Sms ch 25 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 25

கோயம்புத்தூரில் இருந்து அனைவரும் புறப்பட தயாராயினர். தீபிகாவின் தந்தை சொன்னார். “சம்மந்தி நீங்க என் சின்ன பொண்ணு ஸ்ரீதிகாவை பார்த்துக்கொள்வதோடு என் மூத்த மகள் தீபிகாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்ன சொல்கிறார் என்று புரியாமல் அனைவரும் விழிக்கவும் “தீபிகா சென்னையில் women’s ஹாஸ்டலில் தங்கி வேலை தேடப்போகிறாளாம், என்னவோ தெரியவில்லை இங்கிருந்து அவளை லண்டனுக்கு படிக்க அனுப்பினேன், அப்போது கூட நான் இப்படி பயப்படவில்லை, ஆனால் இங்கிருக்கும் சென்னைக்கு அனுப்ப எனக்கு மனமில்லை. திரும்பி லண்டன் போக விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாள். அதுவும் நல்லதுக்கு தான், வரன் பார்க்க வேண்டிய நேரத்தில் அவள் லண்டனில் இருப்பதை விட இங்கே இருப்பது நல்லது, ஆனால் எனக்கு இருக்கும் சொத்து பத்துக்கு வேலை எல்லாம் எதற்கு என்று கேட்டால் படித்த படிப்பு வீணாக கூடாதாம், அதனால் சென்னையில் வேலை தேடப்போகிறேன் என்று சொல்கிறாள். நீங்கள் எல்லாம் இருக்கும் தைரியத்தில் நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அவ்வப்போது எப்படி இருக்கிறாள் என்று நீங்கள் விசாரித்து கொண்டால் போதும்”


சத்தியமூர்த்தியும் கமலா அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சத்தியமூர்த்தி “எதுக்கு சம்மந்தி women’s ஹாஸ்டல் எல்லாம்? எங்கள் வீட்டிலேயே தங்கி வேலை தேடட்டுமே, women’s ஹாஸ்டலில் தங்குவதற்கு சொந்தக்காரர்கள் என்று நாங்கள் எதற்கு இருக்கிறோம்?” என்றார்.


அதுவரை அவர்கள் பேச்சில் கவனம் இல்லாமல் ஏதோ சிந்தனையில் இருந்த நந்தன் இப்போது நிமிர்ந்து பார்த்தான்.


“இல்லை சம்மந்தி அது நல்லா இருக்காது, அவ women’s ஹாஸ்டலிலேயே தங்கி கொள்ளட்டும்” என்று மறுத்தார் தீபிகாவின் தந்தை.


“அட என்ன சம்மந்தி நீங்க? உங்க பொண்ண நாங்க நல்லா பாத்துக்க மாட்டோமா? எங்க மேல நம்பிக்கை இல்லையா?”


“அதெல்லாம் இல்லை சம்மந்தி, எதுக்கு பொண்ணு குடுத்த இடத்துல தங்கிக்கிட்டு? அது நல்லா இருக்காது சம்மந்தி”


“அதெல்லாம் ஒன்றுமில்லை, அவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது தீபிகா women‘s ஹாஸ்டலில் எதற்கு சிரமப்பட வேண்டும்? சாப்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ என்னமோ? நீங்கள் தயங்கும் அளவு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, என்னை நம்பி அனுப்பி வையுங்கள்” என்றார் கமலா அம்மா பிடிவாதமாக.


“அதற்கில்லை சம்மந்தி.....” என்று தீபிகாவின் தந்தை இழுக்க “சரி எங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் விடுங்கள்” என்று கமலா அம்மா சொல்லவும் “நம்பிக்கை இல்லாமல் எல்லாம் இல்லை சம்மந்தி, உங்களுக்கு எதற்கு சிரமம் என்று தானே யோசித்தேன், சரி உங்கள் வீட்டிலேயே தங்கட்டும்” என்றார்.


தீபிகா நந்தனை பார்த்து புன்னகைத்தாள். நந்தன் மொபைலில் ஏதோ பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்தான்.


கோயம்புத்தூரில் இருந்து திரும்பி வந்ததும் தீபிகாவிற்கு முன்பு ஒதுக்கிய அறையையே மீண்டும் கமலா அம்மா ஒதுக்கி கொடுத்துவிட்டு வெளியே வந்தார். பக்கத்து அறையில் இருந்து நந்தன் “அம்மா இங்க கொஞ்சம் வாங்க” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.


