Sms ch 27 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

த்தியாயம் 27

நந்தனும் தருணும் சாப்பிட்டுவிட்டு ஏதோ puzzle கேம்ஸ் விளையாட ஆரம்பித்தார்கள். தன்னிடம் காண்பித்து கொள்ளாமல் இருவரும் சந்தித்து இருக்கிறார்கள் என்பது சத்யாவிற்கு கொஞ்சம் கோபத்தை வர வைத்திருந்தது. அவள் அவர்கள் இருவர் விளையாட்டிலும் கலந்து கொள்ளாமல் ஏதோ வேலை செய்வது போல் நடித்து கொண்டிருந்தாள். சத்யா கோபமாக இருப்பதையும், தங்கள் இருவருடன் பேசாமல் ஏதோ வேலை செய்வது போல் நடிப்பதையும் நந்தன் கவனித்து கொண்டிருந்தான்.

 

என்ன தருண் நீ? உனக்கு ஒன்றுமே விளையாட தெரியவில்லைஎன்றான் நந்தன்.

 

இதை கேட்ட சத்யாவிற்கு கோபம் அதிகம் ஆனது. வேகமாக அடுப்படியில் இருந்து வந்து தருண் அருகில் அமர்ந்து தருண் இதை எடுத்து இங்கே வை, இப்படி விளையாடுஎன்றெல்லாம் சொல்லிக்கொடுத்து தருணை வெற்றி பெற வைத்தாள். “எங்கள் தருணக்கா விளையாட தெரியாது? அவன் எவ்ளோ intelligent தெரியுமா?” என்று பெருமையாக தருணை தூக்கி வைத்து கொஞ்சினாள்.

 

நந்தன் லேசாக புன்னகைத்துவிட்டுசரி நான் ஒப்புக்கொள்கிறேன், தருண் புத்திசாலி தான், இந்த ஒருமுறை என்னை வென்றுவிட்டான்என்று பாராட்டினான்.

 

அதென்ன இந்த ஒருமுறை, எத்தனை முறை வேண்டுமானாலும் தருண் நன்றாக விளையாடி ஜெயிப்பான்என்றாள் சத்யா.

 

ம்ம்ம்ம் எனக்கென்னவோ சந்தேகமாக தான் உள்ளது

 

அதெல்லாம் இல்லை, மறுபடியும் விளையாடலாம்என்று முதலில் இருந்து தொடங்கி சத்யா தருணுக்கு உதவி செய்து வெற்றி பெற வைத்தாள்.

 

நேரம் போக போக சத்யா தன் கோபத்தை மறந்து விளையாட்டில் கவனமாகவும் நந்தனை தோற்கடிப்பதில் மும்முரமாகவும் இருந்தாள். நந்தன் தருணுக்காக தோற்றான். நேரம் போனது தெரியாமல் நந்தன், சத்யா, தருண் விளையாடவும், பேசி சிரிக்கவும் இருந்தார்கள். அப்போது தான் தன் மொபைலை எடுத்து பார்த்தான் நந்தன். மணி 8 ஆகி இருந்தது. தீபிகா, மது, அம்மா என்று அனைவரிடம் இருந்தும் missed calls. தீபிகாவின் நினைவு அப்போது தான் வந்தது. “ஓஹ் வீட்டிற்கு எப்படி திரும்பி போயிருப்பாள்?” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேசரி நான் கிளம்புறேன்என்று நந்தன் விடைபெற முயன்றான். “அங்கிள் இங்கயே எங்க கூடவே இருங்க அங்கிள்என்று தருண் கெஞ்ச ஆரம்பித்தான். “அங்கிள்கு நெறைய வேலை இருக்கும், நீ என்கூட இருக்க மாதிரி அங்கிள் அவங்க அம்மா கூட இருக்கணும் இல்லை? அழாம அங்கிள்கு bye சொல்லுஎன்று சத்யா தருணை தேற்றினாள்.

 

நந்தனுக்கு தருணை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.

 

காரில் ஏறி சிறிது தூரம் சென்ற பிறகு முதலில் யாருக்கு call செய்யலாம் என்று யோசித்து விட்டு மதுவுக்கு call செய்தான். “சொல்லு மது, ரெண்டு மூணு தடவ call பண்ணிருப்ப போலஎன்று கேட்டான் நந்தன்.

