Sms ch 49 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 49
நந்தனுக்கு விழிப்பு வந்தது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்து லைட்டை on செய்தான். அவனது இடது கை பக்கம் திரும்பி பார்த்தான். தீபிகா அவன் அருகில் அவன் போர்வைக்குள் படுத்துக்கொண்டு அவனை பார்த்து புன்னகைத்தாள்.
“நினைத்தேன், நீயாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், இப்படி எல்லாம் செய்தால் நான் உன்னை ஏற்றுக்கொள்வேன் என்று நினைத்தாயா தீபிகா?” என்றான் நந்தன்.
தீபிகா ஆடைகள் எதுவும் போட்டிருக்கவில்லையா? இல்லை உள்ளாடைகள் மட்டும் போட்டிருக்கிறாளா? என்று தெரியவில்லை. தன் கைகளை போர்வையில் இருந்து வெளியே எடுத்து தலைமேல் வைத்து ஒய்யாரமாக படுத்தாள். “நீங்கள் நானாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து இருப்பீர்கள், ஆனால் நீங்கள் நினைக்காத ஒன்று நடக்க போகிறது நந்தன், உங்கள் மறுபக்கத்தை நீங்கள் காட்டுவதற்குள் என் மறுபக்கத்தை நீங்கள் பார்க்க போகிறீர்கள்” என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
நந்தன் அவளை தீவிரமாக பார்த்தான். அப்போது நந்தனின் படுக்கை அறை கதவு திறக்கப்பட்டது. கையில் candle light ஏற்றப்பட்ட கேக் உடன் ஒருவர், பலூன்களுடன் ஒருவர், கேமராவுடன் ஒருவர் என்று எல்லோரும் surprise என்று கத்திக்கொண்டு உள்ளே வர நந்தனையும் தீபிகாவையும் ஒரே படுக்கையில், அதிலும் தீபிகாவை அந்த கோலத்தில் பார்த்து திகைத்து நின்றனர். Surprise நந்தனுக்கா இல்லை அவன் குடும்பத்தாருக்கா என்று தெரியவில்லை.
எல்லோரையும் பார்த்து பதறுவது போல் தீபிகா பதறி போர்வையை நன்றாக இழுத்து மூடி தன் மானம் காக்க முயன்றாள். தீபிகாவின் பெற்றோரும் அங்கே இருந்தனர். அவர்களை அங்கே எதிர்பாராத தீபிகாவின் முகத்தில் அதிர்ச்சி. கமலா அம்மா, சத்தியமூர்த்தி, தாத்தா உட்பட அனைவரும் வாயில் வார்த்தை வராமல் திகைத்து நின்றனர். ஒவ்வொருவராக அந்த அறையை விட்டு அமைதியாக வெளியேறினர். தீபிகாவின் அம்மா வெளியே செல்வதற்கு முன்னால் தீபிகா அருகில் வந்து அவள் முதுகில் இரு கைகளாலும் அடிக்க ஆரம்பித்தார்கள். “சனியனே எங்கள் மானத்தை இப்படி வாங்கிட்டியே, இதுக்காகவா உன்னை இங்க அனுப்பி வச்சோம்” என்று அவளை அடித்துவிட்டு நந்தனை பார்த்து முறைத்தார்கள். நந்தன் அமைதியாக இருந்தான். “ஏன் தம்பி, உங்களுக்கு எங்க பொண்ண கொடுக்கணும்னு தான நினைச்சுகிட்டு இருக்கோம், கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம் இல்லை? உங்கள் அம்மாவை நம்பி என் மகளை அனுப்பி வைத்தால் இப்படி தான் அவளை சீரழிப்பதா?”
நந்தன் கமலா அம்மாவை கலக்கமாக பார்த்தான். கமலா அம்மா கண்ணீருடன் தலையை குனிந்தார்கள். “dress பண்ணிட்டு வெளில வாடி” என்று தீபிகாவின் அம்மாவும் வெளியேற கமலா அம்மாவும் நந்தனை கலக்கமாக பார்த்துவிட்டு வெளியேறினார்கள்.
நந்தன் கடைசியாக வெளியேற எத்தனிக்கும் போது தீபிகா அவனை பார்த்து புன்னகைத்தாள். “இது எப்படி இருக்கு நந்தன்?” என்று கேட்டாள்.
“கீழத்தரமா இருக்கு தீபிகா, இதற்காக நீ வருத்தப்படுவாய்” என்றான்.
“நந்தன் நீங்கள் வார்த்தைகளிலேயே மிரட்டுபவர், இதற்கெல்லாம் சத்யா, ஜெனி, மது போன்றவர்கள் பயப்படலாம், நான் பயப்பட மாட்டேன், மறுபக்கம் மறுபக்கம் என்று சொன்னீர்களே, என்னுடைய மறுபக்கத்தின் முதல் அத்தியாயத்தை பார்த்தீர்களா? இது ஆரம்பம் தான், main picture இனிமேல் தான், எனக்கா கால நேரம் குறித்து வெளியே அனுப்ப பார்த்தீர்கள்? எப்படி உங்கள் மனைவியாகி இங்கேயே இருந்து உங்களை என்னவெல்லாம் பண்ண போகிறேன் என்று பாருங்கள்” என்றாள்.
