Sms ch 15 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 15

ராகவன் நந்தனை வியப்பாக பார்த்து கொண்டிருந்தான். “என்னடா புதிதாக பார்ப்பது போல் பார்க்கிறாய்?”


“புதிதாக தான் தெரிகிறாய், அதனால் தான் அப்படி பார்க்கிறேன்”


“என்ன புதிதாக தெரிகிறேன், எப்போதும் போல் தான் இருக்கிறேன்”


“சரி directa கேக்குறேன், உனக்கு ஏன் சத்யா மேல் இவ்வளவு அக்கறை? சத்யாவை நீ சந்தித்து ஒரு மாதம் இருக்குமா? இல்லை ரெண்டு மாசம் இருக்குமா? அட எதுக்கு மாச கணக்கு எல்லாம்? நீ அவர்களை சந்தித்த மறுநாளே எனக்கு சொன்னாய், அமைந்தகரையில் ரவுடி போல் ஒருத்தன் ஒரு தாய் மகனுக்கு தொல்லை கொடுக்கிறான், யார் என்று விசாரித்து கண்டித்து வைக்க முடியுமா என்று, ஒரு கார் நம்பர் மட்டும் கொடுத்தாய், அப்போது அவன் பெயர் கூட தெரியாது, நானும் விசாரித்து அவனை கண்டுபிடித்து ஒரு traffic அத்துமீறலில் மிரட்டுவது போல் மிரட்டி அமைந்தகரை பக்கம் வரக்கூடாது என்று டிபார்ட்மென்டில் இருக்கும் நண்பனை வைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தேன், அவனை பற்றி மேலும் ஏதாவது விசாரிக்கட்டுமா என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய், சத்யாவிற்கும் அந்த துரைசாமிக்கும் என்ன உறவு என்று நமக்கு தெரியாது, ஒரு வேளை அவனை நாம் மிரட்டப்போக சத்யாவிற்கு தெரிய வந்து கோபப்பட்டு தருணை பார்க்கவிடாமல் செய்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டாய், சரின்னு நானும் விட்டுட்டேன், ஆனா உனக்கு தருண் மேல் இருக்கும் அன்பினால் தான் இவ்வளவு மெனக்கெடுகிறாயா இல்லை சத்யா மீதும்ம்.... “ என்று இழுத்தான் ராகவன்.


நந்தன் “இப்போ என்ன சொல்ல வர நீ?”என்றான்.


“பாத்தியா உடனே கோவப்படுற?”


“Hey நிஜமா கோவம் எல்லாம் இல்லை டா, எனக்கு நிஜமாவே புரியல, ஒருத்தன் வந்து இரவு நேரத்தில் தனியாக இருக்கும் தாய் மகனை மிரட்டிட்டு போறான், அந்த அம்மா பையனுக்கு ஏதாவது ஒரு வகைல உதவி செய்யனும்னு நினைக்கறது தப்பா?”


“தப்பில்ல டா, ஆனா நீ சத்யாவை கொஞ்சம் அதிகமான அக்கறையுடன் நடத்துகிறாயோ என்று தோன்றுகிறது, நந்தா உன்னை பற்றி எனக்கு தெரியாதா? எத்தனை பெண்களுடன் பழகி இருப்பாய், எல்லோரையும் மதிப்பாக நடத்தி இருக்கிறாய், ஆனால் யாருக்காகவும் நீ இவ்வளவு தூரம் இறங்கி போய் கவனித்தது இல்லை, do you have feelings for her?”


நந்தன் காபியை குடித்து கொண்டே ராகவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாங்கி வைத்திருந்த பக்கோடாவில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான்.


ராகவன் “கொழுப்பு தான டா உனக்கு, நான் ஒருத்தன் எவ்ளோ கஷ்டப்பட்டு analyse பண்ணி ஒரு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லாம பக்கோடா சாப்பிடுறியா?”


“என்ன பதில் சொல்ல சொல்கிறாய்?”


“Do you have feelings for her? Yes or no, very simple, சொல்லு”


நந்தன் கண்ணை மூடி கொஞ்ச நேரம் யோசித்தான். மீண்டும் ராகவனை பார்த்தான். ஒரு சிறு மூச்சு எடுத்துவிட்டு “தெரியலடா” என்று பதில் சொன்னான்.


