Sms ch 33 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 33

நந்தன் அதிகம் பேசவில்லை என்றாலும் சத்யாவின் விருப்பத்திற்கேற்ப சாப்பிட்டான். முகத்தில் கொஞ்சம் சந்தோஷத்தையும் வரவைத்திருந்தான். தருண் சத்யாவிடம் விடை பெற்றுவிட்டு வீட்டிற்கு வந்தவன் அங்கே இருந்த குடும்பத்தினருடன் பேசாமல் தன் அறைக்கு சென்று உடைகளை மாற்றிவிட்டு படுத்தான். அவன் சிந்தனை எல்லாம் கௌஷிக்கின் கடிதங்களை பற்றியே இருந்தது. 15 நாட்கள் கழித்து நந்தன் ஆபீஸ் சென்றான். 15 நாட்களில் தீபிகா நன்றாகவே வேலை செய்திருந்தாள். R&D துறையை அமைக்க அவள் மேற்கொண்ட ஆராய்ச்சியும், அதன் அறிக்கையும் பாராட்டுக்குறியதாக இருந்தது. நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. தீபிகாவை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் கிளைக்கு சென்றான். அவள் பரிந்துரைகள் அவனுக்கு ஏற்புடையதாக இருந்தன. சீக்கிரமே ஒரு யூனிட் ஒன்றை கட்டுவதற்கு அம்பத்தூர் கிளையில் இடத்தை அளவிடுவதும் equipments வாங்குவதும் என்று பணிகள் விரைவு படுத்தப்பட்டன.

“தீபிகா வேலை விஷயத்தில் உனக்கு திறமை இருக்கிறது என்று தெரிந்தும் நீ வேறு ஏதாவது காரணங்களால் ஒழுங்காக வேலை செய்ய மாட்டாய் என்று எண்ணி உன்னை குறைவாக மதிப்பிட்டு விட்டேன், என்னை மன்னித்து விடு” என்றான்.

“அதனால் என்ன? நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதில் தவறு இல்லை”

மேற்கொண்டு இருவரும் பணி நிமித்தமாக பேசிக்கொண்டு நடந்தார்கள். 3 மாதங்களில் அந்த யூனிட்டை கட்டி முடிக்க வேண்டும் என்று பேசினார்கள். நந்தனுக்கு தீபிகா மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் மேலும் சில முடிவெடுக்கும் உரிமைகளை தீபிகாவிற்கு அளித்தான். இந்த புது யூனிட் வேலைகளினால் பெரும்பாலும் நந்தனும் தீபிகாவும் வீட்டிலிருந்து நேராக அம்பத்தூர் கிளைக்கே வருவதும் ஒன்றாக செல்வதுமாக இருந்தார்கள்.

நந்தனையும் தீபிகாவையும் முதலில் ஒன்றாக பார்த்த சத்யாவிற்கு ஏனோ மனம் வலித்தது. தினமும் இருவரும் ஒன்றாக வருவதையும் போவதையும் பார்த்தவளுக்கு இன்னும் அதிகமாகவே வலித்தது. அதிலும் இருவரும் சிரித்து பேசிக்கொண்டே நடந்தால் கேட்கவே வேண்டாம், அன்றெல்லாம் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த சத்யா போராடினாள். தீபிகா சொன்னது எல்லாம் உண்மை தான் போல என்று நினைக்க ஆரம்பித்தாள். தனக்கு ஏன் இவ்வளவு போராட்டம் என்று கேட்டுக்கொள்வாள். நம் மகனுடன் நல்லவன் போல பழகும் ஒருவன் பெண்கள் விஷயத்தில் மோசமானவன் என்றால் கோபம் வரத்தானே செய்யும், மற்றபடி அவன் யாரோடு எப்படி சிரித்து பேசினால் எனக்கென்ன என்று தனக்கு தானே சொல்லிக்கொள்வாள்.

