Sms ch 22 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 22

கௌஷிக் அனாதை இல்லை, தவறே செய்திருந்தாலும் அவருக்காக நானும் தருணும் இருக்கிறோம் என்று கௌஷிக்கிற்கு ஈமச்சடங்குகளை சத்யா தருணை வைத்து முறையாக செய்து முடித்தாள். 


ஷ்யாம் மேல் சத்யாவிற்கு சந்தேகம் வலுவாகவும் மறுநாள் அவனை சென்று பார்த்து பேச வேண்டும் என்று முடிவு செய்தாள். ஷ்யாம் இன்னொரு பக்கம் நிம்மதியாக இருந்தான். நல்ல வேளை பாடியை கண்டுபிடித்தாலும் அதிலிருந்து வேறு எதையும் இவர்களால் கண்டுபிடிக்கவில்லை. முதல் முறையாக கொலை செய்து தப்பித்தும் இருக்கிறேன் என்று ஷ்யாம் பெருமிதம் கொண்டான். அது அவனின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. சத்யா உள்ளூரில் தான் இருக்கிறாள் என்று தெரிந்ததும் ஷ்யாம் இந்த முறை அவளை மிஸ் பண்ணக்கூடாது. எப்படியாவது அவளை அடைந்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தான்.


கவிதா, பாட்டி, தருண் மூவரும் கீழ் தளத்தின் முதல் அறையில் தூங்கி கொண்டிருக்க சத்யா மட்டும் முதல் தளத்தில் தன் அறையில் தூங்கி கொண்டிருந்தாள். ஷ்யாம் யாரும் அறியாமல் மாடியில் பால்கனி வழியாக பூட்டை உடைத்து உள்ளே வந்தான். சத்யா தூங்கும் அறைக்குள் நுழைந்து அவளுக்கு ஒரு இன்ஜெக்ஷனை போடும் தருவாயில் அவன் கையில் சுளீர் என்று ஒரு வலி, ஆஹ்ஹ்ஹ் என்று கத்தினான், கையில் வெட்டுக்காயம். அவன் அலறல் சத்தம் கேட்டு சத்யா கண்விழித்தாள், Light on செய்தாள். ஷ்யாமை அந்த இடத்தில் பார்த்து அதிர்ந்தாள். ரத்தம் சொட்டு சொட்டாக ஆரம்பித்து ஒரு சில நொடிகளிலேயே வேகமாக பெருக்கெடுத்தது. அவன் கையில் இருந்த இன்ஜெக்ஷன் கீழே விழுந்தது. கவிதா கையில் ஒரு கத்தியுடன் நின்றிருந்தார்கள். கையில் வெட்டுக்காயத்துடன் ஷ்யாம் துடிதுடித்தான். அங்கிருந்து ஓட முயன்ற அவனை கவிதா, சத்யா, பாட்டி அனைவரும் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். 


அவன் கொண்டு வந்த syringe வைத்தும் அவன் பூட்டை உடைத்து வந்ததை வைத்தும் அவனை forceful entry, attempted to inject drugs, attempted to rape and kill என்ற பிரிவுகளில் அவனை கைது செய்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரை சிறையில் அடைத்தனர். தன் கணவன் மறைவில் அவன் மேல் சந்தேகம் அதிகமாக அதை பற்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முயன்றாள். ஆனால் கவிதா போதுமான ஆதாரம் இல்லாதாதால் ஷ்யாமை எதுவும் செய்ய முடியாது, அது மட்டுமில்லை இப்போது நீ தான் அவனோட குறி, நாம்  என்னதான் முயன்றாலும் பணபலம், ஆள் பலம் வைத்து அவன் வெளியே வந்திடுவான். பிறகு கஷ்டம் உனக்கு தான், நான் சொல்வதை கேள், அவன் கண்ணில் படாமல் மும்பையில் ஒரு புது வாழ்க்கையை வாழலாம், கடவுள் அவனை பார்த்துக்கொள்வார் என்று வற்புறுத்தி சத்யாவையும் தருணையும் பாட்டியுடன் மும்பைக்கு அனுப்பிவிட்டு வீட்டை விற்க முடிந்தால் விற்று விட்டு தானும் மும்பை வந்து விடுவதாக சொல்லி கவிதா பஞ்சாபில் தங்கினாள்.