“இதென்னடா பதில்? ஒன்னு yes னு சொல்லு இல்லன்னா இல்லன்னு சொல்லு, தெரியலையாம்”


“தெரியலைன்னா தெரியலன்னு தானடா சொல்ல முடியும், இந்த மாதிரி காதல், feelings, கல்யாணம் எல்லாம் waste of time, அத பத்தி பேசறது கூட waste of time தான் என்னை கேட்டா, see நான் பெட் கட்டுறேன், சத்யா கண்டிப்பா ஒரு well to do family ல இருந்து தான் வந்திருப்பா, எவனோ ஒருத்தன love பண்ணி தருண் உண்டாகி அவன் ஏமாற்றி இன்னைக்கு இந்த நிலைமைல இருக்கா, widow னு அவ சொல்றது சும்மா, இதுவே ஒழுங்கா படிச்சோமா சாப்பிட்டோமா தூங்கினோமான்னு இருந்திருந்தால் இந்நேரம் ஒரு பெரிய யூனிவர்சிட்டில professor ஆ இருந்திருப்பா, இல்லை பெரிய writer ஆ ஆகி இருப்பா, இப்போ அவளும் கஷ்டப்பட்டு தருணும் கஷ்டப்பட்டு....இதெல்லாம் தேவையா சொல்லு”


“ஆமாம் காதல் கல்யாணம் எல்லாம் waste of time, sex மட்டும் அத்தியாவசியம், இல்லையா? என்னவோ பேசுற? உன்னிடம் நான் கேள்வியை மாற்றி கேட்டுவிட்டேன், may be you don’t have feelings for Sathya, ஆனா ஒருவேளை அவளையும் மற்ற பெண்கள் போல் வெறும் sex காக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறாயா?”


நந்தன் ராகவனை முறைத்தான். 


“விடுடா கேக்கணும்னு தோணுச்சு, கேட்டுட்டேன்”


“தருணை பாத்தா ஏதாவது help பண்ணனும்னு தோணுச்சுன்னு சொல்லி பண்ணிட்ருக்கேன், உனக்கும் தெரியும், ஆனா ஏடாகூடமா கேள்வி கேட்டுட்டு இருக்க”


“சரி சரி கோச்சிக்காத, உன்ன புரிஞ்சுக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்”


“நீ என்ன புரிஞ்சுக்க எல்லாம் வேண்டாம், சத்யாவை பற்றி நேற்று ஒரு சில விஷயங்கள் கேள்விப்பட்டேன், அதை எல்லாம் புரிஞ்சுக்கறது தான் பெரிய வேலையா இருக்கும் போல”


“ஏன் என்ன கேள்விப்பட்ட?”


“உன்கிட்ட மட்டும் தான் நான் வெளிப்படையா பேசுவேன், so சொல்லலாம்னும் தோணுது, இன்னொரு பக்கம் ஒரு பொண்ணோட தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி அளவுக்கு அதிகமா ஆராய வேண்டாம்னு தோணுது”


“டவுட்டா இருந்தா சொல்லாத”


