Sms ch 24 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 24
கோயிலுக்கு சென்று வந்த பிறகு நந்தனுக்கு மனம் கொஞ்சம் தெளிவடைந்தது போல் ஒரு உணர்வு. “எங்கப்பா போன? உனக்காக தான் சாப்பிடாம எல்லாரும் காத்துட்டு இருக்காங்க?” என்று வரவேற்றார் கமலா அம்மா.
“எனக்காக ஏன் மா காத்துட்டு இருக்கீங்க? நீங்க பாட்டுக்கு சாப்பிட வேண்டிய தானே?” என்று சொல்லிக்கொண்டே அனைவரும் அமர்ந்திருந்த அறைக்கு சென்றான்.
கிரிஷ் ஸ்ரீதிகா தவிர மற்ற அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். “வா நந்தா, உட்காரு” என்று சத்தியமூர்த்தி அழைக்க “இன்னும் யாரும் சாப்பிடலையா? வாங்க first சாப்பிடலாம்” என்றான் நந்தன் உட்காராமல். “கொஞ்ச நேரம் உக்காருப்பா, இப்போதான் தீபிகா உன்னை பற்றி சொல்லிகொண்டிருந்தாள்”
“என்னை பற்றியா?” என்று தனது வியப்பை வெளியே காட்டிகொள்ளாமல் இயல்பாகவே கேட்டான் நந்தன்.
“ஆமாம்ப்பா, உன்னை பற்றி தான், லண்டனிலேயே நீங்கள் இருவரும் பரீச்சயமாமே, நீ சொல்லவே இல்லை பார்”
நந்தன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டான்.
“அம்மா எனக்கு பசிக்கிறது”
“இதோ சாப்பிடலாம் வாப்பா, எல்லாருமே வாங்க” என்று கமலா அம்மா தலைமையில் அனைவரும் சாப்பிட்டார்கள்.
“தீபிகா உனக்கு மாடியில் ஒரு அறை ஏற்பாடு செய்து இருக்கிறோம், நீ அங்கேயே தூங்கி கொள்ளலாம், இதை உன் வீடு போல் நினைத்துக்கொள், ஏதாவது வேண்டும் என்றால் கேட்க தயங்காதே” என்றார் கமலா அம்மா.
“Thanks ஆண்ட்டி” என்றாள் தீபிகா.
நந்தன் அதிகமாக பேசவில்லை. வேகமாக சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான். காலையில் எழுந்ததும் கமலா அம்மா வந்தார்கள்.
“நாளைக்கு எல்லாரும் மறுவீட்டுக்கு கோயம்புத்தூர் போறோமே, உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் எடுத்து வைத்து விடவா என்று கேட்க நந்தன் எல்லோரும் எதற்கு, கிரிஷ் ஸ்ரீதிகா தானே போக வேண்டும்?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இல்ல, எல்லாரும் தான் போறோம், உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் நீயே எடுத்து வச்சுக்கிறியா? இல்லை நான் எடுத்து வைக்கவா?” என்றார் கமலா அம்மா.
“நானே எடுத்து வச்சுகிறேன் மா, நீங்க ஏன் இவ்ளோ சிரமப்படுறீங்க, கல்யாணத்துக்கு கூட எல்லாவற்றிற்கும் ஆட்கள் வைத்து ஏற்பாடு செய்தும் அது இது என்று இழுத்து போட்டு செய்கிறீர்கள்” என்று கடிந்தான்.
“எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது சொல்? இது போல ஏதோ வீட்டில் ஒன்றிரண்டு விசேஷங்கள் அப்போ புதுசா தெம்பு கிடைச்ச மாதிரி இருக்கு. என்னால முடிஞ்சத செய்றேன், சரி நீ எப்போ டிபன் சாப்பிட வர?”
