Sms ch 17 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 17

கௌஷிக் சத்யா படித்த அதே காலேஜில் மூன்றாம் வருடம் படிக்கும் சீனியர். வெளியே rough and tough ஆக சுற்றி கொண்டிருந்த கௌஷிக் பின்னால் பல புதிர்களும் சில சோகங்களும் மறைந்திருத்தன. கௌஷிக் உடன் சுற்றும் அவன் உடன்பிறவா சகோதரன் ஷ்யாம். கௌஷிகிற்கு பெற்றோர் கிடையாது, அவன் வளர்ந்தது அவனுடைய தந்தை வழி சொந்தமான ஷ்யாம் வீட்டில் தான். ஷ்யாம் கௌஷிக்கை விட இரண்டு வயது பெரியவன். ஷ்யாம் பெற்றோர்கள் என்ன பிசினஸ் செய்கிறார்கள் என்று யாருக்கும் பெரிதாக தெரியாது, ஆனால் அந்த ஊரில் பெரிய பணக்காரர்கள். அரசியல் வட்டாரத்திலும் அவர்களுக்கு என்று ஒரு பெயர் இருந்தது. இதனால் ஷ்யாம், கௌஷிக் பண்ணும் ரவுடித்தனங்கள் மன்னிக்கப்பட்டன தண்டனைகள் இல்லாமல். ஷ்யாமிற்கு நினைத்த பெண்ணை அடையும் அளவு வசதி வாய்ப்பும் திமிரும் இருந்தது. கௌஷிக் ஷ்யாமுடன் சேர்ந்து சில தவறுகள் செய்தாலும் பெண்கள் விஷயத்தில் அவன் ஷ்யாமை விட்டு விலகி இருப்பான். படிப்பிலும் கௌஷிக் சளைத்தவனில்லை. ஷ்யாமோடு சேர்ந்து ஊர் சுற்றினாலும் கிளாசில் பாடங்களை எளிதாக புரிந்து கொள்வான். நல்ல மதிப்பெண்களும் பெறுவான். ஷ்யாமிற்கும் சேர்த்து படிப்பான், எக்ஸாமில் ஷ்யாமிற்கு உதவி செய்வான், சில திருட்டுதனங்கள் செய்தாலும் அவர்களை கண்டிக்க ஆள் இல்லாமல் இருந்தது. போதாக்குறைக்கு அவ்வப்போது போதை பழக்கம் வேறு. கௌஷிக் வெளிப்படையாக பார்த்தால் ஷ்யாமுடன் சேர்ந்து இருக்கும் ஒரு ரவுடி என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள், ஆனால் கொஞ்சம் அவனை புரிந்து கொண்டால் தெரியும், அவன் கெட்டவன் போர்வைக்குள் இருக்கும் ஒரு நல்லவன் என்று. ஷ்யாமிற்காக எதையும் செய்பவன் என்று புரியும். சின்ன வயதில் இருந்தே தனக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்திற்கு, ஷ்யாமிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் அவனுக்கு தெரிந்த தர்மம். ஒருமுறை ஷ்யாம் செய்த தவறை கௌஷிக் பழி ஏற்றான். அதே காலேஜில் படித்த சத்யாவிற்கு ஷ்யாம் தான் நிஜ குற்றவாளி என்று தெரியும். ஆனால் இவர்கள் விஷயத்தில் வீணாக தலையிட்டு தன் படிப்பை கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. ஆனால் இத்தனை நாட்கள் வெறும் ரவுடி என்று அவள் நினைத்துகொண்டிருந்த கௌஷிக் மீது அவளுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. ஒரு முறை சத்யாவை இரண்டு பையன்கள் சேர்ந்து ragging செய்த போது கௌஷிக் அவளை அவர்களிடம் இருந்து காப்பாற்றினான். இப்படி ஒரு சில சம்பவங்களுக்கு பிறகு அவளுக்கு கௌஷிக் மீது ஒரு வித அன்பும் ஏற்பட்டது. அவனும் சத்யாவின் வருகைக்காக, பார்வைக்காக காத்திருக்க ஆரம்பித்தான். நெறைய ஆண்கள் propose செய்தும் கண்டுகொள்ளாத சத்யாவின் கண்கள் கௌஷிக்கை தேட ஆரம்பித்தன. ஒரு நாள் ஷ்யாம் இல்லாத நேரத்தில் கௌஷிக் சத்யாவை அணுகினான்.


