Sms ch 67 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 67

 

இரவு மணி 12.30 இருக்கும். இடது கையில் சத்யாவை அணைத்த படி கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்த நந்தன் வலது கை பக்கம் இருந்த drawer ன் மேல் இருந்த water bottle எடுத்து தண்ணீரை குடிக்க ஆரம்பித்தான். ஒரு water bottle முழுவதும் குடிக்க சென்ற அவனை சத்யா தடுத்தாள்.

 

நந்தன் அவள் தடுப்பதை பார்த்துஎன்ன?” என்பது போல் கேள்வியாய் தலையை அசைக்கஎல்லாத்தையும் குடிச்சிடாதீங்க, எனக்கு வேணும் என்றாள்.

 

உனக்கு எதுக்கு டி? Hard work பண்ணினது நான் தான் என்று சொல்லி மெலிதாக புன்னகைக்க சத்யா அவன் நெஞ்சிலும் கைகளிலும் சிணுங்கி கொண்டே தன் கைகளால் குத்தினாள்.

 

ஒரு கையால் தன்னை அடிக்கும் அவள் கைகளை பிடித்து தடுத்து கொண்டே தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தான் நந்தன். “டேய் எனக்கும் குடு டா என்று அவள் கோபமாக கேட்கஎன்னது டாவா?” என்று கேட்டுக்கொண்டே அந்த water bottle வைத்துவிட்டு  சத்யாவை கட்டிலில் மீண்டும் சாய்த்து அவளின் இரு கைகளையும் தன் கைகளால் மேலே உயர்த்தி பிடித்துஎன்ன சொன்ன? திரும்ப சொல்லு?” என்று நந்தன் மிரட்டுவது போல் கேட்க சத்யா குறும்பான புன்னகையுடன் மெதுவாக சொன்னாள். “எனக்கொன்னும் பயமில்லை, திரும்ப சொல்லிடுவேன், சரி வயசுல பெரியவர் ஆச்சே, போனா போகுதேன்னு பாக்குறேன் என்றாள் தலையை ஒரு பக்கமாக திருப்பி.

 

அவன் அவள் கைகளை அழுந்த பிடிக்க அவள்ஸ்ஸ்ஸ்.கை வலிக்குது என்றாள். இருந்தும் அவன் பிடியை விடாமல்பயமில்ல இல்ல, அப்போ திரும்ப சொல்லு என்று நந்தன் மீண்டும் சவாலாக கேட்க சத்யா மனதிற்குள் நினைத்தாள். “மறுபடியும் டா போட்டு அழைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாதாக்கும், வேண்டுமென்றே சீண்டுவதை பார் என்று நினைத்தவள்சொல்ல மாட்டேன் என்றாள்.

 

ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் என்று சொல்லி மீண்டும் கட்டிலில் படுத்தவன்போ போய் தண்ணீர் எடுத்து வா என்றான்.

 

என்ன விளையாடுறீங்களா? அருமை பொண்டாட்டின்னு கொஞ்ச தெரியுதுல்ல, அந்த பொண்டாட்டிக்கு சொட்டு தண்ணி வைக்காம எல்லாத்தையும் நீங்க தானே குடிச்சீங்க, நீங்களே போய் எடுத்துட்டு வாங்க என்றாள் சத்யா.

 

என்னை பார்த்தாலே பயந்து பயந்து பேசும் சத்யாவா இது? ஓடி ஒளியும் சத்யாவா இது? அந்த சத்யாவா இப்படி என் பேச்சுக்கு எதிர்த்து மறுப்பேச்சு பேசறது?” என்று நந்தன் வியப்பாக கேட்ககனவு கினவு கண்டீர்களா? உங்களை பார்த்து நான் என்னைக்கு பயந்து பேசி இருக்கேன், ஓடி ஒளிஞ்சு இருக்கேன்?” என்றாள் அலட்சியமாக.

 

நந்தன் அவளை இழுத்து தன் கைகளுக்குள் கொண்டு வர அவள் திமிருவதை பொருட்படுத்தாமல் அவன் நெஞ்சில் படுக்க வைத்து கொண்டு சொன்னான்.

