Sms ch 34 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 34
சத்தியமூர்த்தி குடும்பத்தில் எல்லோரும் மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு கலகலப்பாக பேசிக்கொண்டிருக்க சத்தியமூர்த்தி, நந்தன், கமலா அம்மா மட்டும் அவரவர் நினைப்பில் மூழ்கி இருந்தனர். சத்தியமூர்த்தி நந்தனிடம் சொன்னார்.
“நந்தா உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும், வாயேன் தோட்டத்தில் நடந்து கொண்டே பேசலாம்”
சத்தியமூர்த்தி வீட்டை சுற்றிலும் பெரிய தோட்டம், முன்புறம் drive way ஐ சுற்றி க்ரோட்டான்ஸ் செடிகளும், ரோஜா செடிகளும் ல், அசோக மரங்களும், புல்வெளியுமாகவும், ஊஞ்சலும், அலங்கார பெஞ்சுமாக இருந்தன. வீட்டின் இருபுறங்களிலும் தென்னை மரங்களும், மாமரங்கள், வாழை என்று இருந்தன. வீட்டின் பின்புறம் ஒரு சின்ன கெஸ்ட் ஹவுஸ்ம் அதை சுற்றியும் நெறைய பூச்செடிகள், மரங்கள் எனவும் அங்கேயே ஒரு சின்ன திறந்த வெளி குடிலும் அதனுள் மரத்தினால் ஆன பெஞ்சுகளும் என்று சோலை வனமாக இருந்தது சத்தியமூர்த்தியின் வீடு. தோட்டத்தை பராமரிக்கவே இரண்டு ஆட்கள் வேலைக்கு இருந்தனர்.
சத்தியமூர்த்தியும் நந்தனும் வீட்டின் இடதுபுறம் இருந்த நடைபாதையில் இருபுறமும் இருந்த சோலார் விளக்குகளின் வெளிச்சத்தில் நடந்து கொண்டே பின்புற தோட்டத்திற்கு பேசிக்கொண்டே சென்றார்கள்.
சத்தியமூர்த்தி முதலில் கம்பெனியை பற்றியும், பிறகு R&D பற்றியும் பேசிவிட்டு நந்தனின் திருமண பேச்சை எடுத்தார்.
“நந்தா இன்னும் எத்தனை காலம் தான் திருமணத்தை தள்ளிப்போட போகிறாய்?”
நந்தன் பதில் ஏதும் சொல்லாமல் சிறிது தூரம் நடந்தான். “அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்பா” என்றான். சத்தியமூர்த்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. பேச்சை தவிர்ப்பான், கோபப்படுவான், கல்யாணமே வேண்டாம் என்று சொல்வான், இதை எல்லாம் எப்படி சமாளிப்பது என்று எண்ணி தான் அவர் பேச்சை எடுத்தார், ஆனால் அவன் மறுக்கவில்லை, திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறான், ஆனால் அடுத்த வருடம் என்கிறான்.
“ஏன் பா இன்னும் ஒரு வருஷம்? ஏற்கனவே வயசு 30 ஐ தாண்டியாச்சே, இந்த வைகாசிக்குள் உனக்கு திருமணம் நடக்க வேண்டும், நடக்கும் என்று ஜோசியர் சொன்னாரே, தள்ளி போட்டால் இரண்டு வருடங்கள் ஆகும் என்று சொல்லிவிட்டாரே, அது தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாயே, பிறகு என்ன? இப்போதே செய்து கொள்ளலாமே”
“அப்பா நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதே பெரிய விஷயம், இந்த வைகாசிக்குள் எல்லாம் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது, மேற்கொண்டு இதை பற்றி பேச வேண்டாம், எனக்கு tired ஆக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு நந்தன் மட்டும் பங்களாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
சத்தியமூர்த்தி கமலா அம்மாவை தனியாக அழைத்து நந்தன் திருமணம் செய்து கொள்கிறானாம், ஆனால் அடுத்த வருடம் என்று சொல்லிவிட்டான் என கூறினார். இதை தீபிகாவும் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தாள். ஏன் ஒரு வருடம் என்று சத்தியமூர்த்தி, கமலா அம்மா ஒரு பக்கம் குழம்ப தீபிகா ஒரு பக்கம் குழம்பினாள்.