 

நீ பாட்டுக்கு அந்த பொண்ண விட்டுட்டு போய்ட்ட, evening எப்படி போறது? சென்னை எனக்கு புதுசு, பஸ், டாக்ஸி எதுவா இருந்தாலும் எனக்கு பயம், call பண்ணினா நந்தன் எடுக்கவே மாட்டேங்குறாரு, நீயாவது call பண்ணுனு ஒரே ஆர்பாட்டம், அதான் call பண்ணி பாத்தேன், but அப்பவும் நீ எடுக்கலஎன்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள் மது.

 

சரி அப்புறம் எப்படி போனா?”

 

நானே உன் வீட்டுல போய் drop பண்ணிட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தேன், சரி நீ எங்க போயிட்ட? அம்பத்தூர் branch க்கு call பண்ணினப்போ நீ 3 மணிக்கே கிளம்பிட்டதா சொன்னாங்க, ஆனா நான் இந்த விஷயத்தை தீபிகாகிட்ட சொல்லல just to be safe”

 

“ok good, நான் ஒரு வேலை விஷயமா வெளில போயிருந்தேன், சரி நான் பாத்துக்குறேன், thanks தீபிகாவை drop பண்ணினதுக்கு

 

நந்தன் வீட்டை அடைந்ததும் கமலா அம்மா கோபமாக உட்கார்ந்து இருந்தார்கள். நந்தனுக்கு புரிந்துவிட்டது. தீபிகாவை விட்டுட்டு எங்க போனன்னு ஒரு பஞ்சாயத்து நடக்க போகுது என்று.

 

வாப்பா நந்தா, எங்க போயிருந்த? எவ்ளோ நேரமா உன்னை தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சிட்டு இருக்கோம்? கூப்டுட்டு போன பொண்ண பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுறது இல்லையா? முதல் நாள் அவளுக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுப்போம், ஒத்தாசைக்கு பக்கத்துலயே இருப்போம் ன்னு இல்லாம அவளை மதுகிட்ட விட்டுட்டு நீ பாட்டுக்கு கிளம்பி இருக்க, என்னப்பா இதெல்லாம்?” என்றார் வருத்தத்துடன். தீபிகாவும் கோபமும் வருத்தமும் கண்களில் நிறைந்திருக்க கமலா அம்மா அருகே நின்று கொண்டிருந்தாள்.

 

தப்பு தான் மா, sorry” என்று சொல்லிவிட்டு மாடிக்கு செல்ல எத்தனித்தான்.

 

நில்லுப்பா எங்க போயிருந்தன்னு சொல்லவே இல்லையே? அம்பத்தூர் branch க்கு call செய்த போது ஜெனி சொன்னாள், நீ 3 மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டாயாமேஎன்று கமலா அம்மா விசாரணை குரலில் கேட்க அம்மா ஒருகாலும் இப்படி தன்னை விசாரித்தது இல்லையே என்று யோசித்தவன் சிறு அமைதிக்கு பின் பதில் சொன்னான்.

 

ஆமாம் மா 3 மணிக்கெல்லாம் கிளம்பிட்டேன், என் friend வீட்டுக்கு போயிருந்தேன், அங்கேயே சாப்டுட்டு பேசிட்டு வர நேரம் ஆகிவிட்டது

 

நீ ராகவன், மது வீட்டுக்கு கூட அந்த அளவுக்கு போக மாட்டாயே, வெளியே தான் எங்கேயாவது சந்திப்பாய், இது யாரு புது friend?”

 

நந்தன் தன் அம்மாவையும் தீபிகாவையும் உற்று பார்த்தான். ஒரு நொடி அமைதிக்கு பின் சொன்னான். “புது friend தான்மா, சத்யான்னு ஒரு பொண்ணு, widow, அமைந்தகரையில் இருக்கிறாள் தன் மகனுடன், அவன் பேரு தருண், எனக்கு அவனை பிடிக்கும், அவ்வப்போது அவனுடன் நேரம் செலவழிக்க அவன் ஸ்கூலுக்கு அல்லது வீட்டிற்கு செல்வேன், இன்று அவர்கள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு அவனுடன் விளையாடிவிட்டு நேரம் போனதே தெரியவில்லை, அதனால் தான் calls attend பண்ண முடியவில்லை, மன்னித்து விடுங்கள், இப்போது எனக்கு தூக்கம் வருகிறது, நான் என் அறைக்கு செல்கிறேன்என்று சொல்லிவிட்டு வேகமாக தன் அறைக்கு சென்றுவிட்டான்.

