Sms ch 74 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 74

 

சத்யா கொடுத்த reassurance ல் நந்தனுக்கு ஆறுதல் கிடைத்தது.

 

நிஜமாக தானே சத்யா சொல்கிறாய்? அம்மாவிற்கு என்மீது எந்த கோபமும் இருந்திருக்காது தானே?” என்று நந்தன் மீண்டும் கேட்க சத்யா புன்னகையுடன் உறுதியான குரலில் சொன்னாள்.

 

அத்தைக்கு உங்கமேல எந்த கோபமும் இருந்திருக்காது

 

நந்தன் சத்யாவை கட்டி அணைத்து கொண்டான்.

 

சிறிது நேரம் இருவரும் அமைதியாய் அணைத்து கொண்டிருக்கஅந்த மொபைல் எடு, டைம் என்னன்னு பாக்கலாம் என்று நந்தன் கேட்க சத்யா மொபைலை எடுத்து நேரத்தை பார்த்துக்கொண்டே அவனிடம் நீட்டினாள்.

 

மணி 10 ஆகுது, ஆமாம் நாளைக்கு காலையில் உன் சேலை எல்லாம் காய்ந்து விடுமா?” என்று அவள் காயப்போட்டிருந்த துணிகளை திரும்பி பார்த்து கொண்டே நந்தன் கேட்டான்.

 

தெரியலையே என்றாள் தன் தோள்களை உயர்த்தி.

 

ம்ம்ம் பசிக்கலையா உனக்கு?” என்றான்.

 

பசிக்குது தான், ஆனால் சாப்பிட தான் ஒன்றுமில்லையே

 

ஏன் இல்லை, see இந்த hut எல்லாம் tourism காக கட்டியது. சில நாட்கள் ஸ்ரீஜா இந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள். இங்கே வந்து தங்குபவர்களுக்காக complimentary பிஸ்கட், tea, kettle என்று ஏதாவது இருக்கும் என்று சொல்லி அலமாரியை திறந்தவன் பிஸ்கட் பாக்கெட்களை வெளியே எடுத்தான்.

 

kettle இருக்கும் சொன்னீங்களே, இந்த weather க்கு ஒரு tea குடிச்சு பிஸ்கட் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும், kettle யும் எடுங்கள்

 

ஆனா குடிக்கிற தண்ணி வேணுமே என்று நந்தன் யோசிக்கவெளில தான் அவ்வளவு மழை பெய்யுதே, அதில் பிடித்துக்கொள்ளலாம் என்று சொல்ல நந்தன் மீண்டும் அவளை யோடனையாக பார்த்துவிட்டுசரி தான், ஆனால் இந்த இடி, மின்னலில் வெளியே போய் தண்ணீர் பிடிக்க வேண்டுமா?” என்று அவன் தயங்கஎன்ன நீங்க இப்படி பயப்படுறீங்க? வாசலில் நின்று தானே பிடிக்க போகிறோம், குடுங்க நானே பிடிக்கிறேன் என்று அவனிடம் இருந்து kettle வாங்கி வாசலில் நின்று பிடிக்க நந்தன் அவள் பின்னால் அவளை அணைத்தவாறு நின்று அவள் கழுத்தில் தன் முகத்தை பதித்து கொஞ்ச ஆரம்பித்தான்.

 

ப்ச்ச் கொஞ்சுரேன் பேர்வழின்னு என்னை வெளியே தள்ளி விட்டு விடாதீர்கள், ஏற்கனவே சாரலில் பாதி நனைந்து விட்டேன், ப்ச்ச் கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?” என்று தன்னை அணைத்தவாறே முன்னும் பின்னும் தள்ளியவனை பார்த்து முறைத்துக்கொண்டே சொன்னாள்.