கமலா அம்மாவும் உள்ளே வந்து “சொல்லுப்பா, ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்க “இப்போது தானே dinner சாப்பிட்டோம், அதெல்லாம் ஒன்றுமில்லை, தீபிகாவை ஏன் இங்கே தங்க வைக்கிறீர்கள்?”


“ஏன்ப்பா? நம்ம சொந்தகாரங்கன்னு இருக்கும் போது அந்த பெண்ணை ஹாஸ்டலில் தங்க விட முடியுமா?”


“சரி அதற்காக இங்கே தங்க வைக்க வேண்டுமா?”


“வேறு எங்கே தங்க வைக்க சொல்கிறாய்?”


“நம் தோட்டத்தில் தான் outhouse ஒன்று உள்ளதே, kitchen, bedroom, bathroom என்று எல்லா வசதிகளுடன், அங்கே தங்க வைக்கலாமே”


“நல்லா இருக்குப்பா நீ பேசறது, அந்த பொண்ண தனியா சமைச்சு சாப்பிட்டுக்கோன்னு விட்டுட முடியுமா? சரி உனக்கு அந்த பெண் இங்கிருப்பதால் என்ன பிரச்சனை?” என்று கமலா அம்மா விளையாட்டாக கேட்க “எனக்கு என்ன பிரச்சனை?” என்று திருப்பி கேட்டான்.


“எனக்கு எப்படி தெரியும்? நீ தான் சொல்லவேண்டும்”


நந்தன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.


“சரிப்பா அவள் இங்கிருப்பது பிடிக்கவில்லை என்றால் outhouse லேயே தங்க வைக்கிறேன்” என்று கமலா அம்மா சோகமாக சொல்லவும் “It’s ok ma, இங்கேயே இருக்கட்டும், இதற்காக ஏன் சோகமாகி விட்டீர்கள்? கொஞ்சம் சிரிக்கலாமே” என்று தன் அம்மாவை நேருக்கு நேராக நோக்கி நின்றான். அவர்களும் புன்னகைத்து விட்டு “சரி நீ tireda இருப்ப, தூங்கி ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார்கள்.


மறுநாள் நந்தன் மெயின் branch office சென்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு புறப்பட்டான். அமைந்தகரை வழியாக செல்வோமா என்று யோசித்துக்கொண்டே காரை ஓட்டியவன் வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டிற்கு சென்றான். மறுநாள் மெயின் branch சென்றவன் 3 மணிக்கெல்லாம் ஆஃபிஸில் இருந்து புறப்பட்டான். சத்யா வீட்டிற்கு சென்று தருணை பார்க்கலாமா என்று யோசித்தவன் தன் எண்ணத்தை மாற்றி கொண்டான்.


அன்று மாலை வீட்டு பாடங்களை செய்யும் தருணை பார்த்தாள் சத்யா. “தருண் பாவம், இப்போதெல்லாம் அங்கிள் எங்கே என்று கூட கேட்பதில்லை, அங்கிளுக்கு நெறைய வேலைகள் இருக்கும் என்று நான் சொல்லியதை கேட்டு அவரை பற்றி பேசுவது கூட இல்லை, ஆனால் அங்கிளை மிஸ் செய்வான் மனதிற்குள்” என்று தருணுக்காக பரிதாபப்பட்டாள்.


நந்தன் ராகவனை coffee shop ல் மீட் செய்தான். கிரிஷ் திருமணம், கோயம்புத்தூர் விஜயம் பற்றி எல்லாம் கொஞ்ச நேரம் பேசினார்கள்.


“இன்னைக்கு மதுவுக்கு நீ மெசேஜ் அனுப்பவில்லையா? அவளையும் அழைத்து இருக்கலாமே” என்று கேட்டான் நந்தன்.


“அய்யா சாமி ஆள விடு, அவளையும் அழைத்தால் உனக்கு வேண்டுமானால் அவளுடன் போய் ஊர் சுற்று என்று கோபப்படுவாய், அழைக்கவில்லை என்றால் அவளையும் அழைத்திருக்கலாமே என்று சொல்வாய், வேற வேலை இல்லடா உனக்கு” என்று ராகவன் விளையாட்டாக கோபித்துக்கொண்டான். 