நந்தன், ராகவன், மது மூவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். நந்தன் 7 வயதில் சத்தியமூர்த்தி வீட்டிற்கு வந்த பிறகு சேர்ந்த பள்ளியில் நந்தன் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருப்பான். அப்போது ராகவனும் மதுவும் மட்டுமே அவனுக்கு நட்பு கரம் நீட்டினார்கள். அவர்களிடம் மட்டுமே தன் தாய் தந்தைக்கு என்ன ஆகிற்று என்றும் நந்தன் சொல்லி இருந்தான். என்றுமே நந்தன் தனக்கு பிடித்த பிடிக்காத விஷயங்கள் என்று ஒருவரிடம் பகிர்ந்தான் என்றால் அது ராகவன், மதுவாக தான் இருக்க கூடும், பெருபாலும் ராகவனிடம் தான் அதுவும். அவர்களும் நந்தனிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள். மூவருமே தங்கள் நட்பை பெரிதும் பாராட்டினார்கள். ராகவன் படித்து போலீஸ் வேலையில் சேர்ந்தான். இப்போது undercover officer ஆக narcotics பிரிவில் வேலை செய்கிறான். தனக்கு தெரிந்தவர்களை வைத்து தான் துரைசாமியை காரில் வேகமாக சென்றான், ஒரு சிறுவனை மோத பார்த்தான், இனி அமைந்தகரை பக்கம் அவனை பார்த்தால் நேராக கேஸ் போடப்படும், அப்படி இப்படி என்று மிரட்டி துரைசாமியை அமைந்தகரை பக்கம் வராமல் தடுத்து இருந்தான். ஒரு ஆளை வைத்து நந்தனை அவ்வப்போது உளவு பார்ப்பது துரைசாமியின் வேலை, அப்படி பார்க்கும் போது தான் துரைசாமியை மிரட்டியதில் பின்னணியில் நந்தன் இருக்கிறான் என்பதும் தெரிய வந்தது. நல்லவேளையாக அந்த உளவு பார்க்க வந்தவன் அப்போதே அங்கிருந்து சென்று விட்டான். மேலும் நந்தனும் ராகவனும் சத்யாவை பற்றி பேசியதெல்லாம் அவன் கேட்கவில்லை. துரைசாமியை பற்றி பேசியதை கேட்டுவிட்டோம், உடனே அவனிடம் சென்று இந்த விஷயத்தை சொல்லி நல்ல சன்மானம் வாங்க வேண்டும் என்ற ஆவலில் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான்.


நந்தன் ஏதோ நினைவு வந்தவனாக சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ராகவனுக்கு மட்டுமே கேட்கும் படியாக பேசினான். “உன் work எப்படி டா போய்கிட்டு இருக்கு?”


“பரவால்ல டா, போன தடவ நாம கிளப் போயிருந்தப்போ நீ நோட் பண்ணி சொன்னதால ஒருத்தன பிடிச்சோம், அவன்கிட்ட இருந்து கொஞ்சம் drugs மீட்டெடுத்தோம், நம்ம போற கிளப்ல நெறைய பேருக்கு அவன் வித்திருக்கான் டா, உன்னோட டிப்ஸ் தான் help பண்ணுச்சு, thanks டா”


“இதுக்கெல்லாம் எதுக்கு டா thanks, actualla சத்யா பத்தி நான் கேள்விப்பட்ட விஷயங்களில் drugs அடிபட்டது”


“What!? Really?”


“yes டா...” நந்தன் தொடர்ந்து சத்யா பற்றி சில விஷயங்களை ராகவனிடம் பகிர்ந்தான். 


“டேய் நான் சொன்னதெல்லாம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம், மது உட்பட”


“hey சொல்லனுமா? எவ்வளவு விஷயங்கள் நீயும் நானும் மட்டும் பேசி இருக்கிறோம், என் பணி சம்மந்தப்பட்ட விஷயங்களை நீ ரகசியமாக பாதுகாப்பது போல் நீ என்னிடம் மனசு விட்டு பேசிய விஷயங்களை சிறு வயதில் இருந்தே நான் பாதுகாக்கவில்லையா?”


“தெரியும் டா, just சொன்னேன், சரி வா போகலாம்”


அமைந்தகரையில் வள்ளியின் பாட்டி சத்யாவை பார்க்க வந்தார்கள். “வாங்க பாட்டி”


“என்னை மன்னிச்சுடு டா கண்ணம்மா, பாட்டி உன்னை தவறாக பேசிவிட்டேன்”


சத்யா கீழே குனிந்திருந்தாள்.


“பாட்டி மேல கோவமா கண்ணு?”


“ஆமாம், அம்மாவும் அப்பாவும் business business னு போய்டுவாங்க, நீங்க தான பாட்டி எனக்கு சோறு ஊட்டி, டிரஸ் பண்ணி விட்டு எல்லாமே செஞ்சு இருக்கீங்க, நீங்களே என்னை புரிஞ்சுக்காம அந்த வார்த்தையை சொல்லலாமா? ஊர் உலகத்துல யாரு பேசினாலும் நான் தாங்கிப்பேன், ஆனா எனக்கு பிடிச்சவங்க என்னை பத்தி தெரிஞ்சவங்க இப்படி பேசினா நான் எப்படி தாங்கிப்பேன்?” என்று கண்ணீர் வடித்தாள்.


