Sms ch 31 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 31
தீபிகா அம்பத்தூர் branch சென்று ஜெனியிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
“ஹலோ ஜெனி, என் பெயர் தீபிகா. R&D துறை அமைக்கும் பொறுப்பை நந்தன் எனக்கு கொடுத்துள்ளார், நந்தன் உங்களுக்கு call செய்து சொல்லி இருப்பாரே”
“Yes மேடம் சொன்னார், வாருங்கள், இந்த desk ஐ தங்களுக்காக ஒதுக்கி உள்ளேன், நீங்கள் இங்கே அமர்ந்து வேலை செய்யலாம்”
“ஓஹ் எனக்கு என்று தனி அறை, கேபின் கிடையாதா?”
“சாருக்கு மட்டும் தான் மேடம் இங்கே தனி அறை, மற்றவர்களுக்கு இந்த அலுவலக அறை தான்”
இவர்களுடன் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டுமா என்று தீபிகா தயங்கினாள். “சாரோட அறை சாவி எங்கே?”
“என்னிடம் தான் மேடம் இருக்கிறது, எதற்காக கேட்கிறீர்கள்?”
“அதை கொடுங்கள், நான் அங்கே அமர்ந்து வேலை செய்துகொள்கிறேன்”
“அது மேடம்” என்று ஜெனி தயங்கினாள்.
“சார் ஒன்றும் சொல்லமாட்டார், நீங்கள் தயங்க வேண்டிய அவசியமே இல்லை ஜெனி”
“இல்லை மேடம், சார் கோபப்படுவார்”
தீபிகா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜெனியை தனியாக ஒரு பக்கம் அழைத்து சென்று சொன்னாள். “ஜெனி உங்களுக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்கிறேன், உங்கள் வருங்கால முதலாளியே நான் தான்”
“என்ன மேடம் சொல்றீங்க? எனக்கு புரியலையே?” என்று அதிர்ச்சியும் வியப்பும் கலந்த குரலில் கேட்டாள்.
“உண்மை தான், கூடிய சீக்கிரமே எனக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க போகிறது, அப்புறம் திருமணம், இந்த branch ஐ முழுக்க முழுக்க என் பொறுப்பில் தான் நந்தன் விட எண்ணி இருக்கிறார், அதற்கு முன்னோட்டமாக தான் இந்த பயிற்சி, ஆனால் இதை பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம், தொழிலாளிகள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள் என்று எச்சரித்து இருக்கிறார், ஆனால் நீ என் வருங்கால செகரேட்டரி என்பதால் உனக்கு மட்டும் சொல்கிறேன்” என்றாள் கொஞ்சம் நாணம் கலந்த குரலில்.
“ஓஹ் வாழ்த்துக்கள் மேடம்”
“ஷ்ஷ்ஷ்.........இப்போதைக்கு இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்”
“ok மேடம் sure”
“இப்போது அந்த அறையில் நான் வேலை செய்யலாமா? இல்லை என்னை இங்கேயே தான் உட்கார வைக்க போகிறாயா?”
“சார் எதுவும் கேட்டால்?” என்று ஜெனி தயங்கினாள்.
“அவர் என்ன சொல்லப்போகிறார்? தன் வருங்கால மனைவிக்கு இல்லாத உரிமையா என்று கோபப்படுவார், இருந்தாலும் நீ ரொம்பவே பயப்படுகிறாய், அதனால் உன் திருப்திக்காக நான் அவரிடம் நீ அளித்த desk ல் work செய்வது போலவே காட்டிக்கொள்கிறேன், உனக்காக, போதுமா? அவரிடம் அந்த அறையில் work செய்தேன் என்பது போல் காட்டிக்கொள்ள மாட்டேன், நீயும் காட்டிகொள்ளாதே, சரி தானே?”
“ஆனால் சார் திடீர் திடீரென்று வருவாரு மேடம், அப்போது பார்த்துவிட்டால்...”
“அட அசட்டு பெண்ணே, என்ன செகரேட்டரி நீ? அவர் அம்மாவுக்கு heart attack, இரண்டு வாரங்களுக்கு அவர் அம்மாவை விட்டு நகர மாட்டார், தெரியுமா, தெரியாதா?”
