Sms ch 43 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 43
நந்தன் சிறிது நேரம் அவனுடைய இஷ்ட தெய்வம் சிவனை மனதில் நிறுத்தி வேண்டிக்கொண்டான் சத்யா நல்லபடியாக பிழைத்து வர வேண்டும் என்று. சில மணி நேரம் கழித்து டாக்டர் வந்தார்.
“கொஞ்சம் critical தான், மூச்சுவிட சிரமப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் அந்த ஊசியையும், அந்த vial ஐயும் கொண்டு வந்ததாலும், நேரத்திற்கே அவர்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்ததாலும் கொடுக்க வேண்டிய சிகிச்சையை முறையாக கொடுக்க முடிகிறது, இல்லை என்றால் என்ன மருந்து அவர்கள் உடம்பில் செலுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்வதற்குள் அவர்கள் coma stage க்கோ அல்லது உயிர் போகும் நிலைக்கு கூட சென்றிருக்க வாய்ப்புள்ளது, ஆனால் நீங்கள் சமயோசிதமாக நடந்து கொண்டதால் நமக்கு நேர அவகாசம் கிடைத்துள்ளது. அவர்களை காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் பிழைக்க தேவையான சிகிச்சை அனைத்தும் கொடுத்து கொண்டிருக்கிறோம், ஆனால் பிழைப்பது அந்த கடவுளின் கையில் தான் உள்ளது”
“டாக்டர் நீங்க பேசறத பாத்தா நம்பிக்கை இல்லாதது போல் தெரிகிறதே” என்றான் குரல் தழுதழுக்க.
டாக்டர் நந்தனின் இடது கையை தட்டி கொடுத்து “No நந்தன், நான் அப்படி சொல்லவில்லை, சிகிச்சைகள் கொடுக்கிறோம், ஆனால் அந்த மருந்தின் வீரியம் 24 மணி நேரங்கள் கழித்து தான் தெரியும், சத்யா எந்த அளவிற்கு இந்த 24 மணி நேரத்தில் எங்கள் சிகிச்சைக்கு ரெஸ்பான்ஸ் செய்கிறார்கள் என்பதை பொறுத்து தான் தெரிய வரும், opioid combat செய்ய nasal spray, antidote என்று எல்லாம் பயன்படுத்தி உள்ளோம், antidote அவர்கள் உடம்பில் உள்ள drug ன் வீரியத்தை reverse செய்யும் என்று நம்புகிறோம், நம்பிக்கையை இழக்க வேண்டாம்” என்று தட்டி கொடுத்து விட்டு நகர்ந்தார்.
நந்தன் சோர்வாகி அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்தான். “ச்ச எப்படி இதை நடக்கவிட்டேன், அவளை நான் பாதுகாக்க தவறி விட்டேன், please சத்யா, come back, காதல் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று உன்னை பார்த்த பிறகு தான் உணர ஆரம்பித்தேன், உன்னை பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொன்ன போது கூட “இவள் இனி எனக்கானவள், எவன் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை, இவளை நான் என் கைக்குள் வைத்து பாதுகாப்பேன் என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்படி உனக்கு ஒரு ஆபத்து வர விட்டுவிட்டேன்” நந்தனுக்கு கண்கள் கலங்கின, கைகளில் முகத்தை புதைத்து கண்ணீரை கட்டுப்படுத்தினான்.
சிறிது நேரம் கழித்து ராகவனுக்கு call செய்தான். “டேய் தருணுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டாயா?”
“அதை பற்றி எல்லாம் நீ கவலைப்படாதே, நான் சத்யா வீட்டில் forensics உடன் இருக்கிறேன், முடிந்ததும் உன்னை ஹாஸ்பிடலில் சந்தித்து பேசுகிறேன், அது வரை நீ டென்ஷன் ஆகாமல் இரு, சத்யா சீக்கிரமா recover ஆகிடுவா, நீ வீணாக மனசை போட்டு குழப்பி கொள்ளாதே”
“ம்ம்ம் சரி” என்று போனை வைத்தான். மணி இரவு 1 ஆகியது.
