Sms ch 65 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 65

 

சத்யா நந்தனுக்கு மீண்டும் மீண்டும் call செய்து கொண்டே இருந்தாள், ஆனால் மறுமுனையில் switch off என்றே வந்து கொண்டிருந்தது. அவள் தவிப்பதை பார்த்த கமலா அம்மா, சகுந்தலா, சத்தியமூர்த்தி, கணேஷ் என்று அனைவரும் அவளை ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர். “சத்யா நந்தன் அலட்சியமாக இருக்க மாட்டான், கண்டிப்பாக பாதுகாப்பாக தான் இருப்பான், நீ அவனை பற்றி கவலைப்பட்டு மேலும் மேலும் உடல்நலனை கெடுத்து கொள்ளாதே என்று அனைவரும் அவளுக்கு தைரியமூட்ட முயற்சி செய்யஉங்களால் மட்டும் எப்படி இப்படி casual ஆக இருக்க முடிகிறது, இந்த கடிதத்தை படித்தீர்கள் தானே, அவர் உயிருக்கே ஆபத்து என்று நான் பதறிக்கொண்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் அனைவரும் இயல்பாக இருக்கிறீர்கள், உங்களுக்கு எல்லா பயம் இல்லையா?” என்று சத்யா படபடவென்று கொட்டி அழுதாள்.

 

மறுபுறம் அரை மணி நேரத்திற்கு முன்னால் சண்டிகரில் இருந்த சாம்ராட் ஹோட்டலுக்கு ஷ்யாமின் அம்மா வர நந்தன் அவர்களை வரவேற்று ஒரு டேபிளில் அமர சொல்லி தானும் அமர்ந்தான். அவனுடன் எப்போதும் போல் ராகவனும், முருகனும் இருந்தனர். அவர்களுக்கு பக்கத்து டேபிளில் AKIM குழுவை சேர்ந்த இரு போலீஸ் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவரும் சாதாரண உடையில் அமர்ந்திருந்து இவர்கள் பேசுவதை கேட்க ஆவலாக இருந்தனர். அங்கே அவர்களை தவிர இரண்டு குடும்பங்கள் மட்டுமே வேறு வேறு டேபிளில் அமர்ந்து இருந்தனர்.

 

நந்தன் பேசினான். “Thanks மேடம், நீங்க நெறைய help பண்ணிருக்கீங்க, ஷ்யாம் சென்னைக்கு சத்யாவை தேடி வந்த போது நீங்கள் தான் துரைசாமிக்கு தகவல் தெரிவித்து உள்ளீர்கள், இப்போதும் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளீர்கள், ஆனால் வியப்பாக உள்ளது, எப்படி உங்கள் மகனுக்கு எதிராக எங்களுக்கு உதவ முன் வந்துள்ளீர்கள் என்று என நந்தன் வியப்பாய் கேட்க ஷ்யாமின் அம்மா பேச ஆரம்பித்தார்கள்.

 

எனக்கும் தாய் பாசம் எல்லாம் இருக்கிறது தம்பி, அதனால் தான் என் மகன் செய்த அநியாயங்கள் எல்லாம் தெரிந்த பிறகும் அவனை தண்டிக்கும் வழி தெரியாமல், அல்லது மனம் இல்லாமல் தாமதப்படுத்தி கொண்டிருக்கிறேன், அதே சமயம் நான் அநியாயத்திற்கு துணை போகவும் விரும்பவில்லை

 