“முதல்ல dress பண்ணு, அப்புறம் மத்ததெல்லாம் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு நந்தன் வெளியேறினான்.
எல்லோரும் மாடியில் இருந்த lounge ல் இருந்த சோஃபாக்களில் கலக்கமாக அமர்ந்து இருந்தனர். நந்தனை பார்த்து ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி முகத்தை மாற்றினார்கள். தீபிகாவின் தந்தை நந்தன் அருகே கோபமாக சென்று “என்னப்பா இதெல்லாம்? வயது பெண்ணை உன் அம்மாவை நம்பி அனுப்பியதற்கு நல்ல பதிலடி கொடுத்து விட்டீர்கள்” என்றார்.
“அங்கிள் ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேட்டுட்டு பேசுங்க”
“இதுக்கு மேல பேச என்னப்பா இருக்கு? நீ ம்ம்ம் என்று சொல்லி இருந்தால் நாள் கிழமை பார்த்து நாங்களே திருமணம் செய்து வைத்திருப்போமே, உன் அம்மா என்ன சொன்னார்கள்? தீபிகாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம், எங்கள் நந்துவிற்கே கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்களா? இல்லையா?” என்று நந்தனை பார்த்து கேட்டுவிட்டு கமலா அம்மாவிடம் சென்றார். “நீங்க சொல்லுங்க அம்மா, தீபிகாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை தடுத்து நந்தனுக்கே தீபிகாவை கொடுத்துவிடுங்கள் என்று நீங்கள் கேட்டது, உண்மையா? இல்லையா?” என்றார்.
கமலா அம்மா “கேட்டது உண்மை தான்” என்றார்கள் தலையை குனிந்து. நந்தனுக்கு தன் அம்மா தலை குனிந்து பதில் சொல்வது கஷ்டமாக இருந்தது.
“ம்ம்ம் பாரு, அப்புறம் என்ன அவசரம் உங்களுக்கு?” என்று கொதித்தார்.
இதற்கிடையில் தீபிகா dress செய்து கொண்டு வெளியே வர தீபிகாவின் அப்பா நேராக அவளிடம் சென்று கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார்.
“நில்லுங்க சம்மந்தி, என்ன இப்படி அடிக்கிறீர்கள்?” என்று சத்தியமூர்த்தி அவரை தடுத்தார்.
“இல்லை சம்மந்தி, விடுங்க, இவ மேல எனக்கு வர கோபத்திற்கு” என்று மறுபடியும் ஒரு அறை விட்டார். தீபிகாவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
“உனக்கென்னடி அவ்வளவு அவசரம்? தங்கச்சிய கட்டி குடுத்த வீடாச்சே, அடக்க ஒடுக்கமா இருப்போம்னு இல்லாம இப்படி எங்கள் மானத்தை வாங்கி விட்டாயே” என்று மீண்டும் அவளை அவர் அடிக்க செல்ல சத்தியமூர்த்தி அவரை தடுத்து தீபிகாவிடம் இருந்து விலக்கி அழைத்து சென்றார்.
“தப்பு எங்கமேல தான் சம்மந்தி, தீபிகா சின்ன பொண்ணு, அவளை ஏன் போட்டு இப்படி அடிக்கிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு சத்தியமூர்த்தி நந்தன் அருகில் வந்து சொன்னார். “என்னப்பா இது? நம்ம வீட்டுக்கு நம்பி அனுப்பி வச்சா இப்படி பண்ணலாமா?” என்று கேட்க “அப்பா நீங்க நினைக்கிற மாதிரி எந்த தவறும் நடக்கவில்லை....” என்று நந்தன் சொல்லி முடிப்பதற்குள் தீபிகா குறுக்கிட்டாள்.
“அவரை ஒன்னும் சொல்லாதீங்க அங்கிள், தப்பு என்மேல் தான், லண்டனில் ஏற்கனவே.....” என்று தலையை குனிந்து வெட்கப்பட்டு விட்டு “எப்படியும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று....அவர் ஆசை பட்டிருந்தாலும் நான் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம், ஆனால்...... என்னை மன்னித்து விடுங்கள்” என்று தயங்கி தயங்கி பேசினாள்.
மீண்டும் தீபிகாவின் முதுகில் அவள் அம்மா அடித்து துவைத்தார்கள். “ஏன்டி, எங்கள் மகள் லண்டனில் போய் படிக்கிறாள் என்று நாங்கள் ஊரெல்லாம் பெருமை பட்டுகொண்டிருந்தால் நீ இவனுடன் சேர்ந்து இதை தான் படித்தாயா?” என்று மேலும் அடித்தார்கள்.
