Sms ch 12 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 12
நந்தன் சத்யாவை தாங்கி பிடித்துக்கொண்டே செக்யூரிட்டி இருக்கும் திசையை நோக்கி திரும்பி கையை அசைத்தான். செக்யூரிட்டி அப்போது தான் நந்தன் மடியில் யாரோ இருப்பதை கண்டு நிலைமையை உணர்ந்து ஓடி வந்தார்.
“என்னாச்சு சார்?” என்று பதறினார்.
“ஒன்னும் இல்ல, மயக்கம் தான், கார்ல தண்ணி இருக்கும் எடுத்துட்டு வாங்க”
செக்யூரிட்டி ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க நந்தன் அதை சத்யா முகத்தில் தெளித்தான். “சத்யா, சத்யா....” சத்யாவின் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்தான். அவள் எழவில்லை. கையை பிடித்து பார்த்தான்.
சில நொடிகள் கழித்து சொன்னான் “pulse ரொம்ப slow வா இருக்கு”.
“செல்வம் என் காரோட back seat door திறந்து வைங்க”
“Ok சார்” செக்யூரிட்டி ஓடி back seat door ஐ திறந்து வைத்தார்.
நந்தன் சத்யாவை தூக்கி நிறுத்த முயன்றான், அவள் துவண்டு விழப்போனாள். மீண்டும் அவளை தாங்கி தன் இரு கைகளால் தூக்கிக்கொண்டு தன் காரின் பின் இருக்கையில் அவளை படுக்க வைத்து விட்டு கதவில் அவள் சேலை எதுவும் மாட்டாமல் இருக்குமாறு சரி செய்து கதவை மூடினான்.
“செல்வம் நான் அவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன், இவங்க எங்கன்னு யாராவது கேட்டா இவங்க மயங்கி விழுந்த விஷயம், நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற விஷயம் எல்லாம் சொல்ல வேண்டாம், just அவங்க மட்டும் வெளில போனாங்க, வீட்டிற்கு போயிருக்கலாம்னு மட்டும் சொல்லுங்க, மத்ததெல்லாம் நான் ஹாஸ்பிடலில் இருந்து திரும்பி வந்து பேசிக்கொள்கிறேன்”
“ok சார்”
நந்தன் காரில் ஏறி அமர்ந்து கண்ணாடியை சரி செய்து அதில் சத்யா தெரியுமாறு வைத்து கொண்டு காரை எடுத்தான்.
அருகில் இருக்கும் ஒரு நல்ல மருத்துவமனையில் காரை நிறுத்தியதும் அவளை வெளியே கொண்டு வர முயற்சி செய்தான். அவள் இன்னமும் மயக்கத்தில் இருந்ததால் மெதுவாக தூக்கினான். இதைகண்ட வார்டு பாய் stretcher கொண்டு வர அதில் அவளை அழைத்து சென்றார்கள்.
Emergency டாக்டர் அவளை அட்டென்ட் செய்தார்கள். ஸ்டதஸ்கோப் வைத்து அவள் இதய துடிப்பை கணக்கிட்டு கொண்டே கேட்டார்கள்.
“என்னாச்சு”
“மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க”
டாக்டர் ஒரு நர்சிடம் செய்கை காட்ட அந்த nurse bp கணக்கிடும் கருவியை எடுத்து வந்து bp check செய்தார்கள். “எவ்வளவு நேரம் ஆச்சு மயக்கம் போட்டு” என்று டாக்டர் கேட்டார்கள்.
“10 mins இருக்கும்”
“nurse drips ஏத்துங்க, deficiency check பண்ண பிளட் draw பண்ணிக்கோங்க”
சத்யாவிற்கு ஒரு பெட் ஒதுக்கப்பட்டு drips ஏற்றப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் சத்யா கண் விழித்தாள். பக்கத்தில் நந்தன் மொபைலில் ஏதோ பார்த்து கொண்டிருக்க, அவள் கண்ணை சுழற்றி பார்த்தாள். கையை தூக்கி drips ஏறுவதை பார்த்தாள். நந்தன் நிமிர்ந்தான். சத்யா கண் விழித்ததை பார்த்து அருகில் வந்தான்.
“ஹலோ சத்யா, இப்போ எப்படி இருக்கு?”
சத்யா ஏதோ சொல்ல முயற்சித்தாள். ஆனால் அவள் உதடுகளும், நாக்கும் உலர்ந்து இருந்ததால் பேச்சு வரவில்லை. “தண்ணி...” என்று செய்கை காட்டினாள்.
