Sms ch 19 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 19
குடும்பத்தின் பெரியவர்கள், ஷ்யாமின் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு எப்போதாவது எட்டி பார்ப்பதோடு சரி. ஷ்யாமின் அப்பா தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வது, மீட்டிங் அட்டென்ட் பண்ணுவது என்று சென்று விடுவார். எனக்கு லேடீஸ் கிளப், சோசியல் சர்வீஸ் போதும் என்று ஷ்யாமின் அம்மா வெளியே சென்றுவிடுவார்கள். மாதா மாதம் அவ்வளவு பெரிய வீட்டை பராமரிக்கும் செலவு, பணியாட்கள் சம்பளம் என்று எல்லாமே ஷ்யாமின் அப்பாவால் செட்டில் செய்யப்பட்டு விடும். ஷ்யாம், கௌஷிகிற்கும் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை அக்கௌன்டில் வந்து விடும். ஷ்யாம், கௌஷிக் travel பிசினஸ் நன்றாகவே வளர்ந்ததால் கௌஷிக் அம்மா, அப்பா தரும் பணத்தை பேங்க் அக்கௌன்ட்டில் இருந்து எடுப்பதில்லை. சுனிதாவும் சத்யாவும் மற்ற குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து கொண்டார்கள். சுனிதாவுக்கும் சத்யாவுக்கும் ஒரு இணக்கமான நட்பு இருந்தது. ஒருவரை ஒருவர் அதிகமாக தோண்டி துருவாமல் அதே சமயம் எட்டி நில்லாமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தங்கள் அன்பையும் அக்கறையையும் பகிர்ந்து கொண்டார்கள். வாழ்க்கை அவர்கள் நான்கு பேருக்கும் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.
சத்யா தருணை தூங்க வைக்க முயற்சித்து கொண்டிருந்தாள். கௌஷிக் சத்யாவை ரசித்து கொண்டிருந்தான். “பிடிங்க.....நீங்க கொஞ்ச நேரம் முயற்சி பண்ணுங்க” என்று தருணை அவனிடம் கொடுத்துவிட்டு “குழந்தையை நானே பாத்துக்கிறேன்னு சொன்னாலும் சொன்னேன், மருந்துக்காவது உதவி செய்கிறீர்களா?” என்று சத்யா தன் பொய் கோபத்தை காட்டினாள். “இப்போ நான் தான தூங்க வைக்கிறேன், இதோ பார் என்னிடம் வந்ததும் தூங்கிவிட்டான்” என்றான் கௌஷிக் தருணை தொட்டிலில் படுக்க வைத்துக்கொண்டே. “நான் கேட்டதால தான? இல்லன்னா உதவி செஞ்சிருப்பீங்களா? நீங்களாவே செய்யனும்” என்றாள்.
“இனிமேல் நீங்கள் கேட்காமலேயே உதவி செய்கிறேன், போதுமா மேடம்?” என்று ஏதோ சேவகன் போல் குனிந்தான் கௌஷிக்.
சத்யா சிரித்தாள்.
“சிரிக்காதே சத்யா”
“ஏன் நான் சிரித்தால் அவ்வளவு கொடுமையாகவா இருக்கிறது?” என்று சிணுங்குவது போல் கேட்டாள் சத்யா.
“ஒரு வகையில் கொடுமை தான்”
“என்ன சொன்னீங்க?” என்று கௌஷிக் தலையில் கொட்டுவதற்காக கையை ஓங்கினாள்.
கௌஷிக் அவளை தடுத்து கையை பிடித்து வளைத்து அணைத்தான். “ப்ச்ச் என்ன இது? குழந்தை இருக்கான்” என்றாள் சத்யா.
“அவன் தூங்கிட்டான்”
“நான் சிரிச்சா கொடுமையா இருக்கு சொன்னீங்க? இதெல்லாம் மட்டும் இனிக்குதாக்கும்? விடுங்கள் என்னை”
“ம்ஹ்ம்ம் விட மாட்டேன், ஒரு வருடமாக பட்டினி போட்டுவிட்டு இப்படி என் கண் முன்னால் அழகாக நடமாடுவதும், சிரிப்பதுமாக இருந்தால் எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?”
