Sms ch 73 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 73
நந்தனை எங்கெங்கோ தேடிய குருமூர்த்தி பக்கத்து கிராமங்களில் இருந்தவர்களை விசாரிக்கவும் ஒரு சிலர் நந்தனை train station அருகில் உள்ள பாலத்தின் அருகில் பார்த்ததாக சொன்னார்கள். குருமூர்த்தியும் நந்தனை தேடி train station சென்றார். அங்கே பாலத்தில் நந்தன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். குருமூர்த்தி அவன் அருகில் சென்று நந்து என்று அழைக்கவும் நந்தன் வேகமாக நிமிர்ந்து பார்த்து “அப்பா” என்று எழுந்து அவரை தாவி அணைத்து கொண்டான்.
“என்னப்பா இது? இங்க வந்து இப்படி உக்காந்திருக்க?” என்று அவனை தூக்கி கொண்டே நடந்தார் குருமூர்த்தி.
நந்தன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வந்தான்.
குருமூர்த்தியே பேசினார். “அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டியாமே? அம்மாகூட சண்டை போடக்கூடாது என்று நான் வெளிநாட்டிற்கு போவதற்கு முன் சொன்னேன் இல்லையா?” என்று கேட்க அதற்கும் நந்தனிடம் இருந்து பதில் இல்லை.
“ஊர்காரங்க அம்மாவை பத்தி என்ன வேணா சொல்லலாம், அதை எல்லாம் நம்பி அம்மாவை கெட்டவங்கன்னு நினைக்கலாமா நந்து?” என்று குருமூர்த்தி தன்மையாக கேட்க நந்தன் முதல் முறையாக வாயை திறந்தான்.
“அம்மா நல்லவங்கன்னா ஏன்ப்பா அந்த ஆளு அப்படி பேசிட்டு போனான்?”
“அவன் கெட்டவன் நந்து, அவன் வசதிக்கு பொய் சொல்வான், அவன் சொன்னாலும் சரி வேறு யார் சொன்னாலும் சரி, எங்க அம்மா நல்லவங்கன்னு தான் நீ சொல்லனும், அம்மா நல்லவங்கன்னு நீ முதலில் நம்பனும்”
“அச்சச்சோ நான் அம்மாவை தப்பா நினச்சு கோச்சிக்கிட்டு சண்டை போட்டுட்டு வந்துட்டேன் அப்பா, அம்மா பாவம், நான் வீட்டுக்கு போய் அம்மாகிட்ட மன்னிப்பு கேட்டுடுறேன், அம்மா என்கிட்ட பேசுவாங்க தானப்பா?”
“கண்டிப்பா பேசுவாங்கப்பா, நீ இனிமேல் அம்மாவை பற்றி யார் என்ன சொன்னாலும் கண்டு கொள்ளாதே, அம்மா நல்லவங்கன்னு நம்பி அம்மா பேச்சை கேட்டு நடக்கணும் சரியா?”
“ம்ம்ம் சரிப்பா, நீங்க எப்போ அப்பா வந்தீங்க? இனிமேல் எங்க கூடவே இருங்கப்பா” என்று அழாத குறையாக நந்தன் கெஞ்சினான்.
“கண்டிப்பா நந்து, இனிமேல் அப்பா உங்ககூட தான் இருப்பேன், உனக்கு அப்பா என்னவெல்லாம் வாங்கி வந்திருக்கேன் சொல்லு” என்று கேட்டுக்கொண்டே அவர் நந்தனை தூக்கி கொண்டு நடந்து வந்தார்.
மாலை மணி 5 ஆகி இருக்கும். “எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்து சென்னைக்கே சென்று விட வேண்டும், ஏனோ உள்ளுணர்வு ஒன்றும் சரி இல்லை, இனி இங்கு இருக்க கூடாது” என்று ராதா பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
அங்கே புல்லட் சவுண்ட் கேட்டு துணுக்குற்றவள் தன் அறையில் இருந்து ஹாலுக்கு வந்த போது அந்த பணக்காரன் உள்ளே வந்திருந்தான். இதோடு அடுத்த வாரம் தான் வருவான் என்று நினைத்திருந்த ராதாவிற்கு உள்ளூற பயம் ரத்தத்தை குளிர செய்தது. நந்தனை தேடி சென்றவரை இன்னும் காணவில்லையே என்று வாசலை பார்த்தவள் மீண்டும் அந்த பணக்காரனை நோக்கி இயல்பாக பேச முயன்றாள்.