ராகவன் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான். ஊசியையும், vial ஐயும் அவனுடன் வந்த forensics dept இடம் வாங்கி கொடுத்துவிட்டு நந்தனை அமர சொல்லி அவன் அருகில் ராகவன் அமர்ந்தான். நந்தனின் கலக்கமுற்ற முகத்தை பார்த்து அவன் தோள்களில் கையை போட்டு அவனை லேசாக உலுக்கி “பயப்படாத டா” என்றான் ராகவன்.
நந்தன் ஒரு பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு “தருண்...” என்றான்.
“தருண், வள்ளி, முருகன், சின்னு, பாட்டி அனைவரையும் போலீஸ் பாதுகாப்பில் சேலம் அருகில் ஒரு ஊரில் தங்க வைக்க ஏற்பாடு செய்தாகி விட்டது. சத்யாவிற்கு ஏற்பட்ட ஆபத்தை முழுவதுமாக சொல்லவில்லை, சற்று மயக்கத்தில் இருக்கிறாள், பிறகு பேசுவாள் என்று சொல்லி உள்ளேன். முருகனை பழைய சிம் கார்டு ஐ தூக்கி போட சொல்லியாச்சு, ஏன் என்றால் துரைசாமி மூலமாக அவன் வரவில்லை, முருகன் மும்பையில் இருந்து வந்துள்ளார், அவர் மூலமாக தான் வந்திருக்க வேண்டும், அதனால் மீண்டும் முருகன் மொபைல் வைத்து track செய்ய கூடாது அல்லவா?”
ராகவன் பேசிக்கொண்டிருக்க நந்தன் ஏதோ சிந்தனையில் ம்ம்ம் கொட்டிக்கொண்டிருந்தான் வேறு பதில் சொல்லாமல்.
சிறு அமைதிக்கு பின் “அவனை பிடித்து விட முடியுமா?” என்று கேட்டான்.
“முடியும் என்று தான் தோன்றுகிறது, ஆனால் எப்போது என்பது தான் தெரியவில்லை, அவன் சிம் கார்டு அமைந்தகரையை இன்னும் தாண்டவில்லை, அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம், ஒன்று அவன் இன்னும் அமைந்தகரையில் தான் இருக்க வேண்டும், இல்லை என்றால் சிம் கார்டை அங்கேயே தூக்கி போட்டுவிட்டு கிளம்பி இருக்க வேண்டும், தூக்கி போட்டுவிட்டு கிளம்பி இருந்தால் அவனை பிடிப்பதில் தாமதம் ஏற்படும், அவன் பஞ்சாபில் இருந்து மும்பை வந்துள்ளான், மும்பையில் இருந்து எப்படி இங்கு வந்தான் என்று தெரிந்தால் எப்படி போவான் என்பதையும் யூகிக்க எளிதாக இருக்கும், flight ல் வந்தானா? Train ல் வந்தானா? என்பதெல்லாம். அவன் போட்டோவை அமைந்தகரை மற்றும் சுற்றியுள்ள போலீஸ் ஸ்டேஷன், பூத், செக் பாயிண்ட் என்று எல்லாவற்றிற்கும் அனுப்பி உள்ளோம், அது மட்டுமல்லாமல் சேலத்திற்கும் அனுப்பி உள்ளோம், கவலைப்படாதே, அவனை பிடித்து விடலாம்”
நந்தன் ஏதோ நினைவு வந்தவன் போல “ராகவா, சத்யா வீட்டிற்கு பின்னாடி இருக்கும் தெருவில் நான் காரை நிறுத்திவிட்டு உட்கார்ந்து இருந்தேன் அல்லவா, அப்போது அங்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பார்த்தேன், aston martin கார் அது, அந்த தெருவில் அது போன்ற காரை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, out of place ஆக தோன்றியது, அப்போதே கொஞ்சம் என்னை உறுத்தியது”
“Aston martin என்றால் பெரிய பணக்காரரின் காராக தான் இருக்க வேண்டும், இது ஒரு நல்ல தகவல் நந்தா, நான் எல்லா செக் பாயிண்ட்டுகளுக்கும் இந்த விவரத்தை அனுப்பி அது போன்ற கார்களை விசாரிக்க சொல்கிறேன், கண்டிப்பாக அது போன்ற கார்கள் நெறைய இருக்க போவதில்லை, எதற்கும் நம்பர் பிளேட் நினைவு உள்ளதா?” என்று ராகவன் கையில் மொபைலுடன் பரபரத்தான்.
