Sms ch 48 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 48
நந்தன் வீட்டில் தன் அறையில் நுழைந்ததும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான். இன்னதென்று உணர முடியாத வித்தியாசம். கமலா அம்மா அவன் வந்ததை பார்த்துவிட்டு அவனுக்கு டிபன் கொண்டு வந்தார்கள். “நீங்க ஏன் அம்மா எடுத்து வந்தீர்கள்? நானே கீழே வந்திருப்பேனே, எல்லோருடனும் சாப்பிட்டு நெறைய நாட்கள் ஆகிவிட்டது”.
“ஆமாம் நந்து, நீ தான் வேலை பிசினஸ் னு போய்டுற, ஏதோ தொழிலில் பிரச்சனை என்று போலீசை வேறு நிறுத்தி வைத்து இருக்கிறாய், நீ எச்சரிக்கையாக இருக்கிறாய் அல்லவா?”
“ஆமாம் மா எச்சரிக்கையா தான் இருக்கேன், நீங்கள் பயப்படாதீர்கள்”
தன் அறையையே சுற்றி சுற்றி பார்த்தவனை “என்ன நந்து பாக்குற?”
“என் ரூமுக்கு யாராவது வந்தார்களா? Something is not right” என்றான்.
“இல்லையேப்பா, அமுதா தான் எப்போதும் போல் கிளீன் பண்ண வந்தாள், வேறு யாரும் உன் ரூமுக்கு நீ இல்லாத நேரம் வருவதில்லையே” என்று கமலா அம்மா குழப்பமாய் சொல்ல “it’s ok மா, சும்மா தான் கேட்டேன்” என்று ஒப்புக்கு சொன்னான் நந்தன்.
“சரி நீ சாப்டுட்டு rest எடு”
“ம்ம்ம் சரிம்மா” என்றவன் கமலா அம்மா சென்றதும் தன் ரூமில் என்ன மாறுதல் என்று தெரிந்து கொள்ள எல்லா பொருட்களையும் ஆராய்ந்தான். சில பொருட்கள் இடம் மாறி இருந்தன. அமுதா அக்காவிற்கு நந்தனின் பொருட்களை எங்கே எப்படி வைப்பது என்று தெரியும், அப்புறம் எப்படி இவை இடம் மாறி உள்ளன. அதே போல் இந்த நறுமணம் எங்கேயோ பரீட்சையமான நறுமணம், எங்கே என்று யோசித்து யோசித்து பார்த்தான். ஏதோ ஒன்று நந்தனை உறுத்த cupboard ஐ திறந்து நம்பர் லாக்கரில் சத்யாவின் வீடியோக்கள் பத்திரமாக உள்ளனவா என்று செக் செய்தான். அவை பத்திரமாக உள்ளன என்று உறுதி படுத்தியபின் செக்யூரிட்டிக்கு call செய்தான். “அண்ணா நான் நந்தன் பேசுறேன், சந்தேக படும் படி யாராவது வீட்டிற்கு வருவதோ, அல்லது நமது வீட்டை நோட்டம் விடுவதோ இப்படி ஏதேனும் நடந்ததா?”
“இல்லைங்களே தம்பி, அப்படி ஏதாவது நடந்து இருந்தால் உடனே உங்களுக்கும், ராகவன் தம்பிக்கும் தெரியப் படுத்தி இருப்போமே”
“அந்த இரண்டு போலீசும் கவனக்குறைவாக இருந்திருக்க வாய்ப்பு உண்டா?”
“இல்லைங்களே நல்லா தானே கண்காணிக்கிறாங்க, ஏன் தம்பி ஏதாவது பிரச்சனையா?” என்றார்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா, கொஞ்சம் கவனமா இருங்க”
“சரிங்க தம்பி”
நந்தன் சாப்பிட்டுக்கொண்டே யோசித்தான். சாப்பிட்டு முடித்ததும் மதுவிற்கு வீடியோ call செய்தான்.