 

நீ சூப்பரா இருக்கடி இந்த shirt என்று நந்தன் அவள் கழுத்தின் வளைவில் முத்தமிடுவதும் கடிப்பதுமாக சொல்ல சத்யா கஷ்டப்பட்டு திரும்பிஇந்தாங்க நீங்களே தண்ணிய பிடிச்சிட்டு வாங்க, ரொம்ப சேட்டை பண்றீங்க, நீங்க பண்ணின சேட்டைல நான் பாதி நனைஞ்சுட்டேன் என்று கெட்டிலை அவனிடம் நீட்டசரி சரி சாரி, நான் சேட்டை பண்ணாம இருக்கேன், நீயே தண்ணீரை பிடி என்று அவன் தன் இரு கைகளையும் உயர்த்தி சரணடைய சத்யா அவனை முறைத்துக்கொண்டே மீண்டும் தண்ணீரை பிடித்துவிட்டு திரும்ப அவளின் மேல் நந்தன் கொஞ்சம் மழை நீரை பிடித்து தெளித்தான்.

 

இதுக்கு நீங்களே தண்ணிய பிடிச்சிருக்கலாம் இல்ல, என்னவோ இடி மின்னல் என்று பயப்படுவது போல் ஆக்ட்டிங் குடுத்துட்டு எதுக்கு இவ்வளவு சேட்டை?” என்று அவனை திட்டிக்கொண்டே கெட்டிலை on செய்து இரண்டு tea bag எடுத்து இரண்டு cup களில் போட்டு tea தயார் செய்து கொண்டிருந்தாள்.

 

நானே போய் பிடிச்சிருந்தா நீ எப்படி நனைவது, நான் எப்படி உன்னை ரசிப்பது?” என்று அவளின் பின்னால் இருந்து அவள் இடுப்பில் கை வைக்க சத்யா அவன் கையில் பொய் கோபத்துடன் அடித்தாள்.

 

 நினச்சேன் இப்படி ஏதாவது சேட்டை செய்ய தான் என்று நினைத்தேன், tea யை குடிங்க என்று அவனிடம் ஒரு cup நீட்டிவிட்டு தானும் அருந்த ஆரம்பித்தாள்.

 

நந்தன் அவளுக்கு பிஸ்கட் ஊட்டிவிட இருவரும் டீயை குடித்து முடித்தார்கள்.

 

நந்தன் அவளை கண்ணோடு கண்ணாக பார்க்கஏன் அப்படி பாக்குறீங்க?” என்றாள் சத்யா.

 

எனக்கு குளிருது என்று சொன்ன நந்தனைஇது நல்லா இருக்கே, என்னை மழையில் நனைத்து விட்டு உங்களுக்கு குளிருதா?” என்று கோபமாக அவனை முறைத்தாள்.

 

நந்தன் சிரித்துக்கொண்டேநீயாக தானே தண்ணீர் பிடிக்க சென்றாய் என்று சொல்லிவிட்டுசரி என் சட்டையை கொடு என்று அவன் சீரியசாக சொல்லஎன்ன விளையாடுறீங்களா?” என்று கோபமாக கேட்ட சத்யா நந்தன் பார்வையையும், அவன் உதட்டில் இருந்த புன்னகையையும் பார்த்துவிட்டு உதட்டில் புன்னகை அரும்ப அதை மறைத்துக்கொண்டுதரமாட்டேன் போடா என்றாள் பொய் கோபத்துடன்.

 

தரமாட்டேன் போடா வா? ஓஹோ கட்டின புருஷன் பேச்சை கேட்காதது மட்டுமல்லாமல் போடா வேறயா? ம்ம்ம் இனிமேல் உன்னை விட்டால் சரியாக வராது, உடனே ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சத்யா மெதுவாக அந்த அறையில் ஒரு மூலையில் சென்று ஒதுங்கி நின்றாள். பாதி நனைந்து இருந்த சட்டையை பிடித்து கொண்டே மீண்டும்போ டா என்றாள்.

 

நந்தன் அவளை பார்த்துக்கொண்டே நெருங்கியவன் காலை பின்னுக்கு மடக்கி வேட்டியை எடுத்து மடித்து கட்டினான்.

 

சத்யா ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு இன்னொரு கையால் வாயை பொத்தி சிரித்தாள். “இப்படி எல்லாம் சீன் போட்டால் நான் பயந்து விடுவேனா?” என்றாள்.