சத்யாவும் நந்தனும் பேசி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சத்யாவிற்கு முதலில் கஷ்டமாக இருந்தாலும் தன்னை தானே சமாளித்துக்கொண்டு படிப்பதில் மட்டும் கவனம் செலுத்திகொண்டிருந்தாள். அன்று காலை நந்தன் spinning mill வந்தான். சத்யாவின் அருகே வந்தவன் “Good morning சத்யா” என்றான்.
“Good morning சார்” என்றாள்.
அவள் பெரிதாக
அவனை கண்டுகொள்ளவில்லை. முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் good
morning மட்டும் சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள்.
“இன்னும் நீ இங்கு என்ன செய்கிறாய்?” என்று கொஞ்சம்
எரிச்சலும் வியப்பும் கலந்த குரலில் நந்தன் கேட்க சத்யா “ஏன்? ஒரே அடியாக வேலைக்கு வராதே என்று சொல்கிறானா? என்னை
பார்ப்பது அவ்வளவு எரிச்சலாக இருக்கிறது போல” என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
“உன்னை தான் கேட்கிறேன், நீ இன்னும் இங்கு என்ன
செய்து கொண்டிருக்கிறாய் என்று”
சத்யா எதற்காக இப்படி கேட்கிறான் என்பது
புரியாமல் விழித்தாள்.
“உன்னை leave எடுத்துக்க
சொன்னனே, சரி என்னோடு வா” என்று அவளை அழைத்துக்கொண்டு தன் ஆபீஸ் அறைக்கு சென்றான்.
இதை பார்த்த தீபிகாவிற்கு ஒரு பக்கம் எரிச்சலும் இன்னொரு பக்கம் பயமும் தொற்றியது.
நாம் பேசிய விஷயங்கள் எதையாவது போட்டு கொடுத்துவிடுவாளா என்று. பிறகு ஒருவகையில்
நாம் சொன்னது அனைத்தும் உண்மை தானே என்று தைரியத்தை வர வைத்துக்கொண்டாள்.
நந்தன் சத்யாவை எதிரே அமர சொல்லிவிட்டு ஏதோ
இரண்டு form களை fill up செய்து அதில் சத்யாவை கையெழுத்திட சொன்னான்.
“என்ன இது?” என்றாள்.
“புதிதாக graduate scheme என்ற ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளேன், உன்னை போன்ற single mothers,
widows, domestic abuse victims பகுதி நேரமாக
படிப்பதற்கு நம் கம்பெனியில் சலுகைகள் அளிக்கப்படும், for example, தேர்வு நேரங்களில் சம்பளத்துடன் விடுப்பு, படிப்பதற்கு தேவையான materials குறைந்த செலவில் வாங்கி தரப்படும், இன்னும் சில சலுகைகள், ஆனால் படிப்பு முடிந்ததும் இங்கு இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும், அப்படி வேறு எங்காவது வேலை செய்ய சென்றால் இந்த கம்பெனியில் வேலை செய்யும் போது படிப்புக்காக சம்பளத்துடன் எடுத்த லீவு, பெற்ற சலுகைகள், படித்த படிப்பிற்கு ஏற்ப ஒரு தொகையை கட்டிவிட்டு வேறு வேலைக்கு செல்லலாம், அப்படி வேறு வேலைக்கு செல்பவர்கள் கட்டும் தொகையானது மறுபடியும் இந்த graduate scheme க்கு உள்ள வைப்பு நிதியில் சேமிக்கப்பட்டு மற்ற single mothers, widows, abuse victims க்கு செலவழிக்க படும். அதே போல் அவர்கள் அந்த இரண்டு வருடங்களில் மறுமணம் செய்து வேலைக்கு போக வேண்டாம் என்று முடிவெடுத்தாலோ அல்லது கர்பம் தரித்தாலோ அவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து. இவற்றின் terms and conditions எல்லாம் படித்து பார்த்துவிட்டு சந்தேகம் ஏதாவது இருந்தால் கேள், தெளிவு படுத்துகிறேன், பிறகு sign பண்ணினால் போதும்”
சத்யா அந்த form ஐ படித்து பார்த்தாள். நந்தன் கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். அவள் படித்து முடித்து நிமிரவும் “இதை format செய்ய கொஞ்சம் நேரமாகி விட்டது, முதலில் நீ
தான் கையெழுத்து இடப்போகிறாய், இன்னொரு form உன் விடுப்புக்கானது,
இன்னும் இரண்டு வாரங்கள் தானே இருக்கிறது உனது தேர்வுகளுக்கு?” என்று
கேட்டுக்கொண்டே மீண்டும் தன்
கம்ப்யூட்டரில் ஏதோ தட்டிகொண்டிருந்தான். அவள் ஆமாம் என்பது போல் தலை ஆட்டியதை கூட
கவனித்தானா என்று தெரியவில்லை.
