Sms ch 30 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 30
நந்தன் ஹாஸ்பிடல் வந்ததும் அங்கே சத்தியமூர்த்தி, கணேஷ், சகுந்தலா, ரோஹித் நின்று கொண்டிருந்தார்கள். நந்தன் வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான். சத்தியமூர்த்தியை பார்த்ததும் ஓடி வந்து “அம்மாவுக்கு என்னாச்சு அப்பா?” என்று பதட்டமாக நந்தன் கேட்டான். “Heart attack என்று சொல்கிறார்கள், ஆனால் நேரத்திற்கு அழைத்து வந்ததால் மருந்தை கொடுத்து blood clot ஐ கரைத்து விடலாம், காப்பாற்றி விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.
கண்களை துடைத்துவிட்டு கொண்டு மீண்டும் சத்தியமூர்த்தியே பேசினார். “ஆனா ஒரு நிமிஷம் எனக்கு உயிரே கைல இல்லப்பா” என்றார் கைகள் நடுங்க. நந்தன் அவரை அணைத்து “பயப்படாதீங்க அப்பா, அதெல்லாம் அம்மாவிற்கு ஒன்றும் ஆகாது” என்று தேற்றினான்.
“மருந்துக்கான இந்த பணத்தை கட்டி விடுகிறீர்களா?” என்று சேலை அணிந்த, நிர்வாக துறையில் இருக்கும் பெண் ஒருத்தி வந்து ஒரு பில்லை நீட்ட கணேஷ் அதை வாங்கிக்கொண்டு “நான் போய் கட்டிட்டு வந்துடுறேன் அண்ணா” என்று சென்றார்.
நந்தன் ரோஹித்திடம் சென்றான். “என்னடா திடீர்னு அம்மாவுக்கு இப்படி?” என்று கேட்டான்.
“தெரியலடா காலைல Sunday தானேன்னு எல்லாரும் மெதுவா தான் எந்திரிச்சு வந்தோம், பூரி செய்யலாமா இடியாப்பம் செய்யலாமா என்றெல்லாம் பெரியம்மா நன்றாக தான் பேசிகொண்டிருந்தார்கள், பிறகு பூரி சாப்பிட்டோம், பெரியம்மாவும் சாப்பிட்டார்கள், சரி எல்லாரும் வெளில எங்கயாவது போகலாமா, கிரிஷ் ஸ்ரீதிகா மட்டும் தனியாக போகட்டும் என்றெல்லாம் சிரிப்பும் கேலியுமாக பேசிகொண்டிருந்தோம், திடீரென்று அஜீரண கோளாறு மாதிரி இருக்கிறது, கை வலிக்கிறது என்று இடது கையை பிடித்தார்கள், கண்மூடி திறப்பதற்குள் கீழே விழுந்து விட்டார்கள், எல்லோரும் ஹாஸ்பிடல் வர வேண்டாம் என்று நாங்கள் மட்டும் புறப்பட்டு வந்தோம், மாலினி அத்தை எல்லோருக்கும் துணையாக வீட்டில் வந்து இருப்பதாக சொன்னார்கள்”
“மனசே சரி இல்லடா, இது தானே first attack, இனிமேல் கொஞ்சம் carefulla பாத்துக்கணும் டா அம்மாவை” என்றான் கவலையுடன்.
“பயப்படாதா டா, நாம இத்தனை பேர் இருக்கோம் இல்ல, அதெல்லாம் நல்லபடியா பாத்துக்கலாம்”
சில மணி நேரங்கள் கழித்து இப்போதைக்கு பயப்பட ஒன்றுமில்லை, ஆனால் இரண்டு வாரங்கள் observation ல் இருந்தால் நல்லது, சில diet and lifestyle changes செய்தால் மறுபடியும் ஒரு attack வராமல் தடுக்கலாம், அவர்கள் உடல்நிலை தேறியதும் நான் என்ன என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை அவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன், எல்லாவற்றையும் விவரமாக சொல்கிறேன், இப்போது அவர்களை பார்க்கலாம் என்று டாக்டர் கூறியதும் அனைவரும் சென்று பார்த்தனர். நந்தன் கமலா அம்மா அருகில் முட்டி போட்டு அவர்களின் தலையை தடவி கொடுத்தான். பேச முடியாமல் அவனுக்கு தொண்டை அடைத்தது. “பயந்துட்டியா நந்து” என்று கமலா அம்மா நந்தனின் கையை பிடித்து வாஞ்சையுடன் கேட்டார். ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான் நந்தன். “பயப்படாத டா, அம்மா அப்படி எல்லாம் உன்னை விட்டுட்டு எங்கயும் போய்ட மாட்டேன்” என்று புன்னகைத்துவிட்டு சத்தியமூர்த்தியை பார்த்தார். அவர் கண்கள் கலங்க “என்ன கமலா இது? இத்தனை வருஷத்தில் என்னை முதல் முறையாக இப்படி பயமுறுத்தி விட்டாயே”.