 

பயப்பட போறியா இல்லை நின்னு சண்டை போட போறியான்னு பாக்க தானே போறேன் என்று கேசுவளாக பேசிக்கொண்டே அவள் நின்ற பக்கம் நடக்க ஆரம்பித்தான். சத்யா கொஞ்சம் பின்னுக்கு நகர்ந்து அவன் நெருங்கும் வேளையில் குனிந்து அவனை விட்டு விலகி ஓடி மீண்டும் அவனுக்கு எதிர்பக்கம் வந்து நின்றாள்.

 

நந்தன் மறுபடியும் அவளை பிடிக்க செல்ல அவள் மறுபடியும் அவனிடம் இருந்து தப்பித்து எதிர்பக்கம் போய் நின்றாள். இப்படியே நான்கு ஐந்து முறை நந்தன் அவளை துரத்துவதும் அவள் தப்பிப்பதும் ஆக செல்ல சத்யா ஆட்காட்டி விரலை மடக்கி பழிப்பு காண்பிக்க நந்தன் தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்து நின்று சிரித்தான்.

 

பாத்தீங்களா? உங்களாலயே முடியல, நீங்க எவ்வளவு முறை துரத்தினாலும் என்னை பிடிக்க முடியாது என்று சத்யா பெருமையாக காலரை தூக்கி விட்டு கொண்டாள்.

 

நந்தன் மீண்டும் தலையை மறுப்பாய் அசைத்து சிரிக்க சத்யா சொன்னாள். “ப்ச்ச் உங்களை பார்த்தாலும் பாவமாக தான் இருக்கிறது, சரி போனால் போகிறது, நீங்கள் வேண்டுமானால் பெட்ஷீட் முழுக்க எடுத்து கொண்டு படுத்து தூங்குங்கள் என்றாள் பெரிய மனதுடன்.

 

நந்தன்ச்ச after all இந்த பெட்ஷீட்காகவா இவ்வளவு தூரம் ஓடிபிடித்து விளையாடி கொண்டிருக்கிறேன்? இன்னும் ஒரு நான்கு ஐந்து முறை என் கையில் சிக்காமல் கட்டிலின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு ஓடி காண்பித்து விடு, நான் ஒத்துக்கிறேன், நீ திறமையானவள் தான் என்று ஒத்துக்கிறேன் என்று நந்தன் சொல்லவும்இதென்ன பிரமாதம், போட்டிக்கு நான் தயார் என்று சொல்லி சட்டையின் ஸ்லீவ்ஸ் மடித்து விட்டு தயாராக நந்தன் அவளை ஒரே பாய்ச்சலில் பிடித்தான்.

 

அவளை பின்னாலிருந்து பிடித்து தன் மீது சாய்த்து படுக்கையில் சாய்ந்தவன் அவள் காது மடலை கடித்துக்கொண்டே சொன்னான். “சரியான மக்கு டி நீ என்று.

 

அவனின் சீண்டல்களை ரசித்தவள் சட்டென்று திரும்பி அவன் நெஞ்சில் படுத்துக்கொண்டே கேட்டாள். “ஏன் அப்படி சொல்றீங்க?” என்று பொய்யான கோபத்துடன்.

 

அவன் அவள் கழுத்தை முகர்ந்து கொண்டே பேசினான். “இப்போ ஒரே பாய்ச்சலில் பிடிக்க தெரிஞ்ச எனக்கு உன்னை முதலிலேயே பிடிக்க தெரிந்து இருக்காதா என்ன?”

 

ம்ம்ம் அப்படின்னா ஏன் பிடிக்கல?” என்றாள்.

 

ம்ம்ம் இந்த சட்டையை மட்டும், அதுவும் பாதி நனைந்த சட்டையை போட்டுக்கொண்டு நீ இங்கும் அங்கும் ஓடிய அழகு இருக்கே..” என்று மீதியை சொல்லாமல் அவன் செய்கையில் காண்பிக்கச்சீ ராஸ்கல், இதுக்கு தான் என்னை அத்தனை முறை ஓட வைத்தாயா?” என்று தன் கைகளால் அவன் நெஞ்சில் குத்தினாள்.

