Sms ch 13 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 13
நந்தனும் சத்யாவும் ஒரு டேபிளில் அமர்ந்ததும் வெயிட்டர் மெனு கார்டு கொடுத்து நின்றார். நந்தன் மெனுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “சத்யா நீங்க பாருங்க, என்ன சாப்பிடுறீங்க?” சத்யா பார்த்து விட்டு உடனே சொன்னாள் “லெமன் ரைஸ்”.
நந்தன் “அப்புறம்?”
“அது போதும்” என்றாள்.
“No way, நானே சொல்றேன்” என்று வெயிட்டரிடம் திரும்பி “நீங்க லெமன் ரைஸ், அப்புறம் ரெண்டு full meals கொண்டு வாங்க” என்றான்.
“என்னால அவ்ளோ எல்லாம் சாப்பிட முடியாது” என்றாள் சத்யா.
“ஒரு full meals எனக்கு”
“தெரியும், இன்னொன்று எனக்கு தானே, அது தான் சாப்பிட முடியாது என்றேன்”
“அதெல்லாம் சாப்பிடலாம், நீங்கள் லெமன் ரைஸ் மட்டும் சீக்கிரம் சாப்பிட்டு விட்டால் நான் எப்படி full meals சாப்பிட்டு கொண்டிருக்க முடியும்?”
“நீங்கள் நினைத்ததை நடத்தி விட வேண்டும், அப்படி தானே, மற்றவர்கள் விருப்பம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல” என்றாள் சிறு கோபத்துடன்.
“இது சாப்பாட்டிற்காக மட்டும் சொன்னது போல் தெரியவில்லையே, நான் தருணை பார்க்க வருவதற்கும் சேர்த்து தானே சொல்கிறீர்கள்?” என்றான் ஒரு புன்னகையுடன்.
“ஆமாம்” என்றாள்.
“சத்யா நிஜமாக சொல்லுங்கள், என்னை பார்த்தால் கெட்டவன் போல் தெரிகிறதா?”
சத்யா ஒரு நிமிடம் அவனை பார்த்தாள், பதில் ஏதும் சொல்லவில்லை.
“Ok I take it that you still think me as a bad guy and you don’t trust me?”
“அப்படி இல்லை, யாரை நம்புவது, நம்பக்கூடாது என்று எனக்கு தெரியவில்லை, சில பேரை நம்பி நான் நெறைய காயப்பட்டு விட்டேன், அதனால் இப்போதெல்லாம் எடுத்ததுமே எல்லோரையும் சந்தேகத்தோடு பார்க்கிறேன், ஆனால் அடி மனதில் நீங்கள் நல்லவர் தானோ, நான் தான் தவறாக நினைக்கிறேனோ என்று தோன்றும், நான் உங்களை நம்பவில்லை என்பதை விட ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று கணிக்கும் என் கணக்கை நம்பவில்லை”
“ம்ம்ம் புரிகிறது, கேட்க வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் வாய்ப்பு ஏற்பட்டதில்லை, நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?”
“திடீரென்று ஏன் படிப்பை பற்றி கேட்கிறீர்கள்?”
“தருண் அவன் வரைந்த படங்களை காண்பித்து கொண்டிருந்தான், அதில் ஆங்கிலத்தில் சில கவிதைகள் இருந்தன, கண்டிப்பாக அவை தருண் எழுதியவையாக இருக்க முடியாது, நீங்கள் எழுதியவை தான் என்று தோன்றும், அந்த அளவு ஆங்கிலத்தில் புலமை பெற்ற நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம்”
“சொன்னால் சிரிப்பீர்கள்”
“I won’t”
“ஸ்கூல் தான் முடித்திருக்கிறேன், +2, அதற்கு மேல் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை”
“Really? Woww +2 விற்கே இவ்வளவு ஆழமான கவிதைகளா?”
“நீங்கள் என்னை cheer up செய்வதற்காக கொஞ்சம் அதிகமாவே புகழ்கிறீர்கள்”
“கண்டிப்பாக இல்லை சத்யா, நான் அளவுக்கு அதிகமாக, அனாவசியமாக யாரையும் புகழ்ந்தது இல்லை, என்ன தோன்றுகிறதோ அதை சொல்லி தான் பழக்கம், சரி சாப்பிடுங்கள்”
சத்யா சாப்பிட முடியாமல் போதும் என்று சொல்லும் போதெல்லாம் நந்தன் ஏதாவது பேசி அவளை சாப்பிட வைத்தான். நந்தனும் அவளுக்காக கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டான்.
