Sms ch 46 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 46

காலை 7.30 மணி இருக்கும். வெளிச்சம் ஜன்னலின் curtain களை தாண்டி வந்து முகத்தில் படர்ந்தது. சத்யா விழித்தாள். நந்தனின் கைகள் அவளை அணைத்தபடி இருக்க அவள் நந்தன் நெஞ்சில் சாய்ந்து இருப்பதை அப்போது தான் உணர்ந்தாள். லேசாக தலையை நிமிர்த்தி பார்த்தாள். நந்தன் உறங்கி கொண்டிருந்தான். எப்படி இவன் நெஞ்சில் சாய்ந்து தூங்கி கொண்டிருக்கிறோம் என்று யோசித்து பார்த்தாள். முதல் நாள் இரவு தண்ணீரில் நின்றது, இந்த சேலையை கட்டியது, ஷ்யாமின் நினைவில் ஏற்பட்ட அருவருப்பில் கைகளை பரபரவென்று தேய்த்தது, கத்தியை எடுத்தது, நந்தன் அவளை அறைந்து கத்தியை பிடுங்கி பூட்டியது, திரும்பி வந்து அவளை அணைத்தது, அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதது எல்லாம் நினைவு வந்தது. ஆனால் எப்போது பக்கத்தில் வந்து படுத்தார், ஏன் படுத்தார் என்று யோசித்தாள்.

 

கைகளை பார்த்தவள் மஞ்சள் தடவி விட்டிருக்கிறான், எவ்வளவு அன்பாக அக்கறையாக பார்த்துக்கொள்கிறான் என்று நினைத்தாள். அன்று காதல் சொல்ல வந்தவனை தடுத்தது சரியா? சரி தான், ஷ்யாமால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம், பெண்கள் விஷயத்திலும் அப்படி இப்படி தான், ஆனால் அதைவிட அவர் உயிருடன் நலமாக இருப்பது முக்கியம், என்னால் அவருக்கு ஆபத்து தான் ஏற்படும், ஷ்யாம் கூட அன்று சொன்னானே, நல்லவேளை அவனை நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்று. ஒருவேளை ஏற்றுக்கொண்டேன் என்று தெரிந்தால் இவருக்கும் விஷ ஊசி ஏதாவது போட்டுவிடுவான் என்று நடுங்கினாள்.

 

அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் போல நந்தனின் கைகள் அவளை இறுக அணைத்தன. சத்யா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்கள் மூடி தான் இருந்தன. தூங்கி கொண்டு தான் இருக்கிறான். தூக்கத்தில் கூட என் நடுக்கத்தை உணர்ந்து இறுக அணைக்கிறானே, இவன் அணைப்பிலேயே இருந்து விட கூடாதா? என்று ஏங்கினாள். “இல்லை சத்யா வேண்டாம், கௌஷிக்கை கூட ஷ்யாம் தான் கொன்று இருக்க வேண்டும், நந்தனாவது உயிரோடு இருக்கட்டும்என்று அவள் மனசாட்சி சொல்லியது. “ஆனால்.... எனக்கு இவரை பிடித்து உள்ளதே, இந்த அணைப்பு எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது தெரியுமா? இப்படியே இவர் கைகளுக்குள்ளேயே இருந்து விட கூடாதா? இறந்து போய் விடக்கூடாதா என்று கூட தோன்றுகிறதுஎன்று அவள் பதிலுக்கு வாதம் செய்தாள். “உனக்கு பிடித்ததெல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைக்காதே சத்யா, உனக்கு பிடித்தவர் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லையா? இந்த அணைப்பு, பாதுகாப்பு எல்லாம் இல்லாமல் உன்னால் உயிர் வாழ முடியாதாஎன்று அவள் மனசாட்சி கண்டிப்புடன் கூறிக்கொண்டு இருக்கும் போதே நந்தனின் இடது கை அவளை வளைத்து அணைத்து இருக்க அவன் வலது கை அவள் முகத்தை உயர்த்துவது போல தோன்றியது. இதோ அவன் விழித்து விட்டான், என் முகத்தை நெருங்கி வருகிறான், இது கனவா அல்லது நிஜமா? என்று புரியாமல் விழித்தாள். அவன் கண்களை பார்த்தவள் தன்னையே மறந்து அவன் கண்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

