Sms ch 14 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 14

நந்தனும் சத்யாவும் காரில் வந்து கொண்டிருந்தார்கள். நந்தன் ஏதோ தீவிர யோசனையில் இருந்தான். காலையில் இருந்து அவனிடம் இருந்த கிண்டல், கேலி, புன்னகை, கண்களிலே இருந்த வசீகரம் எதுவுமே இல்லை. சத்யா அவனை ஒரு முறை திரும்பி பார்த்ததோடு சரி, மறுபடியும் அவனை பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை. வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இவள் வீட்டிற்கா அடிக்கடி போகிறோம் என்று ஏதேனும் கேவலமாக நினைக்கிறானோ என்னவோ? தருண் நான் S&N அம்பத்தூர் கம்பெனியில் வேலை செய்வதாக சொல்லியும் தான் தான் அந்த கம்பெனியின் முதலாளி என்று ஒரு நாளும் சொல்லவோ, காட்டிக்கொள்ளவோ இல்லையே, ஏன்? ஒரு பக்கம் அலட்டிகொள்ளாமல் இலகுவாக பழகுகிறான், ஆனால் இன்னொரு பக்கம் தனக்கென்று ஒரு கம்பீரத்துடன் இருக்கிறான். நம்மை பற்றி அதிகமாக தோண்டி துருவுவதும் இல்லை, அவனை பற்றி வார்த்தைகளை அதிகமாக விடுவதும் இல்லை, எப்போதும் ஒரு நிதானத்தோடு இருக்கிறான். இதுவரை இப்படி பட்ட ஒரு ஆண்மகனை நான் சந்தித்ததில்லையே. இவனுக்கு திருமணமாமே, எதுவுமே வெளிப்படையாக சொல்ல மாட்டான் போல. என்னை போன்ற ஒருத்தியிடம் வெளிப்படையாக பேச என்ன இருக்கிறது என்று கூட நினைத்திருக்கலாம். இன்று காலையில் ஹாஸ்பிடல் அழைத்து சென்றது, மதியம் ரெஸ்டாரண்ட் அழைத்து சென்றது ஏதோ ரொம்ப நாள் பழகியவன் போல் பேசி சிரித்தது எல்லாம் என்னுடைய மும்பை விஷயம் கேள்வி பட்ட பிறகு இல்லாமல் போனதே, மணிமாறன் கூட நான் சொல்லாமல் விட்ட விஷயங்களை சொல்லி இருப்பார். அதனால் தான் ஒரு வார்த்தை கூட பேசாமல் உம்மென்று வருகிறான். இனி இப்படி தான் என்னிடம் இருப்பான் போல. மதியம் எப்படி எல்லாம் பேசி பேசி என்னை சாப்பிட வைத்தான், அந்த அக்கறை எல்லாம் இனிமேல் என்மீது அவனுக்கு இருக்காது. ஏதோ தருணுக்காக என்னை வேலையில் இருந்து நீக்காமல் இருக்கிறான். நான் ஏன் அவன் பேசவில்லை என்று இவ்வளவு வருத்தப்பட வேண்டும். வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் பிரச்சனை இல்லாமல் வேலை இருக்கிறதே, அது வரை சந்தோஷம். சத்யா ஏதேதோ எண்ணங்களுடன் குழம்பி கொண்டிருந்தாள். நந்தன் music player ல் ஏதோ இளையராஜா பாடலை ஓடவிட்டான். கொஞ்ச நேரத்தில் அமைந்தகரை வீடு வந்து சேர்ந்தார்கள். 


நந்தன் காரை நிறுத்தினான். இன்னும் ஏதோ யோசனையில் இருந்தான். சத்யா  “thanks, நான் வருகிறேன்” என்று கதவை திறந்து இறங்க போனாள். அப்போது தான் சுயநினைவு வந்தவன் போல் “சத்யா ஒரு நிமிஷம், தருண் பள்ளியில் இருந்து வந்திருப்பானா?” என்றான்.