“தெரியும், ஆனால் நீங்கள் சார் கோபப்பட்டு பார்த்து இருக்கிறீர்களா மேடம்? பயங்கரமாக கோபப்படுவார்”
“என்னிடம் என்று அவர் கோபப்பட்டு இருக்கிறார் அவர் கோபத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு, சரி உன் இஷ்டப்படி இங்கயே உட்கார்ந்து வேலை செய்கிறேன், ஆனால் ஒரு சில meeting கு மட்டுமாவது அந்த அறையை திறந்து விடுவாய் அல்லவா? என்னுடைய தோழி வேறு ஒருத்தி, ஏதாவது செகரட்டரி வேலையாவது போட்டு கொடு என்று என்னை கெஞ்சிக்கொண்டு இருக்கிறாள், பேசாமல் உன்னை replace செய்து விட்டால் என்ன?” என்று கண்ணை சிமிட்டி கேட்டுவிட்டு சிரித்தாள் தீபிகா. “ஹேய் பயப்படாதே, I was just joking” என்றாள்.
“Meeting கு திறந்து விடுகிறேன் மேடம், சாரிடம் மட்டும் சொல்லாதீர்கள்”
“No worries மா, மதியம் என்னோடு லஞ்ச் கு வா, என்னுடைய treat” என்று தனக்கு ஒதுக்கப்பட்ட desk ல் அமர்ந்தாள் தீபிகா.
அன்று மதியம் ஜெனியை கொஞ்சம் expensive ரெஸ்டாராண்டிற்கு தீபிகா அழைத்து சென்றாள். கொஞ்ச நேரம் ஜெனியை பற்றியும் அவள் குடும்ப நிலையை பற்றியும் பேச்சுவாக்கில் கேட்டு தெரிந்து கொண்டாள். “உனக்கு சம்பளம் கம்மியா இருக்கே ஜெனி”
“இல்லை மேடம், என் பொசிஷனுக்கு நல்ல சம்பளம் தான் மேடம்”
“No no you deserve more, எனக்கும் நந்தனுக்கும் திருமணம் ஆகி நான் இந்த கிளையை take over செய்ததும் முதல் வேலை உனக்கு சம்பளத்தை உயர்த்துவது தான்”
ஜெனி எதுவும் பதில் சொல்லவில்லை.
“சரி இங்கே சத்யா யார்?”
“Spinning mill ல் வேலை செய்யும் சத்யாவா மேடம்?”
“ஆம் அவள் தான் என்று நினைக்கிறேன், வேறு யாராவது சத்யா என்ற பெயரில் இருக்கிறார்களா?”
“இல்லை மேடம், அந்த ஒரு சத்யா தான், ஆனால் எடுத்ததுமே சத்யா யார் என்று கேட்டீர்களா? அதனால் உறுதி செய்து கொள்வதற்காக கேட்டேன்”
“ம்ம்ம் நந்தன் அவளுடன் நெருங்கி பழகுவதாக கேள்வி பட்டேன், அதிலிருந்து மனசே சரி இல்லை ஜெனி, உன்னிடம் சொல்வதற்கென்ன? நாம் தான் friends ஆகி விட்டோமே, நந்தன் பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி தான், ஆனால் என்னை காதலிக்க ஆரம்பித்த பின் முடிந்த அளவு பெண்களை பார்க்காமல் இருக்கிறார், ஆனால் இந்த சத்யா மட்டும் அடிக்கடி அவர் வழியில் குறுக்கிடுகிறாள், உனக்கு ஏதாவது தெரியுமா?”
“ஆமாம் மேடம், சார் அந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் close தான்”
“பாத்தியா? உனக்கே தெரிஞ்சு இருக்கு”
“எந்த அளவுக்கு close?”