“அம்மா நான் பண்ணினது தப்பு தான், மனதார விரும்பி திருமணம் செய்ய போகிறோம் என்ற எண்ணத்தில் எல்லை மீறிவிட்டோம், எங்களை மன்னித்து விடுங்கள்” என்று கண்ணீருடன் வேண்டினாள் தீபிகா.
“சம்மந்தி அம்மா, நீங்களே சொல்லுங்கள் என்ன செய்யலாம் என்று” என்று தீபிகாவின் அம்மா கமலா அம்மாவிடம் வேண்டினார்கள்.
கமலா அம்மா சத்தியமூர்த்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு காலண்டரை எடுத்து வந்து நாள் பார்த்துவிட்டு “நாளை மறுநாள் நல்ல முஹூர்த்தம், நந்தனுக்கும் தீபிகாவிற்கும் நிச்சயம் செய்து விடலாம், அடுத்த வாரத்திற்குள் நல்ல நாள் ஒன்று பார்த்து திருமணம் செய்து வைத்து விடலாம், உங்களுக்கு சம்மதம் தானே?” என்று சம்மந்தி வீட்டாரை பார்த்து கேட்க “ஏன் நாளை மறுநாளே திருமணம் செய்து விடலாமே” என்று சம்மந்தி அம்மா கேட்க “இல்லை சம்மந்தி நந்தனின் திருமணம் நாங்கள் எல்லாம் ஆசையாக எதிர்பார்த்த ஒன்று, அதை கொஞ்சம் சிறப்பாக செய்ய கொஞ்சமாவது நேரம் வேண்டாமா, அதற்கு தான் இந்த ஒரு வாரம்” என்று சொல்ல அவர்களும் சம்மதம் என்று தலை அசைத்தனர்.
நந்தன் “அம்மா ப்ளீஸ், அவசரப்படாதீர்கள், தீபிகாவிற்கும் எனக்கும் நடுவில் இன்று எந்த தவறும் நடக்கவில்லை, நான் அவளை ஒருநாளும் காதலித்ததும் இல்லை, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டதுமில்லை” என்றான்.
“என்ன தம்பி பேசுறீங்க? அப்படின்னா என் பொண்ணு எப்படி உங்க அறையில உங்ககூட அப்படி இருந்தா?” என்று கோபமும் அதிர்ச்சியும் அவமானமுமாக தீபிகாவின் அம்மா கேட்க “அது....” என்று நந்தன் ஏதோ சொல்ல வர தீபிகா இடை மறித்தாள்.
“நந்தன் நீங்களும் சராசரி ஆண் என்று நிரூபித்து வீட்டீர்கள், லண்டனில் என்னை காதலிப்பதாக ஆசை காட்டி என்னை அனுபவித்துவிட்டு இங்கேயும் என்னை கல்யாணம் செய்வதாக சொல்லி எல்லா தவறுகளையும் செய்துவிட்டு இப்போது என்னை காதலிக்கவில்லை, எந்த தவறும் நடக்கவில்லை என்று சாதிக்கிறீர்கள், லண்டனில் நீங்கள் என்னுடன் எல்லாவற்றையும் அனுபவிக்கவில்லை என்று உங்கள் அம்மா மீது சத்தியம் செய்ய முடியுமா?”
நந்தன் தீபிகாவை முறைத்துவிட்டு சொன்னான். “லண்டனில் நான் தீபிகாவுடன் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு இரவு செலவழித்தது உண்மை தான், ஆனால் காதல், திருமணம் என்று எந்த நம்பிக்கையும் நான் அவளுக்கு தரவில்லை, வெறும்.....” என்று நந்தன் முடிப்பதற்குள் “போதும் நிறுத்து நந்தா” என்று கமலா அம்மா இடை மறித்தார்கள்.
“பெண்களை இப்படி துச்சமாக நடத்த நான் உன் வளர்ப்பில் அப்படி என்ன தவறு செய்தேன்?” என்று கண் கலங்கினார்கள்.
நந்தனுக்கும் கண்கள் கலங்கின. “அம்மா ப்ளீஸ், நீங்க feel பண்ணாதீங்க, உங்க மேல எந்த தப்பும் இல்லை, நீங்க என்னை நன்றாக தான் வளர்த்தீர்கள், ஆனால் எல்லோருக்குமே ஏதோ ஒரு குறை, பலவீனம் இருக்கும் இல்லையா? என்னிடமும் சில குறைகள் உள்ளன, அதனால் நானும் சில தவறுகள் செய்துள்ளேன், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் ஒருநாளும் ஒருவருக்கு நம்பிக்கை கொடுத்து நான் ஏமாற்றியதில்லை, தீபிகாவிற்கு எந்த விதத்திலும் நான் எந்த நம்பிக்கையும் கொடுத்ததில்லை....”
