந்தனை உள்ளதாகவும், வாழ்க்கையில் நிறைய சுகங்களை அனுபவிக்கும் பக்கமாகவும், இன்னொரு பக்கம் ஆன்மீகம் நிறைந்தும் இருக்கிறதே என்று கேட்டேன்

 

முற்போக்கு சிந்தனை, ஆன்மீகம்.ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது என்பது போல் நினைத்து நீ கேள்வி கேட்கிறாய், ஆனால் இதில் ஒன்று இல்லாமல் இன்னொன்று இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன், ஆன்மீகம் என்பதே நம்மை கடவுளிடமும் கடவுளை நம்மிடமும் தேடுவதில் உள்ளது, நீ சொன்ன அந்த மாதிரி பக்கம், அதாவது சுகங்கள் தேடும் பக்கம், உடலுறவில் நம்மை, நம் துணையில் தேடுவதில் அடங்கி உள்ளது, நம்மை தேடி அறிந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், யார் ஒருவர் sex என்ற இச்சையை அனுபவித்து கடக்க முடியவில்லையோ அவர்களால் ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது என்று அவன் நிறுத்த சத்யா தொடர்ந்தாள்.

 

எனக்கு புரியல, அதெப்படி ஆன்மீக தேடலும், உடலுறவு தேடலும் ஒன்றாக முடியும், ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? இதை கடவுள் கேட்டால் என்ன நினைப்பார்? அடேய் நீங்கள் உறவு கொண்டு உங்களை உங்களில் தேடுவதும், ஆன்மீகத்தில் என்னை தேடி இறையை காண்பதும் ஒன்றா? என்று நம்மை பார்த்து சிரிக்க மாட்டாரா?”

 

சிரிக்க மாட்டார், see உடலுறவு ஒரு முக்கிய படிக்கட்டு ஆன்மீக தேடலில், அதை முழுமுதலாக அனுபவித்து கடந்தால் தான் கடவுளை உணர முடியும், உடனே விவேகானந்தர் எல்லாம் எடுத்து காட்டாதே, ஒரு சில ஞானிகளால் அது இல்லாமல் கூட கடவுளை உணர முடியும், ஆனால் சராசரி மனிதர்களுக்கு அது அத்தியாவசியமான படிக்கட்டு என்று சொல்லி நிறுத்திய நந்தன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

 

உடலுறவில் நாம் உச்சத்தை அடையும் வேளையில் ஒரு சில நிமிடங்கள் நம்மையே நாம் மறந்து இன்ப நிலை அடைவோம், நம் உடல் நமது கட்டுப்பாட்டில் இருக்காது, அப்படி ஒரு அலாதியான இன்ப நிலைக்கு நாம் செல்வோம், அது சிற்றின்பம் என்று சொல்லப்படுகிறது, ஆனால் அது சிறுமை அல்ல, அது ஒரு taster session, ஐஸ் கிரீம் கடையில் சாம்பிள் கொடுப்பார்களே, அதை போல, கடவுளை உணர்ந்தால் கூட இப்படி பட்ட உன்னையே மறந்த ஆனந்த நிலை தான் கிடைக்கும் என்று நமக்கு உணர்த்திக்காட்டும் taster session என்று சொல்லலாம், ஆனால் சிற்றின்பம் ஒரு சில நிமிடங்களே நிலைக்கும், நம் உடம்பில் இளமையும் வளமையும் இருக்கும் வரை கிடைக்கும், ஆனால் கடவுளை உணரும் பேரானந்த நிலை உடம்பில் ரத்தம் சுண்டினாலும் கிடைக்கும்.

 

அதனால் தான் இரு ஜீவன்கள், ஆடு, மாடு, பாம்பு, மான் என்று விலங்கினமாக இருந்தாலும் சரி ஆறறிவு கொண்ட மனிதர்களாக இருந்தாலும் சரி, அந்த இரு ஜீவன்கள் தன்னை மறந்து ஒன்றிணையும் வேளையில் அவர்களை disturb செய்வது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது, அவர்கள் ஒரு சில நொடிகள் இறையை காணும் தருணம் அது, உயிர்களை படைக்கும் ஆற்றல் பெற்றது, புனிதமானது,” என்றான் நந்தன்.

 

ஸப்பா என்னென்னமோ சொல்றீங்க போங்க, எனக்கு இந்த அளவுக்கு எல்லாம் ஆன்மீகம் பற்றி தெரியாது, ஏதோ பிரச்சனை என்றால் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், சந்தோஷம் என்றால் நன்றி சொல்வேன், அவ்வளவு தான் எனக்கும் அவருக்கும் உள்ள டீலிங்

 

அதுவும் நல்ல டீலிங் தான், தவறில்லை, அப்படியே maintain பண்ணு, சரி வா புறப்படுவோம் என்று எழுந்த நந்தன் கையை நீட்ட சத்யா அவன் கையை பிடித்து எழுந்து நின்றாள்.