 

கமலா அம்மாவும் தீபிகாவும் என்ன இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நம்மை மறுபேச்சு பேச வாய்ப்பு கொடுக்காமல் சென்று விட்டான். யார் அந்த சத்யா? விதவை என்கிறானே? அவள் மீது இவனுக்கு..... ஒன்றும் புரியவில்லையே என்று குழம்பி போய் நின்று கொண்டிருந்தார்கள்.

 

மறுநாள் கமலா அம்மா கேட்டார்கள். “இன்றாவது தீபிகாவை ஒழுங்காக அழைத்து வந்து விடுவாய் அல்லவா?”

 

அம்மா எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும், நேற்று நான் எதுவும் சொல்லாமல் முதல் நாளும் அதுவுமாக அவளை தனியாக விட்டது தவறு தான், ஆனால் இன்று தெளிவாக சொல்லிவிடுகிறேன், நானே அழைத்து செல்வது கொண்டு வந்து விடுவது எல்லாம் முடியாத காரியம், எனக்கு வேறு வேலை, சிந்தனை இல்லாத பட்சத்தில் செய்வேன், ஆனால் அதற்காக என்னையே நம்பி இருக்க வேண்டாம், வேண்டுமானால் நம் வீட்டில் உள்ள வேறு காரில் டிரைவர் அண்ணனை அழைத்து சென்று விட்டுவிட்டு அழைத்து வர சொல்லுங்கள், இல்லை என்றால் மது நம் கம்பனிக்கு ரெகுலராக வரும் டாக்ஸி ஒன்றை அமைத்து தருவாள், அதில் போய் வரலாம், லண்டன் சென்று படித்து வேலை செய்து வந்த தீபிகா என்னை சார்ந்து இருந்து அவளுடைய நேரத்தை வீணாக்க மாட்டாள் என்று நம்புகிறேன்என்று சொல்லி தீபிகாவை பார்த்தான்.

 

ஆமாம் ஆண்ட்டி, அவரை ஏன் தொல்லை செய்ய வேண்டும், நேற்று கூட நான் அவரை எதிர்பார்த்து இருக்க கூடாது, தவறு என்மேல் தான், நானே என் போக்குவரத்தை பார்த்து கொள்கிறேன்

 

சரி நான் இப்போது ஆபீஸ் தான் செல்கிறேன், வா உன்னையும் அழைத்து செல்கிறேன்

 

பரவாயில்லை நந்தன், நான் டாக்ஸி பிடித்து செல்கிறேன்

 

“Ok your wish” என்று சொல்லிவிட்டு நந்தன் புறப்பட்டான்.

 

நந்தன் நடந்து கொண்டவிதம் தவறு தான், அதற்காக நீ வருத்தப்பாடாதே தீபிகாஎன்று கமலா அம்மா சமாதானம் சொன்னார்.

 

அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆண்ட்டி

 

நம் டிரைவரை கொண்டு விட சொல்கிறேன், நீ டாக்ஸியில் செல்ல வேண்டாம்

 

இல்லை ஆண்ட்டி பரவாயில்லை, இதற்காக தான் அப்பா பெண் கொடுத்த வீட்டில் தங்க வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள், எங்கள் மரியாதையை நாங்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? சீக்கிரமே நான் ஒரு ஹாஸ்டல் பார்த்து சென்று விடுகிறேன்என்று சொல்லிவிட்டு தீபிகா வேகமாக வெளியேறினாள்.

 

கமலா அம்மா மிக்க வருத்தத்துடன் சத்தியமூர்த்தியிடம் சென்றார்.

 

நந்தன் செய்ததை பார்த்தீர்களா? நம் வீட்டில் தங்கி இருக்கும் ஒரு பெண்ணை இப்படி தான் அவமதிப்பதா? இதனால் சகுந்தலா, கிரிஷ், ஸ்ரீதிகா கூட வருத்தப்படுவார்கள் அல்லவா?”

 

சத்தியமூர்த்தி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

 

உங்களிடம் தானே பேசுகிறேன், ஏதாவது சொல்லுங்களேன்

 

அவன் திருமணத்திற்காக தான் தீபிகாவை அவன் மீது திணிக்கிறோம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டான். அதனால் தான் இப்படி முகத்திற்கு நேராக பட்டு பட்டு என்று பேசுகிறான். இல்லை என்றால் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினரிடம் இப்படி தன்மை இல்லாமல் பேச மாட்டான்.