“நீங்க….. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தேனே….” என்று தயங்கி இழுத்தாள்.
“கேட்ருந்த, ஆனா உன் புருஷன் வந்துட்டானாமே, ஒருவேளை எனக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்று நீ நினைத்திருந்தாலும் கூட சிவ பூஜையில் கரடி மாதிரி அவன் வந்து தொலைந்து விட்டான், பாவம் உனக்கும் சங்கடமாக தானே இருக்கும், அதான் அவன் வெளியே போயிருக்கும் சமயத்தில் உன்னோடு கொஞ்சம் ஆசையை தணித்து கொள்ளலாம் என்று வந்தேன்” என்று சொல்லி அவன் ராதாவை நெருங்க “இல்லை அவர் வரவில்லை என்றாலும் நான் சம்மதம் தெரிவித்து இருக்க மாட்டேன், உங்கள் கடனை நாங்கள் அடைத்து விடுகிறோம், இதோடு இந்த பிரச்னையை நாம் மறந்துடுவோம்” என்றாள் ராதா.
“தெரியும் நீ கால அவகாசம் கேக்கும் போதே நினச்சேன், நீ வேற ஏதோ திட்டம் போடுறேன்னு, அதுவும் ஒரு காரணம் தான் நான் இப்போது உன்னை தேடிவர, வா உன் திமிர் தனத்தை கொஞ்சம் அடக்குகிறேன்” என்று சொல்லி ராதாவின் சேலையை பிடித்து இழுக்க ஆரம்பித்தான்.
ராதா பதறி போய் ஓட முயல அவளை தடுத்து நிறுத்தி அவளுக்கு பின்னால் இருந்த அறைக்கு தள்ளிக்கொண்டு சென்றான்.
“இங்க பாரு, அவர் இப்போ வந்துடுவாரு, உன்னை உயிரோட விட மாட்டாரு” என்று ராதா அவனை தடுத்து போராடிக்கொண்டே மிரட்டினாள்.
“அவன் வருவான்னு தெரிஞ்சு தான வந்திருக்கேன், வந்து உன்னை பார்த்து சந்தேகபடட்டும், சந்தேகப்படவில்லை என்றாலும் பரவாயில்லை, நான் உன்னை அனுபவிப்பதை பார்த்துட்டு போகட்டும்” என்று ராதாவின் உடைகளை களைய ஆரம்பித்தான்.
ராதா அவனை நகத்தால் கீறுவதும் கடிப்பதும் என்று தன்னால் ஆன எல்லா தற்காப்பு யுத்திகளையும் பயன்படுத்தி தடுக்க முயன்றாள். ஆனால் அவன் அவள் கன்னத்தில் அறையவும், அவள் உச்சந்தலை முடியை பிடித்து இழுப்பதும் என்று வலி மிகுந்த ஒரு போராட்டத்தை அவளுக்கு எல்லாவிதத்திலும் கொடுத்து கொண்டிருந்தான்.
ராதாவிற்கு குருமூர்த்தியும் நந்தனும் கண்ணின் முன்னால் வந்து சென்றனர். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மீண்டும் அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றாள்.
ஆனால் அவன் அவள் தலையை பிடித்து சுவற்றில் அடிக்க அவள் பாதி மயக்கமானாள்.
நந்தனும் குருமூர்த்தியும் புல்லட்டை பார்த்துவிட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைய அங்கே அவன் ராதாவை சின்னாபின்னமாக்கி இருந்தான். குருமூர்த்தி அவனுடன் சண்டையிட நந்தன் அழுது கொண்டே தன் தாயை எழுப்ப முயன்றான். “அம்மா அம்மா…. “ என்று அழுது கொண்டே ராதாவின் தலையில் இருந்து வழிந்த ரத்தத்தை துடைக்க முயன்றான். ஒரு ஆயின்மெண்டை எடுத்து வந்து தடவினான்.
