Sms ch 11 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அ த்தியாயம் 11 “ அம்மா ஏன்மா இங்கயே நிக்குற ? உள்ள வா ” என்று தருண் அழைக்கும் வரை சத்யா வேறு ஏதோ உலகத்தில் நிற்பது போல் நின்று கொண்டிருந்தாள் . நந்தன் திரும்பி வராமல் இருப்பதற்காக அவள் பேசிய பேச்சு எதுவுமே வேலை செய்யவில்லை , சொல்லப்போனால் அவன் விரும்பினால் அவளையே கூட எப்படி அடைவது என்று அவனுக்கு தெரியுமாம் , ஆனால் அவன் அவளுக்காக வரவில்லையாம் , தருணுக்காக தான் வருகிறானாம் , இது அவளுக்கு அவமானமா ? ஏமாற்றமா ? என்று புரியாத அளவு அவன் பேச்சில் அவள் குழம்பி இருந்தாள் . இனிமேல் அவனிடம் பேசும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும் , இதை பற்றி வேறு எதுவும் நினைக்க வேண்டாம் , நினைத்தால் அவமானமும் குழப்பமும் தான் மிஞ்சும் என்று நந்தனின் நினைவை பிடிவாதமாக ஒதுக்கினாள் . தருண் அவளிடம் கம்மலை கொடுத்தான் . நந்தன் வாங்கி வந்த பொருட்களை பார்த்து கொண்டிருந்த சத்யா கம்மலையும் அவன் தான் வாங்கி வந்திருக்கிறான் என்று நினைத்து குழம்பினாள் . “ இதுவும் உன்னோட அந்த அங்கிள் வாங்கி குடுத்தாரா ?” என்ற...