சத்யா கதவை பார்த்துவிட்டு திரும்பி சொன்னாள். “வந்துவிட்டான் என்று நினைக்கிறேன், கதவில் பூட்டு இல்லை”


“ஓ அப்படி என்றால் நான் தருணை பார்த்துவிட்டே ஆபீஸ் செல்கிறேன்” என்று இறங்கினான்.


“வாங்க” என்று சத்யா முதலில் நடக்க நந்தன் பின்னால் வந்தான். கதவை திறந்து “தருண் உன்னை பார்க்க யார் வந்திருக்கிறார்கள் பார்”


ஏதோ ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த தருண் சத்யா குரல் கேட்டு திரும்ப நந்தனை பார்த்தான் “ஹஹய்ய் அங்கிள்...” என்று ஒரு காலை தெத்தி ஓடிவந்து நந்தனை இடுப்போடு அணைத்து கொண்டான். நந்தன் அவனை தூக்கி கட்டிலில் உட்கார வைத்து அவனும் அமர்ந்தான்.


“தருண் அங்கிள்கு நெறைய வேலை இருக்கு, ஆனால் உன்னை பார்த்துவிட்டு உன்னிடம் ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்க தான் நான் இப்போது வந்தேன்” 


சத்யா குழப்பத்துடன் பார்க்க “என்ன பொறுப்பு அங்கிள்?” என்றான் தருண்.


“இனிமேல் நீ சாப்பிடும் போதெல்லாம் அம்மாவும் ஒழுங்காக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து சாப்பிட வைக்க வேண்டும், சரியா?”


“நான் எப்படி அங்கிள் பார்க்க முடியும்? அம்மா காலைல என்னை சாப்பிட வைத்து ஸ்கூலுக்கு அனுப்பிடுவாங்க, அப்புறம் தான் அம்மா சாப்பிடுவாங்க, மதியம் நான் ஸ்கூலில் சாப்ட்ருவேன், அம்மா கம்பெனியில சாப்பிடுவாங்க, நைட் என்னை சாப்பிட வச்சு தூங்க வச்சுட்டு தான் அம்மா சாப்பிடுவாங்க, அப்புறம் எப்படி அம்மாவை நான் சாப்பிட வைப்பது”


நந்தன் சத்யாவை பார்த்துவிட்டு சொன்னான் “அதனால தான் சொல்றேன், இனிமேல் காலைலயும் ராத்திரியும் நீ சாப்பிடும் போது அம்மாவை சாப்பிட வைக்க வேண்டும், அப்படி சாப்பிட வைக்கவில்லை என்றால் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம போய்டும், அம்மா நல்லா இருக்கணும் இல்லையா?”


“ஆமாம் அங்கிள்”


“அப்படின்னா இந்த பொறுப்பை உன்னால் ஒழுங்காக செய்ய முடியுமா?”


“செய்றேன் அங்கிள்”


“good, அப்படி ஒரு வேளை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அம்மா சாப்பிடவில்லை என்றால் என்னிடம் சொல்ல வேண்டும் சரியா?”


“ok அங்கிள்”


“சரி இப்போ அங்கிள் உடனே ஆபீஸ் போக வேண்டும், உன்னிடம் பிறகு பேசுகிறேன், வருகிறேன்” என்று தருணுக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு எழுந்தான்.


“சத்யா நீங்க நல்லா இருந்தா தான் தருணை பார்த்துக்கொள்ள முடியும், அதை மனதில் வைத்து டாக்டர் சொன்னது போல் ஒழுங்காக சாப்பிடுங்கள், இந்த tablets ம் கரெக்டா எடுத்துக்கோங்க” என்று tablets prescription கொண்ட பையை அவளிடம் கொடுத்துவிட்டு “வேலைக்கு நீங்கள் Monday வந்தால் போதும், உங்கள் தலைமையிடம் நான் inform செய்துவிடுகிறேன், நீங்கள் நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுங்கள்,நான் கிளம்புறேன், bye” என்று சொல்லிவிட்டு பதிலுக்காக காத்திராமல் வேகமாக காரில் ஏறி கிளம்பிவிட்டான்.


