Sms ch 38 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 38
நந்தன் ஸ்ரேயா flat ன் calling bell ஐ அழுத்தி விட்டு காத்திருந்தான். சில நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. மீண்டும் calling bell ஐ அழுத்தி காத்திருந்தான். கதவு திறக்கப்படவில்லை. Whatsapp ல் மெசேஜ் செய்தான். “Hey Sreya, Please open the
door, I know you are inside”.
மீண்டும் calling bell ஐ அழுத்தினான். இந்த முறை தாழ்ப்பாள் நீக்கப்படும் சத்தம் கேட்டது. ஆனால் கதவு லேசாக மட்டுமே திறக்கப்பட்டது. நந்தன் மெதுவாக கதவை திறந்து உள்ளே சென்றான். அங்கே ஸ்ரேயா திரும்பி நின்று கொண்டிருந்தாள்.
அவள் பின்னால் நின்ற நந்தன் கதவை மூடி தாழிட்டு விட்டு “ஸ்ரேயா?” என்றான். அவள் விசும்பும் சத்தம் கேட்டது. அவளின் தோளில் கைவைத்து அவளை திருப்ப முயன்றான். ஆனால் அவள் திரும்ப மறுத்தாள்.
“ஸ்ரேயா please, திரும்பு” என்றான்.
அவள் அழுது கொண்டே இரண்டடிகள் முன்னே சென்று நின்றாள்.
“ஸ்ரேயா....” என்றான் செய்வதறியாமல் விரக்தியாக.
“நந்தன் உங்களை தெரியாமல் வர சொல்லிவிட்டேன், நீங்கள் அப்படியே திரும்பி சென்று விடுங்கள்”
“No I won’t go” என்றான் உறுதியாக.
“நீங்கள் என்னை இப்படி பார்க்க வேண்டாம், திரும்பி சென்று விடுங்கள்”
“ஆனால் ஸ்ரேயா, நான் பார்க்க வேண்டும்” என்று சொல்லி ஸ்ரேயாவின் முன் சென்று நின்றான். அவள் முகத்தை மூடி அழுதாள். அவன் அவள் கைகளை விலக்கி அவள் முகத்தை பார்த்தான். நந்தனின் கண்கள் கலங்கின. ஆனால் அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டான். “இது எப்படி நடந்தது? எப்போது?” என்றான்.
ஸ்ரேயா மெதுவாக தைரியத்தை வரவைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். வேகமாக அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள். அவளை அணைத்து அவள் முதுகை தடவி கொடுத்தான் நந்தன். சில நிமிடங்கள் வேறு எதுவும் பேசவில்லை இருவரும். அவள் அழுது முடிக்கும் வரை அவன் காத்திருந்தான். கொஞ்ச நேரம் கழித்து அவள் அழுகை தேம்பலாக மாறி அதுவும் குறைய ஆரம்பித்தது. நந்தன் அவளை விலக்கி அங்கே இருந்த சோஃபாவில் அமர வைத்து அவனும் அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு கேட்டான்.
“இது எப்படி நடந்துச்சு?”
கண்களை துடைத்துக்கொண்டே சொன்னாள். “என் முன்னாள் கணவனின் கைவரிசை, ஆசிட் வீச்சு” என்றாள்.
இதை கேட்ட நந்தன் ஒரு நிமிடம் புரியாமல் “What!? Your ex husband did
this? How can he do this to you?” என்று நம்ப முடியாமல் மறுப்பாக தலையை ஆட்டினான். அவனுக்கு இப்போது ஆச்சர்யம் கோபமாக மாறி இருந்தது. “நிஜமாகவே அவன் தான் செய்தானா? Bastard” என்றான்.
ஸ்ரேயா விரக்தியாக புன்னகைக்க முயன்றாள்.
“எப்போது நடந்தது?” என்று கேட்டான் நந்தன்.
“ரெண்டு மாசம் ஆகுது”
“ரெண்டு மாசமா? ஏன் நீ என்கிட்ட முன்னாடியே சொல்லல?”
“ஹ்ம்ம் எதையும் எதிர்பார்க்காதே என்று சொல்லி தானே நீங்கள் என்னுடன் பழக ஆரம்பித்தீர்கள், நீங்கள் என்ன என் காதலனா கஷ்டம் வந்ததும் தேடுவதற்கு?” என்று கிண்டலாக கூறி நகைக்க முயன்றாள்.