 

எதை சொல்றது? அமைந்தகரையில் என்னை பார்த்து பயந்து துரத்துவாயே, அதை சொல்லவா? இல்லை காரில் உன்னை அழைத்து வரும் போதெல்லாம் இவன் எங்கேயாவது அழைத்து சென்று ஏதாவது செய்து விடுவானோ என்று பயப்படுவாயே அதை சொல்லவா?” என்று அவன் யோசிப்பது போல் பாவனை செய்து கொண்டே பேச அதெல்லாம் நீங்கள் ஷ்யாம் அனுப்பிய ஆளோ என்று நினைத்து பயந்து பேசி இருப்பேன், மற்றபடி உங்களை பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” என்று அலட்சியமாக தலையை சிலுப்பி பதில் கேள்வி கேட்டாள் சத்யா.

 

ஷ்யாம் அனுப்பிய ஆளாக இருக்குமோ என்பதெல்லாம் சும்மா, உனக்கு என்னை பார்த்தால் ஒரு attraction, எங்கே இவனோட அழகுல, கெத்துல விழுந்துடுவோமோன்னு பயம் என்றான் கிண்டலாக.

 

சத்யா நிமிர்ந்து உட்கார்ந்துஆஹா ஏன் நிறுத்தி விட்டீர்கள்? உங்களை பாராட்டி நீங்களே ஒரு பாராட்டு கடிதம் பக்கம் பக்கமாக வாசிக்க வேண்டியது தானே? ஆள பாரு, இவரு அழகுல கெத்துல மயங்கிட்டாங்களாம், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, உங்களை கெட்டவன் என்று நினைத்து தான் பயந்தேன்

 

ஓஹோ அப்போ நான் நல்லவன்னு தெரிஞ்ச பிறகு நீ என்னை பார்த்து பயந்ததே இல்லை, என்னை தவிர்த்து ஓட முயற்சி செய்ததே இல்லையா?” என்று கேட்கநீங்க நல்லவர்ன்னு தெரிஞ்ச பிறகு நான் என்னைக்கு உங்களை பார்த்து பயந்து ஓடி இருக்கிறேன்?” என்று கேட்டாள்.

 

உன்னை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வந்த போது கம்பெனி பக்கத்துல தான் இருக்கு, நான் நடந்தே போய்க்கிறேன்னு இறங்கி ஓட முயற்சி செய்யவில்லையா?”

 

அது.. அது……. நீங்கள் சாப்பிட அழைத்தீர்கள், எனக்கு பசிக்கவில்லை, அதனால் நேரத்தை வீணாக்காமல் கம்பெனிக்கு போகலான்னு……” என்று அவள் சமாளிக்க முயன்றாள்.

 

நந்தன் அவளை கிண்டலாக பார்ப்பது சத்யாவிற்கு வெட்கத்தை வர வைத்தது.

 

அப்புறம் அமைந்தகரையில் இருக்கும் போது உன் தலையில் ஒட்டி இருந்த ஒட்டடையை கண்ணாடியை பார்த்து தட்டி விட்டு கொண்டிருந்தாய் அல்லவா?” என்று அவன் சொல்ல சத்யாவும்

 

ஆமாம் தட்டிவிட்டேன், அதற்கு என்ன இப்போது?” என்று புரியாதவளாய் அவனை பார்த்து கேட்க அவன் தொடர்ந்தான்.

 

அப்போ உன் பின்னாடி வந்து நின்னு லேசாக குனிந்து நானும் உன்னோடு சேர்ந்து கண்ணாடியை பார்த்தேனே என்று சொல்லி அவன் நிறுத்த சத்யாஅச்சோ நமக்கு தான் ஏதோ அவமானம் ஆக போகிறது என்பது போல் தலையை கீழே குனியஅப்போ இதயம் படபடக்க பயந்து போய் அடுப்படிக்கு ஓடினாயே, அதை சொல்லவா? இல்லை அன்று உன் கையை பிடித்ததும் தாம் தூம் என்று குதித்துவிட்டு ஓடினாயே, அதை சொல்லவா? இல்லை.” என்று அவன் கொஞ்சம் இடைவேளை விட

 

ச்ச இவரை பார்க்கும் சமயங்களில் என் இதயம் படபடவென்றது, என் வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது என்று எல்லாவற்றையும் கவனித்து இருப்பார் போல, எல்லாவற்றையும் சொல்லிக் காட்டி என் முகம் சிவக்க வைக்க போகிறார் என்று நினைத்தவள்போதும் போதும், நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம், தெரியாம தண்ணி எடுத்துட்டு வர சொல்லிட்டேன், ஆள விடுங்க சாமி என்றவளை

 