நந்தன் சிறிது நேரம் யோசித்துவிட்டு “நம்பர் ஞாயபகம் இல்லடா, ஆனால் ME என்ற எழுத்துக்களில் முடியும்”
“சரி டா நான் இந்த தகவலை உடனே அனுப்பிவிட்டு வருகிறேன், cctv கேமராக்களையும் செக் செய்வார்கள்” என்று சொல்லிவிட்டு யாருக்கோ call செய்துகொண்டே நகர்ந்தான்.
ICU வில் இருக்கும் சத்யாவை கதவின் கண்ணாடி வழியாக பார்த்தான் நந்தன். இப்போது ஹாஸ்பிடல் கௌனில் இருந்தாள் அவள். மூக்கில் ஏதோ wire, கைகளில் iv liquids wire வழியாக சென்று கொண்டிருந்தது, தலையில் கட்டு, அவளை சுற்றி wire களும், கருவிகளும், பக்கத்தில் ஒரு nurse, நந்தனுக்கு அவளை பார்க்க மனம் வேதனை அடைந்தது. “இருந்து இருந்து நான் விரும்பிய ஒருத்தியை இழந்து விடுவேனோ? என்னை விரும்பியவர்கள் இப்படி தான் தவித்து இருப்பார்களோ? இதெல்லாம் நான் செய்த பாவத்திற்கு எனக்கு கிடைக்கும் தண்டனையா? ஆனால் நான் யாரையும் ஏமாற்றவில்லையே, அப்படி பாவம் செய்திருந்தாலும் எனக்கு தானே தண்டனை கிடைத்து இருக்க வேண்டும், சத்யாவிற்கு ஏன் இந்த நிலைமை?” என்று மனதிற்குள் போராட்டத்தை நடத்தி கொண்டிருந்தான் நந்தன்.
ராகவன் இரண்டு tea cup களுடனும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டுடனும் வந்தான். நந்தனின் பின்னால் நின்று சத்யாவை அவனும் பார்த்தான். ஒரு சில நிமிடங்கள் கழித்து “நந்தா வா, இந்த டீயை குடி” என்று அழைத்து சென்று டீயும் பிஸ்கட்டும் சாப்பிட வைத்தான். நந்தன் அன்று நாள் முழுதும் பெரிதாக சாப்பிடவில்லை. காலையில் ஹோட்டலில் வாங்கிய இட்லி அவ்வளவாக அவனுக்கு பிடிக்கவில்லை, மதியம் சத்யா பயத்தில் சரியாக சாப்பிடாததால் அவனும் குறைவாக தான் சாப்பிட்டு இருந்தான், சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு முடிந்து மிளகு சோறு பிரசாதமாக சாப்பிட்டதோடு சரி, வேறு எதுவும் சாப்பிடவில்லை, நடந்த கலேபரத்தில் பசியோ சாப்பாடோ அவன் நினைவில் இல்லை, ஆனால் இந்த tea எவ்வளவு உயிரோட்டத்தை தருகிறது என்று ஒரு மடக்கு குடித்த பிறகு தான் தெரிகிறது, ராகவனுக்கு மனதில் நன்றி தெரிவித்தான்.
Tea குடித்து முடித்து கொஞ்சம் பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு “thanks ராகவா” என்றான். “ச்ச இதுக்கு எதுக்கு டா thanks எல்லாம்?” என்றான் ராகவன்.
“இதுக்கு இல்லடா, சத்யாவை காப்பாற்ற நீ எடுத்த முயற்சிகளுக்கு, டாக்டர் சொன்னார், இன்ன மருந்து என்று தெரியவில்லை என்றால் டிரீட்மென்ட் ஆரம்பித்து கூட இருக்க முடியாது, நேரத்திற்கு கொண்டு வந்திருக்கவில்லை என்றால் அவள் எப்போதோ உயிரை விட்டிருக்கவோ அல்லது coma நிலைக்கோ போயிருக்க முடியும் என்று, நீ வழிகாட்டவில்லை என்றால் நான் திக்கு முக்காடி போயிருப்பேன், அதற்கு தான் நன்றி சொன்னேன்” என்றான். ராகவன் அவன் தோள்களில் கை போட்டு அவனை அணைத்தான்.