 

அவனும் அவள் கண்களை பார்த்துக்கொண்டே அவளை நோக்கி குனிந்து அவள் இதழ்களை தன் இதழ்களால் இதமாக ஒத்தி எடுத்தான். அவள் அதிர்ச்சியில் விலக முயல மீண்டும் அவளை இழுத்து அவள் முகத்தை தன் இரு கைகளாலும் தாங்கி நன்றாகவே அவள் இதழ்களில் முத்தமிட்டான். ஓரிரு நிமிடங்களா அல்லது ஓரிரு யுகங்களா என்று புரியாத அந்த நேரத்தில் சத்யா கண்களை மூடி தன்னையே மறந்து இருந்தாள். நந்தன் அவளை லேசாக விடுவித்து அவள் நெற்றியோடு நெற்றியாக கண்களை மூடி ஒரு மூச்சேடுத்தான். பிறகு அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு கட்டிலில் இருந்து இறங்கினான். சத்யா கண்களை திறந்து பார்க்க தயங்கினாள். Cupboard திறந்து மூடும் சத்தம் கேட்டது. பாத்ரூம் கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது.

 

பாத்ரூம் சென்று விட்டான் போல, இனி கண்களை திறக்கலாம் என்று முடிவுக்கு வந்து கண்களை திறந்து பார்த்தாள். “ஏன் இப்படி செய்தான்? நான் ஏன் முழு முயற்சியாக அவனை தடுக்கவில்லை?” என்று அவள் யோசித்து கொண்டிருக்க நல்ல வேளை அவன் இங்கே இல்லை என்று தன் இதழ்களை தொட்டு பார்த்தாள். லேசாக முகம் சிவந்தது அவளுக்கு. மீண்டும் அவன் முகத்தில் எப்படி விழிப்பது? தன்னை பற்றி என்ன நினைத்து இப்படி செய்தான்? நான் முழுவதுமாக விலகவோ தடுக்கவோ இல்லை என்று என்னை குறைவாக நினைப்பானோ? இதையே காரணமாக வைத்து இன்னும் கொஞ்சம் அதிகமாக எல்லை மீறுவானோ? கூடாது, நான் ஏன் தடுக்கவில்லை என்று யோசிப்பதை விட்டுவிட்டு அவனை left and right வாங்க வேண்டும். தன்னை நம்பி வந்து இருக்கும் பெண்ணிடம் இப்படி தான் அத்துமீறுவதா? வரட்டும், அவன் செய்தது தவறு என்று அவனுக்கு உரைக்கும் படி அழுத்தமாக கோபமாக சொல்ல வேண்டும். அப்போது தான் இனி ஒருமுறை என்னிடம் எல்லை மீறாமல் இருப்பான் என்று கட்டிலை விட்டு கீழே இறங்கி முந்தானையை மீண்டும் போர்த்தி கொண்டு அங்கும் இங்கும் கோபமாக நடக்க முயன்றாள். இதோ பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது.

 

ஒரு 3/4th shorts ம், வெள்ளை நிறத்தில் சட்டையும் போட்டிருந்தான் நந்தன். ஈர தலையுடன் கையில் டவலுடன் வந்தவன் சத்யா கோபமாக முறைப்பதை பார்த்து புன்னகைத்துவிட்டு பால்கனி சென்று towel காயப்போட்டான்.

 

நம்மை பார்த்து பயந்து போய் பால்கனி சென்று விட்டான். எவ்வளவு நேரம் அங்கே இருக்க போகிறான், திரும்பி வந்து தானே ஆக வேண்டும், வரட்டும் அவனை நான் கேள்வி கேட்கும் விதத்தில் அவன் செய்த தவறை உணர்ந்து தலை குனிய வேண்டும் என்று ஆவேசமாக மூச்சுவிட முயன்றாள் சத்யா.

 

சில நிமிடங்களில் உள்ளே வந்த நந்தன் ஆவேசமாக நின்ற சத்யாவை பார்த்து என்னாச்சு சத்யா? Are you ok?” என்று கேட்டுக்கொண்டே அவள் முன்னால் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்தான்.