“என்ன வீடியோ call லாம் பண்ற?” என்று மது கிண்டலாய் கேட்க “எல்லாம் safe ஆக இருக்கிறீர்களா என்று செக் பண்றேன்” என்றான்.
“ஓஹ் தாராளமா செக் பண்ணு” என்று கட்டிலில் படுத்திருந்த சத்யாவிடம் மொபைலை கொடுத்துவிட்டு பால்கனி சென்றாள் மது.
மாத்திரை சாப்பிட்டு அரை தூக்கத்தில் இருந்தாள் சத்யா. “சாப்பிட்டியா?” என்றான் நந்தன்.
“ம்ம்ம்...” என்றாள்.
“மாத்திரை போட்டியா?”
“ம்ம்ம்....”
“உன்னை மதுகிட்ட விட்டுட்டு வந்துட்டேன்னு சந்தோஷமா இல்லை கோபமா?”
சத்யா பதில் ஏதும் சொல்லவில்லை.
“ஹ்ம்ம் ஆன்னா ஊன்னா கோழி குஞ்சு கூட்டுக்குள்ள அடை படுற மாதிரி ஏதோ கூட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிற, கொஞ்ச நாளா தான் நீ நாலு வார்த்தை பேசி கேக்குறேன், ஆனா அது கூட அதிர்ஷ்டம் இருந்தா தான், இல்லன்னா இப்படி தான் ம்ம்ம், ம்ம்ம் ன்னு பேசி முடிச்சிடுவ, சரி பரவால்ல, மாத்திரை போட்ருக்க போல, கண்ணெல்லாம் தூக்கமா இருக்கு, சரி மா, மது உன்னை நல்லபடியா பாத்துப்பா, don’t worry, சொல்ல மறந்துட்டேன், சுடில அழகா இருந்த இன்னைக்கு” என்று சொல்ல அவள் தூங்குவது போல கண்களை கசக்க “சரி டா, நீ தூங்கு, பாவம் தூங்குறவளை பிடித்து தொல்லை செய்கிறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.
அவன் பேசும் போது தூக்கம் எல்லாம் பறந்து விட்டது சத்யாவிற்கு, ஆனால் அவனை avoid பண்ணவும் முடியாமல், முழு மனதாக ஏற்கவும் முடியாமல் சத்யா செய்வதறியாமல் தவித்தாள், அதனால் தூங்குவது போல் நடித்தாள்.
நந்தனுக்கு ஒரு புறம் ரூமில் ஏற்பட்ட மாறுதல் தூங்க விடாமல் செய்தது. மறுபுறம் சத்யாவின் நினைவு. ஒரு வருடம் தாங்க முடியாது போலவே என்று நினைத்து கொண்டான். “ஆனால் நந்தா, தேவைப்படும் நேரங்களில் வைராக்கியமாக இருக்க உனக்கு கற்று கொடுக்க தேவை இல்லை. எத்தனை பெண்களிடம் பழகி இருந்தாலும் ஒரு வேலை, குறிக்கோள் என்று வந்தால் ஆறு மாதம், ஒரு வருடம் கூட எந்த பெண் சகவாசமும் இல்லாமல் இருக்க தெரிந்தவன் நீ. சத்யா மற்ற பெண்கள் போல் இல்லைதான். அவளை பிரிந்து இருப்பது கடினம் தான். ஆனால் ஒரு வருடத்திற்கு உன் ஆசைகளுக்கு கட்டுப்பாடு போட்டு தான் ஆக வேண்டும்” என்று நந்தனின் மனசாட்சி அவனுக்கு அறிவுறுத்தியது.