“தப்பு தான் டா அம்மா, என்னமோ நினச்சு என்னமோ பேசிட்டேன்” என்று பாட்டி சேலை தலைப்பில் கண்ணீரை துடைத்தார்கள்.


“உக்காரு டா, வள்ளி தான் சொன்னா, மயக்கம் போட்டு விழுந்துட்டியாமே, அந்த தம்பி தான் ஹாஸ்பிடல் எல்லாம் கூட்டிட்டு போச்சாமே, சரியா சாப்பிடுறது இல்லன்னு டாக்டர் அம்மா திட்டினாங்களாமே, ஏன் டா கண்ணு, ஒழுங்கா சாப்பிடணும் இல்லமா? வள்ளி கறி கொழம்பு வச்சு எடுத்துட்டு வருவா, எல்லாரும் இங்கயே உக்காந்து சாப்பிடலாம், சரி அந்த தம்பி தான் உங்க மொதலாளியாமே?”


“ஆமாம் பாட்டி”


“இத்தனை நாளா தெரியாம போச்சே மா, சரி தலை எல்லாம் ஏன் இப்படி இருக்கு, உக்காரு நான் தலை சீவி பின்னி விடுறேன், உன்ன நீ கவனிச்சுக்கறதே இல்லை, என்ன சின்ன புள்ளையா? அழகா தலை சீவி பொட்டு வச்சு பூ வச்சுக்கலாம் இல்லை?”


“பாட்டி நான் என்ன நிலைமைனு மறந்துட்டு பேசுறீங்களா?”


“ஆமாம் நிலைமை பொல்லாத நிலைமை, அத தூக்கி குப்பைல போடு, கண்டதை போட்டு குழப்பிகிட்டு இப்படி வத்தலும் தொத்தலுமா இருக்க, எப்படி இருப்ப முன்னாடி எல்லாம்?” பாட்டி புலம்பிக்கொண்டே சத்யாவை உட்கார வைத்து தலைக்கு எண்ணெய் தடவி சீவி விட்டுக்கொண்டிருந்தார்கள்.


“தருண் சின்னுவோட தான பாட்டி விளையாடிட்டு இருக்கான்?”


“ஆமாம் கண்ணு, தோட்டத்துல தான் விளையாடுறாங்க, வள்ளி பாத்துக்கிறேன் சொல்லிருக்கா, நீதான் ரோஷக்காரி தருணை எங்ககூட சேர விடாம வச்சிருந்த, ஆனா நான் குழந்தை மேல ஒரு கண்ணு வச்சுட்டே தான் இருப்பேன், அந்த குடிகார பையன் துரைசாமி வந்துட்டான்னா என்ன பண்றது?”


“அவன் தான் கொஞ்ச நாள் இந்த பக்கமே வரறது இல்லையே பாட்டி, அன்னைக்கு கூட நான் வேலைக்கு போறப்போ பாதி வழியில வந்து கார்ல ஏற சொன்னான்”


“நாசமா போறவன், போலீஸ்கிட்டயும் போக முடியல, போனா எல்லாத்தையும் தோண்டி துருவுவாங்க, பழசை எல்லாம் மறந்து சென்னைல நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா இந்த கடன்காரன் எப்படியோ மோப்பம் பிடிச்சு வந்துட்டான், ஏன்டா கண்ணு அந்த தம்பிகிட்ட ஏதாவது உதவி கேக்கலாம் இல்லை”


“அதெல்லாம் வேண்டாம் பாட்டி, அவருக்கே 1008 வேலை, டென்ஷன், கல்யாணம் வேற ஆக போகுது, இப்போ போய் நாம நம்ம பிரச்னையை சொல்லி புலம்ப வேண்டாம்”


“கல்யாணமா? அந்த தம்பிக்கா?” பாட்டி நம்ப முடியாமல் கேட்டாள்.


“ஆமாம் பாட்டி”


பாட்டி ஒரு பெருமூச்சு விட்டாள்.