நந்தனும் சத்யாவுடன் பேசி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவள் வீட்டிற்கும் அவன் செல்வதில்லை. தருணை மட்டும் அவன் பள்ளி முடிந்ததும் அவ்வப்போது பார்க்கிறான் என்று தருண் மூலம் சத்யா தெரிந்து கொண்டாள். நந்தனை கம்பெனியில் தொலைவில் இருந்து சில சமயம் சத்யா பார்ப்பதோடு சரி. எப்போதாவது அவளை கடக்கும் போது good morning, good afternoon அவ்வளவு தான். அருகில் பார்ப்பதோ, பேசுவதோ கிடையாது. ஒருவேளை அவனுக்கும் தீபிகாவிற்கும் திருமண வேலைகள் நிஜமாகவே நடக்க ஆரம்பித்து விட்டன போல. சத்யாவுடன் பழகாதே, அவள் வீட்டிற்கு செல்லாதே என்று தீபிகா சொல்லி இருப்பாள் போல, அதனால் தான் இந்த இரண்டு வாரங்களாக நம் வீட்டிற்கும் வருவதில்லை, நம்மை கண்டாலும் அதிகமாக பேசுவதில்லை என்று எண்ணினாள்.

அவ்வப்போது குழப்பமும் சோகமும் வந்தாலும் மறு நிமிடமே பேசாவிட்டால் போகட்டும், 4 மாதங்களுக்கு முன்பு இவர் யாரென்று எனக்கு தெரியுமா? இவர் என் வாழ்க்கையில் இல்லாமல் தானே வாழ்ந்தேன். இப்போது மட்டும் என்ன? இவர் பேசவில்லை என்றால் பெரிய இழப்பா? நல்லது தான். இப்போதெல்லாம் வீட்டிற்கு வந்தால் அவர் நம்மை பார்க்கும் பார்வை கூட சரி இல்லை. அதனால் வராமல் இருப்பது நல்லது தான். சரியான காமுகன், முதலில் பார்ப்பான், பிறகு என்ன செய்வானோ? யாருக்கு தெரியும்? இவனை பற்றி அதிகம் யோசிக்காமல் படிப்பது தான் நமக்கும் தருணின் எதிர்காலத்திற்கும் நல்லது என்று கம்பெனியில் எவ்வளவு சிந்தனைகள் ஓடினாலும் வீட்டிற்கு வந்ததும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பிலேயே கவனமாக இருந்தாள்.

தீபிகாவும் தன்னை நொய் நொய் என்று நச்சரிக்காமலும், பழைய விஷயங்களை பேசாமல் இருந்ததாலும் நந்தன் அவளிடம் சகஜமாக சிரித்து பேச ஆரம்பித்து இருந்தான். ஆஃபிஸிலும் சரி, வீட்டிலும் சரி அவளிடம் முன்பு போல் அவளை துரத்த முயற்சிக்காமல் தன்மையாக நடந்து கொண்டான். இதை பார்த்த கமலா அம்மா, சத்தியமூர்த்திக்கும் கூட மகிழ்ச்சியாக இருந்தது. சத்தியமூர்த்தி சொன்னது போல் தீபிகா நல்ல திறமையுடன் வேலை செய்கிறாள் என்று நந்தன் அவளை வீட்டில் அனைவரின் முன்னும் புகழ்ந்தது தீபிகாவிற்கு ஏதோ நிலவின் மேல் ஏறி அமர்ந்தது போல் இருந்தது. நல்ல வேளை அந்த சத்யாவும் தன்னை பற்றி எதுவும் போட்டுக்கொடுக்கவில்லை போல. இத்தனை நாட்களாக நம்முடன் தான் ஆபீஸ் போகிறான், வருகிறான். சில சமயம் 3 மணி போல் வேலை நிமித்தமாக வெளியே செல்வதாக சொல்லிவிட்டு கிளம்புகிறான், ஆனால் அந்த சமயம் சத்யா கம்பெனியில் தானே வேலை செய்கிறாள், அதனால் நிஜமாகவே ஏதோ வேலை நிமித்தமாக தான் வெளியே செல்கிறான் போல. மீதி நேரம் வீட்டில் தான் இருக்கிறான். மொத்தத்தில் நந்தனுக்கும் சத்யாவிற்கும் நடுவில் இப்போது ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது என்று தீபிகா உள்ளுக்குள் பூரித்தாள்.

தீபிகாவின் லண்டன் தோழி ஒருத்தி தீபிகாவிற்கு வீடியோ call செய்திருந்தாள்.

தன் படுக்கை அறையில் இருந்து தீபிகா அவளுடன் பேசினாள். “ஹேய் தீபிகா எப்படி இருக்க டி?”