ஷ்யாமிற்கு ஷ்யாமின் அப்பா தனது செல்வாக்கை பயன்படுத்தி குறைந்த பட்ச சிறை தண்டனை கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். இடையில் ஷ்யாம் சிறையில் வந்து தன்னை பார்க்கும் படி துரைசாமிக்கு அழைப்பு விடுத்தான். “ஒருவன் நல்ல விலைக்கு drugs கேட்டிருந்தான், அதற்குள் நான் இப்படி மாட்டிக்கொண்டேன், அவனுடைய தொடர்பு எண்ணை தருகிறேன், அவனுக்கு அந்த drug ஐ விற்று பணத்தை வாங்கி நான் சொல்லும் இடத்தில் பதுக்கி வைக்கவும். நான் வெளியே வந்ததும் உனக்கு ஒரு தொகையை அளிக்கிறேன், முக்கியமான விஷயம் நம் காரில் செல்லாதே, அவன் ராஜஸ்தானில் இருக்கிறான், அங்கே கெடுபிடி இப்போது அதிகம் ஆகிவிட்டது, ஏதாவது train பஸ்சில் சென்று வா, இது பெரிய டீலிங், நானே செய்ய வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இப்படி மாட்டிக்கொண்டேன், நீ நம் காரில் சென்று மாட்டிக்கொண்டால் என் chapter close, என் தந்தை எந்த உதவியும் செய்யமாட்டார் என்னை மீட்க” என்றான் ஷ்யாம். 


துரைசாமியும் சொன்னபடியே drug ஐ கைமாற்றிவிட்டான். ஷ்யாம் நிறைய முறை தனக்கு பணம் தருவதாக சொல்லி தரவில்லை, ஓரளவிற்கு தான் கொடுத்தான், இவ்வளவு பெரிய தொகையை ஏன் அவனிடம் கொடுத்து அவன் தரும் பிச்சை காசுக்காக காத்திருக்க வேண்டும் என்று எண்ணி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு எங்காவது சென்று விடலாம் என்று முடிவு செய்து ஒரு train ல் ஏறி அமர்ந்தான். கவிதாவும் அதே train ல் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வீடு நல்ல விலைக்கு போகாததால் அதை விற்காமல் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 


துரைசாமி கவிதாவை பார்த்தான். “இவர்கள் சத்யாவின் அம்மாவாச்சே, முடிந்த அளவு இவர்கள் கண்ணில் படவேண்டாம் என்று நினைத்து மறைவாக உட்கார்ந்திருந்தான். Train அஹமதாபாத்தை நெருங்கும் வேளையில் திடீரென்று ஏதோ பரபரப்பும் பதட்டமும் நிலவ என்ன என்று துரைசாமி எட்டி பார்த்தான். கவிதா நெஞ்சு வலியால் துடித்து கொண்டிருந்தாள். துரைசாமியும் ஒரு பெண்மணியும் ரயில்வே போலீஸ் துணையுடன் அவளை அஹமதாபாத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள். 


Patient பெயர் என்ன என்று கேட்டதற்கு கவிதா என்று தன்னையும் அறியாமல் துரைசாமி சொன்னான். ஆனால் பதிவு செய்யும் போது துணைக்கு இருப்பவர் பெயர் கேட்டதற்கு துரைசாமி அவன் பெயரை கொடுக்கவில்லை, அந்த பெண்மணி தான் அவள் பெயரை கொடுத்து பதிவு செய்தார்கள். கவிதாவிடம் பை, சூட்கேஸ் என்று எதுவும் இல்லை. ஒன்று பதட்டத்தில் ட்ரைனிலேயே விட்டிருக்க வேண்டும், இல்லை யாராவது திருடி சென்றிருக்க வேண்டும், கவிதாவின் கைபேசியும் இல்லை, கவிதாவின் உறவினர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று யாருக்கும் தெரியவில்லை. உடனிருந்த பெண்மணிக்கு துரைசாமி மேல் ஏதோ சந்தேகம் வந்தது. “இவனுக்கு அந்த பெண்மணியின் பெயர் கவிதா என்று தெரிந்து உள்ளது, அப்படி என்றால் இவனுக்கு அவர்களை முன்பே தெரிந்து இருக்க வேண்டும், ஆனால் இவன் பெயரை கொடுத்து பதிவு செய்யாமல் விலகி சென்று விட்டான், நாளை ஏதாவது போலீஸ் பிரச்சனை வந்தால் தப்பித்துக்கொள்ள நினைக்கிறான் போல, இவன் பெயர் என்னவாக இருக்கும் என்று அவள் யோசித்து கொண்டிருக்கையில் துரைசாமிக்கு ஒரு அழைப்பு வரவும் ஆமாம் நான் துரைசாமி தான் பேசுகிறேன், சொல்லுங்கள்” என்று கையில் ஒரு பையும் சூட்கேசுடனும் நகர்ந்தான். 


