Sms ch 21 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 21
அந்த குளிர்பானத்தை குடிக்க வேண்டாம் என்று துரைசாமி தடுக்கவும் சத்யா ஒன்றும் புரியாமல் ஏன் என்று கேட்க இங்கே பேச வேண்டாம் என்னோடு காரில் வரவும், போகும் வழியில் சொல்கிறேன் என்று சத்யாவை தன் காரில் ஏற்றிக்கொண்டு துரைசாமி சென்றான். “என்னாச்சு அண்ணா, ஏன் அந்த குளிர்பானத்தை குடிக்க வேண்டாம் என்று சொன்னீர்கள்?” என்று கேட்டாள்.
“நான் சொல்லிடுவேன் மா, ஆனால் நீ எனக்கு எந்த பிரச்சனையையும் இழுத்துவிட கூடாது”
“கண்டிப்பாக எந்த பிரச்னையும் வராதுன்னா, சொல்லுங்க”
“நிச்சயமா வராது இல்ல? ஏன்னா எனக்கு வேலை இல்லாம போச்சுன்னா ரொம்ப கஷ்டமா போய்டும்”
“நிச்சயம் எந்த பிரச்சனையும் வராது, நீங்க சொல்லுங்க”
“அந்த ஷ்யாம் ஏதாவது கலந்து குடுத்து இருப்பானோன்னு சந்தேகம் தான் மா”
“என்ன சொல்றீங்க அண்ணா? அவன் ஏன் ஏதாவது கலந்து கொடுக்கணும்?” என்று நெற்றியில் வழிந்த வியர்வையை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டே கேட்டாள்.
“அவனுக்கு உன்மேல ஒரு கண்ணுமா”
“எப்படி சொல்றீங்க? காலேஜ் படிக்கும் போது கூட அவன் மற்ற பெண்களிடம் ஒரு மாதிரி நடந்து கொண்டிருக்கிறான் என்று தெரியும், ஆனால் ஒரு நாளும் என்னை தவறான நோக்கத்தோடு அவன் பார்த்ததோ, அணுகியதோ கிடையாதே” என்று குழப்பமடைந்தாள்.
“முன்னாடி எப்படின்னு எல்லாம் எனக்கு தெரியாது மா, எனக்கு தெரிஞ்சதை, என் மனசுல பட்டத சொல்றேன், நம்பறதும் நம்பாததும் உன்னோட விருப்பம், கௌஷிக் தம்பியை பத்தி அடிக்கடி விசாரிக்க வரேன்னு அவனை தனியா பாக்க வராத அவ்வளவு தான் சொல்லுவேன்”
சத்யாவிற்கு பயம் வயிற்றை பிசைந்தது. “இல்லண்ணா நான் இனிமேல் அவனை தனியா போய் பார்க்க மாட்டேன், ஏன் அண்ணா, கௌஷிக் சுனிதா விஷயம் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்க துரைசாமி “இதென்னடா வம்பா போச்சு, இந்த பொண்ணு நம்மள நல்ல விதமாக நடத்துமே, அந்த பாவி இந்த பொண்ண ஒன்னும் பண்ணிட கூடாதேன்னு நினச்சு உதவினா நம்ம உயிருக்கே ஆபத்து வந்துடும் போல இருக்கே” என்று மனதில் பீதியுடன் “அவர்கள் இருவரும் ஓடி போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன், அதை தவிர வேற ஒன்றும் தெரியாது” என்று முடித்துவிட்டார்.
