Sms ch 28 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 28

நந்தன் தீபிகாவை அன்று மாலை தன் காரிலேயே வீட்டிற்கு அழைத்து வந்தான். அவன் மாடிக்கு தன் அறைக்கு செல்வதை பார்த்திருந்து விட்டு தீபிகா கமலா அம்மாவிடம் சொன்னாள்.ஆண்ட்டி நான் ஹாஸ்டல் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன், இங்கயே இருக்கலாம்னு நினைக்கிறேன், உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே?” என்று கமலா அம்மாவை தோளில் அணைத்தபடி கேட்டாள். “எனக்கு என்னமா ஆட்சேபனை? நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று தானே சொல்லிகொண்டிருக்கிறேன்என்றதும் தீபிகா துள்ளலுடன் மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்வதை பார்த்த கமலா அம்மா சத்தியமூர்த்தியிடம் வந்தார்.

 

இந்த காலத்து பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லைஎன்று ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே தோட்டத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

 

என்ன நந்தன் தீபிகாவை அழைத்து வந்ததை பற்றி சொல்கிறாயா?”

 

அது மட்டுமா? நான் ஹாஸ்டல் போறேன்னு சொன்னவ நான் இங்கயே இருக்கேன் ஆன்ட்டின்னு சொல்லிட்டு போறா, பாக்க சந்தோஷமா இருக்கா, இந்த பையன் அப்படி என்ன சொன்னான் அவளிடம் என்று புரியவில்லையே, ஒரு சமயம் பார்த்தால் அவளை பிடிக்காதவன் போல நடந்து கொள்கிறான், இன்னொரு சமயம் பார்த்தால் அவளுடன் சிரித்து பேசி சகஜமாக இருக்கிறான், ஒன்னும் புரியலைங்க

 

ம்ம்ம் நாம் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது தான் நல்லது என்று தோன்றுகிறது

 

ஏன் அப்படி சொல்றீங்க? இந்த பெண்ணை அவனுக்கு பிடிக்கும் என்று நம்பிதான் அவர்கள் இருவரும் முதலில் பேசி பழகி புரிந்து கொள்ளட்டும், திருமண பேச்சை எடுக்கலாம் என்று நாம் காத்திருக்கிறோம், ஆனால் நீங்கள் என்னவென்றால் எதையும் எதிர்பார்க்காதே என்று சொல்கிறீர்கள்

 

தெரியலைம்மா எனக்கென்னவோ அவனுக்கு தீபிகா மீது ஈடுபாடு இல்லை என்றே தோன்றுகிறது, அது மட்டுமல்ல அந்த அமைந்தகரையில் உள்ள பெண்ணை பற்றி தான் எனக்கு யோசனையாக இருக்கிறது

 

நான் கூட கேட்க வேண்டும் என்று நினைத்தேன், அது என்னங்க திடீர்னு.......அந்த பொண்ணு பேரு என்ன........ம்ம்ம் சத்யா தானே, அவளை புது friend என்கிறான், அவள் வீட்டில் இருந்தேன், சாப்பிட்டேன் என்றெல்லாம் சொல்கிறானே, இவன் பெண்களுடன் சுற்றுகிறான் என்று அரச புரசலாக நமக்கு தகவல் வரும் போது கூட ஒரு பெண் தோழி பெயரை கூட சொன்னதில்லையே, அவள் வீட்டிற்கு சென்றேன், சாப்பிட்டேன், அங்கே நேரம் செலவழித்தேன் என்று சொன்னதில்லையே, ஏன் இப்போது இவளை பற்றி சொல்கிறான்? எனக்கு தெரிந்து சிறு வயதில் இருந்து மதுவை தவிர வேறு எந்த பெண்ணையும் தன் தோழி என்று அவன் நம்மிடம் சொன்னதே இல்லையேஎன்று கமலா அம்மா ஒன்றும் புரியாமல் குழம்பினார்.