கௌஷிக் எங்கள் வீட்டிற்கு வரும் போது 4 வயது, அவனை ஷ்யாம் போல தான் பார்த்தேன், வேறு ஒரு வீட்டு குழந்தையாக பார்க்கவில்லை, என் மகனாக தான் பார்த்தேன், ஆனால் என்ன? மற்ற தாய்களை போல நான் என் பிள்ளைகளே கதி என்று வாழவில்லை, எனக்கு என்று வேலை, பொழுது போக்கு, சமூக சேவை என்று வாழ்ந்தேன், இருந்தும் ஒரு போதும் ஒரு அம்மாவாக என் கடமைகளை செய்ய தவறியதில்லை, கௌஷிக்கும், ஷ்யாமும் 16 வயதை அடையும் வரை எனக்கு தெரிந்த முறையில் அவர்களுக்கு அன்பையும் பாசத்தையும் கண்டிப்பையும் காட்டிதான் வளர்த்தேன், நான் செய்த தவறு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவர்களை தவறுகள் செய்ய அனுமதித்தேன், தவறுகள் செய்து அனுபவித்து கற்றுக்கொள்ளட்டும் என்று கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டேன், ஆனால் அப்போதும் ஷ்யாம் தான் ஒரே அடியாக கெட்டு போய்விட்டானே தவிர கௌஷிக் நல்லவனாக தான் வளர்ந்துள்ளான், அவனை நான் காப்பாற்ற தவறிவிட்டேன் என்று கெர்சீப் எடுத்து கண்களை துடைத்து கொண்டார்கள்.

 

மீண்டும் அவர்களே தொடர மற்ற மூவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். “லேடீஸ் கிளப், travel trips என்று சென்று நான் வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைந்துவிட்டன, பசங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று அலட்சியமாக இருந்து விட்டேன், அது மட்டுமல்ல சுனிதா, சத்யா இருவருமே மிகவும் பொறுப்பாக இருந்தார்கள், என் பிள்ளைகள் மீது அன்பாக இருந்தார்கள், அதனால் நாம் ஏன் தனி இடையூறு என்று சமூக சேவை அது இது என்று போய்விட்டேன்.

 

கொஞ்ச நாட்கள் கழித்து பார்த்தால் கௌஷிக், சுனிதா ஓடிப்போய்விட்டார்கள் என்று ஷ்யாம் சொன்னான், நான் நம்பவில்லை தம்பி, எனக்கு கௌஷிக்கை பற்றியும் தெரியும், சுனிதாவை பற்றியும் தெரியும், ஷ்யாமை பற்றியும் தெரியும், ஆனால் ஷ்யாமிடம் நான் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் கௌஷிக்கின் எலும்பு கூடுகள் கிடைத்த போது நான் முதல் முறையாக உடைந்துவிட்டேன், 4 வயசுல நான் பாத்த கௌஷிக் தான் என் நினைவிற்கு வந்தான், தாய் தந்தையை இழந்து வந்த அவன் என்னையே அம்மாவாக எண்ணி, நம்பி என்னையே சுற்றி வந்தான், நான் பெற்ற பிள்ளை தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்ற என் சந்தேகம் அதிகம் ஆனது, அடிக்கடி துரைசாமி ஷ்யாமுடன் உலா வருவதை கவனித்து துரைசாமிக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து பேசினேன், துரைசாமி சில உண்மைகளை ஒப்புக்கொண்டான். ஆனால் சில விஷயங்களை மறைக்கவும் செய்தான். அப்போது தான் ஷ்யாம் சத்யா வீட்டிற்குள் நுழைந்து மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு சென்றான்.

 