“ஒரு நிமிஷம், தண்ணி குடிக்கலாமான்னு எதுக்கும் நர்ஸ் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்”
நந்தனுடன் nurse ம் வந்தாள். “ஹலோ மேடம், எப்படி இருக்கீங்க?” என்ற படியே பிளட் pressure check செய்தாள். “இன்னும் கொஞ்சம் low வா தான் இருக்கு, தண்ணீருக்கு பதில் இந்த electrolyte குடுங்க, நான் டாக்டர் கிட்ட inform பண்ணிட்டு வந்திடுறேன்”
நந்தன் electrolyte எடுத்து ஒரு கிளாஸ் டம்ளரில் ஊற்றி கொடுத்தான். சத்யா எழுந்து உட்கார முயற்சி செய்ய நந்தன் அவளை பிடித்து உட்கார வைத்தான். சத்யா electrolyte குடித்த பிறகு கொஞ்சம் புத்துணர்ச்சி வந்தது போல் உணர்ந்தாள். நந்தனை பார்த்து “thanks” என்றாள்.
Nurse டாக்டருடன் உள்ளே வந்தார்கள். “இப்போ எப்படி மா இருக்கு?”
“பரவால்ல மேடம்”
டாக்டர் மீண்டும் அவள் இதய துடிப்பை check செய்தார்கள். “அடிக்கடி மயக்கம் வருமா?”
“இல்ல இப்போ தான் ஒரு ரெண்டு மூணு நாளா”
“வேற என்னலாம் பண்ணுது?”
சத்யா விழித்தாள்.
“Heart beat fasta அடிக்கிற மாதிரி இருக்குமா?”
“ஆமாம் மேடம்”
“Muscle pain, stiffness, shortness of breath இந்த மாதிரி ஏதாவது?”
“ஆமாம் மேடம் இருக்கு”
“எவ்வளவு நாளா?”
“கொஞ்ச நாளா இருக்கு, கரெக்டா சொல்ல முடியல”
“ஒழுங்கா சாப்பிடுறீங்களா?”
சத்யா கொஞ்சம் தயங்கி “அதெல்லாம் நல்லா தான் சாப்பிடுறேன் மேடம்”
“பாத்தா அப்படி தெரியலையே மா, எல்லா வைட்டமினும் border ல இருக்கு, இல்லன்னா பற்றாக்குறையா இருக்கு, low potassium கூட”
டாக்டர் prescription ல் வைட்டமின் மாத்திரைகள் எழுதி நந்தனிடம் கொடுக்க “டாக்டர், வேற எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டான் நந்தன்.
“இல்ல சார், வைட்டமின் பற்றாக்குறை தான், இந்த வைட்டமின் மாத்திரைகளோட, வாழைப்பழம், greens கொஞ்சம், மொத்தத்துல சரிவிகித உணவா, நல்லா சத்தான சாப்பாடா குடுங்க உங்க wife க்கு, கரெக்டா சாப்பிடுறாங்களான்னு மட்டும் check பண்ணுங்க”
நந்தனும் சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
நந்தன் bill செட்டில் செய்து விட்டு வர சத்யாவிற்கு காரின் முன்னிருக்கை சீட்டின் கதவை திறந்தான். சத்யா கொஞ்சம் தயங்க, “நான் கடத்திட்டு எல்லாம் போக மாட்டேன், நம்பி ஏறலாம்” என்றான் ஒரு புன்னகையுடன்.
சத்யா அமர்ந்ததும் கதவை மூடிவிட்டு டிரைவர் சீட்டிற்கு சென்று காரை ஸ்டார்ட் செய்தான்.
“actuala உங்களை வீட்டுல போய் தான் விடணும்னு தோணுது, but அதுக்கு முன்னாடி சில வேலைகள் இருக்கு. அதை முடிச்சுட்டு வீட்டுல போய் விட்டுடுறேன், ஓகேவா?”
சத்யா ஒன்றும் பதில் சொல்லாமல் விழித்தாள்.
“நீங்க எப்படி கம்பெனிக்கு வந்தீங்க?” என்று கேட்டாள்.
“கார்ல தான்”
“அதை கேக்கல, நான் வேலை செய்ற கம்பெனிக்கு எப்படி...?” என்று லேசாக தலையை அழுத்தி பிடித்தாள்.
“நீங்க வேலை செய்யும் கம்பெனியாக இருந்தால் நான் காரில் வரக்கூடாதா? காரில் தான் வந்தேன்”
“ஐயோ... நான் என்ன கேக்க வரேன், நீங்க என்ன சொல்றீங்க?”
“சரி சரி டென்ஷன் ஆகாதீங்க, அதெல்லாம் அப்புறம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு காரை ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு நிறுத்தினான்.