“Hi....சத்யா தான உங்க பேரு? என் பேர் கௌஷிக், final year Microbiology படிக்கிறேன், நீங்க political சயின்ஸ் தான படிக்கிரீங்க?”


“ஆமாம்” நடந்து கொண்டே பதில் சொன்னாள் சத்யா.


“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”


சத்யா நின்றாள். “என்ன?”


“அது...” என்று கொஞ்ச நேரம் தயங்கிவிட்டு “ஒன்னும் இல்லை” என்றான்.


சத்யா அவனை ஏற இறங்க பார்த்தாள்.


“உங்களை ஒன்று கேட்கலாமா?” என்றாள்.


“ம்ம்ம் கேளுங்க, ஷ்யாம் உங்கள் அண்ணனா?”


“அண்ணன் மாதிரி, ஏன் கேட்கிறீர்கள்?”

“அந்த drugs அ ஷ்யாம் தான் உங்கள் சட்டை பையில் போட்டார் என்று உங்களுக்கு தெரியுமா?”


“தெரியும்”


“பிறகு ஏன் நீங்கள் அந்த பழியை ஏற்றீர்கள்?”


“அது.... அவன் என் அண்ணன் மாதிரி என்று சொன்னேனே”


“ஓ... Ok” என்று மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.


“ஏன் திடீர்னு அதை பத்தி மட்டும் பேசிட்டு போறீங்க?”


“தெரியல அன்னைக்கு ஷ்யாம் உங்கள் பாக்கெட்டில் அந்த பொட்டலத்தை போட்டதை பார்த்தேன், ஆனால் நீங்கள் பழி ஏற்றீர்களே, அது ஏன் என்று புரியவில்லை, அதனால் கேட்டேன், சரி நான் வருகிறேன்” என்று வேகமாக நடந்தாள் சத்யா.


கௌஷிக்கு கொஞ்ச நேரமாவது நின்று பேசினாளே என்று சந்தோஷப்படுவதா இல்லை சம்மந்தமில்லாமல் திடீரென்று அந்த பொட்டலத்தை பற்றி பேசினாளே அதற்காக வருத்தப்படுவதா என்று புரியவில்லை. அந்த drug விஷயத்தில் தன்னை தவறாக நினைக்கிறாள் போல.


கௌஷிக்கை பார்ப்பதை, அவன் பார்க்கும் போது தனக்குள் ஏற்படும் பரவசத்தை சத்யா கவனத்தில் கொள்ளக்கூடாது என்று நினைத்தாள். கௌஷிக் தன் IAS குறிக்கோளுக்கு தடையாக வருவானோ என்று அவள் பயந்தாள். அது மட்டுமில்லை கௌஷிக் சில விஷயங்கள் தவறு செய்தாலும் அவன் நல்லவன் தான் என்று சத்யா நம்பினாள், ஆனால் ஷ்யாம் நல்லவனில்லை, ஷ்யாமிற்கு விஸ்வாசமாக இருக்கும் கௌஷிக் தனக்கு தேவை இல்லை என்று நினைத்தாள். ஆனால் கௌஷிக் மற்ற சில ஆண்கள் போல் தன் பின்னாலயே சுற்றவில்லை, தன்னை நய் நையென்று என்று கடிதம், மெசேஜ், call என்று தொல்லை செய்வதில்லை, சொல்லப்போனால் கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் தனக்கு ஒரு பாதுகாப்பு வளையம் போல் அவன் இருக்கிறான் என்பதை அவள் அறியாமல் இல்லை. அவளை தொல்லை செய்தால் கௌஷிக்கின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்று மற்றவர்கள் அவளை தொல்லை செய்யாமல் சென்றார்கள். கௌஷிக் அவளை தொலைவில் இருந்து பார்ப்பதோடு சரி, என்றாவது பேசலாம் என்று அவள் அருகில் வருவான், ஆனால் வேண்டாம் என்று விலகி விடுவான். கௌஷிக் மறைத்து வைத்தும் இந்த விஷயம் ஷியாமிற்கு தெரிய வந்தது.