“sign பண்ணிட்டியா?” என்று நிமிர்ந்தான். அவள்
இரண்டிலும் sign செய்தாள்.
இரண்டு form களையும் வாங்கி
பார்த்துவிட்டு “சரி இன்னைக்கும் உனக்கு leave தான், நீ
கிளம்பலாம்” என்றான்.
சத்யா எதுவும் பேசாமல் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல், எந்த உணர்ச்சியும் காட்டி கொள்ளாமல் நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியேற எத்தனித்தாள்.
அதுவரை நந்தனும் அவளை பெரிதாக பார்க்கவில்லை. அவள் வெளியேற போகும் நேரம் ஒரு நிமிஷம் என்றான் கம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே. அவள் திரும்பி பார்க்க கம்ப்யூட்டர் திரையை பார்த்துக்கொண்டே கேட்டான். “Exams எப்போ ஆரம்பிக்குது?”
“மார்ச் 5”
“எப்போது முடிகிறது?”
“மார்ச் 15”
“Ok ஒழுங்கா படிச்சு எல்லாத்தையும் பாஸ் பண்ற வழியை பார்” என்றான் மீண்டும் கம்ப்யூட்டர் திரையை பார்த்துக்கொண்டே. சத்யா “ம்ம்ம்” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள். “நான் பாஸ் பண்ணினால் உனக்கென்ன? பண்ணலைன்னா உனக்கென்ன? ஏதோ ரொம்ப நாள் பழகிய, என்மீது அக்கறை உள்ள நண்பன் போல ஏன் அப்பப்போ dialogues ஐ அள்ளி விடுற, இத்தனை நாள் பேசக்கூட இல்லை, திடீரென்று exams பற்றி கேட்பதும், ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணுனு சொல்றதும், அதென்ன அப்படி ஒரு அதிகாரம்? நீயே யாரோ ஒரு தொழிலாளியிடம் பேசுவது போல் பேசும் போது நான் மட்டும் ஏன் இத்தனை நாட்கள் வீட்டிற்கு வரவில்லை, ஏன் பேசவில்லை என்று கேட்டு என் கவுரவத்தை குறைத்து கொள்வேனா? நீயும் யாரோ போல் நடந்து சமாளித்து விட்டாய் சத்யா very good” என்று தனக்கு தானே பாராட்டு கடிதம் வாசித்து கொண்டும், நந்தனை மனதிற்குள் கடுகடு என்று திட்டிக்கொண்டும் நடந்தாள்.
வள்ளியிடம் சொல்லிவிட்டு
சத்யா தன் கைப்பயை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறபட்டாள். பஸ்
ஸ்டாப்பிற்கு நடந்துகொண்டே யோசித்தாள். “ஆனால் தனிப்பட்ட முறையில்
நந்தன் மீது எனக்கு கோபம் இருந்தாலும், அவன் ஒரு நல்ல நிர்வாக
திறமையும், தொழிலாளிகளின் நலன் கருதும் நல்ல மனம் கொண்டவனும் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும், பாதிக்கப்பட்ட
பெண்கள் முன்னேற்றத்திற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறான்? ஆனால்
இவனால் பாதிக்கப்படும் பெண்களை பற்றி யார் யோசிப்பார்கள்? மனதில்
பெரிய அழகன், மன்மதன் என்று நினைப்பு” என்று
அவனை ஒரு நிமிடம் பாராட்டுவதும், பெருமையாக நினைப்பதும் மறுநிமிடம்
கரித்து கொட்டுவதுமாக பஸ் ஏறி வீட்டிற்கு சென்றாள்.
அன்று மாலை நந்தன்
ராகவனை சந்திக்க புறப்பட்டான். போகும் வழியில் அவனை ஒரு கார் தொடர்வதும்,
இடிப்பது போல் வருவதுமாக இருக்கவும் தன் rear mirror ல் பார்த்தான். நந்தன் வாகனங்கள் அதிகம்
செல்லாத மரங்கள் நிறைந்த மண் சாலையில் நுழைந்தான். ஒரு இடத்தில் அந்த கார்
முன்னேறாத வகையில் தன் காரை கொண்டே மறைத்து நிறுத்திவிட்டு இறங்கினான். அந்த காரும் வேறு வழியில்லாமல் நின்றது. நந்தன் அந்த கார் டிரைவர் side சென்று “நினைத்தேன் உங்களை போல் தான் தெரிந்தது, இறங்குங்கள்” என்றான்.