“ம்ம்ம் நீங்கள் தான் வேலை, பிசினஸ் என்று என்னை கண்டுகொள்வதே இல்லை, உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று கூட தோன்ற ஆரம்பித்துவிட்டது”
“hey லூசா நீ, உன்னை எப்படி பிடிக்காமல் போகும்?”
“பின்ன என்னவாம்? முதன்முதலாக நாம் இணைந்த போதும் நீங்கள் வேண்டாம் என்று தான் சொன்னீர்கள், அதன் பிறகு கர்பம், பிரசவம் என்று ஓடிவிட்டது, இப்போது நான் இங்கு தானே இருக்கிறேன், கண்டுகொள்வதே இல்லையே” என்று பொய்யாக கோபித்து கொண்டாள்.
“உன் உடல்நலம் எப்படி உள்ளதோ என்று தயங்கி தான் கொஞ்சம் விலகி இருந்தேன், இனி உன்னை எப்படி கண்டுகொள்கிறேன் என்று பார்” என்று சத்யாவை தூக்கிக்கொண்டு படுக்கைக்கு சென்றான்.
சில மணி நேரங்கள் சென்றன. சத்யா தூங்கி கொண்டிருந்த கணவனை பார்த்தாள். தாம்பத்தியத்தில் இப்படி ஒரு முழுமையான ஆனந்தம் கிடைக்குமா? முதல் முறை இணைந்த போது ஏதோ கனவு உலகத்தில் இருந்தது போல் இருந்தது. ஆனால் தாம்பத்தியத்தின் பூரணத்துவம் இப்போது தான் புரிகிறது. கணவனின் முடியை கோதிவிட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
கௌஷிக்கும் சத்யாவும் இப்போது தான் புதுமண தம்பதிகள் போல் உணர்ந்தார்கள். வேலை முடிந்ததும் நேராக கௌஷிக் சத்யாவிடம் தஞ்சமடைந்து விடுவான். ஒரு வார இறுதியின் போது கௌஷிக், சத்யா, தருண் சத்யாவின் தாய் கவிதாவை பார்க்க சென்றிருந்தார்கள். நான் தான் சமைப்பேன் என்று சத்யா பிடிவாதம் பிடிக்க “என்னமோ செய்” என்று சொல்லிவிட்டு கவிதா தருணுடன் விளையாடி கொண்டிருக்க கௌஷிக் சமையல் அறைக்கு சென்று சத்யாவிற்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று அவளுடன் குறும்பாக விளையாடிக் கொண்டிருந்தான்.
Diaper மாற்ற வேண்டும், எங்கே வைத்திருக்கிறாள் என்று தேடிவிட்டு அடுப்படி வந்த கவிதா கௌஷிக் சத்யாவிடம் வம்பிழுத்து விளையாடுவதை பார்த்து வாசலிலேயே நின்றுவிட்டு நகர்ந்து விட்டார்கள். தன் பழைய சேலையை கத்தரித்து துணியை டயப்பராக சுற்றி விட்டார்கள். சிரித்துக்கொண்டே வெளியே ஓடி வந்த சத்யா “அம்மா இருக்காங்க, சும்மா இருங்க” என்று முனுமுனுத்து விட்டு “என்னம்மா துணியை கட்டி விட்டுட்ட, டையப்பர் எங்கன்னு என்கிட்ட கேட்ருக்கலாம் இல்லை” என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.
“துணி தான் நல்லது சத்யா, புண் எல்லாம் வராம இருக்கும், அதான் உன்கிட்ட கேக்க வரல”
சத்யா கௌஷிக்கை பார்த்து விட்டு அப்பாடா நல்ல வேளை அம்மா பாக்கல என்று மூச்சு விட்டாள்.
அன்றிறவு “தருண் என்னுடன் தூங்கட்டுமே சத்யா, பசிக்கு அழுதால் உன்னை அழைக்கிறேன்” என்று சொல்ல “இல்லம்மா நய் நய்னு அழுவான்.....”
