Sms ch 44 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 44
நந்தன் வீட்டிற்கு வந்ததும் நேரே தன் அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்துவிட்டான். கமலா அம்மா சத்தியமூர்த்தியிடம் சொன்னார்கள். “வந்துவிட்டான், கொஞ்ச நாட்களாக இரவில் வெளியே தங்காமல் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான், மீண்டும் ஆரம்பித்து விட்டான் போல” என்று விரக்தியாக சொல்லி கொண்டிருந்தார்கள்.
“ஏதாவது மனம் விட்டு பேசினாலும் பரவாயில்லை, சிறு வயதில் இருந்தே அவன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளமாட்டான், நாம் வருத்தப்படக்கூடாது என்று அவன் அம்மா அப்பா நினைவு வந்தால் கூட நம்மிடம் சிரித்து பேசி மழுப்பிவிடுவான், என்னமோ தெரியல, அவனுக்கு இந்த பழக்கவழக்கம் ஏதோ அவன் சோகங்களுக்கு வடிகால் மாதிரி ஆகி விட்டது” என்று வருத்தப்பட்டார் சத்தியமூர்த்தி.
“அவன் பிறந்தநாள் வேறு வருகிறது, என்னவோ வைகாசி மாதத்திற்குள் அவனுக்கு திருமணம் நடக்கும் என்று ஜோசியர் சொன்னார், அதற்கான அறிகுறி ஒன்றையும் காணவில்லை, என்ன ஒரே ஒரு வித்தியாசம் முன்பெல்லாம் திருமணம் வேண்டாம் என்று சொல்வான், இப்போது ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறான், வயசு தான் ஏறிட்டு இருக்கு, ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே” என்று கமலா அம்மா வருத்தப்பட்டார்கள்.
இரண்டு மணி நேரங்கள் தூங்கி இருப்பான் நந்தன். எழுந்து நேரத்தை பார்த்துவிட்டு குளித்துவிட்டு வந்தான். மீண்டும் ஹாஸ்பிடல் செல்ல dress செய்துகொண்டு கீழே வந்தான். சத்தியமூர்த்தியும் கமலா அம்மாவும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சிறிது நேரம் யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவர்களிடம் சென்றான்.
“வா நந்து, சாப்பிடுறியா? மதியம் கூட சாப்பிடாம தூங்க போய்ட்டியே, அம்மா போய் உனக்கு டிபன் ஏதாவது எடுத்து வரவா?” என்று கமலா அம்மா கேட்க “ஒரு காபியும், ரெண்டு தோசையும் குடுங்க அம்மா, நான் சாப்டுட்டு உடனே கிளம்பனும்”
“சரிப்பா இரு இப்போ வந்துடுறேன்” என்று சொல்லி கமலா அம்மா எழுந்து செல்ல “அப்பா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் சத்தியமூர்த்தியை பார்த்து.
சத்தியமூர்த்தி கேள்வியாய் நோக்கி “சொல்லுப்பா என்ன விஷயம்?”
“தொழில் போட்டியில் ஒருவருக்கு என்னுடன் கொஞ்சம் பகை, எவ்வளவோ பேசி பார்த்தும் விரோதம் பாராட்டி கொண்டிருக்கிறார், நேற்று வந்து மிரட்டிவிட்டு போனார், இதில் பயப்பட எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை, ஆனால் ராகவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னான், எதற்கு வீண் வம்பு, கொஞ்ச நாட்கள் போலீஸ் பாதுகாப்பு தருகிறேன் என்று, எனக்கு இதில் விருப்பமில்லை, நாம் பார்க்காத போட்டியா? பகையா? ஆனால் ராகவனுக்கு மனதில் என்ன பட்டதோ தெரியவில்லை, கொஞ்ச நாட்களுக்கு போலீஸ் வைத்துக்கொள் என்கிறான், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டு நிறுத்தினான்.
சத்தியமூர்த்தி “யாருப்பா அது?” என்று கலக்கமாக கேட்க “அது பிரச்சனை முடிந்த பிறகு சொல்கிறேன் அப்பா, உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”
“ராகவன் நம் நல்லதுக்கு தான் சொல்லுவான். போலீஸ் பாதுகாப்பை ஏற்று கொள்ளலாம் என்று தான் தோன்றுகிறது” என்றார்.
