Sms ch 29 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 29


நந்தன் போதும் என்று சொல்லியும் கூடுதலாக இரண்டு தோசைகளை சுட்டு வைத்த சத்யா அது வரை எதுவும் பேசவில்லை, நந்தனும் பேசவில்லை. அவனாக பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தது நடப்பது போல் தெரியவில்லை, சரி நாமே பேசலாம் என்று நந்தன் சாப்பிட்டு முடித்ததும் சத்யா தன் புத்தகங்களை காண்பித்தாள். “இதெல்லாம் நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் எப்படி படிக்க போகிறேனோ தெரியவில்லை, நெறைய வருடங்கள் ஆகி விட்டன, நெறைய விஷயங்கள் மறந்துவிட்டன" என்றாள் ஒரு புத்தகத்தில் கண்களை நிலைநிறுத்தி உணர்ச்சிகள் மறத்து போனவளாய். ஏதோ பழைய நினைவில் இருக்கிறாள் போல என்று நந்தன் எதுவும் சொல்லாமல் கட்டிலில் இருந்து கீழே இறங்கி அமர்ந்து ஒரு சில புத்தகங்களை எடுத்து புரட்டுவதும் சத்யாவை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தான். அவள் கண்களில் நீர் திவலை ஒன்று திரண்டு நிற்பதை பார்த்தவன் “நீ ஏன் studies ஐ discontinue பண்ணின?” என்று கேட்க சத்யா சுயநினைவு வந்தவளாய் “என்ன கேட்டீர்கள்?” என்றாள் கண்ணில் திரண்ட நீர் திவலை வெளியே வந்துவிடாமல், நந்தன் பார்த்துவிடாமல் தடுக்க முயற்சி செய்துகொண்டே. நந்தன் புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் சத்யாவின் அந்த சின்ன போராட்டத்தை அவன் கவனிக்காமல் இல்லை, ஆனால் கவனியாதது போல் நடித்து கொண்டிருந்தான்.

“நீ ஏன் studies ஐ discontinue செய்தாய் என்று கேட்டேன்”

“அது......நெறைய காரணங்கள், முதலில் காதல், நான் காலேஜ் படிக்கும் போது என் சீனியர் கௌஷிக் என்பவரை சந்தித்தேன், அவர் முதலில் கொஞ்சம் ரவுடி மாதிரி தான் இருந்தார், ஆனால் உள்ளுக்குள் நல்லவர், பிறகு தன்னை தானே நெறைய மாற்றிகொண்டார், அதனால் எனக்கு முதலில் அவரை பிடித்து இருந்தும் மறுத்து வந்த நான் அவருடைய மாற்றங்களை பார்த்து காதலிக்க ஆரம்பித்தேன்”

“பார்ரா, ம்ம்ம் அப்புறம்” என்று நந்தன் புன்னகையுடன் கேட்டான். சத்யாவிற்கும் இப்போது லேசாக புன்னகை வந்தது.

“அப்புறம்……….அப்புறம்…….” என்று தயங்கினாள்.

“ம்ம்ம் அதை தானே மா கேட்கிறேன், அப்புறம் என்ன ஆச்சு சொல்லு”

“சொன்னால் நீங்கள் என்னை தவறாக நினைப்பீர்கள்”

நந்தன் ஒரு புன்னகையுடன் அவளை பார்த்தான். “so நான் எப்படி நினைக்கிறேன் என்பது இப்போது உனக்கு முக்கியம் ஆகி விட்டது, இல்லையா?”

சத்யா மனதிற்குள் நினைத்தாள் “அதானே அவன் நினைப்பது பற்றி எனக்கென்ன? என்னை பற்றி மோசமான விஷயங்களையே கேள்வி பட்டவன் தானே? நான் ஏன் அவன் என்னை தவறாக நினைக்க கூடாது என்று பயப்படுகிறேன்”

“ஹலோ” என்று சத்யாவை அழைத்தான்.

அவள் நிமிர்ந்து பார்க்கவும் “தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன் சொல்லு” என்றான்.