 

ஒரு வேள மதுவை போல அவளை நல்ல friend ஆக மட்டும் பார்க்கிறானோ என்னவோ? அதனால் தான் தயக்கம் இல்லாமல் அவளை பற்றி நம்மிடம் சொல்கிறான், தவறான உறவோ எண்ணமோ இருந்திருந்தால் சொல்லி இருக்க மாட்டான் அல்லவா? அந்த பெண்ணை மற்ற பெண்களை போல் அவன் பார்க்கவில்லை என்று மட்டும் தெரிகிறது

 

இருக்கலாம் ஆனால் அந்த சிறுவனிடம் தான் ரொம்ப அன்பாக இருப்பது போல் பேசினான், அந்த சிறுவன் மீது இவனுக்கு என்ன அப்படி ஒரு அன்பு?”

 

தெரியவில்லை, ஆனால் அந்த சிறுவனை என்னாலேயே மறக்க முடியவில்லை, ஒருமுறை தான் பார்த்தேன், அவன் அன்று என் மடியில் அமர்ந்ததும், தாத்தா தாத்தா என்று என்னை அழைத்ததும் எனக்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தியது, நல்ல பையன்

 

ஹ்ம்ம் தாத்தா என்ற வார்த்தையில் மயங்கி விட்டீர்களாக்கும்? நீங்கள் எல்லாம் சொல்வதை பார்த்தால் எனக்கே அந்த பையனை பார்க்க வேண்டும் போல் உள்ளது, அது சரி நீங்கள் அந்த சத்யாவை பார்த்து இருக்கிறீர்களா?”

 

இல்லம்மா இருட்டில் அவள் முகம் சரியாக தெரியவில்லை, வாசலில் நின்று நந்தனும் அவளும் பேசிக்கொண்டார்கள், நான் சிறிது தூரத்தில் காருக்குள்ளே அமர்ந்திருந்தேன், ஆனால் என்னவோ அன்று எனக்குள் சொல்லமுடியாத, இனம் புரியாத ஒரு உணர்வு, நெகிழ்ச்சி, எதனால் என்று புரியவில்லை, அதனால் நானும் நந்தனிடம் அவர்களை பற்றி பெரிதாக விசாரிக்கவில்லை

 

ஹ்ம்ம் எது எப்படியோ? இந்த தீபிகா பொண்ணு ஹாஸ்டல் போய்டுவாளோ? சம்மந்தி என்ன நினைப்பார் என்று காலையில் இருந்து ஒரே கவலையாக இருந்தது, நந்தன் சரி செய்து விட்டான்

 

ஆமாம் நீ வருத்தப்படுவாய் என்று தெரிந்தால் உன் மகன் தான் ஏழு கடல் ஏழு மலையை தாண்டுவானே, தீபிகாவை சம்மதிக்க வைக்க மாட்டானா?” என்று புன்னகைத்தார் சத்தியமூர்த்தி.

 

ஆமாம் அது என்ன உன் மகன்? உங்களுக்கும் மகன் தானே, நீங்கள் வருத்தப்பட்டாலுமே அவன் தாங்கிக்கொள்ள மாட்டானே, என்னவோ என்மீது மட்டும் தான் அவனுக்கு அன்பு இருப்பது போல் பேசுகிறீர்கள்

 

இருந்தாலும் உன்மீது இருக்கும் அளவு எல்லாம் என்மீது அவனுக்கு அன்பு கிடையாது மாஎன்று அங்கலாய்த்து கொண்டார்.

 

சரிதான்...... தனியாக உட்கார்ந்து புலம்புங்கள், நான் இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று சகுந்தலாவிடம் போய் பேசுகிறேன்என்று கிளம்பினார் கமலா அம்மா.

 

நான்கைந்து நாட்களாக நந்தனே தீபிகாவை அழைத்து செல்வதும் வருவதுமாக இருந்தான். தீபிகா ஏதாவது பர்சனலாக பேச முயன்றால் R&D துறையை எப்படி வடிவமைப்பது என்ன தேவைப்படும், எப்படி equipments வாங்குவது என்று அலுவலக நிமித்தமாக பேசி பேச்சை மாற்றினான்.

 

தருணை பார்த்து சில நாட்கள் ஆகிவிட்டதே, ஞாயிற்று கிழமை சென்று பார்க்கலாம், அப்போது தான் அவனுடன் நெறைய நேரம் செலவிட முடியும் என்று எண்ணி ஞாயிற்று கிழமை காலையிலேயே குளித்து யோகா செய்து நல்ல blue jeans, ஒரு casual pink shirt, coolers என்று உற்சாகமாக புறப்பட்டான்.