“அப்படின்னா ஓகே அப்பா, நான் ராகவனுக்கு தெரியப்படுத்தி விடுகிறேன். அம்மாவிடம் நீங்களே ஏதாவது சொல்லி புரிய வையுங்கள், அப்புறம் இன்னொரு விஷயம், நான் ராகவனுடன் ஒரு சில நாட்கள் தங்குவேன், இந்த தொழில் எதிரியை கண்காணிக்க வேண்டி உள்ளது, நீங்களும் அம்மாவும் வேறு ஏதாவது நினைத்து கண்டதை போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்” என்று அவன் சொல்லி முடிக்க கமலா அம்மா தோசையும் காபியும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
நந்தன் சாப்பிட்டுவிட்டு “வரேன் அம்மா, அப்பா அம்மாகிட்ட நான் சொன்னதெல்லாம் சொல்லிடுங்க” என சொல்லி புறப்பட்டான்
உடனே திரும்பி “தீபிகா எங்கம்மா?” என்றான். “வேலைக்கு தான்ப்பா போயிருக்கா? ஏதாவது சொல்லனுமா?” என்று கமலா அம்மா கேட்க “ஒண்ணுமில்லை அம்மா, பிறகு பேசிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் வெளியே செல்லும் போது தீபிகா எதிரே வந்தாள்.
“ஹலோ நந்தன், எங்க உங்களை ஆளையே பார்க்க முடியவில்லையே”
நந்தன் திரும்பி அவன் அம்மா அப்பா எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு தீபிகாவை garden ல் தனியாக அழைத்து சென்று பேசினான். “தீபிகா எதற்காக சத்யா வீட்டிற்கு சென்றாய்?”
“ஏன் சத்யாவும், அவள் வீடும் உங்களுக்கு மட்டுமே உரிமமா? மற்றவர்கள் அங்கே போவதோ, பேசுவதோ கொலை குற்றமா?” என்றாள் புன்னகையுடன்.
நந்தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு “எதற்கு நமக்கு நிச்சயதார்த்தம் என்று பொய் சொன்னாய்?”
“நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன், அதில் ஒன்றும் தவறு இல்லையே”
“தீபிகா பெரும்பாலும் நான் தன்மையாக பேசும் பக்கத்தை மட்டும் தான் நீ பார்த்துள்ளாய், காரணம் தெரிந்தோ தெரியாமலோ என்மீது உனக்கு ஆசை வர நான் காரணமாகி விட்டேன், என்னை நம்பி வந்த பெண்களை அசிங்கப்படுத்தி எனக்கு பழக்கமில்லை, ஆனால் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, எல்லோருக்குமே மற்றவர்களிடம் வெளிக்காட்டி கொள்ள தயங்கும் பக்கம் ஒன்று இருக்கும், எனக்கும் அப்படி ஒரு மறுபக்கம் உள்ளது, தெரிந்தோ தெரியாமலோ அதை பார்க்க முயற்சி செய்யாதே, விலகி இரு என்றால் விலகி இருக்க கற்றுக்கொள், இல்லை என்றால் நீ கற்பனை செய்து பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும், இன்னும் ஒரு வாரத்தில் நீ இந்த வீட்டை விட்டு சென்றிருக்க வேண்டும், this is final warning for you, வருகிறேன்” என்று சொல்லி நடந்த நந்தன் சிலை போல் நின்ற தீபிகாவிடம் திரும்பி வந்து சொன்னான். “சொல்ல மறந்துவிட்டேன், சத்யாவை நான் காதலிக்கிறேன், அவளுடன் தான் எனக்கு நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாம், bye” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டான்.
ஹாஸ்பிடல் வரும் போது மாலை 6 மணி ஆகி இருந்தது. கதவின் கண்ணாடி வழியாக சத்யாவை பார்த்துவிட்டு ராகவனிடம் திரும்பினான் நந்தன்.
“டாக்டர் என்னடா சொன்னார்?”
“சத்யா தருண் தருண்னு லேசா முனகினா, டாக்டர் யார் தருண்னு கேட்டார், அவங்க பையன்னு சொன்னேன், it means she is gaining conscious,
it’s a good sign” னு சொல்லிட்டு போனாரு டா.