என் செல்லக்குட்டி, நீ வேண்டான்னு சொன்னாலும் ஒன்னு ஒன்னா நான் சொல்லத்தான் போறேன், அதுக்கு முன்னாடி நீ போய் தண்ணீர் கொண்டு வா என்று அவள் கன்னத்தை கிள்ளநான் எப்படி இப்படி போவது, சேலை எல்லாம் கட்ட நேரம் ஆகும், என் செல்லம் இல்ல, நீங்க போய் தண்ணீர் எடுத்துட்டு வருவீர்களாம், நான் உங்களுக்கு நெறைய உம்மா தருவேனாம் என்று சத்யா அவனை கொஞ்சினாள்.

 

ம்ம்ம் இப்போ சொன்ன பாரு, இது நல்ல டீல், இந்த மாதிரி பேச பழகிக்கொள், சரி நான் சீக்கிரமா போய்ட்டு தண்ணீர் எடுத்து கொண்டு ஓடி வந்து விடுவேன், நீ தூங்கி விடக்கூடாது, சரியா? நான் போய் தண்ணீர் எடுத்து வரும் கேப்பில் நீ தூங்கிடுவியோன்னு தான் உன்னை தண்ணீர் எடுத்து வர சொன்னேன், சரி பரவால்ல, நான் எடுத்துட்டு வரேன், ஆனா நீ தூங்கினன்னு வச்சுக்கோ, அவ்வளவு தான் சொல்லிவிட்டேன் என்று அவளை மிரட்டி அவளுக்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு வேகமாக ஷார்ட்ஸ், ஷர்ட் அணிந்து கொண்டு கீழே அடுப்படி சென்றான்.

 

அங்கே மெதுவாக கதவை திறந்து லைட் on செய்து RO தண்ணீரை பிடித்தவனுக்கு வயிற்றில் பசி கிள்ளியது. சாப்பிட ஏதாவது இருக்குமா என்று அவசரமாக சில பாத்திரங்களை உருட்ட ஒரு தட்டு தடாலென கீழே விழுந்தது. அவசர அவசரமாக அதை எடுத்து வைத்துவிட்டு யாராவது வருவதற்குள் சென்று விட வேண்டும் என்று எண்ணி ஒரு பாத்திரத்தில் இருந்த கொழுக்கட்டைகளையும், பஜ்ஜிகளையும் பார்த்துசூப்பர் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு அவற்றில் சிலவற்றை எடுத்து வேக வேகமாக வாயில் வைத்து அடைத்துக்கொண்டே மீதியை எடுத்து ஒரு தட்டில் வைத்தான். “பாவம் சத்யாவும் சாப்பிடவில்லை என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டே புறப்பட தயாரானவனுக்கு பஜ்ஜி தொண்டையில் சிக்கி விக்கல் வந்தது.

 

ஒரு கையில் தட்டை வைத்துக்கொண்டே இன்னொரு கையால் தண்ணீர் பாட்டிலை திறக்க முயல அது முடியாமல் மீண்டும் கொழுக்கட்டை இருந்த தட்டு கீழே விழுவது போல் சாய அதை ஒருவரின் கை விழாமல் தடுத்து பிடித்து வாங்கி கிட்சன் டாப் மேல் வைத்தது. “இந்தா இந்த தண்ணியை குடி என்று கமலா அம்மா ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து அவனுக்கு ஊட்டினார்கள். நந்தனும் கண்களால் அவர்களுக்கு நன்றி என்பது போல் பார்த்துக்கொண்டே புன்னகையுடன் அவர்கள் கொடுத்த தண்ணீரை குடித்து முடித்து இளைப்பாற மூச்சொன்றை எடுத்துவிட்டு “thanks அம்மா என்றான்.

 

கமலா அம்மாஇந்த கொழுக்கட்டை பஜ்ஜி போதுமா? இல்லை தோசை ஏதாவது ஊற்றி தரவா?” என்று புன்னகையுடன் கேட்கஇது போதும்மா, அது……பஞ்சாப்ல இருந்து வந்த tiredness நைட் சாப்பிடாமலே சீக்கிரமா தூங்கிட்டேன் இல்லையா, அதான் தூக்கத்துல திடீர்னு பசிக்க ஆரம்பிச்சிடுச்சு, அதனால் தான் ஏதாவது சாப்பிடலாம் என்று..” என்று தயங்கி இழுக்க கமலா அம்மா கேட்டார்கள்.

