Sms ch 37 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

த்தியாயம் 37

ஷ்யாம் போட்டோவை எடுக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் நந்தன் அன்று ஏனோ மகிழ்ச்சியாகவே இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கான காரணமும் அவன் அறிந்ததே. இருந்தாலும் அதை பற்றி மனதில் அதிகமாக அசை போடாமல் ஆக வேண்டிய காரியங்கள் ஆயிரம் உள்ளன என மனதிற்கு கடிவாளம் போட்டான். சத்யாவும் அன்று மகிழ்ச்சியாக இருந்தாள். ஏன் என்று யோசிக்க அவசியமின்றி அவளுக்கு காரணம் கிடைத்தது. இருந்து இருந்து முருகன் அண்ணாவும் வள்ளி அக்காவும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள், அதனால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது, இதில் தீவிரமாக சிந்திக்க வேறு எதுவும் இல்லை என்று படிப்பில் கவனம் செலுத்தினாள்.

 

நந்தன் ராகவனுக்கு மெசேஜ் அனுப்பினான். “Any update?”. பதில் வந்ததுநாளை மாலை சந்திப்பில் சொல்கிறேன்”.

 

அடுத்தது நந்தன் துரைசாமியின் மகளுக்கு பரிந்துரை செய்த டாக்டரிடம் பேச மீண்டும் முயற்சி செய்தான். இந்த முறை டாக்டரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் துரைசாமியின் மகளுக்கு நரம்பியல் தொடர்பான சிகிச்சையுடன் ஆயுர்வேத சிகிச்சையும் அளித்தால் அந்த பெண்ணை தேற்றி மீண்டும் அவள் வயதுக்கேற்ற வளர்ச்சியை கொண்டு வர முடியும் எனவும் கேரளாவில் தனக்கு தெரிந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தையும் துரைசாமிக்கு பரிந்துரை செய்திருப்பதையும் தெரிவித்தார். அங்கே சென்று வந்தால் இடமும் சூழ்நிலையும் அவள் மனவளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார். நந்தன் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு துரைசாமிக்கு call செய்தான். கேரளாவிற்கு செல்ல நந்தனும் வலியுறுத்தினான். துரைசாமியும் அந்த எண்ணத்தில் தான் இருப்பதாகவும், டாக்டரும் அவர் பரிந்துரை செய்த மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு ஒரு மாதம் கழித்து வந்து பார்க்கலாம் என்று சொல்லி இருப்பதால் கேரளாவிற்கு சென்று விட்டு ஒரு மாதம் கழித்து வருவதாகவும் சொன்னான். அவனுக்கு மேலும் பணம் தேவைப்படுமா என்று கேட்டதற்கு துரைசாமி இது வரை நந்தன் கொடுத்ததும், டாக்டர் மூலமாக செய்யும் உதவியும் போதுமானது என்று நந்தனுக்கு நன்றி தெரிவித்தான்.

 

துரைசாமி பிரச்னையும் ஓரளவு ஓய்ந்தது என்ற திருப்தியுடன் நந்தன் கம்பெனி, ஆபீஸ் என்று வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

 

மறுநாள் மாலை ராகவனை வேறு ஒரு coffee shop ல் நந்தன் சந்தித்தான். வழக்கமான பரஸ்பர நலன் விசாரித்தல், கிண்டல், கேலி எல்லாம் முடிந்தவுடன் ராகவன் கேட்டான்.

 

சரி நீ ஷ்யாமை பார்க்க விரும்புகிறாயா?”

 

நந்தன் வியப்புடன் “of course so you tracked him down?” என்று ஆர்வமாக கேட்டான்.

 

ஆமாம் டா, நீ கொடுத்த தகவல்களை வைத்து அவனை கண்டுபிடிப்பது எளிமையாக தான் இருந்தது, இதோ இவன் தான்என்று மொபைலில் அவன் போட்டோவை காண்பித்தான். நடுத்தர உயரமும் கொஞ்சம் சுருட்டை முடியுடனும் அளவான எடையுடனுடம் வலது மூக்கில் ஒரு சிறிய வளையம் ஒன்றையும் அணிந்து பார்ப்பதற்கு பொறாமைப் பட தோன்றாத தோற்றத்துடன்  இருந்தான்.

 

நந்தன் அவனை பார்த்துவிட்டு “so இவன் தான் நம் சத்யாவிற்கு குடைச்சல் கொடுத்தவனா?” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டுசரி இப்போ ஜெயில்ல இருக்கானா இல்லை வெளில இருக்கானா?” என்று சிறு பதட்டத்துடன் கேட்டான்.