 

but நான் பாவம் டி, அதான் மேற்கொண்டு ஓடி பிடிச்சு விளையாடாம நேரா நம்ம வேலையை பார்க்கலாம் என்று இப்போது ஒரே பாய்ச்சலில் பிடித்துவிட்டேன்

 

ரொம்ப சாமர்த்தியம் தான் என்று அவள் முகம் சிவக்கஅடுத்து என் சட்டையை உன்னிடம் இருந்து மீட்டெடுப்பதில் தான் என் சாமர்த்தியம் உள்ளது என்று நந்தன் அவள் சட்டையின் மேல் பட்டனை கழட்ட முகம் சிவந்த சத்யா ஒரு கையால் தன் முகத்தை மூடி விரலிடுக்கில் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

 

பாதி நனைந்த சட்டையும், நந்தனின் உடைகளும், கம்பியில் காய்ந்து கொண்டிருந்த மற்ற துணிகளின் மேல் விழ அங்கே இருவரும் தங்களை மறந்து வேறு உலகத்திற்கு சென்றனர்.

 

மறுநாள் காலை எழுந்து சத்யா குளிக்க செல்ல நந்தனும் பிடிவாதம் பிடித்து அவளுடன் குளித்தான்.

 

இருவரும் குளித்து முடித்ததும் சத்யா intercom ல் தன் அத்தைக்கு call செய்தாள். “அத்தை நேத்து மழைல........ dress……..எல்லாம் நனைந்து விட்டது, நீங்க எனக்கு சேலையும் அவருக்கு pant shirtum எடுத்து வள்ளி அக்காவிடம் கொடுத்து விடுகிறீர்களா?” என்று கேட்க மறுபுறமும் கமலா அம்மா ஒரு புன்னகையுடன்சரி அனுப்புகிறேன் என்று சொல்லி வைத்தார்கள்.

 

Dress இருந்த bag வைத்துவிட்டு வள்ளி கதவை மட்டும் தட்டிவிட்டு வேகமாக சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து கதவை திறந்து dress எடுத்து அணிந்து கொண்டு பண்ணை வீட்டிற்கு புறப்பட்டனர் இருவரும்.

 

Reception வேலைகளை பார்க்க வேண்டும் என்று அனைவரும் மீண்டும் சென்னையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

வள்ளி பாட்டி முருகன் எல்லோரும் reception அன்று வருகிறோம் என்று சொன்னதை கமலா அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை.

 

பண்ணை வீட்டை உங்களுக்கு காண்பிக்க தான் அழைத்து வந்தோம், reception முடிந்த பிறகு நீங்கள் எல்லோரும் இங்கே திரும்பி வரலாம் என்று அவர்களையும் அழைத்து கொண்டு புறப்பட்டார்கள்.

 

சென்னைக்கு சென்றதும் reception வேலைகளில் கமலா அம்மா, சத்தியமூர்த்தி, சகுந்தலா, கணேஷ் எல்லோரும் பிஸியாக பாட்டி, வள்ளி, முருகனும் கூட எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தனர்.

 

நந்தன் அடுத்த ஒரு வாரத்திற்கு கம்பெனி வேலைகளில் பிசியாகவும், சத்யா தன் படிப்பில் கவனமாகவும் இருக்க ஆரம்பித்தாள்.

 

வீட்டிலேயே அதிக கூட்டம் இல்லாமல் reception செய்ய முடிவு செய்தாலும் சத்யாவிற்கும் நந்தனுக்கும் விலை உயர்ந்த ஆடைகள், சத்யாவிற்கு விலை உயர்ந்த நகைகள் என்று ஆர்பாட்டமாக வாங்க இதை தெரிந்த நந்தனும் சத்யாவும் எளிமையாக செய்யலாம் என்று மறுத்தனர். ஆனால் அவர்கள் மறுப்பை பொருட்படுத்தாமல் பெரியவர்கள் தங்கள் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்தனர்.