ஒரு மாலை வேளையில் ஷ்யாம் கேட்டான்.


“என்னடா அந்த first year political science பொண்ணு சத்யாவை love பண்றியாமே, உண்மையா?”


“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று மறுத்தான் கௌஷிக்.


“ஏன்டா என்கிட்ட சொல்ல மாட்டியா?”


கௌஷிக் இதற்கு தான் பயந்தான். சத்யாவை அவன் விரும்பினான். ஆனால் ஷ்யாமால் சத்யாவிற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று பயந்தான். தனக்கு சத்யாவின் காதல் கிடைக்காமல் இருப்பதே நல்லது. உப்பிட்ட கடமைக்கு ஷ்யாமை நான் பொறுத்து போகலாம், ஆனால் சத்யா பொறுத்து போக வேண்டிய அவசியமில்லை, அவளுக்கு நான் சரி வர மாட்டேன், இந்த காரணத்தினால் தான் அவன் சத்யாவிடம் தன் எண்ணங்களை வெளிப்படுத்தவில்லை, ஆனால் அவளை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஷ்யாமிற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று நினைத்தும் தெரிந்து விட்டது. 


“சொல்லுடா சத்யாவை love பண்றியா?” என்று கௌஷிக்கை ஆழமாக பார்த்தான். கௌஷிக் இல்லை என்று சாதித்தான்.


சிறிது நேரம் கழித்து ஷ்யாம் சொன்னான். “நாம இனிமேல் இந்த ரவுடித்தனம், drugs டீலிங் எல்லாம் விட்டுடனும் டா, எத்தனை நாளைக்கு இப்படி சுற்றி கொண்டிருப்போம், நம் அம்மா அப்பா தான் பொறுப்பில்லாமல் விட்டுவிட்டார்கள். இனிமேல் நாமாவது பொறுப்பாக இருக்கலாம், உன்னிடம் சொல்லவில்லை, எனக்கு நம்ம கிளாஸ் சுனிதாவை பிடிக்கும் தெரியும் தானே, அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டேன், அவளும் சரி என்றுவிட்டாள். ஆனால் அவள் அம்மா அப்பா சம்மதம் வாங்க வேண்டும்”


“இது ரொம்ப நல்ல விஷயம் ஷ்யாம்”


“அதான் சொல்றேன், நீ சத்யாவை விரும்பினால் தைரியமாக போய் பேசு, அப்பாவும் நமக்கு கொஞ்சம் பிசினஸ் பங்கை தருவார், அதை முன்னேற்றி நாம் பிழைத்து கொள்ளலாம்”


கௌஷிக்கும் இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது. ஒரு நாள் தனியாக சந்தர்ப்பம் கிடைக்கும் போது சத்யாவிடம் பேசினான். 


“சத்யா உங்ககிட்ட பேசணும்”


“சொல்லுங்க”


“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, I love you”


சத்யா அமைதியாக யோசித்தாள். சிறிது நேரத்திற்கு பின் பேசினாள். “எனக்கும் உங்களை பிடிக்கும், ஆனால் உங்கள் நடவடிக்கைகள் என் வாழ்க்கைக்கு உதவாது”


“எதை சொல்கிறாய்? நான் எப்போதோ ரவுடித்தனம் எல்லாம் விட்டுவிட்டேன்”


“drugs?”