“அத்தான, அக்கா தான் நம்ம வீட்டோட தூண், அவங்களுக்கு ஒன்னும் ஆகாது, அவங்களே தைரியமா இருந்தா கூட நாமெல்லாம் பேசி பேசி அவர்களை பயமுறுத்தி விடுவோம் போலிருக்கிறதே, அக்கா பயப்பட ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார், நீங்கள் வீட்டிற்கு வர வேண்டியது, ரெஸ்ட் எடுக்க வேண்டியது, எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது, அவ்வளவு தான் உங்கள் வேலை, சொல்ல சொல்ல கேட்காமல் எந்த வேலையும் இழுத்து போட்டு செய்வதோ, எல்லோரையும் பற்றி கவலை படுவதோ கூடவே கூடாது” என்றார் சகுந்தலா தீர்க்கமாக.
“நீ இருக்கும் போது நான் ஏன் கவலை படப்போகிறேன் சகுந்தலா” என்றார்.
கமலா அம்மா இரண்டு வாரங்கள் ஹாஸ்பிடலில் இருந்துவிட்டு வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்தார்கள். நந்தன் அவர்களை விட்டு அப்படி இப்படி நகரவில்லை. சத்தியமூர்த்தியும், சகுந்தலாவும் துணைக்கு இருந்தாலும் நந்தனும் அவர்களுக்கு துணையாக அங்கேயே இருந்தான்.
இடையில் சத்யா என்னாச்சுன்னு தெரியலையே என்று பதட்டமாக இருந்தவள் முதல் முறையாக நந்தனின் phone நம்பர் இல்லாததை நினைத்து தன்னை தானே நொந்து கொண்டாள். தருணின் ஸ்கூல் bag ல் எல்லாம் தேடி பார்த்தாள், கிடைக்கவில்லை. ஒரு வழியாக செம்மொழி பூங்கா சென்று மாலை தருண் வந்ததும் “அங்கிள் உன்கிட்ட phone நம்பர் குடுத்தாரு இல்ல, அது எங்க?” என்று கேட்டு வாங்கினாள்.
“call செய்யலாமா வேண்டாமா? அவர்கள் அங்கே என்ன நிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லையே, இந்த நிலையில் call செய்வது தொல்லை செய்வது போல இருக்குமா?” என்றெல்லாம் யோசித்து விட்டு “call செய்துவிடுவோம், பாவம் ரொம்ப பதட்டமாக இருந்தாரே” என்று call செய்தாள். சத்யாவின் நம்பரை தன் மொபைலில் save செய்யாததால் யாரோ என்று நினைத்து நந்தன் எடுக்கவில்லை. “என் நம்பர் அவருக்கு தெரியாது என்று நினைக்கிறேன், தொடர்ந்து call செய்ய வேண்டாம், நாளைக்கு வேண்டுமானால் மறுபடியும் முயற்சிக்கலாம் என்று எண்ணி, மறுநாள் மாலை call செய்தாள். நந்தன் அந்த call ஐ லேட்டாக தான் பார்த்தான். மீண்டும் அதில் பெரிதாக கவனம் செலுத்தாமல் மறந்துவிட்டான்.
இரண்டு வாரங்கள் பரிந்துரைக்க பட்டும் அதற்கு மேல் ஹாஸ்பிடலில் இருக்க முடியவில்லை என்று கமலா அம்மா பிடிவாதத்தால் மூன்று நாட்களிலேயே discharge ஆகி வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் இரண்டு வாரங்களும் அம்மாவை டாக்டர் பரிந்துரைப்படி கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள நந்தன் முடிவு செய்திருந்தான். நந்தன் கமலா அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு தன் அறைக்கு திரும்பும் போது தான் நினைத்தான் சத்யாவை பற்றி. அவளுக்கு அம்மா பற்றி எதுவுமே சொல்லவில்லையே, என் நம்பர் இருந்திருந்தால் அவளே கூட call செய்திருப்பாள், தருணிடம் கொடுத்தேன், ஆனால் அவன் சின்ன பையன், எங்கேயாவது தொலைத்து இருப்பான், சத்யா நம்பரும் இல்லை என்று யோசித்துக்கொண்டே படுத்தவன் மதுவுக்கு call செய்தான்.