காரில் ஏறி ப்ளூடூத் on செய்துவிட்டு கால் செய்தான். “ஹெலோ ஜெனி, HR, team leads, supervisors, managers எல்லோரும் நான் வரும் வரை இருக்க வேண்டும், யாரும் வீட்டிற்கு செல்லக்கூடாது” என்று அழைப்பை துண்டித்தான். குறிப்பிட்ட வேக எல்லைக்குள் காரை ஓட்டி வந்து அம்பத்தூர் தொழிற்சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான். எல்லோருமே பதட்டத்துடன் ஆபீஸ் ஏரியாவில் காத்திருந்தனர். மணிமாறனும் கொஞ்சம் பயந்து நின்று கொண்டிருந்தார். நந்தன் வந்ததும் “எல்லாரும் உக்காருங்க, எல்லாருக்கும் chair இருக்குல்ல” என்று அந்த ஏரியாவை ஒரு பார்வை சுற்றி பார்த்தான். இருக்கு sir என்று ஓரிரு குரல்கள் வந்தன. 


“Ok I will come to the point, கொஞ்ச நாள் என்னால இந்த கிளைக்கு வர முடியவில்லை, அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று என்னுடைய personal commitments, இன்னொன்று நல்ல team வைத்துள்ளேன், நான் தொலைவில் இருந்தாலும் எல்லா விதிகளையும் ஒழுங்காக பின்பற்றி வேலைகள் சிறப்பாக நடக்கும் என்று நான் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை, இன்று இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது, நான் இங்கு வராமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு என்று.” ஒரு சிலர் தலை குனிய, இன்னும் சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நந்தன் மீண்டும் தொடர்ந்தான். “ஜெனி, மெஷின் maintenance and repair பத்தி ஒரு logbook இருக்குல்ல, அதை குடுங்க”


“Yes sir, here”


நந்தன் அதை வாங்கி பார்த்து maintenance check up பண்ணி இவ்ளோ நாட்கள் ஆகிறது, ஏன் அடுத்த check up க்கு schedule செய்யவில்லை? Remember it’s a textiles industry. பார்க்கும் இடம் எல்லாம் காட்டன், நூலிழைகள், துணிகள் என்று இருக்கும். ஏதாவது ஒரு machine ல் சின்னதாக ஒரு பிரச்சனை என்றாலும், இல்லை short circuit problem வந்தாலும் ஒரு சின்ன தீப்பொறி போதும், உயிர் சேதமும், பொருட்சேதமும் தான் மிஞ்சும், நாளைக்கே எல்லா மெஷின்களின் செயல் தன்மையையும் ஆராய்ந்து எனக்கு report வேண்டும், அதன் பிறகு தான் வேலை ஆரம்பிக்கப்பட வேண்டும், இது no.1 task”


“அடுத்த விஷயம் dyeing பிரிவில் chemicals வைத்துள்ளோம், பெண்களை அங்கே வேலைக்கு வைக்காத காரணம், ஒரு வேளை அந்த பெண் கர்பமாக இருந்தால் அந்த கெமிக்கல் தன்மை கருவை பாதிக்க கூடாது என்பதற்காக தான், அதனால் கண்டிப்பாக dyeing பிரிவில் எந்த பெண்ணையும் மாற்றம் செய்யக்கூடாது, this is no.2, இது தான் என் தொழிற்சாலையின் விதிமுறை, bear this in mind”


“மூன்றாவது ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு ஒருவரை மாற்றம் செய்தால் கண்டிப்பாக HR க்கும், எனக்கும் தெரிவித்த பிறகு மாற்ற வேண்டும், இதுவும் ஏற்கனவே இருக்கும் விதிமுறை தான், ஆனால் இது பின்பற்ற படவில்லை”