ராதா கண் விழித்து பார்க்க அம்மா என்று அழும் நந்தனை கண்ணீருடன் அணைத்து கொண்டாள். “அம்மா என்னை மன்னிச்சுடும்மா, நான் உன்கிட்ட கோச்சிக்கிட்டு சண்டை போட்டுட்டு போய்ட்டேன், என்னை மன்னிச்சுடும்மா” என்று சொல்ல “பரவாயில்ல நந்து” என்று சொல்லி “அப்பா எங்க?” என்று கேட்டு எழ முடியாமல் எழுந்து தன் ஆடைகளை சரி செய்துகொள்ள நந்தனும் அவளுக்கு அழுது கொண்டே உதவினான்.
நந்தனை பிடித்து கொண்டே வெளியே வந்தவள் தன் கணவனையும் அந்த பணக்காரனையும் காணவில்லையே என்று கவலையுடன் கண்களை தோட்டத்தில் பரவ விட்டாள்.
அந்த கொடூரனுக்கும் குருமூர்த்திக்கும் இடையில் நடந்த சண்டையில் குருமூர்த்தி கீழே விழ பக்கத்தில் இருந்த கருங்கல் ஒன்றை எடுத்து குருமூர்த்தி தலையில் போட்டான் அந்த கொடூரன். ராதா வீலேன்று கத்திக்கொண்டு குருமூர்த்தியிடம் ஓட அந்த கொடூரன் தப்பி ஓட ஆரம்பித்தான். புல்லட்டில் ஏறி அமரப்போனவன் முதுகில் கத்தியை வைத்து நந்தன் பலமுறை குத்தினான். வலி தாங்க முடியாமல் திரும்பி பார்த்தவன் நந்தனை துரத்த நந்தன் மீண்டும் ராதாவிடம் ஓடி வர ராதா நந்தனிடம் இருந்த கத்தியை தன் கையில் வாங்கி வைத்துக்கொண்டு நந்தனை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டு “வா டா வா” என்று தன்னை நெருங்கி வரும் பணக்காரனை அழைக்க அவன் நடை தளர்ந்து மயங்கி விழுந்தான்.
குருமூர்த்தி உயிர் ஊசலாட அவர் ராதாவையும் நந்தனையும் அருகே அழைத்தார்.
“உன்னை பாதுகாக்க தவறிட்டேன் ராதா, என்னை மன்னிச்சுடு” என்றார் தட்டு தடுமாறி.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நீங்க நல்லபடியா பொழச்சு வந்தா போதும் எனக்கு, வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவரை தூக்க முயல “இந்த ரெண்டும் கெட்டான் ஊரில் இருந்து ஹாஸ்பிடல் போவதற்குள்…..” “நான் சொல்றத கேளு, இன்னைக்கு இங்க நடந்தத மறந்துடு, அண்ணா அண்ணிகிட்ட போய்டு, அவங்க உன்னையும் நந்தனையும் நல்லபடியா பாத்துப்பாங்க…..” என்று அவர் மூச்சுவிட சிரமப்பட ராதா “நீங்க இல்லாம, இந்த மாதிரி ஆன பிறகு என்னால எப்படி உயிர் வாழ முடியும்?” என்று அழுதாள்.
குருமூர்த்தி மீண்டும் சிரமப்பட்டு தெம்பை வர வைத்துக்கொண்டு பேசினார். “ஷ்ஷ்….. ராதா நம்ம நந்து இருக்கான் பாரு, அவனுக்காக நீ இருக்கனும், அவனை நல்லபடியா பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டிருக்கும் நந்தனை அழைத்து “நந்து அம்மா பேச்சை கேட்டு நடந்துக்கணும், உன் பெரியம்மா பெரியப்பாவிடம் இருவரும் சென்று விடுங்கள், அவர்களிடமும் தாத்தாவிடமும் அன்பாக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் சரியா? அம்மாவை ஒரு போதும் தவறாக நினைக்காதே” என்று சொன்னபடியே குருமூர்த்தி கடைசியாக ஒரு இழுவையோடு மூச்சை நிறுத்தினார்.