“ஆர்வக்கோளாரில் சிறிது நாட்கள் நான் எடுத்தேன், ஆனால் எனக்கு பிடிக்கவில்லை, நிறுத்திவிட்டேன், ஷ்யாம் கூட கைமாற்றி இருக்கிறானே தவிர அந்த பழக்கத்திற்கு அடிமை ஆகவில்லை, அவன் கூட இப்போதெல்லாம் ரொம்பவே மாறிட்டான், சுனிதாவை விரும்புகிறான், படித்து முடித்ததும் நாங்கள் இருவரும் அப்பாவின் பிசினஸ்ஸில் ஒன்றை எடுத்து நடத்தலாம் என்று நினைக்கிறோம், பிறகு அவன் சுனிதாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறான், நீ சம்மதித்தால் நாமும் திருமணம் செய்து கொள்ளலாம்”


“கேட்பதற்கு நன்றாக தான் உள்ளது, ஆனால் நீங்கள் திருந்திவிட்டீர்கள் என்று எனக்கு நம்பிக்கை வர வேண்டும், அது மட்டுமல்ல நான் IAS ஆக வேண்டும், அதற்கு டிகிரி முடிக்க வேண்டும், side by side கோர்ஸ் எல்லாம் இருக்கு, அதனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் நம்பிக்கை வரவும் உதவும், ஆனால் எனக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் என்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது”


“அப்படின்னா உனக்கு ஓகேவா? I mean நான் திருந்திவிட்டேன் என்ற நம்பிக்கை வந்தால் ஓகே தானே?” என்று குனிந்து சத்யாவின் முகத்தை ஆர்வமாக பார்த்தான்.


“ஆனால் நம்பிக்கை வரவேண்டும்...” என்று அவள் சொல்ல முயல “shhh வேற எதுவும் சொல்ல வேண்டாம், நான் திருந்திவிட்டேன், என்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை உனக்கும் வரும், இந்த நிமிடம், இந்த உணர்வை சேமித்து வைத்துக்கொள்வேன், மேற்கொண்டு எதையும் பேசி இதை வீணாக்க விரும்பவில்லை, நான் வருகிறேன்” என்று ஏதோ புதிதாக பிறந்தவன் போல, ஏதோ தென்றல் அவனை மெல்ல தூக்கி மேலே போவது போல் அவன் நடந்தது அவளுக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. 


இப்படியே முதல் வருடம் சத்யாவிற்கு முடிந்தது. முதல் வருட தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தாள். கௌஷிக் கல்லூரி படிப்பை முடித்தான், அவனும் நல்ல மதிப்பெண்கள் பெற்றே தேர்வானான். அவ்வப்போது சத்யாவும் அவனும் கொஞ்ச நேரம் நின்று பேசிக்கொள்வார்கள். “எங்கயாவது போகலாமா, என்னோடு பேசு, என்னோடு இரு” என்று சத்யாவை அவன் தொல்லை செய்ததில்லை. அவள் நன்றாக படிக்கட்டும் என்று தன் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி அவளின் முன்னேற்றத்திற்கு வழிவிட்டு ஒதுங்கியே இருந்தான். எப்போதாவது அவளோடு பேச நேரம் கிடைத்தால் அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சத்யா இரண்டாம் வருடம் படிக்க தொடங்கினாள். மற்ற ஆண்களை போல் இல்லாமல் கௌஷிக் கொஞ்சம் ஒதுங்கி இருந்தே அவளை ரசிப்பதும், எப்போதாவது பேசும் போது அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷம் எல்லாமே சத்யாவை ஏதோ அதிஷ்டகாரியாக உணர வைத்தது. கௌஷிக்கை விட அவனுடைய சந்திப்புக்காக சத்யா அதிகமாக ஏங்க ஆரம்பித்தாள். ஆனால் படிப்பு முக்கியம் என்று முடிந்த அளவு தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்தாள். ஷ்யாமும் கௌஷிக்கும் travel பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்கள். ஷ்யாமிற்கும் சுனிதாவிற்கும் திருமணம் நடந்தது.


