Sms ch 38 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 38 நந்தன் ஸ்ரேயா flat ன் calling bell ஐ அழுத்தி விட்டு காத்திருந்தான் . சில நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை . மீண்டும் calling bell ஐ அழுத்தி காத்திருந்தான் . கதவு திறக்கப்படவில்லை . Whatsapp ல் மெசேஜ் செய்தான் . “Hey Sreya, Please open the door, I know you are inside”. மீண்டும் calling bell ஐ அழுத்தினான் . இந்த முறை தாழ்ப்பாள் நீக்கப்படும் சத்தம் கேட்டது . ஆனால் கதவு லேசாக மட்டுமே திறக்கப்பட்டது . நந்தன் மெதுவாக கதவை திறந்து உள்ளே சென்றான் . அங்கே ஸ்ரேயா திரும்பி நின்று கொண்டிருந்தாள் . அவள் பின்னால் நின்ற நந்தன் கதவை மூடி தாழிட்டு விட்டு “ ஸ்ரேயா ?” என்றான் . அவள் விசும்பும் சத்தம் கேட்டது . அவளின் தோளில் கைவைத்து அவளை திருப்ப முயன்றான் . ஆனால் அவள் திரும்ப மறுத்தாள் . “ ஸ்ரேயா please, திரும்பு ” என்றான் . அவள் அழுது கொண்டே இரண்டடிகள் முன்னே சென்று நின்றாள் . “ ஸ்ரேயா ....” என்றான் செய்வதறியாமல் விரக்தியாக . “ நந்தன் உங்களை தெரியாமல...