“நான்காவது once sign in பண்ணியாச்சுன்னா you should change into uniform before you step into your working area, சேலை, சுடிதார் போட்டு செய்தால் அவை மெஷின்களில் மாட்டினால் ஆபத்தாகும், gloves, mask, boots இவை எல்லாம் போட்டிருக்க வேண்டும், உங்கள் பிரிவில் உள்ளவர்கள் இதை எல்லாம் பின்பற்றுகிறார்களா என்று பார்க்க வேண்டியது உங்கள் கடமை, இந்த பாதுகாப்பு விதிகள் எல்லாம் எதற்கு வைத்துள்ளோம் என்ற அடிப்படை அறிவும், தெளிவும் அனைவருக்கும் இருக்க வேண்டும், உங்கள் பிரிவில் உள்ள அனைவருக்கும் இதை புரிய வைக்க வேண்டியது உங்கள் கடமை”


“ஐந்தாவது உங்கள் சக பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் இருக்கலாம், அவர்கள் கஷ்டம், பலவீனத்தை உங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதோ அவர்களை இம்சிப்பதோ தவறு, இந்த எச்சரிக்கைக்கு பிறகும் யாராவது யாரையாவது இம்சிப்பதாக எனக்கு தெரிய வந்தால் தண்டனை பெரிதாக இருக்கும், நினைவில் கொள்ளுங்கள்”


“ஆறாவது கடைசியாக health check up செய்தது எப்போது?”


“7 months ஆகுது sir”


“6 months once செய்ய வேண்டும், இந்நேரம் health check up க்கு schedule செய்திருக்க வேண்டும், ஜெனி உடனே schedule செய்து விடுங்கள், காட்டன் இவ்வளவு தான் inhale செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் inhale செய்தால் நுரையீரல் பாதிக்கப்படும், shortness of breath ஏற்படும், அதனால் தான் ஒருவரே அதிக நேரம் காட்டன் நெய்யும் இடத்தில் இல்லாமல் மறுசுழற்சி முறையில் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது, it’s very easy to overlook these things, so you need to be extra careful, இதை எல்லாம் கண்டும் காணாமலும் விட்டால் எனக்கு கொஞ்சம் லாபத்தில் பணம் சேமிக்கலாம், ஆனால் என் employees health எனக்கு முக்கியம், அதனால் தான் health and safety rules பார்த்து பார்த்து வரையறுத்துள்ளேன், நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும், புரிந்ததா? இனி இவை சம்மந்தப்பட்ட reports எனக்கு உடனுக்குடன் follow up செய்து வர வேண்டும், இப்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் குறைகள் இருந்தால் சொல்லுங்கள், நாளையும் நான் இங்கு தான் இருப்பேன், feel free to approach me”


மற்றும் சிலர் சொன்ன குறைகள், முன்னேற்றத்திற்கான யோசனைகளை கேட்டுவிட்டு எல்லோரையும் அனுப்பிவிட்டு இரவு 11 மணிக்கு நந்தன் காரில் வந்து அமர்ந்தான். மிகவும் களைத்து போய் ஸ்டீயரிங் வீலில் தலையை சாய்த்து ஓரிரு நிமிடங்கள் படுத்திருந்தான். பிறகு நிமிர்ந்து ஏதோ யோசித்தான், கையில் மொபைல் எடுத்து விரல்களால் tap செய்து கொண்டிருந்தான். சிறிது நேர யோசனைக்கு பிறகு “coffee meet tomorrow evening da? usual place, மறந்துடாத” என்று யாருக்கோ மெசேஜ் அனுப்பினான். ஒரு ஆசுவாச மூச்செடுத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான். கமலா அம்மா ஹாலில் உட்கார்ந்து ஏதோ book படித்து கொண்டிருந்தார்கள்.

நந்தனை பார்த்ததும் “வந்துட்டியா நந்து, வா வா” 


“தூங்கலையா அம்மா? மணி 11.30 ஆகிறதே?”