“அமுதா கிட்ட குடுத்து அனுப்பிடுங்க மா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”
“கீழே வந்து சாப்பிடக்கூட உனக்கு நேரமில்லையா? அப்படி என்ன வேலை? பிறகு செய்துகொள்ளக்கூடாதா?” என்று கமலா அம்மா கோபித்துக்கொள்ள “என்னாச்சு மா, எப்பவும் வேலை இருக்குன்னு சொன்னா அமுதாகிட்ட குடுத்து விடுறேன், நீ வரவேண்டாம் என்று சொல்வீர்கள், இல்லை என்றால் நீங்களே கொண்டு வந்து நீ உன் வேலைய பாரு என்று ஊட்டியெல்லாம் விடுவீர்கள், இப்போது ஏன் இவ்வளவு கோபம்?” என்று எழுந்து வந்து கமலா அம்மாவின் தோள்களை பிடித்து புன்னகையுடன் கேட்டான்.
“ஆமாம் இன்னும் சின்ன பிள்ளை பாரு, அம்மா வந்து ஊட்டி விடுவதற்கு, உன் மனைவி வந்தால் அவளை ஊட்டிவிட சொல்வாய், அப்போது இந்த அம்மா எல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டேன்” என்று கோபித்து கொள்வது போல் பாவனை செய்து கொண்டு வெளியேறினார்கள்.
நந்தன் அவர்கள் செல்லும் திசையையே பார்த்து அவர்கள் சென்றதும் “அம்மா....அம்மா......நான் திருமணம் செய்வதற்காக எப்படி எல்லாம் போராடுகிறீர்கள்?” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு லேப்டாப்பை on செய்து ஈமெயில்ஸ் check செய்ய ஆரம்பித்தான்.
கீழே ஹாலில் கிரிஷ், ஸ்ரீதீகா புது தம்பதியினரை கிண்டல் செய்து கொண்டிருந்த இளைஞர் பட்டாளம் கமலா அம்மாவை பார்த்ததும் வாயை மூடிக் கொண்டார்கள். முன்புற தோட்டத்தில் அமர்ந்திருந்த பெரியவர்களை சாப்பிட அழைத்தார் கமலா அம்மா. எல்லோரையும் ஒரே இடத்தில் வரவைத்து சாப்பாடு பரிமாறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது என்று கமலா அம்மா சலித்துக்கொண்டர்கள். எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்கவும் தீபிகா மட்டும் மாடியையும் படிகளையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள். அதை கமலா அம்மாவும் கவனித்தார்கள்.
“அமுதா, நந்தனுக்கு இந்த இடியாப்பம், தேங்காய் பாலை கொண்டு போய் அவன் அறையில் கொடுத்து விடுமா, அவனுக்கு கம்பெனி சம்மந்தப்பட்ட வேலைகள் இருக்கிறது போல”
தீபிகாவிற்கு லேசாக முகம் சுருங்கியது.
அன்று முழுவதுமே நந்தன் கீழே இறங்கி வரவில்லை. மதுவிற்கு call செய்து employees health check up எல்லாம் ஒழுங்காக நடந்ததா, மெஷின் ரிப்பேர் எல்லாம் ஒழுங்காக முடிந்தனவா என்று ஒவ்வொன்றாக விசாரித்துக்கொண்டான்.
நாள் முழுக்க லேப்டாப்பை வைத்துக்கொண்டு அறையிலேயே இருந்த நந்தனுக்கு கழுத்து எல்லாம் வலிப்பது போல் உணர்ந்தான். மொட்டை மாடிக்கு சென்று தென்னை மர காற்றை சுவாசித்துக்கொண்டே கொஞ்சம் யோகா செய்தான். சூரியன் மேற்கே மறைய ஆரம்பித்து இருந்தது. “ஹலோ” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவன் “தீபிகாவா?” என்று பார்த்துவிட்டு மீண்டும் யோகா செய்ய ஆரம்பித்தான்.
“என்ன இன்றெல்லாம் உங்களை பார்க்கவே முடியவில்லையே, கீழே இறங்கி வரவில்லையே”
“கொஞ்சம் ஆபீஸ் work, எல்லாம் follow up செய்ய வேண்டி இருந்தது”
“நான் கூட நீங்கள் என்னை avoid பண்றீங்களோன்னு நினச்சேன்”
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு நாடி சோதனா பிரணாயமா செய்து மூச்சை உள்வாங்கி வெளி விட்டுகொண்டிருந்தான். தீபிகாவிற்கு லேசாக கோபம் வந்தது நான் ஒருத்தி இங்கே கேள்வி கேட்டு பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன், இவனுக்கு இப்போது யோகா தான் முக்கியமா என்று மனதிற்குள் பொருமி தள்ளினாள். ஆனால் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு காத்திருந்தாள்.