ராதாவும் நந்தனும் வாய்விட்டு அழ ஆரம்பித்தார்கள். சிறிது நேரம் கழித்து அந்த பணக்காரனை திரும்பி பார்த்த ராதா அவன் விரல் அசையவும் வெறிகொண்டவள் போல அதே கருங்கல்லை எடுத்து அவன் தலையில் போட்டு அவன் கதையை முடித்தாள்.
பிறகு தோட்டத்தில் இருந்த விறகு சுள்ளிகளை பொறுக்கி எடுத்து தன் கணவனுக்கு நந்துவை வைத்து சிதை மூட்டினாள்.
பிறகு ஒரு முடிவு எடுத்தவளாய் நந்தனிடம் ஒரு பையை எடுத்து கொடுத்தாள்.
“நந்து அம்மா சொல்றத நல்லா கேட்டுக்கொ, இதுல உன்னோட பிறப்பு சான்றிதழ், கொஞ்சம் உன்னுடைய உடுப்புகள், இங்க பாரு அப்பா வெளிநாட்டுக்கு போறதுக்கு முன்னாடி பக்கத்து டவுனுக்கு போய் ஸ்டூடியோவில அப்பாவோடு சேர்ந்து நாம் மூவரும் எடுத்த போட்டோ, இது அம்மா அப்பா கல்யாணம் முடிச்சு திருச்சி வந்தப்போ எடுத்த போட்டோ, இது தான் உன்னோட தாத்தா கம்பெனி இருக்கும் இடம், ராமலிங்கம் textiles னு கேட்டா தெரியும், இப்போ சத்யமூர்த்தி அதான் உன் பெரியப்பா பேருக்கு தாத்தா மாத்திட்டாருன்னு நினைக்கிறேன், அதனால் ரெண்டு பேர் பேரையும் சொன்னால் கூட தெரியும்….” என்று ராதா சொல்லிகொண்டிருக்க,
நந்தன் கேட்டான் “இதெல்லாம் ஏம்மா என்கிட்ட சொல்லிட்டு இருக்க, நீயும் தான வரப்போற” என்று கேட்க ராதாவின் விழிகள் ஏதோ யோசனையில் அசையாமல் நிலை குத்தி நின்றன.
“சொல்லும்மா நீயும் தான வரப்போற” என்று நந்தன் அவளை உலுக்க “ஆமாம்ப்பா, அம்மாவும் தான் வரேன், ஆனா அம்மா வர கொஞ்ச நேரம் ஆகும், நீ முதலில் போய் train station ல் சென்னைக்கு டிக்கெட் எடுத்து காத்திரு, நான் அந்த பாவியை மறைத்து வைத்துவிட்டு வந்து விடுகிறேன்”
“சரிம்மா ஆனா நீ ஏம்மா இந்த address எல்லாம் என்கிட்ட குடுக்குற? நானும் நீயும் ஒன்னாவே train station போகலாம் மா, நான் வெயிட் பண்றேன், நீ அவனை மறைத்துவிட்டு வா, நான் இங்கயே உக்காந்து இருக்கேன்” என்று சொல்ல “ஐயோ நந்து நீ முதலில் போய் டிக்கெட் எடுத்து வை, உன்னை போன்ற சிறுவர்களுக்கு train வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட் எடுத்து விட வேண்டும்” என்று சொல்லி நந்தனிடம் அந்த பையை ஒப்படைத்தாள் ராதா.