 

சரி அதற்காக இப்படியா? அந்த பொண்ணு கோச்சிக்கிட்டு ஹாஸ்டலில் தங்கிக்கிறேன்னு சொல்லுது, இதனால் வீணாக சம்மந்திங்களுக்கும், ஏன் நமக்கும் சகுந்தலாவிற்கும் கூட பிரச்சனை வரலாம்.

 

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. நான் நந்தன், தீபிகாவிடம் பேசுகிறேன் என்று சொல்லி நந்தனுக்கு call செய்து பேசினார். இப்படி முகத்தில் அடித்தார் போல் பேசுவதும், அந்த பெண்ணை நீ நேற்று விட்டுட்டு வந்ததும் தவறு என்றும் அதனால் குடும்பத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்றும் நிதானமாக நந்தனுக்கு விளக்கினார். தான் தீபிகாவிடம் பேசுவதாக சொல்லி போனை வைத்தான் நந்தன். லஞ்ச் நேரத்தில் தீபிகாவை வெளியே அழைத்தான், அவள் வர மறுத்தாள். வேலை இருக்கிறது என்று ஏதோ காரணங்கள் சொன்னாள். ஆனால் நந்தன் பிடிவாதமாக அவளை அழைத்து கொண்டு ஒரு ரெஸ்டாரண்ட் சென்று பேசினான்.

 

நேற்று உன்னை பற்றி யோசிக்காமல் விட்டது என் தவறு  தான், காலைல கூட கொஞ்சம் பட்டு பட்டுன்னு பேசாம நிதானமா பேசி இருக்கலாம், I am sorry” என்றான்.

 

சிறிது நேர அமைதிக்கு பின் தீபிகா சொன்னாள். “It’s ok”.

 

என்ன இன்னும் கோபம் குறைந்த மாதிரி தெரியவில்லையே

 

கோபம் எல்லாம் ஒன்றுமில்லை, anyhow நான் ஹாஸ்டலில் தங்குவது தான் எல்லோருக்குமே நல்லது

 

“no தீபிகா, என் அம்மா தான் உன் தந்தையிடம் பேசி அழைத்து வந்தார்கள், என்னால் என் அம்மா மனம் வருத்தப்படுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது, நீ எங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும்

 

இல்லை நான் அங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை

 

எனக்கு பிடிக்கவில்லை என்று யார் சொன்னார்கள்?”

 

நீங்கள் என்னை தவிர்க்கும் விதத்திலேயே தெரியும், வீணாக உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை

 

“See நீயும் நானும் லண்டனில் அப்படி இருந்ததால் வீட்டில் பார்க்கும் போது சகஜமாக பேச முடியவில்லை, ஆனால் உன்மீது எனக்கு கோபமோ வருத்தமோ கிடையாது, அப்படி இருக்கும் போது நான் தவிர்க்க வேண்டிய அவசியமும் கிடையாது

 

நீங்கள் என்னுடன் அப்படி இருந்ததற்காக வருத்தப்படுகிறீர்களா?”

 

நந்தன் பதில் ஏதும் சொல்லவில்லை.

 

“but you seemed to be enjoying that night” என்றாள் தலையை குனிந்த படியே.

 

“Of course I had a good time with you”

 

பிறகு ஏன் என்னை பிடிக்காதது போல் நடந்து கொள்கிறீர்கள்?”

 

தீபிகா அது வேறு, அப்போது எனக்கு நீ தேவைப்பட்டாய், நீயும் இணங்கினாய், ஒன்றாக இருந்தோம், அவ்வளவு தான், moreover நான் உன்னை தொடுவதற்கு முன்பே சொல்லிவிட்டேன், I just want to have sex, nothing more than that என்று

 

சொன்னீர்கள் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதன் பிறகு என் மனதளவில் நீங்கள் ஒரு இடத்தை பிடித்து வீட்டீர்கள், உங்களை தொடர்பு கொள்ள தேடினேன், ஆனால் முடியவில்லை, இத்தனை வருடங்களும் உங்களையே தான் நினைத்து கொண்டிருந்தேன், அப்போது தான் ஸ்ரீதிகா engagement வீடியோவில் உங்களை பார்த்து யார் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன்

 

“sorry தீபிகா, நான் உன் மனதில் அப்படி ஒரு எண்ணம் வர மாதிரி நடந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன், நாம் அன்று தான் முதன் முதலில் pub ல் சந்தித்தோம், நீ யார், எப்படி பட்டவள் என்று எனக்கு தெரியாது, நான் எப்படி பட்டவன் என்று உனக்கு தெரியாது, ஆனால் நாம் இருவரும் ஏதோ ஈர்க்க பட்டு சிரித்து பேசிகொண்டிருந்தோம், அப்போதே என் தோழி ஒருத்தி உன்னிடம் சொன்னாள், இவனை நம்பாதே, he just flirts with you for sex என்று, நானும் அது உண்மை தான் என்று சொன்னேன், அதெல்லாம் தெரிந்து தான் நீயும் என்னுடன் வந்தாய்