 

மற்றவர்கள் யாரும் அந்த நேரம் எழுந்திரிக்க கூட இல்லை கமலா அம்மா சத்தியமூர்த்தி தவிர. “என்னப்பா காலைலயே உற்சாகமா கிளம்பிட்ட?” என்று சத்தியமூர்த்தி கேட்டார். “ஆமாம் பா, இன்னைக்கு தருணை எங்கேயாவது வெளியே அழைத்து செல்லலாம் என்று தோன்றுகிறது, அதனால் தான்என்றான் தன் full hand ஸ்லீவ்ஸை மடித்து விட்டுக்கொண்டே. “நாங்களே ஏதோ சனி ஞாயிறு அன்று தான் உன்னுடன் சிரித்து பேசி மகிழ்கிறோம், அதுவும் இப்போது கிடையாதா?” என்று கமலா அம்மா வருத்தமாக கேட்க நந்தன் ஒரு நொடி யோசித்துவிட்டு ஐடியா நீங்களும் வாங்களேன், நீங்க அப்பா நான் மூவருமே சத்யா வீட்டிற்கு செல்லலாம், எல்லோருமே ஒன்றாக நேரம் செலவழிக்கலாம்என்று உற்சாகமாக அழைத்தான். கொஞ்சம் வியப்புடன்இல்லப்பா நீ போய்ட்டு வாஎன்றார்கள் கமலா அம்மாவும் சத்தியமூர்த்தியும். “ok சரி வருகிறேன்என்று விசிலடித்து கொண்டே போகும் நந்தனை கமலா அம்மாவும் சத்தியமூர்த்தியும் வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ நினைவு வந்தவராய் சாப்பிட்டு விட்டு போய் வா நந்துஎன்று கமலா அம்மா சொல்ல அது அவன் காதில் விழும் முன்னர் அவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

 

காலை 9 மணி இருக்கும். நந்தன் சத்யா வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு வாசலில் நின்று ஷூவை கழட்டிக்கொண்டே ஹலோஎன்று வீட்டை எட்டி பார்த்து குரல் கொடுத்தான். கட்டிலின் மேல் ஏறி நின்று பியூரோவுக்கு மேலே இருந்த cardboard box ஒன்றை எடுக்க சத்யா முயற்சி செய்து கொண்டிருந்தாள். ஹலோ என்ற குரலை கேட்கவும்நந்தன் குரல் மாதிரி உள்ளதேஎன்று லேசாக குனிந்து ஜன்னலின் வழியாக பார்த்தாள். நந்தனின் கார் தான். “உள்ள வாங்கஎன்றாள்.

 

கேள்விக்குறியுடன் அடுப்படியை பார்த்துவிட்டு படுக்கை அறையை எட்டி பார்த்தவன்ஹேய் என்ன பண்ற? இறங்கு இறங்குஎன்று சத்யாவை அவசரப்படுத்தினான். “இருங்க அந்த box எடுத்துடுறேன்என்று அந்த box ஒரு கையால் இழுத்து கொண்டு, இன்னொரு கையால் தன் சேலையை சரி செய்து கொண்டே சொன்னாள் சத்யா. “நீ முதலில் இறங்கு, நான் எடுத்து தருகிறேன், கட்டிலில் இப்படி தான் நாலைந்து தலையணையை போட்டு அதன் மேல் ஏறி நிற்பாயா? அறிவு ஜீவி, விழுந்து வைக்காதே, இறங்கு முதலில்என்று அதிகாரமாக விரட்டினான்.

 

சத்யாவும் இறங்கினாள். நந்தன் கட்டிலில் ஏறி நின்று box எடுத்து கீழே வைத்தான். “அப்பா இவ்வளவு வெயிட்டா இருக்க box தலையணை மேல் ஏறி நின்று எடுக்க முயற்சிக்கிறாயே, விழுந்தால் என்ன ஆவது?” என்று கோபமாக சொல்லிக்கொண்டே அவளை நன்றாக பார்த்துவிட்டு தலையில் கொஞ்சம் ஒட்டடையாக இருக்கிறது பார்என்றான்.