துரைசாமி இறங்கினான். “பரவால்லையே நாம சந்திச்சு நாலு மாசம் இருக்குமா? இன்னும் கரெக்ட்டா ஞாபகம் வச்சிருக்கியே” என்றான் துரைசாமி நந்தனை பார்த்து.
“நான் உங்களை மறக்கவில்லை, சொல்லப்போனால் நீங்கள் என்னை மிரட்டுவது
போல் பேசினீர்களே, மறுபடியும் என்னை எப்போது சந்திக்க வருவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன், அதனால் தான் உங்களை ஞாபகத்திலேயே வைத்துள்ளேன், ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துகொண்டீர்கள்?” என்றான் புன்னகையுடன்.
“உன் போலீஸ் friend அ வச்சு என்னை மிரட்டிட்டு நான் ஏன்
உன்னை பாக்க வரலன்னு நக்கல் பண்றியா?”
“நீங்கள் அமைந்தகரை பக்கம் போகக்கூடாது
என்று தானே மிரட்டல் விடப்பட்டிருக்கும், என்னை பார்க்க வருவதில் உங்களுக்கு தடை இல்லையே” என்றான் மீண்டும் கிண்டலாக.
“நீ பேசு கண்ணு, இளமையா வசதியா இருக்க, போலீஸ்ல ஆள் வச்சிருக்க, அதனால உனக்கு பயம் எல்லாம் இல்லைன்னு
புரிஞ்சுக்கிட்டேன், இப்போகூட உன்னை பாக்க தான் வந்தேன், நீயே காரை நிறுத்திட்ட”
“சொல்லுங்க துரைசாமி, இத்தனை மாதங்கள் கழித்து எனக்கு தரிசனம்
தர வேண்டிய அவசியம்?”
“நேரா பாயிண்ட்டுக்கே வரேன், அந்த பொண்ணு சத்யாவை வச்சிருக்கன்னு
தெரியும்”
“ஆமாம் என் பாதுகாப்பில் வைத்துள்ளேன்” என்று குறுக்கிட்டான்.
“நீ பாதுகாப்பா வச்சிரு, இல்லை குடும்பம் நடத்த வச்சிரு, அதை பத்தி நான் கவலைப்படல, அந்த பொண்ணை பத்தி உனக்கு எல்லாமே தெரியுமான்னு
தெரியல, நீ நல்ல குடும்பத்துல இருந்து நல்லா
படிச்சு வந்த பையன் மாதிரி இருக்க, சொல்றத கேட்டு பொழச்சிக்கோ”
நந்தன் கைகளை கட்டிக்கொண்டு காரில் சாய்ந்து கொண்டு “ம்ம்ம் சொல்லுங்கள், பிழைத்துக்கொள்கிறேன்” என்றான்.
“அந்த பொண்ணு கேரக்டர் சரி இல்லாத பொண்ணு, மும்பைல ரெட் லைட் ஏரியாவுல பிரோதெல்
கேஸ்ல கைதான பொண்ணு, நியூஸ்ல எல்லாம் கூட இந்த பொண்ணு போட்டோவோட வந்துச்சு”
“ஓஹோ சரி, அப்புறம்?”
“அட என்னப்பா அப்புறம்ன்னு கேக்குற, நான் என்ன பாட்டி நிலாவுல வடை சுட்ட
கதையா சொல்லிட்டு இருக்கேன்?”
“இங்க பாருங்க துரைசாமி, இது எல்லாம் என் நேரத்தை விரயமாக்கும்
விஷயங்கள், நான் உங்களிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்கிறேன்”
துரைசாமி நந்தனை மேலும் கீழும் பார்த்து யோசித்துவிட்டு “சரி உன் போலீஸ் நண்பனால் எனக்கு எதுவும்
ஆபத்து வராது என்று சொல்லு, உன்னிடம் சில விஷயங்களை சொல்கிறேன்” என்றார்.