 

தெரியும், ஆனால் அது வெறும் ஈர்ப்பு அல்ல, காதல் என்று பிறகு தான் உணர்ந்தேன், I am sure you also felt something”

 

ஓஹ் தீபிகா..... தீபிகா, நீ நல்ல பெண், மீண்டும் மீண்டும் உன் மனதை உடைக்க வேண்டி உள்ளதே என்று வருத்தமாக உள்ளது, sex தவிர என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் உன்மீது தோன்றியதில்லை, என்னை மன்னித்து விடு

 

ஆனால் நீங்கள் பொய் சொல்கிறீர்களோ என்று தோன்றுகிறது, உங்களுக்கும் என்மீது உணர்வுகள் ஏற்பட்டது, ஆனால் அந்த அன்பு, உணர்வு, காதலை பார்த்து உங்களுக்கு பயம், அதனால் தான் என்னை மீண்டும் சந்திக்க வேண்டாம் என்று ஒதுங்கி கொண்டீர்கள்

 

நந்தன் ஒரு பெருமூச்சு ஒன்றை எடுத்தான். “தீபிகா நீ இப்படி எல்லாம் நினைப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை, உன்னை எந்த விதத்திலும் அந்த இரவில் mislead செய்யவில்லை என்றே நம்புகிறேன், உனக்கு அப்படி ஒரு எண்ணம் வரும்படி நான் நடந்திருந்தால் என்னை மன்னிக்கவும்

 

பிறகு ஏன் என்னை நீங்கள் சந்திக்கவே இல்லை என்று பதில் சொல்லுங்கள்என்று கேட்டுவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவாக கேட்டாள் நான் அந்த sex விஷயத்தில் கூட உங்களை திருப்தி படுத்தவில்லையா?” என்று தலையை குனிந்தபடியே.

 

தீபிகா ஏன் வீணாக உன் மனதை போட்டு குழப்பிக்கொள்கிறாய்

 

இல்லை I want to understand”

 

“Ok உன்னிடம் சொல்லாத உண்மை ஒன்றை இப்போது சொல்கிறேன், அன்றிறவு நாம் இருவருமே கொஞ்சம் alcohol சாப்பிட்டு இருந்தோம் இல்லையா?”

 

ஆமாம், அதனால் என்ன?” என்பது போல் தலையை அசைத்து கேள்விக்குறியாய் நோக்கினாள்.

 

நாம் இருவரும் ஒன்றாக இருந்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டோம், ஒரு 3 அல்லது 4 மணி இருக்கும், ஒரு call வந்தது, என்னுடைய மொபைலில் வருவதாக நினைத்து கவனிக்காமல் அட்டென்ட் செய்துவிட்டேன், அது உன்னுடைய மொபைலில் உனக்கு வந்த call என்று பிறகு தான் புரிந்தது, நான் hello சொல்வதற்கு முன்பாகவே எதிர்முனையில் இருந்து hello, தீபிகா நாம் இனிமேல் சண்டை போட வேண்டாம், இந்த நேரத்தில் எங்கே இருக்கிறாயோ என்று கவலையாக இருக்கிறது, தயவு செய்து சொல், நான் வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்று ஒரு ஆணின் குரல்என்று நிறுத்திவிட்டு நந்தன் தீபிகாவை நோக்கினான்.

 

தீபிகாவிற்கு வியர்த்தது.

 

தன்னையே தான் பார்க்கிறான், இப்போது நாம் தான் பதில் சொல்லவேண்டும் போல என்று யோசித்தவளாய் அமர்ந்திருந்தாள் தீபிகா.

 

அந்த குரலுக்கு சொந்தக்காரர் உன்னுடைய lover, boyfriend ஆக இருக்க வேண்டும், சரி தானே

 

தீபிகா சிறிது தயங்கிவிட்டு ஆமாம்என்றாள்.

