Sms ch 32 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 32

சத்யா இரண்டு மூன்று நாட்களாக தீபிகா சொன்ன விஷயங்களை போட்டு குழப்பிக்கொண்டாள். இப்படி குழப்பிக்கொள்வதால் தனக்கு எந்த லாபமும் இல்லை, யார் எப்படி இருந்தால் நமக்கு என்ன என்று படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். படிக்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில் மீண்டும் நந்தனின் நினைவு நந்தனை பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது, பேசி 4 நாட்கள் ஆகிவிட்டது. நல்லது தான், அவரை பார்த்தால் பேசினால் தீபிகா சொன்ன விஷயங்கள் தான் நினைவுக்கு வரும். ஒரு வழியாக குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ளோம், அவர் நம் கண்ணில் கருத்தில் படாமல் இருந்தால் போதும், நமக்கு படிப்பு தான் முக்கியம்.”

 

மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் தீபிகாவின் நினைவு ஆனால் தீபிகா பாவம், இவர் அழகாக பேசி அந்த பெண்ணை தன் வலையில் விழ வைத்திருப்பார் போல. இவர் வசீகரமாக பேசுவதில் வல்லவர் தான். ஒரு பெண்ணின் வலி இன்னொரு பெண்ணுக்கு புரியவில்லை என்றால் என்ன மனிதர்கள் நாம், நந்தனை பார்த்தால் நன்றாக நாலு வார்த்தை கேட்க வேண்டும், சரி அது பார்க்கும் போது கேட்டுக்கொள்ளலாம், இப்போது படிக்கலாம்என்று மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

 

தொண்டை வறண்டது. “ஒரு எலுமிச்சம் பழம் ஜூஸ் குடித்தால் என்ன? போன வாரம் ஜூஸ் நன்றாக இருக்கிறது என்று ரசித்து குடித்தான். ஷ்யாம் தான் கௌஷிக்கை கொலை செய்திருக்க வேண்டும் என்று சொன்னான். பாவம் அதற்குள் அவன் அம்மா heart attack பற்றி கேள்விப்பட்டு எப்படி அவன் முகம் வெளுத்து போனது, அம்மா என்றால் ரொம்ப பிடிக்கும் போல. ஹ்ம்ம் எந்த பந்தாவும் இல்லாமல் நன்றாக தானே பழகுகிறான். தோசைக்கு சட்னி கிடைக்குமா என்று கேட்டான், அரைத்து கொடுத்து இருக்கலாம், வெறும் பொடியும் நல்லெண்ணெயும் கொடுத்ததோடு நிறுத்திக்கொண்டேன். அடுத்த முறை வரும் போது இரண்டு சட்னியோடு தோசை சுட்டு கொடுத்தால் என்ன? ச்ச மீண்டும் மீண்டும் ஏன் என் நினைவெல்லாம் அவனையே சுற்றி வருகின்றது.

 

எனக்கு கொஞ்சம் கூட வைராக்கியம் இல்லை, முதலில் கௌஷிக் மேல் இருந்த காதலால் என் படிப்பில் தடை ஏற்பட்டது, இப்போது படிக்கலாம் என்று புத்தகத்தை எடுத்தால் கண்டதை யோசித்து என் நேரத்தை வீணாக்கி கொள்கிறேன். இப்போது தோசைக்கு சட்னி ஒன்று தான் கேடு, படிடி சத்யா என்று தன்னை தானே உரக்க விரட்டினாள் சத்யா.

 

அவள் மீண்டும் புத்தகத்தில் கவனம் செலுத்திய அடுத்த நொடி அவளுக்கு நந்தனிடம் இருந்து call வந்தது. மொபைலை ஏதோ தீண்டத்தகாத பொருளை போல் எட்ட எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு ரிங் முழுவதும் முடிந்தது. “ஸ்ஸ்ஸப்பா cut ஆகிவிட்டதுஎன்று பெருமூச்சு விட்டவளாய் மறுபடியும் புத்தகத்தில் பார்வையை ஓட்டினாள். அடுத்த நிமிடம் மீண்டும் நந்தனிடம் இருந்து call. “கடவுளே நீயே சீக்கிரம் cut பண்ணிடு, என்னால் அவரிடம் இயல்பாக பேச முடியாது, ஏடாகூடமாக பேசி தீபிகா விஷயத்தை கேட்டாலும் கேட்டு விடுவேன், அதனால் நீயே இந்த call cut பண்ணிவிடுசில நொடிகளில் அந்த call missed call ஆனது.

