Sms ch 45 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 45
நந்தன் ராகவனிடம் பேசிவிட்டு வருவதற்குள் சத்யா கட்டிலில் படுத்து தூங்கி விட்டாள். நந்தன் அவளை புன்னகையுடன் பார்த்துவிட்டு “பாவம் தூங்கிட்டே தான் இருக்கா, sedatives effect னு டாக்டர் சொன்னாரே” என்று மனதிற்குள் நினைத்தவன் செக்யூரிட்டிக்கு call செய்தான். சத்யாவை disturb செய்யாமல் மீண்டும் பால்கனி சென்றே பேசினான். “அண்ணா நான் 134b ல இருந்து நந்தன் பேசுறேன்” என்றான்.
“சொல்லுங்க தம்பி” என்றார் அவர்.
“நம்ம apartments ல யாராவது வீட்டுலயே சமைச்சு சாப்பாடு delivery பண்றவங்க இருக்காங்களா? கொஞ்சம் சுத்தமா ஆரோக்கியமா இருக்கணும், அதான் கேக்குறேன்” என்றான்.
“இருக்காங்க தம்பி, நம்பர் தரேன், நீங்களே பேசி பாருங்க” என்று நம்பர் கொடுத்தார்.
நந்தன் நம்பரை வாங்கி பேசினான். 134b வாசலில் வைத்து விட்டு missed call கொடுக்கும் படி சொன்னான்.
இரவு 7.30 மணிக்கு door delivery வந்தது. இட்லி, சாம்பார், சட்னி என்று. நந்தன் எடுத்து உள்ளே வைத்துவிட்டு சத்யா எழுந்திரிப்பதற்காக காத்திருந்தான். டிவி பார்க்கலாம் என்றால் சத்யாவிற்கு disturb ஆகும் என்று ஏதேதோ புத்தகங்கள் படித்து கொண்டிருந்தான்.
8.30 மணி போல சத்யா எழுந்தாள். எதுவும் பேசாமல் ஜன்னல் வழியாக மின்சார விளக்கொளியில் நனைந்து இருந்த நகரத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது பிறந்தநாள் அன்று அவள் பேசியதை போன்று அதற்கு முன் அவள் பேசி நந்தன் பார்த்ததில்லை. இப்போது சுத்தமாக பேச மாட்டேன் என்கிறாள். இவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த ராஸ்கல் மட்டும் கையில் கிடைத்தால் அவனை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது, சத்யாவை காப்பாற்றும் முயற்சியில் அவனை கை நழுவ விட்டுவிட்டேன். இருக்கட்டும் சட்டத்தின் முன் அவனை நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். ஆனால் அவனுடைய பணபலமும் அரசியல் பின்புலம் தான் அவனை தப்பிக்க வைக்கிறது. எப்படி அவனுக்கு அதிக பட்ச தண்டனை வாங்கி கொடுக்க முடியும்? என்றெல்லாம் நந்தன் சோஃபாவில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்க சத்யா அவனை பார்த்துவிட்டு பாத்ரூம் சென்றாள். சிறிது நேரம் கழித்து அவள் வந்ததும் திரும்ப கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
“ஹேய் சத்யா, சாப்டுட்டு தூங்கு” என்று சத்யாவை சாப்பிட அழைத்தான். டீப்பாயில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து ஒரு தட்டில் இட்லி சாம்பார் எல்லாம் எடுத்து கொடுத்து சாப்பிட வைத்தான். சத்யா எதுவும் பேசாமல் இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க சென்றாள். “சத்யா இரு, இந்த tablets சாப்டுட்டு தூங்கு” என்று நந்தன் மாத்திரைகளை எடுத்து கொடுத்தான். சத்யாவும் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தூங்க போனாள்.
“எதுவுமே பேச மாட்டேன் என்கிறாள், நேருக்கு நேராக பார்க்காமல் எப்போதும் எங்கேயோ ஏதோ சிந்தனையிலேயே இருப்பது போல் பார்க்கிறாளே” என்று நந்தன் வருத்தப்பட்டான்.