“அதெல்லாம் பரவால்லடி, சின்னுவை பார்க்கும் போதெல்லாம் தருண் எப்போ வருவான், அவனோடு எப்போது நேரம் செலவழிக்க போகிறேன் என்று ஏங்குவேன்”
சத்யா தயங்கிய படியே வெட்கத்துடன் சரி என்று சொல்லிவிட்டு தன் அறையில் காத்திருக்கும் கௌஷிக்கிடம் சென்றாள். “நாம் அடுப்படியில் செய்த சேட்டைகளை அம்மா பார்த்திருப்பார்களோ? அச்சோ மானம் போச்சு, உங்களால தான்” என்று சிணுங்கினாள். கௌஷிக் புன்னகையுடன் அவளை அணைத்தான். இரண்டு நாட்கள் தங்கலாம் என்று வந்தவர்கள் நான்கு நாட்களாக கவிதா வீட்டிலேயே தங்க ஷ்யாம் கௌஷிகிற்கு கால் செய்தான். “என்னடா மாமியார் வீட்டுக்கு போனதும் எங்கள எல்லாம் மறந்துட்டியா?”
“அப்படிலாம் இல்லைடா, என்ன விஷயம் சொல்லு”
“ஒன்னும் இல்லடா, நம்ம டெம்போ ஒன்னு மும்பை போச்சுல்ல, ஏதோ accident போல, பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனா நீ இங்க இருந்தா பட்டு பட்டுன்னு discuss பண்ணி paperwork எல்லாம் முடிக்கலாம்”
“சரிடா வரேன்”
“சத்யாவையும், தருணையும் கூப்டுட்டு வந்துடுடா, சுனிதாவால் அவர்களை பார்க்காமல் இருக்க முடியவில்லையாம்”
“Ok டா, வரோம்”
சத்யாவிற்கு கிளம்ப மனமே இல்லை, கவிதாவிற்கும் அனுப்ப மனமில்லை. இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாமே தம்பி என்று கௌஷிக்கிடம் கேட்க இன்னோரு நாள் வரோம் அத்தை என்று பிரிய மனமில்லாமல் பிரிந்தனர். வீட்டிற்கு வந்ததில் இருந்து ஒன்று மாற்றி ஒன்று வேலை வந்து கொண்டே இருந்தது கௌஷிக்கிற்கு. சத்யா அவனுடன் அந்யோன்யமாக இரண்டு மாதங்கள் இருந்து விட்டு திடீரென கணவன் பிஸியானதால் அவன் அருகாமையை அதிகமாகவே மிஸ் செய்தாள்.
ஏனோ சுனிதாவும் சரியாக பேசுவதில்லை. அவள் இப்போதெல்லாம் வீட்டில் தங்குவது இல்லை. கௌஷிக் இரவு வந்ததும் முகம் கொடுத்து கூட பேசாமல் உறங்க ஆரம்பித்து விடுவான்.
ஒரு நாள் ஷ்யாமும் சத்யாவும் மட்டும் ஹாலில் இருந்தார்கள். ஷ்யாம் சோகமாக இருந்தான். என்னவென்று சத்யா கேட்டாள். ஷ்யாம் ஒன்றுமில்லை என்று விலகி சென்றுவிட்டான்.
கௌஷிக் ஒரு நாள் தள்ளாடியபடியே வந்தான். அவன் மீது துர்நாற்றம். குடித்திருக்கிறீர்களா என்ற சத்யாவின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் படுக்கையில் விழுந்தான். இல்லை இது மது இல்லை, வேற என்னவோ. சத்யா உடைந்து அழுதாள். மறுநாள் காலை அவனிடம் இதை பற்றி கேட்டாள். தனக்கு ஏதும் தவறு செய்தது போல் ஞாபகம் இல்லை, வேலை அலுப்பில் தூங்கியது மட்டும் தான் ஞாபகம் உள்ளது என்று கௌஷிக் வாதாடினான்.
மீண்டும் ஒரு நாள் பகல் பொழுதில் ஷ்யாம் வீட்டிற்கு வந்தான். சத்யாவிடம் ஏதோ கேட்க நினைத்தான், ஆனால் கேட்கவில்லை, அவன் தயங்கி வருவதும் போவதுமாக இருப்பதை கண்ட சத்யா என்னவென்று கேட்க “கௌஷிக் உனக்கு நெக்லஸ் வாங்கி கொடுத்தானா?” என்று கேட்டான்.