 

பியூரோவில் இருந்த கண்ணாடியில் சென்று பார்த்து தலை முடியில் இருந்த ஒட்டடையை தட்டி விட்டு கொண்டிருந்தாள் சத்யா. திடீரென்று நந்தனும் அவள் பின்னால் வந்து நின்று அந்த கண்ணாடிக்கு ஈடு கொடுக்க லேசாக குனிந்து தன் தலை முடியில் ஒட்டடை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே முடியை கோதி விட்டான். அவனை அவ்வளவு நெருக்கமாக பார்த்ததில் கொஞ்சம் அதிர்ச்சியில் இருந்த சத்யா அவன் தன்னை பார்க்கிறான் என்றதும் தலையை குனிந்து அடுப்படிக்கு விலகி சென்றாள். நந்தன் இன்னும் சில நிமிடங்கள் கண்ணாடியில் பார்த்து தன் கேசத்தை சரி செய்து கொண்டே கேட்டான்தருண் எங்க சத்யா?”

 

அதுவரை படபடப்பாக இருந்த தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சத்யா தண்ணீரை எடுத்து குடித்துவிட்டுதருண், வள்ளி அக்கா, பாட்டி, சின்னு எல்லாரும் செம்மொழி பூங்கா சென்றிருக்கிறார்கள்என்றாள்.

 

“Really? பரவால்லையே தருண் வெளியே எங்கேயும் போவதில்லையோ என்று நினைத்தேன், அதனால் தான் இன்று எங்கேயாவது அழைத்து செல்லலாம் என்று வந்தேன்என்று சொல்லிக்கொண்டேஇந்த பாக்ஸில் என்ன இருக்கிறது? நான் பிரிக்கலாமா?” என்று கேட்டான்.

 

ம்ம்ம் பிரிக்கலாம், வெறும் புத்தகங்களும் நோட்டுக்களும் தான் இருக்கும்என்றாள்.

 

அப்படி என்றால் கண்டிப்பாக பிரித்து பார்க்க வேண்டும்என்று சொல்லிக்கொண்டேகத்திரிக்கோல் இருந்தால் கொடுஎன்றான். அவள் கத்திரிக்கோலை அவனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படி சென்றுவிட்டாள்.

 

அவன் கீழே முட்டியிட்டு பாக்ஸில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை கத்தரிக்கோலில் கிழித்துக்கொண்டே கேட்டான். “ஆமாம் நீ போகவில்லையா செம்மொழி பூங்காவிற்கு?” என்றான்.

 

இல்லை நான் படிக்கலாம் என்று நினைத்தேன்என்றாள் அடுப்படியில் ஏதோ வேலை செய்துகொண்டே.

 

என்ன படிக்க போகிறாய்?” என்று பாக்ஸில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டி கொண்டே கேட்டான்.

 

அது.......என் bsc யில் மூன்றாம் ஆண்டு பேப்பர்களை clear செய்யலாம் என்று

 

“what?! என்ன சொன்னாய்? மேடம் அடுப்படியில் அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கொஞ்சம் இங்கே வந்து பேசலாமே, காலையிலேயே என்னால் இப்படி கத்தி கத்தி பேச முடியவில்லைஎன்றான் தான் உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து அடுப்படியை எட்டி பார்த்தபடியே.

 

சத்யாவும் உள்ளே வந்து அவனிடம் ஒரு டம்ளரை நீட்டினாள். “என்ன இது?” என்று கேட்டுக்கொண்டே வாங்கி குடித்தவன்ம்ம்ம் lime ஜூஸ் சூப்பர்என்று ரசித்து குடித்துவிட்டு டம்ளரை திருப்பி கொடுத்தான். அவள் மீண்டும் அடுப்படிக்கு செல்ல திரும்ப ஹேய் திரும்ப எங்க போற?” என்று தன்னை அறியாமல் ஒரு கையில் இருந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டே இன்னொரு கையால் சத்யாவின் ஒரு கையை பிடித்து நிறுத்தி இருந்தான். அவள் திரும்பி அவனை முறைத்தாள். அதை கவனியாமல்எல்லாம் ஏதோ பாலிடிக்ஸ் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் போலவே, ஆமாம் நீ +2 தான் படித்திருக்கிறேன் என்று சொன்னாயே, அது பொய்யா? நினைத்தேன் +2 படித்தவள் இவ்வளவு ஆழமாக புலமையாக கவிதை எழுத்துவாளா என்று அப்போதே நினைத்தேன்என்று கிண்டலாக கூறிக்கொண்டே நிமிர்ந்தவன் அப்போது தான் அவள் கையை தான் பிடித்திருப்பதையும், அவள் முறைப்பதையும் உணர்ந்தான்.