நந்தன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னான். “அதற்காக உனக்கு இப்படி ஒரு கஷ்டம் வரும் போது அதை நான் கண்டும் காணாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா?”
“இருந்தாலும் உங்களை தொல்லை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை, ஆனால் இரண்டு மூன்று நாட்களாக யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் என்று தோன்றியது, என்னுடைய மற்ற நண்பர்கள், உறவுகள் இருக்கிறார்கள் தான், ஆனால் ஏனோ உங்கள் அரவணைப்பு வேண்டும் போல் தோன்றியது”
நந்தன் அமைதியாக அவளை பார்த்துவிட்டு தன் தோளில் சாய்த்துகொண்டு பேசினான். “எங்க வச்சு இப்படி பண்ணினான்? Arrest பண்ணியாச்சு தானே?”
“ஆபீஸ் விட்டு வரும் போது, எதிர்பார்க்கவே இல்லை, side ல வண்டில வந்து ஊற்ற பார்த்தான், நல்ல வேளையாக என் தோழி என்னை கொஞ்சம் எட்ட இழுத்து விட்டாள், அதனால் பாதிப்பு கொஞ்சம் குறைவு தான்”
“இருந்தாலும் இந்த பக்கம் முழுவதையும் இப்படி சிதைத்து விட்டானே, he should get maximum
punishment Sreya” என்றான் வருத்தமும் கோபமுமாக.
“அவனை இன்னும் போலீஸ் தேடி கொண்டிருக்கிறார்கள்”
“என்ன!? ராஸ்கல் தப்பித்து விட்டானா?” என்று கோபமாக கேட்ட நந்தன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு “எத்தனை நாளைக்கு ஓடி ஒளிவான்? என்றாவது ஒரு நாள் மாட்டுவான், ஆசிட் வீச்சுக்கு இப்போது தண்டனை அதிகம், அவன் இதற்காக வருந்த வேண்டும்”
“விடுங்கள் நந்தன், எனக்கே இந்த தண்டனை தேவை தானோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது”
“என்ன உளறுகிறாய் ஸ்ரேயா? No one deserves this”
“எத்தனையோ பெண்கள் நம் நாட்டில் திருமணம் என்ற உறவை மதித்து வாழும் போது நான் ஏன் divorce வாங்க வேண்டும்? தவறு என்மீதும் தான் என்று தோன்றுகிறது”
“shut up ஸ்ரேயா, அதற்காக ஆசிட் வீச்சா? Intolerable, எத்தனையோ பேர் mutual ஆக விவாகரத்து வாங்கிக்கொண்டு அவரவர் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதில்லையா? நீ என்ன ஊர் உலகத்தில் நடக்காததை செய்து விட்டாய்? அதுவும் divorce வாங்கி ஒரு வருடம் ஆகி இருக்கும் இல்லையா? நாம் பழக ஆரம்பித்தே ஆறு மாதங்கள் இருக்குமே, இத்தனை நாட்கள் கழித்து அவனுக்கு ஏன் இவ்வளவு குரோதம் உன்மேல்?”