“கௌஷிக்கின் பெற்றோர், அவனை வளர்த்தவர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று அவர்கள் வீட்டிற்கு அழைத்தார்கள், கௌஷிக் அம்மா என்னை பார்த்து பேசிவிட்டு வெளியே சென்றுவிட்டார்கள், பிறகு நான் கௌஷிக், கௌஷிக்கின் அண்ணன், உடன் பிறவா அண்ணன் ஷ்யாம், ஷ்யாம் காதலித்த சுனிதா, அவளும் என் சீனியர் தான், நாங்கள் நால்வரும் சாப்பிட்டு விட்டு பேசிகொண்டிருந்தோம், வீட்டை சுற்றி காண்பிக்க கௌஷிக் அழைத்து சென்றார், அவர் bedroom ஐ பார்த்துக்கொண்டிருந்தோம்......” தயங்கி நிறுத்தினாள்.

சிறு அமைதிக்கு பின் அவளே தொடர்ந்தாள். “ஏனோ தெரியவில்லை, அப்போதெல்லாம் நேரம் காலம் தெரியாமல் படிப்பேன், அதனாலா எதனால் என்று தெரியவில்லை அன்று காலையில் இருந்து எனக்கு கிறுகிறு என்று இருந்தது, bedroom ல் மயங்கி விழ இருந்த என்னை கௌஷிக் தாங்கி பிடித்தார், டாக்டரிடம் போகலாம் என்று கூட அழைத்தார்.......ஆனால்.....ஆனால்.....நான் தான் டாக்டர் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி அவரை அருகே அழைத்தேன்” என்று முகம் சிவக்க கண்கள் கலங்க தலையை குனிந்தாள்.

ஒரு அமைதிக்கு பிறகு மீண்டும் அவளே தொடர்ந்தாள் “அதன் பிறகு நடந்ததெல்லாம் ஏதோ கனவு போல் இருந்தது, கௌஷிக் தன்னை தானே நொந்து கொண்டார், அவர் தன் மீது தான் தவறு, கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றெல்லாம் என் தவறை கூட அவர் மீது போட்டு கொண்டார், நாங்கள் பயந்தது போலவே நான் கர்பம் தரித்தேன், அம்மா மனம் உடைந்து விட்டார்கள், கௌஷிக் என்னை நன்றாக பார்த்துக்கொள்வதாக என் அம்மாவை convince செய்தார், திருமணமும் நடந்தது, தருண் வயிற்றில் இருக்கும் போது நெறைய complications இருந்ததால் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருந்தார்கள், நானும் கௌஷிக்கும் ஒருமுறை தான் இணைந்து இருந்தோம், ஆனால் ஏதோ பல வருடங்கள் தாம்பத்தியம் கண்டது போல் கௌஷிக் அன்போடும், பரிவோடும் தாய்க்கு தாயாக என்னை கவனமாக பார்த்துக்கொண்டார், வளையகாப்பு செய்து என்னை அம்மா வீட்டிற்கு அனுப்ப கூட கௌஷிகிற்கு மனமில்லை, ஆனால் அம்மா விடுவார்களா? அம்மா வீட்டில் பிரசவம் நடந்தது, தருண் பிறந்தான், காலில் தான் சின்ன குறைபாடு.

கௌஷிக்கால் என்னையும் தருணையும் அதற்கு மேல் பிரிந்து இருக்க முடியவில்லை என்று மூன்று மாதங்களில் அவருடன் அழைத்து சென்றார். மூன்றாம் ஆண்டு படிப்பை தொடர வேண்டும், அப்போது தான் என் IAS கனவு நிறைவேறும், நீ படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று கௌஷிக் என்னை ஊக்குவித்தார், பணிப்பெண் வைத்து தருணை பார்த்து கொள்ளலாம், முழு நேரமும் படிக்க வேண்டும், அப்போது தான் அத்தைக்கு வாக்கு அளித்தபடி உன் IAS கனவை நிறைவேற்ற முடியும் என்று வற்புறுத்தினார். ஆனால் பால் குடிக்கும் குழந்தையை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு முழு நேரம் என்னால் படிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன், நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன் என்று சொன்னேன், சரி உன் விருப்பம் என்றார்.