“Good da, அப்போ அபாய கட்டத்தை தாண்டிட்டான்னு சொல்லு, நான் போய் டாக்டர்கிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி நந்தன் டாக்டர் அறைக்கு சென்றான்.
டாக்டர் அவனை உள்ளே வரவைத்து அமர சொல்லி பேசினார். “நந்தன் இனிமேல் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர்கள் breathing improve ஆகி உள்ளது, மகனின் பெயரை முனகி உள்ளார்கள், எப்படியும் இன்று இரவுக்குள் கண் விழித்து விடுவார்கள் என்று நம்புகிறேன், அவர்கள் உடலில் உள்ள அந்த drug ன் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் செயலிழக்கும் வரை அல்லது உடலை விட்டு வெளியேறும் வரை சிகிச்சைகளை தொடருவோம், remember அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள் என்று தான் சொன்னேன், முழுமையாக குணம் அடைய நாள் கணக்கோ, மாத கணக்கோ கூட ஆகலாம்” என்றார்.
“Thank you டாக்டர், அவள் கொஞ்சம் கொஞ்சமாக conscious gain பண்ணுவதே எனக்கு சந்தோஷமாக உள்ளது, மெதுவாக குணம் ஆனாலும் பரவாயில்லை, குணம் ஆனால் போதும்”
“அதெல்லாம் கண்டிப்பாக குணம் ஆகி விடுவார்கள்”
“Thank you டாக்டர்” என்று சொல்லி வெளியே வந்தான்.
ராகவனுடன் இரவு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மீண்டும் சத்யாவின் வார்டுக்கு வந்தான் ராகவன். “சரி ராகவா, நீ கிளம்பு” என்று நந்தன் சொல்ல “cctv எல்லாம் செக் பண்ணினதுல அந்த கார் 9 மணி போல அமைந்தகரையில் இருந்து புறப்பட்டுள்ளது, அதாவது நீ சத்யாவை காப்பாற்றிய அரை மணி நேரம் கழித்து, ஆனால் மேற்கொண்டு அந்த காரின் பயணம் cctv யில் கிடைக்கவில்லை, உன் ஏரியாவில் எங்கள் சந்தேக வட்டத்தில் உள்ளவர் யாரிடமாவது அந்த கார் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணயை ஆரம்பித்து உள்ளோம், பார்க்கலாம்” என்றான்.
“ம்ம்ம் சரி ராகவா, உன்கூட கொஞ்ச நாள் தங்கி இருப்பேன் என்பது போல் அப்பாவிடம் சொல்லி உள்ளேன், so நாளை பின்ன call பண்ணினால் அதற்கு தகுந்தாற் போல பேசு” என்ற நந்தன் தன் தந்தையிடம் சொன்ன காரணத்தை பற்றி முழுமையாக சொன்னான். ராகவன் ஏற்பாட்டில் காவலுக்கு இருக்கும் watchman உடன், இரண்டு போலீசும் நந்தன் வீட்டின் முன் நிற்க வைக்கப்பட்டனர். இரவு 10.30 மணி போல nurse சத்யா அறையில் இருந்து வேகமாக வெளியேறி டாக்டரை அழைத்து வந்தார்கள். நந்தன் திடுக்கிட்டு கதவின் கண்ணாடி வழியாக பார்க்க சத்யா கண் விழிக்க முடியாமல் முனகி கொண்டே சில நொடிகள் விழித்து பார்ப்பதும், மீண்டும் கண்களை மூடுவதுமாக விழிப்பு நிலைக்கு வர போராடிக் கொண்டிருந்தாள்.