 

சத்யா கூட நைட் சாப்பிடாம சீக்கிரமா தூங்கி இருப்பாளே, அவளுக்கு கூட தூக்கத்துல திடீர்னு பசிச்சா என்ன பண்றது? இந்த கொழுக்கட்டை பஜ்ஜி ரெண்டு பேருக்கு பத்தாதே என்று கேட்க நந்தன்ஐயோ அம்மா கிண்டல் செய்கிறார்கள் போல என்று யோசித்துஅது.அது அவ தூங்கிட்டு தான இருக்கா, பசிச்சா ஏதாவது வந்து சாப்பிட்டு கொள்வாள், நான் இப்போ தூங்க போறேன், good night மா என்று அங்கிருந்து வேகமாக நகர முயன்றான் நந்தன்.

 

இருப்பா ஒரு நிமிஷம் என்று சொல்லி பிரிட்ஜ் ல் இருந்து ஒரு jug எடுத்து அதில் இருந்து ஏதோ பாலை இரண்டு டம்ளர்களில் ஊற்றிஇந்தாப்பா நாளைக்கு ஜில்லுன்னு குடிக்கலாம்னு பாதாம் பால் செஞ்சு வச்சிருந்தோம், நீயும் குடித்துவிட்டு சத்யா ஒருவேளை தூக்கத்தில் இருந்து பசியோடு எழுந்தாள் என்றால் அவளுக்கும் கொடு என்று சொல்லி பஜ்ஜி, கொழுக்கட்டை இருந்த தட்டில் அந்த இரண்டு டம்ளர்களையும் வைத்து கொடுத்து அனுப்பினார்கள். “thanks மா என்று சொல்லி நந்தன் மாடிக்கு சென்றான்.

 

கையில் ஸ்னாக்ஸ், பால் என்று வந்து நின்ற நந்தனை பார்த்த சத்யாஹேய்ய் செமையா பசிக்குதேன்னு நினச்சேன், சமத்தா எடுத்துட்டு வந்துடீங்க, வாங்க வாங்க சாப்பிடலாம் என்று அவன் கையை பிடித்து உட்கார வைத்து அவள் சாப்பிடநீங்களும் சாப்பிடுங்கள் என்று ஊட்டிவிட நந்தன் வெட்கப்பட்டு சிரித்தான். “பார்ரா என் செல்ல புருஷனுக்கு வெக்க படக்கூட தெரியுதே என்றாள் கிண்டலாக.

 

அம்மா என்னை கிட்சேன்ல பாத்தாங்க, அவங்களுக்கு நாம பண்ற சேட்டை புரிந்து விட்டது என்று நினைக்கிறேன், அவங்க பேசின விதத்துல ஒரு மாதிரி ஆகிடுச்சு, விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன் என்றான் புன்னகையோடு.

 

அச்சோ அத்தை பாத்தாங்களா, அதுவும் இந்த நேரத்துல? அவசரத்துல இப்படி சட்டை பட்டன் எல்லாவற்றையும் மாற்றி மாற்றி வேறு போட்டு வைத்திருக்கிறீர்களே, கண்டிப்பாக நாம பண்ற சேட்டை எல்லாம் புரிந்து இருக்கும், நாளைக்கு காலைல எப்படி அவங்க முகத்துல முழிக்க போறேனோ என்று சத்யா சிணுங்கினாள்.

 

ப்ச்ச் பரவால்ல விடு, அவங்க கணக்கு படி நமக்கு தான் எப்பவோ first night முடிஞ்சுடுச்சே, அப்பவே நீ வெக்கப்படல, இப்போ ஏன் வெக்கப்படணும்? என்று சொல்லி அவன் கண்சிமிட்ட சத்யா முறைத்தாள். “இருந்தாலும் நாளைக்கு நான் அவங்கள எப்படியாவது avoid பண்ணிடுவேன் பா, இல்லன்னா எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா ஆகிடும்

 

நிஜமாவா? வெக்கமா? உனக்கா?” என்று சொல்லிய நந்தனின் மேல் கொழுக்கட்டைகளால் அடி விழுந்தன.

 

ஹேய் அடிக்கறதுன்னா உன் கையால அடி, இப்படி சாப்பிடுற பொருளை வீணாக்காதே என்று அவள் கொழுக்கட்டைகளை வீச வீச ஒவ்வொன்றாக பிடித்து சாப்பிட்டு கொண்டே இருந்தான் நந்தன்.