மறுநாள் நந்தன் சத்யாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல வேண்டும் என்று ரெடியாகி கொண்டு இருந்தான். காலை சிற்றுண்டி எல்லோருடனும் சாப்பிடலாம் என்று டைனிங் டேபிள் சென்றவன் அப்போது தான் தீபிகாவை பார்த்தான். “இவளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் கெடு உள்ளது, இன்னும் 2 நாட்கள் தான் உள்ளன, அதற்குள் போகவில்லை என்றால் இருக்கிறது அவளுக்கு” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு டைனிங் டேபிள் சென்று அமர்ந்தான். எல்லோரும் சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டிருக்க தீபிகா மட்டும் உணர்ச்சிகள் ஏதுமின்றி அமர்ந்திருந்தாள். நந்தன் அவளை பார்த்ததோடு சரி, பேசவில்லை. அவளை இப்படி ஒரு வார கெடுவிற்குள் வீட்டை விட்டு போக சொன்னது சரியா? என்று யோசித்தான். சரி தான் என்று மீண்டும் உறுதிபடுத்திக் கொண்டான். ரோஹித், கிரிஷ் அனைவரும் நந்தனை பார்த்து “என்ன நந்தா, என்ன பிரச்சனை? ஏன் இந்த போலீஸ் எல்லாம்?” என்று கேட்க நந்தன் சுருக்கமாக ஒரு காரணம் சொல்லி பயப்பட தேவை இல்லை, ஒரு எச்சரிக்கைகாக தான் என்று சொன்னான்.
திடீரென்று நந்தனுக்கு ஏதோ நினைவு வர தன் அறைக்கு சென்றான். நந்தன் சென்றதும் அவனுக்கு எப்படி எல்லாம் பிறந்தநாள் surprise கொடுக்கலாம் என்று அவன் வீட்டில் இருந்தோர் அனைவரும் discuss செய்தனர். தீபிகா மனம் நொந்தாள். “அவனுக்கு பிறந்தநாள் ஒன்று தான் கொறச்சல், இது வரை நான் ஆசைப்பட்டு எதுவுமே கிடைக்காமல் இருந்ததில்லை, எப்போதும் நான் தான் proposals reject செய்துள்ளேன், முதல் முறையாக என்னை ஒருவன் reject செய்துவிட்டான், இவனுக்கு பிறந்தநாளுக்கு ஐடியா கொடுக்க வேண்டுமாம்” என்று மனதிற்குள் நினைத்தபடி யாருடனும் பேச விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தாள்.
அறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று தீர்மானித்த நந்தன் மதுவிற்கு call செய்தான். “மது நான் வர கொஞ்சம் time ஆகும், ஒருவேளை ஹாஸ்பிடல் செல்லும் நேரத்திற்குள் நான் வரவில்லை என்றால் நீயே சத்யாவை ஹாஸ்பிடல் அழைத்து செல், நான் வந்து join பண்ணிக்கிறேன், but always be careful” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான். வியர்க்க விறுவிறுக்க தன் அறையை ஒருமுறை முழுவதுமாக சுற்றி பார்த்தான். மொபைல் எடுத்து ஒரு call செய்தான். தன் வீட்டின் வெளியே யாரையோ சந்தித்தான். மீண்டும் அறைக்கு வந்து சில வேலைகளை செய்தான்.
பிறகு காரை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றான். சத்யாவும் மதுவும் appointment வாங்கி காத்திருந்தனர்.
“சத்யா நீ அதிஷ்டசாலி தான், நந்தன் தன் நண்பர்களுக்கு, வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை சரி செய்யும் வரை தூங்க மாட்டான், ஆனால் உன்மீது அவனுக்கு இருக்கும் அன்பு இதை எல்லாம் தாண்டியது, அவன் எந்த பெண்ணிடமும் இந்த அளவிற்கு இறங்கி போய் உதவிகள் செய்து பார்த்ததில்லை, அவன் அன்பு கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்”
“ஆனால் மேடம் மற்ற பெண்களிடம் அவர் அப்படி இப்படி என்று..... கேள்விப்பட்டேன், என்ன தான் அன்பு இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் இப்படி உள்ளவரை அடைவதில் என்ன அதிஷ்டம் உள்ளது?”
“அது... முன்னாடி அவன் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் உனக்காக நெறைய மாறிவிட்டான் சத்யா, அவன் அன்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் இது தான் உனக்கு இருக்கும் தடையா?”