சத்யாவும் கௌஷிக்கும் ஒரு நாள் காலேஜ் அருகில் ஒரு பார்க்கில் சந்தித்தர்கள். நடந்து கொண்டே பேசிகொண்டிருந்த அவர்களின் கைகள் உரசின. கௌஷிக் சத்யாவின் விரல்களை பிடித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். சத்யாவிற்கு இது வரை அவள் அனுபவிக்காத உணர்வு அது, முடிந்த அளவு அவள் உள்ளக்கிளர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் இயல்பாகவே பேசி நடந்தாள். 


“சத்யா நான் ஒன்று கேட்கலாமா?”


ஏதாவது முத்தம் கித்தம் கேட்டுவிடுவானோ என்று சத்யா பயந்தாள். “ம்ம்ம் கேளு...”


“Shall we hug?” என்று கௌஷிக் தயங்கியபடியே கேட்டான்.


“no” என்று சத்யா வேகமாக மறுத்தாள். 


கௌஷிக் முகம் லேசாக வாடியது. ஆனால் உடனே சமாதானம் ஆகி “sorry நான் அனுபவித்ததே இல்லை, அதனால் கேட்டுவிட்டேன், என்னை மன்னித்து விடு”


“எதை அனுபவித்ததில்லை?” என்று சொல்கிறாய்.


“I mean no one hugged me ever, அதான்”


“உன் அம்மா hug பண்ணி இருப்பார்களே, ஏன் பொய் சொல்கிறாய்” என்று சிரித்து கொண்டே சத்யா சொன்னாள். கௌஷிக் எதுவுமே சொல்லவில்லை. சத்யா “ஏன் என்ன ஆச்சு? ஒரு மாதிரியா ஆகிட்ட?”


“சொல்லிருக்கேன் இல்லை, அம்மா அப்பாவை நான் பார்த்ததே இல்லை, ஷ்யாம் அம்மா அப்பா தான் எனக்கு தெரிந்த அம்மா அப்பா எல்லாம், அவர்கள் எனக்கு தேவையானது எல்லாம் வாங்கி கொடுத்தார்கள், ஆனால் கட்டி அணைத்தது எல்லாம் இல்லை” என்றான்.


சத்யா அவன் கையை விட்டு நின்றாள். அவன் திரும்பி பார்த்து “ஏன் கையை விட்டுட்ட?”


“ஏன்னா இதுக்காக தான்” என்று கௌஷிக்கை கட்டி அணைத்தாள். இருவரும் ஒரு 5 நிமிடங்களாவது ஒருவரை ஒருவர் விலகாமல் அணைத்த படியே நின்றிருந்தனர். கௌஷிக் தான் முதலில் சத்யாவை விலக்கி நிறுத்தினான். “கிளம்பலாம்” என்றான்.


“ஏன் ஒரு மாதிரியா இருக்க, நான் அணைத்த மகிழ்ச்சியே இல்லையே உன் முகத்தில்” என்றாள் சத்யா முகம் வாட.


“அது இங்கிருந்தால் வேறு ஏதேதோ எண்ணங்கள் வரும், நீ முதலில் கிளம்பு” என்று சத்யாவை ஒரு டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தான், சத்யாவிற்கு முதலில் கௌஷிக்கின் நடவடிக்கை புரியவில்லை, பிறகு தான் புரிந்தது, அங்கே இருந்தால் தவறாக ஏதாவது நடந்துவிடும் என்று கிளம்ப சொல்லவிட்டான் போல. உள்ளூற மகிழிச்சியாகவும் இந்த படிப்பு எப்போது முடியுமோ என்று விரக்த்தியாகவும் இருந்தது.


“மகிழ்ச்சி இல்லை என்றா சொன்னாய், என் உயிர் போகும் போது கூட இந்த அணைப்பை நினைத்து கொண்டு தான் உயிர் விடுவேன்” என்று சத்யா மொபைலுக்கு மெசேஜ் அனுப்பினான் கௌஷிக். 