“இல்லையே” என்றாள் சத்யா.
ஷ்யாம் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு புறப்பட தயாரானான்.
“ஷ்யாம் ஒரு நிமிடம், என்ன வந்தீர்கள், நெக்லஸ் பற்றி கேட்டீர்கள், மீண்டும் புறப்படுகிறீர்கள்? எனக்கு நெக்லஸ் வாங்கி தரப்போவதாக கௌஷிக் சொன்னாரா?”
“ஆமாம் சொன்னான்..... ஆனால்.... சரி நான் அவனிடம் பேசிக்கொள்கிறேன்”
“என்ன பிரச்சனை சொல்லுங்கள்”
சத்யாவின் வற்புறுத்தலுக்கு பிறகு ஷ்யாம் சொன்னான் “வரவு செலவில் சில குறைபாடுகள், கௌஷிக்கிடம் கேட்டபோது உனக்கு நெக்லஸ் வாங்கி தர கொஞ்சம் பணம் எடுத்ததாக சொன்னான், அதில் எனக்கு சந்தோஷம் தான், ஆனால் அவன் அதை தவறான வழியில் செலவழிக்கிறானோ என்று பயம் வந்துவிட்டது.”
சத்யாவிற்கு வயிற்றில் பிசைந்தது. கௌஷிக் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தான். சத்யா விழித்திருந்து கேட்டாள். “எனக்கு tireda இருக்கு சத்யா, தூங்க வேண்டும், பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றான் ஷ்யாம்.
“எனக்கு இப்போதே பேச வேண்டும்”
கௌஷிக் சொக்கி விழுந்தான். மீண்டும் அதே துர்நாற்றம். “போதை பொருள் ஏதோ சாப்பிட்டு இருக்கிறீர்கள்” என்று சத்யா அழுதாள்.
“என்ன உளறகுராம்” என்று கௌஷிக் உளறிக்கொண்டே தூங்கினான்.
இப்படியே நாள் ஆக நாள் ஆக தான் என்ன செய்கிறோம் என்று கௌஷிக்கும் புரியவில்லை, தன் கணவனிடம் பேசி புரிந்துகொள்ள சத்யாவாலும் முடியவில்லை. ஒரு நாள் சத்யா பகல் வேளையில் travels ஆஃபிஸிற்கு சென்றாள். கௌஷிக் மட்டும் இருந்தான். “ஏன் தினமும் இரவு போதைக்கு அடிமை ஆகுறீங்க?” என்று கேட்டாள். சத்தியமாக தனக்கு ஒன்றும் தெரியாது என்று கௌஷிக் வாதாடினான். பிசினஸ்ஸில் கணக்கில் இடித்த பணத்தை பற்றியும், நெக்லஸ் பற்றியும் விசாரித்தாள். தான் அப்படி எந்த பணத்தையும் எடுக்கவில்லை என்றும் நெக்லஸ் வாங்கும் எண்ணமும் தனக்கு இல்லை என்றும் வாதாடினான். பிறகு ஏன் ஷ்யாம் அப்படி சொல்ல வேண்டும், அதுவும் அவன் சொல்லாமலே கிளம்பி இருப்பான், நான் கேட்டதால் தான் சொன்னான், கணவன் சொல்வது உண்மையா, ஷ்யாம் சொன்னது உண்மையா என்று சத்யா குழம்பினாள். “நான் இன்னைக்கு ஷ்யாம் கிட்ட பேசுறேன்” என்ற கௌஷிக் மறுபடியும் போதையுடன் வீட்டிற்கு வந்து உறங்கினான். மறுநாள் காலை கணவனுடன் இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும் என்று சத்யா காத்திருக்க தோட்டத்தில் சுனிதாவும் கௌஷிக்கும் ஏதோ பேசிக்கொண்டிருப்பதை தன் அறையில் இருந்து பார்த்தாள். சுனிதா அழுதாள். கௌஷிக் கோபமாக பேசினான், பிறகு ஆசுவாசம் அடைந்தான். முன்னும் பின்னும் நடந்தான். என்னவென்று தோட்டத்திற்கே சென்று கேட்டுவிடலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தவள் அடுத்த அறையில் ஷ்யாம் தோட்டத்தை பார்த்துக்கொண்டு கண்ணீருடன் நிற்பதை பார்த்தாள். “என்ன விஷயம்” என்று கேட்க ஷ்யாம் அதிர்ந்தான். “நீயா?”