“அதுமட்டும் இல்லை மேடம்”
“மேடம் என்று சொல்லாதே சத்யா, மது என்றே என்னை நீ அழைக்கலாமே, of course நான் உன்னைவிட 6 வயது பெரியவள் தான், ஆனால் we are all friends now, மது என்றே கூப்பிடு”
சத்யா புன்னகையுடன் சரி என்று தலை அசைத்தாள்.
“ம்ம்ம் சரி சொல்லு, அது மட்டும் இல்லை என்றால்... வேறு என்ன தடை?”
“ஷ்யாம் தான், என் வாழ்க்கையில் வேறு ஒரு ஆண்மகன் வந்தால் அவன் வாழ்க்கையையும் நரகமாக்கி விடுவேன் என்று என்னை மிரட்டி உள்ளான்” என்றாள்.
அப்போது தான் ஹாஸ்பிடல் வந்து அவர்களுக்கு பின்னால் நின்ற நந்தன் இதை எல்லாம் கேட்டுவிட்டு மனதிற்குள் நினைத்தான். “இவை தான் உன் தடைகளா? அதனால் தான் அவ்வப்போது வேண்டாதது போல் நடந்து கொள்கிறாயா, ம்ம்ம்...இருக்கட்டும்” என்று ஏதோ யோசித்தான். அதற்குள் சத்யாவை டாக்டர் அழைக்க பின்னால் நின்ற நந்தனை கவனிக்காமல் அவர்கள் டாக்டர் அறைக்கு சென்றனர்.
நந்தனும் ஓரிரு நிமிடங்கள் கழித்து டாக்டர் அறை கதவை தட்டி உள்ளே சென்றான். சத்யாவிடம் முன்னேற்றம் உள்ளது என்று டாக்டர் சொல்லி அவள் தலைக்கட்டை பிரித்து விட்டார். Consultation முடிந்து எல்லோரும் மீண்டும் நந்தன் flat க்கு புறப்பட்டனர், மது காரில் வருவதாக சத்யா சொல்ல நந்தனும் சரி என்று ஏற்றுக்கொண்டான், அவள் ஏன் தன்னை தவிர்க்கிறாள் என்று தெரிந்ததும் நந்தன் “எல்லாம் நன்மைக்கே, சத்யா தன்னை பெண்கள் விஷயத்தில் தவறாக நினைப்பது ஒரு வகையில் நல்லது தான், ஷ்யாம் அவளை எச்சரித்தது, அதற்காக அவள் பயப்படுவது அவளுக்கு என்மீது இருக்கும் அன்பையும் அக்கறையையும் காட்டுகிறது, so எல்லாமே ஒரு வகையில் நன்மைக்கு தான்” என்று நினைத்துக்கொண்டான்.
Flat வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் ராகவனிடம் இருந்து நந்தனுக்கு call வந்தது. முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று ராகவன் சொல்ல நந்தன் flat க்கு வரும் படி ராகவனை அழைக்க “இல்லடா தனியா பேசணும்” என்று ராகவன் சொல்லி வெளியே ஒரு இடத்தில் சந்திக்க முடிவு செய்து நந்தன் அங்கே புறப்பட்டான்.
ராகவன் “நந்தா, இந்த ஷ்யாம் நாம் நினைப்பதை விட செல்வாக்கு பெற்றவன் தான்” என்றான் சோர்ந்த குரலில்.
“அவனை பற்றி தெரிந்த விஷயம் தானடா, இப்போ புதுசா நீ வருத்தப்படுற அளவுக்கு என்ன நடந்துச்சு”
“அந்த aston martin காரின் சொந்தக்காரர் உன் ஏரியாவில் இருக்கும் ஒரு அரசியல்வாதி, அவர் வீட்டை search செய்ய warrant க்கு apply செய்தேன், அதில் தாமதம், இதற்கிடையில் எனக்கு துறை மாற்றமும், இட மாற்றமும் வர வாய்ப்புள்ளது என்று மேலிடத்தில் இருந்து என் நண்பன் ஒருவன் தகவல் சொன்னான், இது எல்லாமே நான் அந்த அரசியல்வாதியின் வீட்டை search செய்யக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தோன்றுகிறது.