 

“sorry” என்று அவள் கையை விடுவித்தவன் அவள் தொடர்ந்து முறைப்பதை பார்த்துவிட்டுஅம்மா தாயே உண்மையிலேயே தெரியாமல் பிடித்து விட்டேன், இதற்காக பத்திரகாளி அவதாரம் எல்லாம் வேண்டாம்என்றான். அவள் இன்னும் கோபமாக இருப்பதை உணர்ந்துஓஹ் God” என்று தலையை அசைத்தவன் ஒரு மூச்செடுத்து விட்டு என்னை மன்னிப்பாயா? இது போல் இனி நடக்காதுஎன்று எழுந்து நின்று கையை கூப்பி அவளை நேருக்கு நேராக பார்த்து கேட்டான். அவன் மன்னிப்பு கேட்ட விதத்தில்தான் overreact செய்கிறோமோ?” என்று மனம் இலகி “ok” என்று கூறிவிட்டு மீண்டும் அடுப்படிக்கு சென்று விட்டாள். “இன்னும் கோபம் குறையவில்லை போல் இருக்கிறதே?” என்று அவளின் பின்னால் சென்று கேட்டான். அவள் பதில் ஏதும் சொல்லாமல் தோசை சுட ஆரம்பித்தாள்.

 

ப்ச்ச் வாரம் முழுக்க ஒரே டென்ஷன், இன்றாவது தருணுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து வந்தேன், நான் வருகிறேன்என்று வெளியேறி ஷூவை எடுத்து போட ஆரம்பித்தான்.

 

சத்யா வாசலின் அருகே சென்றுபிறகு இந்த தோசையை யார் சாப்பிடுவது?” என்று கேட்டாள். “நீயே சாப்பிடு, நான் கிளம்புறேன்என்று சொல்லிக்கொண்டே முட்டி போட்டு lace கட்டினான். “நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன், உங்களுக்காக தான் சுட ஆரம்பித்தேன்என்றாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன்என்மீது கோபம் இல்லையே?” என்றான். “அது தான் தெரியாமல் செய்துவிட்டேன், இனி இப்படி நடக்காது என்று சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டீர்களேஎன்றாள். அவன் இன்னொரு ஷூவின் lace கட்ட ஆரம்பித்தான். சத்யாவிற்கு லேசாக முகம் சுருங்கியது. போறதுன்னா போகட்டும் என்று மனதில் நினைத்தவளாய் கோபமாக வந்து gas அடுப்பை அணைத்துவிட்டு படுக்கை அறைக்கு சென்று புத்தகங்களை எடுத்து வெளியே வைத்தாள். நமக்கு படிக்க ஆயிரம் இருக்கு, இவரை சமாதானம் செய்வதல்ல என் வேலை என்று மனதிற்குள் பொருமிக்கொண்டே புத்தகங்களை ஜன்னலோரம் அடுக்க ஆரம்பித்தாள்.

 

வெறும் தோசை தானா? சட்னி எதுவும் இல்லையா?” என்று தட்டில் இருந்த தோசையை சாப்பிட்டுக்கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்தான் நந்தன்.

 

திரும்பி அவனை முறைத்துவிட்டு எழுந்து சென்று மீண்டும் அடுப்பை பற்றவைத்து அடுத்த தோசையை ஊற்றிவிட்டு பொடியும் நல்லெண்ணெயும் கொண்டு வந்து வைத்தாள் சத்யா.

 

கோபத்தில் நம்மை மிஞ்சி விடுவாள் போலவேஎன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பொடியுடன் அந்த தோசையை சாப்பிட்டான் நந்தன்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018