துரைசாமி சொன்ன விஷயங்களையும் ஷ்யாமின் கம்ப்யூட்டரில் இருந்த வீடியோக்களையும் வைத்து பார்த்து மீதி விவரங்களை தெரிந்து கொண்டேன், சத்யாவிற்காக எவ்வளவு வேலைகள் செய்து விட்டான், முதன் முதலாக சத்யா வீட்டிற்கு வந்து கௌஷிக்குடன் இருந்ததை கூட வீடியோ. ச்ச. இவன் தான் அவர்களுக்கு ஏதோ போதை மருந்து கொடுத்து அன்று இப்படி நடந்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன், அன்றில் இருந்து சத்யா கௌஷிக் வீடியோக்களை இவன், சொல்லவே வாய் கூசுகிறது தம்பி, இவனை என்னால் திருத்தவும் முடியாது, கொல்லவும் மனம் வரவில்லை, அப்போது தான் ஒரு நாள் என் வேலைக்காரி உதவியோடு கவிதா யாரும் அறியாமல் வீட்டிற்குள் வந்து ஷ்யாமிற்கு எதிராக ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று பார்க்க வந்தார்கள், அவர்கள் தேடி வந்த ஆதாரங்கள் எல்லாவற்றையும் ஷ்யாமிற்கே தெரியாமல் நான் திரட்டி வைத்திருந்தேன், என்னால் வாங்கி தர முடியாத தண்டனையை அவர்கள் வாங்கி தரட்டும் என்று நினைத்து தான் அந்த pen drive அவர்களிடம் கொடுத்தேன், ஆனால் பாவம் அவர்களுக்கு heart attack வந்து இறந்து விட்டதாக துரைசாமி சொன்னான்.

 

துரைசாமியை மட்டும் நான் contact ல் வைத்திருந்தேன், அப்படி தான் சத்யா சென்னையில் இருப்பது தெரியும், முருகனை follow செய்து இவன் சென்னைக்கு போகிறான் என்ற விஷயத்தை அவன் நண்பனுடன் போனில் பேசியதை வைத்து தெரிந்து கொண்டேன், அதனால் தான் துரைசாமிக்கு தெரிவித்தேன்.

 

ஏதோ நீங்கள் சத்யாவை அவனிடம் இருந்து காப்பாற்றி விட்டீர்கள், தொலைந்து போன pen drive யும் கண்டு பிடித்து விட்டீர்கள். ஆனால் என் மகன் அந்த பாவி ஷ்யாமிற்கு என்மீது சந்தேகம் வந்து விட்டது. நீங்கள் சத்யாவை நேரத்திற்கு காப்பாற்றி விட்டீர்கள், அவனுக்கு அதில் இருந்து என்மீதும், துரைசாமி மீதும் சந்தேகம், call செய்து மிரட்டும் விதமாக பேசினான், ஆனால் நான் இனி அவனுக்கு பயந்து என்ன ஆகப்போகிறது? அவன் பஞ்சாபில் எங்கள் வீட்டிற்கு வரவில்லை, சென்னையில் இருக்கிறானா இல்லை எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை, ஆனால் சுற்றி ஆட்கள் வைத்துள்ளான் என்னை கண்காணிக்க, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை அவன் கொள்ளலாம், எனக்கு என்னை பற்றி கவலை இல்லை, இனிமேல் என் மகனால் வேறு யாரும் கஷ்டப்படக்கூடாது. அதனால் நீங்கள் கூட இந்த சந்திப்பு முடிந்ததும் பாதுகாப்புடன் உங்கள் வீட்டிற்கு செல்வது நல்லது, என்னிடம் இருந்து வேறு ஏதாவது தகவல்  வேண்டுமா தம்பி?” என்று கேட்டார்கள்.

 

இல்லை மேடம், நீங்கள் சேகரித்து கொடுத்த தகவல்களே போதும், நீங்கள் ஏன் எங்கள் பாதுகாப்பில் ஒரு வாரம் இருக்க கூடாது? ஷ்யாமிற்கு ஒரு வழி செய்த பின் நீங்கள் வெளியே செல்லலாம், அது வரை உங்களை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு என்று ராகவன் சொன்னான். நந்தனும் அதை ஆமோதித்தான்.