 

இருவரும் கோயிலில் இருந்து காரில் புறப்பட நந்தன் காரை அமைந்தகரை நோக்கி ஓட்டினான்.

 

உனக்கு ok தான?” என்று அவன் மீண்டும் கேட்கம்ம்ம் ok தான், அதோடு இல்லாமல் நீங்கள் என் அருகில் இருக்கும் போது நான் ஏன் அமைந்தகரை செல்ல பயப்பட வேண்டும்?” என்று சத்யா சொல்லி நந்தனை பார்த்து புன்னகைத்தாள்.

 

ஒரு சிறு அமைதிக்கு பின் நந்தன் கேட்டான். “தமிழ் பாட்டெல்லாம் கேட்ருக்கியா? பிடிக்குமா?” என்று கேட்கஅம்மா கேக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் கேட்ருக்கேன் என்றாள்.

 

ரொம்ப நாள் ஆசை, உன்கூட வரும் போது கேக்கறதுக்குன்னே தேடி தேடி கொஞ்சம் இளையராஜா, ARR பாடல்கள் எல்லாம் சேகரித்து வைத்தேன், அதான் play பண்ணலாமான்னு கேக்குறேன்

 

என்னமோ என்னிடம் கேட்டு தான் எல்லாம் செய்வது போல் தன்மையாக பேசுவதை பார் என்று சத்யா விளையாட்டாய் கோபப்பட,

 

நந்தன்நீ இப்படி எல்லாம் அடிக்கடி என் காலை வாருவாய் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை சத்யா, பயந்து பயந்து கனிவாய் பேசி கொஞ்சி கொஞ்சி பேசும் அடக்கமான மனைவியாக இருப்பாய் என்று எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாந்துவிட்டேன், ப்ச் எல்லாம் என் தலை எழுத்து என்று நந்தன் பரிதாபமாக பேச,

 

சத்யாபோதும் போதும் தன்னிரக்கம், பாட்டை போடுங்கள் என்று மிரட்டுவது போல் சொல்லசரிங்க மேடம், நீங்க சொன்னா மறுப்பேச்சு ஏது?”என்று ஒரு playlist தேர்வு செய்து பாடவிட்டான்.

 

சத்யாவும் கைகளில் தாளம் போடுவது போல் தயாராக இருக்க முதல் பாடல் ஒலித்தது. “நேத்து ராத்திரி யம்மா..” சத்யா நந்தனை திரும்பி பார்த்து முறைக்க நந்தன் சிரித்து கொண்டிருந்தான்.

 

இதை தான் என்னுடன் சேர்ந்து கேட்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசைப்பட்டு சேகரித்த பாடல்களா? கார் drive பண்ணிட்டு இருக்கீங்களேன்னு பாக்குறேன், இல்லன்னா..” என்று அவள் தன் கைகளை குத்துசண்டை வீரர் போல் மடக்கி காண்பிக்க நந்தன் வாய்விட்டு சிரித்தான்.

 

எல்லா கோபத்தையும் சேர்த்து வை, இரவில் என்னை ஒரு வழி பண்ணிவிடு, ஓகேவா? காத்திருக்கிறேன் என்று சத்யாவை பார்த்து புன்னகையுடன் கேட்டான்.

 

ஓஹோ என் கோபத்தை எல்லாம் அப்படி மாற்ற வேண்டும் என்று ஆசையாக்கும், இதுக்காகவே இன்னைக்கு உங்களை பட்டினி போடுறேன்

 

அதெல்லாம் போட மாட்டாய், போடவும் முடியாது, ஐயா பக்கத்துல இருக்கும் போது உன்னால் விலகி இருக்க முடியாது

 

over confident, பாக்கலாம் என்றாள்.

 

இருவரும் சிறிது நேரம் அமைதியாய் வர அடுத்த பாடல் ஒலித்தது.

 

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ…”

 

சத்யாரொம்ப சேட்டை நீங்க என்றாள் ஒரு புன்னகையுடன்.

 

இந்த பாட்தெல்லாம் கேட்டு அனுபவிக்கனும் செல்லக்குட்டி

 

அடுத்தது என்ன? கட்டிப்புடி கட்டிப்புடி டா வா?” என்று அவள் குறும்பாய் கேட்கப்ச் பாத்தியா? இந்த பாட்டு எனக்கு தோணாம போச்சு பாரு, அதுக்கு தான் என் சத்யா குட்டி வேணுங்கறது, வெளில பாக்க தான் அப்பாவி, ஆனால் நாலு சுவற்றுக்குள் பண்ற சேட்டை எல்லாம் அடப்பாவி தான்என்று கிண்டல் செய்தான்.

