Sms ch 41 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 41

நந்தன் நான்கு நாட்களாக தனியாக இருந்திருக்கிறாள். இன்று வேறு இப்படி ஒரு கனவு என்று நினைத்தவன் காரை ஓட்டிக்கொண்டே கேட்டான். “எல்லோரும் எப்போது திரும்பி வருகிறார்கள்?”

“நாளைக்கு காலைல நானும் சேலம் போறேன், முருகன் அண்ணா மட்டும் 10 நாட்களில் மும்பைக்கு போய்டுவாங்க, நாங்க கொஞ்ச நாள் சேலத்தில் இருந்துவிட்டு தான் வருவோம்”

“அது தான் கேட்கிறேன், எப்போது திரும்பி வருவீர்கள் என்று?”

“தெரியல, இன்னும் முடிவு பண்ணல”

நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தருணை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இவளும் சேலம் செல்வாளாம், ஆனால் எப்போது திரும்பி வருவாள் என்று தெரியாதாம். இந்த கதை எல்லாம் கேட்கவா நான் இங்கு ஒருவன் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து உள்ளேன் என்று மனதில் நினைத்தவன் “ஓஹோ அவ்வளவு நாட்கள் உனக்கு லீவ் இருக்காதே, உன் படிப்பிற்காக தான் லீவ் எடுக்க ஏற்பாடு செய்திருந்தேன், தேர்வு முடிந்து சேலம் போய்ட்டு one week ல திரும்பி வந்துடு, அதற்கு மேல் லீவ் எடுத்தால் சரி வராது” என்றான் உறுதியாக.

சத்யா பதில் எதுவும் சொல்லவில்லை.

தேர்வு மையம் வந்தவுடன் காரை park செய்துவிட்டு அவளுடன் இறங்கி நடந்தான். “நான் போய்க்கிறேன், நீங்க போய் கார்ல வெயிட் பண்ணுங்க” என்றாள்.

“பரவால்ல வா”

ஒருவர் id, hall டிக்கெட் எல்லாம் check செய்து அனுப்பி கொண்டிருந்தார்.

“உங்க பேர்?” என்றார்.

“சத்யா” என்றாள் id, hall டிக்கெட் எல்லாம் எடுத்துக்கொண்டே.

“பிறந்த தேதி?” என்றார்.

“மார்ச் 15” என்றவள் நந்தனின் வியப்பான பார்வையை பார்த்துவிட்டு கண்டும் காணாதது போல் மற்ற விவரங்களை தந்துவிட்டு “வரேன்” என்று நந்தனை பார்த்து தலை அசைத்துவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.

“ஓஹோ இன்னைக்கு மேடம்க்கு பிறந்த நாளா? அதான் கோயில் விஜயம், புது சேலை எல்லாம் போல, சரி தேர்வு முடிந்து வரட்டும்” என்று மீண்டும் காரில் சென்று அமர்ந்து ஒரு கடைக்கு சென்று சிலவற்றை வாங்கிவிட்டு மீண்டும் காரை கொண்டு வந்து அந்த கல்லூரி வாசலில் park செய்துவிட்டு கொஞ்ச நேரம் பாடல்கள் கேட்பதும், காரில் இருந்த ஒரு புத்தகத்தை படிப்பதும், மதுவிற்கு சில ஈமெயில் அனுப்புவது என்று நேரத்தை ஓட்டினான்.

மூன்று மணி நேரங்கள் கழித்து சத்யா வந்ததும் “எப்படி எழுதின?”

“ம்ம்ம் நல்லா எழுதி இருக்கேன்” என்றாள் புன்னகையுடன்.

சத்யாவிற்கு மனம் இலகுவாக இருந்தது. இருந்து இருந்து ஏதோ பெரிய பாரம் இறக்கி வைத்ததை போன்று உணர்ந்தாள். நந்தன் மீது இருந்த கோபம், சந்தேகம் எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்தாள். இப்போது அதை பற்றி பேசி அவளின் சந்தோஷத்தை பாழாக்க அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அவன் முகத்தை பார்த்து இலகுவாக புன்னகைக்க முடிந்தது அவளால்.