பிரணாயமா செய்து முடித்து நந்தன் கேட்டான். “நான் ஏன் உன்னை avoid செய்ய வேண்டும்?”
“தெரியவில்லை, ஆனால் அப்படி தோன்றியது”
“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்றான் புன்னகையுடன்.
“அப்படின்னா ஓகே”
கொஞ்சம் அமைதி நிலவியது அங்கே. அவன் ஏதாவது பேசுவான் என்று தீபிகா காத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவன் மீண்டும் யோகா செய்ய ஆரம்பிக்க போகிறான் என்று தெரிந்ததும் அவளே மீண்டும் பேச்சை தொடங்கினாள்.
“நாளைக்கு எங்கள் வீட்டிற்கு வருகிறீர்கள் அல்லவா?”
“ஆமாம் வருகிறேன்”
தீபிகாவிற்கு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் அதிகம் காட்டிக்கொள்ளாமல் கட்டுப்படுத்தி கொண்டாள்.
அமைந்தகரையில் தருண் கேட்டான் “அம்மா அங்கிள் ஏன் இப்போல்லாம் வீட்டுக்கே வருவதில்லை, அங்கிள் என்னை மறந்துட்டாரா?”
“அப்படி எல்லாம் உன்னை மறக்க மாட்டார், அங்கிள்கு என்று நெறைய வேலைகள், பொறுப்புகள் இருக்கும் இல்லையா? அது மட்டுமல்ல அங்கிள்கு இந்நேரம் திருமணம் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன், அதிகப்படியான வேலைகள் பொறுப்புகள் இருக்கும், அதனால் தான் வருவதில்லை”
“ஒஹோ ஆனா எனக்கு அங்கிளை பாக்கணும் போல இருக்கே, நான் call பண்ணி வர சொல்லவா? அவர் நம்பர் என்கிட்ட இருக்குல்ல”
“தருண் அப்படி எல்லாம் நினைத்த நேரம் அவருக்கு call செய்யக்கூடாது, ஒருவர் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் அதிகப்படியான உரிமை எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று கண்டிப்புடன் கூறினாள்.
“ம்ம்ம் சரிம்மா” என்று தருண் சோகமாக அவன் வீட்டு பாடங்களை செய்ய ஆரம்பித்தான்.
சத்யாவிற்கு ஒரு பக்கம் தருணை நினைத்து வருத்தமாகவும் இன்னொரு பக்கம் நந்தனை நினைத்து கோபமாகவும் இருந்தது. இதற்குதான் அடிக்கடி வந்து பார்க்காதீர்கள் என்று நான் சொல்வது, இப்போது யார் வருத்தப்படுவது, என் மகன் தானே என்று மனதிற்குள் பொருமிக்கொண்டே சப்பாத்திக்கு மாவு பிசைந்தாள்.
சத்தியமூர்த்தி வீட்டில் தாத்தாவை தவிர அனைவரும் கோயம்புத்தூர் புறப்பட்டனர். போகும் வழியெல்லாம் அந்தாக்ஷரி, dumb charades என்று விளையாடிக் கொண்டு வந்தார்கள். தீபிகாவை தவிர்க்கிறானோ என்று கமலா அம்மாவுக்கு இருந்த கவலையும் நந்தன் சகஜமாக அவளுடன் பேசுவது போட்டியில் கலந்து கொள்வது என்று கலகலப்பாக இருந்ததை பார்த்து பறந்துவிட்டது. கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் கறி, மீன் என்று பயங்கர விருந்தாக இருந்தது. நான் ஏற்கனவே கோயம்புத்தூர் வந்துள்ளேன், நெறைய இடங்களை பார்த்திருக்கிறேன் என்று சொல்லியும் நந்தனை வற்புறுத்தி தீபிகா மற்றவர்களுடன் ஊர் சுற்ற அழைத்து சென்றாள். நந்தனுக்கு அவ்வப்போது தருண் ஞாபகம் வந்து சென்றது. அவனை பார்த்து 10 நாட்கள் ஆகி இருக்குமே, பாவம் தன்னை தேடினாலும் தேடுவான் என்று வருத்தப்பட்டான். சரி இங்கிருந்து வருத்தப்படுவதால் என்ன பயன் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அனைவருடனும் முடிந்த வரை சந்தோஷமாக இருக்க முயற்சி செய்தான்.