 

அவன் சத்யா கேஸ்ல இருந்து வெளில வந்து 10 மாசம் கிட்ட ஆச்சு டா, ஆனா அப்பப்போ மற்ற சின்ன சின்ன தவறுகளுக்காக உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறான், அவன் தந்தை கொஞ்சம் பணபலமும், ஆள்பலமும் உள்ளவர் என்பதால் எளிதாக சாட்சியங்களை உடைப்பதும் சட்டத்தை வளைப்பதும் அவனுக்கு வசதியாக இருக்கின்றன

 

“I see” என்று chair ல் சாய்ந்து நந்தன் அமைதியாக யோசித்தான்.

 

மீண்டும் அவனே பேசினான். “10 மாதங்களாக சத்யாவை காண அவன் வராத காரணம்  ஒன்று சத்யாவின் இருப்பிடம் அவனுக்கு தெரியாமல் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம், இல்லை என்றால் அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளில் சத்யா அவன் list ல் முதன்மையானவளாக இல்லாமல் இருக்கலாம், இதை எப்படி நாம் உறுதி செய்து கொள்வது?”

 

ஹ்ம்ம் சத்யாவின் இருப்பிடம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது

 

நந்தன் ஆழ்ந்த பார்வையுடன்அதெப்படி சொல்கிறாய்? அவன் அவளை மறந்திருக்கலாம், பொருட்படுத்தாமல் இருக்கலாம் அல்லவா?” என்றான்.

 

இல்லடா நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவன் தம்பி, அதாவது உடன்பிறவா தம்பி கௌஷிக், சத்யாவின் கணவர், அவருடைய இறப்பிலும், அவன் மனைவி சுனிதாவின் இறப்பிலும் இவனுக்கு தொடர்பு இருக்க வேண்டும் என்பது தான் அங்கு பரவலான பேச்சாக இருந்துள்ளது, அது மட்டுமல்ல, கௌஷிக் எழுதி இருக்க வேண்டும் என்று நீ சொன்ன கடிதத்தின் விவரங்களை வைத்து பார்த்தால் இந்த ஷ்யாம் தான் அவர்களை கொன்றிருக்க வேண்டும், அப்படி ஒருவேளை அவன் தான் அவர்களை கொன்றவன் என்றால் காரணம் என்னவென்று யோசிக்க வேண்டும், ஒன்று கௌஷிக்கிற்கும் சுனிதாவிற்கும் கள்ளக்காதல் இருந்து அது அவனுக்கு தெரியவந்து கோபத்தில் அவர்களை கொன்றிருக்கலாம், இல்லை என்றால் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்,  அந்த காரணம் சத்யாவின் மீத  அவனுக்கு இருக்கும் ஆசையாக இருக்கலாம்

 

உனக்கு இந்த சந்தேகம் வலுப்பட புதிதாக ஏதாவது தகவல் கிடைத்ததா?”

 

ஆமாம் டா, சத்யா மும்பைல இருக்கும் போது அந்த ரெட் லைட் ஏரியாவில் அவளை மாட்டிவிட்டு அவளின் மானத்தை வாங்க அவன் தான் ஏற்பாடு செய்திருக்கிறான் என்று தகவல் கிடைத்தது, அதுவும் அவன் ஜெயிலில் இருக்கும் போது, அவனுடைய மொபைலில் இருந்து அவள் ஒரு அரசியல்வாதி மகனுடன் தவறான உறவில் இருப்பது போல் ஒரு வீடியோவை அவன் பரவ விட்டு இருக்கிறான், அந்த அரசியல்வாதியின் மகன் இவனுக்கு நண்பன் போல, ஆனால் யாரோ ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் முயற்சியால் அந்த வீடியோ நெட்டில் பரவாமல் முடுக்கப்பட்டதாக தகவல்

 

நந்தன் தன் இரு கைகளாலும் முகத்தை மூடி யோசித்து ஒரு பெருமூச்சு விட்டான். “டேய் சத்யாவை பற்றி ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்லவில்லை, அவளின் மானத்தை காக்கும் பொருட்டு சொல்லவில்லை, துரைசாமி மூலம் எனக்கு சில வீடியோக்கள் கிடைத்தன, அவள் ஒரு அரசியல்வாதி மகனுடன் உடல் உறவு கொள்ளும் வீடியோ என்று துரைசாமி சொன்னான், அவள் கணவன் இறந்த பிறகு நடந்த விஷயம் என்று சொன்னான், அவள் கணவன் இறந்த பிறகு அவள் ஒருவனுடன் உறவு கொண்டது தவறு என்று எனக்கு தோன்றவில்லை, ஆனால் அவன் அதை நெட்டில் பரவவிடுவேன் என்று சொன்னான், சத்யாவின் மானத்தை காக்க வேண்டி அவன்  கேட்ட பணத்தை கொடுத்து அந்த வீடியோவை வாங்கினேன், ஆனால் நீ சொல்வதை பார்த்தால் அவளுக்கு விருப்பமில்லாமல் ஷ்யாம் திட்டத்தின் படி அவளுக்கு ஏதோ கொடுமை நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது

 

நந்தனே மீண்டும் பேசினான். “ஒருவேளை சத்யாவை அந்த அரசியல்வாதி மகன் ரேப் செய்திருப்பானோ என்று பயமாக உள்ளது டா, ஏன் என்றால் மணிமாறன் விஷயத்தை விசாரிக்கும் போது சத்யா வியர்த்து நடுங்கினாள், அப்போதே எனக்கு அவளை பார்க்க கஷ்டமாக இருந்தது, ஆனால் அவளுக்கு ரேப் போன்ற கொடுமை ஏதாவது நடந்திருந்தால்..... I can’t even imagine her pain”

 

தெரியல டா, but one thing is sure, that Shyaam is obsessed with Sathya”

 

நந்தன் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்துடேய் அதுக்கு நீ ஏன் டா இவ்ளோ டென்ஷனா இருக்க? சத்யாவிற்கு நீ பயப்படும் அளவு எதுவும் நடந்திருக்காது, அந்த ஷ்யாம் ஏதாவது கதை ஜோடித்து விட்டிருப்பானே தவிர மற்றபடி ஆள் வைத்து ரேப் செய்திருப்பான் என்று தோன்றவில்லை, அவன் செய்யும் அளவு வக்கிரமானவன் தான், ஆனால் எனக்கு கிடைத்த தகவல் படி பார்த்தால் அது ரேப் ஆக இருக்க வாய்ப்பில்லை, ரேப் என்றால் அவன் மொபைலில் இருந்து வீடியோவை பரவ விட்டிருக்க மாட்டான், they must have framed her, எதுவாக இருந்தாலும் சத்யாவிடம் கேட்டுவிடேன், அவள் பக்கம் உள்ள உண்மைகள் தெரிய வரும் அல்லவா?”

 

இல்லடா அவ இப்போதான் எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் நிம்மதியா, சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது, அதோட இல்லாம she wants to study, exams எல்லாம் முடியட்டும், அவளே எல்லாவற்றையும் ஒருநாள் என்னிடம் சொல்வதாக சொன்னாள், அவளுக்கு எப்போது சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது சொல்லட்டும், என் கவலை எல்லாம் அதுவரை அவளுக்கு ஷ்யாமால் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பது தான், ஆனால் நீ என்னவென்றால் அவன் சத்யாவின் இருப்பிடம் தெரியாததால் தான் அமைதியாக இருக்கிறான் என்று சொல்கிறாய், அவள் இருப்பிடம் தெரிந்தால் அவன் வந்துவிடுவான் என்று சொல்வாய் போலவே

 

ஆமாம் high chance, ஆனால் அவள் இருப்பிடம் தெரிந்தால் தானே, துரைசாமி இப்போது நம் கைவசம், அவன் மூலமாக அவனுக்கு தகவல் போகாது, போகாது தானே?”

 

துரைசாமி சத்யாவின் வீடியோவிற்கு பிளாக்மெயில் செய்து பணம் வாங்கிய விஷயத்தை உன்னிடம் சொன்னால் அவன் ஷ்யாமிடம் போவான் என்று மறைமுகமாக மிரட்டினான், அதனால் நீ துரைசாமியை எங்கே கண்டாலும் மிரட்டாமல் உருட்டாமல் இருக்க வேண்டும், எதுவும் தெரியும் என்பது போல் காட்டிக்கொள்ள கூடாது

 

ஹ்ம்ம் என் நண்பனுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஎன்று விளையாட்டாய் சலித்து கொண்ட ராகவனே மீண்டும் பேசினான்.

 

நான் சொன்னது போல துரைசாமியை பழைய சிம் கார்டு எல்லாத்தையும் தூக்கி போட சொல்லிவிட்டாய், so ஷ்யாம் இனிமேல் அவன் நம்பர் வைத்து எதுவும் கண்டுபிடிக்க முடியாது, ஒருவேளை இதற்கு முன்பே தோண்டி இருந்தால் துரைசாமி சென்னையில் இருக்கிறான் என்ற வரைக்கும் தெரிந்து இருக்கும், ஆனால் சத்யாவும் சென்னையில் தான் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, so பயப்பட அவசியம் இல்லை என்றே தோன்றுகிறதுஎன்று நந்தனின் தோளை தட்டி கொடுத்தான் ராகவன். ராகவனின் நம்பிக்கை பொதிந்த வார்த்தைகள் நந்தனின் கலக்கத்தை போக்கி கொஞ்சம் தெம்பை தந்தன.