 

 மீண்டும் மொபைலையே வெறித்துக்கொண்டிருந்தாள். மறுபடியும் call செய்தாலும் செய்வான் என்று. ஆனால் அந்த இரண்டு call களுக்கு பிறகு அவனிடம் இருந்து call எதுவும் வரவில்லை. அது ஏமாற்றத்தை தந்ததா இல்லை நிம்மதியை தந்ததா என்று சத்யாவிற்கு புரியவில்லை, புரிந்து கொள்ளவும் அவள் முயற்சி செய்யவில்லை. தருண் வள்ளி அக்கா வீட்டில் விளையாட மீதி இருந்த நாள் முழுக்க படிப்பிலேயே கவனமாக இருந்தாள் சத்யா.

 

மறுநாள் சத்யா வேலைக்கு சென்றாள். தீபிகாவின் தரிசனம் சத்யாவிற்கு பழக்கமாகி விட்டது. அந்த ஒரு நாளைக்கு பிறகு அவள் சத்யாவிடம் பேசவில்லை என்றாலும் அவர் முன்னால் வருவதும் போவதும் சில சமயம் சோகமாக இருப்பதும், ஒரு சில சமயம் சத்யாவை முறைப்பதும் என்று வெவ்வேறு தரிசனங்கள். ஆனால் முடிந்த வரை அவற்றை பொருட்படுத்தாமல் இருக்க சத்யா பழகி கொண்டிருந்தாள்.

 

அன்று மாலையும் 7 மணி போல நந்தனிடம் இருந்து வீடியோ call வந்தது. சத்யா எடுக்கவில்லை. அடுத்த நிமிடம் ஒரு மெசேஜ் வந்தது. “தருணை பார்க்க வேண்டும், call attend செய்யவும்என்று. சிறிது நேரத்தில் நந்தன் மீண்டும் வீடியோ call செய்ய சத்யா அதை சட்டென்று தான் வீடியோவில் வராதவாறு on செய்து வேகமாக தருண் கையில் கொடுத்துவிட்டு அடுப்படியில் சென்று சுவரை ஒட்டி மறைந்து நின்றாள்.

 

“Hi தருண், எப்படி இருக்க?” என்றான் நந்தன்.

 

நல்லா இருக்கேன் அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க?”

 

நல்லா இருக்கேன், என்ன பண்ற?”

 

ஹோம் work பண்றேன் அங்கிள், நீங்க என்ன பண்றீங்க?”

 

நானும் ஹோம் work தான் பண்ணிட்டு இருந்தேன், இப்போ தான் break எடுத்தேன்

 

நீங்களும் ஹோம் work செய்வீங்களா?”

 

ஆமாம் எல்லோருமே ஹோம் work செய்ய வேண்டும்என்றான் புன்னகையுடன்.

 

நீங்க ஏன் அங்கிள் வரல

 

என் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லடா, அதான், அம்மாவுக்கு உடம்பு சரி இல்லன்னா நாம தான பாத்துக்கணும், அதான் என் அம்மாவை பாத்துக்கறதுக்காக பக்கத்துலயே இருக்கேன்

 

ஓஹோ சரி அங்கிள்

 

சரி நீ சாப்பிட்டியா?”

 

இன்னும் இல்லை அங்கிள், அம்மா எனக்கு இட்லி ஊத்தி தரேன் சொன்னாங்க

 

ஓஹோ சரி அம்மாகிட்ட குடு

 

இதை கேட்டதும் சத்யா பதட்டமாக அடுப்படியில் இருந்து தருணை எட்டி பார்த்து அம்மா இங்க இல்லன்னு சொல்லு என்று மெதுவாக சைகை மூலம் சொன்னாள்.

 

அவள் மறைந்து கொண்டு சொன்ன விதத்தில் தருண் சிரித்துக்கொண்டே அம்மா அடுப்படியில மறைஞ்சுக்கிட்டு அவங்க இங்க இல்லன்னு சொல்ல சொல்றாங்க அங்கிள்என்று கிளுகிளுவென்று சிரித்தான்.

 

ஐயோ......” என்று சத்யா தலையில் அடித்துக்கொண்டாள்.