 

போ டா, இது தான் சான்ஸ்ன்னு இது எல்லாத்தையும் கூட நீயே சாப்பிட்டுடுவ, இருக்கிற கொஞ்சத்தையாவது நான் சாப்டுட்டு வந்து தெம்பா உன்னை அடிக்கிறேன் என்று சத்யா வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்

 

சாப்டுட்டு வா, நீ வா போ ன்னு பேசறதுக்கு, டா போட்டு பேசறதுக்கு எல்லாத்துக்கும் இருக்கு உனக்கு என்று அவளை மிரட்ட அவள் அவனை நேராக பார்த்துபோ டா என்று வார்த்தை வெளியே வராமல் உதடுகளை மட்டும் அசைத்தாள்.

 

நந்தன் ஒரு புன்னகையோடு அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை கொஞ்சம் தொலைவில் இருந்து அவளை ரசித்துக்கொண்டு நின்றான்.

 

மீண்டும் அவர்கள் சேட்டை தொடர எப்போது தூங்கினோம் என்றே தெரியாமல் அவர்கள் தூங்க வெளிச்சம் பால்கனி வழியாக வந்து கட்டிலில் பயணம் செய்து அவர்கள் முகத்தில் வந்து விழுந்தது.

 

சத்யா கண்களை தேய்த்து கொண்டு எழுந்தாள்.

 

இவ்வளவு வெளிச்சமா இருக்கே, ரொம்ப நேரம் தூங்கிட்டோமோ? இந்த செல்ல புருஷன் எங்கே தூங்க விட்டார்?” என்று நந்தனின் முடியை கோதிவிட்டு bed க்கு side ல் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்க்க மணி 11 என்று காட்டியது.

 

சத்யா பதறிப்போய் நந்தனை எழுப்பினாள். அவன் எழுந்திருப்பது போல் தோன்றவில்லை. “ஐயோ எல்லாரும் என்ன நினைப்பார்களோ?” என்று வேகவேகமாக தன் துணிகளை அள்ளிக்கொண்டு பாத்ரூம் சென்று வேகவேகமாக குளித்து முடித்து வெளியே வந்தாள். ஒரு சேலையை எடுத்து கட்டிக்கொண்டு கதவை திறக்க போனவளுக்கு தயக்கமாக இருந்தது.

 

நந்தன் அப்போது தான் கண் விழிக்க எதிரே தவித்து கொண்டு நின்ற சத்யா அன்று தான் புத்தம் புதிதாக மலர்ந்து, கொஞ்சம் பனி துளிகளை தாங்கி நின்ற ரோஜா மலர் போல் தெரிந்தாள். நந்தன் புன்னகையோடு அவளை அருகே அழைத்தான்.

 

ப்ச்ச் கம்முன்னு இருங்க, மணி எத்தனை தெரியுமா? 11.30 ஆகுது, எப்படி கீழ போறதுன்னு தெரியாம நான் முழிச்சிட்டு இருக்கேன் என்றாள் அழாத குறையாக.

 

முழிச்சிட்டே நின்னு இன்னும் லேட்டாக்க போறியா? போ போ போய் உன் மாமியாரை சமாதானம் செய் என்று கிண்டலாக சொல்லிக்கொண்டே எழுந்து வந்து சத்யாவை பின்னாலிருந்து அணைத்து அவள் கழுத்தில் முத்தமிட்டான்.

 

போங்க உங்களுக்கு கவலையே இல்லை, எனக்கு தான் ரொம்ப சங்கோஜமா இருக்கு, தருண் வேறு பாவம், என்னை தேடிக்கொண்டு வந்தானா? கதவை தட்டினானா, ஒன்றுமே தெரியவில்லை என்று புலம்பினாள்.

 

ஹேய் இதுக்கெல்லாம் feel பண்ணாத டா, நான் வேணா கூட வரேன், வா, எனக்கு tired இருந்துச்சு, உனக்கும் fever இன்னும் குறையலன்னு அடிச்சு விடலாம் என்று சொல்லி நந்தன் அவள் கையை பிடித்து இழுக்கஒன்னும் வேண்டாம், நீங்களும் போய் குளித்து விட்டு வாருங்கள் முதலில் என்றாள்.

 

நந்தனும் வேகமாக குளித்துவிட்டு வந்து டிரஸ் செய்துகொண்டுசரி வா போகலாம் என்று மொபைலை எடுக்க அதில் கமலா அம்மா மெசேஜ் ஒன்று வந்திருந்தது.