நடுவில் துரைசாமி எப்போதும் போல சத்யாவை காரில் ஏற்றிக்கொண்டு மிரட்டினான்.
“ஏன் மா உன்னை ஷ்யாம்கிட்ட இருந்து காப்பாத்த முயற்சி செய்தேன், உன் அம்மாவை ஹாஸ்பிடலில் சென்று சேர்த்தேன், ஆனால் என்னை அவனிடம் காமிச்சு கொடுக்காதே என்று சொல்லியும் நான் தான் உன்னை காப்பாற்றினேன் என்று அவனிடம் சொல்லிவிட்டாய், இதனால் அவன் என் குடும்பத்தை பஞ்சாபில் ஆள் வைத்து மிரட்டினான். என் மகளின் சிகிச்சை பாதியிலேயே தடைப்பட்டு அவர்களும் சென்னை வருவது போல் ஆகிவிட்டது, உன்னால எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா, டெல்லியில் நாங்கள் காண்பித்த டாக்டர் போல் அவளுக்கு இங்கே அமைய மாட்டேன் என்கிறது, சரி எல்லாவற்றிற்கும் நஷ்ட ஈடு போல ஒரு தொகையை கொடு என்று உன்னிடம் நான் மிரட்டி பார்த்து விட்டேன், கெஞ்சாத குறையாக கேட்டு பார்த்துவிட்டேன், எதற்கும் மசிய மாட்டேன் என்கிறாயே, கொஞ்சமாவது உனக்கு நன்றி உணர்ச்சி உள்ளதா?”
“நன்றி உணர்ச்சியா? என்னை மிரட்டுவதற்காக என் தெருவில் உள்ளவர்களிடம் அந்த மும்பை வீடியோவை காண்பித்தவர் தானே நீங்கள்? நான் ஒன்றும் ஷ்யாமிடம் உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று எத்தனை முறை கூறுவது, இவ்வளவுக்கும் நீங்கள் என் பெயரை கெடுத்திருந்தாலும் நான் உங்களுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன் உங்கள் மகளுக்காகவும், என்னை ஷ்யாமிடம் இருந்து காப்பாற்றியதற்காகவும் அம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்ததற்காகவும், ஆனால் நீங்கள் என் அம்மாவிடம் இருந்து கொண்டு சென்ற சூட்கேசை கொடுத்தால் தானே நான் ஏதாவது உதவி செய்ய முடியும், பஞ்சாப் சென்று என்னால் வீட்டை விற்கவும் முடியாது, பிணம் கொத்தி கழுகு போல் காத்து கொண்டிருப்பான் அந்த சண்டாளன்”
“உன் அம்மாவிடம் இருந்து எந்த பொருளையும் நான் எடுத்து செல்லவில்லை என்று உன்னிடம் எத்தனை முறை தான் சொல்வது?”
“என்னால் உங்களை முழுவதுமாக நம்ப முடியவில்லை”
“என்னாலும் தான் உன்னை நம்பவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை, ஒருபக்கம் பார்த்தால் மும்பையில் ஒருவனுடன் கூத்தடிக்கிறாய், இன்னொரு பக்கம் பார்த்தால் ஷ்யாமை பார்த்து நடுங்குகிறாய், இங்கே புதிதாக ஒருவனை பிடித்துவிட்டாய்”
“அண்ணா ப்ளீஸ், அவரை பற்றி மட்டும் பேசாதீர்கள்?”