“ஆனால் அவள் பெண்மையை மட்டும் அனுபவித்தாய்...” என்று கமலா அம்மா கோபமும் அருவருப்புமாக நந்தனை பார்த்து கேட்டுவிட்டு “போதும் நந்து, நாளை மறுநாள் உனக்கு நிச்சயதார்த்தம், அடுத்த வாரம் கல்யாணம், இனிமேலும் இதை பற்றி பேசி அலசி ஆராய எனக்கு அசிங்கமாக உள்ளது”.
“அம்மா நான் சத்யா என்ற ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அவளை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று சொல்ல கமலா அம்மா, தீபிகா, தீபிகா பெற்றோர் என எல்லோரும் அதிர்ச்சியாய் அவனை பார்க்க கமலா அம்மா “என்னப்பா சொல்ற?” என்று நந்தன் அருகில் வர தீபிகா அவர்கள் இடையில் வந்து “நீங்கள் என்னை உங்கள் படுக்கை அறைக்கு அழைத்து அனுபவிக்கும் வரை சத்யா மீது காதல் இல்லையா நந்தன்? ஆண்ட்டி, அந்த பெண் ஒரு அப்பாவி, கணவனை இழந்து 6 வயது மகனுடன் தனியாக வாழ்கிறாள், நம் கம்பெனியில் தான் வேலை செய்கிறாள், யார் மீதும் வராத காதல் அந்த பெண் மீது உங்கள் மகனுக்கு இன்று திடீரென்று ஏன் வந்தது என்று நினைக்கிறீர்கள்? அவளை திருமணம் செய்தால் இவர் எப்போதும் போல இன்னும் நெறைய பெண்களுடன் வலம் வரலாம், வாழ்க்கை தந்தவன் என்று அவள் கேள்வி கேட்க மாட்டாள், அவளை ஏமாற்றி ஆட்டி படைக்கலாம், அவளுக்கு அதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவு புத்தி சாதுர்யம் இல்லை, பாவம் ரொம்ப குழம்பிய மனம் உடையவள், ஆனால் நான் அப்படி இல்லை, என்னை தவிர வேறு ஒரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க விடமாட்டேன், அதனால் தான் என்னை பிடித்து இருந்தும் திருமணம் செய்ய பயம்” என்றாள்.
கமலா அம்மா தீபிகா சொன்னதை யோசித்து பார்த்துவிட்டு “சத்யாவை விரும்புகிறேன் என்று திடீர்னு சொல்றியே நந்து, ஏன் முன்னாடியே சொல்லல?” என்றார்கள்.
“நீங்களும் திடீரென்று தானே மா எனக்கு நிச்சயதார்த்தம் என்கிறீர்கள்?”
“எங்கள் மகளை பாழாக்கி விட்டு சத்யா என்ற பெண்ணை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்களே, நீங்கள் நல்லா இருப்பீர்களா? என் வயிறு எரிந்து....” என்று தீபிகா அம்மா ஏதோ சொல்ல வாயெடுக்க கமலா அம்மா அவர்கள் கையை பிடித்து “வேண்டாம் சம்மந்தி அம்மா, எங்கள் குடும்பத்தில் யார் சாபமோ? நெறைய பேரை துர்கதியில் இழந்து விட்டோம், நீங்களும் ஏதாவது சொல்லி விடாதீர்கள், உங்கள் இரண்டாவது மகளும் இந்த வீட்டில் தான் வாழ்கிறாள், அதை மறந்து சாபம் எதுவும் விடாதீர்கள்” என்று சொல்லிவிட்டு “நந்து உனக்கும் தீபிகாவிற்கும் நாளை மறுநாள் நிச்சயதார்த்தம், வேறு எதுவும் பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்கள்.
அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல தீபிகாவும், தீபிகாவின் பெற்றோரும், தீபிகாவின் தங்கை ஸ்ரீத்தீகாவும், நந்தனும் மட்டும் அங்கே இருந்தார்கள்.
“ஆண்ட்டி நீங்களாவது புரிஞ்சுக்கோங்க, நான் சத்யாவை தான் மனதார காதலிக்கிறேன், அவளை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்...”
“அப்படின்னா என் மகள் அந்த நிலையில் உங்கள் படுக்கையில், வேண்டாம் தம்பி, இதை பற்றி பேசினால் வீண் மன சங்கடம் ஏற்படும், நாளை நீங்கள் என் மருமகன் ஆக போகிறீர்கள், உங்களை அவமானப்படுத்தும் படி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை”
“ஆண்ட்டி ஒரு 5 நிமிடம் கொடுங்கள், நான் உங்களுக்கு புரிய வைக்கிறேன்”
“ஒன்றும் புரிய வைக்க வேண்டாம் தம்பி, என் மகளை நீங்கள் திருமணம் செய்து கொண்டால் போதும்” என்று தீபிகாவை அழைத்து கொண்டு அவர்கள் அனைவரும் தீபிகாவின் அறைக்கு சென்றனர்.