“துரைசாமி கூட இவன் வந்திருப்பதை தெரிந்து கொண்டு எனக்கு எச்சரிக்க முயற்சி செய்துள்ளான், அவனிடம் பேசினாயா? ஷ்யாமை பிடிப்பதில் அவன் உதவி முக்கியமானதாக இருக்க வாய்ப்புள்ளது”
“ஆமாம் டா, பேசினேன், அவனும் ஷ்யாமிற்கு பயந்து கேரளாவிற்கு சென்றுவிட்டான், அவனும் சில தகவல்களை கொடுத்துள்ளான், விசாரணைக்கு வர சொல்லி இருக்கிறேன், போனிலேயே கேளுங்கள், நான் சென்னை வரமாட்டேன் என்கிறான்”
“பாவம் ஷ்யாமுடன் ஏதோ பகை இருக்க வேண்டும், அவன் பயத்திலும் நியாயம் உள்ளது, குறைந்த பட்சம் என்னை எச்சரிக்க நினைத்தானே”
“சரி டா, உன்னை தனியாக விட்டுவிட்டு செல்ல மனமில்லை, ஆனால் நான் போனால் தான் அந்த ராஸ்கலை பிடிக்க பணிகளை முடுக்கி விட முடியும், நீ visitors அறையில் இருக்கும் பெஞ்சில் படுத்து கொஞ்சம் ஓய்வெடுத்து கொள், நான் காலையில் வந்து உன்னை பார்க்கிறேன்”
“என்னை ஓய்வெடுத்து கொள்ள சொல்கிறாய், ஆனால் நீ தூங்க வேண்டாமா? நீயும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு போடா, எப்படியும் அவனை பிடிக்க எல்லா காவல் நிலையம், செக் பாயிண்ட் என்று போட்டோ மற்ற தகவல்கள் அனுப்பி உள்ளாய், அப்புறம் என்ன, கொஞ்ச நேரமாவது நீ தூங்கு”
“டேய் எனக்கு அடிக்கடி இப்படி night விழித்திருந்து பழகி விட்டது, மணி 3 ஆகப்போகிறது, நீ போய் தூங்கு, நான் வருகிறேன், பாதுகாப்பிற்காக இந்த இரண்டு காவலாளிகளும் இங்கே இருப்பார்கள்” என்று சொல்லிவிட்டு ராகவன் புறப்பட்டான். ஆனால் நந்தனுக்கு விசிட்டர் அறைக்கு சென்று ஓய்வெடுக்க விருப்பமில்லை. அங்கேயே உட்கார்ந்த படி கண் அயர்ந்தான்.
மறுநாள் காலை ராகவன் மீண்டும் வந்து சேர்ந்தான். டாக்டர் சத்யாவை பார்த்துவிட்டு வெளியே வந்தார். நந்தன் அவரை ஆவலாக பார்த்தான். “அவர்கள் breathing improve ஆகி உள்ளது, இருந்தாலும் முழு அபாயத்தை இன்னும் தாண்டவில்லை, இன்னும் 12 மணி நேரங்களில் மற்ற முன்னேற்றங்கள் தெரிந்தால் உறுதியாக சொல்லலாம் பிழைத்து விட்டார்கள் என்று, ஆனால் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏன் என்றால் அவர்கள் உடல்நிலை மோசமாகவில்லை, stable ஆக தான் உள்ளார்கள், breathing லும் முன்னேற்றம் இருப்பதால் I am hopeful, she will bounce back ” என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.
நந்தனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. சத்யா கண்டிப்பாக பிழைத்து விடுவாள் என்று நம்பினான்.
ராகவன் சொன்னான். “சரி டா நீ வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து refresh ஆகி வா, சத்யாவை நான் பார்த்துக்கொள்கிறேன்”
“நீ போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா டா”
“சொல்றத கேளு, உன்னை இவ்வளவு down ஆ நான் பாத்ததே இல்ல, முதல்ல கிளம்பு, என்மேல நம்பிக்கை இல்லையா? ஏதாவது என்றால் உடனே call செய்றேன்”
“உன்மேல நம்பிக்கை இல்லன்னா என்மேலயே எனக்கு நம்பிக்கை இல்லன்னு அர்த்தம், ஆனால் you need rest, so நீ போய் rest எடுத்துட்டு வா, அப்புறமா நான் போறேன்”
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? ஓகே ஒரு nap எடுத்துட்டு refresh ஆகிட்டு வரேன், but அதுக்கு முன்னாடி நாம போய் டிபன் சாப்பிடலாம்” என்று நந்தனை வலுக்கட்டாயமாக அழைத்து கொண்டு போய் சாப்பிட வைத்தான் ராகவன். அவனும் சாப்பிட்டுவிட்டு நந்தனிடம் விடைபெற்று புறப்பட்டான்.