“அவனை பற்றி ஏன் பேசக்கூடாது? அந்த வளந்து கெட்டவனை எனக்கெதிராக தூண்டிவிட்டு அவன் தன் போலீஸ் நண்பனை வைத்து நான் அமைந்தகரை பக்கம் வராத மாதிரி மிரட்டி இருக்கிறான், உனக்கும் அவனுக்கும் சேர்த்து வைக்கிறேன் வேட்டு ஒருநாள்”
“என்ன? எனக்காக நந்தன் துரைசாமி அமைந்தகரை பக்கம் வராத மாதிரி தன் போலீஸ் நண்பனை வைத்து மிரட்டினானா? தன்னிடம் அதை பற்றி எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லையே” என்று சத்யாவிற்கு ஒரு பக்கம் அவன் மீது நன்றியும் இன்னொரு பக்கம் அவன் எதற்காக தனக்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று சந்தேகமும் ஏற்பட்டது.
இருந்தாலும் அவள் உணர்ச்சிகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு “அண்ணா உங்களுக்கு என்ன கோபம் இருந்தாலும் அது என்னோடு போகட்டும், அவரை ஏன் வீணாக நம் பிரச்சனைக்குள் இழுக்கிறீர்கள்? அது மட்டுமல்ல உங்களிடம் நான் எத்தனை முறை சொல்வது அந்த மும்பை வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று, அந்த வீடியோவை நன்றாக பார்த்தால் தெரியும் அது நான் இல்லை என்று” என்றாள்.
“கருமம், அந்த கன்றாவியை நான் நன்றாக வேறு பார்க்க வேண்டுமா?”
கொஞ்ச நேரம் அமைதியாக காரை ஓட்டினான்.
“ஷ்யாமிடம் இருந்து நான் திருடி வந்த பணமும் fake என்றாகி விட்டது, அங்கேயே இருந்திருந்தால் கொஞ்சமாவது காசு கிடைத்திருக்கும், இப்போது அதுவும் இல்லாமல் ஆகிவிட்டது, என் மகளின் சிகிச்சைக்கு என்ன செய்வேன்?” என்று துரைசாமியின் குரல் உடைந்தது.
சத்யாவிற்கும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் துரைசாமிக்கு உதவி செய்யும் வழி அறியாமல் அமைதியாக இருந்தாள்.
“அந்த வளந்து கெட்டவன் கிட்ட எனக்காக கொஞ்சம் காசை வாங்கி கொடேன், உன் மும்பை வீடியோ மற்ற வீடியோக்களையும் உன்னிடமே தந்து விடுகிறேன்” என்றான் துரைசாமி.
“நீங்கள் நினைப்பது போல் இல்லை எங்கள் உறவு, அவருக்கு என்று என் மனதில் ஒரு மரியாதை இருக்கிறது, அவரும் என்னை கொஞ்சம் மரியாதையாக நடத்துகிறார், என்னால் அவரிடம் காசெல்லாம் கேட்க முடியாது” என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.
துரைசாமி யோசித்தான். “பத்தினி போலவே பேசுவாள், இவளிடம் பேசுவதற்கு நான் அவனிடமே பேசிவிட்டால் என்ன? இவள் மீது அக்கறை இருந்தால் இவள் வீடியோ வெளியே வராமல் இருக்க காசு கொடுப்பான் அல்லவா? இல்லை இவள் வீடியோவை பார்க்க ஆசைப்பட்டால் அதற்காக கொஞ்சம் பணம் தருவான் அல்லவா? வந்தா மலை, போனால் மயிறு என்று முயற்சி செய்தால் என்ன? வேறு என்ன வழி உள்ளது? இவள் இருப்பிடம் காண்பித்து கொடுத்தால் பணம் தருகிறேன் என்று ஷ்யாம் போனில் சொன்னான், ஆனால் நான் அவனுக்கு செய்த துரோகத்திற்கு சென்னை வந்தால் என்னை கொல்ல மாட்டான் என்று என்ன நிச்சயம், நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் மூலமாக வரும் காசு குடும்பத்தை ஓட்டவே சரியாக உள்ளது, இதில் பெரிய தொகைக்கு ஏதாவது செய்து தானே ஆக வேண்டும்” என்று யோசித்து கொண்டிருந்தான்.
Comments
Post a Comment