சத்யா கட்டிலில் தூங்க நந்தன் சோஃபாவில் தூங்கினான். இரவு 12 மணி போல் சத்யா எழுந்து பாத்ரூம் சென்றாள். பாதி தூக்கத்தில் இருந்த நந்தன் திரும்பி வந்துவிட்டாளா என்று நிமிர்ந்து பார்த்தான். பாத்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது. குழாயில் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டது. நந்தனும் மீண்டும் தூங்க ஆரம்பித்தான். திடீரென்று விழிப்பு வர இன்னும் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதே, எவ்வளவு நேரமாக பாத்ரூமில் இருக்கிறாள் என்று வியந்து நேரத்தை பார்த்தான். மணி 12.30 என்று காட்டியது. அரை மணி நேரம் ஆகிவிட்டதா? திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தவன் “இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள்? ஒருவேளை மயக்கம் ஏதாவது வந்துவிட்டதா?” என்று யோசித்து கொண்டே பாத்ரூம் அருகே சென்றான். சிறு தயக்கத்தின் பின் “சத்யா.... சத்யா....” என்றான்.
எந்த பதிலும் இல்லை, நந்தனுக்கு இப்போது பயம் அதிகரித்தது. “சத்யா என்ன பண்ற? கதவை திற” மீண்டும் பதிலே இல்லை. நந்தனுக்கு பதட்டம் அதிகமாகியது.
கதவை நன்றாக தட்டினான். “சத்யா சத்யா இப்போ கதவை திறக்க போகிறாயா? இல்லை நான் உடைத்து விட்டு உள்ளே வரவா?” என்றான்.
பதில் இல்லை. நந்தன் தன் முழுக்கை சட்டையின் கையை நன்றாக மடித்து விட்டுக்கொண்டு கதவை உடைப்பது போல் மோதினான். இரண்டு முறை மோதிய பிறகு சத்யா கதவை திறந்தாள்.
தலை முதல் கால் வரை துப்புரவாக நனைந்து தண்ணீர் சொட்ட சொட்ட உணர்ச்சியற்று ஏதோ பொம்மை போல நின்று கொண்டிருந்தாள் சத்யா. அவளை அந்த கோலத்தில் பார்த்த நந்தன் அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் ஓரிரு நிமிடங்கள் தடுமாறினான். சத்யா எந்த உணர்ச்சியும் காட்டாமல் தண்ணீர் சொட்ட சொட்ட கட்டிலுக்கு சென்றாள். நந்தன் பயந்தது போலவே கட்டிலில் ஏறி படுக்க முயன்றாள்.
நந்தன் சுதாரித்து கொண்டு அவள் கையை பிடித்து நிறுத்தினான். “சத்யா என்ன இது? இவ்வளவு நேரம் shower ல் இப்படியே நின்று கொண்டிருந்தாயா? அரை மணி நேரமாகவா? என்ன செய்து இருக்கிறாய் என்று உனக்கு புரிகிறதா? ஏற்கனவே உடம்பு சரி இல்லை.... “ என்று கோபமாக திட்ட போனவன் திட்ட வேண்டாம் என்று கட்டுப்படுத்திகொண்டான், கோபப்படாமல் பேச வேண்டும் என்று முடிவு செய்தான்.
“என்னாச்சு சத்யா? சளி பிடித்தால் என்னாவது? எதற்காக இப்படி நடந்து கொண்டாய்?” என்று தன்மையாக கேட்டான்.
“குளிக்கணும் போல இருந்துச்சு” என்று நேராக இருந்த சுவரை பார்த்தபடியே சொன்னாள்.
நந்தன் அவளை கேள்வியாய் பார்த்துக்கொண்டே cupboard திறந்து ஒரு turkey towel எடுத்து வந்து அவளிடம் கொடுத்து தலையை துவட்ட சொன்னான். “தலைல கட்டு கூட இன்னும் பிரிக்கல, அதுக்குள்ள இப்படி போய் இவ்வளவு நேரம் தண்ணீரில் நிற்கலாமா?”