நந்தனை கட்டி அணைத்து முத்த மழை இட்டவள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு ஏதோ யோசித்தவள் மீண்டும் சொன்னாள். “இதுல தண்ணீர், நீ சாப்பிட கொஞ்சம் சாதம், அப்பா உனக்காக வாங்கி வந்த சாக்லேட்ஸ், பிஸ்கட் எல்லாம் இருக்கிறது, இதுல கொஞ்சம் பணமும் இருக்கிறது, எப்பவும் சந்தோஷமா நல்லா இருக்கனும், பெரியம்மா பெரியப்பாவிற்கு குழந்தை இல்லை, உன்னை தங்கள் குழந்தை போல் பார்த்துக்கொள்வார்கள், தாத்தா எங்களை திட்டி இருக்கலாம், ஆனால் உன்னை பார்த்தால் அவருக்கு உடனே உன்னை பிடித்து விடும், இந்த போட்டோவை எல்லாம் காமி, இங்க அம்மா அப்பாவிற்கு நடந்ததை சொல்லாதே” என்று சொல்ல நந்தன் கண்களை கசக்கி கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்தான்.
“அம்மா நீ என்னம்மா பண்ண போற? நீ என்கூட வரமாட்டியாமா? நான் காலைல உன்னை திட்டிட்டேன்னு உனக்கு கோபம், என்னை மன்னிச்சுடும்மா, இனிமேல் உன்னை சந்தேகப்பட்டு சண்டை போட மாட்டேன், திட்ட மாட்டேன், நீயும் என்கூட வாம்மா” என்று அழுதான்.
“அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா? இங்க பாரு இது தான் அவங்களோட போன் நம்பர், ஏதாவது பிரச்சனை னா போன் பண்ணி பேசு, நேரா கம்பெனிக்கு போய் பெரியப்பாவிடம் பேச வேண்டும் என்று சொல்லு, கடன் தொல்லையால் நாங்கள் இறந்து விட்டதாக சொல்” என்றவள் நந்தனை அடுத்த வார்த்தை பேசவிடாமல் வீட்டிற்கு வெளியே நிறுத்தி கதவை தாழிட்டாள்.
“அம்மா அம்மா…..” என்று நந்தன் அழுது கொண்டே கதவை தட்டியவன் ஒவ்வொரு ஜன்னலாக வந்து நின்று பார்த்து அழுதான். ஒரு ஜன்னல் வழியாக பார்க்க ராதா chair ல் ஏறி நின்று குடிசையில் பலமாக இருக்கும் ஒரு கழியில் ஒரு சேலையை போட்டு முடிச்சு போட்டு கொண்டிருந்தாள். நந்தன் அவளை பார்த்து “அம்மா என்னம்மா பண்ற? என்கூட வாம்மா, நான் தனியா எப்படிம்மா சென்னைக்கு போவேன்?” என்று அழ ராதாவும் அவனை பார்த்து அழுதாள். “அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா? போலீஸ் யாராவது வரறதுக்கு முன்னாடி இங்க இருந்து கிளம்பு, இன்னைக்கு train ஐ பிடித்து விடு, போ நந்து போ” என்று துரத்தினாள்.
நந்தன் அவளை அழுது கொண்டே பார்க்க “போன்னு சொல்றேன் இல்ல” என்று மிரட்டினாள். அவள் மிரட்டலில் பயந்து கையில் அவள் கொடுத்த பையை தோளில் மாட்டிக்கொண்டு நந்தன் ஓட ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் சென்றுவிட்டு அழுது கொண்டே மீண்டும் ஓடி வந்து அதே ஜன்னல் வழியாக பார்த்தான். தன் தாய் துடித்துக் கொண்டே கண்கள் பெரிதாகி தன்னை பார்ப்பதை பார்த்தான். அவன் அம்மாவின் அந்த அகண்ட பார்வை அவனை பயமுறுத்தியது. வேகமாக அங்கிருந்து அழுது கொண்டே மீண்டும் ஓட ஆரம்பித்தான். சென்னைக்கு டிக்கெட் எடுத்து சென்னை வந்து சேர்ந்தான்.
நந்தன் சத்யாவின் மடியில் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட படுத்து இருந்தவன் அவளின் கால்களை இன்னமும் இறுக்கமாக பிடித்துக்கொண்டான். சத்யாவின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது. நந்தனுக்கு தெரியக்கூடாது, தெரிந்தால் ஏற்கனவே கண்ணீர் வடிப்பவன் இன்னும் உடைந்து விடுவான் என்று வாயை தன் இரு கைகளாலும் பொத்தி கொண்டு தன் அழுகையின் சத்தம் வெளியே வராமல் அழுதாள்.