“இந்த ஒரு வருடமாக மனதிற்குள்ளேயே கருவி கொண்டிருந்திருக்கிறான், ஆசிட் வீச்சுக்கு இரண்டு நாட்கள் முன்பு என்னை வழி மறித்து மிரட்டினான், கோர்ட்டில் அவனை ஆண்மை இல்லாதவன் என்று சொல்லிவிட்டேனாம், அது அவனை மிகவும் பாதித்து விட்டதாம், அவனால் அதை மறக்கவே முடியவில்லையாம், நீ ஏன் அப்படி சொன்னாய் என்று என்னை மிரட்டினான், ஆனால் நான் பதில் ஏதும் பேசாமல் வேகமாக அவனை விட்டு விலகி friend காரில் ஏறி சென்றுவிட்டேன், இரண்டு நாட்கள் கழித்து தான் இந்த தாக்குதல், ஆனால் யோசித்து பார்த்தால் அவன் கோபத்திலும் நியாயம் இருக்கிறது, நான் அவனை அப்படி சொல்லி இருக்க கூடாது, எத்தனையோ பெண்கள் நம் நாட்டில் sexless marriage ல் வாழவில்லையா? அவர்கள் எல்லோரும் இப்படியா கணவன் ஆண்மை இல்லாதவன் என்று 10 பேர் முன்னிலையில் சொல்கிறார்கள்? நான் அட்ஜஸ்ட் செய்து போய் இருக்க வேண்டும்”
“ஸ்ரேயா உன்னை நீயே இப்படி குறை சொல்வதில் நியாயமே இல்லை, sexless marriage ல் நீ இருந்தாய் என்று சொல்வதை விட பிரச்சனை loveless marriage ல் நீ இருந்தது தான், உங்கள் இருவருக்கும் இடையில் பரஸ்பர அன்பும் காதலும் இருந்திருந்தால்அவனும் உன் தேவைகளை மதித்து பேசி இருப்பான், நீயும் அவனை ஆண்மை இல்லாதவன் என்று நினைத்திருக்க மாட்டாய், அங்கே sex இரண்டாம் பட்சம் ஆகி இருக்கும், ஆனால் நீ சொன்ன விஷயங்களை வைத்து பார்த்தால் அவனுக்கு உன்மீது அன்பே இல்லை, அப்படி இருக்கும் போது நீ ஏன் உன்னை நீயே குறை சொல்லிக்கொள்கிறாய், மனதளவில் மிகவும் பாதிக்க பட்டிருக்கிறாய், அதனால் தான் இப்படி உன்னை நீயே நொந்து கொள்கிறாய், நான் சொல்வதை கேள், இப்போது உன்னுடைய லட்சியம் அவன் பிடிபட்டதும் அவனுக்கு தண்டனை வாங்கி தருவது, இரண்டாவது உன் உடல் நலமும், மன நலமும் பேணுவது, actually இது தான் உன் முதல் priority, அடுத்து career, உன்னால் இந்த நிலையில் வேலை செய்ய முடியுமா?”
“சில surgery முடிந்துள்ளது, இன்னும் சில surgery பாக்கி உள்ளது, அதுவும் முடிந்ததும் I need to face this world and
start my career again, ஆனால் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது நந்து, என் முகத்தை எனக்கே பார்க்க பிடிக்கவில்லை, என்னுடைய மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை, முகம், உடம்பெல்லாம் வலி, மனதில் சுத்தமாக தெம்பில்லை” என்று மீண்டும் கண்கள் கலங்கி அழ ஆரம்பித்தாள்.
“ஸ்ரேயா, இனிமேல் தான் நீ தைரியமாக இருக்க வேண்டும், அவன் ஜெயிலில் இருக்கும் போது நீ வெளியே சுதந்திர பறவையாக வாழ்ந்து காண்பிக்க வேண்டும், நீ எப்போதுமே அழகு தான், இந்த நம்பிக்கை உனக்குள் வரவேண்டும், career ல் ஏதேனும் உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன், அவனை கோர்ட்டில் சந்திக்க பயமாக இருந்தால் சொல், துணைக்கு நான் வருகிறேன், எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீ தைரியமாக வாழ பழக வேண்டும்” என்று ஸ்ரேயாவின் கைகளை இறுக்கி பிடித்து அவளுக்கு தைரியமூட்டினான் நந்தன்.
அவனை வியப்பாக பார்த்த ஸ்ரேயா அவன் முகத்தை நெருங்கி முத்தமிட சென்றாள். நந்தன் விலகினான்.
“Sorry நீங்கள் பேசியதை வைத்து நீங்கள் இன்னும் என்னை அழகானவளாக பார்க்கிறீர்கள் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன், இவ்வளவு தைரியம் கொடுத்து துணையாக வருவேன் என்று வேறு சொன்னீர்களா, உணர்ச்சிவசப்பட்டு என் நிலையை மறந்து நெருங்கிவிட்டேன், இப்போது என்னை பார்த்தால் யாருக்கு முத்தமிட தோன்றும்?” என்று கூனி குறுகினாள் ஸ்ரேயா.
நந்தன் “ஸ்ரேயா, உன் அழகுக்கு எந்த குறையும் இல்லை, you are still beautiful, you are always
beautiful” என்று நிறுத்தினான்.