அவள் துண்டை தலையில் வைத்துக்கொண்டு துவட்டாமல் அப்படியே நின்றாள். நந்தன் அவள் அருகே சென்று துண்டை வாங்கி அவள் தலையை துவட்டி விட்டுக்கொண்டே கேட்டான். “என்னாச்சு டா உனக்கு? நான் இப்போ எந்திரிச்சு பாக்கலன்னா எவ்வளவு நேரம் தண்ணீரில் நின்றிருப்பாய்?” என்றான்.
“எனக்கு தூக்கம் வருது, நான் படுத்துக்கட்டுமா?” என்றாள்.
நந்தன் கண்கள் கலங்கின. “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” என்று சொல்லி cupboard ஐ திறந்தவன் ஸ்ரேயாவிற்கு அவன் வாங்கி தந்த இரண்டு சேலைகளில் ஒன்றை எடுத்தான். Plain yellow colour transparent
chiffon saree அது. அதற்கு என்றிருந்த blouse, inskirt அனைத்தும் எடுத்து அவளிடம் கொடுத்து “dress மாத்திக்கோ, ஜலதோஷம் பிடிச்சிட போகுது” என்று சொல்ல அவள் அதை வாங்கிக்கொண்டு பாத்ரூம் நோக்கி நடந்தாள்.
“ஹேய் இரு இரு, நீ பாட்டுக்கு திரும்ப அங்க போய் தண்ணில நிக்காத, நீ இங்கயே dress மாத்திக்கோ, நான் பால்கனியில் காத்திருக்கிறேன்” என்று சொல்லி பால்கனியில் சென்று காத்திருந்தான். சத்யா அவன் பின்னால் சென்று “இது யாரோடது?” என்றாள்.
“அது இப்போ ரொம்ப முக்கியமா? நான் வாங்கியது தான், கட்டிக்கொள்” என்றான்.
“நான் இந்த மாதிரி saree எல்லாம் கட்ட மாட்டேன், ரொம்ப transparent ஆ இருக்கு, இந்த blouse போடுறதும் ஒன்னு தான், போடாம இருக்கறதும் ஒன்னு தான், இது என்ன முதுகு பக்கத்தில் முடிச்சு, sleeveless blouse, எனக்கு வேண்டாம்” என்று அருவருப்பாய் அவனிடமே திருப்பி கொடுத்தாள்.
“சத்யா நாளைக்கு உனக்கு உன் விருப்பப்படி dress வாங்கலாம், இப்போதைக்கு இது போன்ற saree, blouse தான் உள்ளன, இக்கட்டான சூழ்நிலையில் இவ்வளவு யோசிக்க வேண்டாம், please ரொம்ப நேரம் இப்படி தண்ணீர் சொட்ட சொட்ட நிற்காதே, போய் மாத்திக்கோ” என்றான்.
சத்யா திரும்பி வந்து அந்த saree யை கட்டிக்கொண்டாள். Blouse எல்லாம் கனகச்சிதமாக அவளுக்கு பொருந்தியது. ஆனால் அந்த sleeveless, முதுகு பக்கம் கொஞ்சமாக மட்டுமே துணி கொடுத்து தைத்தது போன்று இருந்த முடிச்சு எதுவும் சத்யாவிற்கு பிடிக்கவில்லை, முந்தானையை எடுத்து blouse, தோள், கைகள் தெரியாத வண்ணம் போர்த்திகொண்டாள்.
“கட்டிட்டியா? உள்ள வரலாமா?” என்று நந்தன் பால்கனியில் இருந்து கேட்க சத்யா மீண்டும் ஒருமுறை எதுவும் தெரியவில்லை என்று உறுதி படுத்திக்கொண்டு “ம்ம்ம் வரலாம்” என்றாள்.
நந்தன் அவள் போர்த்தி இருந்ததை பார்த்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு “இப்படி உக்காரு” என்று அவளை கட்டிலில் உட்கார வைத்துவிட்டு அவன் நின்று கொண்டு துண்டை எடுத்து அவள் தலையை துவட்ட போனான். “இல்லை நானே துவட்டிக்கிறேன்” என்று விலக முயன்றாள்.