அப்போதெல்லாம் கௌஷிக்கிற்கு என்மீது எவ்வளவு அன்பு அக்கறை தெரியுமா?  என் கனவு நிறைவேற வேண்டும் என்று அவ்வளவு ஆசைப்பட்டார், நான் முழு நேர தாயாக தருணுடன் இருக்க விரும்புகிறேன் என்றதும் அதையும் மதித்தார், என் வாழ்க்கையில் அது ஒரு வசந்த காலம் என்று சொல்ல வேண்டும், நானும் கௌஷிக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அந்த மூன்று மாதங்கள் ஏதோ சொர்க லோகத்தில் இருந்தது போலவே உணர்வு, கௌஷிக் போன்ற கணவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பெருமையாக நினைத்து கொள்வேன், ஆனால் அந்த மூன்று மாதங்கள் தான் அந்த சந்தோஷம் பெருமை எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக கௌஷிக் போதை வஸ்துக்கள் பழக்கப்படுத்தி கொண்டார், ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று சாதிப்பார், தன் சொந்த பிசினஸ் பணத்தையே கையாண்டார் என்ற புகார் வேறு, கடைசியில் அவர் அண்ணி அந்த சுனிதாவுடன் கள்ளத்தொடர்பு, எல்லாம் தெரிந்ததும் நான் தருணை தூக்கி கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தாள்.

“நீ சொல்வதை எல்லாம் வைத்து பார்த்தால் கௌஷிக் நல்லவர் போல் தான் தோன்றுகிறது, அவர் எப்படி? போதை பழக்கம் கூட நம்பிவிடலாம், ஆனால் சுனிதாவுடன் கள்ளத்தொடர்பு நம்ப முடியவில்லை, எனக்கென்னவோ அவர் உன்னை உண்மையாக நேசித்ததாக தான் தோன்றுகிறது”

“நானும் அப்படி தான் நம்பினேன், ஆனால் அவர் வாயாலேயே நான் டெலிவரிக்காக அம்மா வீட்டிற்கு சென்றிருந்த நேரம் சுனிதாவுடன் தவறு செய்து விட்டதாக சொன்னார், ஆனால் என் மனதில் அப்படி அவர் செய்திருக்க மாட்டார் என்றும் தோன்றியது”

நந்தன் கொஞ்சம் யோசித்துவிட்டு “சரி நீ அதற்கு பிறகு எப்போது அவருடன் இணைந்தாய்? என்று கேட்டான். “அதன் பிறகு நான் அவரை பார்க்கவே இல்லை” என்றாள் சத்யா.

“பார்க்கவே இல்லையா? அப்படி என்றால் அவர் எப்போது எப்படி இறந்தார் என்றாவது தெரியுமா?”

“ஹ்ம்ம்” என்று விரக்தியாக புன்னகைத்துவிட்டு “இரண்டிற்குமே எனக்கு பதில் தெரியாது” என்றாள் கண்கள் கலங்க.

நந்தன் வியப்புடன் கேள்விக்குறியாய் நோக்கி “புரியவில்லை உன் கணவர் எப்போது எப்படி இறந்தார் என்று உனக்கு தெரியாதா?”

தெரியாது என்று கண்கள் கலங்க தலையை அசைத்தாள்.