“டெஸ்ஸர்ட் என்ன சாப்பிடுகிறீர்கள்?”
“டெஸ்ஸர்ட் வேறா? முடியவே முடியாது, வயிற்றில் இடம் இல்லை”
“டெஸ்ஸட்டுக்கு வயிற்றில் எப்போதுமே இடம் இருக்கும், நீங்களாக ஆர்டர் செய்கிறீர்களா? இல்லை நான் செய்யவா? அப்புறம் நான் என் இஷ்டத்துக்கு ஆர்டர் செய்து விட்டேன் என்று புலம்ப கூடாது”
“இல்லை ப்ளீஸ் என்னால் கண்டிப்பாக சாப்பிட முடியாது”
“சரி நான் சாப்பிடுகிறேன், உங்களை பார்க்க வைத்து சாப்பிடுவதால் வயிறு வலித்தாலும் பரவாயில்லை”
நந்தன் ஐஸ் கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே கேட்டான்.
“மணிமாறனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?”
சத்யா திகைத்தாள். “காலையில் மணிமாறனும் நானும் பேசியதை நந்தன் பார்த்திருப்பானோ? கேட்டிருப்பானோ? என்னை பற்றி என்ன நினைத்திருப்பான்? இவன் எப்படி, ஏன் அங்கே வந்தான்? மணிமாறன் பெயர் எப்படி தெரியும்? மணிமாறனும் இவனும் நண்பர்களோ? அவர் ஆனால் 45 வயதுக்கு மேல் இருப்பாரே? அவர் எப்படி இவருக்கு நண்பராக இருக்க முடியும்? ஒரு வேளை உறவினரோ? ஒரு வேளை நந்தனும் நம்ம கம்பெனியில் தான் வேலை செய்கிறானோ? மேனேஜர் ஆக இருப்பானோ? இது வரை அங்கே இவனை பார்த்ததில்லையே?” தலையை குனிந்து சத்யா பல குழப்பங்களுடன் யோசிப்பதை நந்தன் அமைதியாக பார்த்துக்கொண்டே ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தான்.
“ஹலோ???” என்றான் நந்தன்.
சத்யா நிமிர்ந்து பார்க்க “மணிமாறனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டேன்” என்றான் நந்தன்.
“அது அது வந்து.... உங்களுக்கு எப்படி மணிமாறனை தெரியும்?”
“ம்ம்ம் பிறகு சொல்கிறேன், but உங்களுக்கும் மணிமாறனுக்கும் என்ன பிரச்சனை என்று சொன்னால் என்னால் முடிந்தால் ஏதாவது சரி செய்ய முயற்சி செய்வேன்”
“உங்களால் முடியாது”
“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? Believe me. I can do something about it.”
சத்யா கீழே குனிந்து கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சி செய்தாள்.
“சத்யா?”
“ம்ம்ம்...” என்றாள் கீழே குனிந்தவாறே.
“என்னிடம் சொல்ல விருப்பமில்லையா?”
“இதை எல்லாம் வெளியில் சொல்லும் நிலையில் நான் இல்லை, பல வருடங்கள் கழித்து இன்று ஏதோ ஒரு பழைய friend உடன் நேரம் செலவழித்தது போன்ற உணர்வு, எல்லாவற்றையும் எல்லோரிடமும் திறந்து பேச எல்லாராலும் முடியாது, மணிமாறனுடன் எனக்கு ஏற்பட்ட பிரச்னையை சொல்ல வேண்டும் என்றால் என் கடந்த காலத்தை பற்றியும் பேச வேண்டி இருக்கும், அதை பேச என்னிடம் இப்போது சக்தி இல்லை, மேலும் அதை பற்றி பேசி இலகுவாக இருக்கும் இந்த நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை”
நந்தன் ஒரு சிறு அமைதிக்கு பின் “ok at least இந்த நேரம் இலகுவாக இருந்தது என்று சொன்னீர்களே, அது வரை சந்தோஷம், போலாமா?”