“நீ துவட்டின லட்சணத்தை தான் பாத்தேனே”என்று சொல்லி அவள் தலையை துவட்டினான்.
“சரி எதற்காக போய் இப்படி தண்ணீரில் நின்றாய், இந்த மருந்துகள் சாப்பிடுவதால் உனக்கு எதுவும் புரியவில்லையா? இல்லை தெரிந்தே தான் இப்படி செய்தாயா?” என்ற கேள்விக்கு சத்யாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
கொஞ்ச நேரம் தலையை துவட்டிவிட்டு துண்டை நீக்கி அவளை பார்த்தான். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “என்ன சத்யா? இப்போ எதுக்கு அழற?” என்று அவன் கேட்க அவளுக்கு கண்ணீர் அதிகமானது.
நந்தன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். அவள் கண்ணீரை துடைத்து அவளை அணைத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவள் என்ன நினைப்பாளோ என்று தயங்கி சொல்வதறியாமல், செய்வதறியாமல் நின்றான்.
நிமிடத்திற்கு ஒரு முறை அவளின் கண்ணீரின் வேகமும் அழுகையின் சத்தமும் கூடியது. நந்தன் அவள் கண்களை துடைத்து அவளுக்கு முன்னால் முட்டி போட்டு அவளை நேராக பார்த்து “என்னாச்சு டா? என்கிட்ட சொல்லலாம் அல்லவா?” என்றான்.
அவள் அழுகைக்கு நடுவே சொன்னாள். “அவன்.... அவன் என்னை தொட்டது பிடிக்கல, உடம்பெல்லாம் ஒரு மாதிரி அருவருப்பா தோணுது, எப்போடா குளிப்போம்னு இருந்துச்சு, அதான் குளிக்க போனேன், ஆனா எவ்வளவு நேரம் குளிச்சாலும் உடம்பெல்லாம் அழுக்கா இருக்க மாதிரி தோணுது, நீங்க வரலைன்னா அவன் இன்னும் என்னை எங்க எல்லாம்... எப்படி எல்லாம்....” என்று சொல்ல முடியாமல் தேம்பி தேம்பி அழுதாள்.
நந்தனுக்கு அவனை நினைத்து பார்த்தால் தன் மீதே கோபம் வந்தது. தன்னை கையாலாகதவன் போல் எண்ணினான், அவனை அன்றே கொன்றிருந்தால் இப்படி தோன்றாதோ? என்னவளை இப்படி அழ வைத்துவிட்டானே, அவளை பாதுகாக்காமல் விட்டுவிட்டேனே என்று ஏதேதோ தோன்றியது. எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி கொண்டு சத்யா இப்படி நனைந்துவிட்டு மேலும் மேலும் அழுதால் உடம்புக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது, முதலில் அவளை சமாதானபடுத்துவோம் என்று எண்ணி “சத்யா please, அழாத மா, அதான் எதுவும் நடக்கல இல்லை, நீ ஏன் இவ்வளவு feel பண்ற?” என்றான்.
சத்யா அழுகைக்கு நடுவே கோபமாக அவனை பார்த்தாள். “எதுவும் நடக்கலையா? அவன் எவ்வளவு அருவருப்பானவன்? அவன் என்னை தொடுவது ஒன்றுமில்லாத விஷயமா?” என்று கேட்டு மீண்டும் அழுதாள்.
“ஒன்றுமில்லாத விஷயம் என்று நான் சொல்லவில்லை, கண்டிப்பாக கஷ்டமாக தான் இருக்கும், ஆனால் அதையே நினைத்து நீ உன் உடல்நலனை கெடுத்து கொள்ளலாமா?”