 

ஷ்யாமின் அம்மாவும் அதை ஏற்று கொண்டார்கள். “ஆனால் ஒரு வாரத்திற்குள் அவனை பிடித்து விட முடியும் என்று தோன்றுகிறதா தம்பி உங்களுக்கு?” என்று கேட்கஒரு வாரத்திற்குள் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் கொடுத்த தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கையிலும் வைரலாக மாறும் போது அது நாட்டில் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும், தற்போதைய அரசு அதற்கு தகுந்த படி தீர்வு கண்டே ஆக வேண்டும், அரசியல்வாதிகளின் தலையீடு எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த போதை பொருட்களின் முக்கிய டீலர்களை arrest செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும், அது தான் எங்களின் நோக்கம் என்று ராகவன் சொல்லி முடிக்க அதற்கு மேல் தாமதிக்க வேண்டாம் என்று ஹோட்டலின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காய்கறி truck ஒன்றில் ஷ்யாமின் அம்மாவை ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு AKIM குழுவினர் அழைத்து செல்ல நந்தன், முருகன், ராகவனும் அதே போன்ற truck ஒன்றில் ஏறி தங்கள் ஹோட்டலை அடைந்தனர்.

 

சத்யா தன் கைப்பயை எடுத்துக்கொண்டு வெளியேற முயலஎங்கம்மா போற?” என்று கமலா அம்மா, வள்ளி அனைவரும் தடுக்கநானும் பஞ்சாப் போறேன், உங்களை மாதிரி கவலை இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை என்று சொல்லி வேகமாக நடக்க முயன்றாள். “உன்னை வெளியே போக அனுமதிக்க மாட்டோம் சத்யா, சின்ன குழந்தை போல் அடம் பிடிக்காமல் உன் அறைக்கு செல் என்று கமலா அம்மா கண்டிப்பாக தெரிவிக்க அங்கே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியும் சொன்னார்.

 

ஆமாம் மேடம், என்ன பிரச்சனை வந்தாலும் உங்களை வெளியே விடமாட்டோம்

 

சத்யா ஓய்ந்து போய் அவர்களை எல்லாம் முறைத்து விட்டு தன் அறைக்கு வந்து கதவை மூடிக்கொண்டாள். வள்ளி அவள் அறையின் கதவை தட்டிசத்யா கதவை கொஞ்சம் திற என்றாள்.

 

அக்கா உங்களுக்கு தெரியும் தானே, அவர் இந்த ஷ்யாம் விஷயமாக தான் சென்றிருக்கிறார் என்று தெரியும் தானே, நீங்கள் கூட என்னிடம் இருந்து மறைத்து விட்டீர்களே, போங்க அக்கா, என்னுடன் பேசாதீர்கள் என்று கோபமாக சொல்லஇங்க பாரு, நந்தன் சாரோட மொபைலில் சார்ஜ் இல்லாமல் இருந்து இருக்கலாம், நீ என்னை உள்ளே அனுமதித்தால் உன் அண்ணன் முருகனுக்கு call செய்து நந்தன் சாரோட பேசலாம் என்று வள்ளி ஆசைக்காட்ட சத்யா கதவை திறந்தாள்.

 

வள்ளி முருகனுக்கு video call செய்ய முருகன் attend செய்தார். “சொல்லு வள்ளி என்றான் முருகன்.

 

நந்தன் சார் இருக்காரா? சத்யா பேச வேண்டுமாம்

 

இதோ தருகிறேன் என்று முருகன் மொபைலை நந்தனிடம் கொடுக்க வள்ளி மொபைலை சத்யாவிடம் நீட்டினாள்.

 

சத்யா மொபைலை வாங்கி நந்தனை பார்த்து அழ ஆரம்பித்தாள். “ஹேய் என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற?” என்று நந்தன் கேட்க ராகவனும், முருகனும் நந்தனை அறையில் விட்டுவிட்டு பால்கனி சென்றனர். வள்ளியும் சத்யாவை அறையில் விட்டு கதவை மூடிவிட்டு வெளியே சென்றாள்.

 

சத்யாவின் அழுகை அதிகமானது. “ஹேய் என்னாச்சு டா? ஜுரம் குறைஞ்சுடுச்சா? எதுக்கு இப்படி அழற? முதலில் நீ அழுவதை நிறுத்த போகிறாயா? இல்லையா?” என்று நந்தன் கண்டிப்புடன் கூற சத்யா தன் அழுகையை கட்டுப் படுத்தினாள். “ம்ம்ம் that’s my girl, இப்போ சொல்லு, என்ன பிரச்சனை?  எதற்காக இவ்வளவு அழுகை, ஆர்பாட்டம்?” என்றான் நந்தன்.