 

அம்மா கண்ணாமூச்சி விளையாடுறாங்களா? சரி நான் அவங்கள கூடிய சீக்கிரத்துல நேர்லயே பாத்துக்கிறேன் சொல்லு, இப்போ அங்கிள் வச்சிடட்டுமா? நீ சமத்தா சாப்பிட்டு படித்துவிட்டு தூங்கு, சரியா?” என்று சொல்ல தருண் சரி அங்கிள்என்று பதில் சொல்ல நந்தன் call cut செய்தான்.

 

அவன் call cut செய்ததும் சத்யா தருணை ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுப்படியில் வேலையை தொடங்கினாள்.

 

இரண்டு வாரங்களாக கமலா அம்மா உடல்நிலை தேறினார்கள். மீண்டும் ஒரு check up செய்துவிட்டு எல்லாம் நலம், ஆனால் எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்ற டாக்டரின் எச்சரிக்கையுடன் வீட்டிற்கு திரும்பி வந்தார்கள். நந்தன் அன்று மாலை அமைந்தகரை புறப்பட்டான், நல்ல மழையாக இருந்தது.

 

நந்தன் தருண் பள்ளிக்கு சென்றான். அங்கே மழையில் விளையாடியபடி தருணும் சின்னுவும் இருந்தனர். நந்தன் அவர்களை காரில் அழைத்து வந்து சின்னுவை பாட்டி வீட்டில் இறக்கி விட்டுவிட்டு தருணை வீட்டிற்கு அழைத்து வந்து துண்டால் தலை துவட்டி நனைந்த யூனிபோர்ம் கலைந்து விட்டு வேறு ஆடை மாற்றி விட்டான். அன்று அவன் இறக்கி வைத்த cardboard box ல் இருந்து சில புத்தகங்கள் ஜன்னல் அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில புத்தகங்களும் நோட்டுக்களும் தரையில் பரவி இருந்தன. சில cardboard box லேயே இருந்தன.

 

அங்கிள் நான் உங்களுக்கு ஒன்னு காமிக்கட்டுமா?” என்று தருண் ஆர்வமாக அந்த cardboard box ல் சில நோட்டுக்களை எடுத்து பிரித்து தேடினான். “ஹ்ம்ம் இதுல இல்லை, இதுலயும் இல்லைஎன்று ஒவ்வொன்றாக தேடிய நோட்டுக்களை கட்டிலில் வைத்தான். “என்ன தேடுற?” என்று நந்தன் கேட்க இருங்க அங்கிள் நான் காமிக்கிறேன்என்று மீண்டும் தேடினான்.

 

இதோ கிடைச்சிடுச்சுஎன்று ஒரு நோட்டையும் அதில் இருந்த சில போட்டோக்களில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நந்தன் அருகில் கட்டிலில் வந்து அமர்ந்தான். “இங்க பாத்தீங்களா அங்கிள், இது தான் அம்மாவும் அப்பாவும்என்று காண்பித்தான்.

 

சத்யாவும் கௌஷிக்கும் மணக்கோலத்தில் இருந்த போட்டோ. “அம்மா அழகா இருக்காங்க இல்லை அங்கிள், அப்பாவும் உங்களை மாதிரியே heighta ஹீரோ மாதிரி இருக்காருல்ல அங்கிள்?” என்று பெருமையாக காண்பித்து கேட்டான்.

 

நந்தன் ஒரு புன்னகையுடன் ஆமாம் என்பது போல் தலை ஆட்டினான். கௌஷிக் height ஆக தான் இருந்தான். Height க்கு ஏற்றாற்போல fit ஆகவும் இருந்தான். சத்யாவை அணைத்த வண்ணம் பெருமை முகத்தில் நிரம்ப நின்றிருந்தான் கௌஷிக். அவன் நெஞ்சில் சாய்ந்து அவனை அணைத்த வண்ணம் மாலையும் கழுத்துமாக, இளமையும், அதற்கே உரிதான ஒரு அறியாமையும், பூரிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த முழுமதியாக சத்யா நின்றிருந்தாள்.