டாக்டர் அவளை செக் செய்துவிட்டு நந்தனை உள்ளே அழைத்தார். “she is slowly gaining conscious”
என்று கூற நந்தன் புத்துயிர் வந்தது போல் சத்யா அருகில் சென்று அவள் தலைமாட்டில் கை வைத்து குனிந்து “சத்யா.... சத்யா.... “ என்றான். அவள் சில நொடிகள் கழித்து “ம்ம்ம்ம்....” என்றாள். பேசுங்கள் என்று டாக்டர் நந்தனிடம் சமிங்ஜை செய்ய நந்தன் மீண்டும் “சத்யா நான் நந்தன் பேசுகிறேன், are you ok?” எனக்கேட்டான். அவள் லேசாக கண்களை திறந்து நந்தனை பார்த்து சிரமப்பட்டு பேச முயன்றாள். “தருண்.....அவன் தருணை தேடி...... “ என்று சொல்லிகொண்டிருக்கும் போதே இருமல் வர ஆரம்பித்தது. “தருண் போலீஸ் பாதுகாப்பில் உள்ளான், வள்ளி, பாட்டி அனைவருமே பாதுகாப்பான இடத்தில் உள்ளனர், நீ கவலைப்படாதே” என்றான் நந்தன். அவள் மீண்டும் கண்களை மூடிவிட்டு “thanks” என்றபடியே தூங்க ஆரம்பித்தாள்.
டாக்டர் “இப்படியே மெதுவாக அவர்கள் சுயநினைவு வந்து தேற ஆரம்பித்து விடுவார்கள் நந்தன், இனி கவலை வேண்டாம், நாளை காலை வரை icu வில் இருக்கட்டும், பிறகு நார்மல் அறைக்கு மாற்றி விடலாம், நீங்களும் அதன் பிறகு அவர்கள் அருகிலேயே இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். Nurse நந்தனை வெளியே இருக்கும்படி சொல்லாமல் சொல்ல நந்தன் சத்யாவை நன்றாக ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே வந்தான்.
மறுநாள் காலை சத்யா நார்மல் அறைக்கு மாற்றப்பட்டாள். ஆனால் wire களும், சில மெடிக்கல் equipments ம் சத்யாவுடனேயே இருந்தன. Nurse அவ்வப்போது வந்து செக் செய்ய நந்தன் சத்யாவின் அருகிலேயே இருந்தான். அவளை சுற்றி இருந்த wire கள் குறைய ஆரம்பித்தன. இரண்டு நாட்களில் சத்யா அவ்வப்போது கண் விழிப்பதும், தூங்குவதும் என்று இருந்தாள், பெரிதாக பேசவில்லை. மது வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்த கஞ்சி, இட்லி எல்லாம் நந்தன் சத்யாவிற்கு ஸ்பூனில் ஊட்டிவிட்டான். ஒரு இயந்திர தனமாகவே இருந்தாள் சத்யா. ராகவன், மதுவை நந்தன் அறிமுகப்படுத்தியும் அவள் பெரிதாக அவர்களிடம் பேசவோ, சிரிக்கவோ இல்லை. நந்தனிடம் கூட தருணை பற்றி கேட்பாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
நந்தன் கவலையுடன் டாக்டரை சந்தித்து சத்யாவின் இயந்திர தனமான நடத்தையை பற்றி சொன்னான். “நந்தன், அவர்களுக்கு நடந்த விஷயம் அந்த மாதிரி, drug overdose விளைவுகள், அதை counteract செய்ய நாங்கள் கொடுத்த மருந்துகள் என்று she is highly sedated, இந்த மருந்துகள் அவர்கள் உடம்பை விட்டு ஒரு வாரத்தில் நீங்கினாலும் கூட இந்த மருந்துகளினால் அவர்கள் உடல்நிலையில் ஏற்பட்ட தாக்கமும், நடந்த சம்பவத்தினால் அவர்கள் மனநிலையில் ஏற்பட்ட தாக்கமும் ஒரு சில நாட்களில் சரியாகும் விஷயமல்ல, ஒரு வாரமோ, மாதமோ, ஏன் ஒரு வருடம் கூட ஆகலாம், இப்படி இயந்திர தனமாக இருப்பது, வாந்தி, மயக்கம், குழப்பம், திடீரென்று கெட்ட கனவு கண்டது போல் கத்துவது, மாற்றி மாற்றி பேசுவது என்று அவர்கள் குணநலன்களில், செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் தெரியும், அவர்கள் இதை எல்லாம் overcome செய்து முழுமையாக குணம் அடைவதில் முக்கிய பங்கு நாங்கள் தரும் மருந்துகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பமும் நட்பும் அவர்களின் குண வேறுபாடுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு காட்டும் அன்பிலும், பரிவிலும் தான் உள்ளது, அவர்கள் உடல்நிலை தேறியதும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். கண்டிப்பாக அவர்கள் முழுமையாக குணம் ஆவார்கள், ஆனால் அதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும்.