 

நீங்க எங்க போயிருக்கீங்க? எதற்காக போயிருக்கீங்க? ஏன் என்கிட்ட சொல்லாம போனீங்க? உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் உயிரோடயே இருக்க மாட்டேன், அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க என்று சத்யா கோபமாக பொறியஅடேங்கப்பா அவ்வளவு அன்பு இருக்கிறதா என்மேல்? எனக்கு தெரியாமல் போய்விட்டதே?” என்று நந்தன் புன்னகையுடன் கேலியாக சொல்ல சத்யா அவனை கோபமாக முறைத்தாள்.

 

பேச்சை மாத்தாதீங்க, எதுக்கு இப்போ பஞ்சாப் போனீங்க? எதுக்காக ஷ்யாம் அம்மாவை சந்தித்தீர்கள்? இதெல்லாம் தேவையா? அந்த ஷ்யாம் ஒரு கடிதம் எழுதி security மேல் தூக்கி போட்டுட்டு போயிருக்கான், ஒழுங்கா உன் கணவனை திரும்பி வரச்சொல், இல்லை என்றால் அவனை உயிரோடு விடமாட்டேன் என்று

 

ஷ்யாமா? மொட்டை கடிதம் எழுதி செக்யூரிட்டி மேல் தூக்கி போட்டுவிட்டு சென்றானா? நான் இங்கே அவன் அம்மாவை சந்தித்ததை பற்றியும் எழுதி இருந்தானா?”  என்று நந்தன் ஆச்சர்யமாக கேட்கஆமாம் அவன் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை, நீங்கள் உடனே திரும்பி வந்துவிடுங்கள் நந்தன், அவனால் உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஆகி விடுமோ என்று பயமாக உள்ளது என்று சத்யா மீண்டும் பயத்துடன் கெஞ்ச நந்தன்ப்ச்ச் எல்லாத்துக்கும் பயப்படாதே சத்யா, நான் ஒன்றும் தான் தோன்றி தனமாக இந்த காரியத்தில் இறங்கவில்லை, ஒரு குழுவுடன் ஆலோசித்து உரிய பாதுகாப்புகளுடன் தான் இறங்கி உள்ளேன், அதனால் என்னை பற்றி வீணாக கவலை படாதே என்று சொல்லிவிட்டு நந்தன் மீண்டும் ஏதோ யோசனையோடு கையில் மொபைலை பிடித்தப்படியே நடந்து கொண்டு பேசினான்.

 

உங்களுக்கு பயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை, உங்களுக்கு திரும்ப திரும்ப call பண்றேன், switch off னே வந்துட்டு இருக்கு, எவ்வளவு பயமா ஆகிடுச்சு தெரியுமா?” என்று சத்யா அழாத குறையாக சொல்லலூசு இங்க இருக்கிற விஷயங்களுக்கு நடுவே மொபைல் சார்ஜ் பண்ண மறந்துவிட்டேன், இதற்காகவா பயந்தாய்?” என்று நந்தன் மீண்டும் இலகுவாக பதில் சொல்ல சத்யா கடுப்பானாள்.

 

உங்களுக்கு ஏன் உங்களை சுற்றி இருக்கும் ஆபத்து புரிய மாட்டேன் என்கிறது, நான் பஞ்சாப் வரலாம் என்று பார்த்தால் உங்கள் அம்மா, அப்பா, செக்யூரிட்டி அனைவரும் என்னை house arrest செய்து வைத்துள்ளார்கள் என்று சத்யா கோபமாக சொல்ல வேறு ஏதோ யோசித்துக் கொண்டிருந்த நந்தன் சத்யா சொன்னதை கேட்டு வாய்விட்டு சிரித்தான். “ஹவுஸ் அர்ரெஸ்ட்டா? நல்ல காரியம் செய்தார்கள், நானும் திரும்பி வந்த பிறகு உன்னை ரூம் அர்ரெஸ்ட் செய்கிறேன் என்று கண் சிமிட்ட சத்யா என்ன சொல்வதென்று தெரியாமல் கொந்தளித்தாள்.