அது மட்டுமல்ல ஒரு anonymous call வந்தது. “இந்த drug விஷயத்தில் நீ ரொம்பவே துப்பு துலக்குகிறாய், வார இறுதியில் ஏதாவது club போனோமா, இரண்டு பேரை பிடித்தோமா, இரண்டு நாட்களில் ஜெயிலில் வைத்து விட்டோமா என்று இருக்க வேண்டும், அதை விட்டுட்டு அண்ணன் வீட்டுல search பண்ண search warrant கேக்குறியாமே, உயிர் மேல ஆசை இருந்தா இந்த side வராதே” என்று சொன்னான்.
“என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியாய் கேட்ட நந்தன் சிறு அமைதிக்கு பின் “ராகவா இந்த enquiry ய அப்படியே ஆறப்போடு” என்றான்.
“டேய் நான் இந்த anonymous call க்கு எல்லாம் பயப்படுறவனா இருந்தா இந்த போலீஸ் தொழிலுக்கே வந்திருக்க மாட்டேன்”
“உனக்கு பயம் இல்லை என்று தெரியும் ராகவா, ஆனால் உன்மீது எனக்கு அக்கறை உள்ளது”
“அதனால் இந்த விசாரணையை அப்படியே விட சொல்கிறாயா? சத்யாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டாமா? அவள் பாதுகாப்புடன் இருக்க வேண்டாமா? சத்யாவிற்கு நடந்தது வேறு ஒரு பெண்ணுக்கு நடக்காமல் காக்க வேண்டாமா?”
“எல்லாமே வேண்டும் தான் ராகவா, ஆனால் அதற்கு நீ உயிரோடு இருக்க வேண்டும், நான் உன்னை இந்த விசாரணையை அப்படியே விட சொல்லவில்லை, இப்போதைக்கு ஆறப்போடு என்று தான் சொல்கிறேன், நாம் என்னதான் விசாரித்தாலும் ஆள் பலத்தில் அவன் வெளியே வர வாய்ப்பு அதிகம், அதோடு இல்லாமல் பிரச்சனை இப்போது ஷ்யாம் அல்ல, அந்த அரசியல்வாதி, நாம் அரசியல்வாதியை குற்றவாளி ஆக்கி அவனை பிடிக்க நினைக்கிறோம், ஆனால் அந்த அரசியல்வாதியை ஒதுக்கி வைத்து விட்டு ஷ்யாமை பிடிக்க வேண்டும், அவனை வைத்து அந்த அரசியல்வாதியை வேண்டுமானால் பிடிக்கலாம், அது அடுத்த விஷயம், அதனால் ஷ்யாமை உள்ளே அனுப்ப வேண்டும், ஆனால் வெளியே வராத படி அனுப்ப வேண்டும், அதற்கு நமக்கு கால அவகாசம் வேண்டும், இது அதற்கான வாய்ப்பு என்று எடுத்துக்கொள், keep a low profile, let’s gather and build a strong case against him, trap him
and catch him, துறை மாற்றத்தை மட்டும் தடுத்தால் போதும்”
“சரி அதுவரை சத்யாவை இப்படியே ஒளித்து வைக்க போகிறாயா?”
“முடியாது தான், actually சத்யா விஷயத்தில் நான் மனதில் நினைத்திருந்த பல விஷயங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன், இந்த விஷயமும் நான் மாற்றிதான் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது”
“என்ன விஷயங்களை நினைத்தாய்? என்ன மாற்ற வேண்டி உள்ளது?”
“சொல்கிறேன், but அதுக்கு முன்னாடி ஒரு surprising happy news, சத்யா என் அத்தை மகள்”
“என்னடா சொல்ற?” என்று நந்தன் ஆச்சர்யமாக கேட்டான்.