“சரி நமக்கு ஒரு விடிவு காலம் வராமலா போய்டும்”


பாட்டி “நான் சாப்பாடு வச்சிடுறேன், அக்காவை கொழம்பு மட்டும் வைக்க சொல்லலாம், இருங்க அக்காவுக்கு கால் பண்றேன்”


“அதெல்லாம் வேண்டாம், எல்லாமே அவளே செய்து கொண்டு வருவாள்”


பாட்டி சத்யாவிற்கு தலை சீவி பின்னி முடித்ததும் “போ போய் முகத்தை கழுவி பொட்டு வச்சுக்கிட்டு வா, நான் போய் பூ வாங்கிட்டு வரேன்”


“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பாட்டி, எல்லோரும் சந்தேகப்படுவார்கள்”


“இப்போ மட்டும் சந்தேகப்படாமலா இருக்காங்க, யாராவது ஏதாவது நினைச்சுட்டு போகட்டும், நீ அழகா இருக்கணும், பஞ்சாப்ல வளரும் போது நீ வேண்டாம் வேண்டாம் சொன்னாலும் வாரத்துல ஒரு நாளாவது உனக்கு பூ வச்சு பாக்காம இருக்க மாட்டேன், நீ போய் முகம் கழுவிட்டு வா” என்று கூறி பாட்டி முக்கு கடையில் போய் பூ வாங்கிக்கொண்டு வைத்துவிட்டார்கள். “ராசாத்தி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு”


வள்ளி சாப்பாடு, கொழம்பு எல்லாம் எடுத்துக்கொண்டு சின்னு தருணுடன் வந்தாள். “எல்லாரும் அங்கேயே போய் சாப்ட்ருக்கலாம் இல்லை அக்கா, ஏன் எல்லாத்தையும் தூக்கிட்டு வரனும்”


“பரவால்ல சத்யா, இதுல ஒரு சிரமும் இல்லை, என்ன? பாட்டி வேலையா இதெல்லாம்? பாட்டி தான் உனக்கு லாயக்கு, எவ்ளோ லக்ஷ்மிகரமா இருக்க பாரு”


சத்யா புன்னகைத்தாள்.


வள்ளி, பாட்டி, சத்யா, சின்னு, தருண் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு சிரித்து பேசிகொண்டிருந்தார்கள். என்னவோ பல வருடங்கள் கழித்து சந்தோஷமாக இருந்தது போல் சத்யா உணர்ந்தாள். சிறுவயதில் இப்படி தான் அத்திப்பூத்தார் போல அம்மாவும் அப்பாவும் வீட்டில் இருக்கும் போது, பெரிய விருந்தே சமைப்பார்கள். சத்யாவை கண்ணும் கருத்துமாக பேணி வளர்க்கும் பாட்டி, அவர்களின் இரு பேத்திகள் ஷெண்பகம், வள்ளி என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். 