“நல்லா இருக்கேன்டி, அவர் வீட்டில் தான் இருக்கிறேன், அவர் கம்பெனியில் தான் வேலை செய்கிறேன்” என்று குதூகலமாக சொன்னாள்”

“நினச்சு பாத்தா ஆச்சர்யமா இருக்குடி, லண்டன் ல இருக்க ஏதோ ஒரு pub ல் அவரை சந்தித்தாய், ஏதோ ஒரு ஹோட்டலில் அவருடன் இரவை கழித்தாய், அவருக்காக உன் boyfriend உடன் break up செய்தாய், வேண்டாம் டி அவன் யாரோ எப்படி பட்டவனோ என்றெல்லாம் சொல்லியும் அவரை தேடி காத்திருந்தாய், இன்று அவர் வீட்டிலேயே கிட்ட தட்ட நிச்சயதார்த்தம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டாய், I appreciate your determination டி”

“என் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்படி தான் டி, நானும் என் boyfriend ஐ காதலிப்பதாக தான் நினைத்தேன், அடிக்கடி சண்டை வரும் போது கூட காதலர்கள் என்றால் இப்படி தான் சண்டை வரும் போல என்று நினைத்து அவனை சகித்து கொண்டிருந்தேன், ஆனால் நந்தனை சந்தித்த பிறகு தான் தெரிந்தது, நான் பிறந்ததே நந்தனுக்காக தான் என்று”

“சரி அவர் என்ன சொல்கிறார்?”

“அவர் என்ன சொல்லுவார்? Pub ல் அவர் சொன்னது போல் என்னை வெறும் sex காக தான் அழைத்தாராம், எந்த பெண்ணாக இருந்தாலும் அவர் இப்படி தானாம், commitment, feelings எல்லாம் அவருக்கு ஒத்து வராதாம்”

“அச்சச்சோ இவ்வளவு தூரம் நீ காத்திருந்தது எல்லாம் வேஸ்டா போச்சே டி”

“ஏன் டி வேஸ்ட் என்கிறாய்? அவ்வளவு எளிதாக நான் விட்டுவிடுவேனா? இதில் நான் செய்த அதிர்ஷ்டமே அவர் தம்பியும் என் தங்கையும் காதலித்தது தான், அதனால் தான் அவர் வீட்டில் தங்கும் வரை உரிமை பெற்றவளாய் உள்ளேன், அவர் வாழ்க்கையில் இருக்கும் மற்ற பெண்களை அறியவும் உதவியாக உள்ளது”

“மற்ற பெண்களா? So சார் இன்னும் மன்மத ராசாவாக தான் வலம் வருகிறாருக்கும்?”

“ஆமாம் டி, கொஞ்சம் கூட கவலையே இல்லை, பாவம் இப்போ list ல இருக்க பொண்ணு ஒரு விதவை, பார்த்தாலே பாவமாக தான் இருக்கும், அவளை ஏமாற்ற சுற்றி கொண்டிருக்கிறான், நான் அவளை எச்சரித்துள்ளேன், அதில் என் சுயநலமும் உள்ளது, ஆனால் அவளது நலமும் உள்ளது, நல்லவேளை நான் எச்சரித்தது வேலை செய்கிறது, இப்போதெல்லாம் அவளும் அவனும் அதிகமாக பேசுவதில்லை”

“எப்படிடி தொடர்ந்து அவனுக்கு பெண்கள் இப்படி விழுகிறார்கள்?”

“விழமாட்டார்களா பின்ன? நீயே யோசித்து பார், அவன் இப்படி தான் என்று அவன் வீட்டில் அனைவருக்கும் தெரியும், அவன் நட்பு வட்டாரத்திற்கு தெரியும், இருந்தாலும் அவனை கண்டித்து இருக்கிறார்களா? கிடையாதே, இதுவே இவர்கள் வீட்டு பெண்ணை ஒருவன் இப்படி அனுபவித்து நான் வெறும் sex காக தான் என்று சொன்னேனே, நீ தான் கேட்கவில்லை என்று சொன்னால் இவர்கள் தாங்கிகொள்வார்களா? ஒரு ஆண் 10 பெண்களுடன் படுத்தாலும் இந்த சமூகம் அவனை ஹீரோவாக தான் பார்க்கிறது, இதையே ஒரு பெண் செய்தால் அவளை காரி துப்பி ஒரு மூலையில் உட்கார வைத்து விடுவார்கள், ஆனால் ஆண் என்றால் ஆண்மையின் வீரமாக பார்க்கிறார்கள், என்ன டிசைனோ?”