“ம்ம்ம் good, வா போகலாம்” என்று காரில் ஏறி அமர்ந்தான். அவளும் அமர்ந்தாள். காரை ஓட்டிக்கொண்டே சொன்னான்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

“Thanks”

“என்ன விசேஷம்னு கேட்டப்போ சொல்லி இருக்கலாம் இல்லை? இதில் என்ன ரகசியம்?” என்றான்.

சத்யா பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு காரை நிறுத்தி காலையில் முன்பதிவு செய்திருந்த terrace garden ல் இருந்த டேபிள் ஒன்றில் அவளை அமர வைத்தான். Baloons, flowers என்று ஏகப்பட்ட அலங்காரங்கள். சத்யாவிற்கு ஏதோ பயம் வயிற்றை பிசைந்தது. ஆங்காங்கே இருந்த heart வடிவ பலூன்கள் அவளின் பயத்தை அதிகரித்தது. அவன் எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். அவளின் பயம் முகத்தில் தெரிந்தது நந்தனுக்கு. அதனால் பெரிதாக எதுவும் சொல்லாமல் இயல்பாக இருக்க முயற்சி செய்தான். Candle lights உடன் கேக் ஒன்றை வெயிட்டர் எடுத்து வர happy birthday song பாடி wish செய்தான் சத்யாவிற்கு. சத்யாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. இவன் ஏன் இவ்வளவு செய்கிறான் என்று இதயம் அடித்துக்கொண்டது. லஞ்ச் வரவைத்து சாப்பிட்டனர். சத்யாவிற்கு உணவு இறங்கவில்லை. இவனுடன் வர ஒப்புக்கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்று உள்ளுக்குள் தன்னை தானே திட்டிக்கொண்டாள்.

நந்தனும் அவளை மேலும் uncomfortable ஆக்க விரும்பாமல் தருணை பற்றி சில விஷயங்களும் சத்யா படிப்பை பற்றி சில விஷயங்களும் பேசிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

மீண்டும் காரில் ஏறி “உனக்கு உடனே வீட்டிற்கு போக வேண்டுமா?” என்று கேட்டான்.

“ஏன் கேட்கிறீர்கள்?”

“இல்லை இன்னைக்கு பிரதோஷம், கோயிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாமா?” என்றான்.

கோயில் என்றதும் சத்யா தயங்காமல் ஒப்புக்கொண்டாள். 4.30 மணிக்கு ஆரம்பித்த நந்தி அபிஷேகம், சிவலிங்கம் அபிஷேகம் எல்லாம் முடிந்து, அலங்காரம் முடிந்து அவர்கள் வெளியே வர மணி 7 ஆகி விட்டது.

“சரி வா வீட்டிற்கு போகலாம்” என்று மீண்டும் காரில் அவளை ஏற்றிக்கொண்டு அமைந்தகரை நோக்கி காரை ஓட்டினான்.

“சரி என்மேல ஏதோ கோபம்னு சொன்னியே, என்ன அது?”

“அது..... அது....” என்று தயங்கினாள்.

“பரவால்ல சொல்லு”

“நீங்கள் பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என்று கேள்விப்பட்டேன்.....”

“ஓஹோ யாரிடம் இருந்து கேள்விப்பட்டாய்?”

“யாரிடமோ, கேட்டதற்கு பதில் சொல்லாமல் ஏன் திரும்பி என்னையே கேள்வி கேட்கிறீர்கள்?”

“ஹ்ம்ம் it’s complicated” என்றான்.

“புரியவில்லை”

“பெண்கள் விஷயத்தில் நான் மோசமானவனா என்று கேட்டாயே, அது அவ்வளவு எளிதாக சொல்கிற விஷயம் இல்லை”

“எதற்குமே நேரடியாக பதில் சொல்ல மாட்டீர்களா?” என்றாள் விரக்தியாக.

“see சில பெண்கள் என்னை மோசமானவன் என்பார்கள், சில பெண்கள் என்னை நல்லவன் என்பார்கள், so நான் நல்லவனா மோசமானவனா என்பது அவரவர் என்னை பார்க்கும் விதத்தில் உள்ளது, ஆனால் ஒன்று சொல்ல முடியும் எனக்கு நெறைய பெண்களிடம் பழக்கம் இருந்ததுண்டு”

“எவ்வளவு தைரியமாக சொல்கிறான்” என்று மனதிற்குள் புகைந்தாள் சத்யா. சந்தோஷமா இருந்தேன், இவனிடம் வாயை விட்டது என் தவறு தான் என்று தன்னை தானே நொந்து கொண்டாள் சத்யா.