“ஹேய் மது தூங்கிட்டியா?”
“என்ன விஷயம் சொல்லு, அம்மா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க, சரி உன்கிட்ட சத்யா நம்பர் இருக்கா?”
“எந்த சத்யா?”
“அம்பத்தூர் branch ல நீ வேலைக்கு சேர்த்த சத்யா தான், இங்கே என்ன ஆயிரம் சத்யாவா இருக்கிறார்கள்?” என்றான் சலிப்பாக.
“ஓஹ் அந்த பொண்ணா? ஒரு நிமிஷம் லைன்லேயே இரு, சரி நோட் பண்ணிக்கோ” என்று சத்யா நம்பரை கொடுத்தாள்.
நம்பரை சொல்லி முடித்ததும் மதுவே பேசினாள் “ஹேய் என்ன அந்த பொண்ணுக்கு ரூட் விடுறியா? அடிப்படுவ படவா, அந்த பொண்ண பாத்தாலே பாவமா இருக்கும், உன் தகிட தத்தோம் வேலை எல்லாம் அவகிட்ட வச்சுக்காத”
“ஹேய் ச்சி லூசு மாதிரி ஏதாவது உளறிகிட்ட இருக்காத, போனை வை முதலில்” என்று call ஐ துண்டித்தான் நந்தன்.
சத்யாவின் நம்பரை type பண்ணும் போதே call history ல் அவளுடைய missed calls வந்தன. “ஓஹோ சத்யா தான் மூன்று நாட்களாக மாலை நேரத்தில் call செய்திருந்தாளா?” என்று யோசித்துக்கொண்டே, மணி 10 ஆகிறதே, இந்த நேரத்தில் call செய்யலாமா இல்லை காலையில் பேசிக்கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்துவிட்டு call பட்டனை அழுத்தினான்.
அப்போது தான் தூங்க சென்றிருந்த சத்யா நந்தன் நம்பரை பார்த்ததும் வேகமாக attend செய்தாள். நந்தன் பேச ஆரம்பிப்பதற்குள் “அம்மா எப்படி இருக்காங்க?” என்றாள். நந்தன் புன்னகைத்துவிட்டு “நல்லா இருக்காங்க, பயப்பட ஒன்றுமில்லை” என்றான்.
“என்னாச்சு heart attack தானா?”
“ஆமாம், இது தான் முதல் முறை, அடுத்த முறை attack வராமல் இருக்க சில டிப்ஸ், வந்தால் என்ன அறிகுறிகள், எப்படி stress இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்”
“ஓஹோ சரி கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்”
“ம்ம்ம் சரி, sorry நானே உனக்கு call செய்து சொல்லி இருக்க வேண்டும், உன் நம்பரும் தெரியாது, அதோடு இல்லாமல் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன், அதனால் தான் நீ call செய்ததை கூட கவனிக்கவில்லை, இப்போது தான் மதுவிடம் உன் நம்பரை வாங்கினேன், நீதான் மூன்று நாட்களாக call செய்திருக்கிறாய் என்று பிறகு தான் புரிந்தது “
“பரவால்ல இந்த மாதிரி நேரத்தில அம்மாவை பார்த்துக்கொள்வது தான் முக்கியம்”
“சரி தருண் எங்கே? என் நம்பரை பத்திரமாக வைத்திருப்பான் போல் தெரிகிறது”
“ஆமாம் அவ்வப்போது உங்களுக்கு call செய்ய வேண்டும் என்று சொல்வான், நான் தான் உங்களை அனாவசியமாக தொல்லை செய்ய கூடாது என்று சொல்லிவிடுவேன், அவன் 9 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டான்.”
“அவன் call செய்யவேண்டும் என்று சொன்னால் நீ ஏன் தடுக்கிறாய்?”
“பின்ன அப்படியே call செய்துகொள் என்று விட சொல்கிறீர்களா? உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும், அவனும் அவன் வயதிற்கு படிப்பது, விளையாடுவது என்று இருக்க வேண்டாமா?”
“சரிங்க மேடம், நீங்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும், சரி மூன்று நாட்களாக சரியான தூக்கமே இல்லை, நான் தூங்கபோறேன், good night” என்றான்.