டாக்டர் ஒருவர் வந்து நீங்கள் தான் கவிதாவை கொண்டு வந்து சேர்த்தீர்களா, நீங்கள் என்ன உறவு என்று கேட்க நானும் இன்னொருவரும் வந்து சேர்த்தோம், உறவு என்று ஒன்றுமில்லை ட்ரைனில் பயணம் செய்த சக பயணி என்று பதில் கூறினாள் அந்த பெண்மணி. அவர்கள் கைபேசி, bag ஏதாவது உள்ளதா என கேட்க இல்லை சார் என்றாள். அவர்கள் இறந்துவிட்டார்கள், எனக்கு அவர்கள் தெரிந்தவர்கள் தான், நான் அவர்கள் உடலை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று சொன்னார். அந்த பெண்மணியும் கனத்த இதயத்துடன் அந்த ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினாள். 


அந்த டாக்டர் கவிதாவிற்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை, அவர் கவிதாவை பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டார். சத்தியமூர்த்திக்கு தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார். சத்தியமூர்த்தி நந்தனுடன் வந்து கவிதாவை பார்த்து உடலை வாங்கி கொண்டனர். அந்த ஊரில் கவிதா போட்டோவை செய்தி தாளில் போட்டு கணவரோ பிள்ளைகளோ இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால் விளம்பரத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.


வீட்டை விற்றுவிட்டு மும்பை வருகிறேன் என்று சொன்ன தாய் இன்னும் வரவில்லையே, கால் செய்தாலும் எடுக்க மாட்டேன் என்கிறார்களே, பஞ்சாபிற்கு நேரிலே சென்று பார்த்துவிடலாம் என்று சத்யா முடிவு செய்து மறுநாள் flight ல் டிக்கெட் book செய்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது தான் யாரோ அவளை மூச்சை அடைத்து மயக்கி red light area விற்கு கடத்திக்கொண்டு சென்றார்கள். 


“ஷ்யாம் நீ சொன்னது போலவே சத்யாவை கடத்திக்கொண்டு வந்துவிட்டேன், சும்மா சொல்லக்கூடாது, வீடியோவுல பாத்த மாதிரியே சும்மா நச்சுன்னு இருக்கா, ஆனா என் பங்களா அவ்வளவு பெருசு இருக்கும் போது எதுக்கு இந்த red light ஏரியாவுக்கு கொண்டு வர சொன்ன? அது தான் புரியல”


“முதலில் வீடியோ கால் போடு” என்று வீடியோ கால் வந்ததும் மயங்கி கிடந்த சத்யாவை வீடியோவில் பார்த்துவிட்டு “சரி ஜெயிலில் இருந்து நெறைய பேசமுடியாது, டேய் யுவி சொல்றத நல்லா கேளு”


“ம்ம்ம் சொல்லுடா” என்றான் அந்த யுவி என்பவன்.


“நீ ஒருவேளை போலீசில் மாட்டினால் உன் தந்தை காப்பாற்றுவார் இல்லையா?”


“கண்டிப்பாக காப்பாற்றுவார், என்ன செய்ய வேண்டும் சொல்லு, சத்யாவை rape செய்ய வேண்டுமா?” என்று சிரித்தான்.


“அதெல்லாம் வேண்டாம், இனிமேல் ஒரு ஆணின் கை அவள் மேல் பட வேண்டும் என்றால் அது என்னுடைய கையாக தான் இருக்க வேண்டும், அந்த அனாதை பயல் தொட்டதையே என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை, சரி உன் கைவசம் சத்யாவை போன்று இருக்கும் பெண்ணை அழைத்து நீ உடல் உறவு கொள்ள வேண்டும், அது சத்யா தான் என்று இந்த ஊர் உலகம் நம்ப வேண்டும், சத்யாவின் உடைகளை கொஞ்சம் கலைந்து அவளை வீடியோ எடுத்துக்கொள், பிறகு நீ ஏற்பாடு செய்யும் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போல் வீடியோ எடுத்துக்கொள், முடிந்த அளவு நீ அழைத்து வரும் பெண்ணின் முகத்தை காட்டாதே, இந்த வீடியோவை நெட்டில் பரவவிடுகிறேன், அவளும் அவள் அம்மாவும் பார்த்து சாகட்டும், அதையும் மீறி இந்த சத்யா உயிரோடு இருந்தாள் என்றால் அது எனக்கு sex அடிமையாக இருப்பதற்காக மட்டுமே என்று இருக்க வேண்டும், வேறு எந்த ஆண்மகனும் இவளை திரும்பி பார்க்கவோ, திருமணம் செய்யவோ நினைக்க கூடாது, நான் ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகு அவளை கவனித்து கொள்கிறேன்”