“இருந்தாலும் தீபிகா, அவன் இப்படி பட்டவன் என்று நீயே சொல்கிறாய், உனக்கு இவன் தேவை தானா? சமூகத்தை குறை சொல்லும் நீயே அவனை தானே கணவனாக அடைய நினைக்கிறாய்?” என்றாள் கவலை கலந்த குரலில் அந்த தோழி.

“You know I want some excitement in life? Boring life லாம் நமக்கு செட் ஆகாது, இவன் பாரு எவ்வளவு challenging ஆக இருக்கிறான்? அது மட்டுமில்லை, இவனை பற்றி நான் சொன்ன குறைகள் தானே உனக்கு தெரியும், நிறைகள் தெரியாதே, இந்த ஒரு விஷயத்தை தவிர அவன் நல்லவன் தான், திறமையானவன், அவன் பிசினசை பன்மடங்காக உயர்த்தியவன், நானே விரும்பாவிட்டாலும் என் பெற்றோரும் அவன் அம்மா அப்பாவும் எங்களுக்கு arrange marriage பண்ண வாய்ப்பு இருக்கிறது, எந்த விஷயமும் தெரியாமல் அவனை என் தந்தை பிடித்திருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக பிடித்திருக்கிறது என்று தான் சொல்லி இருப்பேன், so you see? எல்லாமே எனக்கு சாதாகமாக தான் உள்ளது”

“ஆனால் உன்னை ஒருவேளை அவன் திருமணம் செய்வதாகவே வைத்து கொள்வோம், உனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு பெண்ணுடன் போனால் என்ன செய்வாய்?”

“அப்படி எல்லாம் போக விட்டுவிடுவேனா? ஹேய் he liked me a lot டி, என் boyfriend call செய்ததை அவன் attend செய்துள்ளான், ஏற்கனவே relationship ல் இருக்கும் ஒருத்தியை dating செய்வது தவறு என்று தான் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விட்டான், இல்லன்னா கண்டிப்பா என்கூட தான் இருந்து இருப்பான்”

“என்னமோ டி, கொஞ்சம் யோசிச்சு பண்ணு, life அ spoil பண்ணிக்காத”

“அதெல்லாம் ஒன்னும் spoil ஆகது, நீ don’t worry”

“Ok டி bye”

“bye di” என்று போனை வைத்தாள் தீபிகா.

தீபிகாவிடம் பேச வந்த கமலா அம்மா அவள் தன் தோழியுடன் பேசிகொண்டிருப்பதை உணர்ந்து திரும்ப நினைத்தவர் தீபிகா சொன்ன விஷயத்தை கேட்டு அங்கேயே நின்றார்கள். “நந்தனை சந்தித்த பிறகு தான் தெரிந்தது, நான் பிறந்ததே நந்தனுக்காக தான் என்று..” என்பதை கேட்டு புன்னகையுடன் கேட்டவர்கள் “அவர் என்ன சொல்லுவார்? Sex காக தான் அழைத்தாராம், எந்த பெண்ணாக இருந்தாலும் இப்படி தானாம், commitment, feelings என்று எதுவும் இல்லையாம் என்று அவள் சொன்னதை கேட்டு முகத்தில் கோபமும், வருத்தமும் ஒரு சேர அங்கிருந்து நகர்ந்தார்கள்.

சத்தியமூர்த்தியிடம் சென்று தான் கேட்ட விஷயங்களை சொல்லி வருத்தப்பட்டார்கள் கமலா அம்மா. “நாம் நந்தனை வளர்க்கும் விதத்தில் ஏதோ தவறு செய்துவிட்டோம், இல்லை என்றால் பெண்களை இப்படி துச்சமாக நடத்துவானா? எது எப்படி இருந்தாலும் இனியும் அவனை இப்படியே விட முடியாது, கூடிய சீக்கிரமே அவனுக்கும் தீபிகாவிற்கும் திருமண பேச்சை எடுக்க வேண்டும், அது தான் அவளுக்கு அவன் செய்த அநியாயத்திற்கு பிரயாச்சித்தமாக அமையும், ஏதோ அந்த பெண் நல்லவளாக இருப்பதால் அவன் செய்த அநியாயத்தை பற்றி வெளியே சொல்லாமல் இருக்கிறாள்” என்றார்கள். “ஹ்ம்ம் நீ சொல்வதும் சரி தான், சீக்கிரமே நாம் அவர்கள் திருமணம் பற்றி ஒரு முடிவு எடுப்போம்” என்றார் சத்தியமூர்த்தி.


Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018