மீண்டும் அறைக்கு திரும்பிய நந்தன் ஏதேதோ யோசித்து கொண்டு லேட்டாக உறங்கினான். மறுநாள் காலை மொபைல் எடுத்து பார்த்தபோது மதுவிடம் இருந்து நெறைய அழைப்புகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல அழைத்து இருப்பாளோ என்று எண்ணியவாறே call செய்தான்.
மது சொன்னாள் “நந்து ராகவனுக்கு accident ஆம், காலைல உன் birthday எப்படி celebrate பண்ணலாம் என்று கேட்க call செய்தேன், அப்போது தான் சொன்னான், சின்ன accident தான், நந்து birthday வும் அதுவுமாக அவனிடம் சொல்லி அவனை அலைக் கழிக்காதே என்று சொன்னான், ஆனால் எனக்கு பயமாக உள்ளது நந்து”.
“எந்த ஹாஸ்பிடல்?”
“Mehta வில் சேர்ந்திருக்கிறான்”
“சரி நான் போய் அவனை பார்க்கிறேன், நீ கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டான்.
“நந்து எங்க போற? நாளை நிச்சயம் முடியும் வரை எங்கும் போக வேண்டாம்” என்று கமலா அம்மா தடுக்க “அம்மா ப்ளீஸ், நீங்கள் அவசரப்படுகிறீர்கள், நாளை நிச்சயதார்த்தம் நடக்க போவதில்லை, சொன்னால் புரிந்து கொள்ளுங்கள், பிறகு என்னிடம் வருத்தப்படாதீர்கள், anyhow இதை பற்றி பேச எனக்கு இப்போது நேரமில்லை, ராகவனுக்கு accident ஆம், நான் அவனை பார்க்க போகிறேன்” என்று விரைவாக நடக்க “நானும் வருகிறேன்” என்ற தீபிகாவை நந்தன் முறைத்துவிட்டு தனியாக கிளம்பினான்.
ராகவன் சுயநினைவோடு தான் இருந்தான். தன் பெற்றோரை கொஞ்ச நேரம் வெளியே இருக்க சொல்லிவிட்டு ராகவன் பேசினான். “மதுகிட்ட சொல்லாதன்னு சொல்லிருந்தேன்” என்றான்.
“அதற்காக உன்னை நாலு அடி தான் அடிக்க வேண்டும், இப்படி பட்ட சூழ்நிலையில் என் பிறந்தநாள் தான் முக்கியமா? என்ன நடந்தது? எப்படி நடந்தது? பெரிதாக ஒன்றும் ஆபத்து இல்லையே?”
“ஒரு ஆபத்தும் இல்லடா, நீ டென்ஷன் ஆகாத, உன்கிட்ட பேசிட்டு திரும்பி ஸ்டேஷன் போய்ட்டு வீட்டிற்கு போய்க்கோண்டிருந்தேன், பின்னாடியே ஒரு டிரக் பின்தொடர்ந்தது, ஒருவேளை என்னை target செய்கிறார்களோ என்று நான் நினைப்பதற்குள் வேகம் எடுத்தனர், அதனால் அவர்களிடம் இருந்து தப்பிக்க நானாகவே ஒரு மணல் பகுதியில் வண்டியை மேலே ஏற்றி accident போல் செய்து கொண்டேன், பக்கத்தில் construction workers வேகமாக ஓடி வர டிரக் நேராக சென்று விட்டது, அதனால் பெரிதாக உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பித்து விட்டேன், கையில் fracture, தலையில் லேசாக அடி, ஆனால் பெரிதாக ஆபத்து ஒன்றுமில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார்கள், சரி ஆகிவிடும்”
“ஹ்ம்ம்....இந்த அளவிற்கு இறங்கி விட்டார்களே” என்று நந்தன் கவலை அடைந்தான்.
“விடுடா.... பாத்துக்கலாம், நேற்று உன்னிடம் பேசிய பிறகு தெம்பாக இருக்கிறேன், இதை பற்றி கவலைப்படாதே, இதற்கெல்லாம் பயந்தால் போலீஸ் ஆக முடியாது”
நந்தன் சிறிது நேரம் கழித்து வயதான ராகவன் அம்மா அப்பாவிற்கு coffee வாங்கி கொடுத்து ராகவனை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி அவர்களை வீட்டிற்கு அனுப்பினான்.
சத்யா மதுவிடம் சொன்னாள். “என்னால் தான் உங்கள் எல்லோருக்கும் கஷ்டம், இப்போது புரிகிறதா மது, நான் ஏன் நந்தனை வேண்டாம் என்று சொல்கிறேன் என்று, என்னுடன் பழகுவது தெரிந்தால் நந்தனை கொன்றே விடுவான் அந்த ஷ்யாம்” என்று கண்கள் கலங்க கூறியவள் மதுவின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து “ராகவனை நீங்கள் பார்க்க வேண்டாமா? வாருங்கள் புறப்படுவோம்” என்று மது இந்த நிலையில் வெளியே போக வேண்டாம் என்று மறுத்தும் அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் வந்தாள்.