ஸ்ரேயா “ஆனால் முத்தமிட விருப்பமில்லை, இதற்கு மற்றவர்களை போல் நீங்களும் என்னை பார்த்து முகத்தை சுளித்து இருக்கலாமே நந்து, எதற்காக வீணாக பொய் சொல்லி என்னை தேற்ற நினைக்கிறீர்கள்?” என்றாள்.
“நீ என்னை புரிந்து கொண்டது இவ்வளவு தானா? நான் வெளிப்புற அழகை மட்டும் பார்த்து பழகுபவன் இல்லை, என் கண்களுக்கு நீ இன்னும் அழகாக தான் தெரிகிறாய், ஆனால் என்னால் உன்னை முத்தமிட முடியாது”
“எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை”
நந்தன் சில நொடிகளின் அமைதிக்கு பின் சொன்னான். “I love someone”.
ஸ்ரேயா தான் கேட்ட வார்த்தைகள் உண்மை தானா என்பது போல் அவனை பார்த்தாள். “Really? Love ஆ? நீங்களா? I just can’t believe it, love எல்லாம் சும்மா, எனக்கு love எல்லாம் வராது, feelings எல்லாம் சும்மா, commitment, கல்யாணம் என்றால் அலர்ஜி என்று அலுத்து கொள்வீர்களே, நீங்களா love செய்கிறீர்கள்?” என்று ஆச்சர்யம் கலந்த புன்னகையுடன் கேட்டாள்.
நந்தனும் ஒரு புன்னகையுடன் “Yes என்னாலயும் நம்ப முடியவில்லை, but it is the truth” என்றான்.
“ஹாஹா நந்து, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, அந்த பொண்ணு யாரு? அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா? கல்யாணம் எப்போ?”
“ஹேய் நிறுத்து நிறுத்து, விட்டா குழந்தை குட்டி, பேரன் பேத்தி னு கேப்ப போலவே, இன்னும் அவளிடம் சொல்லவில்லை”
“ஏன் ஏன் சொல்லவில்லை?” என்று பரபரத்தாள்.
“இப்போது என்ன அவசரம்? பொறுமையாக சொல்லிக்கொள்ளலாம்”
“So இன்னும் அவங்ககிட்ட சொல்லல, அவங்க உன்னை love பன்றாங்களான்னு தெரியாது, ஆனா அதுக்குள்ள என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள், கண்டிப்பாக நான் பழைய அழகுடன் இருந்தால் வேண்டாம் என்று சொல்லி இருக்க மாட்டீர்கள்” என்றாள் கிண்டலாக.
“ஸ்ரேயா think about it, உனக்கு இப்படி நடந்ததே எனக்கு இன்று தான் தெரியும், ஆனால் நான்கு மாதங்களாகவே நான் உன்னை சந்திக்கவில்லையே, so உன்னுடைய அழகுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை”
“அப்படி என்றால் நீங்கள் என்னை கடைசியாக சந்திக்கும் போதே அந்த பெண் மீது காதல் வந்துவிட்டதா?”
“வந்திருக்கலாம் தெரியவில்லை, நவம்பர் 5 நாம் சந்திப்பதாக plan இருந்தது அல்லவா? அன்று தான் அவளை முதல் முறையாக பார்த்தேன், அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து நாம் ஒன்றாக இருந்தோம், ஆனால் ஏனோ என் மனம் ஒட்டவில்லை, அப்போதே எனக்கு அவள் மீது காதல் வந்துவிட்டதா என்று தெரியவில்லை, ஆனால் something was there, அதனால் தான் அதன் பிறகு உன்னை சந்திக்க எனக்கு தோன்றவில்லை என்று பிறகு தான் புரிந்தது, அப்போது நான் அதை பெரிதாக யோசித்து பார்க்கவில்லை, கொஞ்ச நாட்களாக தான் உறுதியாக தெரிந்தது, எனக்கு அந்த பெண்ணின்மேல் காதல் என்று”
“நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன், I know you value humans more
than their outside beauty, anyhow நாலைஞ்சு மாசமாவே சார் love feelings ல தான் சுத்திட்டு இருந்தீங்களா? You know what? என் friend ஒருத்தி ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பாள், நீ ஏன் நந்தாவை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று, அப்போதெல்லாம் சொல்வேன், அவனுக்கு feelings எல்லாம் கிடையாது, mystery man, நான் ஒருவனிடம் மாட்டி தவித்தது போதும், அவனுக்கு ஏமாந்த அப்பாவி பெண் ஒருத்தி கிடைப்பாள் என்று, ஆனால் உங்களுக்கும் உணர்வுகள் உள்ளது, கொஞ்ச நாட்கள் உடல் சுகத்திற்காக வந்த என்னையே இவ்வளவு மதிப்பாக நடத்துகிறீர்களே, எனக்கு ஒரு கஷ்டம் என்றதும் தவிக்கிறீர்களே, அந்த பெண் கண்டிப்பாக கொடுத்து வைத்தவள் தான், அவள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று ஆர்வமாக புன்னகையுடன் கேட்டாள்.