 

நந்தனுக்கு ஏதோ call வந்தது. மொபைலை எடுத்து பார்த்தவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு call attend செய்யாமல் மொபைலை வைத்தான். மீண்டும் மீண்டும் அதே நம்பரில் இருந்து call. நந்தனை அந்த calls கொஞ்சம் disturb செய்தது.

 

இத்தனை முறை call பண்றாங்களே, எடுத்து பேசு டா, I won’t mind” என்றான் ராகவன்.

 

“It’s ok da” என்று நந்தன் சொன்னாலும் அவனால் அதற்கு மேல் ராகவனிடம் இயல்பாக பேச முடியவில்லை. ராகவனிடம் மீண்டும் சத்யாவிற்கு எதுவும் ஆபத்து வராது என்று உறுதி பட தெரிந்து கொண்டு நந்தன் அங்கிருந்து விடை பெற்றான்.

 

வீட்டிற்கு வந்து தன் அறைக்கு சென்று உடைகளை மாற்றி முகம் கழுவி கட்டிலில் வந்து படுத்தவன் அந்த missed call களை பார்த்தான். பேசலாமா வேண்டாமா என்று அவனுக்குள் ஒரு சின்ன குழப்பம். அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே அதே நம்பரில் இருந்து whatsapp ல் மெசேஜ்.

 

“Please attend my call” என்று ஸ்ரேயாவிடம் இருந்து மெசேஜ். நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது அவளிடம் பேசி, பார்த்து, உறவாடி. அவள் இப்படி விடாமல் call செய்து தொல்லை செய்பவள் அல்ல. ஏதாவது plan செய்திருந்தாலோ இல்லை active meet up, chat என்று இருந்தாலோ நந்தனுக்கு call செய்வாள், பிறகு நந்தனாக பேசும் வரை முடிந்த அளவு அவள் call செய்யாமல் மெசேஜ் செய்யாமல் தான் இருப்பாள். இப்போது பேசி நான்கு மாதங்களுக்கும் மேல் ஆகிய நிலையில் நந்தனாக பேசாமல் அவளாக call செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று நந்தனுக்குள் கேள்வி. மீண்டும் பேசுவதில் என்ன தவறு இருக்க போகிறது? பேச தானே போகிறோம், வேறு என்ன செய்ய போகிறோம் என்று தன்னை தானே கேட்டுக்கொண்டான்.

 

ஆனால் பேசுவது கூட தவறு தான் என்று அவன் மனசாட்சி சொல்லியது. அடுத்த மெசேஜ் வந்தது. “I had always been there for you when you needed me, I need you now, I need to talk to you, I need to cry on your shoulders, I need your hug, can you come to my flat? Sorry if I am an inconvenience to you now, but I just needed to ask, forgive me for asking, trying for the last time".

 

நந்தனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஸ்ரேயாவை நினைத்து பரிதாபப்பட்டான், தன் மீதே அவனுக்கு கோபமும் வெறுப்பும் தோன்றியது. என்னை நம்பாதே, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்று எவ்வளவு தான் சொன்னாலும் நம் சுயநலம் பெண்களை பாதிக்க தான் செய்கிறது, அவர்களின் மனம் உடைய நானே காரணமாகி விடுகிறேன், என்னை மன்னித்து விடு ஸ்ரேயா என்று அவளிடமே மனம் விட்டு பேசி மன்னிப்பு கேட்டால் தான் செய்த தவறுக்கு சிறிதேனும் பிராயச்சித்தம் கிடைக்கலாம் என்று எண்ணி அவளுக்கு call செய்ய நினைத்தவனுக்கு ஸ்ரேயா அனுப்பிய போட்டோக்கள் கிடைத்தன. அவற்றை பார்த்தவுடன் நந்தனுக்கு வியர்த்தது. மனம் கலங்கியது. தன்னுடைய அறையில் இங்கும் அங்கும் நடந்தான். சில வினாடிகளுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் மொபைலை எடுத்தான். ஸ்ரேயாவிற்கு மெசேஜ் அனுப்பினான். “I will be there in 30 mins”.

 

மீண்டும் அவசரமாக உடைகளை மாற்றிக்கொண்டு காரில் புறப்பட்டான் நந்தன்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018