காலை 11 மணி போல மதுவும் சத்யாவும் ராகவனை பார்க்க வந்தார்கள். ராகவன் மதுவை கடிந்து கொண்டான். “இருக்கின்ற ஆபத்து புரியாமல் எதற்காக சத்யாவை அழைத்து கொண்டு வெளியே வருகிறாய்?” என்று.
சத்யா இடைமறித்தாள். “இல்லை ராகவன் அண்ணா, நான் தான் அவர்களை கட்டாய படுத்தி அழைத்து வந்தேன், அவர்கள் எனக்காக அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்கள், எனக்கு மனம் கேட்கவில்லை, என்னால் தான் உங்கள் எல்லோருக்கும் கஷ்டம், என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.
“ப்ச்ச் சத்யா, அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று ராகவன் சமாதானம் கூற முயன்றான்.
“இல்லை அண்ணா, நீங்கள் இந்த கேசை விசாரிப்பதால் தான் இந்த விபரீதம், நீங்கள் சொல்லாவிட்டாலும் எனக்கு தெரியும், சரி அதை விடுங்கள், இப்போது எப்படி உள்ளது?”
“பரவால்ல மா, சின்ன காயங்கள் தான், இன்னைக்கே கூட discharge செய்து வீட்டிலேயே bedrest எடுக்க சொன்னாலும் சொல்வார்கள்”
நந்தன் ராகவனையும் மதுவையும் பார்த்துவிட்டு “சத்யா, வா போய் coffee வாங்கி கொண்டு வரலாம்” என்று அழைக்க “நான் வரவில்லை, நீங்கள் போய்ட்டு வாருங்கள்” என்றாள்.
அவள் தலையில் கொட்டி அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான். “உங்களுக்கு அறிவே இல்லையா? என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னால் விடாமல் ஏன் இப்படி படுத்துகிறீர்கள்?” என்றாள்.
“உன்னை அப்படி எல்லாம் விடமுடியாது” என்று சொல்லி நடக்க அவள் மீண்டும் ராகவன் அறைக்குள் நுழைய திரும்பினாள்.
நந்தன் அவளை மீண்டும் கையை பிடித்து தடுத்து நிறுத்தி “என் அறிவு கொழுந்தே, ராகவனும் மதுவும் தனியாக கொஞ்ச நேரம் பேசட்டும்” என்று சொல்ல “ஒஹ்ஹஹ் அதற்காக தான் என்னை வெளியே அழைத்து வந்தீர்களா? ச்ச எனக்கு இது தோன்றவே இல்லை, ஆமாம் பேசட்டும் பேசட்டும், பாவம், எப்போதும் கிண்டலும் கேலியுமாக இருக்கும் மது காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அப்செட்டாக இருந்தார்கள், நீங்கள் என்னை இழுத்து வந்தது சரி தான்” என்றாள்.
“நான் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும்” என்றான் நந்தன் ஏதோ யோசித்த படியே.
“உடனே உங்களுக்கு தற்பெருமை வந்துவிடும், அப்பாடி உங்களை மாதிரி பெருமை பேசும் மனிதனை நான் பார்த்ததே இல்லை” என்றாள்.
நந்தன் அவளை விளையாட்டாய் முறைத்து விட்டு “இன்று என் பிறந்தநாள் என்று கேள்வி பட்டு இருப்பாயே, எனக்கு ஸ்பெஷல் கிப்ட் ஒன்றும் கிடையாதா?” என கேட்க “உங்கள் நண்பர் accident ஆகி ஹாஸ்பிடலில் படுத்து உள்ளார், இந்த நிலையில் உங்களுக்கு இதெல்லாம் தேவை தானா?” என்று முறைத்தாள்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சத்யாவின் கை விரல்களை பிடித்து நடந்து கொண்டே சொன்னான். “என் நண்பனின் நிலையை இப்போது நினைத்தால் கவலையாக தான் உள்ளது, மது அவனை என்ன பாடு படுத்துகிறாளோ?” என்று சிரித்துக்கொண்டே அவளை பார்த்து கண்சிமிட்டினான்.
“உங்களால் எப்படி இப்படி சிரிக்கவும் கிண்டல் செய்யவும் முடிகிறது? நம் அனைவரையும் சுற்றி இருக்கும் ஆபத்து புரியவில்லையா உங்களுக்கு?” என்று சீரியஸாக கேட்க நந்தனும் சீரியஸாகவே பதில் சொன்னான்.