 

நந்து நாங்கள் எல்லோரும் பண்ணை வீட்டிற்கு செல்கிறோம், வள்ளியும் பாட்டியும் பண்ணை வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள், அதனால் அவர்களை அழைத்து கொண்டு காண்பிக்க சென்றுள்ளோம், வீட்டில் அமுதா, செக்யூரிட்டி இருக்கிறார்கள். அமுதா சமைத்து வைத்திருப்பாள். பஞ்சாபில் ஒழுங்காக தூங்காமல் சாப்பிடாமல் இருந்து இருப்பாய், சத்யாவிற்கும் ஜுரம் இப்போது தான் குறைந்தது, நீங்கள் இருவரும் நல்லா சாப்பிட்டு rest எடுங்கள், இரண்டு மூன்று நாட்கள், அல்லது உங்களுக்கு தேவையான நாட்கள் ஓய்வெடுத்து விட்டு பிறகு நீங்கள் பண்ணை வீட்டிற்கு வந்தால் போதும்

 

நந்தன் ஒரு புன்னகையோடு அந்த மெசேஜ் படிக்க சொல்லி சத்யாவிடம் மொபைலை நீட்டினான்.

 

சத்யாவும் படித்துவிட்டுஅத்தைக்கு நம்ம குட்டு எல்லாம் தெரிஞ்சு போச்சேன்னு வெக்க படுறதா, இல்ல வருத்தப்படுறதா?” என்று கேட்கம்ம்ம் சந்தோஷப்படு, அம்மா இப்படி தான் குடும்பத்தில் ஒவ்வொருவரின் தேவையை அறிந்து அவர்கள் சொல்லாமலேயே அவர்கள் தேவைகளை ஏதாவது ஒரு வழியில் நிறைவேற்றி விடுவார்கள் என்று அவளை அணைக்கஆமாம் இப்படி ஒரு அத்தை கிடைப்பதற்கு சந்தோஷம் தான் பட வேண்டும் என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்து.

 

சரி வா நேற்றிலிருந்து ஒழுங்காக சாப்பிடவில்லை இருவருமே, முதலில் சாப்பிடலாம், அப்புறம் மற்றதெல்லாம்.” என்று நந்தன் இழுக்கஐயா சாமி, ஆள விடுங்க, நான் படிக்கணும் என்று சத்யா கைக்கூப்பரெண்டு நாளைக்கு no படிப்பு என்று அவள் கையை பிடித்து கீழே அழைத்து சென்றான் நந்தன்.

 

இருவரும் சாப்பிட்டுவிட்டு தோட்டத்தில் நடக்க சென்றார்கள்.

 

இந்த வீடும், தோட்டமும் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? இதை யார் கட்டினார்கள்?” என்று கேட்டாள் சத்யா.

 

ம்ம்ம் தாத்தா தான் அந்த காலத்துலயே இவ்வளவு பெரிய இடத்தை வாங்கியதாம், அப்போது வீடு கொஞ்சம் பழங்காலத்து வீடாக கட்டி இருந்தாராம், இவ்வளவு பெரிய வீடும் இல்லை, அதே சமயம் ரொம்ப சின்னதாகவும் இல்லை, ஓரளவுக்கு பெரிதாக கட்டி இருந்தாராம், இங்கே தான் என் அப்பா, அத்தை எல்லாரும் பிறந்து வளர்ந்தது, அப்புறம் சத்தியமூர்த்தி அப்பா தான் கொஞ்சம் நவீன முறையில் இவ்வளவு பெரிய வீடாக கட்டியது, நடுவில் பிசினஸ்ஸில் நெறைய நஷ்டம், பேசாமல் பிசினசை விற்றுவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள், இந்த இடத்தையும் வீட்டையும் வாங்க வேறு நெறைய போட்டி, சென்னையின் முக்கியமான ஏரியாவில் இருப்பதால் நல்ல விலைக்கு தருகிறோம் என்று நெறைய pressure, சில அரசியல் கட்சிகள் கூட மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள், அப்பா கூட பேசாமல் பிசினசும் நஷ்டம், வீட்டை விற்றுவிட்டு பண்ணை வீட்டிற்கு சென்று விடலாம் என்று சொன்னார், ஆனால் தாத்தா கஷ்டப்பட்டு வாங்கிய இடம், எல்லோரும் பிறந்து வளர்ந்த இடம், அப்பா கஷ்டப்பட்டு கட்டிய வீடு, எதையுமே அவ்வளவு எளிதில் விட எனக்கு மனசு வரல, அப்போதான் இந்த தொழிலை  எடுத்து நடத்த முடிவு செய்து நடத்த ஆரம்பித்தேன், நஷ்டத்தில் இருந்து தொழிலை காப்பாற்றி இந்த வீட்டையும் தக்க வைத்து கொண்டேன் என்றான் நந்தன்.