சத்யா கட்டிலில் இருந்து எழுந்து நடந்தாள். நந்தனும் எழுந்து நின்றான். “உங்களுக்கு அவனை பற்றி முழுமையாக தெரியாது நந்தன், என்னை எப்படி எல்லாம் சித்திரவதை செய்துள்ளான் தெரியுமா? கௌஷிக் போன பிறகு நெறைய முறை என்னை கணக்கு காண்பிக்க அழைப்பான், அப்போது அவன் கெட்ட எண்ணம் எனக்கு புரியவில்லை, துரைசாமி சொன்ன பிறகு தான் புரிந்தது, பிறகு வீட்டிற்குள் புகுந்து ஊசி போட முயற்சித்தான், நல்லவேளை அன்று என் அம்மா என்னை காப்பாற்றினார்கள், இவன் தொல்லையே வேண்டாம் என்று மும்பை வந்தேன், அங்கேயும் என்னை ஆள் வைத்து கடத்திக்கொண்டு போய் ரெட் லைட் ஏரியாவில் என்னை தங்க வைத்து....” என்று மீண்டும் அழுதாள்.
நந்தன் அமைதியாக அவள் பேசும் வரை காத்திருந்தான். அவள் அழுகையை கட்டுப்படுத்தி தொடர்ந்தாள். “இவன் அப்போ பஞ்சாப் ஜெயிலில் இருந்தான், யாரோ இவன் நண்பனாம், மும்பையில் பெரிய அரசியல் புள்ளியின் மகனாம், அவனை வைத்து என் ஆடைகளை கலைந்து அரைகுறையாக என்னை படுக்க வைத்து வீடியோ எடுத்தான்....” மீண்டும் அழுகை அதிகமானது. நந்தன் தன் கைகளை இறுக மூடினான். கோபமும் ஆத்திரமும் அதிகமானது நந்தனுக்கு.
“பிறகு வேறு ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்து அதையும் வீடியோவாக்கி நான் தான் உடலுறவு கொள்வது போல் மாற்றி.... அந்த வீடியோவை நெட்டில் பரவ விட்டார்கள், போலீஸ் என்னை விபச்சார வழக்கில் கைது செய்தார்கள், ஆனால் யாரோ ஒரு பெண் அதிகாரி என் புண்ணியத்தை வாங்கி கொண்டாள், அவள் தயவால் அந்த வழக்கிலிருந்து விடுவிக்க பட்டேன், நெட்டில் என் வீடியோ பரவாமல் தடுத்தாள். கௌஷிக் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்க விட்டிருப்பானா என்று தோன்றும், ஆனால் அவன் தான் சுனிதாவுடன் சென்றவனாயிற்றே என்று கோபமாக வரும், என் கணவன் நல்லவனா, கெட்டவனா என்று தெரியாமல் அவன் நினைவு வரும் போதெல்லாம் அவனுக்காக அழுவதா? கோபப்படுவதா என்று தெரியாமல் குழப்பத்திலேயே என் நாட்கள் ஓடிவிடும்.
சரி அவரை விடுங்கள், வீட்டிற்கு நடைபிணமாக வந்த நான் தற்கொலை செய்யபோனேன், தருணை பார்த்து மனம் மாறினேன், வள்ளி அக்கா, பாட்டி இல்லை என்றால் நான் ஒருவேளை தருணையும் கொன்றுவிட்டு நானும் இறந்திருப்பேன், என் அம்மா அப்பா எனக்காக விட்டுவிட்டு போன மிகப்பெரிய சொத்து பாட்டி, வள்ளி அக்கா தான். அவர்கள் இல்லை என்றால் போய் சேர்ந்திருப்பேன், ஆனால் அன்றே போய் சேர்ந்திருக்க தான் வேண்டும் போல, மீண்டும் அவன் கையில் மாட்டி இப்படி அசிங்கப்படாமல் இருந்திருக்கலாம்” என்று அழுதாள்.