 

ச்ச என்ன ஒரு ஜோடி பொருத்தம்? இப்போது இதில் கௌஷிக் உயிரோடு இல்லையேஎன்று பரிதாபப்பட்டான். “சத்யா முகத்தில் அதே அறியாமை மட்டும் இருக்கிறது. ஆனால் அப்போது இருந்த மகிழ்ச்சி, பூரிப்புக்கு பதிலாக முகத்தில் எப்போதும் ஒரு சோகம், சந்தேகம், வருத்தம் இழையோடிக் கொண்டிருக்கிறதுஎன்று நினைத்தான் நந்தன். தருண் மீண்டும் அந்த போட்டோவை வாங்கி தன் தந்தையை தடவி பார்த்தான். “நானும் அப்பா மாதிரியே height வருவேனா அங்கிள்என்றான். நந்தன் ஆமாம் அப்பா மாதிரியே height strong வருவஎன்று அவன் தலையை கோதி விட்டான். பக்கத்தில் இருந்த நோட் ஒன்றை புரட்டினான் நந்தன். அதில் சத்யா ஏதோ கௌஷிக்குடன் சந்தோஷமாக வாழ்ந்த நிமிடங்களை பற்றி எழுதி இருந்தாள். அதை படிக்கக்கூடாது என்று எண்ணி அதை வேறு பக்கத்திற்கு தன்னிச்சையாக திருப்பும் போது ஒரு பக்கத்தின் எழுத்துக்கள் மட்டும் அவன் கண்ணில் பட்டு அவனை படிக்க தூண்டின.

 

“சத்யா இந்த கடிதம் உனக்கு கிடைக்குமா தெரியவில்லை, கிடைக்கும் என்று நம்புகிறேன், ஷ்யாமை நம்பாதே, உன், நம் வீடியோக்கள் அவனிடம் உள்ளன. IAS க்கு படி, உனக்காக ஒரு நல்லவன் பிறந்து இருப்பான், அவனுடன் நீ 100 வயது வாழ வேண்டும், தருணை நன்றாக வளர்க்கவும், சத்யா என்னை மன்னித்து விடு, என்னால் உனக்கு கஷ்டங்கள் மட்டுமே கிடைத்தன, ஆனால் எனக்கு உன்னால் சந்தோஷம் மட்டுமே கிடைத்தது, என் வாழ்க்கையில் கிடைத்த வரம் நீ, என் உயிர் போகும் இந்த கடைசி நொடியில் உன் அணைப்பை மட்டும் எடுத்து செல்கிறேன்

 

முழுவதுமாக படித்த நந்தனுக்கு அந்த மழை பொழிந்து குளிராக இருந்த மாலை வேலையிலும் வியர்த்தது. இதை கௌஷிக் எழுதி இருக்க வேண்டும். அந்த நோட்டை மூடியவன் கையில் அந்த நோட்டை வைத்துக்கொண்டே கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தான். அப்போது அந்த நோட்டை யாரோ வேகமாக அவன் கையில் இருந்து பறித்தார்கள். கண்ணை திறந்தான். எதிரே சத்யா மழையில் முழுக்க நனைந்தவளாய் தலை முடியிலும், முகத்திலும், சேலையிலும் தண்ணீர் சொட்ட சொட்ட நின்றிருந்தாள்.

 

நந்தன் “sorry....” என்று ஏதோ சொல்ல முயல ஆனால் அதற்கு மேல் வார்த்தை கிடைக்காமல் யோசித்துக்கொண்டு நின்றிருந்தான்.

 

வெடுக்கென்று பிடுங்கி விட்டோமே என்று உணர்ந்தவள் இது கௌஷிக்குடன் நான் சந்தோஷமாக வாழ்ந்த போது அவ்வப்போது அதை பற்றி எழுதி வைத்த நோட். இதை யாராவது எடுத்தாலோ படித்தாலோ என்னையும் அறியாமல் கோபம் வந்துவிடும், நானே இதை எடுத்து படிப்பதில்லை, மனசுக்கு கஷ்டமாக இருக்கும் என்று, அதனால் தான் உங்கள் கையில் பார்த்ததும் பதட்டத்தில் வேகமாக பிடுங்கிவிட்டேன்என்று அந்த நோட்டை எடுத்து பீரோவில் வைத்தாள்.

 

நீங்கள் அதில் ஏதாவது படித்தீர்களா?” என்று தலையை குனிந்தபடியே கேட்டுவிட்டு அவனை லேசாக நிமிர்ந்து பார்த்தாள். நந்தன் கவலை நிறைந்த முகத்துடன் இல்லைஎன்று தலை அசைத்தான். ஒரு பெருமூச்சு ஒன்று அவளிடம் இருந்து வந்தது. ஆனால் அவன் முகத்தில் இருந்த கவலை அவளை பாதித்தது. வெடுக்கென்று பிடுங்கிவிட்டதால் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது போல என்று மனதில் நினைத்தாள்.