“சரி நான் போனை வைத்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறேன்”


“வீடியோ ரெடி ஆனதும் எனக்கு அனுப்பிவிடு, யுவி, சொன்னது நினைவிருக்கட்டும், அவளை நீ பார்க்கலாம், ஆனால் அனுபவிக்க கூடாது” என்று சிரித்தான்.


“ச்ச ச்ச அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது, எனக்கு response செய்யும் பெண் தான் பிடிக்கும்” என்று காலை cut செய்தான்.


ஷ்யாம் சொன்னது போலவே யுவி வீடியோ எடுத்து ஷ்யாமிற்கு அனுப்பினான். சத்யாவிற்கு லேசாக நினைவு வந்தது. தன் ஆடைகள் பாதி கலைந்த நிலையில் அதே அறையில் வேறு ஒரு ஆணும் பெண்ணும் சிரித்து கொண்டிருந்தார்கள். என்ன நடக்கிறது என்று அவளுக்கு முதலில் புரியவில்லை. அப்போது யுவி ஷ்யாமிற்கு வீடியோ call செய்து சத்யாவை காண்பித்தான். “பாத்தியா சத்யா, நீ எங்கு சென்றாலும் இனி உன்னை நான் விடமாட்டேன், எனக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள், என்னுடன் ஒத்து போயிருந்தால் நீ இந்நேரம் சொகுசாக இருந்திருக்கலாம், இப்போது பார் ஊரெல்லாம் உன்னை பார்த்து சிரிக்க போகிறது, நான் உன் மொபைலுக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறேன், நெட்டிலும் பரவ விட்டு இருக்கிறேன், பார்த்து சாவு டி, உன் அம்மாவும் சாக வேண்டும், என்னையா வெட்டுகிறாள், இந்த வீடியோவை பார்த்து சாகட்டும், இனி நீ ஒரு நடைபிணம் தான், ஒருவனும் உன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், அப்படியே பார்த்தாலும் அவன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவேன், எனக்கு அதிகமாக ஆட்டம் காட்டிய பெண் நீ தான், உன்னை ஆட்டி படைக்காமல் விட மாட்டேன், இப்போது அந்த வீடியோவை பார்” என்று call cut செய்தான். 


எதிர்பாராத விதமாக அங்கே போலீஸ் ரெய்டு வரவும் பாதி மயக்கத்தில் இருந்த சத்யாவின் முகத்தில் தண்ணீரை தெளித்து ஒரு போர்வையை சுற்றி வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது தான் மணிமாறன் அவளை பார்த்தது. பாதி மயக்கத்தில் இருந்த சத்யாவிற்கு நடந்தது எதுவுமே புரியவில்லை. நடக்க முடியாமல் கால் தடுமாறினாள். “அவ்வளவு போதை இந்த கழுதைக்கு” என்று ஒரு போலீஸ் பெண்மணி சத்யாவை தள்ளிவிட்டாள். எல்லா பெண்களும் விபச்சாரம் செய்ததை ஒப்புக்கொண்டார்கள் சத்யாவை தவிர. ஒரு சிலர் சத்யாவை திட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார்கள். ஒரு சிலர் இந்த பெண்ணை நாங்கள் பார்த்ததே இல்லை, இவள் விபச்சார தொழிலில் இல்லை என்றே தோன்றுகிறது என்று சொன்னார்கள்.