“ஆம் நானே தான், இந்த வீட்டில் என்னதான் நடக்கிறது” என்று சத்யா கோபமாக கேட்டாள். ஷ்யாம் உடைந்து அழுதான். சத்யாவின் வற்புறுத்தலுக்கு பிறகு ஷ்யாம் சொன்னான் “சுனிதா வைர வளையல் ஒன்று புதிதாக போட்டிருந்தாள், தன் பெற்றோர் வாங்கி கொடுத்ததாக சொன்னாள், ஆனால்....” என்று அவன் மேலும் கண்ணீரை கட்டுப்படுத்தினான்.
சத்யாவிற்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.
ஷ்யாம் நான் இங்கிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினான். சத்யாவும் கௌஷிக்கிடம் உங்களுக்கும் சுனிதாவுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று கேட்டாள். “ஒன்றும் நடக்கவில்லை சத்யா, கொஞ்சம் பொறுமையாக இரு, பிறகு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். சுனிதாவை தடுத்து சத்யா கேட்டாள். வீட்டை சுற்றி பார்த்தாள் சுனிதா. கொஞ்ச நேரம் யோசித்தாள். “என்னால் இப்போது ஒன்றும் சொல்ல முடியாது சத்யா, என்னை எதுவும் கேட்காதே” என்று அவளும் வெளியே புறப்பட்டுவிட்டாள். எதுவும் புரியாமல் சத்யா குழம்பினாள்.
பின் மூவரும் வீட்டிற்கு ஒன்றாக வந்தார்கள். தோட்டத்தில் நின்று மூவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள். ஷ்யாம் வேலைக்காரர்களுக்கு ஏதோ பணம் கொடுத்து வெளியே அனுப்பினான். மீண்டும் கௌஷிக்கும் ஷ்யாமும் தோட்டத்தில் நின்று பேசினார்கள். கௌஷிக்கிற்கும் ஷ்யாமிற்கும் கை கலப்பானது. சிறிது நேரத்தில் கௌஷிக் வந்தான். சத்யா முகத்தை பார்க்க முடியாமல் தலையை கவிழ்ந்தான். “என்ன நடக்கிறது?” என்று சத்யா கோபமாக கேட்டாள். கௌஷிக் எங்கோ பார்ப்பது போல் விட்டத்தை பார்த்து கொண்டிருந்தான். “உங்களைத்தான் கேட்கிறேன்” என்று உலுக்கினாள்.
“பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை, நீ....” என்று தயங்கி அறையில் முன்னும் பின்னும் நடந்தான்.
“உங்களுக்கும் சுனிதாவிற்கும் ஏதோ இருக்கிறது, என்னை ஏமாற்றி விட்டீர்கள்” என்று அழுதாள்.
கௌஷிக் தலையை பிடித்து கொண்டு கட்டிலில் அமர்ந்தான். அவனுக்கு கீழே சத்யா முட்டிபோட்டு அவன் முகத்தை பார்த்து அழுதாள். “நீங்கள் என்மீது கொண்டிருந்த காதல் பொய்யா? என்னால் அப்படி நினைக்க முடியவில்லையே, எல்லாமே எனக்கு நீ தான் என்று சொல்வீர்களே, இப்போது என்ன ஆயிற்று?”
கௌஷிக் கண்களில் இருந்து நீர் வழிந்தது. “நீ உன் அம்மா வீட்டிற்கு சென்று விடு” என்று சொல்லமுடியாமல் சொல்லி அழுதான்.
“எனக்கு கேட்கவில்லை, என்ன சொன்னீர்கள்?” ஏதோ நப்பாசையில் மீண்டும் கேட்டாள்.
சத்யாவின் கையை பிடித்து தன் வாயில் வைத்து முத்தமிட்டுக் கொண்டே மெதுவாக சொன்னான் “நீ உன் அம்மா வீட்டுக்கு போய்டு”
சத்யாவிற்கு கோபம் வந்தது. கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டாள். “ஓஹோ நான் உங்களுக்கும் சுனிதாவிற்கும் இடையில் கரடி போல் இருக்கிறேனா?” என்று கேட்டாள்.