“என்ன பேச்சு இது? மகிழ்ச்சி என்று சொன்னால் போதாதா? அடுத்த முறை சந்திக்கும் போது இதற்காக உனக்கு அடி இருக்கிறது” என்று பதில் மெசேஜ் அனுப்பினாள்.


ஷ்யாமின் அம்மா, கௌஷிக்கின் வளர்ப்பு தாய் சத்யா பற்றி கேள்விப்பட ஒரு நாள் அவளை வீட்டுக்கு வரவழைக்கும் படி கூறினார்கள். கௌஷிக் சத்யாவிடம் சொல்ல அவளும் சம்மதித்து வந்தாள்.


சத்யாவை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்றான் கௌஷிக். பெரிய மாளிகை போல் இருந்தது அவர்கள் வீடு. சத்யா அண்ணாந்து பார்த்துவிட்டு “அடேங்கப்பா தலையே சுற்றுகிறது” என்றாள்.


“ஆனால் இதெல்லாம் நமக்கு சொந்தமில்லை, ஞாபகம் இருக்கட்டும்” என்றான் கௌஷிக்.


“எனக்கு தெரியாதா? நான் ஒன்றும் நீ பெரிய பணக்காரன் என்று விரும்பவில்லை, இந்த வீடு பணம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நமக்கு திருமணம் ஆன பிறகு அம்மாவுடன் இருக்கலாம்” என்றாள்.


கௌஷிக் அமைதியாக நடந்தான். “ஏன் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாய்?”


“நான் ஷ்யாமை விட்டுவிட்டு வரமாட்டேன், அவனும் நானும் சின்ன வயதிலே இருந்தே ஒன்றாக வளர்ந்தோம், என்றுமே என்னை பிரிய வேண்டும் என்று அவன் நினைத்ததில்லை, நானும் நினைத்ததில்லை”


“அப்படி என்றால் நாம் இங்கு தான் இருக்க வேண்டுமா?”


“ஆமாம்”


சத்யாவிற்கு பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் கௌஷிக்கிற்காக அமைதியாக இருந்தாள்.


“ஆமாம் நைட் எல்லாம் ரொம்ப முழிச்சு படிக்கிறியா? முகம் எல்லாம் வாடி இருக்கிறதே” என்றான் கௌஷிக்.


“எப்போதும் போல் தான் படிக்கிறேன், ஆனால் நீ சொல்வது சரி தான், கொஞ்சம் அப்பப்போ tiredness, giddyness எல்லாம் இருக்கிறது.” என்று பேசிக்கொண்டே அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

 

ஷ்யாமின் அம்மா “நீ தானா அந்த பொண்ணு, நான் லேடீஸ் கிளப் அது இதுன்னு போய்டுவேன் மா, அதனால ஷ்யாமும் கௌஷிக்கும் கொஞ்சம் வழி மாறிவிட்டார்கள். நீயும் சுனிதாவும் தான் அவர்கள் திருந்த முக்கிய காரணம் என்று கேள்விப்பட்டேன், good, I won’t be a typical mother in law, because I am not a typical mother, you see” என்று கொஞ்சம் சிரித்து விட்டு சொன்னார்கள் “நான் அக்கறை இல்லாதவள், ஏன் கெட்டவள் என்று கூட ஊரில் பேசுவார்கள், நான் அதை எல்லாம் காதில் வாங்கிகொள்வதில்லை, ஷ்யாமையும் கௌஷிக்கையும் 16 வயது வரை நன்றாக தான் வளர்த்தேன், அதற்கு பிறகும் நான் அவர்களை வளர்க்க முடியாது, you know what I mean? இனி அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், நீ IAS படிக்க போகிறாயாமே, very good, சரி நீங்கள் எல்லோரும் பேசி கொண்டிருங்கள், எனக்கு வேலை இருக்கிறது, வருகிறேன்” என்று வெளியே புறப்பட்டார்கள். சுனிதா சமைக்க சத்யாவும் உதவி செய்தாள். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். “வீட்டை சுற்றி காட்டு கௌஷிக்” என்று ஷ்யாம் சொல்ல கௌஷிக்கும் சுற்றி காண்பித்தான். 