“நீங்கள் சத்யாவை ஒருமுறை ஆபத்திலிருந்து
காப்பாற்றினீர்கள் என்று சத்யா கூறினாள், அதனால் உங்கள் மேல் எனக்கு கொஞ்சம் நன்றி உணர்ச்சி உள்ளது” என்றான்.
“ஆனாலும் உன் போலீஸ் நண்பனால் எனக்கு
பிரச்சனை வராது என்று சொல்ல மறுக்கிறாயே”
“அது நீங்கள் சொல்லும் விஷயத்தை பொறுத்தது, நீங்கள் என்ன விஷயம் என்று சொல்வது
போல் தெரியவில்லை, என் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று நந்தன் திரும்ப காருக்கு நடந்தான்.
“சத்யா பிரோதெல் பண்ணினதுக்கு வீடியோவோட
என்கிட்ட ஆதாரம் இருக்கு”
நந்தன் நின்று திரும்பி பார்த்தான். துரைசாமியை உற்று பார்த்துவிட்டு “அந்த வீடியோ உங்களுக்கு எப்படி கிடைத்தது?” என்றான்.
“அட என்னப்பா நீ, ஒரு விஷயம் சொன்னா அதுக்கு என்ன reaction குடுக்கணுமோ அத குடுக்காம ஏடாகூடமாவே
கேள்வி கேக்குற, நான் சொன்ன விஷயத்துக்கு நீ குடுக்க வேண்டிய reaction என்ன தெரியுமா? அதிர்ச்சி, அவமானம், கோபம், வருத்தம், ஏமாற்றம், இப்படி இதுல ஏதாவது ஒன்னு குடுக்கணும், நீ என்னடான்னா” என்று அலுத்து கொண்டார்.
“சொல்லுங்கள் அந்த வீடியோ உங்களிடம்
எப்படி வந்தது?”
“தெரிஞ்சவர் ஒருத்தர் அனுப்பினாரு”
“அவருக்கு எப்படி கிடைத்தது?”
“தெரியல, சத்யா யாரோடு உறவு கொண்டாளோ அவன் எடுத்திருக்க வேண்டும்”
“ஓஹோ, அவளுக்கு அந்த வீடியோ எடுக்கப்பட்டது தெரியுமா?”
“யாருக்கு தெரியும்? அவன் மும்பைல ஒரு அரசியல்வாதியோட பையன், அதனால சத்யா விஷயம் மட்டும் கொஞ்ச நாளைக்கு
மும்பை, மும்பை சுற்றி உள்ள பகுதிகளில் பேசப்பட்டது, பிறகு அப்படியே அமுங்கிடுச்சு”
“அப்போது சத்யாவின் கணவர் உயிரோடு இருந்தாரா?”
“இதெல்லாம் ஏன் கேக்குற நீ?”
“எதற்கொ கேட்கிறேன், சொல்லுங்கள்”
“இல்லை அப்போ சத்யாவோட கணவர் இறந்து
மூணு, நாலு வருஷமாவது ஆகி இருக்கும்”
“அப்படி என்றால் அவள் ஒருவருடன் உடல்
உறவு கொண்டது தவறு என்று எனக்கு தோன்றவில்லை, ஆனால் அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு இப்படி மிரட்டுவது
தான் அசிங்கம், இதை வைத்தா அவளுக்கு prostitute என்ற பட்டம்?”
துரைசாமி நந்தனை யோசனையாய் பார்த்துவிட்டு “அவள் இருந்தது ரெட் லைட் ஏரியாவில், நியூஸ்ல் வந்தது என்று சொன்னேனே”
“சத்யா அங்கு இருந்து இருக்கலாம், ஆனால் அவள் விபச்சாரம் செய்திருக்க
மாட்டாள்”
“அது எப்படி உறுதியாக சொல்கிறாய்?”
“ஒரு அனுமானம் தான், நான் விபச்சாரிகளை தாழ்வாக நினைப்பவன்
அல்ல, விபச்சாரிகள் பாவம், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழ்நிலை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆண்களுடன்
பழகுவார்கள், பெண்களுக்கே உரித்தான நாணமும் அறியாமையும் அவர்களிடம் இல்லாமல் போய்விடும், சத்யாவிடம் இருக்கும் நாணமும், அறியாமையும், பயமும் அந்த பயத்தை மறைக்க தைரியமாக
இருப்பது போல் காட்டிகொள்வதும் நெறைய ஆண்களிடம் உறவு கொண்ட ஒருத்தியிடம் இருக்காது”
“இந்த கணக்கு எல்லாம் எனக்கு தெரியாது
தம்பி, நான் எதை பாக்கிறனோ அதை நம்புறவன், சரி முதலில் ஒன்றை சொல், இந்த வீடியோவை கொடுத்தால் எனக்கு எவ்வளவு
தருவாய்?”