“ஏதோ book படித்து கொண்டிருந்தேன், நேரம் சென்றதே தெரியவில்லை”


“அதெப்படி நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் 9 மணிக்கெல்லாம் தூங்க போய் விடுவீர்கள், நான் வர நேரமானால் book படித்து கொண்டு நேரம் போவதே தெரியவில்லை என்று விழித்து இருப்பீர்கள்”


“பெரிய கண்டுபிடிப்பு, போ டா போய் கையை கழுவிக்கொண்டு வா, தோசை சுட்டு தரேன்”


“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், நீங்கள் போய் தூங்குங்கள்”


காதில் வாங்காமல் கமலா அம்மா தோசை கல்லை அடுப்பில் வைத்தார்கள். நந்தன் தலையை அசைத்து விட்டு கையை கழுவிவிட்டு வந்து kitchen மேடையில் அமர்ந்தான். “அம்மா எனக்காக தூக்கத்தை கெடுத்து கொள்ளாதீர்கள் என்று எத்தனை முறை சொல்லி உள்ளேன்?”


“நீ இதையே பேசி bore அடிக்காதே, மதியம் கால் செய்து ஏன் அப்படி விளையாடினாய்?” என்று ஒரு புன்னகையுடன் கேட்டார்கள்.


நந்தன் யோசித்து விட்டு “அதுவா?” என்று தோசையை சாப்பிட ஆரம்பித்தான்.


“சொல்லு நந்து, யார்கிட்டயோ நீ காலையில் சாப்பிடவில்லை என்று அளந்து விட்டு இருக்கிறாய், அதற்கு தானே, யாருக்காக எதற்காக இந்த நாடகம்?”


“ம்ம்ம் இப்போ எதுக்கு உங்களுக்கு இவ்ளோ குஷி?”


“இல்லடா நீ இப்படி எல்லாம் விளையாடியது இல்லையே, யாரோ ஒரு பெண்ணுக்காக தான் இந்த நாடகம், சரியா? யார் அந்த பெண்?” என்று கண்ணில் குறும்புடன் கேட்க நந்தன் அடுத்த தோசையை எடுத்து கொண்டு “நான் என் ரூம்ல போய் சாப்பிட்டுக்கிறேன், நீங்க உங்களுக்கு தோணுற விஷயத்தை நிதானமாக கனவு காணுங்கள்” என்று அங்கிருந்து நகர முயன்றான்.


“சிரிக்காத நந்து, நான் கனவு காண்கிறேன், அது நிஜமாகும் வரை கண்டிப்பாக கனவு காண்பேன்”


நந்தன் சாப்பிட்டதும் உடனே உறங்கி விட்டான்.


மறுநாளும் அம்பத்தூர் தொழிற்சாலை சென்று மெஷின்களை பழுது பார்க்கும் வேலை, protocols வடிவமைக்கும் வேலை என்று எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டிருந்தான். நடுவில் வள்ளியை எதார்த்தமாக சந்தித்த போது “நீங்கள் சின்னுவின் அம்மா தானே?” என்று கேட்க வள்ளி “ஒரு வகையில் ஆமாம், சின்னு என் அக்கா மகன், அக்கா இப்போது உயிரோடு இல்லை” என்றாள். “ஓ sorry” என்றான். “பரவால்ல சார், உங்களை இத்தனை நாட்களாக யார் என்று தெரியாமல் இருந்துவிட்டோம், மன்னிக்கவும்”


“அதனால் என்ன? That’s ok. சத்யாவை பார்த்தீர்களா?”


“ஆமாம் சார், நேற்று உங்களுடன் அவளை கம்பெனியில் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை, பிறகு தான் நீங்கள் இந்த கம்பெனி முதலாளி என்று தெரிய வந்தது, சத்யாவை நேற்று மாலை சென்று பார்த்தேன், எல்லா விவரங்களையும் சொன்னாள், தக்க சமயத்தில் நீங்கள் வந்து அவளை ஹாஸ்பிடல் அழைத்து செல்லவில்லை என்றால் என்ன ஆகி இருக்குமோ? ரொம்ப நன்றி சார்”


“It’s fine. பிறகு சந்திக்கிறேன்” என்று நகர்ந்தான்.


மாலையில் மெயின் branch சென்று மதுவை அழைத்தான். “என்ன மது, அம்பத்தூர் branch உங்கள் கவனத்தில் விட்டதற்காக என்னை மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டீர்கள்”


“மன்னித்து விடுங்கள் சார், நெறைய வேலைகள்....” என்று அவள் இழுக்க நந்தன் முறைத்தான். “I don’t want any excuse”.