நந்தன் சத்யா இருக்கையின் கதவை திறந்து அழைத்தான் “ம்ம்ம் வாங்க”
“இங்க எதுக்கு?” என்றாள் சத்யா.
“சாப்பிடத்தான்”
“நான் காலைல சாப்டுட்டு தான் வந்தேன்”
“ஆனா நான் காலைல சாப்பிடல, இப்போ மணி 2 ஆச்சு, எனக்கு பசிக்குது, வாங்க”
“உங்களுக்கு பசிச்சா நீங்க போய் சாப்பிடுங்க, நான் வரல”
“அதெப்படி? இவ்வளவு தூரம் உதவி செய்திருக்கிறேன், ஒரு நன்றி உணர்ச்சிக்காகவாது ஒரு கம்பெனி தரலாம் இல்லையா”
“sorry நான் வரல, நீங்க போய் சாப்பிடுங்க, நான் வேலை செய்ற கம்பெனி இங்க இருந்து நடந்து போற தூரம் தான், நான் நடந்தே போய்க்கிறேன், உங்கள் உதவிக்கு நன்றி” என்று சொல்லிவிட்டு இறங்க முயன்றவளை “hey wait wait, இப்போ என்ன? கம்பெனிக்கு போகணும், அவ்வளவு தானே, வா போகலாம்” என சொல்ல சத்யா முறைக்க நந்தன் உடனே மாற்றி “sorry வாங்க போகலாம்” என்று சத்யாவை மீண்டும் காரில் உட்கார வைத்து கதவை சாத்திவிட்டு டிரைவர் சீட்டுக்கு வருவதற்குள் சத்யா காணாதவாறு கமலா அம்மாவிற்கு கால் செய்தான், சீட்டில் அமர்ந்துவிட்டு “ஓ என் அம்மா கால் பண்றாங்க” என்று காதில் வைத்தான். “ம்ம்ம் சொல்லுங்க மா”
“நீ தானப்ப கால் செய்தாய், நீ தான் சொல்ல வேண்டும்”
“காலைல முக்கியமான வேலை இருந்துச்சு மா, அதான் சாப்பிடாம வந்துட்டேன்”
“சாப்டுட்டு தானப்பா கிளம்பின வேலைக்கு” என்றார்கள் கமலா அம்மா.
“இல்லம்மா அதுக்கப்புறமும் சாப்பிட முடியல, ஒன்னு மாத்தி ஒன்னு வேலை இருந்துட்டே இருந்துச்சு”
“என்னடா உளறுற?”
“பசி தாங்க மாட்டேனா? அதெல்லாம் இப்போ நல்லாவே பசி தாங்க ஆரம்பிச்சிட்டேன், இப்போ கூட பாருங்க, அடுத்த வேலை வந்துடுச்சு, இதோட night தான் சாப்பிட போறேன்”
“அம்மாகிட்ட வம்பு பண்றியா நந்து”
“சரி நீங்க feel பண்ணாதீங்கம்மா, night கண்டிப்பா சாப்டுடுறேன்” என்று சொல்லிக்கொண்டே சத்யாவை பார்க்க அவள் அவனை முறைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள். நந்தன் மொபைலை கீழே வைத்து விட்டு சொன்னான்.
“ம்ம்ம் என் அம்மா தான், ஒரு வேளை சாப்பிடலைன்னா கூட ஓவரா feel பண்ணுவாங்க”
சத்யா “அவங்க பேசினது எனக்கும் கேட்டுச்சு” என்றாள்.
“கேட்டுச்சா? ஹ்ம்ம் சரி கம்பெனிக்கே போகலாம்” என்று காரை ஸ்டார்ட் செய்ய முனைந்தான்.
“ஒரு கண்டிஷன்” என்றாள் சத்யா.
“என்ன கண்டிஷன்?”
“என்கிட்ட இப்போ purse எதுவும் இல்லை, so நான் இங்க சாப்ட்டா நீங்க தருணை பாக்க வீட்டுக்கு வரும் போது எங்க வீட்டுல சாப்பிடணும்”
நந்தன் ஒரு புன்னகையுடன் “my pleasure” என்றான்.
சத்யாவும் புன்னகைத்தாள்.
“Finally!!” என்றான் நந்தன்.
சத்யா என்ன என்பது போல் கேள்விக்குறியுடன் நோக்க நந்தன் சொன்னான், “இப்போ தான் நீங்க smile பண்ணி first time பாக்குறேன், அத சொன்னேன்”.
சத்யா தன் கன்னம் சூடேறுவதை நினைத்து திகைத்தாள்.
Comments
Post a Comment