கௌஷிக் “ப்ச்ச்...” இங்கும் அங்கும் நடந்தான். “ஆமாம் எனக்கும் சுனிதாவிற்கும் இடையில் தடையாக இருக்கிறாய்” என்று கத்தினான். சத்யா அழுது கொண்டே “உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள், நான் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்” என்று மன்றாடினாள். “நீ டெலிவரிக்காக சென்றிருந்த போது....” கௌஷிக் கொஞ்சம் தண்ணீரை குடித்தான். “நீ டெலிவரிக்காக சென்றிருந்த போது ஷ்யாம் இல்லாத நேரத்தில் நானும் சுனிதாவும் தவறு செய்துவிட்டோம், அப்போது மட்டுமில்லை, அதன் பிறகு நெறைய முறை....”.
“போதும், இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம்” துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டு தருணை அழைத்துக்கொண்டு சத்யா தன் தாய் வீட்டிற்கு புறப்பட்டாள், கௌஷிக் அவளை இழுத்து அணைத்தான், சத்யா மரக்கட்டையை போல் நின்றாள், கௌஷிக் சிறிது நேரம் அவளை அணைத்து விட்டு கண்ணீருடன் அவளை விடுவித்தான்.
அதன் பிறகு அவளும் கௌஷிக்கும் பேசிக்கொள்ளவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து ஷ்யாமை எதார்த்தமாக சந்தித்தாள். கௌஷிக்கும் சுனிதாவும் ஓடி போய்விட்டார்கள் என்று சொல்லி அழுதான். சத்யாவால் இன்னும் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. தாயின் முன் அவமானமாகி தலை குனிந்து நின்று அழுதாள். கவிதா எந்த உணர்ச்சியுமின்றி கல்லை போல் அமர்ந்து இருந்தாள்.
ஷ்யாம் அந்த பெரிய வீட்டில் தன் அறையில் தனிமையில் அமர்ந்திருந்தான். லேப்டாப் on செய்தான். வரிசையாக இருந்த பல வீடியோக்களில் ஒரு வீடியோவை play செய்தான். "கௌஷிக் “hey விளையாடாத”என்று சொல்ல “நிஜமா தான் சொல்றேன்” என்று சத்யா மெல்லிய புன்னகையுடன் கௌஷிக் கையை பிடித்து இழுத்தாள்.
கௌஷிக் அவளை நெருங்கி முத்தமிட்டுக்கொண்டே அவளின் ஆடைகளை கலைந்தான், சத்யா ஆடைகளின்றி...கௌஷிக்கும் அவளும்...”
சிறிது நேரம் கழித்து ஷ்யாம் வேறு ஒரு வீடியோவை on செய்தான். சத்யாவும் கௌஷிக்கும் முதலிரவு அறையில்... “ச்ச இது waste” என்று ஷ்யாம் வேறு ஒரு வீடியோவை on செய்தான். சத்யா தருணுக்கு பசி ஆற்றிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து ஷ்யாம் லேப்டாப்பை மூடினான்.
“நான் அனுபவிக்க வேண்டியவள், அநாதை நாய் உனக்கு சத்யா போன்ற அழகி வேண்டுமா? பரவாயில்லை உன்னை தனியாக அனுப்பவில்லை, என் மனைவியோடு தான் அனுப்பி இருக்கிறேன், சொர்க்கமோ, நரகமோ, hope you both are happy there” என்று சிரித்தான்.
இரண்டு வாரங்களுக்கு முன் -
சத்யா சென்றதும் கௌஷிக் தன் அறையில் எல்லா சுவர்களையும் ஆராய்ந்தான். கண்ணாடி பின்னால், கதவில், அலங்கார பொருட்களில், விட்டத்தின் மின்விசிறி, பாத்ரூம் என்று எல்லா இடங்களிலும் கேமராக்கள். ஷ்யாம் சுனிதாவுடன் உள்ளே வந்தான். “என்ன ஒன்று விடாமல் எல்லாவற்றையும் எடுத்து விட்டாயா? கொஞ்சம் தான் எடுத்து இருக்கிறாய், இன்னும் கேமராக்கள் இருக்கின்றன, அதுவும் ஸ்பீக்கர் வசதியுடன்” என்றான் ஷ்யாம் சிரித்துக்கொண்டே.