 

சத்யா அவனை பெருமையாக பார்த்தாள். “ஆனா ஒரு விஷயம் முடிவு பண்ணிடீங்கன்னா அதை அடையும் வரை ஓய மாட்டீர்கள் என்று மட்டும் தெரிகிறது என்றாள்.

 

தெரியுதா? நீயும் அப்படி தான், நீயே குறுக்கே வந்திருந்தாலும் உன்னை விட்டு கொடுத்திருக்க மாட்டேன்

 

ம்ம்ம் தெரியுது தெரியுது, அன்னைக்கு நான் என்ன சொல்லுவேன்னு யோசிக்காம தாலியை கட்டிவிட்டீர்களே, அப்போதே தெரிந்தது

 

பின்ன? உன்னை மாதிரி தானும் குழம்பி நம்மை விரும்பபுவர்களையும் குழப்ப சொல்கிறாயா? ஒரு விஷயத்துல இறங்கறதுக்கு முன்னாடி தான் நெறைய முறை யோசிக்கணும், இறங்கியாச்சுன்னா யோசிக்க கூடாது, அது உறவாக இருந்தாலும் சரி, பிசினசாக இருந்தாலும் சரி

 

ம்ம்ம் உங்ககிட்ட இருந்து நான் நெறைய விஷயம் கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது என்று சத்யா சொல்ல இருவரும் தோட்டத்தில் இருந்த சிறு பிள்ளையார் கோயிலை அடைந்து இருந்தார்கள். இருவரும் பிள்ளையாரை வணங்கிவிட்டு அங்கிருந்த குடிலில் அமர்ந்தார்கள்.

 

சரி அடுத்தது என்ன?” என்று நந்தன் கேட்கஎன்ன?” என்று அவனையே திருப்பி கேட்டாள்.

 

அவள் தலையில் லேசாக கொட்டிவிட்டுஅடுத்தது நீ IAS பாஸ் செய்ய வேண்டும், கொஞ்ச நாட்களாக கவனிக்காமல் இருக்கும் தொழிலை நான் என் பார்வையில் கவனித்து கொஞ்சம் முன்னேற்ற வேண்டும், தருணுக்கு ஒரு நல்ல டாக்டரிடம் opinion கேட்க வேண்டும், அவன் காலை குணப்படுத்த முடியுமா அல்லது தாங்கி தாங்கி நடக்காமல் prosthetic லெக் போல் ஏதாவது fix செய்ய முடியுமா என்று கலந்தாலோசிக்க வேண்டும் என்று நந்தன் சொல்ல

 

நீ ஏன் டா இப்படி இருக்க? உன்னை பார்த்து நான் எவ்வளவு தான்டா பெருமை படுவது? கொஞ்சம் கேப் விடுடா கண்ணா, இல்லன்னா உன் மயக்கத்துலயே தான்டா நான் இருப்பேன், அப்புறம் எங்கிருந்து நான் படிப்பது?” என்று சத்யா சொல்லஎனக்கு புரிஞ்சுடுச்சு, நல்லா புரிஞ்சுடுச்சு என்றான் நந்தன்.

 

என்ன புரிஞ்சுடுச்சு?”

 

டா போட்டு பேசினா நான் உன்னை என்ன செய்வேன்னு உனக்கு தெரியும், அதுக்காக தான் அடிக்கடி டா போட்டு பேசுற, கரெக்ட்டா? கொஞ்ச நேரம் walking வந்தது கூட மேடம் க்கு பொறுக்கல இல்ல? சரி வா நம் அறைக்கு செல்வோம், மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது தானே கணவனின் முதல் கடமை என்று அவள் கையை பிடித்து இழுக்கசரி சரி நான் டா போட்டு பேசல என்று சத்யா வெட்கத்துடன் அவனை பிடித்து மீண்டும் உட்கார வைத்தாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018