ஆனால் அவள் அழுவதை உணர்ந்த நந்தன் அவள் மடியில் இருந்து நிமிர்ந்து பார்த்துவிட்டு எழுந்து உட்கார்ந்தான். சத்யா அழுவதை பார்த்து அவன் கண்களில் கண்ணீர் இன்னும் அதிகமாக பெருக்கெடுத்தது. சத்யா தன் கைகளை எடுத்து அவன் முகத்தை தாங்கி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டாள். இருவரும் மறைக்க அவசியமில்லை என்பது போல் வெளிப்படையாகவே அழ ஆரம்பித்தார்கள்.
எவ்வளவு நேரம் அவர்கள் இருவரும் அந்த நிலையில் அழுதார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை, சத்யா தன் கண்களை துடைத்து கொண்டு அவன் தலையை கோதிவிட்டு அவன் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.
ராமலிங்கம் textiles address கண்டுபிடிக்க அவ்வளவு சிரமமாக இல்லை. நந்தனை பார்த்ததுமே சிறு வயது குருமூர்த்தியை பார்த்தது போல் தான் ராமலிங்கமும், சத்தியமூர்த்தியும் உணர்ந்தனர். போட்டோக்கள், பிறப்பு சான்றிதழ் பார்க்காமலேயே அவனை அணைத்து கண்ணீர் வடித்து ஏற்றுக்கொண்டனர். எத்தனையோ முறை அவன் தாய் தந்தையை பற்றி கேட்டும் முதலில் நந்தன் எந்த தகவலையும் தரவில்லை, கரூர் பக்கம் என்று கூட சொல்லவில்லை, ஊர் பெயர் சொன்னால் நேரில் சென்று விசாரிக்கலாம் என்ற சத்தியமூர்த்தியின் எண்ணம் நிறைவேறாத படி நந்தன் எந்த தகவலையும் கொடுக்காமல், பொதுவாக கூட எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டான்.
கமலா அம்மாவின் அன்பும் தொடர் முயற்சியும் நந்தனை கொஞ்சம் கொஞ்சமாக பேச வைத்தது. அதுவும் ஒரு வருடம் ஆனது அவன் கொஞ்சம் கொஞ்சம் பேச. அப்போதும் கூட தன் பெற்றோரை பற்றி அதிகமாக பேச மாட்டான். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சென்னைக்கு செல்லும் படி தனக்கு எல்லா address, போன் நம்பர் கொடுத்தனர் என்று மட்டும் தான் சொன்னான். இரண்டு வருடங்கள் பள்ளியில் கூட பேசாத நந்தனை தனிமையில் விடாமல் மதுவும் ராகவனும் தான் அவனுடன் ஒன்றாக சாப்பிடுவது, அவன் பேசாவிட்டாலும் இவர்களாக அடிக்கடி பேசுவது என்று அவனை தங்கள் நட்பு வட்டாரத்திற்குள் இணைத்து கொண்டனர்.
நந்தனும் அவர்கள் அன்பிற்கு ஆட்பட்டு அவர்களிடம் மட்டும் பழக ஆரம்பித்து அவர்களிடம் மட்டும் எல்லா உண்மையை சொன்னான். அன்றில் இருந்து இன்று வரை மூவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் நண்பர்களாக வலம் வந்தனர்.
நந்தன் தன் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து சத்யாவை பார்க்க அவள் கண்களும் குளமாக நிரம்பி இருந்தது. “சாரி டா, எல்லாத்தையும் சொல்லி உன்னை கஷ்டப்படுத்திட்டேன் இல்லை” என்று கேட்க சத்யா மறுப்பாக தலை அசைத்தாள்.
கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு பேசினாள். “எப்படி இத்தனை வருஷங்கள் இந்த கஷ்டங்களை சுமந்து கொண்டு வெளியே சந்தோஷமாக இருப்பது போல் எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க முடிந்தது உங்களால்?” என்றாள்.