“ச்சீ உனக்கு வெட்கமாக இல்லையா? நான் உன் தம்பி, உன் தம்பியும் தம்பி மனைவியும் ஒன்றாக இருப்பதை....சொல்லவே அசிங்கமாக உள்ளது”
“யார் யாருக்கு தம்பி? அனாதை நாயே, காலேஜில் எல்லா பெண்களையும் நான் தான் முதலில் அனுபவிப்பேன், நீ நாய் போல் வெளியே காத்திருப்பாய், போனால் போகுது நீயும் போய் அனுபவித்துக்கொள் என்று offer செய்தால் வேண்டாம் என்று மறுத்துவிடுவாய், உன் தகுதி அறிந்து ஒதுங்கி இருக்கிறாய் என்று நினைத்து பெருமைப்படுவேன், சத்யா போன்ற அழகியை மட்டும் எனக்கு இல்லாமல் நீ அடைய முடிவு செய்தாய், அன்றே கேட்டிருப்பேன், ஆனால் சத்யா மற்ற பெண்கள் போல இல்லை, அவளை அடைய கொஞ்சம் சாமர்த்தியம் வேண்டும் என்று தான் அவளை நீ காதலிக்க அனுமதித்தேன், வீட்டிற்கு வரவழைத்து roofie கலந்து கொடுத்தேன், ஏற்கனவே கேமராக்கள் செட் செய்து வைத்திருந்தேன், முதலில் பார்த்து ரசிக்கலாம், அனாதை நாய்க்கு கொடுத்து வைத்திருக்கிறது என்று மனதை தேற்றி கொண்டேன்.
சரி மீண்டும் மீண்டும் வருவாள் என்று எதிர்பார்த்தால் அவள் வரவே இல்லை, கருமம் பிடித்தவள் கர்பம் வேறு தரித்துவிட்டாள். சரி ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவளை அடையாமல் போக மாட்டேன், உனக்கும் ஒரு போதை மருந்தை கொடுத்துவிட்டு அவளை அனுபவிக்கலாம், அது வரை வீடியோவில் ரசிக்கலாம் என்று இருந்தேன், அதற்குள் இதோ என் தர்மபத்தினி என்ன பார்க்கிறேன், porn பார்க்கிறேனா என்னவென்று துப்பு துலக்க ஆரம்பித்து விட்டாள். அதனால் தான் உனக்கு travels ஆஃபிஸில் உனக்கே தெரியாமல் அவ்வப்போது கொஞ்சம் heroin போட்டு கொடுத்தேன், சுனிதா உன்னிடம் வீடியோ விஷயத்தை சொல்வாள் என்று தெரியும், அதனால் தான் முந்திக்கொண்டு சத்யா மனதில் உன்னையும் சுனிதாவையும் தவறாக நினைக்கும் படி சந்தேக விதைகளை தூவ விட்டேன், சத்யாவிடம் உண்மையை சொன்னால் என் ஆள் ஒருவன் பட்டனை தட்டி இன்டர்நெட்டில் அவள் வீடியோக்களை பரவ விடுவான் என்று சொன்னேன், சொன்ன மாதிரியே நீயும் சுனிதாவும் கள்ள உறவு இருப்பது போலவே சத்யாவிடம் இன்று நடந்து கொண்டீர்கள், ஆனால் அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டாயே, அங்கே தான் கொஞ்சம் தவறு செய்து விட்டாய், ஹ்ம்ம் அவளை அடைய நான் இன்னும் காத்திருக்க வேண்டும் போல.