“எவ்வளவு வேண்டும்?”
“அது அது.....ஒரு 10 லட்சம் கொடேன்”
“கொடுக்கவில்லை என்றால்?”
“கொடுக்கவில்லை என்றால் நெட்டில் பரவ
விடுவேன்”
நந்தன் துரைசாமியை முறைத்தான்.
“இங்க பாரு, இந்த பொண்ணால எனக்கு நெறைய கஷ்டம், ஆனா அதெல்லாம் நான் பொறுத்துக்கிட்டு
இன்னமும் கூட அந்த பொண்ணோட வீடியோவை நெட்டில் விடாமல் இருக்கிறேன் என்றால் என்ன காரணம்? எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், நான் ஒன்றும் மோசமானவன் இல்லை, என் மகளின் டிரீட்மென்ட்க்கு எனக்கு
காசு வேண்டும், இந்த சத்யா அமைந்தகரையில் ஒரு ஓட்டு வீட்டில் உட்கார்ந்து இருக்கிறாளே, இவள் ஒன்றும் ஒன்னும் இல்லாதவள் இல்லை, இவளும் கொஞ்சம் வசதிக்காரி தான், பஞ்சாபில் அவள் வீட்டை விற்றால் கோடி
ரூபாய் பெருமானம் பெறும், அதை விற்று அதில் எனக்கு கொஞ்சம் காசு கொடு என்றேன், எனக்கு அங்கு சென்றால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டாள்.
சரி அவள் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான், ஏற்கனவே விபச்சார தொழில் செய்தவள் தானே
என்று ஒருமுறை ஒரு பணக்காரனிடம் அழைத்து சென்றேன், போகும் வழியெல்லாம் மறுத்தாள், கொஞ்சம் சாராயத்தை குடி, சரியா போய்டும் னு சொல்லி ஊற்ற முயற்சித்தேன், ஆனால் அன்று தான் நீ அவள் மகனுடன் அந்த
பாலத்தில் நின்று கொண்டிருந்தாய், சனியன் பிடித்தவள் என்னை கடித்து கொதறி வீட்டில் விட சொன்னாள், இல்லை என்றால் கதவை திறந்து காரில்
இருந்து குதித்து விடுவேன் என்று மிரட்டினாள்.
அவள் என்ன பத்தினியா? அன்று ஒருநாள் உதவி செய்திருந்தால் அன்றோடு அவளை விட்டிருப்பேன், இவளால் நான் அடைந்த நஷ்டங்களுக்கு அளவே
சொல்ல முடியாது, ஆனாலும் இவள் வீடியோவில் சிறு பகுதியையும், இவள் விபச்சாரம் செய்த செய்தி தாளின் துண்டையும் இவள்
தெருவில் காட்டியதை தவிர பெரிதாக இவள் மானத்தை நான் வாங்கியதில்லை, நீ அவளை வைத்திருப்பவன், அவள் மானம் உலகெங்கும் போனால் உனக்கும்
அவமானம் தானே, அதனால் நெட்டில் பரவ விடாமல் இருக்க எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும்.
அதை விட்டுவிட்டு உன் போலீஸ் நண்பனிடம் என்னை மாட்டிவிட நினைத்தால்
என்னிடம் வேறு ஒரு பெரிய துருப்பு சீட்டு ஒன்று உள்ளது, அதனால் சத்யாவின் உயிருக்கே கூட ஆபத்து வரும், அதில் என் உயிருக்கும் ஆபத்து உள்ளது
என்பதால் அந்த துருப்பு சீட்டை தொடாமல் இருக்கிறேன், நீ போலீசிடம் போனால் நான் அந்த துருப்பு சீட்டை கையில்
எடுப்பேன், நீ கண்மூடி கண் திறப்பதற்குள் உன் சத்யா மானத்தையும் இழந்து உயிரையும் இழந்து பிணமாக
கிடப்பாள், எது வேண்டும் என்று நீயே முடிவு செய்” என்றான் துரைசாமி ஒரே மூச்சாக.
நந்தன் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டு துரைசாமியை தீவிரமாக பார்த்தான்.
Comments
Post a Comment