 

சத்யாபோ டா, இப்படியே tease பண்ணிட்டே இரு, கண்டிப்பா உனக்கு பட்டினி தான் என்றாள் ஆட்காட்டி விரலை நீட்டி முழக்கி.

 

அடுத்த பாடல்ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு, இன்னும் தூங்காம தவிச்சிருக்கு…” என்று ஓட சத்யா player நிறுத்த போனாள்.

 

ஹேய் ஹேய் நிறுத்தாத, பாட்டு சூப்பரா இருக்கும், இந்த பாட்டை நீ கேட்ருக்கியா? பாத்திருக்கியா? பானுப்ரியா செமையா act பண்ணிருப்பாங்க என்று சொல்லஅவங்களையும் சைட் அடிச்சுட்டீங்களா?” என்றாள் கிண்டலாக.

 

நந்தன் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகையுடன் அவளை பார்த்தான். அமைந்தகரை வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்க சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சத்யாவை அழைத்து சென்றான்.

 

ஆமாம் நடந்த கலேபரங்களில் நான் மறந்தேவிட்டேன். யார் வாடகை கொடுத்தது, ஏன் நாம் இன்னும் இந்த வீட்டை காலி செய்யாமல் இருக்கிறோம், வீடு கூட யாரோ கிளீன் செய்தது போல் சுத்தமாக உள்ளதே என்றாள் அடுப்படியை சுற்றி பார்த்துக்கொண்டே.

 

First forensics காக வைத்திருந்தோம், பிறகு எல்லாம் முடிந்ததும் நான் தான் வீட்டு owner இடம் சொல்லி ஆட்கள் வைத்து கிளீன் செய்ய சொன்னேன், நீ தேறி வந்து உன் பொருட்களை pack செய்ய வேண்டும், ஷ்யாம் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் உன்னை இங்கே அழைத்து வர முடியாது அல்லவா? அதான் எல்லாம் சரி ஆகுற வரைக்கும் வாடகை கொடுக்கலாம் என்று போன மாத வாடகையை நான் தான் கொடுத்தேன், நீ IAS முடித்து கலெக்டர் ஆனதும் காசை திருப்பி கொடுத்துவிடு, சரியா?”

 

ஆட்கள் வைத்து கிளீன் செய்ய தெரிகிறது, அதே ஆட்களை வைத்து pack செய்து பொருட்களை என்னிடம் ஒப்படைத்து இருக்கலாமே, வாடகையை விட அது கம்மியான செலவு தான் ஆகி இருக்கும், அதனால் நீங்கள் கொடுத்த காசில் பாதியை வேண்டுமானால் திருப்பி தருகிறேன் என்றாள் சத்யா கராறாக.

 

பரவால்லயே இப்போதான் பிசினஸ் பண்றவன் wife மாதிரி பேசி இருக்க என்று சத்யாவை அணைக்ககதவு எல்லாம் திறந்து இருக்கு, விடுங்க என்று அவன் அணைப்பில் இருந்து தன்னை தானே விடுவித்து கொண்டு நகர்ந்தாள்.

 

சரி சரி உனக்கு முக்கியமா ஏதாவது தேவைப்பட்டால் எடுத்து வைத்துக்கொள் என்று அவன் படுக்கை அறை செல்ல சத்யா தயங்கி அடுப்படியிலேயே நின்றாள்.

 

ஏன் அங்கேயே நிக்குற?” என்று நந்தன் கேட்கஇல்லை எனக்கு அந்த பாவி முகம் தான் ஞாபகம் வருகிறது என்று சிலையாக நின்றாள்.

 

no அப்படி வரக்கூடாது, இங்கே நாம் முதலில் சந்தித்தது தான் ஞாபகம் வர வேண்டும், நீ, நான், தருண் மூவரும் ஒன்றாக இருந்த நினைவுகள் தான் ஞாபகம் வரவேண்டும், வா வா என்று சொல்லி அவள் கையை பிடித்து படுக்கை அறை அழைத்து வந்தான்.

 

சத்யாவை பீரோவின் கண்ணாடி முன் நிறுத்தி நந்தன் அவளின் பின்னால் நின்று அவள் வயிற்றில் தன் இரு கைகளையும் சுற்றி அவள் கழுத்தில் தன் முகத்தை வைத்து நின்று கண்ணாடியில் பார்த்தான். சத்யாவும் தன் முகத்தால் அவன் முகத்தை லேசாக இடித்து விட்டு புன்னகைத்தாள்.