“வேற ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?” என்றான் அவளை திரும்பி பார்த்து.

“இருந்தது ஆனால் இப்படி ஒரு விளக்கத்தை நீங்கள் கொடுத்த பிறகு மற்ற கேள்விகளை கேட்பதும் ஒன்று தான், கேட்காமல் இருப்பதும் ஒன்று தான்”

“அட மேடம் கோவத்துல இருக்கீங்க போல, நல்லா தான் இருக்கு நீ இப்படி என்னை கேள்வி கேட்பதும், கோபப்படுவதும்” என்றான் புன்னகையுடன்.

சத்யா நினைத்தாள் “சரியான புதிராக இருப்பான் போல, கோபமாக பேசினால் சிரிக்க வேண்டியது, சிரித்து பேசினால் கோபப்பட வேண்டியது, இவனிடம் மாட்டி நம்மால் முழிக்க முடியாது, சீக்கிரமே வேறு வேலை பார்த்துக்கொண்டு இவன் கண்ணில் படாமல் எங்காவது சென்று விட வேண்டும்”.

“ஆமாம் ஒரு விஷயம் சொல்லு, திடீரென்று நான் பெண்கள் விஷயத்தில் எப்படி பட்டவன் என்று தெரிந்து கொள்ள என்ன ஆர்வம்?”

“ஆர்வம் எல்லாம் ஒன்றுமில்லையே, எனக்கென்ன ஆர்வம்? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருந்தால் எனக்கென்ன?” என்று படபடத்தாள்.

“ஆர்வமும் அக்கறையும் இல்லை என்றால் எதற்காக கேட்கிறாய்?”

“தெரியாமல் கேட்டுவிட்டேன், மன்னித்து விடுங்கள்” என்று அவன் பக்கம் திரும்பி கைக்கூப்பி கேட்டாள்.

நந்தன் சிரித்தான். ஒரு சிறு அமைதிக்கு பின் சொன்னான் “எனக்கு என்னவோ உனக்கு என்மீது காதல், ஈர்ப்பு என்று ஏதோ இருப்பதாக தோன்றுகிறது, அதனால் தான் இதையெல்லாம் கேட்கிறாய்”.

சத்யா ஏதோ தவறு செய்து கையும் களவுமாக பிடிப்பட்டது போல் உணர்ந்தாள். முகம் சிவக்க “என்ன உளறுகிறீர்கள்?” என்று கோபமாக கேட்க முயன்றாள்.

“உளறல் என்றே வைத்துக்கொள், நானே தானே உன்னிடம் சொன்னேன், நான் விரும்பும் பெண்களை எப்படி அடைய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று, அப்போதே தெரியவில்லையா என் வாழ்க்கையில் ஒரு பெண் அல்ல, பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது, சொல்லி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது, அப்போதெல்லாம் இல்லாத கவலை இப்போது எதற்கு உனக்கு என் நடத்தை பற்றி”

“அது... அது எப்போது சொன்னீர்களோ? யாருக்கு தெரியும்? நீங்கள் சொல்லும் வார்த்தைகளை தங்க தட்டில் பொறித்து சுவற்றில் மாட்டி வைத்துக்கொண்டு தினமும் படிக்கிறேனா என்ன? எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொள்ள?”

“அப்ப்பா இப்படி எல்லாம் பேசுவாயா நீ? எங்கே ஒளித்து வைத்திருந்தாய் இந்த பேச்சை எல்லாம், ஒரு form ல தான் இருக்க போல” என்றான் மீண்டும் சிரித்த படியே.

சத்யாவிற்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை. இறங்கி ஓடி விடலாம் போல் தோன்றியது. இவனை கேள்வி கேட்டு திக்குமுக்காட வைக்கலாம் என்று நினைத்தால் நான் தான் இவனிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன் என்று நினைத்தவள் “காரை நிறுத்துங்கள், நான் இங்கே இறங்கி கொள்கிறேன்” என்றாள்.

“அப்படி எல்லாம் உன்னை விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா? உன்னை கடத்திக்கொண்டு போய் என்ன செய்கிறேன் என்று பார்” என்றான்.