“சின்ன வயசுல அம்மாவிற்கு நடந்தது எனக்கு முழுமையாக புரியவில்லை, அவர்கள் தவறானவர்கள் என்று சொன்ன போது கூட அதன் முழு அர்த்தம் எனக்கு புரியவில்லை, வேறு ஒரு ஆணுடன் இணைத்து பேசுவது தவறு என்று மட்டும் புரிந்தது, அதனால் அப்போது எனக்கு இருந்த வலி எல்லாம் என் அம்மா அப்பா இறந்த விதமும், அவர்கள் என் அருகில் இல்லை என்ற தனிமையின் வலியும் தான்.
ஆனால் வளர வளர என் அம்மாவிற்கு நடந்த விஷயங்கள் புரிய ஆரம்பித்த போது அதை தாங்கி கொள்ளும் சக்தி என்னிடம் இல்லை, என் அம்மா அப்பா இறந்த தினத்தை குறித்து வைத்து அவர்கள் போட்டோ வைத்து வருஷா வருஷம் வீட்டில் திதி கொடுப்பார்கள், அதனால் அந்த நாளை நானே மறக்க நினைத்தாலும் மறக்க முடியவில்லை.
ஒருவேளை நான் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு வெளியே செல்லாமல் இருந்திருந்தால் அப்பாவும் என்னை தேடிக் கொண்டு வந்திருக்க மாட்டார். அம்மாவிற்கு இந்த கஷ்டம் வராமல் தடுத்து இருக்க முடியுமோ என்று தோன்றும், என்னால் தான் என் அம்மாவிற்கு அந்த அநியாயம் நடந்தது, என்னால் தான் அப்பாவும் இறந்தார்கள் என்ற குற்ற உணர்ச்சி என்னை கொல்லும், இன்னொரு பக்கம் சரி அப்பாவை தான் அவன் கொன்றுவிட்டான், ஆனால் அம்மா ஏன் என்னை இப்படி தனிமையில் விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று அவர்கள் மீது கோபம் வரும்.
நான் அப்படி என்ன பெரிய குற்றம் செய்தேன் சத்யா? என்னை பற்றி அம்மா கவலைப்படவே இல்லை பார், நான் வழி தெரியாமல் தொலைந்து போய் எங்கேயாவது பிச்சை எடுத்து கொண்டிருந்தால்? யாராவது என்னை பிடித்து கொண்டு சென்றிருந்தால்? பசிக்கு சாப்பாடு கிடைக்காமல் நான் பட்டினியில் இறந்து இருந்தால்? இவற்றில் எதையுமே என் அம்மா யோசித்து பார்க்கவில்லையே, என்மீது அவர்களுக்கு அன்பு இல்லையா? இல்லை அன்று நான் அவர்களை சந்தேகப்பட்டத்திற்கு அவர்கள் என்னை இப்படி தண்டித்து விட்டார்களா? நீயே சொல்லு சத்யா” என்று அவன் குழந்தையாக மாறி அவள் நெஞ்சில் சாய்ந்து அழ சத்யா அவனை தேற்ற முயற்சி செய்தாள்.
“ஷ்ஷ் இல்லடா, அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், அவர்களுக்கு ஏற்பட்ட வலி அந்த நொடியில் அவர்களை யோசிக்க விடவில்லை, இருந்தாலும் நீங்கள் சமத்து என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது, அந்த தைரியத்தில் தான் அவர்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து எப்படி சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து விட்டு அவர்கள் வலியை நிறுத்த இந்த முடிவு எடுத்து விட்டார்கள், மற்றபடி உங்கள் மீது அவர்களுக்கு எந்த கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை, உங்களை போய் பிடிக்காமல் இருக்குமா? கண்டிப்பாக உங்கள் மீது அவர்களுக்கு நெறைய அன்பு உண்டு, அவர்கள் தெய்வமாக உங்களுக்கு வழி காட்டி இருப்பார்கள், அதனால் தான் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்னை வந்து சேர்ந்து இருக்கிறீர்கள்” என்று சத்யா சமாதானம் செய்ய முயற்சித்தாள். மனதிற்குள் என்ன இருந்தாலும் நந்தனை தனியாக விட்டுவிட்டு அவர்கள் தற்கொலை செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தான் சத்யாவிற்கு தோன்றியது. “ஆனால் அவர்களின் வலி எப்படி பட்டதோ? அதில் பாதியை அனுபவித்த எனக்கே கஷ்டமாக உள்ளதே” என்று சத்யாவும் மனதிற்குள் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாள். நந்தனுக்காக தன் மன போராட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவனை தேற்ற முயற்சி செய்தாள்.