 

நந்தன் வெளியேற எத்தனித்தான்.

 

இருங்க, நோட்டை பிடுங்கியதால் என்மீது கோபமா?” என்றாள்.

 

நந்தன் திரும்பி அவள் பாவமாக நிற்பதை பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் கோபம் எல்லாம் ஒன்றும் இல்லை, நான் கார்ல wait பண்றேன், நீ dress மாத்திக்கோஎன்று சொல்லிவிட்டு மீண்டும் வெளியே போக திரும்பினான்.

 

இல்லை நான் பாத்ரூமில் மாற்றிக்கொள்கிறேன், நீங்கள் தருணுடன் பேசிக்கொண்டு இருங்கள்என்று தனக்கு தேவையான உடைகளை பீரோவில் இருந்து எடுத்த படியே கூறினாள். நந்தனும் சிறு தயக்கத்துடன் தருணுடன் கட்டிலில் அமர்ந்தான். அவள் சொல்லிவிட்டு தன் உடைகளுடன் அடுப்படியில் இருந்த பின்புற கதவை திறந்து அங்கே இருந்த பாத்ரூம் சென்றாள்.  தருண் இன்னமும் தன் தாய் தந்தையின் போட்டோவை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

நந்தன் அந்த கடிதத்தையே நினைத்து கொண்டிருந்தான். ஷ்யாமை நம்பாதே, நம் வீடியோக்கள் அவனிடம் உள்ளன, நீ IAS படிக்க வேண்டும், தருணை பார்த்துக்கொள், நல்லவர் ஒருவரை திருமணம் செய்து கொள், என்னால் உனக்கு கஷ்டங்கள் தான், நீ எனக்கு கிடைத்த வரம், எல்லாமே மறுபடியும் மறுபடியும் நந்தனின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தன. கண்டிப்பாக கௌஷிக் தான் எழுதி இருக்க வேண்டும், அதுவும் அவர் உயிர் போகும் கடைசி நொடியில் எழுதி இருக்க வேண்டும். இதை சத்யா படித்தாளா? படித்து இருந்தால் அன்று நாம் ஷ்யாம் பற்றி பேசும் போது சொல்லி இருப்பாளே. அவளிடம் இதை பற்றி பேசலாமா, வேண்டாமா? ஒருவேளை இதுவரை அவள் இதை படித்திருக்கவில்லை என்றால் இதை முதன்முறையாக படிக்கும் போது அவள் மனநிலை எப்படி இருக்கும்? என்று பலவிதமான தீவிர யோசனையில் இருந்தான் நந்தன்.

 

இதற்கிடையில் தோட்டத்து பாத்ரூமில் ஒரு காட்டன் சேலையை கட்டிக்கொண்டு ஈர தலையை துண்டால் சுற்றி கொண்டை ஒன்றை போட்டுக்கொண்டு சத்யா ஒரு பழைய துணியை எடுத்து வந்து படுக்கை அறையில் தன் சேலையில் இருந்து சொட்டிய நீரை, ஈரத்தை துடைத்து எடுத்தாள். நோட்டை பிடுங்கியதால் இப்படி இருக்கிறானா? ஏதோ யோசனையிலேயே இருப்பது போல் தெரிகிறதே. தருணுடன் கூட பேசாமல் ஏதோ யோசித்து கொண்டிருக்கிறானே? இவனிடம் தீபிகா விஷயம் எல்லாம் கேட்டால் வீணாக மனக்கசப்பு தான் ஏற்படும் என்று நினைத்தவள் அவன் தலையும் லேசாக ஈரமாக இருப்பதை உணர்ந்தாள். இன்னொரு துண்டை எடுத்து அவனிடம் கொடுத்து உங்கள் தலை கூட ஈரமாக இருக்கிறதே, துடைத்து கொள்ளுங்கள் என்றாள். அப்போதும் அவன் இயந்திர தனமாக வாங்கி துடைத்துக்கொண்டான். இதுவரை சத்யாவை அவன் ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. சத்யா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நாம் அன்று வீடியோ call வரவில்லை என்று கோபமாக இருக்கிறானா என்று நினைத்தப்படியே சுக்கு மல்லி காப்பி ஒன்றை போட்டு அவனுக்கும் தருணுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்தாள்.