சத்யாவின் தாய் கவிதா, தந்தை ரவிச்சந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் கவிதா ரவிச்சந்திரனுடன் ஊரை விட்டே சென்று விட்டார்கள். ரவிச்சந்திரனுக்கு பெரிதாக உறவினர்கள் யாரும் இல்லை, ரயில்வேயில் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு பஞ்சாபில் மாற்றல் ஆகவும், கவிதாவை அழைத்து கொண்டு பஞ்சாபிற்கு சென்றுவிட்டார். கவிதா ரவிச்சந்திரனின் அழகான வாழ்க்கைக்கு அழகு சேர்க்க பிறந்தவள் தான் சத்யா. தனக்கு தந்தையை விட அதிகமாக பாசத்தை ஊட்டி வளர்த்த அண்ணனின் பெயர் சத்தியமூர்த்தியில் பாதியை சத்யாவை மகளுக்கு வைத்து அழகு பார்த்தார் கவிதா. பாட்டியின் குடும்பம் ஏதோ பிழைப்பிற்காக ஒருவரை நம்பி வந்து ஏமாந்து டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் தனித்து விடப்பட்டவர்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பொருட்டு அங்கு பணியில் இருந்த ரவிச்சந்திரன் அவர்களை பஞ்சாபில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். கவிதாவும் அவர்களை அன்போடு வரவேற்று அவர்கள் வீட்டு பின்னால் ஒரு வீட்டில் குடி வைத்தார்கள்.  சத்யாவிற்கும் ஷெண்பகமும் வள்ளியும் உடன்பிறவா அக்காவாக மாறினார்கள். சத்யாவிற்கு அப்போது வயது 5 இருக்கும், வள்ளி சத்யாவை விட 3 வயது பெரியவள். ஷெண்பகம் 5 வயது பெரியவள். ஷெண்பகம், வள்ளியையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்கள் கவிதாவும், ரவிச்சந்திரனும். ஆனால் ஷெண்பகத்திற்கு படிப்பில் நாட்டமில்லை, வள்ளி ஓரளவுக்கு படித்தாள். சத்யா எல்லாவற்றிலும் first mark தான். சத்யாவின் தாய் கவிதா செல்லமாக வளர்ந்து இருந்தாலும் எப்போதும் தனக்கென்று ஒரு தனித்துவத்துடன் வளர்ந்தவர்கள். திருமணம், குழந்தைக்கும் மேலாக தனக்கு என்று ஏதோ ஒரு பயன்பாடு உள்ளதாக நம்பினார்கள். அதனால் வீட்டில் சும்மா இல்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் சிறு சிறு குடிசை தொழில் முதல் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தார்கள். பிறகு ஆடைகள் வடிவமைப்பு, அதை தைத்து ஏற்றுமதி செய்வது என்ற தொழிலில் கால் ஊன்றி நின்றார்கள். தன் பிறந்த வீட்டின் தொழில் ரத்தம் தனக்குள்ளும் ஓடுவதை நினைத்து பெருமைப்பட்டுகொள்வார்கள், ஆனால் ஒரு நாளும் தன் பிறந்த வீட்டு சொந்தங்களை பற்றி யாரிடமும் அவர்கள் பேசியதில்லை. பேசினால் வீணாக மனசு வலிக்கும், அவர்களுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று தோன்றும். மாப்பிள்ளை வீட்டார் முன் அவர்கள் என்ன அவமானப்பட்டார்களோ தெரியாது, இன்று நாம் தொடர்பு கொண்டால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று ஆகும் என்று தன் பிறந்த வீட்டை பற்றி நினைத்தாலும் பேசுவதில்லை. அவ்வப்போது ஒரு டைரியில் மட்டும் எழுதுவது உண்டு. தாய்க்கு தாயாக இருந்து வளர்த்த கமலா அம்மாவை நினையாத நாளில்லை, சத்யா வயிற்றில் உண்டான சமயம், பிறந்த சமயம் என்று எல்லா நேரத்திலும் தன் அண்ணி கமலா அம்மாவை நினைத்து பார்ப்பாள். இந்நேரம் அண்ணி பக்கத்தில் இருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார்கள்? என்று யோசித்து பார்ப்பார்கள், சத்யா பிறந்ததும் அண்ணி பெயர் கமலா வைக்கலாமா என்று கூட நினைத்தது உண்டு, ஆனால் கணவர் ரவிச்சந்திரன் சத்யாவிற்கு முன்னுரிமை தந்ததால் அவர் விருப்பதிற்கு ஏற்ப சத்யா என்றே பெயர் சூட்டியாச்சு, சத்யா சுட்டி குழந்தையாக, எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டு