“அது எப்படி சாத்தியம்? இரண்டில் ஒன்றிற்காவது பதில் தெரிந்து இருக்க வேண்டுமே”

“நான் அம்மா வீட்டிற்கு கிளம்பி வரும் போது நெறைய முறை call செய்தார், நான் கோபத்தில் எடுக்கவில்லை, பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அவர் அண்ணன் ஷ்யாமை பார்த்த போது சொன்னான், கௌஷிக்கும் சுனிதாவும் ஓடி போய்விட்டார்கள் என்று, நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, அதன் பிறகு நான் அவரை எலும்புக்கூடாக தான் இரண்டரை வருடங்கள் கழித்து பார்த்தேன், தருண் dna வுடன் மேட்ச் ஆனது, அதை வைத்து தான் உறுதி செய்தோம், கூடவே சுனிதாவின் எலும்புகூடும் அவர் அருகில் கிடைத்தது, ஒரு மலைப்பகுதியில் தான் இருவரது skeletal remains யும் கிடைத்தன”

“How sad!? I am really sorry சத்யா” என்றான்.

“It’s ok” என்று கண்ணீரை துடைத்தாள்.

“ஆனால் எனக்கென்னவோ இதில் ஏதோ தவறாக தோன்றுகிறது, Post mortem செய்யவில்லையா? அதில் அவர் இறப்பிற்கான காரணம் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமே”

“skull bone லயோ, அல்லது உடலின் எந்த எலும்பு பிடிப்பு பகுதியிலோ பெருசா fracture or damage இல்லை, அதனால் ஒன்று poison ஆக இருக்கலாம், இல்லை என்றால் தண்ணீர் உணவு கிடைக்காமல் பட்டினியால் இறந்திருக்கலாம், ஆனால் இறந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்பதால் துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்று சொல்லிவிட்டார்கள்”

“Wait...ok நீ சொல்வதை பார்த்தால் எப்படி இறந்தார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் எப்போது இறந்தார் என்று அனுமானிக்க முடியும் இல்லையா?”

“அதெப்படி முடியும்? அவர் தான் எப்போது இறந்தார் என்று கண்டுபிடிக்க இயலவில்லை என்று post mortem செய்த டாக்டரே சொல்லிவிட்டாரே”

“அவர் சொன்னார் சரி, ஆனால் நம்மால் அவர் நடவடிக்கைகளை வைத்து ஒரு காலவரிசையை ஏற்படுத்த முடியும் அல்லவா?”

சத்யா புரியாமல் பார்க்க “புரியலையா, wait I will explain, ம்ம்ம், நீ அவருடன் சண்டை போட்டுகொண்டு சென்றுவிட்டாய், அவர் call செய்தும் நீ எடுக்கவில்லை, இரண்டு வாரங்கள் கழித்து அந்த ஷ்யாம் என்பவன் கௌஷிக் சுனிதாவுடன் ஓடி போய்விட்டதாக சொல்லி இருக்கிறான், நான் அதை நம்பவில்லை, ஆனால் for the time being, நாமும் அவர்கள் ஓடிப்போனதாகவே வைத்துக்கொள்ளலாம், குறைந்தது கௌஷிக் சுனிதா இறந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்று post mortem ல் தெரிகிறது. அவர்கள் ஓடி போய் இரண்டரை வருடங்கள் தான் ஆகி இருக்கும், so அந்த இரண்டரை வருடங்களில் மிஞ்சி இருப்பது 6 மாதங்கள் தான், அந்த 6 மாதங்கள் கூட அவர்கள் உயிரோடு தான் இருந்தார்களா என்பது சந்தேகம், காதலித்து பல கஷ்டங்களுக்கு பிறகு திருமணம் செய்த உன்னையும், தருணையும் அந்த சுனிதாவிற்காக விட்டுவிட்டு செல்பவர் 6 மாதங்களுக்குள் தற்கொலை செய்து இருப்பாரா? சுனிதாவும் தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது, சரி மலைப்பகுதிக்கு சென்றவர்கள் வழுக்கி விழுந்து இறந்திருந்தால் fracture ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டும், விலங்குகள் அட்டாக் செய்திருந்தாலும் கண்டிப்பாக ஏதாவது damage எலும்புகளுக்கு இருந்திருக்கும், அதுவும் இல்லை, பட்டினி கிடந்து இறந்தார்களா? அதுவும் நம்ப முடியவில்லை. ஒரு வேளை மலைப்பகுதியில் பாம்பு ஏதாவது தீண்டி இருக்கலாம், ஆனால் இருவரையுமா?  எனக்கென்னவோ தன் மனைவி தன் தம்பியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரிந்து ஷ்யாமே கூட இருவரையும் கொன்றிருக்கலாம் என்று தோன்றுகிறது, ஆனால் அவர்கள் கள்ளத்தொடர்பு மட்டும் நம்ப முடியவில்லை, வேறு ஏதோ இருக்கிறது, அந்த ஷ்யாம் எப்படி?”