 

உங்கள் யாருக்குமே என் பயமும் தவிப்பும் புரிய மாட்டேன் என்கிறது, நீங்கள் அடுத்த flight ல் புறப்பட்டு வர வேண்டும்

 

விளையாடாதே சத்யா, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்து செய்த முயற்சிகள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு வர சொல்கிறாயா?”

 

அது எல்லாத்தையும் போலீஸ் பாத்துப்பாங்க, நீங்க வாங்க

 

கௌஷிக்கிற்கு நியாயம் கிடைக்க வேண்டாமா?”

 

சத்யா கண்களில் கண்ணீர் வந்தது. “கிடைக்க வேண்டும் தான், ஆனால் நீங்களும் எனக்கு முக்கியம் தானே, கௌஷிக் என் இயலாமைக்காக என்னை மன்னித்து விடுவார், நீங்கள் வந்துவிடுங்கள் நந்தன் என்று கண்ணீருடன் மன்றாடினாள்.

 

நந்தன் அவளை முறைத்தான். “நீ போனை வை, நான் பிறகு பேசுகிறேன் என்று சொல்ல சத்யா செய்வதறியாமல் ஒரு சேலையை எடுத்து கட்டிலின் மேல் ஏறி fan அண்ணாந்து பார்த்துவிட்டு நின்றாள். “ஹேய் சத்யா, என்ன பண்ற?” என்று நந்தன் கேட்கஅடுத்த flight பிடித்து வருவேன் என்று நீங்கள் சொல்லுங்கள் என்றாள்.

 

நந்தன் அவளை தீர்க்கமாக பார்த்துவிட்டுமுடியாது என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்கமுடியாது என்றால் என்னை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினாள்.

 

நந்தன் ஒரு பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டுநாம் 100 வருஷம் சந்தோஷமாக கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், உனக்கு அந்த ஆசை இல்லை என்றால் உன் உயிரை இப்போதே மாய்த்துக்கொள், அன்றைக்கே சொன்னேன், என் மனைவி சத்யா தைரியமாக இருக்க வேண்டும் என்று, இப்படி கோழையாக இருக்கும் சத்யா எப்படி IAS ஆக முடியும்? என்மீது நம்பிக்கை இருந்தால் நான் திரும்பி வரும் போது நீ அங்கே நன்றாக ஆரோக்கியமாக எனக்காக காத்திருக்க வேண்டும், என்மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உன் விருப்பம் என்று சொல்லி போனை வைத்தான்.

 

சத்யா சேலையை கீழே போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். முகத்தை தன் முழங்கால்களில் புதைத்து அழுதாள். சிறிது நேரம் கழித்து மொபைலை எடுத்து பார்த்துச்ச கொஞ்சம் கூட கவலை இல்லை என்னை பற்றி, திரும்ப call பண்ணி check பண்ணக்கூட தோன்றவில்லை உங்களுக்கு, என் வார்த்தைக்கும் மதிப்பு இல்லை, எனக்கு மட்டும் உங்களுடன் 100 வயது ஒன்றாக வாழ வேண்டும் என்று ஆசை இல்லையா? அதனால் தானே திரும்பி வந்துவிடுங்கள் என்று அழைக்கிறேன் என்று புலம்பிவிட்டு மீண்டும் முருகனின் மொபைலுக்கே call செய்தாள்.