ஷ்யாம் சத்யாவை குறி வைக்கிறான் என்று துரைசாமிக்கு தெரியும். துரைசாமி காசுக்காக சிறுசிறு தவறுகள் செய்பவன் தான், ஆனால் முழுக்க முழுக்க கெட்டவனில்லை என்று தான் சொல்ல வேண்டும். கௌஷிக், சுனிதா மரணம் பற்றியும் துரைசாமிக்கு ஓரளவிற்கு தெரிந்து இருக்க வேண்டும். ஏன் எனில் துரைசாமியை சில குற்றங்களுக்கு ஷ்யாம் எடுபிடியாக பயன்படுத்திகொள்வது உண்டு. ஷ்யாம் சத்யாவை முக்கியமான விஷயம் பேச வேண்டும், தனியாக வா என்று அழைக்கும் போதே துரைசாமிக்கு ஏதோ தவறு செய்ய தான் அழைக்கிறான் என்று புரிந்துவிட்டது. சிறிது நாட்களாகவே துரைசாமியின் மனசாட்சி அவனை குத்தி கொண்டிருந்தது. ஷ்யாம் செய்த தவறுகளுக்கு தானும் உதவி செய்தோமே என்று மனசாட்சி அவனை குத்தி காண்பித்து கொண்டிருந்தது. ஆனால் உதவி செய்ததற்கு ஷ்யாம் தருகிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை. அதனால் ஷ்யாம் மீது வேறு அதிருப்தியில் இருந்தான் துரைசாமி. தன்னுடைய பெயர் குறிப்பிடாமல் ஷ்யாம் வீட்டில் கொஞ்சம் போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருக்கிறான் என்று போலீசிடம் தகவல் கொடுத்தான். போலீசும் துரைசாமி எதிர்பார்த்த படி வந்திருந்தனர். துரைசாமி travels ஆஃபிஸில் ஷ்யாம் சத்யாவிற்கு ஏதேனும் சாப்பிட கொடுக்கிறானா என்று பார்த்து கொண்டிருந்தான். பிறகு தான் ரெய்டு பற்றி ஷ்யாமிடம் சொல்லி சத்யாவை அந்த சமயம் காப்பாற்றினான்.
ஆனால் சத்யா மேலும் ஏதாவது துருவினால் அது தனக்கு நல்லது இல்லை என்று துரைசாமி எச்சரிக்கையாக இருக்க ஆரம்பித்தான்.
துரைசாமி எச்சரித்த பிறகு ஷ்யாமை சத்யா தனியாக சென்று பார்ப்பதை தவிர்த்தாள். அவ்வப்போது அவனிடம் இருந்து கணக்கு காண்பிக்க அழைப்பு வரும். ஆனால் சத்யா மறுத்துவிடுவாள். எதுவாயினும் போனிலேயே சொல்லுங்கள் என்று கூறி முடித்து விடுவாள். ஷ்யாமிற்கு ஏதோ தோன்ற துரைசாமியை அழைத்தான். “என்ன துரை, அன்னைக்குன்னு பாத்து எப்படி கரெக்ட்டா போலீஸ் ரெய்டு வந்தாங்க” என்று கேட்டான். தன் திட்டம் தெரிந்துவிட்டதோ என்று துரைசாமி கொஞ்சம் பயந்தான். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “தெரியலையே சார், ஒருவேளை கௌஷிக் வழக்கை விசாரிக்கையில் உங்களின் போதை சம்மந்தப்பட்ட விஷயம் வெளியே வந்திருக்கலாம், அதனால் ரெய்டு வந்திருக்கலாம்” என்று துரைசாமி சமாளித்தான்.
“இருக்கலாம் துரை, நினைவிருக்கட்டும், கௌஷிக், சுனிதா விஷயத்தில் நீயும் ஒரு உடந்தை, என்னை மாட்டிவிடுவோ ஏமாற்றவோ நினைத்தால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை தான் உனக்கும், சத்யாவை காப்பாற்றுகிறேன் என்று வீணாக என் கோபத்துக்கு ஆளாகதே, நான் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்”
“தெரியும் சார், அந்த பொண்ணை காப்பாத்துவதால் எனக்கு ஒரு லாபமும் இல்லை, அதுவே உங்களுக்கு விசுவாசமாக இருந்தால் எனக்கு ஏதாவது பார்த்து செய்வீர்கள், கௌஷிக், சுனிதா பாடியை மறைத்ததில் கூட நீங்கள் எனக்கு ஒரு லட்சம் தருவதாக சொன்னீர்கள், அதை கொடுத்தீர்கள் என்றால் என் மகளின் சிகிச்சைக்கு உதவும்”
“தரேன் துரை, தராம எங்க போக போறேன், சத்யா விஷயம் முடியட்டும், உனக்கு செட்டில் செய்து விடுகிறேன்”
துரைசாமிக்கு என்னவோ உரைத்தது. “ஒரு வேலை சத்யா விஷயம் முடிந்ததும் என்னையும் போட்டு தள்ள மாட்டான் என்று என்ன நிச்சயம்? இவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எச்சரிக்கை என்ன எச்சரிக்கை? முடிந்தால் இவனே நமக்கு அடிபணிந்து செல்வது போல் செய்ய வேண்டும், எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றவா பார்க்கிறாய்? உன்னை அடிபணிய வைக்கும் துருப்பு சீட்டை சீக்கிரமே கைப்பற்றுகிறேன்” என்று மனதிற்குள் சங்கல்பம் செய்தான்.
ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் கௌஷிக் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. சத்யாவால் படிப்பை தொடர முடியவில்லை. கவிதா பிசினஸ்ஸை சத்யா எடுத்து கொஞ்ச நாட்கள் செய்தாள். ஷ்யாம் சொன்னது போன்றே ஒரு சிலர் கௌஷிக் போன்று ஒருவனை மும்பையில் பார்த்ததாக கூறினார்கள். பஞ்சாப் போலீசும் கௌஷிக் மும்பையில் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தார்கள். தான் மும்பை சென்று கௌஷிக்கை தேடப்போவதாக சத்யா சொல்லவும் ஏற்கனவே டாக்டர் ஒருவர் சத்யா depression ல் இருக்கிறாள், இடம் மாற்றம் உதவும் என்று சொன்னதால் கவிதாவும் பிசினசை ஒரு விலைக்கு விற்றுவிட்டு வீடு இருக்கட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டை மட்டும் விற்காமல் அனைவரும் மும்பை சென்றனர். தருணை ஷிஷுவான் பள்ளியில் சேர்த்துவிட்டு கவிதா தருணை பார்த்துக்கொண்டார்கள். பக்கத்திலேயே பாட்டி, வள்ளி, முருகனும் குடி இருந்தனர். சத்யா மும்பை போலீசிடம் கௌஷிக் புகைப்படங்களை கொடுத்து எல்லா இடத்திலும் பரவ செய்தாள். ஏதாவது துப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தாள்.
இடைப்பட்ட காலத்தில் பஞ்சாபில் துரைசாமி சில விஷயங்களை கற்று கொண்டிருந்தான். தனக்கு வாக்கு அளித்த படி ஷ்யாம் பணம் தராமல் இழுத்தடிப்பதும், தனக்கே போதை பழக்கத்தை தூண்டி விட முயற்சி செய்ததும் அவனை கோபப்படுத்தியது. ஷ்யாமை மடக்கும் துருப்பு சீட்டிற்காக எப்படி வீடியோக்களை ஒரு device ல் இருந்து இன்னொரு device க்கு copy செய்வது, கம்ப்யூட்டரை எப்படி இயக்குவது போன்று சில விஷயங்களை கற்று கொண்டான். நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்துகொண்டிருந்த துரைசாமிக்கு ஒரு நாள் அந்த வாய்ப்பு கிடைத்தது. ஷ்யாம் போதையில் கம்ப்யூட்டரில் ஏதோ பார்த்துவிட்டு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்க சென்ற போது கம்ப்யூட்டரை off செய்யாமல் சென்று விட்டான். துரைசாமிக்கு அந்த வீட்டில் மற்ற பணியாளர்கள் போல் இல்லாமல் கூடுதல் சலுகைகள் வழங்க பட்டு இருந்தன. அதனால் முதலாளி அறைக்குள் போவது வருவது என துரைசாமி இயல்பாக செல்வதும் அதற்கு யாரும் சந்தேகப்படாமல் இருப்பதும் வழக்கமாகி விட்டிருந்தது. ஷ்யாம் கம்ப்யூட்டரை off செய்யாமல் சென்ற நேரம் துரைசாமி உள்ளே சென்று கௌஷிக் சத்யா விடியோக்கள், மற்ற சில பெண்களின் வீடியோக்கள், இன்னும் சில பெரிய புள்ளிகள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள், போதை பொருட்களை கை மாற்றும் வீடியோக்கள், போதை பொருட்களை உடலில் inject செய்வது, inhale செய்வது போன்ற வீடியோக்கள் எல்லாவற்றையும் copy செய்துவிட்டு வேறு ஏதாவது வீடியோக்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் ஏதோ யோசித்துவிட்டு கௌஷிக் சுனிதா கொல்லப்பட்ட தேதியில் இருக்கும் வீடியோக்களை ஆராய்ந்தான். Backup செய்யப்பட்ட ஒரு நாள் முழுக்க ஓடக்கூடிய மிக நீளமான வீடியோ அது, கௌஷிக் அறையில் இருந்த கேமரா ஒன்றில் பதிவான வீடியோ. அதை ஓடவிட்டான். சிலவற்றை fast forward செய்தான். அதில் கௌஷிக் சத்யா சண்டை போடுவது, சத்யா துணிமணிகளை எடுத்து கொண்டு புறப்படுவது, ஷ்யாம் கௌஷிக்கிற்கு ஊசி போடுவது, கௌஷிக் ஏதோ ஒரு நோட்டில் எழுதுவது, பிறகு கௌஷிக் துடிதுடித்து இறப்பது என்று அனைத்துமே பதிவாகி இருந்தன. துரைசாமிக்கு வியர்த்தது. வேக வேகமாக அந்த வீடியோவை copy செய்ய முடிவு செய்தான். ஆனால் அது மெதுவாக தான் copy ஆனது. அதை copy செய்யவிட்டு அடுத்த அறையான கௌஷிக் அறைக்கு வந்து அந்த நோட்டை தேடினான். கிடைக்கவில்லை. ஷ்யாமின் கார் நுழைவு வாயிலில் வருவதை பார்த்தான். அவசர அவசரமாக தனது pen drive ஐ உருவிக்கொண்டு மீண்டும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஒன்றும் அறியாதவன் போல் நடந்து ஹாலுக்கு வந்தான். அதற்குள் ஷ்யாமும் போதையில் ஒரு பெண்ணுடன் தள்ளாடிக்கொண்டே உள்ளே வந்திருந்தான். “ஹேய் துரைசாமி, வரியா? ஜமாய் பண்ணலாம்” என்று உளறிக்கொண்டே அந்த பெண்ணுடன் தன் அறைக்கு சென்றான்.