“சத்யா” என்றான் நந்தன் புன்னகையுடன்.
“ஹ்ம்ம் லக்கி girl, சரி இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால் நான் உங்களை வர சொல்லி அழைத்திருக்க மாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள், இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன்”
“அதெல்லாம் இல்லை, உன்னை அப்படியே விட்டுவிட்டு போகமாட்டேன், இந்த incident தெரியாமல் போய் இருந்தால் ஒருவேளை நானும் call, மெசேஜ் இல்லாமல் விலகி இருந்திருப்பேன், ஆனால் இனி அப்படி உன்னை விட முடியாது, உன்னை தேற்றி கொண்டு வரவும் எப்போதுமே நல்ல நண்பனாக உனக்கு உறுதுணையாக இருப்பேன், அதனால் எனக்கு call செய்வதை தொல்லையாக நினைக்காதே, நானும் அப்படி நினைக்க மாட்டேன், நட்புக்கு மேலான நெருக்கம் மட்டும் வேண்டாம், அந்த இடம் இனி சத்யாவிற்கு மட்டும் தான்” என்றான்.
“I am also lucky then to be your friend, நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது நந்து, தாமதிக்காமல் அந்த பெண்ணிடம் சொல்லிவிடுங்கள், சரியா? You deserve to be loved”
“And you deserve to be loved by a right guy, in fact
everyone deserves to be loved, அதனால் ஒரு போதும் உன்னை எதற்காகவும் தாழ்வாக நினைக்காதே” என்றவன் சிறு அமைதிக்கு பின் “சரி அடுத்து என்ன? என் நண்பன் ஒருவன் போலிசில் உள்ளான், அந்த ராஸ்கலை கண்டுபிடிக்கும் பணி எப்படி நடக்கிறது என்று அவன் மூலம் கேட்டு தெரிந்து கொள்கிறேன், எந்த ஹாஸ்பிடலில் காண்பிக்கிறாய்?”
“அப்பல்லோவில் தான்”
“ok என்ன நடக்குதுன்னு update சொல்லு அடிக்கடி, I have the shoulder if you want to cry" என்று அவள் தலையில் கை வைத்து சொல்லிவிட்டு “சரி நான் கிளம்புறேன், you are sure you don’t love me
right? Last chance உனக்கு, இல்லன்னா சத்யாகிட்ட போய்டுவேன்” என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்து கொண்டே கேட்டான்.
“ஹாஹா உன்மேலன்னு இல்லை, இனி எந்த ஆண் மீதும் எனக்கு love வராதோ என்று தோன்றுகிறது, ஆனால் அப்படியே உன்மீது love என்று சொன்னால் சத்யாவை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடப் போகிறாயா என்ன?”
“மாட்டேன், I never felt like this for anyone
else” என்றான் எங்கேயோ பார்த்தப்படி புன்னகையாக.
“அப்புறம் என்ன? சத்யாவே உன்னை மேய்க்கட்டும்” என்றாள் கிண்டலாக. “But honestly I thought you were
a narcissist, who uses people, who doesn’t have any feelings, என்றெல்லாம், ஆனால் என் கணிப்பை பொய் ஆக்கிவிட்டாய் நந்து, I am so happy for you” என்றாள் மகிழ்ச்சியாக.
நந்தனும் ஒரு புன்னகையுடன் “thank you, நண்பன் என்றதும் வா போ என்று பேச ஆரம்பித்து விட்டாயே?” என்று கிண்டலாக கேட்டு அவளை அணைத்துவிட்டு விடைபெற்று வெளியேறினான்.
Comments
Post a Comment