“ம்ம்ம் போகலாம்”
நந்தன் bill செட்டில் செய்துவிட்டு காரில் சத்யாவை அம்பத்தூர் கம்பெனிக்கு அழைத்து சென்றான். அவன் காரை நிறுத்தியதும் செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறந்து விட்டு சத்யாவையும் பார்த்து விட்டு “ஒன்னும் பிரச்சனை இல்லையே சார்?” என்றான்.
“இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல, just மயக்கம் தான், இவங்கள பத்தி யாராவது கேட்டார்களா?”
“மணிமாறன் சார் தான் கேட்டாரு, இவங்க வெளில போனாங்கன்னு சொன்னேன்”
“வேற எதுவும் சொல்லலையே?”
“இல்ல சார்”
“சரி நான் பாத்துக்கிறேன், வாங்க சத்யா” நந்தன் முன்னாடி செல்ல சத்யாவின் கால்கள் தயங்கிய படியே அவன் பின்னால் சென்றன.
“Good afternoon sir” என்று எல்லோரும் நந்தனுக்கு வணக்கம் செலுத்த நந்தனும் good afternoon சொல்லிக்கொண்டே ஆபீஸ் ஏரியாவிற்கு சென்றான். ஒரு 20 பேர் அமர்ந்து வேலை செய்யக்கூடிய அளவிலான பகுதி அது. அந்த பகுதியின் கடைசியில் ஒரு அறை இருந்தது. “good afternoon sir” என்று நந்தன் பின்னாடியே வேகமாக நடந்து வந்து அறை கதவின் பூட்டை சாவியால் திறந்தாள் ஒருத்தி. “ஜெனி மணிமாறனை வர சொல்லுங்கள், dyeing section ல் வேலை செய்யும் மணிமாறன்” என்று சொல்லிவிட்டு நந்தன் சத்யாவுடன் அந்த அறைக்குள் சென்றான். Curtains எல்லாம் open செய்து கொண்டே “உட்காருங்கள் சத்யா” என்றான்.
“இல்ல பரவால்ல, நீங்க....நீங்க தான் இந்த கம்பெனி ownera?” என்றாள் குரலில் அதிர்ச்சியுடன்.
“ஆமாம்” என்றான் நந்தன் chair ல் அமர்ந்து.
“ஓ sorry எனக்கு தெரியாது”
“It’s ok. உக்காருங்க”
சத்யா நந்தனுக்கு எதிரில் இருந்த chair ஒன்றில் அமர்ந்தாள்.
“சரி சொல்லுங்க, மணிமாறனை நான் விசாரிக்கறதுக்கு முன்னாடி உங்க side ஸ்டோரிய சொன்னா நல்லா இருக்கும்”
“அது...” சத்யாவிற்கு நாக்கு உலர்ந்தது.
கதவை தட்டும் சத்தம் கேட்க “come in” என்றான் நந்தன். ஜெனி மணிமாறனுடன் உள்ளே வந்தாள்.
மணிமாறன் சத்யாவை பார்த்து வியர்த்து கொட்ட தொடங்கினார். “Good afternoon sir, நீங்க வர சொன்னீங்களாம்” என்றார் நெற்றி வியர்வையை kerchief ல் துடைத்த படி.
“Good afternoon, வெளில வெயிட் பண்ணுங்க மணிமாறன், கொஞ்ச நேரத்துல அழைக்கிறேன்”
“Ok sir”
“ஜெனி நீங்களும் போகலாம்”
“ok sir”
ஜெனியும் மணிமாரனும் வெளியேறினார்கள்.
“சொல்லுங்க சத்யா, என்ன problem?”
“அது...”
“பயப்படாம சொல்லுங்க, this is your chance”
“மணிமாறன் காலைல என்கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ, உனக்கு பணிச்சுமை இல்லாம பாத்துக்கிறேன்னு சொன்னாரு, என்னால் முடியாது என்றேன்”
“வேறு என்ன சொன்னார்?”