தன்னை யாரோ மயக்கி கடத்தி வந்தததாகவும் இதற்கெல்லாம் காரணம் ஷ்யாம் என்றும், தவிர தனக்கு எதுவும் தெரியாது என்றும் வாதிட்டு அழுதாள். ஒரு பெண் போலீஸ் அதிகாரி சத்யாவுடன் இருந்த யுவியை அழைக்க சத்யாவை எங்கே பார்த்தான் என்றெல்லாம் விசாரித்தாள். அவனுடைய போனையும் வாங்கி பார்த்தாள். அதில் call logs எல்லாம் clear செய்யப்பட்டு இருந்தது. Edit செய்யப்பட்ட வீடியோ இருந்தது. அந்த போலீஸ் அதிகாரிக்கு யுவியை பற்றி ஓரளவிற்கு தெரியும், அவன் அரசியல் நண்பர்களையும் தெரியும். சத்யாவை தனியாக அழைத்து அந்த வீடியோவை காண்பித்தாள். மேடம் இது நான் இல்லை, முதலில் காண்பிப்பது நான் தான், ஆனால் அவனுடன் உல்லாசமாக இருப்பது நான் அல்ல, அதோ அங்கே உட்கார்ந்து இருக்கிறாளே, அவள் தான் அவனுடன் இப்படி எல்லாம் இருந்திருக்கிறாள், வீடியோ edit செய்து என்னை போல் காட்டி உள்ளார்கள்” என்று மன்றாடினாள். நான் உன்னை நம்புகிறேன் சத்யா, ஆனால் யுவி ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன், prostitution, human trafficking, mafia எல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணம். அவர்களுடன் மோதி உன்னால் வெல்ல முடியாது. உன்னை நான் விடுவிக்கிறேன், நீ செல்லலாம் என்று கூறினாள். ஆனால் மேடம் இவனுக்கும் அந்த ஷ்யாமிற்கும் எந்த தண்டனையும் இல்லையா, நான் கம்பளைண்ட் தருகிறேன் மேடம் என்று கெஞ்சினாள். சத்யா எனக்கு நீ தவறானவள் என்று தோன்றவில்லை, அதனால் தான் உதவி செய்ய முன் வந்துள்ளேன், ஆனால் complaint செய்வதால் உனக்கு பிரச்சனைகள் அதிகம் தான் ஆகும் என்றாள். அப்படி என்றால் என்னை இப்படி மானபங்கப்படுத்தி அதை நெட்டில் பரவ விடுவார்கள், நான் அமைதியாக போக வேண்டுமா என்று ஆவேசம் கொண்டாள். என்னால் முடிந்தது நெட்டில் உள்ள உன் வீடியோக்களை நீக்குகிறேன், மீண்டும் பதிவேற்றம் செய்யாமல் பார்த்துக்கொள்கிறேன், ஆனால் யாராவது டவுன்லோட் செய்து வைத்திருந்தால் அதை நாம் ஒன்றும் செய்ய இயலாது, நீ முடிந்த அளவு இனி அந்த யுவி கண்ணில் படாமல் வேறு எங்காவது சென்று விடு” என்று அறிவுறுத்தினார்கள். நன்றி என்று கண்ணீருடன் சத்யா அங்கிருந்து வெளியேறினாள். 


உணர்ச்சிகள் மறத்து போனவளாய் வீட்டிற்கு வந்த சத்யாவை பார்த்து வள்ளியும் பாட்டியும் பதறினார்கள். டிக்கெட் பதிவு செய்யப்போனவள் எங்கே சென்றாய் என்று வினவினார்கள். சத்யா எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் ஏன் வள்ளி அக்கா இனி உயிருடன் இருக்க வேண்டும், என்னால் என் அம்மாவிற்கு ஏற்பட்ட வலி, வேதனை எல்லாம் போதாதா? இப்போது இது வேறா? நான் உயிருடன் இருப்பதில் அர்த்தமே இல்லை என்று ஓடிச்சென்று அறையின் கதவை தாழிட்டாள். எல்லோரும் பதறி போய் சத்யாவை வெளியே வரும் படி கெஞ்சினர். முருகனும் கதவை உடைக்க முயற்சி செய்தான். தருண் ஜன்னல் வழியாக அழுவதை பார்த்து சத்யா மனம் மாறினாள். “என்ன சத்யா நீ, இப்படி செய்யபார்த்தாயே, தருண் எப்படி பயந்து விட்டான் பாரு” என்று தேற்றினார்கள். இனி இப்படி ஒரு முடிவு எடுக்க கூடாது என்று சத்தியம் வாங்கினார்கள். தமிழ்நாட்டிற்கு சென்று விடலாம் என்று பாட்டி சொல்ல கவிதாம்மா பற்றி தகவல் இல்லையே என்று வருந்தினார்கள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018