“நான் இதை பற்றி அதிகமாக யோசித்தது இல்லை மேடம், ஆனால் இப்போது நீங்கள் கேட்கும் போது யோசித்து பார்க்கிறேன், ஒருமுறை அந்த பெண் மயங்கி விழுந்து விட்டாளாம், சார் தான் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அருகிலேயே இருந்து கவனித்து கொண்டாராம், அதே மாதிரி dyeing பிரிவில் மணிமாறனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஏதோ பிரச்சனை போல, அப்பவும் அந்த பொண்ணு மேல நடவடிக்கை எடுக்காம மணிமாறன் மேல மட்டும் நடவடிக்கை எடுத்தாரு, 10 நாளைக்கு முன்னாடி கூட சார் வேலைல இருந்து சீக்கிரம் கிளம்பி அந்த பொண்ண அவரோட கார்ல கூட்டிட்டு போனாரு, அத நானே பார்த்தேன்.
சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க மேடம், அன்னைக்கு சார் காலைல வேலைக்கு வரும் போது நார்மலா எப்போதும் போல தான் வந்தாரு, ஆனா 3 மணிக்கு கிளம்புறேன்னு என்கிட்ட கூப்பிட்டு சில பணிகளை முடிக்கும் படி உத்தரவிட்டார், அப்போது இடையில் restroom சென்று face wash பண்ணி, perfume எல்லாம் போட்டு, தலையை நிமிஷத்துக்கு ஒருமுறை கோதி விட்டுக்கொண்டு, coolers போட்டுகொண்டு, தன் உடை சரியாக இருக்கிறதா என்று check செய்து கொண்டு, அவர் அறையில் இருக்கும் கண்ணாடியில் நான்கு ஐந்து முறை பார்த்துக்கொண்டு, ரொம்ப ஹாப்பியா இருந்தாரு மேடம், நான் சாரை work time ல அப்படி குதூகலமாக பார்த்ததே இல்லை, என்ன விஷயம் என்று புரியாமல் இருந்தேன். அவர் ஆபீஸ் ரூமில் இருந்து புறப்பட்டு ஒரு 10 நிமிடங்கள் ஆகி இருக்கும், கேன்டீன் போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்று சென்றேன், அப்போது தான் கார் பார்க்கில் அவர் சத்யாவிற்கு காத்திருந்து அழைத்து செல்வதை பார்த்தேன் மேடம்.
தீபிகாவிற்கு கண்கள் சிவந்தன. அன்று தானே அவள் நினைப்பில் என்னை மறைந்தாய் என்று புகைந்தாள். ஏதோ friend ஆக மட்டும் தான் இருப்பாள் என்று நினைத்து வந்தேன், ஆனால் அவளுக்காக டிப் டாப்பா கிளம்புறான்னா என்ன அர்த்தம்? சத்யா வீட்டிற்கு சென்று அவள் மகனுடன் நேரம் செலவழித்தேன் என்று சொன்னானே, எனக்கென்னவோ அவளுடன் தான் இவன் நேரம் செலவழித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, அவள் மகனுடன் நேரம் செலவழிக்க perfume, coolers எல்லாம் எதற்கு? இவனை திருமணம் செய்தால் எல்லா விஷயத்திலும் வசதியாக இருக்கும் என்று பார்த்தால் முடியாது போலவே என்று பலவாறு யோசித்து குழம்பிகொண்டிருந்தாள்.
“ஜெனி இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம், ப்ளீஸ், நந்தன் நல்லவர் தான், அன்று சத்யா வீட்டிற்கு தான் சென்றிருந்தார், என்னிடம் கூட சொன்னார், அவர் இப்போதெல்லாம் திருந்திவிட்டார், இருந்தாலும் அந்த பெண்ணின் மனதில் வீணாக எதுவும் ஆசை வரக்கூடாது இல்லையா? சரி வா நாம் கிளம்புவோம்”
தீபிகா ஜெனியுடன் கம்பெனிக்கு வந்த பிறகு சிறிது நேரம் வேலை செய்துவிட்டு சத்யாவை தனக்கு காண்பிக்குமாறு ஜெனியிடம் கேட்டாள். ஜெனியும் தொலைவில் இருந்து காண்பித்தாள். ஜெனியை திருப்பி அனுப்பிவிட்டு spinning mill ஐ மேற்பார்வை இடுவது போல் சத்யா அருகே வந்து அவள் அறியாமல் மேலும் கீழும் ஏற இறங்க பார்த்தாள். “pfff இவளையா எனக்கு போட்டியாக நினைத்தேன்? கண்டிப்பாக நந்தனுக்கு இவள் மேல் எல்லாம் ஆசை இருக்காது, இவள் மகனுடன் தான் நேரம் செலவழிக்க போய் இருப்பான்” என்று மனதிற்குள் நினைத்தவள் “சத்யா???” என்றாள்.