ஒரு நாள் சத்யாவை போலீஸ் தொடர்பு கொண்டார்கள். தன் கணவனை தேடும் பணியில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று விசாரித்தாள். “மீண்டும் ஒரு முறை சொல் சத்யா, காணாமல் போவதற்கு முன்னால் உன் கணவன் கௌஷிக்கை கடைசியாக யார் பார்த்தது?” என்று வழக்கை விசாரிக்கும் போலீஸ் கேட்க தான் வெளியேறிய பிறகு அங்கு சுனிதாவும் ஷ்யாமும் தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் பார்த்திருக்க வேண்டும், சுனிதா அவருடன் ஓடிப்போனவள் என்ற காரணத்தினால் ஷ்யாமை தான் விசாரிக்க முடியும் ” என்றாள் சத்யா. “நீ பார்க்கும் போது என்ன நிற உடை அணிந்து இருந்தான் கௌஷிக்?” என்று கேட்க சத்யா யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சொன்னாள் “blue colour jeans, red colour shirt, full hand, ஏன் திடீரென்று அவர் அன்று அணிந்து இருந்த உடையை பற்றி கேட்கிறீர்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டாள். சுனிதா என்ன நிறத்தில் ஆடை அணிந்து இருந்தார்கள்? என்று அவர்கள் கேட்க சத்யா யோசித்து விட்டு மஞ்சள் நிறத்தில் சல்வார் அணிந்து இருந்தாள். என்ன விஷயம்? என்று பதறினாள்.
“ஒன்றுமில்லை சத்யா, நீங்கள் பஞ்சாப் வர வேண்டி இருக்கும், இது கௌஷிக் சுனிதாவாக இருக்கலாம், இல்லாமல் கூட போகலாம்” என்றார் அந்த போலீஸ் அதிகாரி.
“என்னவென்று முதலில் சொல்லுங்கள்” என்று சத்யா வலியுறுத்தி கேட்கவும் அந்த அதிகாரி சொன்னார். ஆரவள்ளி மலைத்தொடர்களில் ட்ரெக்கிங்க செய்த சிலர் சில எலும்புக்கூடுகளை கண்டுள்ளார்கள். அவர்கள் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளிடம் தகவல் கொடுக்க அவர்கள் காணாமல் போனவர்களுடன் ஒத்து போகிறதா என்று பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு இது வரை மேட்ச் கிடைக்கவில்லை. அந்த எலும்புகூட்டின் மேல் இருந்த மிஞ்சி எஞ்சி போயிருந்த துணிகளை வைத்து பார்க்கும் போது ஒருவர் blue நிற jeans, சிவப்பு நிற சட்டையும் அணிந்திருக்க வேண்டும், இன்னொருவர் மஞ்சள் நிற ஆடை ஏதோ அணிந்திருக்க வேண்டும். அவர்கள் இறந்து குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகி இருக்க வேண்டும், எஞ்சியிருக்கும் எலும்புகளை வைத்து அவர்களின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவது எளிதான விஷயம் அல்ல, ஆனால் உங்கள் மகன் தருணை அழைத்து வந்தால் dna cross வெரிஃபிகேஷன் செய்து அவர் உங்கள் கணவர் தானா என்று கண்டுபிடிக்க இயலும், சுனிதாவின் பெற்றோரையும் வர சொல்லி இருக்கிறோம், அவர்களது dna வையும் cross வெரிஃபிகேஷன் செய்யலாம் என்று. பொதுவாக இது போன்ற வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு விடும், ஆனால் உங்கள் அயராத முயற்சியை நான் பார்த்துள்ளேன், அதனால் தான் உங்கள் கணவர் விஷயத்தில் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்” என்றார் அந்த