“இந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது, காலேஜ் டைமில் அவனும் ரௌடியாக தான் இருந்தான், மிகவும் மோசமானவன், அதனாலேயே கௌஷிக்கை நான் ஏற்காமல் இருந்தேன், ஆனால் அவன் திருந்திவிட்டதாக கௌஷிக் சொன்னார், சுனிதாவை திருமணம் செய்யப் போகிறான், நாங்கள் பிசினஸ் செய்யபோகிறோம் என்று, அதன் பிறகு அவனும் நல்லவன் போல் தான் இருந்தான், அதனால் தான் கௌஷிக் காதலை ஏற்றேன், ஆனால் கௌஷிக் சுனிதா கள்ளத்தொடர்பில் ரொம்பவே பாதிக்க பட்டிருந்தான், எனக்கே அவன் மீது பரிதாபம் ஏற்பட்டது, ஆனால் அவன் என்னையே அடைவதற்கு முயற்சி செய்கிறான் என்று தெரிந்ததும் நான் விலகி இருக்க ஆரம்பித்தேன், ஒருமுறை அவன் பிசினஸ் ஆஃபிஸில் கௌஷிக்கின் பங்கு கணக்கை காண்பிக்க அழைத்தான், ஏதோ drink குடிக்க சொல்லி கொடுத்தான், அப்போது துரைசாமி வந்து வீட்டில் ரெய்டு என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு சொன்னார் அந்த drink ல் அவன் ஏதாவது கலக்கி இருப்பான் என்று, நல்லவேளை துரைசாமி அன்று என்னை காப்பாற்றினார், பிறகு மறுபடியும் ஒருமுறை என்னை அடையும் முயற்சியில் வீட்டை உடைத்துக்கொண்டு நான் தூங்கும் நேரத்தில் கையில் ஏதோ ஊசியுடன் வந்தான், நல்லவேளை அன்று என் அம்மா என்னை காப்பாற்றினார்கள், அதில் அவன் ஜெயிலுக்கு போனான்”

“Woowww சந்தேகமே வேண்டாம் சத்யா, அவன் தான் கௌஷிக் சுனிதாவை கொலை செய்திருக்க வேண்டும்” என்று நந்தன் சொல்லிகொண்டிருக்கும் போதே அவனுக்கு சத்தியமூர்த்தியிடம் இருந்து ஒரு call வந்தது.

“ஒரு நிமிடம்” என்று சத்யாவிற்கு செய்கை செய்துவிட்டு call ஐ attend செய்தான் “சொல்லுங்க அப்பா”

“.........”

“oh my God, சரி நீங்கள் பதட்டப்படாதீர்கள், நான் நேராக ஹாஸ்பிடல் வந்துவிடுகிறேன்” என்று கலக்கமாக போனை வைத்தான்.

சத்யா பதட்டத்துடன் “என்னாச்சு?” என்றாள்.

“அம்மாவுக்கு அட்டாக் போல, ஹாஸ்பிடல் போனா தான் full details தெரியும், நான் வருகிறேன் சத்யா” என்று சொல்லிவிட்டு வேகவேகமாக ஷூவை அணிந்தான். “ஒன்னும் ஆகாது, நீங்க தைரியமா போய்ட்டு வாங்க” என்றாள் இதுவரை அவனை இவ்வளவு கலக்கமாக பார்க்காத சத்யா.

சரி என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு வேகமாக காரை எடுத்துக்கொண்டு பறந்தான் நந்தன்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018