சத்யாவிற்கு கைகள் நடுங்கி வியர்த்தது. “மும்பை, red light area, தனக்கு நடந்த விபரீதங்கள் பற்றி எல்லாம் சொன்னால் நந்தன் தன்னை பற்றி என்ன நினைப்பார், எல்லாவற்றையும் சொன்னாலும் தவறாக தான் நினைப்பார், அரைகுறையாக சொன்னாலும் தவறாக தான் நினைப்பார், நான் சொல்லாவிட்டாலும் மணிமாறன் சொல்ல வாய்ப்பிருக்கிறது, எப்படி பார்த்தாலும் code of conduct என்று மணிமாறனை வேலையை விட்டு நீக்கினால் என் கடந்த கால வாழ்க்கையை பற்றி கேட்டு என்னையும் பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது, இந்த வேலை கிடைக்கவே இரண்டு மாதங்கள் ஆகினவே, இந்த வேலையும் இல்லை என்று ஆகிவிட்டால் வாடகை, தருணுக்கு சாப்பாடு இதற்கு எல்லாம் என்ன செய்வேன்”.
நந்தன் ac யை கூட்டி வைத்தான். “சத்யா??”
நந்தனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் அவமானமும் வேதனையும் நிறைந்து இருந்தது. “யார் இவன்? நேற்று வரை யாரோ ஒருவன் தானே? தருணை பார்க்க வருவான், போவான், துரைசாமியுடன் என்னை இணைத்து பார்த்தவன் தானே, சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னை வார்த்தையால் குத்தியவன் தானே, இவன் என்னை இன்னும் கொஞ்சம் தவறாக நினைத்தால் நினைத்து கொள்ளட்டும், நான் ஏன் இவ்வளவு வேதனை பட வேண்டும், பயப்பட வேண்டும்?” ஒரு முடிவுக்கு வந்தவளாய் தைரியமாக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
நந்தன் அவளுக்கு வியர்ப்பதையும், கைகள் நடுங்குவதையும், முகத்தில் ஏற்பட்ட குழப்பம், பயம், தைரியம் என்று எதையுமே கவனிக்க தவறவில்லை.
“என்னை மும்பை red light ஏரியாவில் மணிமாறன் பார்த்திருக்கிறாராம், அதனால் அவருக்கு நான் அட்ஜஸ்ட் செய்து போவதில் எனக்கு எதுவும் சிரமம் இருக்காது என்று சொன்னார்”
“நீங்கள் அங்கு இருந்தது உண்மையா?”
“உண்மை தான், அதற்காக கைதும் ஆனேன்”
“I see”
“என்னால் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது, இந்த வேலையில் நீடிக்க கட்டாயம் சொல்லி தான் ஆக வேண்டும் என்றால் நான் இந்த வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்” என்றாள் நிமிர்ந்து.
நந்தன் அவளை ஆழமாக பார்த்துவிட்டு ஒரு சிறு அமைதிக்கு பின் சொன்னான் “நீங்கள் வெளியே வெயிட் பண்ணுங்க, மணிமாறனிடம் பேசிவிட்டு அழைக்கிறேன்”
“Thanks” என்று சொல்லி நந்தனை பார்க்காமல் திரும்பி நடந்தாள். ஏதோ எதிலோ தோற்று விட்டது போல், ஏதோ ஒன்று கை நழுவி போவது போல் உணர்ந்தாள் சத்யா.
நந்தன் மணிமாறனை அழைத்தான்.
“சத்யாவிற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?”
“பாதகத்தி எல்லாவற்றையும் சொல்லி இருப்பாளோ? அவள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் மாற்றி சொல்லிவிடுவோம்” மணிமாறன் யோசித்து கொண்டிருந்தார்.
“அது வந்து sir, வேலை கஷ்டமா இருக்கு, நீங்க எனக்கு கம்மியா வேலை குடுத்தா நல்லா இருக்கும், வீட்டுக்கு வாங்க, உங்களை நான் நல்ல மாதிரியா கவனிச்சிக்குறேன்.....நிஜமா....அப்படி தான் சொன்னார்கள்”
“மணிமாறன் உங்கள் மீது எனக்கு கொஞ்சம் மதிப்பு இருந்தது”
“இல்ல sir, சத்யாவை பத்தி உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா நான் சொன்னது உண்மைன்னு புரியும், அவங்க மும்பைல பிரோதெள் கேஸ்ல கைது ஆகி இருக்காங்க, அது மட்டும் இல்ல drug addict கூட, இவங்க உடம்ப வித்து தான் எதுவா இருந்தாலும்....”