 

எல்லா வேலைகளிலும் கலந்து கொண்டாலும் ஸ்ரீஜாவிற்கு இவர்கள் செய்யும் ஆடம்பரம் பிடிக்கவில்லை.

 

Reception அன்று மாலை நந்தனும் சத்யாவும் குளித்துவிட்டு தயாராகினர். நந்தன் வெள்ளை நிறத்தில் தங்க நிற வேலைபாடுகள் நிறைந்த ஷெர்வானியிலும் சத்யா வெளிர் pink நிறமும் தங்க நிறத்தில் வேலைபாடுகள் நிறைந்த lehenga choli யும் அணிந்திருக்க கமலா அம்மா இருவருக்கும் திரிஷ்டி சுற்றி அழைத்து சென்றார்கள்.

 

தருணும் நந்தனுக்கு பொருத்தமாக வெள்ளை நிறமும் தங்க நிறமும் கொண்ட ஷெர்வானியை அணிந்து நந்தனின் உதவியுடன் கை கோர்த்து நடந்து சென்றான்.

 

ஒரு கையில் சத்யாவையும் இன்னொரு கையில் தருணையும் பிடித்து அழைத்து கொண்டு சென்றான். தோட்டத்தில் அமைக்க பட்டிருந்த அந்த மேடையில் ஏறி நின்று எல்லோருக்கும் வணக்கம் சொல்லி அங்கே அலங்கரிக்கப்பட்ட chair களில் நந்தனும் சத்யாவும் அமர நந்தன் தருணை தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டான்.

 

மாலையை எடுத்து வந்து கொடுத்து இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அணிய வைத்தார்கள். இன்னும் சம்பிரதாயமாக விளக்கு ஏற்றுவதும், பெரியவர்கள் வாழ்த்து மடல்கள் வாசிப்பதும் முடிய மணமக்களுக்கு வந்திருந்தவர்கள் மலர் கூடைகளும், பரிசுகளையும் அளித்து வாழ்த்து தெரிவித்து போட்டோக்கள் எடுப்பதும் நடக்க இன்னொரு பக்கம் live music நிகழ்ச்சியும் நடந்து கொண்டிருந்தது.

 

சத்யாவிற்கு இன்று எந்த தயக்கமும் இல்லை. நந்தனின் அருகில் பெருமையோடு நின்றிருந்தாள். ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டாள். அவள் முகத்தில் புன்னகையும் பிரகாசமும் அழகுக்கு அழகு சேர்த்தன.

 

நந்தன் அவளிடம் மெதுவாக சொன்னான். “இன்னைக்கு நீ டென்ஷனாக இருப்பாய் என்று நினைத்தேன், உனக்கு முழு விருப்பமில்லாமல் நடக்கும் reception ஆயிற்றே என்று கொஞ்சம் நெருடல் இருந்தது. ஆனால் நீ மிகவும் தெளிவாக மகிழ்ச்சியாக இருக்கிறாயே என்று கேட்க சத்யாஆரம்பத்தில் தான் இதெல்லாம் வேண்டாமோ என்று தோன்றியது, ஆனால் இப்போது அப்படி இல்லை, உங்கள் மனைவியாக இங்கே நிற்பது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றாள் அவன் பக்கம் சாய்ந்து அவனை லேசாக நிமிர்ந்து பார்த்து.

 

நந்தனுக்கும் அப்படி தான். அவளை மனைவியாக பக்கத்தில் நிறுத்தி தான் கணவனாக நிற்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது.

 

நந்தன் மீண்டும் மெதுவாக அவள் காது அருகில் வந்து சொன்னான். “one week ஆச்சு டா, இன்னைக்கு விருந்து உண்டு தானே என்று கேட்கஷ்ஷ்ஷ் தருண் இருக்கிறான், பார்த்து பேசுங்கள் என்றாள் கண்களை உருட்டி அவன் கையில் லேசாக யாரும் அறியாமல் கிள்ளி.