அறிந்து கொள்வதும், ஆர்வமாக துறு துறு என்று வலம் வரும் குறும்பு குழந்தையாக வளர்ந்தாள். கவிதாவின் தொழில் வளர்ச்சி அடைய அதிலே அதிகமாக கவனம் செலுத்தியதால் பாட்டியின் வரவு ஒரு வரபிரசாதமாகவே அமைந்தது. சத்யாவை பாட்டி நன்றாகவே பேணி பராமரித்தார்கள், ஆனால் அது ஏனோ சத்யாவின் மனதில் தன் தாய் மீது ஒரு சின்ன வெறுப்பாக மாறியது. “நீ என்கூட இரு மா, எனக்கு சாப்பாடு ஊட்டி விடு மா, என்கூட தூங்கு மா” என்ற சத்யாவின் கோரிக்கைகள் நிறைய முறை கவிதாவால் நிறைவேற்ற முடியாமல் போனது. “இரு டா அம்மாவுக்கு இன்னைக்கு இந்த ஆர்டர் எல்லாம் முடித்து அனுப்ப வேண்டும், நீ போய் அப்பாவோடு படுத்துக்கோ, இல்லன்னா ஷெண்பகம், வள்ளி அக்காவோடு போய் விளையாடு, பாட்டியை ஊட்டி விட சொல்லு என்று” அவளது கோரிக்கைகள் கை மாற்றி விடப்பட்டன. கவிதா இதை தெரிந்து செய்யவில்லை. சத்யா எந்த அளவிற்கு தன் தாயின் அருகாமைக்காக ஏங்குகிறாள் என்று தெரிந்து இருந்தால் ஒருவேளை கவிதா தொழிலை இரண்டாம் இடத்தில் வைத்து சத்யாவை முதல் இடத்தில் வைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும், ஆனால் கவிதாவுக்கு இதெல்லாம் புரியவில்லை, அவளுக்காக தானே சம்பாரிக்கிறோம், தான் வளர்ந்தது போல் தன் மகளும் எல்லா வசதிகளுடன் வளர வேண்டும் என்று நினைத்தாளே தவிர சத்யாவின் ஏக்கமும் வெறுப்பும் புரியவில்லை. பிசினஸ் பிசினஸ் என்று ஓடிக்கொண்டிருந்தாள். கணவரும் அவளுக்கு ஆதரவாகவே இருந்தார். பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர். சத்யாவையும் தைரியமாக இருக்க வேண்டும், எதற்கும் பயப்பட கூடாது என்றெல்லாம் சொல்லி அளவுக்கு அதிகமாகவே சுதந்திரமும் கொடுத்து வளர்த்தார். பாட்டி முடிந்த அளவு நல்லது கெட்டது சொல்லி தந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட அளவை மீறி சத்யாவை அவர்களால் கண்டிக்க முடிந்ததில்லை. கண்டிக்கும் அளவிற்கு சத்யா பெரிதாக எதுவும் தவறு செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நன்றாக படித்தாள், அழகாக வளர்ந்தாள், படித்து முடித்த நேரங்களில் இன்றே உலகை அளந்து விட வேண்டும் என்பது போல ஓடிதிரிந்து விளையாடி வளர்ந்தாள். என்ன ஒரு சின்ன பிரச்சனையில் தன் தாய் கண்டித்தால் தன் தாயை மட்டும் துடுக்காக தூக்கி எறிந்து பேசிவிடுவாள். அப்படி தான் செய்வேன் என்று தன் தாய் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையே பிடிவாதமாக செய்வாள். அம்மாவை அப்படி மதியாமல் பேசக்கூடாது டா கண்ணு என்று பாட்டி சொன்னாலும் சரி, தந்தை சொன்னாலும் சரி காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள். நான் அப்படி தான் பேசுவேன், அவர்களுக்கு என்னை விட அந்த தொழில் தானே முக்கியம் என்று எடுத்தெரிந்து பேசிவிட்டு தன் அறைக்கு சென்று இரண்டு நாட்களுக்கு வெளியே வரமாட்டாள், இதை எல்லாம் அறியாத பெண்ணின் விளையாட்டான கோபம் என்று தான் கவிதா எடுத்துக்கொண்டாள். சத்யாவும் 14 வயதில் பெரியவள் ஆனாள். அன்றலர்ந்த மலர் போல, பசும்புல்லின் மேல் விழுந்த பனித்துளியை போல, தேய்த்து எடுத்து குழைத்த சந்தனமும், தாழம்பூ குங்குமமும் சேர்ந்தார் போல, பார்த்து பார்த்து செதுக்கிய கோயில் சிலையை போல அழகும் வடிவமும் நறுமணமும், புத்துணர்ச்சியும் ஒன்று சேர சத்யா பெண்மைக்கு இலக்கணமாக மாறினாள். ஆனால் துணிச்சலாக நடை போட்டு பழகிய சத்யாவிற்கு தன் பெண்மையை குறி வைத்து அனுபவிக்க காத்திருந்த கண்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018