சத்யா “உண்மையாக தான் சொல்கிறானா?” என்பது போல அவனை திரும்பி பார்த்தவள் அவன் உணர்ச்சிகள் இல்லாமல் காரை ஓட்டுவதை பார்த்து உள்ளூற நடுங்க தொடங்கினாள். லேசாக வியர்க்க தொடங்கியது.

“தீபிகாவை பார்த்தாயா?” என்றான் உணர்ச்சிகள் அற்ற குரலில்.

சத்யாவிற்கு அவன் முன்பு போல சிரித்து பேசினால் என்ன என்று தோன்றியது. அவன் முகத்தில் இருந்த கடுகடு தன்மை அவளை பயமுறுத்தியது. “தீபிகாவை பார்த்தாயா? என்று கேட்டேன்.”

“ஆமாம் பார்த்தேன், நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி என் வீட்டுக்கு வந்திருந்தாங்க”

“என்ன சொன்னாள்?”

“உங்களிடம் நான் பழக கூடாது என்று சொன்னார்கள்”

“ஓஹோ வேறு என்ன சொன்னாள்?”

சத்யா பயந்து போய் அமைதியாக இருந்தாள். “வேறு என்ன சொன்னாள் என்று கேட்டேன்”

“அதெல்லாம் எதற்கு? உங்களுக்கும் அவங்களுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க போகிறது அல்லவா? அதனால் அவர்களுடைய பயம் நியாயம் தானே? அவர்கள் என்ன சொன்னார்கள், ஏது சொன்னார்கள் என்று விசாரிக்காமல் அவர்களுடன் நேரம் செலவழிக்க முயற்சி செய்யுங்கள்”

“எனக்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தமா? என்ன உளறுகிறாய்?” என்றான்.

“நான் ஒன்றும் உளறவில்லை, அவங்க தான் அப்படி சொன்னாங்க”

“அவங்க அப்படி சொன்னா நீ நம்பிடுவாயா?” என்றான் வேகமாக பிரேக் போட்டபடி.

சத்யாவிற்கு மேலும் பயம் அதிகரித்தது. ஆனால் அடுத்த நிமிடமே பயந்தது போதும் என்று முடிவு செய்தவள் “நான் நம்புவதும் நம்பாததும் இருக்கட்டும், உண்மையா பொய்யா?” என்றாள்.

“நிச்சயதார்த்தம் எல்லாம் ஒன்றும் இல்லை”

“அவங்க கூட நீங்க லண்டனில் ஒன்றாக இருந்தது.....” என்று இழுத்து நிறுத்தினாள்.

நந்தன் அவளை ஆழமாக பார்த்துவிட்டு “ஆமாம் அவகூட ஒரு இரவு ஒன்றாக இருந்தேன்” என்று சொல்லிவிட்டு சத்யாவையே பார்த்தான்.

சத்யா அவனை கோபமாக பார்க்க திரும்பியவள் அவன் தீவிரமாக பார்ப்பதை பார்த்துவிட்டு திரும்பி கொண்டாள்.

“சரி இப்போ சொல்லு, நான் அவளுடன் சில வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு செலவழித்தது தான் உன் பிரச்சனையா?” என்றான்.

“எனக்கென்ன பிரச்சனை? ஒரு பிரச்சனையும் இல்லை, நீங்கள் தான் சொல்லிவிட்டீர்களே, ஒரு பெண் இல்லை, பல பெண்களுடன் தொடர்பு என்று, உங்கள் வாழ்க்கை, உங்கள் விருப்பம்” என்று சொல்லியவள் இவனுக்கும் ஷ்யாமிற்கும் என்ன வித்தியாசம் என்று நினைத்து கொண்டாள்.

நந்தன் சிறிது நேர அமைதிக்கு பின் “சத்யா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டும், உனக்கு தேர்வு முடியட்டும் என்று தான் காத்திருந்தேன், ஏனோ தெரியவில்லை உன்னை பார்த்த நாளில் இருந்தே....” என்றான் இதமான குரலில்.

சத்யாவிற்கு இப்போது அதிகமாக வேர்த்தது. வீடு வந்துவிட்டதால் “அது நான் வருகிறேன்” என்று அவசர அவசரமாக காரில் இருந்து இறங்கி வீட்டின் பூட்டை திறந்து அடுப்படி சென்றாள். நந்தனும் காரை நிறுத்திவிட்டு அவள் பின்னால் வந்து அவள் தண்ணீர் அருந்தி முடிக்கும் வரை காத்திருந்தான். பிறகு சொல்ல வாய் எடுத்தான் “சத்யா நான் உன்னை....”