நந்தன் “எனக்கு புரியவில்லை சத்யா, ஒரு பக்கம் அம்மா மீது கோபமாக வரும், இன்னொரு பக்கம் அம்மாவை நினைத்து பாவமாக இருக்கும், இத்தனை வருடங்கள் இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கு நடுவே நான் மாட்டிக்கொண்டு அல்லாடுவேன், ஆனால் இந்த உணர்ச்சிகள் என்னை கோழையாக்கி வாழ்க்கையில் தோற்கடிக்க விட்டு விட கூடாது என்று எனக்குள்ளே ஒரு வைராக்கியம், அதற்காகவே நன்றாக படித்தேன், மேற்படிப்பு வெளிநாடு என்று சென்று நெறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன், நஷ்டம் அடைய இருந்த தொழிலையும் முன்னேற்றினேன். ஆனால் பழைய விஷயங்கள் ஞாபகம் வரும் போது அதை மறக்க sex உதவியது. என்னவோ சத்யா, ராகவன், மதுவிடம் கூட இப்படி உடைத்து பேசவில்லை, இன்று உன்னிடம் தான் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன், ஏதோ பெரிய பாரமே என் மனதை விட்டு இறங்கியது போல் உள்ளது” என்றான்.
சத்யா “ஆனால் உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது, அம்மா எனக்கு attention கொடுக்கவில்லை என்று அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து இன்று வரை ஒரு victim போல் நான் உறவுகளை கையாண்டிருக்கிறேன், ஆனால் இது போன்ற கொடுமைகள் நடந்தும் நீங்கள் வாழ்க்கையையும் உறவுகளையும் வெற்றிகரமாக கையாண்டிருக்கிறீர்கள், உங்களிடம் இருந்து நான் நெறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னாள்.
நந்தன் ஒரு பெருமூச்சுடன் “இப்போ நான் ஒரு விஷயம் reassurance கேக்க போறேன் உன்கிட்ட” என்றான். சத்யா “ம்ம்ம் கேளுங்க” என்றாள்.
“அம்மாவிற்கு என்மீது கோபம் எதுவும் இருந்திருக்காது தானே சத்யா? என்னை தண்டிக்கவா அப்படி செய்து கொண்டார்கள்? அவர்களுக்கு என்னை பிடிக்கும் தானே? எனக்கு தெரியும், எனக்காக பட்டினி கிடந்து என்னை உயிராக வளர்த்தார்கள், ஆனால் அந்த கடைசி நாள் சம்பவங்கள் எனக்கு அளித்த தண்டனையோ? என்னை அவர்கள் வெறுத்தார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது, நீ சொல்லு சத்யா, was she angry with me?”
“ஒரு அம்மாவாக சொல்கிறேன், உங்கள் அம்மா பட்ட கஷ்டத்தில் பாதியை நானும் அனுபவித்து இருக்கும் முறையில் சொல்கிறேன், அவர்கள் உங்களை தண்டிக்க அப்படி செய்யவில்லை, அவர்களுக்கு உங்கள் மீது எந்த கோபமும் இல்லை, கடைசி நாள் சம்பவங்கள் அவர்களை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம், ஆனால் கடைசி நிமிடத்தில் கூட உங்கள் மீது அவர்களுக்கு இருந்த அன்பில் எந்த குறையும் ஏற்பட்டிருக்காது, அவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும், இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்” என்றாள் அவன் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளி.
Comments
Post a Comment