 

புரியாத மாதிரி தானே பேசுகிறேன் என்று அவனும் யாரும் அறியாமல் பதிலுக்கு அவள் கையில் கிள்ளினான்.

 

சிறிது நேரம் கழித்து buffet முறையில் எல்லா நாட்டின் சிறந்த உணவு வகைகளும் வரிசையாக சூடாகவும், டெஸ்ஸர்ட்கள் எல்லாம் சில்லென்றும் காத்திருக்க அனைவரும் சிறு சிறு குழுக்களாக சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

 

கமலா அம்மாவும் சத்தியமூர்த்தியும் பெருமையாக பார்த்து ஆனந்த கண்ணீருடன் பெருமூச்சு விட்டனர். சத்தியமூர்த்திக்கு நந்தனின் சிறு வயது நினைவு வந்தது.

 

நந்தனின் பிறப்பு சான்றிதழை வைத்து நந்தன் திருச்சியில் பிறந்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட சத்தியமூர்த்தி எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாகவே இருந்த நந்தனை மேலும் தொல்லை செய்யாமல் தொழில் விஷயமாக செல்வதாக மற்றவர்களிடம் (கமலா அம்மாவை தவிர) பொய்யை சொல்லிவிட்டு நந்தனுக்கு தெரியாமல் திருச்சி சென்றார்.

 

பிறப்பு சான்றிதழ் அளித்த அரசாங்க அலுவலகம் மூலமாக நந்தன் பிறந்த ஏரியாவில் சென்று குருமூர்த்தி, ராதா போட்டோக்களை வைத்து விசாரித்து அவர் துணி வியாபாரம் செய்ததும், திருச்சி கரூர் செல்லும் பாதையில் வீடு வாங்கி இருந்ததாகவும் பிறகு விவரம் தெரியவில்லை என்ற தகவலையும் வைத்துக்கொண்டு திருச்சி கரூர் பாதையில் இருந்த கிராமங்கள் சென்று விசாரித்தார் சத்தியமூர்த்தி. என்ன தான் அவர்கள் கடன் தொல்லையில் இறந்து விட்டதாக நந்தன் சொன்னாலும் தன் தம்பி, தம்பி மனைவியின் உடல் என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளாமல் சத்தியமூர்த்திக்கு தூக்கம் வரவில்லை.

 

அங்கே இருந்த கிராமங்களில் விசாரிக்க அவர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான தகவல்களை அளித்தார்கள்.

 

அந்த பொண்ணு ஊரில் பணக்காரன் ஒருவனை வைத்து இருந்தாள், வெளிநாடு சென்று திரும்பி வந்த கணவன் அவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்து சந்தேகப்பட சண்டை ஆகி அந்த பணக்காரனையும் மனைவியையும் கொன்று விட்டார், பணக்காரனை குத்தி கொலை செய்து விட்டார், மனைவியை அடித்து தூக்கில் தொங்க விட்டார் என்று ஒரு சிலரும்பணக்காரன் அந்த கணவனை கொன்றான், அந்த பணக்காரனை அந்த பெண் கொன்றாள் என்று ஒரு சிலரும் ஒவ்வொரு விதமாக சொல்ல நந்தன் போலிசையும் சென்று விசாரித்தார்.

 

தகவல் தெரிஞ்சு நாங்க போய் பாத்தப்போ வெளியே அந்த பணக்காரனின் உடல் கிடந்தது, அந்த கணவனின் உடல் பாதி இறந்த நிலையில் தோட்டத்தில் இருந்தது, அந்த பெண் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள், அந்த பையன் எங்க போனான்னு தெரியல.