திரும்பி பார்த்த சத்யா “சொல்லுங்க மேடம், நான் தான் சத்யா” என்றாள்.
“Hi சத்யா, என் பெயர் தீபிகா, நான் நந்தனுக்கு நெருங்கிய உறவு, நந்தன் வீட்டில் தான் தங்கியுள்ளேன், இங்கே R&D துரையின் தலைமை பொறுப்பை நந்தன் எனக்கு அளித்துள்ளார்”
“ஓஹ் உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி மேடம், என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”
“நந்தன் உன்னை பற்றி பேசி இருக்கிறார், அதனால் தான் நான் என்னை உன்னிடம் அறிமுகப்படுத்தி கொண்டேன்”
“சார் என்னைப்பற்றி உங்களிடம் பேசினாரா?”
“ஆமாம் சத்யா, வாயேன் கேன்டீனில் போய் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்”
“இல்லை மேடம் நான் ஏற்கனவே என்னோட break எடுத்துட்டேன்”
“அதனால் என்ன? யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள், அப்படியே சொன்னாலும் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ வா..... “
“இல்லை மேடம், யாரும் கேட்கவில்லை என்றாலும் எனக்கு அளிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நான் break எடுப்பதில்லை”
“ஹாஹா நந்தன் அழைத்து இருந்தால் permission எடுத்து அவர் பின்னாலேயே சென்றிருப்பாய்”
சத்யாவிற்கு முகம் சுருங்கியது. தீபிகாவே தொடர்ந்தாள் “தவறாக எடுத்துக்கொள்ளாதே சத்யா, நந்தன் சொன்னார், நான் அழைத்தால் சத்யா வந்துவிடுவாள் என்று, அன்று கூட உன் வீட்டில் தான் நெறைய நேரம் செலவழித்தாராமே, நந்தனுக்கு உன்னை போன்ற அப்பாவி பெண்களை பிடிக்கும், ஈஸியாக வலையில் மாட்டி கொள்வீர்களே, அதனால்”.
“மேடம் நீங்கள் ஏதோ என்னை பற்றி தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்”
“ஓஹ் அப்படி என்றால் நீ அப்பாவி இல்லை என்கிறாயா?”
“மேடம் ப்ளீஸ் வேலை சம்மந்தமாக ஏதாவது பேசுவதென்றால் சொல்லுங்கள், பேசலாம், அனாவசியமாக என் நேரத்தை வீணாக்காதீர்கள்”
“வீணாக்க எனக்கும் விருப்பம் இல்லை சத்யா” என்று சுற்றும் முற்றும் பார்த்த தீபிகா பேசுவது அடுத்தவர் காதில் விழும் அளவிற்கு பக்கத்தில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு “உனக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லலாம் என்று தான் வந்தேன், நந்தன் பெண்கள் இடத்தில் கொஞ்சம் weak, அவரை திருத்தும் முயற்சியில் தான் அவருடைய பெற்றோர் எனக்கும் அவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள், இடையில் உன் பேர் அடிபட்டது, நீ வேறு கணவன் இல்லாமல் இருக்கிறாய், நந்தனை நம்பி ஏமாந்து விடாதே என்று உன்னை எச்சரிக்க தான் வந்தேன்.”