 

அன்னைக்கு இப்படி உன்னை அணைக்க வேண்டும் என்று ஆசை, உன் தவிப்பும் எனக்கு புரிந்தது, ஆனால் நான் பாட்டுக்கு உன்னை அணைத்து எங்கே நீ கோபப்பட்டு என்னை வெறுத்து விடுவாயோ என்று என் ஆசையை கட்டுப்படுத்திக்கொண்டேன், இன்னைக்கு அந்த பயம் எல்லாம் இல்லாம உரிமையா இப்படி கட்டிப்பிடிக்கறதுல இருக்க சுகம் இருக்கே..” என்று சொல்லிக்கொண்டே சத்யாவின் கழுத்தில் இருந்து விலகி நிமிர்ந்தவன் சத்யாவின் இடது தோளில் கை வைத்து அவள் ப்ளௌசில் இருந்த safety pin கழட்டிறனான்.

 

சத்யா திடுக்கிட்டுஎன்ன இது?” என்று சரிந்து விழும் சேலையை பிடித்துக்கொண்டே திரும்பி நின்று கேட்டாள்.

 

என்ன இதுன்னு புரியலையா உனக்கு என்று casual ஆக பேசிக்கொண்டே அவள் சேலையை உருவஐயோ புரியுது, ஆனா இங்க எதற்கு?” என்று தன் சேலையை காப்பாற்றி கொள்ள போராடினாள்.

 

சேலை முழுவதையும் கழற்றியவன் சத்யாவை இழுத்து தன் கைகளுக்குள் கொண்டு வந்தான். “இந்த வீட்டுல உன்னோடு இப்படி எல்லாம் இருக்க ஆசை, அதான் என்று அவள் இதழ்களை முத்தமிட்டான்.

 

அவன் முத்தமிட்டு கொஞ்சம் இடைவெளி விடஅங்க அவ்வளவு பெரிய வீடு, அறை, கட்டில், ac என்று எல்லா வசதிகளும் இருக்கும் போது இந்த ஓட்டு வீட்டில் இந்த சின்ன அறையில் சின்ன கட்டிலில் இந்த வெயிலில் உங்களுக்கு ஏன் இந்த கஷ்டம், வீட்டுக்கு வாங்க, பட்டினி எல்லாம் போட மாட்டேன், அங்க போய் உங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் தருகிறேன் என்று அவன் மூக்கை பிடித்து கிள்ளி விலக முயன்றாள்.

 

ம்ஹ்ம்ம் இந்த சின்ன வீட்டுல தான பல நாள் அழுது கஷ்டப்பட்டு வாழ்ந்துட்டு இருந்த, இங்க கொஞ்சம் சந்தோஷமாகவும் இருக்கலாம், எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை, in fact என்னோட ரொம்ப நாள் ஆசை உன்னோடு இங்கே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று என்று சொல்லி மீண்டும் சத்யாவை அணைத்து அவள் முதுகில் அவன் கைகளை படரவிட்டு அவன் லீலைகளை ஆரம்பிக்க சத்யாஎன்ன இது சின்ன பிள்ளை போல் அடம் பிடிக்கிறீர்கள், வாசல் கதவு வேறு திறந்து இருக்கு என்று சிணுங்கினாள்.

 

அதான் பிரச்சனையா? நான் அப்பவே அந்த கதவை மூடிவிட்டேன் என்று சொல்லி அந்த கட்டிலில் சத்யாவை சாய்த்தான்.

 

சத்யா அவன் நெஞ்சில் கைவைத்து தடுத்துக்கொண்டேகோயிலுக்கு போய்ட்டு வந்து.” என்று அவள் இழுக்கஹேய் மறுபடியும் கோயிலை பற்றி ஆரம்பிக்காதே என்று அவன் அவளை தண்டிப்பது போல் கடிக்க ஆரம்பித்தான்.

 

ஆரம்பிக்கல சாமி, உங்களோட இந்த கடியை கூட தாங்கி கொள்ளலாம், அந்த lecture கடியை தாங்க முடியாது என்று கிண்டலாக சொல்ல “lecture ? கடியா? பாப்பா பாவம் சந்தேகம் கேக்குதேன்னு explain பண்ணினா lecture கடி என்றா சொல்கிறாய், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி அவன் அவளின் மீதி ஆடைகளையும் களைய அவள் கொஞ்சம் பயந்து வேண்டாம் என்று சொல்லி அந்த சின்ன கட்டிலில் நகர வழி தெரியாமல் விழிக்க அவன் அவளை வேறு விதமாக தண்டித்தான். சிறிது நேரத்தில் சத்யாவும் அந்த தண்டனையை, அது தரும் வலியை விரும்பியே ஏற்றாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018