“சத்யா வாழ்க்கை என்றால் நெறைய எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும், சில சமயம் அவை நல்லதாக இருக்கும், சில சமயம் கஷ்டமாக இருக்கும், அப்போதெல்லாம் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தால் கஷ்டங்கள் நம்மை விட்டு ஓடிவிடுமா என்ன? எப்படி சமாளிப்பது என்று தான் யோசிக்க வேண்டும், நான், ராகவன், மது, நீ எல்லோருமே நிறைய கஷ்டங்களை தாண்டி தான் வந்துள்ளோம், இந்த ஆபத்தையும் கடந்து செல்வோம், எல்லாமே நமக்கு பிடித்த மாதிரி நடந்தால் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கும்?”
சத்யா அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டாள். சிறு அமைதிக்கு பின் “ராகவன் அண்ணா மதுவை பிடிக்காதது போல் நடந்து கொள்கிறாரே” என்று சொல்ல சத்யாவின் தோளில் கை போட்டு அவளை வளைத்து தன் பக்கம் இழுத்து மீண்டும் அவள் தலையில் கொட்டி “என் மக்கு சத்யாவிற்கு புரிந்தது அவ்வளவு தான், நம் புலன்கள் பார்ப்பது கேட்பதை வைத்து மட்டுமே முடிவுக்கு வந்து விடாதே, listen to the heart” என்று அவன் நெஞ்சில் அவளை சாய்த்தான்.
“ப்ச்ச் விடுங்கள்” என்று அவனை தள்ளிவிட்டு விலகியவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “யாராவது பார்த்தால் மானம் போகும்” என்று கோபமாக கடிந்தாள். “அதனால் தான் யாரும் அதிகம் இல்லாத இடத்திற்கு அழைத்து வந்துள்ளேன்” என்றான் நந்தன். சத்யா முறைக்க நந்தன் ஒரு பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு சொன்னான். “சரி நீ முடிவாக என்ன தான் சொல்கிறாய்?” என்று கேட்டான். சத்யா குழப்பமாக “எதை பற்றி?” என்று கேட்டாள். “நம் திருமணத்தை பற்றி” என்றான்.
சத்யா அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் அவனையே பார்த்தாள். “ஹலோ உன்னை தான்” என்று அவன் அவள் கண்கள் முன் விரல்களால் சொடுக்க அவள் தொண்டையை செருமி கொண்டு சொன்னாள். “என்ன உளறுகிறீர்கள்?”
“உளறல் எல்லாம் இல்லை, அடுத்த வருஷம் பண்ணிக்கலான்னு தான் plan, ஆனா ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதனால் சீக்கிரமே செய்து கொள்வது நல்லது”
“உங்களுக்கு பைத்தியம் தான் பிடித்துவிட்டது, எனக்கு இந்த நினைப்பே கிடையாது” என்று சொன்னவளுக்கு திடீரென்று கௌஷிக் நினைவு வந்து ஏதோ குற்ற உணர்ச்சி குத்துவது போல் இருந்தது.
“அப்படின்னா நீ என்னை காதலிக்கவில்லையா?”
கண்களை தாழ்த்திக்கொண்டு சொன்னாள். “இல்லை”.
“ஓஹோ அப்படின்னா நிரூபி”
“நான் ஏன் நிரூபிக்க வேண்டும், என் வாயிலிருந்து வரும் வார்த்தையை நீங்கள் தான் நம்ப வேண்டும், நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை”
“நான் சொன்னது போல், வெறும் வாய் வார்த்தைகளை நான் நம்புவது இல்லை, நீ என்னை விரும்புகிறாய் என்று தெரியும்”
“may be I like you, உங்களுக்கு பல பெண்கள் தொடர்பு உண்டு, அவர்கள் எல்லோரையும் காதலித்தீர்களா?”
“No” என்று சொல்லி அவளை ஆழமாக பார்த்தான்.
“அது போல் தான், நமக்கு பிடித்தவர்களை எல்லாம் காதலிக்க வேண்டிய அவசியமில்லை”
“I see, அப்படி என்றால் நாளை எனக்கும் தீபிகாவிற்கும் நிச்சயம், நீ கண்டிப்பாக நேரில் வந்து வாழ்த்த வேண்டும்”
சத்யா அதிர்ச்சியாக நிமிர்ந்து நந்தனை பார்த்தாள். நந்தன் அவளை இமைக்காமல் தீவிரமாக பார்த்தான். சத்யாவிற்கு கண்கள் கலங்கின. கட்டுப்படுத்திக்கொண்டு இயல்பாக பேச முயன்றாள். “அங்கே நிச்சயதார்த்தம் வைத்து கொண்டு என்னுடன் காதல் உரையாட வந்தீர்களாக்கும், இது நல்லா இருக்கே” என்று பற்களை கடித்து கொண்டு கோபத்தை அடக்கி சிரிக்க முயன்று கேட்டாள்.
நந்தன் ஒரு புன்னகையுடன் “நல்லா இருக்குல்ல? Back up ரொம்ப முக்கியம் சத்யா, நீ வேண்டாம் என்று சொன்னால், அவள் இருப்பாள் அல்லவா?”