நந்தன் “That’s enough” என்று நந்தன் அதிகாரமாக சொல்ல மணிமாறன் அதிர்ந்தார்.
நந்தன் ஜன்னலை பார்த்து திரும்பி நின்றான். ஒரு சிறு அமைதிக்கு பின் திரும்பி மணிமாறனை பார்த்தான். அவர் அமைதியாக தலையை குனிந்த படி நின்று கொண்டிருந்தார்.
“மணிமாறன் உங்களை ஒரு மாதம் பணி இடை நீக்கம் செய்கிறேன்”.
“sir ப்ளீஸ், நான் சொல்வதை நம்பாமல் ஒரு விபச்சாரி..”
“மணிமாறன், வார்த்தைகளில் கவனம் தேவை” நந்தன் கண்டிப்புடன் கூறினான்.
“sorry sir, என் வார்த்தையை நம்பாமல் அவர்கள் வார்த்தையை நம்ப வேண்டிய அவசியம்? அவர்கள் விபச்சார வழக்கில் கைதானதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”
“மணிமாறன் உங்களுக்கு இந்த விஷயம் எப்போது தெரிய வந்தது?”
“நான் மும்பை சென்றிருந்த போது sir, அவர்கள் கைதாகும் போது நானும் அங்கு தான் இருந்தேன்”
“ஓஹோ.... So you went to receive their service?”
மணிமாறன் தலையை குனிந்தார்.
“உங்களை ஏன் நிரந்தர பணி நீக்கம் செய்யாமல் இடை பணி நீக்கம் செய்தேன் தெரியுமா?”
மணிமாறன் அமைதியாக இருந்தார்.
“நீங்கள் இதற்கு முன் வேலை செய்த கோவை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட போது உங்கள் உயிரை பணயம் வைத்து 20 பேரை காப்பாற்றினீர்கள் இல்லையா?”
மணிமாறன் கண்கள் கலங்கின. “ஆமாம் sir”
“அப்படி காப்பாற்றும் போது உங்களுக்கும் சில தீ காயங்கள் ஏற்பட்டன”
“ஆமாம் sir”
“நீங்கள் என்னிடம் வேலைக்கு சேரும் போது இதை எல்லாம் சொல்லவில்லை. மாறாக இந்த வேலையை செய்வதற்கு நீங்கள் ஏன் தகுதியானவர் என்று சொன்னீர்கள், நான் இந்த கிளையை ஆரம்பித்த நேரம், உங்களை போன்றவர்கள் தான் பணியில் எனக்கு தேவை பட்டார்கள், உங்கள் பழைய கோவை முதலாளி தொழில் நிமித்தமாக என்னை சந்திக்க வந்த போது உங்களை பார்த்துவிட்டு என்னிடம் அந்த தீ விபத்தை பற்றியும் நீங்கள் எப்படி மற்றவர்களை காப்பாற்றினீர்கள் என்றும் சொன்னார், I was touched, அடுத்த annual meeting போது இதை பற்றி சொல்லி உங்களை கவுரவிக்க எண்ணி இருந்தேன், நல்ல வேலை செய்யும் திறமை, சக பணியாளர்களை காப்பாற்றும் குணம் கொண்ட நீங்கள் இன்று சத்யாவிடம் நடந்து கொண்ட முறை சரியா?” மணிமாறன் ஏதோ சொல்ல முயல நந்தன் கையை காட்டி இடை மறித்தான்.
“நான் சொல்லிடுறேன், காலையில் நீங்களும் சத்யாவும் வெளியில் பேசிக்கொண்டு இருந்ததை நான் பார்த்தேன், ஆனால் என்ன பேசினீர்கள் என்று எனக்கு தெரியாது, சத்யா மயங்கி விழுந்து அவர்களை ஹாஸ்பிடல் அழைத்து சென்று drips ஏற்றி விட்டு அழைத்து வந்துள்ளேன், அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்ட போது முதலில் சொல்ல மறுத்து விட்டார்கள், பிறகு தான் சொன்னார்கள், மும்பை விஷயம் உட்பட, I believe everyone deserves a second chance, நான் சொல்வது சரி தானே மணிமாறன்?” நந்தன் மணிமாறனை கூர்ந்து நோக்கினான்.