“ஆமாம் டா, உனக்கு ஞாபகம் இருக்கா? Last year என்னோட அத்தை கவிதா அஹமதாபாத் ஹாஸ்பிடலில் இறந்து விட்டார்கள் என்று செய்தி வந்து நானும் அப்பாவும் சென்று அவர்கள் உடலை வாங்கி வந்து இறுதி காரியங்களை செய்தோமே”
“ஆமாம் ஞாபகம் இருக்கு"
"நேத்து சத்யாகிட்ட பேசும் போது தான் தெரிஞ்சுது, அவள் கவிதா அத்தையோட மகள் னு. அவங்க இறந்த நேரத்துல தான் அவ அந்த ரெட் லைட் விவகாரத்தில் மாட்டி இருந்திருக்கிறாள், அதனால் அவர்கள் இறந்த விஷயம் அவளுக்கு கால தாமதமாக தான் தெரிந்து உள்ளது”
“ரொம்ப ஆச்சர்யமா இருக்கு டா, சத்யா என்ன சொன்னாள்?”
“நான் சத்யாகிட்ட எதுவும் காமிச்சுக்கல டா”
“ஏன் டா, சொன்னா சந்தோஷப் பட்டு இருப்பாளே”
“அதனால தான் சொல்லல, அவளுக்கு என் மேல முழு நம்பிக்கை வரணும், மாமா பையன் அப்டிங்குற காரணத்துக்காக வரக்கூடாது, அதோட இல்லாம என் மனசுல ஒரு விஷயம் நினைச்சு இருக்கேன், அது நடக்குற வரைக்கும் சத்யாவை திருமணம் செய்வதாக இல்லை, அதனால் இப்போது எதற்கு இந்த அத்தை மாமா விஷயம் எல்லாம் சொல்லி குழப்ப வேண்டும்?”
“என்ன விஷயம் டா நினச்சு இருக்க?”
நந்தன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு சொன்னான்.
“அது நடக்கும்ன்னு நினைக்குறியா?” என்றான் ராகவன். “நடக்கும் டா” என்றான் நந்தன் உறுதியாக.
“Ok டா, அப்டின்னா நீ சொல்ற விஷயங்களை வைத்து பார்த்தால் ஒரு வகையில் இந்த விசாரணையை ஆறப்போடுவது நல்லது தான் என்று தோன்றுகிறது”
“yes இப்போதைக்கு துறை மாற்றத்தை தடை செய், அரசியல்வாதியை கைவிடு, சிறிது காலம் கழித்து ஷ்யாமை எப்படி வலையில் சிக்க வைக்கலாம் என்று யோசிப்போம், துரைசாமியிடம் கூட அவனை மாட்ட வைக்கும் சங்கதி ஏதோ ஒன்று உள்ளது, we will see”
“ok டா, ஒரே குழப்பமா மன வருத்தத்தோட வந்தேன், உன்கிட்ட பேசின பிறகு தெளிவா இருக்கேன், anyhow ஆபத்து விலகுற வரைக்கும் போலீஸ் பாதுகாப்பு இருக்கட்டும் உன் family க்கு, தருண், வள்ளி இவர்களை பற்றி யோசிக்க வேண்டும்”
“நான் யோசித்துவிட்டேன் ராகவா, நீ கவலைப்படாதே, இன்னொரு விஷயம், என் கணிப்பு சரி என்றால் இன்னும் சில நாட்களில் ஒரு அதிர்ச்சியான செய்தி என்னை பற்றி கேள்விப்படுவாய்” என்றான் நந்தன் எங்கேயோ பார்த்தப்படி.
“என்னடா சொல்ற? இன்னைக்கு என்னவோ புதிராவே பேசுற”
“Nothing to worry டா, you will see, சரி போலாமா” என்று நந்தனும் ராகவனும் விடை பெற்றனர்.
நந்தன் அன்று இரவு சத்யாவிற்கு call செய்யலாமா என்று யோசித்துவிட்டு வேண்டாம் என்று முடிவு செய்து 10.30 மணிக்கு தூங்க போனான். எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என்று தெரியவில்லை. அவன் மீது ஒரு கை படர்ந்தது.
Comments
Post a Comment