“கோச்சிக்காதடா, last time meet பண்ணினப்போ சத்யா பற்றி பேச வேண்டி இருந்தது, அதனால் தான் நான் அவளை அழைக்க விரும்பவில்லை, அவள் தான் சத்யாவை வேலைக்கு சேர்த்தாள், நாம் பேசும் விஷயங்களை சத்யாவிடமே போய் போட்டு கொடுத்து விட்டால் என்ன ஆவது, ஏற்கனவே என்னை கண்டால் சத்யாவிற்கு ஆகாது”


“அது என்னவோ உண்மை தான், பெண்களை வைத்துக்கொண்டு முக்கியமான விஷயங்கள் பேசவே கூடாது, சரி அது யாரு? தீபிகாவா? She seems to be keen on you” என்று கண் சிமிட்டினான் ராகவன்.


“ஆரம்பிச்சிட்டியா? சரி அது என்ன என் வாழ்க்கையில் இருக்கும் பெண்களை பற்றி மட்டுமே அளவுக்கு அதிகமாக விசாரிக்கிறாய், உன்னை பற்றி பேசலாமே” என்றான் நந்தன்.


“நான் என்ன உன்னை மாதிரி பிளேபாயா? திரும்பிய பக்கம் எல்லாம் பெண்கள் சூழ்ந்திருக்க, நாம் அவர்களை பற்றி மணிக்கணக்காக பேச, விசாரிக்க” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் ராகவன்.


“என்னை கால வாரலைன்னா உனக்கு தூக்கமே வராதாடா? But உன்கிட்டயும் மதுகிட்டயும் எனக்கு பிடிச்ச விஷயமே இது தான், என்னோட குறைகள் தெரிந்தும் you both love me” என்று ராகவன் தோள்களில் கையை போட்டு அவனை அணைத்தான் நந்தன்.


“Love எல்லாம் இல்லை” என்றான் ராகவன் கிண்டலாக.


“I know you love me” என்று ராகவன் தோளில் கைப்போட்டுக்கொண்டே நடந்தான் நந்தன்.


“bromance bromance என்று மது சொல்வதில் தவறில்லை போல” என்று ராகவன் சிரித்தான்.


“அவளுக்கு நம் அன்பை பார்த்து பொறாமை” என்றான் நந்தன்.


இருவரும் விடைபெற்ற பின் மீண்டும் அமைந்தகரையில் சத்யா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நந்தனுக்கு தோன்றியது. ஆனால் அந்த ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.


மாலை பொழுதில் எல்லோரும் சத்தியமூர்த்தி வீட்டில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். “நீ என்ன மாதிரி வேலை தேடப்போகிறாய் தீபிகா?” என்று சத்தியமூர்த்தி கேட்க “நானும் textiles, fabric டிசைனிங் சம்மந்தமாக தான் படித்திருக்கிறேன் மாமா, அதனால் அது சம்மந்தப்பட்ட வேலை தான் தேட வேண்டும்” என்றாள்.


“அப்படின்னா நம்ம factory லேயே ஏதாவது வேலை செய்யலாமே, என்ன நந்து நான் சொல்வது?” என்று நந்தனை பார்த்து கேட்டார்.


“அது..... தீபிகா talent க்கு ஏற்ற மாதிரி வேலைகள் எதுவும் இல்லை அப்பா”


“என்னப்பா நீ? Research and Development துறை ஒன்றை ஏற்படுத்த போகிறேன் என்று சொல்லிகொண்டிருந்தாயே, அதில் தீபிகாவின் அறிவும் திறமையும் நமக்கு பயன்படலாம் அல்லவா?”


நந்தன் ஒரு சிறு அமைதிக்கு பின் “அது இன்னும் theory ஆக தானே இருக்கிறது, செயல் வடிவம் பெற்று அதை அமைப்பதற்கு சில காலங்கள் ஆகுமே, அது வரை தீபிகாவால் காத்திருக்க முடியாதல்லவா?”


“ஏன் காத்திருக்க வேண்டும்? எனக்கு உங்கள் R&D ப்ராஜெக்ட் பிளேனை காண்பியுங்கள், அதை கூடிய சீக்கிரத்தில் செயல் வடிவாக்கி அமைத்து காண்பிக்கிறேன்” என்று தீபிகா ஒரு challenge போல் ஆர்வமாக சொல்லவும் உடனே சத்தியமூர்த்தி “பார் எவ்வளவு முனைப்பாக இருக்கிறாள், இவளை பயன்படுத்தாமல் விட்டால் நமக்கு தான் நஷ்டம், என்ன சொல்கிறாய்?” என்று சத்தியமூர்த்தி இதற்கு மேலும் மறுக்க போகிறாயா என்பது போல் பார்க்க நந்தன் “ok let’s see” என்றான்.


தீபிகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. நந்தன் அதற்கு மேல் அங்கே உட்காராமல் தன் அறைக்கு சென்றான்.


மறுநாள் காலை நந்தன் வேலைக்கு புறப்பட்டு “வரேன் மா” என்று சொல்லிவிட்டு பறக்க இருந்தவனை “நில்லுப்பா இவளையும் அழைத்து கொண்டு போ” என்று குர்தியும் ஜீன்ஸ்ம் அணிந்து கைகளில் கொஞ்சம் files வைத்துக்கொண்டு ஆர்வமாக நின்று கொண்டிருந்த தீபிகாவை கையை காண்பித்தார் கமலா அம்மா.


நந்தன் அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு “சரி வா” என்று தன் காரில் அழைத்துக்கொண்டு சென்றான். இன்று அம்பத்தூர் கிளைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவன் காரை மெயின் branch க்கு விட்டான். மதுவிடம் தீபிகாவை ஒப்படைத்து விட்டு paperwork எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள் மது, ஏதாவது சந்தேகம் என்றால் மதுவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் தீபிகா” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.


“நீங்க எங்க போறீங்க?” என்று தீபிகா கேட்டு முடிப்பதற்குள் நந்தன் வெளியேறி இருந்தான்.


“சார் இன்னைக்கு அம்பத்தூர் branch செல்ல வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார்” என்று மது பதில் சொன்னாள்.


நந்தன் காரை அம்பத்தூர் கிளையில் நிறுத்திவிட்டு வேகமாக நடந்தான். ஆபீஸ் செல்ல என்று ஒரு குறுக்கு வழி இருந்தும் spinning mill வழியாக நடந்தான். நந்தனை பார்த்ததும் அனைவரும் “Good morning sir” என்று சொல்லிகொண்டிருந்தார்கள். அப்போது தான் சத்யா அவன் வருவதை கவனித்தாள். அவளும் “good morning” சொல்ல ரெடியாக இருந்தாள். நந்தன் வரும் வழியில் எல்லோருக்கும் பதிலுக்கு good morning சொன்னதோடு நிறுத்தாமல் அவர்களுக்கு வேலை எப்படி நடக்கிறது, எல்லாம் நலம் தானா என்று ஒரு சில நிமிடம் நின்று பேசிக்கொண்டு வந்தான். வள்ளியிடம் கூட சிரித்து பேசிவிட்டு நடந்தான். சத்யாவும் அவனுக்காகவே காத்திருப்பது போல் இல்லாமல் கொஞ்சம் வேலை செய்வதும், மறுபடியும் அவன் வருகிறானா என்று பார்ப்பதுமாக இருந்தாள். ஆனால் அவன் அவ்வளவு சீக்கிரத்தில் வருவது போல் தோன்றவில்லை. இவனுக்காக காத்திருந்ததும் போதும் good morning சொன்னதும் போதும், நம் வேலையை பார்ப்போம் என்று வேலையில் கவனம் செலுத்தினாள். சத்யாவின் அருகே நந்தன் வந்ததும் “Good morning sir” என்று சத்யா சொன்னாள். ஆனால் அவன் அதை கவனிக்கவில்லை. கவனிக்காதது போல் திரும்பி கொண்டான் என்றே சத்யாவிற்கு தோன்றியது. வேறு ஒருவரிடம் மெஷின்களின் செயல் தன்மையை குறித்து மும்முரமாக நந்தன் பேசுவதும் ஏதோ ரிப்போர்ட்டை பார்ப்பதுமாக இருந்தான். ஏன் என்னை பார்க்காமல் தவிர்க்கிறான் என்று சத்யா தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டாள். ஒருவேளை திருமணம் ஆனதும் பேக்டரியில் வேலை செய்யும் பெண்களை கூட ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்று தன் மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டானா? இல்லை red light ஏரியாவில் இருந்தவள் தானே, இவளுக்கு பதில் good morning ஒன்று தான் குறைச்சல் என்று நினைக்கிறானோ என்னவோ? என்று தன்னை குறைவாக நினைத்து முகம் வாடினாள். ஆனால் நந்தன் ரிப்போர்ட்டை பார்த்தாலும் மெஷின்கள் பற்றி கேட்டாலும் அவன் பார்வை சத்யா பார்க்காத நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. அவள் தான் வரும் வரை ஆர்வமாக காத்திருந்ததும், பதிலுக்கு good morning சொல்லவில்லை என்றதும் அவளது தீவிர யோசனையும், முகம் வாடுவதும் எல்லாவற்றையும் கவனித்தான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018