மணிமாறன் சிறு அமைதிக்கு பின் “சரி தான் sir, என்னை நிரந்தர பணி நீக்கம் செய்யாமல் இருந்ததற்கு நன்றி”
“சத்யாவிடம்...”
“மன்னிப்பு கேட்டு விடுகிறேன் sir”
“இனிமேல்....”
“இது போன்ற தவறு நடக்காது sir”
“Good, இப்போது நீங்கள் செல்லலாம், வெளியே காத்திருக்கும் சத்யாவை உள்ளே வர சொல்லிவிடுங்கள்”
“Ok sir, மன்னித்து விடுங்கள், நன்றி”
சத்யா வெளியே உணர்ச்சியற்று அமர்ந்திருந்தாள்.
“சத்யா என்னை மன்னித்து விடுங்கள்”
சத்யா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
“sir உங்களை அழைத்தார், நீங்கள் உள்ளே செல்லுங்கள்”
சத்யாவின் கால்கள் தயங்கின. மெதுவாக உள்ளே சென்றாள்.
“வாங்க சத்யா, உட்காருங்கள்”
சத்யா அமர்ந்ததும் “பயப்படாமல் சில உண்மைகளை பேசியதற்கு நன்றி, மணிமாறன் மன்னிப்பு கேட்டாரா?”
“கேட்டார் sir”
“அவரை மன்னித்து விடுங்கள், இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டார், உங்களை மீண்டும் spinning mill க்கு நான் மாற்றி விடுகிறேன், அங்கே என்ன பிரச்சனை உங்களுக்கு?”
நந்தன் தன்னை இழிவாக பார்க்காமல் இயல்பாக பேசியது சத்யாவிற்கு வியப்பாகவும் கொஞ்சம் relief ஆகவும் இருந்தது.
“Spinning mill ல் சில மெஷின்களில் இருந்து தீப்பொறி வருவதை கவனித்து மேல் அதுகாரியிடம் சொன்னேன், முதல் முறை நான் பார்த்து கொள்கிறேன் என்றார், ஆனால் எதையும் சரி செய்தது போல தெரியவில்லை, இரண்டாம் மூன்றாம் முறை தீப்பொறி வந்த போது இது மிகவும் ஆபத்தானது, மது மேடமிடம் சொல்லுவேன் என்று சொன்னேன், உனக்கு இங்கே வேலை செய்ய விருப்பம் இல்லையா என்று கூறி என்னை dyeing பிரிவில் மாற்றி விட்டார்கள்”
“மெஷின்களில் தீப்பொறி வருவது மிகவும் ஆபத்தான விஷயம், நீங்கள் அதை கவனித்து சொன்னதிற்கு நன்றி, நான் உடனே அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன், ச்ச கோயில் கல்யாணம் என்று ஏதேதோ வேலைகளில் இந்த கிளையை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று நந்தன் தன்னை தானே நொந்து கொண்டான்.
“ஓ இவருக்கு திருமணம் போல” சத்யா மனதிற்குள் நினைத்து கொண்டாள். கொஞ்சம் தொண்டையை அடைத்து இருமல் வந்தது.
“தண்ணி குடிங்க சத்யா, பாவம் உடம்பு சரி இல்லாத உங்களை வெகு நேரமாக இங்கே இருக்க வைத்து விட்டேன், சரி உங்களை வீட்டில் விட்டுவிட்டு வந்து அந்த மெஷின் விஷயங்களை கவனிக்கிறேன், நெறைய விஷயங்களை sort out செய்ய வேண்டி உள்ளது, முதலில் உங்களை வீட்டில் விட்டுவிடுகிறேன்”
நந்தன் டென்ஷன் ஆவதை பார்த்து “பரவால்ல sir, நான் பஸ் இல்ல ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்”
“No no, காலையில் நீங்கள் இருந்த நிலைக்கு உங்களை தனியே அனுப்ப என் மனம் இடம் கொடுக்காது, வாங்க போலாம், தண்ணி குடிச்சீங்களா? இந்தாங்க first தண்ணி குடிங்க” என்று சத்யாவை தண்ணீர் குடிக்க வைத்து வீட்டிற்கு அழைத்து சென்றான் நந்தன்.
Comments
Post a Comment