 

இப்போது சத்யாவிற்கே கொஞ்சம் கவலை தொற்றிகொண்டது. இன்னமும் அவன் எதுவும் பேசவில்லை. இவனுக்கு உடம்பு ஏதாவது சரி இல்லையா? ஒரு வேளை அவன் அம்மாவிற்கு ஏதேனும் என்று எண்ணியவள் உங்க அம்மா எப்படி இருக்காங்க? என்றாள். அவன் காப்பியை குடித்தானே தவிர பதில் சொல்லவில்லை. சத்யா கொஞ்சம் கடுப்பாகி உங்களை தான் கேட்கிறேன் என்று கொஞ்சம் சத்தமாக கோபமாக சொன்னாள்.

 

சுயநினைவிற்கு வந்தவன் என்ன கேட்டாய்?” என்றான்.

 

உங்க அம்மா எப்படி இருக்காங்க? ஒன்னும் பிரச்சனை இல்லையே?”

 

அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லா இருக்காங்கஎன்றவன் அப்போது தான் சத்யாவை நன்றாக பார்த்தான். கொஞ்சம் ஈர முகத்துடன் மாலையில் மலர்ந்த மல்லிகை பூ போல் இருந்தாள். ஒரு குங்கும பொட்டு வைத்தால் அம்சமாக இருப்பாள் என்று மனதிற்குள் நினைத்தான். அவன் பார்த்த பார்வையில் இவன் இதற்கு யோசனையிலேயே இருந்திருக்கலாம், இப்போது எதற்கு இப்படி பார்க்கிறான் என்று நினைத்தவள் வேக வேகமாக அங்கே இருந்து அடுப்படி சென்றாள்.

 

தருண் இப்போது அவன் வீட்டு பாடங்களை செய்ய ஆரம்பித்து இருந்தான். கலைந்த கேசத்தை சரி செய்து கொண்டே அடுப்படி வந்த நந்தன் என்மேல உனக்கு ஏதாவது கோபமா?” என்றான்.

 

சத்யா சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டே உங்கள் மீது எனக்கென்ன கோபம்?” என்று திருப்பி கேட்டாள்.

 

தெரியவில்லை கோபமாக இருக்கிறாயோ என்று தோன்றியது

 

அதெல்லாம் ஒன்றுமில்லை, கொஞ்ச நாளைக்கு யார் மேலயும் கோபமோ வருத்தமோ எதுவும் இருக்க கூடாது என்று முடிவு செய்துள்ளேன்

 

ஏன் அப்படி?”

 

இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் exams clear செய்ய வேண்டும் என்று படிக்க ஆரம்பித்துள்ளேன், இப்போது என் மனதில் கோபம், வருத்தம் இவற்றிற்கு எல்லாம் இடம் கொடுத்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, ஏதாவது ஒரு சின்ன விஷயம் என்றால் கூட என்னை பாதித்து முடங்க செய்து விடுகிறது, அதனால் முடிந்த அளவு எதை பற்றியும் யோசிக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த நினைக்கிறேன்

 

நந்தன் கொஞ்சம் யோசனையாக அவளை பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் “good exams எப்போது?”

 

இன்னும் ஒரு மாதத்தில்

 

“Ok நன்றாக படி, லீவ் வேண்டுமானால் எடுத்துக்கொள், உன் சூப்பர்வைசரிடம் நான் பேசிக்கொள்கிறேன், சரி நான் கிளம்புறேன்என்று அவன் கிளம்பவும் ஏனோ சத்யாவிற்கு மனசு கொஞ்சம் வலித்தது. இன்று அவன் கவலை தோய்ந்த முகம் அவளை கஷ்டப்படுத்தியது. “சாப்டுட்டு போலாமேஎன்று பரிவாகவே சொன்னாள். அவள் முகத்திலும் குரலிலும் இருந்த பரிவு நந்தனை என்னவோ செய்தது, போக அவனுக்கும் மனமில்லை. “சரி சாப்டுட்டே போறேன்என்றான் புன்னகையுடன். சத்யாவும் புன்னகையுடன் திரும்ப மாவை பிசைந்தாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018