“அப்படி என்றால் மும்பையில் அவள் ஒருவனுடன் இருந்தது அவளை அசிங்கப்படுத்த ஷ்யாம் ஜோடித்த வீடியோ தானா?” என்று மனதிற்குள் கொதித்த நந்தன் அவள் அழுவதை பொறுக்கமுடியாமல் அவள் அருகே சென்று “சத்யா please, இப்படி அழுது கொண்டே இருந்தால்........ அவனை பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “இல்லை நந்தன் அவனை பற்றி எப்படி நினைக்காமல் இருக்க முடியும், துரைசாமி என்னை பிளாக்மெயில் செய்வார், உன் மும்பை வீடியோ உள்ளது, இன்னும் நெறைய வீடியோக்கள் உள்ளது என்று, மும்பை வீடியோ தவிர வேறு என்ன வீடியோ இருக்க முடியும் என்று கேட்டதற்கு நீயும் உன் கணவனும் இருக்கும் வீடியோக்கள் என்பார், நானும் என் கணவனும் இருக்கும் வீடியோக்களா? என்ன உளறுகிறார்? காசுக்காக இப்படி கூட பொய் சொல்வாரா? என் கணவனுடன் நான் இருந்த நாட்கள் எவ்வளவு அழகானவை? எவ்வளவு அந்தரங்கமானவை? எனக்கும் அவருக்குமான புரிதல், மகிழ்ச்சி. இதை வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? அந்த அன்பை மூன்றாவதாக ஒருவன் பார்க்க முயற்சி செய்தானா? அதை வீடியோவாக்க தைரியம் உள்ளவன் எவன் என்று நான் யோசித்து ஷ்யாமின் முகம் கண்முன்னால் வருவதுண்டு. ஆனால் அப்போது கூட அப்படி எல்லாம் இருக்காது, என் கணவன் நினைவாக இருக்கும் அந்த புனிதமான நாட்களை வேறு எவனாலும் திருட முடியாது, துரைசாமி காசுக்காக பொய் சொல்கிறார் என்று நினைத்து மனதை தேற்றி கொள்வேன்.
ஆனால்... ஆனால்.....அந்த நாய் அன்று சொன்னான், அவன் என்னை முழுவதுமாக பார்த்திருக்கிறானாம், எதற்கு மூடி மறைக்கிறாய், நான் தான் நீயும் கௌஷிக்கும் ஒன்றாக இருந்த வீடியோக்களை பார்த்திருக்கிறேனே என்று சொன்னான். எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அப்படியே செத்துவிடலாம் போல் தோன்றியது, என் மீதே எனக்கு அருவருப்பாக தோன்றியது, இந்த உடலை அப்படியே தேய்த்து தேய்த்து கரைத்து விடக்கூடாதா என்று தோன்றியது” என்று சத்யா வெறி பிடித்தவள் போல் தன் கைகளை தேய்க்க ஆரம்பித்தாள்.
நந்தன் கண்கள் கலங்க கேட்டு கொண்டிருந்தவன் சத்யாவின் செய்கை பார்த்து அதிர்ந்தான். “சத்யா stop it, என்ன செய்கிறாய்?” என்று கேட்டு அவள் கைகளை பிடித்து தடுக்க முயன்றான்.
சத்யா போர்த்தி இருந்த சேலையை நார்மலாக மாற்றிவிட்டு தன் இரு கைகளையும் மாறி மாறி பரபரவென்று தேய்க்க ஆரம்பித்தாள். கீறிக்கொண்டாள். பைத்தியம் பிடித்தவள் போல் இங்கும் அங்கும் சுற்றி பார்த்தாள். Kitchen sink ல் இருந்த scrubber ஐ எடுத்து தன் கழுத்தை அழுத்தி தேய்க்க ஆரம்பித்தாள். “இங்கே தான் அந்த நாய் முகர்ந்து பார்த்தது” என்று கழுத்தை அதிகமாக தேய்த்தாள். நந்தன் அந்த scrubber ஐ அவளிடம் இருந்து பிடுங்கி கீழே எரிந்தான். சத்யா வேறு என்ன கிடைக்கும் என்பது போல் ஆவேசமாக அடுப்படியை தேடினாள். கத்தி ஒன்று கையில் சிக்கியது. அதை எடுத்து தன் கை முழுவதும் தேய்க்க போனாள். நந்தன் பயந்து கத்தியை அவளிடம் இருந்து பிடுங்க முயற்சி செய்தான். “சத்யா please என்ன இது? கத்தியை என்னிடம் கொடுத்துவிடு” என்று அவள் விபரீதமாக எதுவும் செய்ய கூடாதே என்று தவித்தான்.