“Good night” என்று அவளும் புன்னகையுடன் call ஐ cut செய்தாள்.
இரண்டு வாரங்கள் ஆபீஸ் செல்லாமல் நந்தன் விடுப்பு எடுத்து இருந்தான். ரோஹித் மதுவிடம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள சொல்லி இருந்தான்.
நந்தன் அலுவலகம் வராத இந்த நாட்களில் தீபிகா சில database க்கு அனுமதி அளிக்குமாறு மதுவிடம் கேட்டாள். இந்த database எல்லாம் உங்களுக்கு தேவைப்படாதே என்று மது மறுத்துவிட்டாள். ஆனால் ஆஃபிஸில் இருக்கும் இன்னொரு பெண்ணை தாஜா பிடித்து தனக்கு அந்த database அனுமதி எல்லாம் வேண்டாம், ஆனால் சத்யா என்ற பெயரில் நம் employees யாராவது அமைந்தகரையில் இருந்து வருகிறார்களா என்று தெரிய வேண்டும் என்று கேட்டாள். நந்தனின் நெருங்கிய உறவினர், தினமும் அவனுடன் வருபவள் அவள் கேட்டு மறுத்தால் நன்றாக இருக்காது என்று எண்ணி அந்த பெண்ணும் database ஐ check செய்து விட்டு அம்பத்தூர் branch ல் சத்யா என்று ஒரு பெண் இருப்பதாக சொன்னாள், address கூட அமைந்தகரை தான் என்றாள். Marital status என்ன என்று தீபிகா கேட்டாள் “widow” என்றாள் அந்த பெண். “அவளே தான்” என்று தீபிகா மனதிற்குள் கருவினாள்.
நந்தன் கமலா அம்மாவுடனேயே இருக்கும் போதெல்லாம் தீபிகாவும் அவர்களுக்கு உதவியாக இருக்க முயற்சி செய்தாள்.
“அது தான் நான் அம்மாவை பார்த்துக்கொள்கிறேனே, உனக்கு எதற்கு இந்த சிரமம் எல்லாம், நீ ஆபீஸ் போகலாமே” என்று நந்தன் தீபிகாவை தூரத்தினான். தீபிகாவிற்கு உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது. அதை மறைத்துக்கொண்டு “R&D துறையை அமைக்க அம்பத்தூர் branch ல் தான் போதுமான இடவசதி உள்ளது, ஆனால் அங்கு நேரில் சென்று பார்த்து சில ஆய்வுகள் செய்ய வேண்டும், அவ்வளவு தூரம் தனியாக செல்ல யோசனையாக உள்ளது, நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும், நீங்கள் வர முடியாவிட்டாலும் மதுவை என்னுடன் அனுப்பி வையுங்கள்” என்றாள்.
“மதுவிற்கு நெறைய வேலைகள் இருக்கும், என்னாலும் இப்போது வர முடியாது, ஏதோ R&D துறையை செயலாக்கி காட்டுவேன் என்று அடிக்கடி சொல்வாயே, இப்படி எல்லாவற்றுக்கும் துணையை எதிர்பார்த்தால் எப்படி செயலாக்கி காண்பிப்பாய்?” என்று கேள்விக்குறியாய் கேட்டான்.
“அதற்காக நான் என் இஷ்டத்திற்கு செயல் பட முடியுமா? அடிக்கடி அம்பத்தூர் கிளைக்கு செல்ல நேரிடும், நீங்கள் இருந்தால் உடனே உடனே கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரலாம்”
“ஷ்ஷ்ஷ்.... தீபிகா என்னை கோபப்படுத்த வேண்டும் என்றே ஏதாவது சொல்வாயா? நானே அம்மா பிடிவாதமாக வீட்டிற்கு வந்துவிட்டார்கள், டாக்டர் சொன்னது போல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள முயற்சி செய்கிறேன், ஆனால் அங்கே வா இங்கே வா என்று நீ என்னை இம்சிக்கிறாய், தினமும் மாலை வந்து நீ என்ன செய்தாய் என்று சொல், உன் ஐடியாக்களை பகிர்ந்துகொள், அது போதும்”
தீபிகா கோபித்துக்கொள்வது போல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றாள். “இதை தான் எதிர்பார்த்தேன்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
“அம்பத்தூர் branch வந்து பார்க்கிறேன், அப்படி என்ன பேரழகி என்று” என்று மனதிற்குள் புகைந்தவள் வேகமாக அம்பத்தூர் சென்றாள்.
Comments
Post a Comment