அதிகாரி. இப்படி ஒரு செய்தி வரும் என்று சத்யா நினைத்திருக்கவில்லை. கணவன் எங்கேயாவது சுனிதாவுடன் நலமாக தான் இருப்பார் என்று நம்பி புது இடமான மும்பையில் கொஞ்சம் நிம்மதியாக இருக்க ஆரம்பித்த நேரம் அது. இப்போது இப்படி ஒரு தகவலா? கவிதா, சத்யா, தருண், பாட்டி பஞ்சாப் வந்தார்கள். தருண் dna வுடன் அந்த எலும்பு கூட்டின் dna மேட்ச் ஆனது. சத்யாவிற்கு உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைகுழியில் இறங்கியது. தன் கணவன் உயிரோடு இல்லை என்று அறிந்த போது என்ன தான் அவன் ஏமாற்றி இருந்தாலும் உண்மையை தாங்கி கொள்ளமுடியாமல் அழுதாள். சுனிதாவின் dna வும் அவள் பெற்றோருடன் மேட்ச் ஆனது.
Autopsy ரிப்போர்ட் வைத்து பார்த்தால் உங்கள் கணவருக்கோ, சுனிதாவிற்கோ எந்தவித head injury யும் இல்லை, அப்படி என்றால் அவர்களை யாரும் அடித்து கொல்லவில்லை. மலைப்பகுதியில் ஏறி கீழே விழுந்து தற்கொலையும் செய்து கொள்ளவில்லை, அப்படி ஏதாவது செய்து இருந்தால் கண்டிப்பாக skull ல் ஏதேனும் அடிபட்ட அறிகுறி இருந்திருக்கும். இருவரையும் எந்த விலங்கும் கொன்றிருப்பதாகவும் தெரியவில்லை. ஒன்று மலைப்பகுதிக்கு சென்ற இருவரும் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்து இறந்திருக்கலாம், அல்லது யாராவது அவர்களை மூச்சைடைத்தோ அல்லது விஷம் வைத்தோ கொன்றிருக்கலாம் ஆனால் forensics ல் skeleton ஐ வைத்து இதை கண்டுபிடிப்பது இயலாத காரியமாகவே தோன்றுகிறது. அதனால் இவர்கள் மரணத்தின் காரணத்தை unidentified என்று சொல்லி நாங்கள் இந்த வழக்கை முடிக்கிறோம். அவர்களின் remains ஐ உங்களிடம் ஒப்படைக்கிறோம், இறுதி சடங்குகள் செய்து கொள்ளலாம் என்று சத்யாவிடமும் சுனிதா பெற்றோரிடமும் ஒப்படைத்தார்கள். சத்யாவும், சுனிதா பெற்றோரும் அழுதார்கள். சுனிதாவின் தாய் “அந்த பாழாப்போனவனை கல்யாணம் செய்யாதேன்னு சொன்னேன், அவ கேக்கலையே, அவன் தாங்க என் பொண்ணை கொன்றிருப்பான், என் பொண்ணு அவனுக்கு உண்மையா தாங்க இருந்தா, அவன் தான் என் பொண்ணு மேல இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லி என் பொண்ணை கொன்னு அவ ஓடி போய்ட்டான்னு கதை கட்டி விட்ருப்பான், பெரிய பணக்காரன், அரசியல் நண்பர்கள் இருக்காங்க, அவனை போலீஸ் விசாரிக்க மாட்டாங்க, ஆனா அவன் இதுக்கு அனுபவிப்பான்” என்று அழுது கொண்டே சுனிதா தந்தையுடன் சுனிதாவின் எலும்பு கூடுகள் நிறைந்த bag ஐ வாங்கி சென்றார்கள். இவற்றை எல்லாம் கேட்டுகொண்டிருந்த சத்யாவிற்கு பல நாட்களாகவே அவள் மனதில் ஷ்யாம் மேல் ஏற்பட்ட சந்தேகம் வலுவானது. ஒரு வேளை அவன் தான் கொன்றிருப்பானா? என்ற சந்தேகத்துடன் தன் கணவன் கௌஷிக்கின் எலும்பு கூட்டிற்கு தருணை சிதை வைக்க சொல்லி எரித்தாள்.
Comments
Post a Comment