சத்யா பட்டென்று திரும்பி “எத்தனை பெண்கள் உங்கள் வாழ்க்கையில்? நீங்கள் விரும்பும் பெண்ணை எப்படி அடைய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் இல்லை? பாவம் அந்த தீபிகா, அங்கே அவளை ஏமாற்றிவிட்டு வேறு ஒருத்தியுடன் இரவு 11, 12 மணி வரை கூத்தடிப்பீர்கள், இப்போது நான் தான் உங்கள் குறி, அதற்காக என்னை காதலிப்பதாக கூட நீங்கள் பொய் சொல்வீர்கள்” என்று கொட்டி முடித்தாள்.

நந்தன் அவளை வியப்பாக பார்த்துவிட்டு லேசாக புன்னகைத்தான். “I think you are scared about your feelings”.

“பயம் தான், ஆனால் என் feelings ஐ நினைத்து அல்ல, ஒரு காமுகனை என் வீட்டில் அனுமதித்ததை நினைத்து, உங்களுக்கும் அந்த ஷ்யாமிற்கும் என்ன வித்தியாசம்? அவன் பெண்களை போதை பொருளால் மயக்குவான், நீங்கள் உங்கள் வார்த்தை ஜாலங்களால் மயக்குவீர்கள்” என்றாள்.

நந்தனுக்கு இப்போது கோபம் வந்தது. “உன்னை வெறும் உடம்பிற்காக அடைய வேண்டும் என்று நினைத்து இருந்தால் அதை எப்போது அடைந்திருப்பேன்” என்றான்.

“எப்படி? ரேப் செய்து இருப்பீர்களா?” என்றாள்.

“அவசியமில்லை உனக்கும் என்மீது விருப்பம் என்று எனக்கு தெரியும், அந்த விருப்பத்தை லேசாக தூண்டி விட்டிருந்தால் போதும்”

“பெண்கள் எல்லோரும் அவ்வளவு பலவீனமானவர்கள் உங்கள் அகராதியில், நந்தன் உங்கள் மீது இப்போதும் எனக்கு கொஞ்சம் மதிப்பு உள்ளது, தயவு செய்து அதை வீணாக்கி கொள்ளாதீர்கள், இங்கிருந்து புறப்படுங்கள்” என்றாள்.

நந்தன் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு “நான் இப்போது சொன்னாலும் உன்னை அடைய பொய் சொல்கிறேன் என்று தான் நினைப்பாய், பரவாயில்லை, நீயாக உணரும் வரை நான் காத்திருக்க தயார், ஆனால் இன்று என் கவலை எல்லாம் நீ இங்கே தனியாக இருப்பது தான்” என்றான் அடுப்பைடியை ஒரு பார்வை பார்த்துவிட்டு.

“நான்கு நாட்களாக தனியாக தான் இருக்கிறேன், நன்றாக தான் உள்ளேன், உன் கரிசனத்திற்கு நன்றி, நீங்கள் புறப்படலாம்” என்று வாசலை காண்பித்தாள்.

நந்தன் சரி என்று தலை அசைத்துவிட்டு காருக்கு சென்றான். காரை எடுக்காமல் அங்கேயே உட்கார்ந்து இருந்தான். சத்யா அடுப்படி ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு அவனுக்கு call செய்தாள். “please கிளம்புங்க” என்றாள்.

நந்தனும் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். சத்யாவிற்கு கண்களில் நீர் வழிந்தது. படுக்கை அறை கதவை திறந்தவள் ஜன்னலை மூடிவிட்டு கண்களை துடைத்து கொண்டு வேறு ஒரு சேலையை எடுத்து படுக்கையில் வைத்தாள். கட்டி இருந்த புது சேலையை கழட்டிவிட்டு பிளவுசை கழட்ட போகும் நேரம் தான் அந்த குரல் கேட்டது.

“Hi சத்யா” என்றான் ஷ்யாம் படுக்கை அறையின் கதவின் பின்னால் நின்று.

திடுக்கிட்டு திரும்பினாள் சத்யா. அவள் இதயம் நின்றுவிடுவது போல் இருந்தது.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018