 

உங்களுக்கு வெக்கமாக இல்லையா? எதற்காக என்னிடம் அப்படி எல்லை மீறினீர்கள்?”

 

நந்தன் ஒரு புன்னகையுடன் ஓஹ் இது தான் கோபமா?” என்றான்.

 

சத்யாவிற்கு கோபம் தலைக்கேறியது. “எவ்வளவு அலட்சியமாக இது தான் கோபமா என்று கேட்கிறீர்கள்? ஒரு பெண்ணின் விருப்பம் அறியாமல் நீங்கள் இப்படி செய்தது தவறுஎன்று உறுதியாக சொல்லி அவனை முறைத்தாள்.

 

நந்தன் ஒரு மூச்செடுத்து விட்டு இரண்டு கைகளையும் சோஃபாவில் வைத்து ஊன்றி எழுந்து நின்றான். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளை நோக்கி நடந்தான். பயத்தில் அவள் கால்கள் பின்னோக்கி நடந்தன. கிட்சன் சுவர் தடுத்து நின்ற சத்யா அதற்கு மேல் எங்கே போவது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.  அவள் அருகில் வந்தவன் உனக்கு என்மீது விருப்பம் இல்லையா?” என்று கேட்டான்.

 

இல்லை விருப்பம் இல்லை, அதுவும் இல்லாமல் நீங்கள் இப்போது கேள்வி கேட்க கூடாது, நான் தான் கேட்க வேண்டும்

 

ம்ஹ்ம்ம் I see. விருப்பம் இல்லாதவள் எதற்கு அப்படி சொன்னாய்?”

 

எப்படி சொன்னேன்? என்ன சொன்னேன்?” என்று படபடத்தாள்.

 

எனக்கு இவரை பிடித்து உள்ளதே, இந்த அணைப்பு எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது தெரியுமா? இப்படியே இவர் கைகளுக்குள்ளேயே இருந்து விடக் கூடாதா? இறந்து போய் விடக்கூடாதா என்று கூட தோன்றுகிறதுஎன்று சொன்னாயே. விருப்பம் இல்லாதவள் தான் இப்படி பேசினாயா?” என்று சத்யாவின் இருபுறமும் சுவற்றில் தன் கைகளை பதித்து அவள் அவனை தாண்டி போக முடியாத படி மறித்து நின்று கேட்டான் நந்தன்.

 

நான் என் மனசாட்சியிடம் பேசியது உங்களுக்கு எப்படி கேட்டது?” என்று குழப்பத்துடன் பதறினாள்.

 

சத்யாவின் இதழ்களை பிடித்து என் செல்ல லூசு, அடுத்த முறை மனசாட்சியிடம் பேசும் போது மற்றவர்களுக்கு கேட்காத மாதிரி பேசு, சரியா?” என்று நந்தன் மீண்டும் அவள் இதழ்களை நோக்கி நெருங்கினான். சத்யா அவனை பிடித்து தள்ளினாள்.

 

வேகமாக வந்த தன் மூச்சை கட்டுப்படுத்திக்கொண்டு சரி சத்தமாக பேசிவிட்டேன், நான் பேசிய பாதியை மட்டும் கேட்டுவிட்டு எல்லை மீறுவதா? எனக்கு உங்களை பிடித்து இருக்கலாம், ஆனால் அதற்காக பல பெண்களுடன் பழக்கம் வைத்துள்ள உங்களை நான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை, எனக்கு இதில் சம்மதம் என்று அர்த்தம் இல்லை, actually after all, எனக்கு உங்களை பிடிக்கவில்லை, போதுமா? நான் இங்கு இருக்க வேண்டும் என்றால் நீங்கள் என்னை முத்தமிட கூடாது, அதுவும் இதழ்களில் கண்டிப்பாக முத்தமிடக்கூடாது, நீங்களே முடிவு செய்யுங்கள் நான் இங்கே இருக்கலாமா வேண்டாமா என்றுஎன்று வேகமாக பேசி முடித்தவள் நந்தன் இன்னும் புன்னகையுடன் தன்னை ரசிப்பதை கண்டு ச்ச என்ன மனுஷனோ தெரியவில்லைஎன்று வேகமாக பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

 

நந்தன் தலையை மறுப்பாய் அசைத்துவிட்டு சத்யா சத்யா....” என்று சொல்லிக்கொண்டே வந்து மொபைலை எடுத்து ஏதோ browse செய்தான்.