 

தலையில் கை வைத்து உட்கார்ந்து இருந்த நந்தன் வள்ளி நம்பரில் மீண்டும் call பார்த்ததும் வேகமாக attend செய்தான். சத்யாவை பார்த்ததும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அவளை முறைத்தான். “என்மேல கொஞ்சம் கூட உங்களுக்கு அன்பே இல்லை, செத்துடுவேன்னு சொல்றாளே திரும்ப call பண்ணி check பண்ணுவோம்னு கூட உங்களுக்கு தோணல, நான் உங்கமேல கோவமா இருக்கேன், நீங்கள் இங்கே வரும் போது உங்களோடு நான் பேசமாட்டேன், நீங்கள் என்னை தொடக்கூடாது, கட்டி பிடிக்க கூடாது, முத்தமிடக்கூடாது என்று சொல்லி நிறுத்தியவள் நந்தன் இன்னும் தன்னை முறைப்பதை பார்த்து உள்ளூற பயந்தாள். “ச்ச நாம அப்படி தற்கொலை பண்ணிப்பேன்னு சொல்லி மிரட்டி இருக்க கூடாதோ? ரொம்ப கோவமா இருக்காரு போலவே என்று மனதிற்குள் நினைத்து அவனை நேராக பார்க்க முடியாமல் தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள். அவளை சிறிது நேரம் முறைத்துவிட்டுவேற ஏதாவது சொல்லனுமா? எனக்கு நெறைய வேலை இருக்கு என்றான் நந்தன். சத்யா முகம் சுருங்கநான் வைக்கிறேன் என்று கோபமாக மொபைலை வைத்தாள்.

 

நந்தன் ராகவனிடம் ஷ்யாம் மொட்டை கடிதத்தை பற்றி சொல்லிஆனால் ராகவா அவன் சென்னைல இருப்பான்னு எனக்கு தோணல, வேற யாரையாவது வைத்து கூட அவன் அந்த கடிதத்தை எழுதி தூக்கி போட்டு இருக்கலாம் என்று நந்தன் சொல்ல ராகவன்ஆனால் இன்னைக்கு சாயங்காலம் நாம ஷ்யாம் அம்மாவை சந்தித்ததை அவன் ஆட்கள் யாரோ பார்த்து அவனுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்கள். அவன் இங்கே இருந்திருந்தால் கண்டிப்பாக அவன் அம்மாவையோ உன்னையோ ஏதாவது செய்ய முயற்சி செய்து இருப்பான், so பஞ்சாப்லயும் அவன் இல்லை என்று ராகவன் யோசிக்க நந்தன் பேசினான். “டேய் இனிமேல் அவன் எங்கே இருந்தால் நமக்கு என்ன? எங்கள் வீட்டில் பாதுகாப்பிற்கு ஆட்கள் போட்டாகிவிட்டது, நாமும் இங்கே பாதுகாப்போடு தான் இருக்கிறோம், நாம் திட்டமிட்டபடி AKIM குழுவுடன் சேர்ந்து இன்று இரவே அவனையும் மற்ற drug டீலர் பற்றிய தகவல்கள், வீடியோக்களையும் நெட்டில் பரவ விட செய்வோம், ஏற்கனவே நமக்கு சில அமைச்சர்களின் back up கிடைத்து இருக்கிறது, so let’s get on with it” என்று சொல்ல ராகவனும்ஆமாம் டா, தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி AKIM குழுவிற்கு தெரியப்படுத்த அவர்களும் ஹோட்டலில் நந்தன் இருக்கும் அறைக்கு வந்தனர்.

 

சில லேப்டாப்களை வைத்து US, UK, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் உள்ள AKIM குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவல்கள், வீடியோக்களை அனுப்பி வைத்து பதிவேற்றம் செய்தனர். ஆங்காங்கே இருக்கும் சில whistleblowers ன் வெப்சைட்களில் எல்லாம் இந்த தகவல்களை வைரலாக்க அனுப்பினர். ஒரே இரவில் அவர்கள் நினைத்தப்படியே எல்லா தகவல்களும் எல்லா நாடுகளிலும் வைரலாகின.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018