 

போஸ்ட் mortem படி பார்த்தால் அந்த பணக்காரனை குத்திய விதத்தை வைத்து பார்த்தால் அந்த சிறுவன் தான் குத்தி இருக்க வேண்டும், ஆனால் அதனால் அந்த பணக்காரன் இறக்கவில்லை, ஏன் என்றால் கத்தி ஆழமாக பாயவில்லை, மீண்டும் யாரோ கருங்கல்லை போட்டு அவனை கொன்றிருக்கிறார்கள், அந்த கணவனையும் யாரோ கருங்கல்லை போட்டு கொன்றிருக்கிறார்கள், அந்த பெண் தானாக தான் தூக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

 

எங்கள் கணிப்பின் படி அந்த கணவனை அந்த பெண்ணோ சிறுவனோ கொள்ளவில்லை, ஏன் என்றால் அவரின் உடலுக்கு அவர்கள் முறைப்படி சிதை வைக்க முற்பட்டுள்ளார்கள், அங்கே விளக்கு கூட ஒன்று இருந்தது, அந்த பணக்காரன் தான் அவரை கொன்றிருக்க வேண்டும், இதை தாங்கி கொள்ள முடியாத அவரின் மனைவி அந்த பணக்காரன் மேல் கல்லை போட்டு கொன்றிருக்க வேண்டும், அது மட்டுமல்ல அந்த பெண் கற்பழிக்க பட்டிருந்தாள்.

 

ஊர்காரர்கள் இல்லாத பொல்லாததை பேசுவார்கள், ஆனால் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் நாங்கள், அந்த பெண்ணிற்கும் மிஞ்சி இருந்த அவள் கணவனின் உடலுக்கும் போஸ்ட் mortem முடிந்து தகுந்த முறையில் அடக்கம் செய்தோம் என்று சொல்லி முடித்துநாங்கள் லோக்கல் செய்தித்தாளில் போட்டோம் அவர்கள் உடலை யாராவது வாங்கி செல்வார்களா என்று, யாரும் வரவில்லை, அதனால் தான் நாங்களே தகுந்த முறையில் அடக்கம் செய்தோம், ஆமாம் அந்த பையன் train ஸ்டேஷனில் இருந்து சென்னை சென்றுள்ளான், உங்களை தேடிக்கொண்டு வந்தானா? அவன் அந்த பணக்காரனை குத்தியதற்காக அவனுக்கு தண்டனை வாங்கி தரும் எண்ணம் ஏதும் இல்லை, ஏன் என்றால் அது தற்காப்பிற்காக தான் இருக்கும், இருந்தாலும் அந்த பையனின் நிலையை நினைத்து நாங்கள் கவலைப்பட்டதுண்டு என்று கேட்க சத்தியமூர்த்திஇல்லை சார், அங்கே வரவில்லை என்று சொல்லி விடைபெற்றார்.

 

கரூரில் என்ன எல்லாம் கேள்விப்பட்டோம், இன்று வரை அதை பற்றி நாமும் நந்தனிடம் கேட்கவில்லை, அவனும் நம்மிடம் பேசியதில்லை, அவன் மனதில் எவ்வளவு சோகங்கள், காயங்கள் இருந்திருக்கும், இன்று அவன் முகத்தில் சந்தோஷத்தை பார் என்று சத்தியமூர்த்தி சொல்ல,

 

ஆமாங்க எவ்வளவு கஷ்டங்களை தாண்டி வந்துள்ளான், நாமும் அவனுக்காக, மாமாவிற்காக எதுவுமே தெரியாத மாதிரி இத்தனை வருடங்கள் உள்ளுக்குள் அவனுக்காக அவன் மௌனமாக அழும் நேரமெல்லாம் நாமும் மௌனமாக அழுது அவன் சிரிக்கும் போதெல்லாம் சிரித்து வாழ்ந்து விட்டோம், இனியும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் அப்படியே இருந்து விடுவோம், சத்யாவுடன் அவன் வாழ்க்கை இனிமையாக இருப்பதை பார்த்துக்கொண்டே தருணை வளர்த்துக்கொண்டு நம் காலமும் இனி சந்தோஷமாக இருக்க போகிறது என்று ஆனந்த கண்ணீருடன் கமலா அம்மா சொல்ல சத்தியமூர்த்தி அவர்கள் தோளில் கையை போட்டு அணைத்து கொண்டார்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018