“இது தான் என் bedroom, திருமணத்திற்கு பிறகு நமது bedroom” என்று கண்சிமிட்டினான் கௌஷிக். சத்யா முகம் சிவந்தாள். ஏதோ நினைவு வந்தவள் போல “ஆமாம் அன்னைக்கு என்ன சொன்ன? உயிர் போனா கூட இந்த அணைப்பை நினைத்து கொண்டு தான் உயிர் விடுவேன் என்று மெசேஜ் அனுப்புகிறாய், உன்னை அப்படி எல்லாம் உயிரை விட விட்டுவிடுவேனா, அப்படியே என் அணைப்பிலேயே 100 வயது வரைக்கும் வைத்திருப்பேன்” என்று சொல்லிக்கொண்டே சத்யா தடுமாறினாள். சிரித்துக்கொண்டே அவளை ரசித்து கொண்டிருந்த கௌஷிக் அவள் தலையை பிடித்து கொண்டே தள்ளாடுவதை பார்த்து அவளை தாங்கி பிடித்தான். “சத்யா are you ok?”


“லேசா தலை கிறு கிறுன்னு சுத்திற மாதிரி இருக்கு” என்று கட்டிலில் அமர்ந்தாள்.


“இரு சுனிதா, ஷ்யாமை அழைக்கிறேன்” என்று போக இருந்த கௌஷிக்கை கையை பிடித்து சத்யா தடுத்தாள். “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், நீ இங்க உக்காரு”


“ம்ம்ம் சத்யா நீ படிப்பதெல்லாம் சரி தான், ஆனால் உன் உடல்நலனை நீ கவனித்து கொள்ள வேண்டும்”


“நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை” என்று அவன் தோளில் சத்யா சாய்ந்தாள். அவளின் ரோஜாப்பூ இதழ்கள் கௌஷிக்கை என்னவோ செய்தது. அவன் லேசாக குனிந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான். “போதும் வெளில போகலாம், வா” என்று கௌஷிக் அவளை அழைத்தான். “ஏன் என்னை பிடிக்கவில்லையா?” என்றாள் சத்யா.


“உன்னை பிடிக்கவில்லை என்றால் என்னை எனக்கே பிடிக்கவில்லை என்று அர்த்தம், இங்கு இருந்தால் வேறு ஏதாவது நடந்து விடும்”


லேசாக தலையை பிடித்துக்கொண்டே சத்யா சொன்னாள். “பரவால்ல”


“hey விளையாடாத”


“நிஜமா தான் சொல்றேன்” என்று சத்யா மெல்லிய புன்னகையுடன் கௌஷிக் கையை பிடித்து இழுத்தாள்.


ஒரு மணி நேரமா அல்லது ஒரு ஜென்மமா என்று தெரியாத அளவிற்கு நேரம் கடந்ததை போன்ற உணர்வு கண் விழித்து பார்த்த சத்யாவிற்கு. கௌஷிக் டென்ஷனாக அமர்ந்திருந்தான். “தூங்கிட்டேனா?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார நினைத்த சத்யாவிற்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது. அவள் பயத்தோடு கௌஷிக்கை பார்க்க கௌஷிக் அவள் அருகில் வந்து அமர்ந்தான். “sorry சத்யா, தவறு என் மீது தான்”


சத்யா அவன் வாயை மூடினாள். “இல்லை என்மீது தான், நீங்கள் வேண்டாம் என்று தான் சொன்னீர்கள், நான் தான்....” என்று தலையை லேசாக அழுத்தி பிடித்தாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018