சத்யாவை நீங்கள் discharge செய்து அழைத்து செல்வதென்றால் கூட அழைத்து செல்லலாம், இன்னும் சில நாட்கள் ஹாஸ்பிடலில் வைத்து பார்க்கிறீர்களா? இல்லை discharge செய்ய விரும்புகிறீர்களா?” என்று டாக்டர் கேட்க நந்தன் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு “discharge செய்து கொள்கிறேன் டாக்டர்” என்றான். டாக்டர் மேலும் சில அட்வைஸ்கள் கொடுத்தபின் நந்தனுக்கு விடை கொடுத்தார்.
மாலை 4 மணி இருக்கும். பில் எல்லாம் செட்டில் செய்துவிட்டு Discharge sheet வாங்கி கொண்டு வந்த நந்தன், மருந்துகளை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு ராகவன், மதுவிற்கு தகவல் தெரிவித்து விட்டு சத்யாவை புறப்பட சொன்னான். இயந்திர தனமாக சத்யா எழுந்து நடக்க “சத்யா இந்த ஹாஸ்பிடல் கௌனை மாற்றிவிட்டு உன் சேலையை கட்டிக்கொள்” என்று ஷ்யாமின் dna விற்காக forensics சென்று திரும்பி வந்து ஹாஸ்பிடல் கிளீனிங் staff ஆல் துவைத்து மடித்து வைத்திருந்த சேலை, மற்றும் இதர ஆடைகள் கொண்ட பையை அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு அறைக்கு வெளியே வந்து காத்திருந்தான்.
“கொஞ்சம் dress வாங்கி வைத்திருக்கலாம், அதை மறந்துவிட்டேன்” என்று தன்னை தானே நொந்துகொண்டவன் சிறிது நேரம் கழித்து கதவு திறக்கப்பட தலையில் கட்டுடன் கண்களில் வெறுமையாக நின்ற சத்யாவை பார்த்து ஒரு பெருமூச்சுடன் “பிழைத்ததே பெரிய விஷயம்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அவளை அழைத்து சென்றான்.
அரை மணி நேர பயணத்திற்கு பின் ஒரு பெரிய gated apartment குள் காரை செலுத்தினான். லிப்டில் அந்த 10 வது மாடிக்கு சென்று சில flat களை கடந்து ஒரு flat முன் நின்றான் நந்தன். சாவியை கொண்டு திறந்து சத்யாவை உள்ளே அழைத்து சென்றான். சத்யா ஏதோ உணர்வு வந்தவள் போல் “இது யார் வீடு? ஏன் அமைந்தகரைக்கு அழைத்து செல்லவில்லை? என்று கேட்டாள்.
அது ஒரு studio flat. பெரிய படுக்கை, cupboard, டாய்லெட், பாத்ரூம், சில சோஃபாக்கள், chair கள், ஒரு பக்கத்தில் சின்ன கிட்சன், இன்னொரு பக்கத்தில் பால்கனி என்று பார்க்க ஒரே ஒரு அறை போல தோன்றினாலும் பரந்து விரிந்து நல்ல வெளிச்சம் காற்றோட்டத்துடன் modern and stylish ஆக இருந்தது அந்த flat. Curtain களை திறந்து வைத்துக்கொண்டே சத்யாவிற்கு பதில் சொன்னான். “இப்போ அமைந்தகரை அவ்வளவு பாதுகாப்பான இடம் இல்லை சத்யா, இது என்னோட flat தான், நீ இங்கே இருப்பது தான் இப்போதைக்கு நல்லது” என்று சொல்லிக்கொண்டே படுக்கையை தட்டிவிட்டு படுக்கை அருகே இருந்த ஜன்னலை திறந்துவிட்டான். சென்னை நன்றாக தெரிந்தது அந்த ஜன்னல் வழியாக. “நீ rest எடு சத்யா, நான் ராகவனுக்கு call செய்துவிட்டு வருகிறேன்” என்று பால்கனி சென்றான். சத்யாவிற்கு அவனுடன் தனியாக தங்க பயமாக இருந்தது.
Comments
Post a Comment