சத்யாவிற்கு ஆத்திரம் தொண்டையை அடைத்தது. “You should be ashamed of yourself”
என்றாள்.
நந்தன் புன்னகைத்தான். சத்யா வேகமாக திரும்பி நடந்தாள். நந்தன் அவள் பின்னால் நடந்தான். சத்யா வேகமாக ராகவன் அறையை திறந்தவள் அங்கே மது கண்ணீருடன் உட்கார்ந்திருப்பதை பார்த்தாள். சத்யாவும் தன் கண்ணில் இருந்து வழிந்த நீரை துடைத்து விட்டு “மது நீங்க பேசிட்டு வாங்க, நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு திரும்ப நந்தன் மீது மோதி விழ பார்த்தாள். நந்தன் அவளை பிடித்துக்கொண்டு “ஏன் ஏன் இந்த அவசரம் சத்யா? எங்கே எதிலிருந்து ஓடுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே அவளை இடப்புறத்தில் தோள்களில் கையை போட்டு அணைத்தான். “ச்சே விடுங்கள்” என்று அவனை தள்ளிவிட முயன்றாள்.
“என்னடா நடக்குது இங்க?” என்று ராகவன் கேட்க “சும்மா ஒரு விளையாட்டு” என்று நந்தன் ராகவனை பார்த்து கண்களை சிமிட்டினான். “நாளைக்கு எனக்கும் தீபிகாவிற்கும் நிச்சயதார்த்தம் டா, நீ, மது, சத்யா அனைவரும் வர வேண்டும் என்று சொன்னேன், நான் ஒருத்தி இருக்கும் போது எப்படி அவளுடன் நிச்சயம் என்று சத்யா கோபப்படுகிறாள்” என்று சொல்லி சிரித்தான்.
மதுவும் ராகவனும் நந்தனை கேள்வியாக பார்த்தார்கள். “நந்தன் என்ன இதெல்லாம்?” என்று மது கோபமாக பேச எழுந்தாள். ராகவன் அவள் கையை பிடித்து தடுத்தான். ராகவன் தன் கையை பிடித்ததை பார்த்து கண்ணீரை துடைத்து கொண்டு புன்னகைத்தாள் மது. ராகவன் கண்களால் ஏதோ சைகை செய்ய மதுவும் ஏதோ புரிந்து கொண்டாள். சத்யா கஷ்டப்பட்டு நந்தனின் கைகளை விலக்க போராடி கொண்டிருந்தாள். “நான் ஒன்றும் நான் இருக்கும் போது வேறு ஒருத்தியுடன் நிச்சயமா என்று கோபப்படவில்லை, நீங்கள் எவளுடன் நிச்சயம் செய்தால் எனக்கென்ன என்று தான் கேட்டேன்”
“அப்படி என்றால் நாளை நிச்சயத்திற்கு வந்து காமி, உனக்கு என்மீது காதல் இல்லை என்று ஒப்புக்கொள்கிறேன்”
சத்யா அவனை கோபமாக நிமிர்ந்து பார்த்தாள். “அவ்வளவு தானே, வருகிறேன் கண்டிப்பாக வருகிறேன், நீங்களும் தீபிகாவும் நன்றாக வாழ வாழ்த்துகிறேன், போதுமா?” என்று கோபமாக சொல்லியவள் சிறிது நேரம் கழித்து தொண்டையை செருமிக்கொண்டு “நல்ல முடிவு தான் எடுத்து உள்ளீர்கள், தீபிகாவுடன் நீங்கள் நெறைய வருஷம் சந்தோஷமாக வாழலாம், கண்டிப்பாக நான் வந்து வாழ்த்துகிறேன்” என்று சொல்ல நந்தன் அவளை விடுவித்தான். மது எழுந்து “சரி நாங்க கிளம்புறோம்” என்று சொல்லி சத்யாவை அழைத்துக்கொண்டு சென்றாள். அவள் போவதை பார்த்திருந்துவிட்டு “பாவம் டா அந்த பொண்ணு, ஏன்டா இப்படி கஷ்டப்படுத்துற?”
“பார்ரா, நீ மதுவை எவ்வளவு அலைக்கழிக்கிறாய், உனக்கு மதுமேல் காதல் இல்லை என்று சொல்லு? வெறும் நட்பு மட்டும் தான் என்று நீ மதுவை வேண்டுமானால் ஏமாற்றலாம், என்னை அல்ல, அவளை என்ன பாடு படுத்துகிறாய், நீ சத்யாவிற்கு இரக்கம் காட்ட சொல்கிறாயக்கும், நீயும் அவளும் ஒரே ரகம் தான், பிடித்தாலும் ஒப்புக்கொள்ளாத ரகம், உங்களுக்கு இப்படி தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு நந்தன் ராகவனிடம் சில விஷயங்களை சொன்னான்.
Comments
Post a Comment