 

பாத்ரூமில் சத்யா படபடக்கும் தன் இதயத்தை கட்டுப்படுத்த முயன்றாள். “அறிவே இல்லை சத்யா உனக்கு? எப்படி சத்தமாக பேசி மாட்டிக்கொண்டாய் பார்? என்ன திட்டினாலும் சிரித்துக்கொண்டே கேட்கிறான், ஆனால் சிரிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறான், ச்ச கொஞ்சம் கம்முன்னு இரு சத்யா, உன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள், வீணாக நீயே அவரை ஷ்யாமிடம் மாட்டிவிட்டு விடாதே, உன்னால் அவருக்கு கஷ்டம் தான் ஏற்படும், அவர் சிரித்து மயக்க முயற்சிக்கலாம், ஆனால் நீ கட்டுப்பாடாக இரு, அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நீ கட்டுப்பாடாக இருந்து தான் ஆக வேண்டும்என்று தனக்கு தானே சொல்லி மனதிற்குள் பதிய வைத்தாள்.

 

சிறிது நேரம் கழித்து refresh ஆகி வெளியே வந்தாள். “அவனை பார்க்காமல் போஎன்ற மனசாட்சியின் வழிகாட்டுதலின் படி சோஃபாவில் உட்கார்ந்திருந்தவனை காணாதது போல் நேராக கட்டிலுக்கு சென்று ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

நந்தன் யாருக்கோ call செய்தான். “சார் நான் நந்தன் பேசுறேன், recent கலெக்ஷன்ஸ் எல்லாம் whatsapp பண்ண சொன்னனே?.......ஓஹ் பண்ணிட்டு இருக்கீங்களா? எனக்கு இன்னும் வரல....... Ok கொஞ்சம் சீக்கிரம் சார், thanks” என்று அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் மொபைலில் ஏதோ browse செய்தான்.

 

சில நிமிடங்களுக்கு பிறகு சத்யா இங்க வாஎன்றான்.

 

சத்யா இவன் அழைத்தால் மற்ற பெண்கள் வேண்டுமானால் ஓடி வரலாம், நான் வர மாட்டேன்என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே அவனை கவனிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

 

ப்ச்ச் சத்யா உன்னை தான கூப்பிடுறேன், இங்க வா

 

சத்யா இனிமேலாவது என்னை பற்றி புரிந்து கொள்என்று மீண்டும் மனதிற்குள் நினைத்துக்கொண்டே வேடிக்கை பார்த்தாள்.

 

இப்போ நீ சோஃபாவுக்கு வரியா? இல்லை நான் கட்டிலுக்கு வரவா?” என்று அவன் கேட்க சத்யா ஒரு நிமிடம் யோசித்து விட்டு எதற்கு வம்பு, நாமே போய்விடலாம்என்று கட்டிலில் இருந்து கீழே இறங்கி சோஃபாவிற்கு செல்லாமல் அவன் எதிரே நின்று கொண்டிருந்தாள்.

 

இங்க வா, வந்து உக்காருஎன்று சோஃபாவில் அவன் அருகே உட்காரும் படி சைகை செய்து அழைத்தான்.

 

நான் வரல, தருணை பார்க்க வேண்டும், ஒன்று தருணை இங்கே அழைத்து வாருங்கள், இல்லை என்றால் என்னை தருணிடம் அழைத்து செல்லுங்கள்என்றாள்.

 

தருண் இப்போது இங்கு வருவது நல்லது இல்லை சத்யா, ஷ்யாம் வெளியே இருக்கும் வரை அவனுக்கு பாதுகாப்பு இல்லை

 

நல்லதோ கெட்டதோ, நான் அவன்கூடவே இருந்துக்கிறேன், எனக்கு இங்கே உங்களுடன் தனியாக இருக்க பயமா இருக்கு

 

நந்தன் அவளை முறைத்துவிட்டு எனக்கும் உன்னுடன் தனியாக இருக்க பயமாக தான் உள்ளது, அதுவும் என்னை பிடித்திருக்கிறது என்று நீ சொன்னதில் இருந்து என் மனம் நிலையாக இல்லை, அதுவும் இந்த சேலையில் sexy ஆக உள்ளாய், உன்னை ஏதாவது செய்வதற்கு முன் உனக்கு கொஞ்சம் வேறு dress வாங்கி கொடுத்துவிட்டால் நான் கொஞ்சம் safe ஆக இருப்பேன், என்ன சொல்கிறாய்? வந்து நீ பார்த்து order செய்கிறாயா? இல்லை நானே உனக்காக order செய்து விடவா?” என்றான்.