சரி அடுத்தது என்ன? ஒன்று என்னை நீங்கள் அடித்து முடமாக்கி.... அல்லது கொன்று அல்லது போலீஸ்யிடம் சென்று வீடியோக்களை அழிக்க வேண்டும், இவற்றில் நீங்கள் எது செய்தாலும் என் ஆள் ஒருவனிடம் வீடியோக்கள் இருக்கின்றன, அவன் இன்டர்நெட்டில் பரவ விட்டுக்கொண்டே இருப்பான், அப்படி இல்லை என்றால் நான் உங்களை அழிக்க வேண்டும். என்ன செய்யலாம்? ம்ம்ம் நீங்கள் சாவது தான் இதற்கு தீர்வு என்று சொல்லிக்கொண்டே கௌஷிக் பின்னால் ஷ்யாம் சென்று கைகளை அவன் கழுத்தை சுற்றி நெறித்துக்கொண்டே ஒரு கையில் ஒரு ஊசியை எடுத்து கௌஷிக் கையில் குத்தி அவனை கீழே தள்ளினான். சுனிதா அங்கிருந்து ஓடினாள். “கொஞ்ச நேரம் தான் கௌஷிக், mostly சொர்க்கம் தான் செல்வாய் என்று நினைக்கிறேன். இரு என் தர்மபத்தினியை பிடித்துக்கொண்டு வந்து உன்னுடன் துணைக்கு அனுப்புகிறேன்” என்று ஷ்யாம் இன்னொரு ஊசியுடன் சுனிதாவை தேடி போனான். கௌஷிகிற்கு கண்கள் இருட்டிக்கொண்டு சுழன்றது. மொபைலை எடுத்து சத்யாவிற்கு கால் செய்தான். சத்யா அவன் காலை கட் செய்தாள். மீண்டும் முயற்சி செய்தான். மீண்டும் மீண்டும், அவள் எடுக்கவில்லை. அறை முழுவதும் எதையோ தேடினான். பெட் பக்கத்தில் ஒரு drawer ல் இருந்த ஒரு நோட்டை எடுத்தான், திறந்து ஏதோ ஒரு பக்கத்தில் ஒரு பென்னை எடுத்து தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி எழுதினான்.
“சத்யா இந்த கடிதம் உனக்கு கிடைக்குமா தெரியவில்லை, கிடைக்கும் என்று நம்புகிறேன், ஷ்யாமை நம்பாதே, உன், நம் வீடியோக்கள் அவனிடம் உள்ளன. IAS க்கு படி, உனக்காக ஒரு நல்லவன் பிறந்து இருப்பான், அவனுடன் நீ 100 வயது வாழ வேண்டும், தருணை நன்றாக வளர்க்கவும், சத்யா என்னை மன்னித்து விடு, என்னால் உனக்கு கஷ்டங்கள் மட்டுமே கிடைத்தன, ஆனால் எனக்கு உன்னால் சந்தோஷம் மட்டுமே கிடைத்தது, என் வாழ்க்கையில் கிடைத்த வரம் நீ, என் உயிர் போகும் இந்த கடைசி நொடியில் உன் அணைப்பை மட்டும் எடுத்து செல்கிறேன்”. மீண்டும் அந்த நோட்டை மூடி drawer ல் வைத்தான். கௌஷிக் மூச்சு விட சிரமப்பட்டான். வயிற்றை புரட்டியது. தொண்டை வறண்டது. பெட் பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடிக்க முயன்றான். தண்ணீர் கொப்பளித்து வெளியே கொட்டியது. தொண்டையை அடைத்தது. 5 யுகங்கள் போன்று தோன்றிய அந்த 5 நிமிடங்கள் அவன் தவித்து உயிரை விட்டான். அவன் கண்களில் சத்யா மட்டுமே தெரிந்தாள். சத்யாவை அணைத்தபடியே அவன் நிரந்தரமாக உறங்கினான்.
அந்த மாளிகை போன்ற வீட்டில் சுனிதாவும் ஒரு அறையில் உயிரில்லாமல் கிடந்தாள்.
துணிமணிகளை எடுத்து வைக்கும் போது கீழே விழுந்த போட்டோவை சத்யா எடுத்து பார்த்தாள். சத்யாவும் கௌஷிக்கும் திருமணத்தின் போது சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம். கௌஷிக் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்தாள். “நீங்கள் என்னை உண்மையாகவே விரும்பினீர்கள் என்று நம்பினேனே, எனக்கு துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது” என்று அவன் போட்டோவை பார்த்து உடைந்து அழுதாள்.
Comments
Post a Comment