“இருங்க நந்தன், கொஞ்சம் தேய்த்தால் இந்த அருவருப்பு தன்மை போகும்” என்று மீண்டும் தேய்க்க போனாள். நந்தன் கத்தி இருந்த அவளின் கையை பிடித்து கத்தியை பிடுங்க முயன்றான். அவள் ஆவேசமாக அவனையே தள்ளிவிட்டு மீண்டும் தேய்க்க ஆரம்பித்தாள். கீழே விழ இருந்த நந்தன் சமாளித்து திரும்பியவன் கத்தியை அவள் கழுத்துக்கு கொண்டு போவதை பார்த்து வேகமாக அவளை நெருங்கி கன்னத்தில் பளார் என்று அறைய கத்தி கீழே விழுந்தது. கன்னத்தில் கை வைத்து கண்களில் கண்ணீருடன் நந்தனை பார்த்தாள் சத்யா.
நந்தன் அவளை முறைத்துவிட்டு கத்தியை எடுத்து cupboard லாக்கரில் வைத்து நம்பர் லாக் போட்டு பூட்டினான். திரும்பி வந்து கண்களில் கண்ணீருடன் அறைந்த கன்னத்தில் கைவைத்து நின்று இருக்கும் சத்யாவை பார்த்தான். அவன் கண்களும் கலங்கி இருந்தன. நேராக அவள் அருகே சென்று அவளை அணைத்தான். நந்தன் நெஞ்சில் சாய்ந்து அவன் சட்டையை பற்றி அழ ஆரம்பித்தாள் சத்யா. எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கும் தெரியாது, நந்தனுக்கும் தெரியாது. அழுகை தேம்பலாக மாறி சத்தம் குறைந்து அவள் அப்படியே அவன் மீது தூங்க ஆரம்பித்து இருந்தாள். நந்தன் தன் கண்களை துடைத்து கொண்டு அவளை குனிந்து பார்த்தான். தூங்கி கொண்டிருக்கும் அவளை முடிந்த அளவு எழுப்பாமல் கிட்சனில் இருந்த மஞ்சள் தூளை அவள் கைகளில் தடவினான். மெல்ல அவளை நடத்தி அழைத்து சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு நகர முயன்றான். ஆனால் அவள் கைகள் அவன் சட்டையை இறுக்கமாக பற்றி இருந்தன. அவள் கைகளை சட்டையில் இருந்து மெல்ல விலக்கி மீண்டும் நகர முயன்றான். ஆனால் தூங்கி கொண்டிருந்தாலும் அவள் கைகள் அவன் சட்டையை விடுவதாக தெரியவில்லை. நந்தன் லேசான புன்னகையுடன் அவள் அருகிலேயே கட்டிலின் ஓரமாக அமர்ந்தான். Headboard ல் சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். அவளை நெஞ்சில் சாய்த்த படியே அவள் கால்களை நன்றாக நீட்டிவிட்டு அவள் வசதியாக படுக்க ஏற்பாடு செய்தான். சிறிது நேரத்திற்கு முன் இருந்த கலவரம் எதுவும் இப்போது அவள் முகத்தில் இல்லை, செந்தாமரை முகமாய் சிவந்திருந்த அவள் முகத்தில் இப்போது அமைதி இருந்தது. அவளை நன்றாக நெஞ்சில் சாய்த்து அணைத்து கொண்டான் நந்தன். அவன் அறைந்த அவள் கன்னத்தை வருடினான், அவள் கைகளை எடுத்து பார்த்தான், எங்கே எல்லாம் அதிகமாக கீறி இருந்தாலோ அங்கே எல்லாம் தடவி கொடுத்தான். அவள் தலையை கோதிவிட்டு கொண்டே அவனும் தூங்க ஆரம்பித்தான்.
Comments
Post a Comment