 

சத்யா மொபைலை கொடுங்கள், நானே பார்த்து cart ல் சேர்க்கிறேன், நீங்கள் பார்த்துவிட்டு விலை ok என்றால் order கொடுங்கள்என்றாள்.

 

 நந்தனும் மொபைலை அவளிடம் கொடுத்துவிட்டு சொன்னான். “விலையை பற்றி கவலைப்படாதே, அவசரத்துக்கு ready made கொஞ்சம் order செய், இன்னைக்கே delivery பண்ணுவாங்க, நம்ம கூட business deal பண்றவங்க தான், அப்படியே உனக்கு அளவு எடுத்து தைக்கவும் ஆள் அனுப்ப சொல்லி இருக்கிறேன், so materials உம் order பண்ணு, அவர்கள் blouse எல்லாம் மூன்று நாட்களில் stitch செய்து கொடுத்து விடுவார்கள்என்றான்.

 

மொபைலை அவள் திருப்பி கொடுக்க அதுக்குள்ள பாத்து முடிச்சிட்டியா?” என்று மொபைலை வாங்கி பார்த்தவன் ஏன் இவ்வளவு கம்மியா add பண்ணிருக்க, சுடி, kurtis, nighty எல்லாம் போட மாட்டியா?” என்று கேட்டான்.

 

பஞ்சாப்ல இருக்கும் போது போட்ருக்கேன், தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு saree மட்டும் தான்

 

ஏன் நாங்கள் எல்லாம் என்ன பாவம் செய்தோம்? வேறு வேறு உடைகளில் எங்களுக்கு தரிசனம் தரக்கூடாதா?” என்றான் புன்னகையுடன்.

 

சத்யா பதில் ஏதும் சொல்லாமல் முறைத்து விட்டு என்னை வள்ளி அக்கா, பாட்டியிடம் கொண்டு விட்டு விடுங்கள்என்றாள்.

 

நந்தன் விரக்தியாக அவளை முறைத்தான். “உனக்கு நான் சொல்வது புரியவில்லையா சத்யா? ஷ்யாமை பிடிக்க ராகவன் இரவும் பகலும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான், என் வீட்டில் கூட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, நீ நினைக்கிற மாதிரி உன்னை சேலத்திற்கும், அவர்களை இங்கேயும் அழைத்து கொண்டு சுற்ற முடியாது, ஷ்யாம் ஒரு அரசியல் புள்ளியுடன் தொடர்பில் இருப்பதால் அந்த அரசியல் வாதியின் வீட்டிற்கு search warrant வாங்குவதில் இருந்து நமக்கு போலீஸ் பாதுகாப்பு தருவது வரை ராகவனுக்கு மேலிடத்தில் இருந்து நெறைய குடைச்சல், எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு அவன் ஏன் கஷ்டப்படுகிறான் என்று நினைக்கிறாய்? ஒன்று என் நட்பு, இரண்டு இந்த drug ஆல் நீ கஷ்டப்படுவது போல் நம் நாட்டில் வேறு யாரும் கஷ்டப்பட கூடாது என்று அவன் சாப்பிடாமல் தூங்காமல் உழைக்கிறான், என்னவோ வெளியே போவதும் வருவதும் ஏதோ சுலபமான விஷயம் போல் தருணை அழைத்து வா, என்னை போய் விட்டுவிடு என்று பிதற்றி கொண்டிருக்கிறாய், இப்போ உனக்கு என்ன பிரச்சனை? நான் உன்னை தொடக்கூடாது, அவ்வளவு தானே? தொடவில்லை போதுமா? போ போய் டிபன் சாப்பிடுஎன்று கோபமாக பேசி முடித்தான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018