 

இதனால் தான் உன்னை நான் மீண்டும் சந்திக்கவில்லை, you were amazing in bed but ஏற்கனவே ஒரு உறவில் இருக்கும் பெண்ணுடன் நான் அப்படி இருந்தது சரி இல்லை என்று வருத்தப்பட்டேன், நம் சந்தோஷத்திற்காக இன்னொருவரை ஏமாற்றுவது எனக்கு பிடிக்காது, break up ஆகி இருந்து நீயும் நானும் ஒன்றாக இருந்திருந்தால் அது வேறு, அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, but active relationship ல் இருக்கும் பெண்ணுடன் no, அது தவறு, pub ல் நாம் சந்தித்தபோதே நீ சொல்லி இருக்க வேண்டும், எனக்கு ஒரு boyfriend இருக்கிறார் என்று, நான் விலகி சென்றிருப்பேன், it’s not right, நான் உலக மகா உத்தமன் என்று சொல்லவில்லை, ஆனால் எனக்கென்று சில கொள்கைகள் இருக்கிறது, அவற்றை மீறி எனக்கு பழக்கம் இல்லை

 

சிறிது தடுமாறிவிட்டு தீபிகா மீண்டும் கேட்டாள். “so அது தான் நீங்கள் விலகி செல்ல காரணம் இல்லையா? நான் boyfriend பற்றி சொல்லாதது தவறு தான், ஆனால் நாங்கள் ஏற்கனவே பிரிந்து விடலாம் என்று பேசிக்கொண்டு தான் இருந்தோம், அந்த நிலையில் தான் உங்களை சந்தித்தேன், மனதில் வலிகளுடன் இருந்த எனக்கு உங்கள் அணுகுமுறை, சிரிப்பு, நட்பாக பழகியது, அரவணைப்பு இவை அனைத்துமே இதமாக இருந்தது, அதனால் தான் நான் என்னை மறந்து உங்களிடம் என்னை இழந்தேன், தவறு என்றால் மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை, ஏன் என்றால் it was pure love with you, அதற்கு பிறகு நான் வேறு எந்த ஆணோடும் அப்படி இருக்கவில்லை, இந்த ஒரு விஷயத்திற்காக நீங்கள் என்னை புறக்கணித்தது போதாதா?”

 

தீபிகா இந்த boyfriend விஷயத்தினால் தான் உன்னை தவிர்த்தேன், இல்லை என்றால் உன்னுடன் இன்னும் சில நாட்கள் பழகி இருப்பேன், இல்லை என்று சொல்லவில்லை, but sorry to be blunt, உன்னுடன் sex காக மட்டும் பழகி இருப்பேன், மற்றபடி காதல் எல்லாம் வந்திருக்காது

 

அதெப்படி உறுதியாக சொல்கிறீர்கள்? நீங்கள் என்னுடன் இருக்கும் போது எப்படி இருந்தீர்கள் என்று எனக்கு தெரியும், எனக்கு ஏற்பட்ட உணர்வு உங்களுக்கும் இருந்தது, நான் கூட உங்களுக்கு அந்த உணர்வே இல்லை போல என்று நினைத்து ஒதுங்கி விடலாம் என்று தான் இன்று காலை நினைத்தேன், but thank God, we talked. இப்போது தான் புரிகிறது என் boyfriend விஷயத்தினால் தான் நீங்கள் என்மீது இருந்த காதலை உணர மறுத்து இருக்கிறீர்கள், நீங்கள் அதை உணர்வீர்கள், அது வரை நான் காத்திருப்பேன்என்றாள் குதூகலமாக.

 

இதற்கு மேல் இவளை காயப்படுத்தாமல் இவள் மீது எனக்கு காதல் என்று ஒன்று இருந்ததில்லை, இனி வரப்போவதுமில்லை என்று எப்படி இவளுக்கு சொல்லி புரியவைப்பதுஎன்று நந்தன் சிறிது கவலையுற்றான். ஆனால் இதை வளரவிட்டால் தன் மீது உள்ள விருப்பதில் தீபிகாவின் மனம் தான் எதிர்காலத்தில் காயப்படும், சில சமயம் வருத்தப்பட்டாலும் உண்மையை சொல்வது தான் அவளுக்கும் எனக்கும் எல்லோருக்குமே நல்லது என்று மீண்டும் பேசினான்.

 

தீபிகா நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள், but I never had feelings for you. இனியும் அப்படி ஒரு எண்ணம் உன்மீது எனக்கு வராதுஎன்றான்.

 

அதையும் தான் பார்ப்போமேஎன்று சிரித்து கொண்டே எழுந்தாள் தீபிகா. “சரி வாங்க மீண்டும் வேலையை தொடங்கலாம்என்றாள் குதூகலமாக.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018