 “sorry”


“சரி நான் கிளம்புறேன், முக்கியமா ஒருத்தர meet பண்ண போறேன்”


“நானும் வரலாமா? எனக்கு இந்த முறை அழைப்பு இல்லையா?” என்றாள் கண்ணில் ஒரு sorry யுடன், உதட்டில் புன்னகையுடனும் மது.


“நான் ராகவனோட ரிலாக்ஸா பேசிட்டே coffee குடிக்கலானு நினச்சேன், நீ அம்பத்தூர் branch விஷயங்களில் கவனக்குறைவாக இருந்ததை நினைத்தால் எனக்கு கொலை காண்டாகி விடும், அதனால் தான் உன்னை அழைக்காமல் ராகவனை மட்டும் அழைத்தேன், ஆனால் அந்த ராஸ்கல் அதற்குள் உன்னிடம் சொல்லிவிட்டான், தயவு செய்து இரண்டு நாட்களுக்கு என் கண்ணில் படாதே”


“படமாட்டேன் சனி, ஞாயிறு தான் அடுத்த இரண்டு நாட்களும்”


நந்தன் முறைக்க “சரி சரி நான் கிளம்புறேன், I don’t want to be a கரடி between you and Raghavan, continue your bromance, no wonder no girl wants to marry you, ராகவனையே கட்டிக்கொண்டு அழு” என்று மது சொல்லிக்கொண்டே வெளியே சென்றாள்.


நந்தனும் ராகவனும் அந்த coffee ஷாப்பில் ஒதுக்குப்புறமான ஒரு டேபிள் பார்த்து அமர்ந்திருந்தார்கள். “மது வரலையா?” ராகவன் கேட்டான்.


“மதுவோடு பேச வேண்டுமானால் அவளை நீ தனியாக எங்கயாவது அழைத்து செல், உன்னை coffee குடிக்க வா டான்னு கூப்பிட்டா அவளுக்கும் மெசேஜ் பண்ணிருக்க” என்று நந்தன் கடிந்தான்.


“எப்பவும் நாம மூணு பேரும் தானே வருவோம், அதனால் தான், சரி நீ ஏன் டென்ஷனா இருக்க? It’s not like you.”

.“பின்ன என்னடா மதுவை நம்பி சில விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிட்டேன், சத்யா பார்த்து சொல்லவில்லை என்றால் இந்நேரம் factory தீக்கிரையாகி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை”


“என்னடா சொல்ற?”


“It’s ok, sort out பண்ணிட்டேன்”


“சத்யான்னா அந்த அமைந்தகரை சத்யாவா?”


“ஆமாம் டா”


“அந்த குட்டி பையன் எப்படி இருக்கான், துரைசாமி இப்போ அங்க போறதில்ல தானே?”


“இல்லடா போன மாதிரி தெரியல, உனக்கு தான் thanks சொல்லனும்”


“இதுக்கெல்லாம் எதுக்கு டா thanks?”


“இல்லடா அன்னைக்கு நைட் தருண் அப்படி தூரலில் பயந்து நடக்க முடியாமல் நடந்து வந்தது, இன்னும் என் கண்ணிலேயே உள்ளது”


“ம்ம்ம்...சத்யாவிடம் வேறு ஏதாவது விவரம் கேட்டாயா? என்ன பிரச்சனை என்று?”


“இல்லடா she is not well physically and emotionally, past பத்தி ஏதாவது கேட்டாலே I am afraid she will break down, இப்போதைக்கு நமக்கு தெரிந்து அவர்களுக்கு இருக்கும் அல்லது இருந்த problem துரைசாமி மட்டும் தான், அவனையும் நீ sort out செய்துவிட்டாய், so இப்போதைக்கு அவங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்றே தோன்றுகிறது. யாரோ அவர்கள் டேபிளை கடந்து சென்றார்கள்.


“ஓஹோ எல்லாம் அவன் வேலை தானா?” என்று துரைசாமி தனக்கு தானே பேசிக்கொண்டான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018