இன்னும் அருகில் வந்து மெதுவாக சொன்னாள் “ஏன் என்றால் ஒரு பெண்ணை target செய்து விட்டால் அவளை அடைவதற்காக நந்தன் நெறைய விஷயங்கள் செய்வார், அவரை போல நல்லவனை பார்க்கவே முடியாது என்று தோன்றும், பெண்களின் குறைகளை பொருட்படுத்தாமல் gentleman போல வலம் வருவார், அதனாலயே நெறைய பெண்கள் அவரிடத்தில் விழுந்து விடுவார்கள், நம் காயத்திற்கு எல்லாம் மருந்து போடும் மருத்துவர் மாதிரி வலம் வருவார், ஆனால் இதெல்லாம் படுக்கையில் உன்னை வீழ்த்தும் வரை தான், அதன் பிறகு காகிதம் போல் துடைத்து தூக்கி எரிந்து விடுவார், என்னையும் கூட லண்டனில் அப்படி தான், என் காயங்களுக்கு மருந்து போடுபவர் போல பேசினார், ஆனால் எல்லாவற்றையும் அனுபவித்து ஏமாற்றி விட்டார்” என்று கண்ணீர் சிந்தினாள்.
“அப்படி என்ன ஒரு ஆணுக்கு திமிர்? பெண்கள் என்றால் அவ்வளவு மட்டமா? Sex காக சிரித்து பேசி, அவர்களின் வலி வேதனைகளுக்கு மருந்து போடுவது போல் நடித்து பின் கட்டிலில் எல்லாம் அனுபவித்த பிறகு தூக்கி போடுவதற்கு? இவரை நம்பி நான் என் காதலனை தொலைத்தேன். இத்தனை வருடங்களாக எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க தேடினேன், பிறகு தான் தெரிந்தது, அவர் என் தங்கை கணவரின் அண்ணன் என்று, நியாயம் கேட்க வந்தேன், அப்போது தான் அவர் பெற்றோர் எனக்கும் அவருக்கும் திருமணம் செய்ய விருப்ப படுகிறார்கள் என்று அறிந்தேன், இப்போதெல்லாம் வேறு பெண்களை அவர் பார்ப்பதில்லை, ஆனால் உன்னை பற்றி சொன்னார், உன்னை காப்பாற்றவே இதை எல்லாம் சொல்கிறேன், வீணாக நான் சொன்னவற்றை பற்றி நந்தனிடம் பேசி அவர் பெற்றோர் முயற்சியில் மண் அள்ளி போட்டு விடாதே, பாவம் அவர் தாய் heart attack வந்து படுத்து இருக்கிறார்கள், அவருக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள், நீ அவரிடம் இதை பற்றி பேசினால் அவர் வீட்டில் எதிரொலிக்கும், வீணாக அவர் தாயின் உடல்நிலை தான் கெடும், புரிந்து நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன், நான் வருகிறேன்”என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு தீபிகா விலகி நடந்தாள்.
சத்யாவிற்கு அவளின் கண்ணீர் இரக்கத்தை ஏற்படுத்தியது. “ஆனால் இவள் யார்? இவள் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது? நம் வீட்டிற்கு நந்தன் வந்ததை அவளிடம் பகிரும் அளவிற்கு அவள் அவருக்கு உரிமை உள்ளவளாக இருக்கிறாள். நந்தன் கூட நான் விரும்பும் பெண்களை எப்படி அடைய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொன்னாரே ஒருமுறை. ஒருவேளை அவர் என்னிடம் பழக காரணம்? அதற்காக தானா? ச்ச ச்ச அப்படி எல்லாம் இருக்காது. நம் விஷயத்தில் நல்லவர் என்றே வைத்துக்கொண்டாலும் மற்ற பெண்கள் விஷயத்தில் அவர் நடந்து கொள்வது நியாயமா? ஆனால் இவள் சொல்வதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியுமா? நான் ஏன் இவ்வளவு குழப்பிக்கொள்ள வேண்டும்? நான் என்ன அவர் மனைவியா அவர் கேரக்டர் பற்றி கவலைப்பட. நட்பாக பழகுவதற்கு கூட நல்ல குணம் அவசியம் இல்லையா? மற்ற பெண்கள் இடத்தில் தவறான எண்ணம் கொண்டவரோடு நட்பு பாராட்டுவது சரியான விஷயமா?” இப்படி பல குழப்பங்களுடன் சத்யாவின் அந்த மாலை பொழுது சென்றது.
Comments
Post a Comment