மதியம் போல திரும்பி வந்த ராகவன் சத்யாவின் உடல்நிலையை பற்றி விசாரித்தான். “she is stable, but still unconscious
தான் டா, 24 hours முடியட்டும்ன்னு தான் டாக்டர் சொல்லிட்டு இருக்காங்க” என்றான்.
“She will be fine டா, இந்த ஷ்யாம் இன்னும் சிட்டி limits குள்ள தான் இருக்க வேண்டும், எந்த aston martin காரும் சிட்டியை கடக்கவில்லை, அவனுடைய மொபைல் last one week ல ping ஆன towers இருக்கும் ஏரியாக்களில் அலசி ஆராய்ந்துகொண்டுள்ளோம், உன் வீடு இருக்கும் ஏரியாவில் கூட அவன் மொபைல் அதிகமாக ping ஆகி உள்ளது, உனக்கு ஓகே என்றால் உன் வீட்டிற்கு கூட பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிடுகிறேன்”
நந்தன் யோசித்தான். “அவன் என்னை பின் தொடர்ந்து இருப்பான் என்று நம்புகிறாயா?”
“தெரியல டா, ஆனால் நீ இருக்கும் ஏரியாவில் தான் நெறைய சினிமா celebrities, அரசியலில் முக்கியமான புள்ளிகளின் வீடுகளும் உள்ளன” என்று சொன்ன ராகவன் குரலை தாழ்த்தி சொன்னான். “நெறைய celebrities, அரசியல் புள்ளிகளுக்கு இந்த drug dealings உண்டு as you might know, எங்கள் சந்தேக வட்டத்தில் உள்ள புள்ளிகளில் யாரோ இவனுக்கு தெரிந்தவராக இருக்கலாம், அவர்கள் வீட்டில் கூட அவன் தங்கி இருக்கலாம், மற்றபடி அவன் உன்னையோ உன் வீட்டையோ பார்ப்பதற்காக தான் அந்த area வந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை, இருந்தாலும் safety side இரண்டு காவலாளிகளை வேண்டுமானால் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்ய முடியும்”
“அம்மா அப்பா எல்லாரும் பயந்துடுவாங்க, என்ன ஏதுன்னு கேட்டு துளைத்து எடுத்து விடுவார்கள், நான் யோசித்து சொல்கிறேன்”
“சரி நீ கிளம்பு, போய் worry பண்ணாம கொஞ்சம் நல்லா தூங்கி எந்திரிச்சு வா” என்று நந்தனை ராகவன் அனுப்பி வைத்தான்.
நந்தன் மீண்டும் கதவில் இருந்த கண்ணாடி வழியாக சத்யாவை பார்த்தான். நேற்று அவன் பார்த்த பொட்டு, கம்மல் எதுவும் இல்லாமல் வெற்று முகத்துடன் படுத்து இருந்தாள். “இரவுக்குள் ஒழுங்காக கண் முழிச்சு பாக்கணும், சொல்லிட்டேன்” என்று மனதிற்குள்ளே சத்யாவிடம் பேசினான். “கண் விழித்து பார்ப்பாள், பேசுவாள்” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு ராகவனிடம் திரும்பி “சரி டா, தனியா விட்டுடாதா டா” என்றான் கலக்கத்துடன். “அவள் என் நண்பனுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும், அப்படி எல்லாம் தனியாக விடமாட்டேன், நீ கவலைப்படமால் போய்ட்டு வா” என்று ராகவன் சொல்ல நந்தன் கண்களை துடைத்து கொண்டு ஒரு புன்னகையுடன் அவனை கட்டிப்பிடித்து விடைபெற்றான்.
Comments
Post a Comment